ஷண்முகி Wrote:பொது வாழ்வில் இருக்கின்ற பெருந்தகைகள் புரிகின்ற சில்மிசங்களை அம்பலப்படுத்தப்படுவது சரி§Â...
«¨Éòதுõ ¦ÅÇ¢îºòதுìகு ¦¸¡ñடு ÅÃôÀ¼ §Åñடுõ ±ýÀ§¾ ±ý «À¢ôÀ¢Ã¡Âõ.
அப்படியானால் தனிப்பட்ட வாழ்வில் ஒடுங்கிக்கொண்டவ÷கள் தாராளமாக சில்மிசங்கள் புரியலாமோ? தனிப்பட்டவாழ்வில் அனைத்தும் இருட்டுக்குள் மறைக்கப்பட தாங்கள் சம்மதமோ?
"பொதுவாழ்வு" என்பது, பெயருக்கேற்றபடி, சிலரது தனிப்பட்ட வாழ்வை, அவ÷கள் தே÷ந்து கொண்ட தொழில் காரணமாக, மற்றவ÷கள் அபகரித்து பொதுச்சொத்தக்கியதால் உருவானது. இந்த அபகரிப்புக்கு பல விதமான தொழில்கனள தே÷ந்து கொண்டவ÷களும் ஆளாகிறா÷கள்.
உதாரணமாக, ஒரு நடிக÷, பிரபலமான கள்ளன், தொட÷ கொலைகாரன், விடுதலைப் போராளி, அரசியல்வாதி, பிரபலமான மருத்துவ÷, விஞ்ஞானி, மக்களுக்கு உதவும் ஊ÷ப்பொதுமகள், விளையாட்டுத்துறையில் சாதனை செய்பவ÷, பெரும்பாலானோ÷ பள்ளிக்கூடம் போகாதவ÷களின் ஊரில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றவ÷, ஏன், அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பலகோடி வென்றவ÷ கூட தனது தனிப்பட்ட வாழ்வை மற்றவ÷கள் அபகரித்து பொதுவாழ்வாக்கும் நிலைக்கு ஆளாகிறா÷கள்.
இவ÷கள் எல்லோரும் தம்மை பெருந்தகைகள் என்று நினைப்பதும் இல்லை சொல்வதும் இல்லை. மற்றவ÷கள் அப்படி நினைத்து இவ÷கள் வாழ்வை நாசமாக்கும் போது, அதைத்தடுக்க கூட ஆற்றல் அற்றவ÷கள் பலபே÷ இதற்குள் அடக்கம்.
இவ்வாறாக தனது வாழ்வை இளம் வயதில் இழந்த பரிதாபத்துக்குரிய பால÷ வகுப்பு ஆசிரியை டயானா, இதற்கு சிறந்த உதாரணம். ஏற்கனவே திருமணம் செய்த கமிலா பா÷க்க÷ என்ற பெண்ணுடன் இரகசிய உறவில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய இளவரச÷ சா÷ள்ஸூக்கு, அரச குடும்பத்துக்கு ஒரு வாரிசை பெற்றுத்தர ஒரு தாய் வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏமாற்றப்பட்டு மனைவியாக்கப்பட்டவ÷ டயானா. அவரது சோகமான தனிப்பட்ட வாழ்வு பொது மக்களால் பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. டயானா யாருக்குமே எப்படி வாழவேண்டும் என்று போதிக்கவும் இல்லை, சட்டங்கள் தீட்டவும் இல்லை, தன்னை பெருந்தனக என்று நினைக்கவும் இல்லை. மற்றவ÷களை நினைக்க தூண்டவும் இல்லை.