Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்மை இங்கு புலியானதால்-புதுவை
#1
<span style='color:red'>பெண்மை இங்கு
புலியானதால்
புறநானுறு புதிதாய்
எழுதப்படுகிறது!</span>

<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1010_04.jpg' border='0' alt='user posted image'>
"பெண்ணான மாயப் பிசாசு"
சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர்.
"தூமகேதெனப் புவிமிசை தோன்றிய
வாமமேகலை மங்கையரால் வரும்
காமமில்லையேல்...."
சொன்னவன் கம்பன்.
"அரக்குமங்கையர் அழகுடல் தழுவியும்..."
பக்தி இலக்கியப் பாவலர் முத்தமிட்டனர்.
"பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்"
சொல்லுக்கு வெடிமருந்துபூசி தீமூட்டினான் பாரதி
"தாயென்றார்" இராமகிருஷ்ண பரமஹம்சர்.
"சக்தியென்றான்" பாரதிதாசன்.
"பேய்" என்றார்கள் இன்னும் சிலர்.
பூசித்தும் தூசித்தும்
பெண்களைப் புரட்டியெடுத்தனர்
எங்கள் காப்பியக் கவிஞர்கள்;
"ஐயிரண்டு திசைமுகந்து" ஐயன் மனைவி
மண்டோதரியும் போர்க்களம் போனாள்.
குருதிக்கடலில்குளித்த கணவனுக்கு
உருகி அழவன்றி.... போராட அல்ல.
கர்ணன் வீழ்ந்து கண்மூடும் நேரத்தில்
குந்திதேவி "குருஷேத்திரம்" போனாள்.
போராட அல்ல...மகனென்று பிரகடனப்படுத்த.
புற நானூற்றுப் பாடலிலும்
ஒருதாய் போர்க்களம் ஓடினாள்.
போராட அல்ல....
மகனுக்கு அம்பு மார்பில்பட்டதா?
முதுகில்பட்டதா?
பட்டிமன்ற விவாதத்துக்குப் பதில்சொல்ல.
"கோதண்டம்" இராமனுக்கு,
"கோடரி" பரசுராமனுக்கு,
"சக்கரம்" கிருஷ்ணனுக்கு,
"கதாயுதம் வீமனுக்கு,
"கண்டீபம்" அருச்சுனனுக்கு,
காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு
ஆண்களை ஆயுதங்களுடனேயே அவதரிக்கச் செய்தன.
மீசைமுளைத்த தேகத்தில்தானே வீரம் விளையாடும்.
ஆகவே ஆண்மைதான் அதிகாரம் மிக்கது
பஞ்சப்புலவன் பாரதியின் காலம் வரை
பழைய சாதமே எங்களுக்குப் பரிமாறப்பட்டது.
நேற்றுவரை பெண்மைப் புயல்கள்
அடுப்புக்குள்ளே புகையூதிக்கிடந்தன.
வேலித்துவாரத்தினூடேதான் வெளியுலகைப் பார்த்தன.
அடிவளவுக்குப் போகவும் அடுத்தவரின் துணை நாடின.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
நேசிக்கும் காதலுடன் பேசிமுடிக்க முன்னர்
நூறுமுறைகள் கூனிக்குறுகியவர்.
உரலை உருட்டக்கூட பலமற்றவர்களென்று
கேலிப்பொருளாகிக் கிடந்தவர்.
கட்டெறும்பு கடித்தால் போதுமே
அட்டதிக்கும் அதிரக் கத்தியவர்.
கண்ணுக்கு மை காலுக்குக் கொலுசு
சின்ன இடையினுக்கு... சிங்காரப் பொன்னாரம்
பட்டுச்சேலை.. பவளவாய்ச்சாயம்
மொட்டுவிரியாத முல்லை மலர்மாலை
இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்
"வல்வைப் பிள்ளை" நிமிரச்செய்தான்.
பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி
இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
பூத்துக்குலுங்கிய நந்தவனத்துக்குள்ளே
வானரச்சேனையை ஏவி
பூவையும் பிஞ்சையும் பொசுக்கினான் ஒருவன்.
ஆத்தாள் கண்திறந்தாள்.
மறத்தமிழ் மாதொருத்தி
அரக்கனின் நெஞ்சில் நெருப்பாய் வெடித்தாள்.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
தொட்டுவிட யாருண்டு? என்ற துணிவில்
பகைவனின் ஒரு கட்டளைக்கப்பல்
எங்கேயும் நிற்பேன் என்ற திமிரில்
நங்கூரம் பாய்ச்சிக்கிடந்தது.
பரந்தகடலில் எவர்போனாலும் இது பார்த்துவிடும்
பிறகென்ன?
பக்கத்தில் படுக்கும் படகுகள் உயிர்க்கும்
மணலை மீனுக்கு வலைவிரித்தவன் பிணமாவான்.
மறுநாள் ஊதிப்பெருத்த உடல் கரையொதுங்கும்.
இந்தக் கப்பலுக்கு இலக்குவைத்து
வேள்விக்குத் தயாரானாள் வீரமகளொருத்தி
வெடிமருந்து சுமந்து மீன்குஞ்சு நீந்தியது.
நேரம்கரைந்து காற்றுக்கு குளிர்ந்தது
எதிரியின் நெஞ்சுக்கூட்டையும்
அவனின் இரும்புக் கோட்டையையும்.
தங்கை தவிடு பொடியாக்கினாள்
கட்டளைக் கப்பலையும் காணவில்லை
அங்கயற்கண்ணியும் திரும்பவில்லை
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
"சாகரவர்த்தனா"
பகைவன் உலாவந்த "கடல் மிருகம்"
தமிழனின் குருதி இதற்குத் தனிருசி
நாளாயினியும் மங்கையும் போர்க்கோலம் பூண்டனர்.
வெடியதிர்ந்து கப்பல் கண்மூடியபோது
மீசைமுளைத்த கப்பலின் கப்டன்
உயிர்ப்பிச்சை கேட்டுக் கைகளை உயர்த்தினான்.
ஆண்மை அதிகாரம் மிக்கதா?
யார் சொன்னது?
பெண்மை இங்கு
புலியானதால்
புறநானுறு புதிதாய்
எழுதப்படுகிறது

<b>புதுவை இரத்தினதுரை</b>

ஐப்பசி கார்த்திகை 1994


முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.
Reply
#2
<img src='http://kuruvikal.yarl.net/archives/tiger.jpg' border='0' alt='user posted image'>

(இனங்காண முடியுதா... இவ்வேங்கையுள்... ஆணென்றும் பெண்ணென்றும் வேற்றுமைகள்...!)

பெருமைக்காய் கவிதைக்காய்
பொய்யர்கள் புளுகித் தள்ளினர்
புறக்கணிக்கத் தவறியது
பாவலர் அவர்தம் குறையன்று
சித்தர்கள் அவர்தம் தவறன்று....!
ஆண்மைக்குள் என்ன
பெண்மைக்குள்ளும் புலி
பிறப்பிலேயே இருக்கு
கண்டுணர்ந்து சீற வேண்டியது
வேங்கையின் குணமே அன்றி
வேடுவர் குணமன்று....!

குகைக்குள் வேங்கையாய்
குணம் கொண்டான் பிரபாகரன்
பிறப்பில் அவன் வேங்கையல்ல
பிறப்பால் அவனுள் வேட்கை
வேட்கை வேகம் கொள்ள
மானம் காக்க வேங்கையானான்
வேகமாய் இனங்கண்டான்
வேட்கைக்குள் வேங்கை
ஆண் பெண்ணின்றி
அனைவருள்ளும் தாகத்துடன்....!
தகர்த்தெறிந்தான்
பொய்களும் புரட்டுக்களும்
மனிதனின் வேட்கைக்குள்
வேங்கை வளர்த்தான்
ஆங்கு
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆயிரமாயிரமாய் வேங்கைகள் பிறந்தனர்
இதுவே களக் கதை...!

புதுவையார் புதுக்கவிதையில்
தனித்து
பெண்ணை மட்டும் வேங்கையாய்
சீறும் புலியாய் சித்தரிப்பது
ஆண்மையை சிறுமையாக்காதோ...???!
வட்டத்தில் திசை மாற்றம் வேண்டாம்
வட்டத்துள் ஆணும் வேண்டும்
பெண்ணும் வேண்டும்...!
தடைகள் மனிதருக்குப் பொது
தகர்க்க வேண்டியது
அனைவரினதும் கடன்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவிகளே அருமையான பதில் கவிதை. வாழ்த்துக்கள்! புதுவை அவர்கள் ஆண்களை குறைத்து மதிப்பிடவில்லையே? அவர் பெண்களின் மாற்றத்தை வியர்ந்து கவிதையாக தந்துள்ளார். அவ்வளவுதானே ஏன் கோபப்படுகிறீர்கள்?
Reply
#4
பெண்ணின் மாற்றத்தை கதைத்து ஆணின் மாற்றத்தை கதைக்காமல் விட்டால்...அப்ப ஆண்களின் மாற்றம் சமூக மாற்றத்துக்க வருகுதோ...அப்ப பெண்கள் சமூகத்துக்க இல்லாத வேறாக்களா.. இல்ல இதில ஏதோ தவறு உணரப்படுவதாயே எங்களுக்குப்படுகுது...!

சமூக அநீதி என்றால் என்ன இன அடக்குமுறை என்றால் என்ன எல்லாவற்றிற்கும் எதிராக ஆண்களும் பெண்களும் சேர்ந்து புரட்சி செய்வதுதான் உயிரின் இயல்பு...! குறிப்பா குரங்குகளில் பார்த்தால் கூட சண்டையென்று வந்துவிட்டால் ஆண் தலைமை தாங்கினும் பெண்ணும் அடிபடும்.... அதை யாரும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை...ஆனால் மனிதருக்குள் மட்டும் ஏன் இந்த நிலை...பெண்ணை இப்படிப் பிரித்துக் காட்டுவதுதான் பெண்ணிற்குள் என்னவோ விசேடம் என்பது போல சிந்திக்கத் தூண்டுகிறது என்பதாகவே எமக்குத் தோன்றுகிறது...!

கவிஞரின் தவறு என்பது பெண்ணை மட்டும் விளித்ததுதான்... இதற்குள் ஆணையும் இணைத்திருந்தால்...பெண்ணின் மாற்றங்களை அவனும் எதிர்பார்க்கின்றான் வரவேற்கிறான்... மாற்றங்களால் பெண் தனிமைப்படுத்தப்படவில்லை....என்பதை காட்டியிருக்கலாம்....!

நாம் சமூகத்தில் அவதானித்த ஒன்றையும் இங்கு சொல்ல வேண்டும்... இன்று தமிழ் ஆண்கள் (பெரும்பாலும் படித்தவர்கள்) அழகான செக்கச்செவேல் என்று அன்று கவிஞர்கள் சித்தரித்த அதே புளுகுகளுடன் கூடிய பெண்களைத்தான் தேடுகின்றனர்... போராளிப் பெண்களை போராளிப் பையன்கள் தான் அநேகம் திருமணம் செய்கின்றனர்... காரணம் அந்தப் பெண்களோடு வாழ்ந்து அவர்களின் கஸ்டத்தை அநுபவங்களை கண்ணால் கண்டு அவர்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக் கொள்வதால்....!

அப்படியான ஆண்களையும் மாற்றம் விரும்பாத காவிய இல்ல சினிமா நாயகன்கள் போல வாழ எண்ணும் ஆண்களையும் இன்னும் அதே பழைய காவியக் கன்னிகள் போல இல்ல சினிமா நாயகிகள் போல வாழும் வாழ எண்ணும் மாற்ற விரும்பாத பெண்களையும் கவிஞர் ஏன் இனங்காணத் தவறிவிட்டார்...அடித்துச் சொல்வோம் அவர்கள் தான் இன்னும் எம் தமிழ் சமூகத்தில் எண்ணிக்கையில் அதிகம்....! உலகெங்கினும் இதையே அவதானிக்கலாம்...! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:பெருமைக்காய் கவிதைக்காய்
பொய்யர்கள் புளுகித் தள்ளினர்
புறக்கணிக்கத் தவறியது

இந்தக்கவிதையை எப்படி பெருமைக்காய் வடித்ததென்று சொல்லுவியள் குருவி... இது கு}ட ஒரு உற்சாகம் தான் ஏனைய பெண்களிற்கு.. கதைகளில் கு}ட பெண்கள் போரிட்டதாய் பெரிசாக எங்கும் சொல்லவில்லை.. அப்படியிருக்கு பெண்கள் தினியே நின்று செய்த சாதனைகளை இப்படி கவிகள் கதைகள் மு}லம் எழுதப்படும் போது மற்றப்பெண்களிற்கும் அவர்களால் தனித்து சாதிக்க முடிகிறது ஏன் எங்களால் முடியாது என்கிற எண்ணம் வரும்.. எதையும்; தனியாக செய்ய துணிவு வரும்...

அப்படி என்டால் ஆண்களை மட்டும் அவர்கள் போர்க்களத்தில் செய்த சாதனைகள் கவிதையாக யாரும் வடிக்க வில்லையா...??? கிணற்றுத்தவளை போல் வாழ்ந்தவள் சமையல் அறையே உலகம் என்று இருந்தவள் இன்று சாதிக்கிறாள் ஆயுதம் து}க்கிறாள் அவற்றை சொல்லியிருக்கு அப்படிஆண்கள் இருக்கவில்லையே ..?? :wink: அதைவிட இப்படி ஒரு கவிதைக்கு நீங்கள் இப்படி கதைப்பது ஒரு வேளை எங்க பெண்கள் ஆண்களை விட இன்னும் மேலே சென்றுவpடுவார்களோ என்று நீங்கள் அஞ்சுவது வோல இருக்கு அப்படியா..?? என்ன ஹரி.. ஆண்களின் சாதனைகளை சொல்லி வடித்த ஒரு கவியை போடுங்கள் பாவம் குருவி...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி ஹரி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
,
.
Reply
#7
நாங்கள் இந்தக் கவிதையைச் சொல்லவில்லை அந்தக் காலப் பாவலர்கள் அரச சபைகளில் தங்கள் கவிப்புலமைக்கு பாராட்டும் கெளரவமும் தேடி அரசர்களை அரசிகளை மகிழ்விக்கச் சொன்ன பொய்கள் தான் அவை என்பதாகவே நாங்கள் சொன்னோம்....!

புறநானூற்றில் பெண்களின் வீரம் பற்றிச் சொல்லி இருக்கே...எந்த இடத்தில் என்பது தற்போது நினைவில் இல்லை...! தமிழர் இராச்சியங்களை அரசிகளும் ஆண்ட வரலாறுகள் உண்டுதானே...அவர்களை ஏன் பெண்கள் உதாரணமாகக் கொள்ளவில்லை....???!

நிச்சயமாக இக்கவிதை சொல்லும் விடயத்தில் தவறில்லை...எமது நோக்கு இதுதான்... பெண்களை தனித்துவமாகக் காட்டலாம் ஆனால் தனித்துக்காட்டக் கூடாது....ஆண்களின் பங்களிப்பில்லாமல் சமூகத்தின் பங்களிப்பில்லாமல் பெண் என்ன எவரும் எதையும் சமூகத்தில் சமூகத்துக்காக சாதிக்க முடியாது...ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம்...!

பெண்கள் ஆணை விஞ்சினால் என்ன ஆண் பெண்ணை விஞ்சினால் என்ன அடிப்படையில் இருவரும் ஒருவரில் ஒருவர் தங்கித்தான் இருக்க வேண்டும்...அதுதான் இருபால் உயிரினக் கோட்பாடு... அதை எந்த நிலையிலும் மனிதன் தன் அழிவைத் தீர்மானிக்க விரும்பாவிடின் குலைக்க முடியாது....! நிச்சயமாக பெண்கள் இன்று கல்வியில் முன்னணி வகிக்கின்றார்கள்...(விஞ்ஞானக் கல்வியில் பின்னணியில் நிற்கிறார்கள்...!) அது அவர்களின் சொந்த முயற்சிக்குக் கிடைத்த பலம்....அது பெண்களுக்கல்ல எலோருக்கும் பொது...நாளை ஆண்களும் தங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தினால் பெண்களின் நிலையை அடையலாம்...அதில் தவறில்லை..மொத்தத்தில் நன்மை பெறுவது ஆணும் பெண்ணும் வாழும் சமூகமே....!

நாங்கள் சொல்ல வந்தது... பெண்களிலும் மாற்றம் விரும்பாத பழமைவாதக் குகைகுள் வாழ நினைப்போர் அதிகம்....அதை ஆதரிக்கும் ஆண்களும் இருப்பதால்தான் அந்த நிலை தொடர்கிறது...! எனவே மாற்றத்தை விரும்பும் ஆணையும் மாற்றத்தை விரும்பும் பெண்ணுடன் இணைத்துக்காட்டுவதே முற்சொன்னோரும் மாற்றங்கள் நோக்கி வர உதவும் என்பதைத்தான்....!

ஆண் சமூகத்தில் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதோ அல்லது பெண் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதோ எமது எதிர்பார்ப்பல்ல....! ஆதிக்கம் என்பது எந்த நிலையிலும் எவர் செய்யினும் ஆபத்தைத்தான் விளைவிக்கும்....புரட்சிகளைத் தான் தோற்றுவிக்கும்....! காரணம் மனிதன் (ஆண் பெண் பாகுபாட்டுக்கு அப்பால்) பகுத்தறிவு விலங்கு..அதற்குமேல் உயிர் அனைத்துக்கும் தனது வாழ்வுரிமைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இயற்கையாக வழி சமைக்கப்பட்டுள்ளது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:என்ன ஹரி.. ஆண்களின் சாதனைகளை சொல்லி வடித்த ஒரு கவியை போடுங்கள் பாவம் குருவி...!
அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். :roll: அது சரி போற்றப்பட்டவர்கள், எங்கள் சகோதரிகள், நண்பிகள் என பார்த்தால் அது எங்களுக்கும் (ஆண்களுக்கும்)பெருமைதானே.!
Reply
#9
Quote:இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்
"வல்வைப் பிள்ளை" நிமிரச்செய்தான்.
பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி
இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.

Quote:நாங்கள் சொல்ல வந்தது... பெண்களிலும் மாற்றம் விரும்பாத பழமைவாதக் குகைகுள் வாழ நினைப்போர் அதிகம்....அதை ஆதரிக்கும் ஆண்களும் இருப்பதால்தான் அந்த நிலை தொடர்கிறது...! எனவே மாற்றத்தை விரும்பும் ஆணையும் மாற்றத்தை விரும்பும் பெண்ணுடன் இணைத்துக்காட்டுவதே முற்சொன்னோரும் மாற்றங்கள் நோக்கி வர உதவும் என்பதைத்தான்....!


சரி சரி இந்த கவியிலை காட்டப்பட்டிருக்கு தானே மாற்றம் வேணும் என்று எண்ணியவரை.. இப்படிப்பட்ட கவிகள் மு}லம் இன்னும் மாற்றம் இன்றி வாழுகிறவர்களிற்கும்.. பழைய பல்லவியைப்பாடிக்கொண்டு இருக்கிறவைக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வாக இருக்கும் இருக்கலாம் சரியா.. மற்றப்படி ஆணும் பெண்ணம் சேர்ந்தது தான் சமு}கம்.. ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
பிரபாகரன் இன்று தனி மனிதனல்ல...அவர் நேரடியாகவும் தனது சிந்தனைகளாலும் கருத்துகளாலும் செயலாலும் உருவாக்கிய ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் இருப்பதைச் சொல்லவில்லையே...ஆனால் அந்தப் பிரபாகரன்களை மிஞ்சிய தொகையில் இன்னும் அஜித் விஜய் தனுஸ் சிம்புக் குஞ்சுகளும் இன்னும் கொலிவூட் பிஞ்சுகளும் இருக்கின்றனவே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Quote:பிரபாகரன் இன்று தனி மனிதனல்ல...அவர் நேரடியாகவும் தனது சிந்தனைகளாலும் கருத்துகளாலும் செயலாலும் உருவாக்கிய ஆயிரம் ஆயிரம் பிரபாகரன்கள் இருப்பதைச் சொல்லவில்லையே...ஆனால் அந்தப் பிரபாகரன்களை மிஞ்சிய தொகையில் இன்னும் அஜித் விஜய் தனுஸ் சிம்புக் குஞ்சுகளும் இன்னும் கொலிவூட் பிஞ்சுகளும் இருக்கின்றனவே....!
எல்லாத்திற்கும் காரணமான ஆதரமான ஒரு பிரபாகரனை குறிப்படிட்டிருக்கு.. சரியா.. அந்த சிம்பு வம்பு தனுஸ் போன்ற குஞ்சுகளை வழி நடத்த வேண்டியதும் அவர்களை திருத்த வேண்டியதும்.. உங்கள் போன்றவர்களின் கடமை.. நீங்கள் செய்வதை நல்லதாய் செய்யுங்கள் நாளை உங்களுக்கும் காலம் வரும்... உங்களை என்டால் குருவியை அல்ல பொதுவா எல்லாரையும் தான்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
அப்படியோ... அதை வல்லைப் பிள்ளை என்று மட்டும் சொல்லாமல் சொல்லி இருந்தால் நம்பி இருக்கலாம்....ஆனா புதுவையார்....வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
Quote:அப்படியோ... அதை வல்லைப் பிள்ளை என்று மட்டும் சொல்லாமல் சொல்லி இருந்தால் நம்பி இருக்கலாம்....ஆனா புதுவையார்....வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...!
_________________

பாரதி கவிதையில் வடிச்சார் வல்லைப்பிள்ளை செய்து காட்டினார் மற்றவர்கள் என்ன செய்தார்கள் அவர்களை கவிதையில சொல்லுறதிற்கு.. இங்க இப்ப உங்களையே பாருங்கள் ஒரு கவிதையில பெண்ணை தனிய உயர்த்திக்கூறிவிட்டார் என்று எப்படி பாடுபட்டீங்கள்.. இப்படித்தான் பலரது நிலை.. எது எப்படியோ.. புதுவையர் கவி வடித்தார் அதை ஹரி இங்க இட்டார் நாம் படிச்சம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
[quote=tamilini][quote]அப்படியோ... அதை வல்லைப் பிள்ளை என்று மட்டும் சொல்லாமல் சொல்லி இருந்தால் நம்பி இருக்கலாம்....ஆனா புதுவையார்....வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...![/quote]

பாரதி கவிதையில் வடிச்சார்... வல்லைப்பிள்ளை செய்து காட்டினார்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் அவர்களை கவிதையில சொல்லுறதிற்கு..

நீங்கள் முன்னர் என்ன சொன்னீர்கள் அத்தனை ஆயிரம் பிரபாகரன்களையும் புதுவையார் கவிதையில் ஒரு பிரபாகரனால் பிரதியீடு செய்துள்ளார் என்று... நாம் சொன்னோம் அப்படியன்று அவர் தெளிவாக ஒரு பிரபாகரனைத்தான் இனம் காட்டியுள்ளார் என்று...! பிரபாகரன் நினைத்தாலும் அவரால் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்தவர்கள் அவரைப் பார்த்து அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் அதற்குள் ஆண்களும் அடக்கம் பெண்களும் அடக்கம்...!அவர்களுக்குள் வேறுபாடு காட்டுவதை எக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது....!

வேண்டும் என்றால் தமிழர் சமூகத்துக்குள் ஆண்களையும் பெண்களையும் வகைப்படுத்தலாம்...வேங்கைகளுக்குள் எல்லோரும் ஒன்றுதான்....அங்கு ஆண் பெண் வேறுபாட்டிற்கு இடமிருக்க முடியாது...! வீரத்தின் முன் விவேகத்தின் முன் போராளிகள் அனைவரும் சமன்...!

பல சமர்களின் பெண் போராளிகளை காப்பாற்ற தம் பெறுமதிமிக்க உயிர்களை இழந்த ஆண் போராளிகளின் ஆன்மாவைக் கேளுங்கள் என்ன செய்தீர்கள் என்று...??! :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ஆயிரம் பிரபாகரனை வெளியஜிலை கொண்டு வந்ததது ஒரு பிரபாகரன்... அதைவிட இங்க நாம பாக்கிறது பெண்களை தலைநிமிர வைத்த பிரபாகரனை சரியா....??

Quote:வல்லையப் போட்டு தலைவரை தனிய வச்சுட்டாரே...!
_________________

இதற்கு தான் நாம் சொன்னம் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று...... அதாவது பெண்களின் எழுச்சிக்கு.. ? அப்படி செய்ததாக நீங்கள் கூறியினாலும் அது அந்த வல்லை மகனுக்கு பிறகு தான் சரியா.......???

Quote:அவர்களுக்குள் வேறுபாடு காட்டுவதை எக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது....!

இதுவே பெண்கள் ஆணுக்கு சரி நிகராய் சாதிக்கமால் விட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பியள்.. சட்டி பானையுடன் சண்டைபிடிக்க தான் சரி என்று இல்லையா... அப்படியில்லாமல் இன்று அவர்களும் எதிர்த்து நின்று சாதிக்கிறதை பாத்து... அதை ஒரு கவிஞன் ம் எப்படி இருந்த பெண்கள் இப்படி வளர்ந்து நிக்கிறார்கள் அந்த வளர்ச்சிக்கு காரணம் யார்.. அதற்கு அடித்தளம் இட்டது யார் என்பதை சொல்லியிருக்கிறார் சரியா...??ஃ :ீ
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
பிரபாகரன் பிரபாகரன்களை மட்டுமல்ல கருணாக்களையும் மாத்தையாக்களையும் தான் உருவாக்கினார்...ஒவ்வொரு போராளியினதும் தலைவன் வழியே தன் வழி எனும் தன்னார்வமும் தாயகத்தின் மீதான பற்றுதலும் அதன் விடிவும் விடுதலையும் அவர்களை ஆட்சி கொண்டதால்தான் பிரபாகரனால் அத்தனை பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தது...! அதற்கு பிரபாகரன் மட்டுமல்ல ஒவ்வொரு போராளியினதும் தன்னார்வமும் தான் காரணம்....!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்விடுதலை என்பதை முதலில் உச்சரித்தவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர்... அவர்கள் உச்சரித்ததோடு சரி செயலில் காட்டத்தவறிவிட்டனர்....! அதையே பிரபாகரன் கட்டுக்கோப்போடு அமுல்படுத்தி தங்களின் பலத்தை தங்களாலேயே உணர முடியாது விலங்குகளை விடக் கேவலமாக கோழைகளாக இருந்த பெண்களில் துணிவை வரவழைத்து போராற்றல் மிக்க போராளிகளாக ஆக்கினார்...! ஆனால் அதற்கு முன்னரே தமிழர் சமூகம் தன்னார்வத்தால் உயர்ந்த பல வீரப் பெண்மணிகளைக் கண்டுவிட்டிருந்தது...அவர்களை பாடமாகக் கொள்ளக் கூட துணிவில்லாத நிலையிலேயே பெண்கள் இருந்தனர்...!

இன்றும் பெண் விழிப்புணர்வென்பதை ஆயுதத்தால் அன்றி கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் ஆண்களுடனான புரிந்துணர்வின் மூலமுமே சாதித்துள்ளனர்....! அது பிரபாகரனினது மதிநுட்பத்துடன் செயற்பாட்டுடன் மக்கள் ஒருமித்ததால்தான் சாத்தியப்பட்டது...ஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை என்பதற்கு பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலையில் வாழும் புலம் பெயர்ந்த பெண்கள் சமூகம் நல்ல உதாரணம்....!

இது எதைக்காட்டுகிறது ஆண்கள் தடைகள் போடுகிறார்களோ இல்லையோ பெண்கள் தங்களுக்கு தாங்களே தடைகள் போட்டு வரையறைகளை வரைந்து அதற்குள் உட்கார்ந்து கொள்ளவே விளைகின்றனர்...துணிவே துணை என்று எண்ணத்தவறுகின்றனர்...!
அதற்காக ஆண்கள் மீது பழி இன்னும் சேர்ப்பது எந்தவகையில் நியாயம்...புதுவையாரே சொல்லுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஹரி அண்ணா கவிதைகு நன்றி.. கவிதை அருமையாக இருக்கு .. இன்னும் பிரசுரியுங்கள்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)