Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சின்னச் சின்ன "பில்லைகல்"! எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள
#1
சின்னச் சின்ன "பில்லைகல்"!
எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள்"!

விமல் சொக்கநாதன்

டாக்குத்தர் தகலிங்கநாதன் 85க்கு பிறகுதான் லண்டனுக்கு வந்தவர். தனி ஆளா வந்து 'பிளாப்' சோதனை பாஸ் பண்ணி ஆஸ்பத்திரியில வேலையிலும் சேர்ந்தார். இவற்றை அன்ரி மூலம் அவருக்கு கலியாணமும் பேசிச் செய்து வைக்கப்பட்டது. பெட்டை நல்ல வடிவு. உவள் சினிமா நடிகை திரிஷா மாதிரி மெல்லிய, கவர்ச்சியான பெடிச்சி. பெயர் - பிரார்த்தனா.

85க்கு முதல் லண்டனிலை குடியேறின 'டமில் பீப்பிளை' கண்டா தகலிங்கநாதனுக்கு விசர் பிடிக்கும். 'அவையும் அவயின்ரை கார்களும் கதையளும்'. 'அவயின்ரை பிள்ளையளுக்கோ ஒரு சொல்லுத் தமிழிலை கதைக்க ஏலாது.' என்று சதா மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தார்.

சிலோனிலை, மெடிக்கல் கொலிஜிலை படிக்கேக்கை தகவிங்கன் MGR பேச்சுக்களை ரசிப்பான். கைதட்டுவான். விசிலடிப்பான். குறிப்பாக ஒரு MGR
பேச்சு அவன் காதிலை சதா ஒலிக்கும்.

MGR சொன்னாராம்:-

'தமிழ் நாட்டில் தமிழ்க் குழந்தை பிறந்ததும் 'அம்மா' என்று அழுகிறது!' தூரதேச அமெரிக்காவில் லண்டனில், குழந்தை பிறந்ததும், 'மம்மி' என்று அழுவதில்லை. 'ம்மா' என்றுதான் அழுகிறது. இப்படி அனைத்துலக பெருமை மிக்கது எமது தமிழ் மொழி!..' என்று MGR அன்று சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

"எனக்கு கலியாணமாகி பிள்ளை பிறந்ததும் பிள்ளைக்கு இங்கிலிசை கண்ணிலும் காட்டமாட்டன். பள்ளிக்கு போன பிறகு பிள்ளை இங்கிலிசு படிக்கட்டும். அதுவரை தமிழ் தான்" என்று நடவடிக்கை எடுத்தான்! வீட்டில் இங்கிலிஷ் பேப்பர் வாங்குவதில்லை. வாற ஓசிப் பேப்பரையும் குப்பையில் உடனே போட்டுவிடுவான். தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் லண்டன் தமிழ் டி.வி, கொழும்பு தமிழ் டி.வி, பாரீஸ் தமிழ் டி.வி, சென்னை தமிழ் டி.விகள் மூண்டு. குழந்தை பிறந்தது வளர்ந்தது. தமிழ்ப்பள்ளியில் இடம் கேட்டு "பதிவு செய்து வைத்தார் அப்பா டாக்டர். தன் இளம் சிட்டு 'டடி-மம்மி!' சொல்லிடக் கூடாது 'அப்பா அம்மா!' என்றே சொல்ல வேண்டும் என்று இராப்பகலாக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார் தகலிங்கநாதன் என்ற தமிழ்ப்பற்றாளர்.

பிள்ளையும் வளர்ந்தது!

ஆனால் 'அப்பா அம்மா' என்று அழகான தமிழ் அதன் வாயில் வரவில்லை! அப்படியானால் என்ன வந்தது? 'டடி' 'மம்மி' என்ற இங்கிலிஷா? இல்லவே இல்லை! அதன் வாயில் வந்த முதற் தமிழ் மழலைச் சொற்கள்:- 'கில்லி-கில்லி .. சுள்ளான்! சுள்ளான்!.. அப்பிடிப்போடு! போடு!' இவைதான்! அப்பாவும் அம்மாவும் தமது தலையில் கையை வைத்துக் கொண்டு திகைப்படைந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

இந்தத் திகைப்பு அனாவசியம் டாக்டர். பின் கதவால் ரகசியமாக நுழைந்து உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை பால்மணத்தை திருடி பரிதவிக்க வைத்த இந்திய மீடியாக்கள் பக்கம் சற்று கவனம் செலுத்துங்கள்.

புத்தனும் காந்தியும் இன்னும் பல மகான்களும் பிறந்த புனித மண்ணில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், கம்பனும் வள்ளுவனும் ஒளவையும் பாரதியும் வளர்த்தெடுத்த தமிழ் மாதாவை மீடியாக்கள் - ஊடகங்கள் இன்று பட்டப்பகலில் அப்பட்டமாக கொலை செய்வதைப் பார்த்து தமிழக தமிழ் அறிஞர்களே திகைத்து நிற்கிறார்கள்.

சில உதாரணங்கள்:
1. பென்கள், பில்லைகல் பெறும் யந்திரமல்ல என்று போராடுவோம்.
2. ஈராக்கில் குண்டுகளினால் ஏராளமான பாலங்கள் உடைந்தது.
3. இன்றைய செய்தியில் இனி, தங்கம் மட்டும் வெல்லி விளை நிலவரம்.

தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படி என்று சொல்ல முடியாது. பத்திரிகைகள், சினிமா ஞூம சகீகீ;கீமகி;கிகுகி

எல்லாமே ஒரே காமெடி சார்! சினிமாப் பாடல்கள் என்றால் கதாநாயகனும் நாயகியும் 28 பேருடன் துள்ளிக் குதித்து ஆடாமல் படமே இல்லை. அந்த ஆட்டத்திற்கு
எழுதப்படும் பாடல்கள் ஏதோ 'லப்படத்திற்கு' எழுதப்பட்ட பாடல் போல இருக்கும்?

'என் தேகமெங்கும் அவன் முத்தமிட்டபோது என் தலையில் நட்சத்திரங்கள் சிதறின! அந்த இடத்தில் அவன் முத்தமிட்டபோது ஆயிரம் சூரியன்கள் எனக்குள்
உடைந்தன!'
பாடல்: வெள்ளைக்கார முத்தம். படம்: செல்லமே.

'பஞ்சு மெத்தையில் பந்தயம் நடக்கும் அந்தப் பந்தயத்தில் இருவருமே ஜெயிப்பார்கள்'
பாடல்: கும்மியடி. படம்: செல்லமே

(இந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர் யார் என்று நான் அடையாளம் காட்டி புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்க விரும்பவில்லை.)

இந்தப் பாடல்களை ஏதோ பிரபல்யமான மெட்டுகள் என்று எண்ணி எங்கள் இளம் கலைஞர்கள் கானக்குயில்- இன்னிசை மாலை மெல்லிசைக் கதம்பம் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் அர்த்தம் தெரியாமல் பாடும் போது - எந்தச் சுவரில் எங்கள் தலையை முட்டி சாவது என்பது எங்கள் எண்ணமாக இருக்கும். சினிமா கவிஞர்கள் எழுதுவது ஆபாசமான அருவருப்புப் பாடல். அதைப் பாட இசையமைப்பாளர் அழைப்பது தமில் சினிமாப் பாடகர் சுக்விந்தர்சிங், உதித்
நாராயண் ஆகியோரை!

சில உதாரணங்கள்:

1. 'அச்சச்சோ புண்ணகை! ஆல் தின்னும் புண்ணகை! கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொல்வேன்'
படம்: ஷாஐகான் பாடியவர்கள்:உதித்நாராயண், கவிதா.

2. 'காதல் டகூடிடிஹசே' 'நானும் அவளும் பருவால்லே தனிமை பருவால்லே, தவீப்பூகளும் பருவால்லே..
படம்: ரன் பாடியவர்: உதித் நாராயண்.

இனிய தமிழில் இசை ரசம் ததும்பப் பாடும் பத்மஸ்ரீ யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோர் ஹிந்தியில் பாட அழைத்து செல்லப்பட்டபோது தென்னாட்டு தமிழ் பாடகனுக்கு உச்சரிப்பு சரியில்லை என்று ஊடகங்கள் கண்டித்து அவர்களின் ஹிந்திப் பாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் இன்று சுக்விந்தர் சிங்குகள், உதித் நாராயண்கள் எங்கள் தமிழை கொலை செய்து பாடும் போது தமிழக ஊடகங்கள் ரசித்து எழுதுகின்றன. எங்கள் குழந்தைகள் பாடலைப் பாடமாக்கி மேடையில் பாடுகின்றன.

இனிமையான உச்சரிப்புடன் பாடும் பாடகி வாணி ஜெயராம் அண்மையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது - 'மொழி தெரியாமல் ஒரு பாடலை சிதைப்பது மகாபாவம்' என்று கண்டித்தார்.
பழசு கண்ணா! பழசு!

தமிழ்க் கொலை, தமிழ் உச்சரிப்புக் கொலை பற்றி கட்டுரைகள் எழுதுவது கூட்டங்களில் பேசுவது நான் மட்டும்தான் என்றில்லை. இது ஒரு புது விஷயமல்ல. புதிய போராட்டமும் அல்ல! தமிழ் நாட்டில் திபதி மோகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வை.ஜி.மகேந்திரன் போன்றவர்கள் தமிழ் நாட்டு ஊடகங்கள் நடத்தும் அடங்காப் பிடாரித்தனமான - நிர்வாகத்தை அலட்சியமான போக்கை, மக்கள் மீதான அவமதிப்பை கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்கள். தற்போதைய சினிமா இசையால் வக்கிரப்படுத்தப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் பண்படுத்தப்பட வேண்டும். சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் தமிழ் கொச்சைப் படுத்தப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று போராட்டம் ஒன்றை டிசம்பர் 20ல் நடத்துகிறார் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ். இவை போன்றதுதான் நான் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்தக் கூக்குரல், இதனைச் செவிமடுத்து ஆவன செய்யாவிட்டால் எங்கள் எதிர்கால லண்டன் தமிழ் சிறார்கள் இங்கிலிஸ் குஞ்சுகளாக அல்ல ஸ்டன்ட் மாஸ்டர்களை குருவாக வணங்கும் கில்லிகளாகவும் சுள்ளான்களாகவும் தான் வளர்வார்கள்.

வால்க லண்டன் களைகள்! வால்க தமில்!

உருவியது ஒரு பேப்பர்
http://www.orupaper.com/
[i][b]
!
Reply
#2
இது என்ன கொலை, இதை விட பெரிய தமிழ் கொலைகள் இலங்கை 10 ஆம் ஆண்டு தமிழ் புத்தகங்களில் பார்க்கலாம். ஆதாரங்களை பின்னர் தருகிறேன்.
Reply
#3
பிரபல கொழும்பு தமிழ் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளின் போது, இந்தி பாடல்களை பிள்ளைகள் பாடி ஆடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் கொழும்பு இராம நாதன் மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. இது தொடர்பாக நான் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறிய பதில் , சிங்கள மாணவர்களும் நிகழ்ச்சிகளை பார்க்க வருவார்களாம். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யும்மாறு தொடர்ந்து நான் வாதடியபோதும் பயன் கிடைக்கவில்லை. அதிபர் கடைசியாக் சொன்னது இதுதான் "இது எங்கள் நிர்வாகம் எடுத்த முடிவு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. விருப்பம் என்றால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவையுங்கள், இல்லையெனில் வீட்டில் வைத்திருக்கவும்."
Reply
#4
Quote: அதிபர் கடைசியாக் சொன்னது இதுதான் "இது எங்கள் நிர்வாகம் எடுத்த முடிவு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. விருப்பம் என்றால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவையுங்கள், இல்லையெனில் வீட்டில் வைத்திருக்கவும்."

என்ன ஹரி அண்ணா ராமநாதனிலா இப்படி செய்கினம்...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
அந்தப் பொண்டுகளுக்கு எப்பவும் ஒரு குசும்புதான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதென்ன சிங்களவர்கள் தமிழ் பாட்டுக் கேட்கமாட்டினம்...அதே இசையில் இந்திப்பாட்டுக் கேட்ப்பினம்... இதை நேரா ஒரு தடவை சிங்கள நண்பனிடம் கேட்க அவன் சொன்னான் தனக்கு கொழும்பில் உள்ள இந்திய கலாசார மையத்தில் இந்தி படிக்க இருக்கிற வசதிபோல தமிழ் படிக்க வசதியில்லையாம்...தனக்கு இந்தி தெரியும் என்றான்....! சிங்களவன் தமிழ் படிக்க விரும்பினாலும் நம்மாக்கள் விடமாட்டினம் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அதுசரி தமிழினி....நயமா விசாரிக்கிறியள்..நீங்களும் இராமநாதன் வாரிசோ....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேணும் புலத்தில நம்மாக்களுக்கு பொம்பிளப் பிள்ளை இருந்திட்டா அதுக்கு என்ன தெரியுதோ இல்லையோ பரத நாட்டியம் காட்டாயம்...அதுக்கு ஒரு அரங்கேற்றம் அவசியம்... அதுகளுக்கு தமிழ் சரியாத் தெரியாதா தங்கிலீசிலதான் கற்பிப்பு...அதுகள் அதுக்கு அபிநயம் பிடிக்குங்கள்...பாக்க சோக்கா இருக்கும்...வாய் திறக்காதுகள்...திருகிவிட்ட பொம்மை மாதிரி ஆடுங்கள்... கண்றாவி....இதுக்கெல்லாம் மேடைக்கு எவ்வளவு செலவு தெரியுமா குறைந்தது 10,000 பவுண்சுக்கும் மேல...உது கனடாப் பக்கம் தானாம் பிரபல்யம்...! உந்த பரதநாட்டியம் என்பது தேவலோக பரத்தையர் ஆட்டம் என்பது பலருக்குத் தெரியாது போல....தங்கள் பிள்ளைகளையும் பரத்தையர் ஆக்கி மகிழுதுகள்....அதுசரி...அது நாளைக்கு தெருவிலதானே சுத்தப் போகுது பப்பிளிசிற்றி வேணாமோ...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதற்கு இது நல்ல சாட்சி...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Quote:அதுசரி தமிழினி....நயமா விசாரிக்கிறியள்..நீங்களும் இராமநாதன் வாரிசோ....!
_________________
இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதேங்கோ.... அவங்களுக்கும் நமக்கம் எந்த தொடர்புமே இல்லை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
tamilini Wrote:
Quote: அதிபர் கடைசியாக் சொன்னது இதுதான் "இது எங்கள் நிர்வாகம் எடுத்த முடிவு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. விருப்பம் என்றால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவையுங்கள், இல்லையெனில் வீட்டில் வைத்திருக்கவும்."

என்ன ஹரி அண்ணா ராமநாதனிலா இப்படி செய்கினம்...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதைவிட பெரிய அநியாயங்கள் நடக்குது, எங்கள் சமுதாயம் எங்க போய்க்கொண்டிருக்குதோ தெரியவில்லை :?:
Reply
#9
பரத நாட்டியம் என்பது நல்ல ஓரு கலை.. அதை ஆண்களும் தான் ஆடுகிறார்கள் அதனால் நன்மைகள் பல இருக்கிறது.. இப்ப நாம் பார்த்தால் இந்தியாவில் கு}டுதலான பிள்ளைகக் பரதநாட்டிம் சங்கீதம் என்று எல்லாத்திலையம் திறமையுடனும் இருக்கிறார்கள் எல்லாத்தையும் கற்கிறார்கள்.. அது தவறல்ல.. நம்மாக்களும் இப்ப கற்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் அது ஒரு பசன் ஆகிவிட்டது அரங்கேற்றம் முடிக்கனும் என்பது ஒருவரது பிள்ளை பரதநாட்டியம் கற்றால் மற்றவர்களும் தங்கள் பிள்ளையை அனுப்பிறார்களாம் அது அவர்களது விருப்பமாக இருக்கலாம் இல்லையா..?? மற்றப்படி பரதநாட்டியம் ஒன்றும் இழிவானது கிடையாது.. நம்ம முன்னோர்கள் பரதநாட்டியத்திற்கு பலபல பேர்கள் வைத்து அழைத்துவந்தார்கள் கு}த்து சதிர் ஆட்டம் இப்படியே போன்று தான் அதைவிட இது கடவுளால் அருளப்பட்ட நடனம்.... தெய்வக்கலைபொருந்திய நடனம் புனிதமாய் கற்றகப்பட வேண்டும்.. இங்க காசைக்கொடுத்தால் ஆசிரியர்கள் அரங்கேற்றம் முடிக்கிறார்களாம் அது தான் வேதனைக்குரிய விடையம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
Quote:என்ன ஹரி அண்ணா ராமநாதனிலா இப்படி செய்கினம்...??
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
தமிழினி.......!


பழைய மாணவி ஒரு அறிக்கை விடலாமே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .அல்லது இலண்டனில் இருந்து ஒரு கடிதம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#11
Quote:கனடாப் பக்கம் தானாம் பிரபல்யம்...!


அப்படி தான் நானும் கேள்விப்பட்டன்.... ஒவ்வொரு நாள் பத்திரிகையில் பார்த்தாலும் இருக்கும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
kavithan Wrote:
Quote:என்ன ஹரி அண்ணா ராமநாதனிலா இப்படி செய்கினம்...??
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
தமிழினி.......!


பழைய மாணவி ஒரு அறிக்கை விடலாமே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .அல்லது இலண்டனில் இருந்து ஒரு கடிதம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஜயோ அடிக்க வரப்போகுதுகள் நான் அந்தப்பக்கம் போகவேயில்லை நீங்கள் வேறை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
tamilini Wrote:பரத நாட்டியம் என்பது நல்ல ஓரு கலை.. அதை ஆண்களும் தான் ஆடுகிறார்கள் அதனால் நன்மைகள் பல இருக்கிறது.. இப்ப நாம் பார்த்தால் இந்தியாவில் கு}டுதலான பிள்ளைகக் பரதநாட்டிம் சங்கீதம் என்று எல்லாத்திலையம் திறமையுடனும் இருக்கிறார்கள் எல்லாத்தையும் கற்கிறார்கள்.. அது தவறல்ல.. நம்மாக்களும் இப்ப கற்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் அது ஒரு பசன் ஆகிவிட்டது அரங்கேற்றம் முடிக்கனும் என்பது ஒருவரது பிள்ளை பரதநாட்டியம் கற்றால் மற்றவர்களும் தங்கள் பிள்ளையை அனுப்பிறார்களாம் அது அவர்களது விருப்பமாக இருக்கலாம் இல்லையா..?? மற்றப்படி பரதநாட்டியம் ஒன்றும் இழிவானது கிடையாது.. நம்ம முன்னோர்கள் பரதநாட்டியத்திற்கு பலபல பேர்கள் வைத்து அழைத்துவந்தார்கள் கு}த்து சதிர் ஆட்டம் இப்படியே போன்று தான் அதைவிட இது கடவுளால் அருளப்பட்ட நடனம்.... தெய்வக்கலைபொருந்திய நடனம் புனிதமாய் கற்றகப்பட வேண்டும்.. இங்க காசைக்கொடுத்தால் ஆசிரியர்கள் அரங்கேற்றம் முடிக்கிறார்களாம் அது தான் வேதனைக்குரிய விடையம்...!

பரத நாட்டியம்... தேவதாசிகள்... உயர்குலத்தோரை மகிழ்விக்க நடனம் ஆடும் பெண்கள்...கலை என்றுதான் ஒரு இந்திய நாட்டிப் பெண்மணி சொல்லக் கேட்டம்...அதுதான் பின்னர் இறைவனுக்காக ஆடும் நடனம் என்றாகியது....ஆண்கள் ஆடுவது கூத்து தாண்டவம்....இப்படி...பெண்கள் ஆடும் நடனத்திலும் ஆண்களின் நடனம் வேறுபட்டது...இப்ப எல்லாத்தையும் கலந்தடிச்சிட்டினம்....அதுவேற கதை....!

ஏதோ இப்போதைய நிலையில் நாட்டியக் கலை வளர்ப்பதற்காக நாட்டியம் ஆடுபவர்களை விட கலேசுக்கு ஆடுபவர்கள் தான் மிக மிக அதிகம்...அது வரவேற்கத்தக்கதல்ல.. இதன் மூலம் கலையை வளர்க்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான்...!

ஒரு கலையை அதன் நுட்பங்களை அறிந்து பயில்வதற்கும் மேலோட்டமாக ஏதோ பசனுக்கு பழகுவதற்கும் நிறைந்த வேற்பாடுண்டு....! குறிப்பாக நட்டுவக் கலையை பாரம்பரியமாக எடுத்துச் செல்வார்கள் சிறிய வயதில் இருந்தே நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து கலையை முறையாக வளர்த்துக் கொள்வார்கள்...அந்த நிலையை பரத நாட்டியத்தில் இன்று பல இடத்தில் காணவே முடியாது...அது இன்று பணம் சம்பாதிக்கும் தொழில் ஆகிவிட்டது....! ஏதோ கையை பிசையுறதும் துள்ளுறதும் குதிக்கிறதுமா இருக்குது...அவ்வளவும் தான்...இப்படி ஆடினா...சிலவேளை மூட்டுவலி வந்தாலும் வரலாம்....நன்மை கிடைக்கவே வழி இல்லாமல் போயிடும்...அதையதை அதற்கென்ற விதியின் படி செய்தாத்தான் நன்மை கிட்டும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
பரத நாட்டியம் பரதமுனிவரால் தேற்றுவிக்கப்ட்டதாலும் பாரதநாட்டில் தோன்றியதாலும் தான் பரத நாட்டியம் எனப்பெயரே பெற்றது.. இந்தக்கலையை அப்ப அதாவது பெண்கள் ஆடுறதை முன்னையோர் விரும்பல அதனால தான் அவை அதை பரத்தையர் நடனம் என்டவை..சதிர் என்று கு}ட அவை அழைச்சிருக்கினம்..! ஓம் ஆண்கள் ஆடுறது தாண்டவம்.. பெணகள் ஆடுறுது லாஸ்சயம் இப்ப பாத்த நிறைய ஆண்கள் கற்கினம் பரதநாட்டியத்தை இந்த கலை வந்து ஆதில மன்னர்களாலேயே வளர்க்கப்பட்டிருக்கு... கோவில்களில் தான் இவை அதிகமாக முன்னைய காலங்களில் ஆடப்பட்டன.. அப்போ மன்னர்கள் கு}ட அவற்றிற்கு மண்டபங்கள் கட்டி கொடுத்து கலைக்கு}டங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்..

அதைவிட கையை கண்டபடி பிசையிறதில்லை கைகளால் செய்யப்படுகின்ற ஓவ்வொரு அசைவுகளிற்கும் பொருள் இருக்கு.. அந்த அசைவுகளாலமும் முத்திரைகளாலும் தாம் சொல்ல வந்த விடையத்தை சபையோருக்கு சொல்லுறது தான்..

சின்ன வயசில் இருந்து கற்றால் தான் நுனுக்காமாக கற்கலாம் என்றில்லை... அது கற்கிறவர்களின் ஈடுபாடு கற்பிக்கிற குருவின் கற்பிக்கிற திறமை என்று பலவற்றில அடங்கியிருக்கு... இப்ப நாம நம்ம ஆக்கலைப்பாத்தால்.. அவங்க எல்லாம் அரங்கேற்றத்தில தான் குறியாய் இருக்கிறாங்கள்.. ஆனால் படிப்பிக்கிறவையும் உண்மையான ஆன;ம திருப்பியுடன் கலையை வளர்க்க நினைத்து படிப்பிச்சு.. பிள்ளைகளும்.. இதை புனிதமாய் எண்ணி கற்றால் அது நல;லது.. மற்றப்படி எல்லாம் வெறும் வேஸ்ட் தான்.. பேர் மட்டும் எடுக்கலாம் பரதநாட்டிய அரங்கேற்றம் முடிச்ச பிள்ளை என்டு.. இல்லாட்டால் இந்தனை பிள்ளைகளை இவ்வளவுகாலத்தில அரங்கேற்றம் பண்ணிய ரீச்சர் என்று.. ஆனால் எல்லா ருPச்சரவையும் அப்படியில்லை.. நன்றாய் பற்பிக்கிறவையும் இருக்காங்க... இல்லை என்று சொல்ல முடியாது... பாக்கப்போனால் சிறிலாங்காவைவிட இந்த புலம் பெயர்ந்த இடங்களில் தான் கு}டுதலானவை அரங்கேற்றம் முடிக்கினம்.. அதுக்கு இங்க எல்லாம் செய்யக்கு}டிய வசதி இருக்கு என்றதும் ஒரு காரணம்.. மற்றது என்ன என்டால்.. அங்க பாடசாலைகளில் ஒரு பாடமாய் நடனம் இருப்பதால்.. O/L பரீட்சை முடிந்தவுடன் அநேகர்.. அதைவிட்டுவிடுவார்கள்.. A/L ல கவனம் செலுத்துவதற்காக.. ஆனால் இவர்கள் இங்க அதை தனியாக பழகுவதானால்.. முழுசாக முடிக்கவும் முடியுது என்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
அதுசரி...முற்றும் துறந்த முனிவருக்கேன் பரத்தையரை வைத்து நாட்டியம்... ??!

தேவதாசிகள்....கிருஷ்ணதாசிகள்...இப்படிப் பரம்பரை பரம்பரையா பெண்கள் ஆடல் மங்கையராய் வாழ்ந்து தேவலோகத்து ஆண்களை மகிழ்வித்ததாக சொல்லப்படுகிறதே...ஏன் இன்றும் மேற்கில் பெண்கள் தான் அதிகம் கிளப்களில் ஆடுகிறார்கள்...ஆண்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு....! பாவமா இல்ல பாவிகளா பெண்கள்....! அதுபோகட்டும்...!

பரதம் பரமன் சிவனால்தான் அறிமுகம் செய்யப்பட்டதாக வேறெங்கையோ படித்தமே...அதனால்தான் இன்றும் சிவ சந்நிதானத்தில் பரதம் ஆடப்படுகிறது...உண்மை... அப்படி ஆடப்படும் பொழுது பரதம் ஒரு தெய்வீகத்தன்மை பெறுவதை நாமே உணர்ந்திருக்கின்றோம்... ஆனால் ஒரு உருப்படிக்கு அர்த்தம் புரியாதவர்களால் எப்படி முத்திரை அபிநயம் காட்ட முடியும் சொல்லுங்கள்...உருப்படிகளை தங்கிலீசில் எழுதி எப்படி அதன் ஆழ்ந்த அர்த்தங்களை விளங்கிக் கொண்டு அபிநயம் காட்ட முடியும்...குறிப்பாக முக பாவங்களை....! ஒரு அரங்கேற்றத்தில் கண்டோம்..நட்டுவாக்கம் ஒருபக்கம் நடக்க அதற்குத் தொடர்பே இல்லாமல் பிள்ளை பிசகி ஆடுது.... விளங்காத சனம் வைத்த கண் வாங்காமல் பார்க்குது....பாராட்டுது... என்ன சனத்துக்கு பரதம் பற்றிய அறிவில்லை எண்டது உந்த பரத நாட்டியக்காரருக்கு நல்லாத் தெரியும் அதுதான் நல்லாச் சுத்தினம் பூ.....! அதுதான் உண்மை...!

புலத்தில பொழுதுபோக்க ஒன்றுமில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் பெருமையாக் கதைக்க விசயம் வேண்டாமோ...அப்ப மகளை பரத நாட்டியத்துக்கும் மகனை கராட்டிக்கும் அணுப்பிறது பசனுங்கோ....அதுதான் நடக்குது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
hari Wrote:பிரபல கொழும்பு தமிழ் பாடசாலைகளில் கலை நிகழ்ச்சிகளின் போது, இந்தி பாடல்களை பிள்ளைகள் பாடி ஆடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் கொழும்பு இராம நாதன் மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. இது தொடர்பாக நான் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறிய பதில் , சிங்கள மாணவர்களும் நிகழ்ச்சிகளை பார்க்க வருவார்களாம். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யும்மாறு தொடர்ந்து நான் வாதடியபோதும் பயன் கிடைக்கவில்லை. அதிபர் கடைசியாக் சொன்னது இதுதான் "இது எங்கள் நிர்வாகம் எடுத்த முடிவு இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. விருப்பம் என்றால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவையுங்கள், இல்லையெனில் வீட்டில் வைத்திருக்கவும்."


:roll: Confusedhock:
----------
Reply
#17
ஆ சரியாப்போச்சு போங்க..

அதாவது உமாதேவியார் உஸை என்று ஒரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்தவாவாம் இந்த நடனத்தை.. அதை தான் பரதமுனிவர் பூவுலகத்திற்கு அறிமுகம் செய்தார்... இங்கு தோற்றுவித்தது அவர் தான் ....

பரதநாட்டியம் பெண்கள் ஆடும் போது ஆண்கள் பார்த்து மகிழ்ந்திருக்கலாம் அதில் என்ன தவறு அதனால் அந்த கலையில ஒன்றும் தவறில்லையே.....?? இந்த பரதநாட்டியம் ஆடுபவர்கள் பாவிகள்.. அப்படியென்று சொல்லுறதை எல்லாம் நரம் ஏற்க மாட்டம்.. பாரத நாட்டியம் ஆடுறதில பழகிறதில நிறைய நன்மைகள் இருக்கு... நன்மைகள் வேணுமா தரலாம்...

தாண்டவம் தான் சிவபெருமானால் அருளப்பட்டது.. மற்றப்படி லாஸ்சயம் பெண்களிற்குரியது அது உமாதேவியாரால் அருளப்பட்டது சரியா...??
ஒரு உருப்படிக்கு அர்த்தம் தெரியாமல் ஆடும் போது அதன் மூலம் முழு ரசத்தையும் பாவத்தையும் பெறமுடியாது தான்.. ஆனால் அது ஆசிரியர்கள் நினைக்கவேண்டியது.. ஆனால் ஓவ்வொரு முத்திரைக்கும் ஓவ்வொரு பொருள் இருக்கு அதன் படி தான் ஒரு பாடலில் மானை என்ற சொல் வருதா அதற்குரிய முத்திரைபிடிக்கலாம் இப்படி தான் நிலவு சூரியன் அப்படி யாவுக்கும் இருக்கு...

அரங்கேற்றத்தில ஓரு பிள்ளை பிசகி ஆடுது என்றால் அது அந்த பிள்ளையின் தவறுகிடையாது.. அந்த பிள்ளையை அரங்கேற்றம் வரை கொண்டு வந்த ஆசிரியரைத்தான் குறைசொல்ல வேணும்.. அவர்களும் என்ன செய்வார்கள் பெற்றவர்கள் பிள்ளைகள் நடுக்கட்டினால் வேலைக்கு அரங்கேற்றம் முடிக்க வேணும் என்று இங்க பிள்ளைகளை விட பெற்றோர்கள் தான் அரங்கேற்றம் முடிக்கிறதில அவசரமாய் நிக்கிறார்கள்.. முறையாக சகலதையும் கற்ற ஒரு பிள்ளை அரங்கேற்றம் செய்தால் என்ன செய்யாமல் விட்டால் என்ன... சொன்னஉடன் எதையும் ஆடவும் எதற்கும் முத்திரைபிடிக்கவும் கூடியதாக இருக்கும்...!

எல்லாருக்கும் பரதநாட்டியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.. அது சரி இப்ப பாருங்கள் அதைப்பாத்திட்டு நீங்கள் எப்படி நினைச்சீங்க பாரு பிள்ளை பிசகி ஆடுது என்று.. அப்படி தான் அவர்களும் நினைத்திருக்கலாம் இல்லையா....??

ஏன் குருவிகள் மகனையும் பரதநாட்டியம் கற்கவும் மகளை கராத்தே கற்கவும் அனுப்பிறவர்களை காணவில்லையா..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
அட பரதநாட்டியம் பற்றி விளாசித்தள்ளுறியள்.. நீங்கள் அரங்கேற்றம் முடிச்சிட்டியளா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தொடருங்கள் இதிலையாவது பரதநாட்டியம் பற்றி அறிவம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
Quote:அட பரதநாட்டியம் பற்றி விளாசித்தள்ளுறியள்.. நீங்கள் அரங்கேற்றம் முடிச்சிட்டியளா.. தொடருங்கள் இதிலையாவது பரதநாட்டியம் பற்றி அறிவம்

யாரைக்கேக்கிறியள் குருவியையா..?? யார் கண்டா குருவி முடிச்சிருக்கலாம்... அரங்கேற்றம்... நம்ம கேட்ட சும்மா இப்படி தான் கேள்விப்பட்டதை போட்டிருக்கிறம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
தம்பி தாத்தாவும் பாட்டியும் எங்கை போட்டினம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)