Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடித்தாலும் அணைப்போம்
#1
காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் முஸ்லீம் மதத்தவர்கள் சொந்த மதத்தவர்களால் தம்வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியெற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் காத்தான்குடிக்கு அருகிலுள்ள ஆரையம்பதியில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் காத்தான்குடியை விட்டு வெளியேறி ஆரையம்பதிக்குச் சென்ற போது இவர்களை ஆரையம்பதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் வரவேற்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் தங்க வைத்துள்ளனர். அனைத்துத் தென்னிலங்கை முஸ்லீம் அரசியல் தலைமைகளினாலும் கைவிடப்பட்ட நிலையில் இவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் செய்து வருகிறது. அதேநேரம் இவர்களுக்குச் சமைத்த உணவு மற்றும் நீராகாரங்கள் ஆரையம்பதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களால் வழங்கப்பட்டுள்ளது
Reply
#2
அடித்தாலும் பிடித்தாலும் சகோதரங்களாச்சே....நிச்சயமாக அவர்களுக்கு உதவவேண்டியது சகோதர மக்களின் கடமை...அதை அவர்கள் செய்கிறார்கள்...பாராட்ட வேண்டிய விடயம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மதத்தால் வேறுபட்டாலும், தாய்மொழி ஒன்றல்லவா? இது எங்கள் கடமை. நிச்சியம் அவர்களுக்கு உதவவேண்டும்.
Reply
#4
Quote:மதத்தால் வேறுபட்டாலும், தாய்மொழி ஒன்றல்லவா? இது எங்கள் கடமை. நிச்சியம் அவர்களுக்கு உதவவேண்டும்.
ஹரி முஸ்லீம் சகோதரர்களுக்கு மாத்திரமில்லை
சிங்கள மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவர்களும் எமது பகுதிக்கு இடம்பெயர்ந்தால் அவர்களுக்கும் நாம் உதவி செய்யவேண்டும். இங்கே இனத்தை மொழியை விடுத்து மானிதாபிமானம் ஒன்றை மாத்திரமே பார்க்கவேண்டும்.
<b>
?
- . - .</b>
Reply
#5
மனிதாபிமானம் பார்க்க வேண்டும் தான். ஆனால் சிங்கள இனத்துக்கு அல்ல. நன்றி கெட்ட ஜென்மங்கள். எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.புலிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கள பிரதேசதுக்கு நிவாரண உதவி செய்த போது. அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளதாக கொழும்பு சிங்களவர்களால் பேசப்பட்டது.
Reply
#6
Quote:மனிதாபிமானம் பார்க்க வேண்டும் தான். ஆனால் சிங்கள இனத்துக்கு அல்ல. நன்றி கெட்ட ஜென்மங்கள். எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.புலிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கள பிரதேசதுக்கு நிவாரண உதவி செய்த போது. அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளதாக கொழும்பு சிங்களவர்களால் பேசப்பட்டது.
கொழும்பில் அதைப் பற்றிப் பேசியதை விடுங்கள் ஆனால் விடுதலைப் புலிகள் வழங்கிய நிவாரண உதவியைப் பெற்ற மக்கள் என்ன சொன்னார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.

நிவாரணத்தில் சூழ்ச்சி இருப்பதாகக் கூறியவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உதவி செய்யுங்கள் நிச்சயமாக அவர்கள் அந்த நேரத்தில் புரிந்து கொள்வார்கள்.
<b>
?
- . - .</b>
Reply
#7
நான் 2 வயதில் இருந்து சிங்கள பிரதேசத்தில் தான் வசிக்கிறேன். ஒரு சில சிங்களவரை தவிர அனேகமான சிங்களவர்கள் நன்றி கெட்டவர்கள் எனது தனிப்பட்ட அனுபவத்தில் மூலம் கற்றபாடம் இது.
Reply
#8
தமிழர்கள் என்ன மாதிரி...எங்களுக்கென்றா சிங்களவர்கள் தமிழர்களை விட உசத்தி என்றுதான் சொல்லுவம்....உந்த நன்றி கெட்ட விசயத்தில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
kuruvikal Wrote:தமிழர்கள் என்ன மாதிரி...எங்களுக்கென்றா சிங்களவர்கள் தமிழர்களை விட உசத்தி என்றுதான் சொல்லுவம்....உந்த நன்றி கெட்ட விசயத்தில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஆமா.. தமிழ்நாதத்தை பேசுற பேச்சிலை தெரியுது... Confusedhock:
[b][size=18]
Reply
#10
kuruvikal Wrote:தமிழர்கள் என்ன மாதிரி...எங்களுக்கென்றா சிங்களவர்கள் தமிழர்களை விட உசத்தி என்றுதான் சொல்லுவம்....உந்த நன்றி கெட்ட விசயத்தில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எங்கட இனத்திலும் அப்படி ஒரு கூட்டம் இருக்கிறது
Reply
#11
எவர் எப்படி இருப்பினும் அவர்களுக்கு எதேனும் ஆபத்து ஏற்பட்டால் உதவி செய்யவேண்டும். அதுதான் மனிதாபிமானம். எமது உதவியைப் பெற்றுக் கொண்டு எம்மைத் தூற்றினாலும் பரவாயில்லை.
அவர்களைக்கு உதவி செய்துவிட்டோம் என்ற திருப்தியே போதும்

என்ன குருவிகளே நான் சொல்லுறது சரிதானே?
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)