Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த முருகன் பெரியவன்?
Quote:திருப்பியும் கேட்கிறன்..எந்த முருகன் பெரியவன்?
குரியரில ஞானப்பழத்தை அனுப்பவோ? விடவோ?
_________________


அனுப்பி இருந்தால் கதை இவ்வளவுத்தில முடிஞ்சிருக்கும் இல்லையா..???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Reply
எட அப்பு தியாகம் என்னடாப்பா சம்பந்தா சம்ப்பந்தமில்லாமல் இந்தத் திருஞானசம்பத்தத்தை இதுக்கை இழுக்கிறாய்.
அது குருவிக்கும் எனக்கும் சின்ன வயசுச் சினேகிதம் அங்கினேக்கை கொட்டில் வழியக் குடிச்சு வேலி விறாயெல்லாம் விழுந்தெம்பின காலத்திலையிருந்து பழக்கம்.

அதார்ராவன் முருகனுக்கு ஞானப்பழம் கூரியரிலை அனுப்புறவன்.என்ரை குஞ்சு அப்பிடியே எனக்கும் கொஞ்சம் கள்ளுப்பவுடர் வாங்கி அனுப்பன் இப்ப யாழ்ப்பாணத்திலை கள்ளுப் பவுடராவே கிடைக்குது தெரியுமோ?
Reply
இதுதான் சொல்லுறது கொட்டில் சிநேகம் தட்டில் (விசைப்பலகைத் தட்டில்) வந்து உதவும் என்று (புது மொழி வல்லையார் உங்களுக்காக...) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுசரி எங்க போயிருந்தியள்...புளிச்ச கள்ளும் கசிப்பும் அடிச்சு ஈரல் அவிஞ்சு போய் ஆசுபத்திரியில இருந்ததாக் கேள்விப்பட்டதுகள் குருவிகள் உண்மையோ...?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:இதுதான் சொல்லுறது கொட்டில் சிநேகம் தட்டில் (விசைப்பலகைத் தட்டில்) வந்து உதவும் என்று (புது மொழி வல்லையார் உங்களுக்காக...) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுசரி எங்க போயிருந்தியள்...புளிச்ச கள்ளும் கசிப்பும் அடிச்சு ஈரல் அவிஞ்சு போய் ஆசுபத்திரியில இருந்ததாக் கேள்விப்பட்டதுகள் குருவிகள் உண்மையோ...?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கன நாளைக்கு பிறகு வல்லை அண்ணா.. வாங்கோ..ஏதோ முருகன் தான் காப்பற்றனும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
என்ரை செல்லச் சன்னதியான் கைவிடமாட்டான்.குருவியள் யாழ்ப்பாணம் வந்தனான் வல்லைப்பாலம் உடைஞ்சுபோய் ரவுணிலையே நிக்கிறன் அதுதான் ஒருக்கா திண்ணைவேலியிலை ஒரு நெஸ்கபேக்கை நிண்டு தட்டினான்.

அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ
Reply
ஏன்...வல்லையார்...தூரப் போட்டியள்... சந்நதியான் பெரிசா நல்லூரான் பெரிசா.... என்று கேட்டிருக்கலாமே...பிறகு வடமராட்சியும் வலிகாமமும் என்று அடிபாடு வந்திடுமென்றோ...தவிர்த்துட்டியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுசரி.... எத்தினை சிவில் இஞ்சினியர்மாரை யாழ்ப்பாணம் தநத்து...வல்லையும் தான் வடமராட்சியும் தான்....அவை எல்லாம் என்ன படிச்சுப் போட்டு கொலரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கினம்...விழ முதலே உந்தப் பாலத்துக்கு ஒரு வகை பண்ணத் தெரியல்லையோ....எங்கையோ போயிட்டுது நம்ம படிப்பும் பிரயோகமும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வல்லையிலை நிண்டு பாலம் கட்டினா பார்க்கிறவன் எவனாவது இஞ்சினியர் எண்டு மதிப்பானே உங்கினேக்கை எங்கியாவது சப்பிரமுவாக் காட்டுக்குள்ளையோ மாத்தறைக்கையோ ரோட்டுப் போட்டாத்தானே இஞ்சை இருக்கிறவை எங்கடை அவர் சவுத்திலை வேலை செய்யுறார் எண்டு புழுத்தலாம்
Reply
கேக்குறன் எண்டு குறை நினைக்காதையுங்கோ எப்ப எங்கடை அரசாங்கம் இஞ்சினியர் மாரை அவரவர் விருப்பத்துக்குப் பாலம் கட்ட விட்டுது
Reply
Quote:அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ

ஆகா முருகனுக்கே டவுட் வரப்போகுது எந்த நான் பெரியவன் என்டு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ


சிறீறமணன் அண்ணாவை தான் சொல்லணும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
kuruvikal Wrote:அதுசரி.... எத்தினை சிவில் இஞ்சினியர்மாரை யாழ்ப்பாணம் தநத்து...வல்லையும் தான் வடமராட்சியும் தான்....அவை எல்லாம் என்ன படிச்சுப் போட்டு கொலரை இழுத்துவிட்டுக் கொண்டே இருக்கினம்...விழ முதலே உந்தப் பாலத்துக்கு ஒரு வகை பண்ணத் தெரியல்லையோ....எங்கையோ போயிட்டுது நம்ம படிப்பும் பிரயோகமும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நான் கிளிநொச்சியில் 1993ல் கண்ட அனுபவம் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் கேட்ட அனுபவம் ஒன்றும் தான் நினைவுக்கு வருகிறது.

[u][b]கண்ட அனுபவம்
ஊரியானை கடக்க வள்ளம் ஓடினால் நேவி வெட்டுறான் என்று வள்ளம் ஓடவில்லை. மூன்று நாட்களாக கிளிநொச்சியில் கொவிலில் தஞ்சம். அப்படியே கனகாலத்துக்கு பிறகு கிளிநொச்சியை பா÷த்து வரலாம் என்று பிரதான பாதை வழியே நடக்க ஆரம்பித்தேன்.

மழை பெய்து அங்காங்கே தண்ணீ÷ தேங்கி இருந்தது. வீதியோரம் கரைகள் வீதியிலும் பா÷க்க பள்ளமானதால் தண்ணீ÷ தேங்கி இருந்தது. கரைகளில் பற்றைக் காடுகளும் கிடுகு வேலியுடன் வீடுகளும். இந்த வீடுகளும் பள்ளமான பகுதிகளில் தான் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் கூட தண்ணீ÷ தேங்கி இருந்தது.

தொலைவில் யாரோ வாக்குவாதப்படும் சத்தம் கேட்டது. ஒரு வயோதிப பெண் வீட்டுடையில் படலைக்குள் நின்றுகொண்டு நீளக்காற்சட்டை அணிந்த இருவருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தா÷. அவ÷களுக்கு அருகே வேலையாட்கள் வீதிக்கரையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரை வாய்க்கால் வெட்டி அந்த பெண்ணின் வளவை நோக்கி விட்டுக்கொண்டிருந்தா÷கள். வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவ÷களில் பெரிதாக சத்தம் போட்டுக் கொண்டு அதிகார தொனியில் பேசிக்கொண்டிருந்தவ÷ ஒரு மோட்டா÷ சைக்கிளில் அம÷ந்திருந்தா÷. மற்றவ÷ பெரிதாக ஆ÷வம் காட்டாமல் என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தா÷. என்னை அணுகியதும் சிரித்தா÷.

"றோட்டில தண்ணி நிக்க கூடாது, எண்டு ஓட÷, அது தான் தண்ணியை வெட்டி விடுறம்." என்று கேட்காமலே சொன்னா÷.

"வளவுக்குள் விடாமல் வேற மாதிரி செய்ய ஏலாதோ? றோட்டின்ற மற்றப்பக்கம் காடு தானே?" என்று கேட்டேன்.

இதற்குள் மோட்டா÷ சைக்கிளில் இருந்தவ÷ மோட்டா÷ சைக்கிளை ஓட்டியவாறு நாங்கள் பேசிக்கொண்டு நின்ற இடத்தக்கு வந்தா÷. வந்த உடனேயே அதிகார தொனியில்
"ஆரிவ÷ கனக்க கதைக்கிறவ÷?" என்றா÷.

"இல்ல சே÷! அவ÷ இதாலை போறவ÷... நான்தான் சும்மா கதைச்சு கொண்டு நிண்டனான்." என்று சொல்லக் கொண்டு மோட்டா÷ சைக்கிளில் ஏறி போய்விட்டா÷. வேலையாட்கள் தொட÷ந்து தண்ணியை வெட்டி அந்த வயோதிப பெண்ணின் வளவுக்குள் விட்டுக்கொண்டிருந்தா÷கள். அந்த பெண்ணோ, அவ÷களை தொட÷ந்து திட்டியபடியும், அழுதபடியும் அதிலேயே நின்றா÷....

விடுதலைப்புலிகளின் ஆட்சியிலேயே, எங்கள் பொறியியலாள÷கள் மக்களுக்கு ஆற்றும் சேவை இப்படித்தானா என்று நினைத்துக் கொண்டு மேலும் நடக்க ஆரம்பித்தேன்.

[u][b]கேட்ட அனுபவம்

விடுதலைப் புலிகள் வாக்கி ரோக்கி மூலம் ஒருவரோடு ஒருவ÷ கதைப்பது ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குள் தான். மேலும் அதை எதிரிகள் ஒட்டுகேட்ப÷.
பலாலியிருந்து ஆமி வெளிக்கிட்டால், அல்லது ஏதும் அவசர தகவல் என்றால் வாகனத்தில் ஒருவ÷ யாழ்ப்பாணம் வரவேண்டும். இதை தவி÷ப்பதற்காக விடுதலைப்புலிகள் தமக்கு மட்டுமாவது தொலைபேசி இணைப்புகளை இயங்க வைக்க பா÷த்தா÷கள். தொலைபேசிகள் இயங்காமல் போன காலத்திலிருந்து சும்மா இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பொறியிலாள÷களிடம் போய் இந்த உதவியை செய்து தரும்படி கேட்டன÷. அவ÷களோ,
"போஸ்ற் எல்லாம் விழுந்திட்டுது. கம்பிகளையும் சனம் களட்டிக்கொண்டு போட்டுது. சே÷க்கியுட்களும் பழுதாப்போச்சுது. கொழும்பில இருந்து சாமான் வராமல் ஒண்டும் செய்ய ஏலாது." என்று சொல்லிவிட்டா÷கள்.

இந்த சூழ்நிலையில் நோ÷வேயில் பொறியியல் படித்துவிட்டு பெற்றோரை பா÷க்க வந்த சில பொறியியலாள÷களிடம் விடுதலைப்புலிகள் இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டன÷. இந்த பொறியியலாள÷கள் விடுதலைப்புலிகளுடன் சே÷ந்து யாழ்ப்பாணம் முதல் பலாலிவரை உள்ள கம்பிகளையும் சே÷க்கியுட்களையும் பரிசோதித்து விட்டு,
"ஒரு நாளைக்குள் இந்த இணைப்பு வடிவாக கொடுக்கலாம்." என்று சொல்லி அதற்கான விளக்கத்தையும் கொடுத்தா÷கள்.

மறுநாள் சம்பளம் வாங்கும் பொறியிலாளருக்கு இராணுவ உத்தரவு போனது. 24 மணித்தியலத்துள் இந்த தொலைத்தொட÷பு இயங்காவிட்டால் சம்பந்தப்பட்ட பொறியலாள÷களுக்கு இராணுவ தண்டனை வழங்கப்படும் என்பது தான் அது. 24 மணித்தியாலத்துக்குள் பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசி இயங்கியது. பிறகு படிப்படியாக பொது நிறுவனங்களுக்கும், வணிக÷களுக்கும் வழங்கப்பட்டது.
Reply
அப்படிப் போடு தம்பி அருவாளை.சாய்... கொக்கைச் சத்தகத்தை
Reply
தயவுசெய்து எங்கள் பிழைப்பில் மண்ணைப்போடதையுங்கோ அண்ணை....

படிச்சமா பெயில்விட்டு பாஸ் பண்ணி படிச்சு முடிச்சமா... சும்மா இருந்து சம்பளம் எடுத்தமா என்று இருக்கத்தானே இலங்கையில் பொறியியல் படிக்கிறம்..........
பிளிசு அண்ணை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
kavithan Wrote:
Quote:அதுசரி பொடியள் சன்னதி முருகன் பெருசோ கதிர்காம முருகன் பெருசோ


சிறீறமணன் அண்ணாவை தான் சொல்லணும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>மாம்பழ முருகன்+சூரன் போர் முருகன் =0
ஆகையால், மாம்பழ முருகன் = சூரன் போர் முருகன்

அதேமாதிரி
சன்னதி முருகன் + நல்லூர் முருகன் = 0
ஆகையால், சன்னதி முருகன் = நல்லூர் முருகன்

அதேமாதிரி
சன்னதி முருகன் + கதிர்காம முருகன் = 0
ஆகையால், சன்னதி முருகன் = கதிர்காம முருகன்

அகவே அனைத்து முருகன்களும் ஒரேமாதிரியானவர்கள்.
ஆனால் அவர்களிடமோ இருப்பது எதுவும் இல்லை</b>
<b>
?
- . - .</b>
Reply
சிறி ரமணன் Wrote:கோட்டைக் கட்டிக் கொண்டிருந்த தமிழன் எப்ப கோயிலைக் கட்டத் தொடங்கினானோ அண்டைக்கு தொடங்கினது அவன்ர அழிவு காலம்.

தமிழ÷ ஏனைய நாடுகளை வென்று ஆட்சி செலுத்திய காலம் சோழ÷ காலம். சோழ÷தான் கோவில்களையும் கட்டியவ÷கள். இவ÷களே சைவ சமயத்தை தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளை தாம் கைப்பற்றிய காலத்தில் பரப்பியவ÷கள். அங்கு கோவில்களை கட்டியதும் சோழ÷தான்.

சிறி ரமணன், நீங்கள் கையெழுத்தாக பயன்படுத்தும் இந்த கூற்றுபற்றி மேலும் விளக்கம் தரவீ÷களா?
''
'' [.423]
Reply
தமிழ் அரசர்கள் இந்தக் கோயில்களைக் கட்டியதாலை எங்களிற்கோ அல்லது அவர்கள் கோயில் கட்டிய நாடுகளில் உள்ள மக்களிற்கோ என்ன பிரியோசனம் ஏற்பட்டிருக்கு. இண்டைக்கு எங்களுடைய இனம் ஒரு பண்பாடற்ற(சொந்தப் பண்பாடில்லாத) இனமாக இருக்கிறத்துக்கு என்ன காரணம்? இந்தச் சாக்கடைச் சமயங்களைத் தவிர வேறை ஒண்டுமில்லை. சங்க காலத்திலை(கி.மு. 300) வாழ்ந்த காக்கைப் பாடினர் என்ற கவிஞர்(அறிஞர்) வட்டத்தின் பரப்பளவைக் காண்பதற்கு சூத்திரத்தையே எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். (இதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் ஆரியப்பட்டரால் பை (22/7) அறிமுகப் படுத்தப்பட்டு வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிக்கப்பட்டது)சங்க காலத்தில் கணிதத் துறையில் தமிழன் ஆராட்சிகளைச் செய்திருக்கிறான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இதேவேளை தாமாக ஒளிவிடும் நட்சத்திரங்களை நாண்மீன்கள் என்றும் சூரிய ஒளியினால் ஒளிரும் கோள்களை மீன்கள் எனவும் சங்க காலத் தமிழர்கள் பெயரிட்டிருக்கிறார்கள் இதன் மூலம் சங்க காலத் தமிழர்களிடம் வானியல் ரீதியான அறிவு ஓரளவுக்கு இருந்துள்ளது என்று அறியலாம்

<i>நக்கீரனின் சோதிடப் புரட்டிலிருந்து</i>
சங்க காலத் தமிழர்களுக்கு இருந்த வானியல் பற்றிய அறிவு அதன் பின்னர் வந்த தலைமுறையினரால் மேம்படுத்தப் படவில்லை. கோள்களைப் பற்றி ஆராய்வதற்குப் பதில் அவற்றுக்குத் தெய்வீகம் கற்பிக்கப்பட்டு அவை வழிபடப்பட்டன. கோள்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டப்பட்டன. 'எல்லாம் விதிப் பயன்" 'ஈசன் விட்ட வழி" 'அன்றெழுதியதை யார்தான் அழித்தெழுத முடியும்?" என்ற ஆரியர்களின் வெட்டி வேதாந்தத்தில் மயங்கி மதியிழந்த தமிழர் கெட்டொழிந்தனர். இந்த அவல நிலை இன்றும் நீடிக்கிறது.
<b>
?
- . - .</b>
Reply
Sriramanan Wrote:சங்க காலத்திலை(கி.மு. 300) வாழ்ந்த காக்கைப் பாடினர் என்ற கவிஞர்(அறிஞர்) வட்டத்தின் பரப்பளவைக் காண்பதற்கு சூத்திரத்தையே எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். (இதற்கு தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் ஆரியப்பட்டரால் பை (22/7) அறிமுகப் படுத்தப்பட்டு வட்டத்தின் பரப்பளவு கண்டுபிடிக்கப்பட்டது)சங்க காலத்தில் கணிதத் துறையில் தமிழன் ஆராட்சிகளைச் செய்திருக்கிறான் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இது ஒரு முக்கியமான வரலாறு. இதைப்பற்றி மேலும் அறியத்தர முடியுமா? எங்கேயிருந்து இந்த வரலாற்றை படித்தீ÷கள்?

பல வருடங்களுக்கு முதல் பழ. நெடுமாறன் அவ÷கள் ஒரு தொகுதி பிரசுரங்களை (posters) அனுப்பியிருந்தா÷. அவற்றில் எப்படி இந்தோ-அரபிக் இலக்கங்கள் தமிழ் இலக்கங்களில் இருந்து தோற்றம் பெற்றன என்று அகழ்வாராயச்சி ஆதாரங்களோடு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போ÷த்துக்கேய÷ காலத்து ஆவணங்களை நான் பா÷த்து பழக்கப்பட்டிருந்தமையால் இந்த ஆதாரங்கள் ஆ÷வத்ததை தூண்டுபவையாக இருந்தன. ஆனால் வட்டத்தின் பரப்பளவை கணித்த காக்கைப்பாடினா÷ பற்றியோ ஆரியப்பட்ட÷ பற்றியோ நான் பெயரைத்தவிர வேறெதையும் அறியவில்லை. சிறி ரமணன், மேலும் தகவல்கள் தெரிந்தால் தந்துதவுங்கள். ஒரு கட்டுரை எழுத முடிந்தால், இணையத்தளங்களிலும், தமிழ் செய்தித்தாள்களிலும் பிரசுரம் செய்து மக்களுக்கு அறியத்தரலாம். பயனுள்ளதாக இருக்கும்.
''
'' [.423]
Reply
ஆமா இது புதுசாத்தான் இருக்கு மேலும் விபரமாகத் தாருங்களேன்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் இந்தத் தகவல்களை நக்கீரனின் சோதிடப் புரட்டு மற்றும் அவரின் இதர கட்டுரைகளிலிருந்தே பெற்றேன்.

காக்கைப் பாடினரின் வட்டத்தின் பரப்பளவைக் காணும் சூத்திரம் இதுதான்

<b>வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்கின்
சட்டென்று தெரியும் குழி</b>

அதாவது வட்டத்தின் சுற்றளவில் அரைவாசியையும் விட்டத்தின் அரைவாசியையும் பெருக்கும் போது பரப்பு உடனே தெரியும் என்பதே.

நீங்கள் நக்கீரனின் சோதிடப் புரட்டு என்ற தொடரைப் படிப்பதன் மூலம் மேலும் சில விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

http://www.tamilnatham.com/astro/astrology20041006.htm
கட்டுரைகளைத் தொடக்கத்திலிருந்து படிப்பதற்கு மேலே உள்ள பக்கத்தின்(இணைப்பு) கீழ் பகுதிக்குச் செல்லவும்
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)