Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத்தில் குறும்படங்கள் பற்றி
#1
வணக்கம் நண்பர்களே...

இணையத்தில் குறும்படங்கள் பற்றிய கட்டுரைகள்,
ஆக்கங்கள் மற்றும் குறம்பட இயக்குனர்களின்
இணையத்தளங்கள் ஆகியனவை பற்றிய
தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.
அதன் முதற்கட்டமாக நான் இங்கே சில
தொடுப்புக்களை இணைக்கிறேன்.

தலைப்பு: சலனச்சுருள்
உள்ளடக்கும்: தகவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள்
தளம்: ஆறாம்திணை
தொடுப்பு: http://www.aaraamthinai.com

தலைப்பு: அஜீவனும் குறும்படமும்
உள்ளடக்கம்: படைப்புகள், சுயசரிதை, குறம்படங்கள்
தளம்: அஜீவன்
தொடுப்பு: http://www.ajeevan.com[/color]

தொடர்க...


Reply
#2
நண்றி உங்கள் கருத்திற்கு
Reply
#3
அஜீவனின்
எச்சில் போர்வை
இந்தப் குறும்படத்தை பார்க்கும் வாய்ப்பு சென்ற ஞாயிறு கிடைத்தது.ஒன்பது நிமிடங்கள் நீளும் குறும்படம். 6மாதமாக சுவிற்சலாந்தில் வேலையில்லாமல் அகதிவாழ்க்கை வாழும் ஒரு இளைஞன்தான் படத்தின் நாயகன்
ஒரேயோரு நடிகர் மடுட்மே.படம் முழுவதும் தானேற்ற பாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.துணை நடிகரின் தேவையை கமராவே கவனித்துவிடுகிறது. சுவிற்சலாந்தின் அழகு மிகு இயற்கைக் காட்சிகளையும் தேவைக்கேற்ப நடிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் அஜீவன் . அக்காவின் கடிதம் குரலில் ஒலிக்கிறது.வீட்டையும் சகோதரியையும் பணம் அனுப்பவேண்டிய தேவையையும் நாயகன் நாளும் பொழுதும் யோசிக்கிறான்..அவன் வேலையற்ற புதிய அகதி..ஆனால் பiழய அகதிகள் புகலிட வாழ்வை பொழுதுபோக்கிற்காக உரசிப்பார்க்கிறார்கள். இரண்டு சம்பவங்களையும் மனதைத்தொடும் வண்ணம் கலந்த இயக்குநருக்கும் மிக மிக அழகாக படத்தொகுப்பையும் கவனித்தபடத்தொகுப்பாளருக்கும் பாராட்டுகள் இவையனைத்தையும் திறமையுடன் செதுக்கி எச்சில்போர்வையை குறும்படச் சிற்பமாக செதுக்கிய சிற்பியாக நிமிர்ந்து நிற்கிறார் அஜீவன்.ஏற்கனவே சுவிற்சலாந்தில் நிகழ்ந்த குறும்பட விழாவின் அமைப்பாளர் அஜீவன்தான்.தற்போது யேர்மன் திரைப்படமொன்றை செய்து முடித்திருக்கிறாராம்..தாயகத்தில் சிங்களப்படங்களில் பணிபுரிந்து, தமிழகத்திலும் சில படங்களில் பணியாற்றி , சிங்கப்புூர் தொலைக்காட்சியிலும் பணியாற்றிய ஒளிப்பதிவு--படத்தொகுப்பு விற்பன்னராக அஜீவன் திகழ்கிறார் என்பதற்குச் சாட்சியாக எச்சில் போர்வை அவரை காட்டிநிற்கிறது.

-
Reply
#4
அன்பு மணிதாசனுக்கு

எச்சில் போர்வை குறும்படம் தொடர்பாக தங்கள் விமர்சனம் கண்டு மெய்சிலிர்த்து நிற்கிறேன்.பல கோடி நன்றிகளை என் சார்பாகவும் என் படைப்புகளில் பங்கு கொள்ளும் நண்பர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் படங்களை செய்யும் போது என் மனதில் எழாத கருத்துகள் பின்னர் பார்வையாளரிடமிருந்து வரும் போது அப்டியா என்று வியந்து போகிறேன்.

எமது படைப்புகளுக்கு ஆதரவு தராத பலர் மௌனியாகிவிடும் சந்தர்ப்பங்களில் தங்களைப் போன்ற ஒரு சிலராவது இருப்பதால் என்றாவது ஒரு நாள் சர்வதேச விருதுகளில் ஒன்றையாவது வாங்கித் தர வல்ல ஒரு முழு நீள புலம் பெயர் தமிழ் படமொன்றை படைக்க உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இந்தப் படைப்புக்கு ஆதரவு தருபவர்கள் ஒன்றை மட்டும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இது ஒரு பொழுது போக்கு படமல்ல-எமது அன்றாட யதார்த்த வாழ்வின் உணர்வலைகளை சர்வதேச மக்கள் முன் வைக்கும் ஒரு படமாக இருக்கும்.

முயன்று கொண்டிருக்கிறேன்............
Reply
#5
நிழல் யுத்தம்

அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு.
அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம்
புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் அஜீவன்.
ஒரே வீட்டில் வாழும் திருமணம் செய்யப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் புரியும் ஒரு யுத்தம்.

நாயகியாக வரும் ராதிகாவின் பார்வையும், முகபாவமும்; விரக்தியைக் காட்டுவதால் கதைக்கு நன்றாக ஒத்துப் போகின்றது. ஆனால் இதைத் தவிர வேறு பாவங்கள் இந்த முகத்தில் பார்க்க முடியாது என்ற தோரணையில் நிழல் யுத்தத்தில் அவர் வலம் வருவது ஒரு குறையே.
பிறந்தநாளுக்குத்தான் அந்தப்பரிசு என்று வாங்கி வைத்திருக்கும் அந்தப் பரிசை பாலகிருஸ்ணன் எடுத்து எறிந்து உண்மை நிலையை விளக்கும்போது குறைந்த பட்சம் ஒரு புன்னகையையாவது அவர் தந்திருக்க வேண்டாமோ?
கோயிலுக்குப் போவதற்காக தன்னை அலங்கரிக்கும் போதும் முகத்தில் விரக்தியைக் காட்டவேண்டிய கட்டாயம்தான் என்ன?

வெள்ளிக்கிழமை கோயிலுக்குக் கூட்டிச் செல்லாததற்கு “சாமி என்னப்பா ஓடவே போகுது? „ என்று சமாளிப்பதும், ராதிகா பிரச்சனையைத் தொடங்கும் போது நாட்காட்டியில் பௌர்ணமியா, அமாவாசையா என்று பாலகிருஸ்ணன் பார்ப்பதும் அருமையான காட்சிகளாக வந்திருக்கின்றன.

வேலைத் தளத்தில் நடக்கும் பிரச்சினைகள், அல்லது பாலகிருஸ்ணனின் வேலையிடத்தில் உள்ள அவருக்கான வேலை அழுத்தங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. அடுத்தகாட்சியில் வேலை செய்யிற இடத்திலைதான் “வெள்ளைக்கார நாய் குலைக்குதெண்டு பாத்தால்...........இஞ்சை வந்தால் நீ.. „
என்ற வாசகங்களாலேயே முதற்காட்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கதவு திறக்கும் ஓசை, பாத்திரத்தோடு பருப்பு கருகும் ஓசை, குழாயால் தண்ணீர் ஓடும் ஓசை என்று இயற்கையான சத்தங்களோடு நிழல் யுத்தத்தில் ஒன்றிப்போனால் திடீரென பின்னணி இசை பெரிய சத்தத்தோடு வந்து யதார்த்தத்தை விலக்கி வைக்கின்றது.

பாத்திரங்களை இயற்கையாகவே உரையாடவிட்டிருக்கின்றார் பாலகிருஸ்ணன். பாராட்டுக்கள்.
கமரா, படத்தொகுப்பு என்பன அஜீவனுக்கு அருமையாக வந்திருக்கின்றன. இந்தத் துறையில் அவருக்கான அனுபவங்களை அவை கட்டியம் கூறுகின்றன.
மொத்தத்தில் புலம் பெயர் வாழ்வில் எங்களவர்களின் குடும்பச் சண்டையை அழகாகப் படம்பிடித்துத் தந்திருக்கின்றார்கள் அஜீவன் குழுவினர். இவர்களிடமிருந்து மேலும் பல படைப்புக்கள் வரவேண்டும். நாம் அதைப் பார்த்து மகிழ வேண்டும்.

இறுதியாக ஒரு கேள்வி - இந்தக் குறும்படத்தின் மூலம், கணவன் பிழை செய்தாலும், உங்களைக் குறை சொன்னாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெண்களே அவர்களை அனுசரித்துப்போங்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்?
உங்களுக்கு அசாத்தியத் துணிச்சல்.

நேற்று எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. எதிர் முனையில் எனது நண்பன். “இண்டைக்கு எங்கடை வீட்டிலை பருப்பு சட்டியோடை கருகிப் போச்சுது„ என்றான். அவன் வீட்டிலும் நிழல் யுத்தம்.
Reply
#6
எங்கேயும் அனுசரித்துப் போகும்படி காட்சிகள் அமைக்கப்படவில்லையே?
Reply
#7
வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகவேண்டும் என்பதை நாயகி நினைப்புூட்டுகின்றாள். அவனோ
பதில் சொல்லாமல் போய்விடுகின்றான்.
மாலையில் நேரம் கழித்து திரும்பி வந்துதான் வரமுடியாமைக்குக் காரணம் கூறுகின்றான்.
தனது பிரச்சினையை போகும்போது சொல்ல அவன் தயாராயில்லை. போன இடத்தில் இருந்து தொலைபேசியில் சொல்லக்கூட அவரால் முடியவில்லை. இது ஏனோதானோ என்ற எண்ணத்தைத்தானே புலப்படுத்தி நிற்கின்றது.
அவளது பிரச்சினைகளை கனவுூடாகச் சொல்லப்படுகின்றது. அதில் அவள் தனக்கும் பெற்றோர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றாள்.தொலைபேசியில் கதைக்க முடியாதவாறு அவன் செய்திருப்பதாக வேறு குறிப்பிடுகின்றாள்.கனவில் கூட அதற்குப் பலன் கிட்டவில்லை.
முடிவில் அவள் அவனிடம் வந்து கண்ணீர் துளிகளை சிந்துவதாக கதை முடிகிறது.
பிரச்சினை என்று வந்தவுடன் ஆணுக்கு ஒரு பியரைக் கொடுத்துவிட்டால் சரியாகிவிடுகிறது.
இவை எனது பார்வையில் தெரிந்தவை.
Reply
#8
[quote=Mullai]பிரச்சினை என்று வந்தவுடன் ஆணுக்கு ஒரு பியரைக் கொடுத்துவிட்டால் சரியாகிவிடுகிறது. போணியெல்லாம்.. இஞ்சை.. பிரித்தானியாவிலை.. எடுபடாது.. புறா.. பறந்தால்தான்.. சமாதானம்..

மற்றப்பகுதிக்கும்.. அடி.. பக்காடி.. எண்டு.. ஊத்தித்தான்.. தணிக்கிறது.. உது.. தெரியாதே.. உங்களுக்கு..

கோவிக்கக்கூடாது.. விதிவிலக்குகள்.. தான்.. படத்துக்கு.. நல்லது.. அதுகள்தானே.. பிடிக்கிறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#9
அன்புக்கினிய முல்லை - மதிவதனன்

தங்களது விமர்சனங்களுக்கு பணிவன்பான நன்றிகள்.

தங்களது விமர்சனங்கள் என்னை ஆரோக்கியமான ஓர் விவாததுதுக்கு இட்டுச் சென்றிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.

நிழல் யுத்தம் குறும்படம் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் யதார்த்த பிரச்சனைகளில் ஒரு துளி மட்டுமே.

இதை விட எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறியாதவர்களல்ல.அவை காலப்போக்கில் படைப்புகளாகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்.

சினிமா சார்ந்த படைப்பாளிகளில் பலர் தமது கருத்துகளை திணிப்பதையோ அல்லது புத்திமதி - அறிவுரை சொல்வதையோ தமது குறிக்கோளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என் படைப்புகளில் ; நான் காண்பவற்றை அப்படியே யதார்த்தமாக கொஞ்சம் சினிமா மொழியோடு முன்வைக்கவே விரும்புகிறேன்.

அதற்கு காரணம்; தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார்கள்.

ஒரு படைப்பாளியின் இப்படியான எண்ணங்கள் பார்வையாளன் ஏதோ முட்டாள் என்றும் அவர்கள் நாம் சொல்வதை ஏற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிப்பது போன்ற நிலையை உருவாக்கிவிடும்.

எனது படைப்புகளை ; நான் காணும் சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குகிறேன். இக் கதாபாத்திரங்களுக்கு உரிவர்கள் அறிஞர்களில்லை. இவர்கள் சர்வ சாதாரணமானவர்கள்.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்.

புலம் பெயர்ந்த பின் இவர்கள் குடும்பம் உட்பட யாரையும் சாராதவர்கள்.
தாம் வந்த பாதையில் நடந்த தவறுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல் தமது வெற்றிகளுக்கும் தாமே தம்முள் வெற்றிக் கிறீடங்களை வைத்துக் கொண்டவர்கள்.

நாமும் கடந்த காலங்களில்; இருந்த இடத்திலேயே இருந்து உலகத்தை பார்த்து பழக்கப் பட்டிருந்தோம்.

பின்னர் நமது அறிவு- பார்வை - வாழ்வின் மாற்றங்கள் மாற மாற எமது அனுபவங்களைக் கொண்டே நமது உள்ளார்ந்த அடிப்படை அறிவையும் -நம்மையும் மேன்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இருப்பினும் நிழல்யுத்தக் கதாபாத்திரங்களில் அவர்களை அவர்களாகவே வாழ வழி செய்திருக்கிறேன்.

அவர்களிடம் என்னுள் உள்ள கருத்தையோ அல்லது மற்றவர் எதிர் மறையாக எண்ணலாம் என்று தோன்றிய கருத்தையோ திணிக்கவில்லை.அது நாகரீகமுமில்லை.

நிழல்யுத்த கதாபாத்திரமான பாலா தனிமையிலும் - நண்பர்களுடனும் வாழ்ந்து பழக்கப்பட்டவன்.இவன் புலம் பெயர்ந்த பின் யாரையும் சார்ந்து வாழ்ந்தவனல்ல.
அவன் தான் நினைத்ததை - செய்வதை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் செய்து பழக்கப்பட்டவன்.

சாதாரணமாக புலம் பெயர் நாடுகளில் வாழும் நண்பர்கள் ஒன்றாக வீடுகளில் வந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதே அரிது.
(சில குடும்பங்களிலேயே இவை நடக்கிறது.)
இப்படியாகப் பழக்கப்பட்ட ஒருவனுக்கு இது சர்வ சாதாரணமாகலாம்.
இப்டியான எண்ணம் காரணமாக பாலா மனைவிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுவதும் ; நேரம் களித்து வீடு வருவதும் நடக்கிறது.
இது தவறாக அவனுக்குள் தெரிவதேயில்லை.
பெண்ணும் - ஆணும் சமமென்ற கருத்து கொண்ட நாம் வாழும் நாடுகளில் ராதிகாவின் தனிமையைப் பற்றியோ ; அல்லது அவள் தனக்காக காத்திருப்பாள் என்ற நிiனைப்பையோ சற்றும் எண்ணத் தோன்றாத சிந்தனையும் அவனது அடிமனதில் இருக்கலாம்.

எங்கோ ஒரு முரண்பாடு ஏற்படும் போதுதான் பிரச்சனை தெரிகிறது; தெறிகக்கத் தொடங்குகிறது.

ஆனால் ராதிகாவோ குடும்பம் - மற்றும் குடும்ப பந்தங்களுடன் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவள்.
உறவினர்கள் - நண்பர்கள் என்று குதூகலத்துடன் வாழ்வை பகிர்ந்து கொண்டு சார்ந்து பழக்கப்பட்டு விட்ட அவளுக்கு இது ஒரு பேரிடி.

புலம், சொர்க்கமானாலும் இந்த மாற்றம் - தனிமை - வீடடுக் கவலை ஆகியவை அவளது முகத்தில் நரக வேதனையையும் சோகத்தின் படிமங்களையும் தொடர்ந்து அவள் முகத்துக்குள் தேக்கியே வைத்திருக்கிறது.

அவளது நண்பனாக தெரியும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பினனர்; தனக்கிருக்கும் ஒரே ஆறுதலாக நினைக்கும் பாலாவின் மேல் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகம் அவளை வருத்துவதில் எந்த தவறுமில்லை.
தவறு செய்துவிட்டோமே என்ற உள் உணர்வு காரணமாக அவள் அவனைத் தேடுவது இயல்பான ஒன்று.
தவறு செய்யும் குழந்தையை தண்டித்து விட்டு தூங்கிய பின் தன் குழந்தை பக்கத்தில் சென்று கண்கலங்கியவாறு தடவிக் கொடுக்கும் எத்தனையோ தாய்மாரை எனக்குத் தெரியும்.
இது ஒருபோதும் தாழ்வாகி விடாது
இதுதான் மனித நேயம்.

பாலாவும் மோசமானவனல்ல ; கோபத்தில் சிரிப்பவர்கள் மனிதர்களல்ல, நல்ல நடிகர்கள்.
அவன் கோபத்தில் கத்தி விட்டு பின்னர் கலங்கிப் போய் கண்கலங்குகிறான்.

எந்தப் பிரச்சனையை வேணுடுமானாலும் நண்பர்களுடன் கலந்து பேசலாம்,இது வீட்டுப் பிரச்சனை ??????????????

வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில், கவலையை மறக்க தூக்கம்தான் மருந்து என்று முன் அறையில் இருக்கும் செட்டியை (நீள் கதிரை) படுக்கையாக்கிக் கொள்கிறான்.

பாலா-ராதிகா இருவரது கண்ணீர்; பிரச்சனைக்கு முடிவல்ல.கண்ணீர் மனித மன வேதனைகளை வெளிக் கொண்டு வர உடலில் ஏற்படும் ஓர் இரசாயன மாற்றத்தின் அறிகுறி மட்டுமே.

ஒருவரை ஒருவர் தேடிச் செல்வதும் , குனிவதும் , விழித்துப் பார்ப்பதும் , முடங்கிக்கிடப்பதும் சிறுமையல்ல.

குனிந்து மூழ்கித்தான் முத்தெடுக்க வேண்டும்.
அதே போல் தேவையானதை தேவையான சமயத்தில் செய்யாது போவது ஒரு மனநோய்.

உண்மையான படைப்பாளி ஒரு சர்வதிகாரியல்ல.பார்வையாளனுக்கு கட்டளை போடவோ - முடிவுரை சொல்லவோ உரிமையில்லை.

வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்.

சிந்திப்பவர்கள் தாங்களாகவே அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.
தன்னை பற்றி சிந்தித்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆரோக்கியமான ஒரு சமுதாயம்தான் எமக்குத் தேவையேயொழிய மீண்டுமொரு அடிமையொடிமைச் சமுதாயமொன்றல்ல.

நல்லதை தேர்ந்தெடுக்கவும் - பிரித்து வேறுபடுத்தவும் - தேவையானதை ஏற்றுக்கொள்ளவும் - ஏற்றுக் கொள்ளாமலிருக்கவும் பார்வையாளனுக்கு முழு உரிமையுமுண்டு.

படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்.

பணிவன்புடன்
அஜீவன்
Reply
#10
[quote=AJeevan] எனது படைப்புகளை ; நான் காணும் சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குகிறேன். இக் கதாபாத்திரங்களுக்கு உரிவர்கள் அறிஞர்களில்லை. இவர்கள் சர்வ சாதாரணமானவர்கள்.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்
இப்படிச் சொல்லும் நீங்கள்
[quote]தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார
இப்படியும் நினைக்கின்றீர்கள்.
இங்கு அறிவுரை வேண்டாம். அறிந்ததைத் தாருங்கள் அதுபோதும்.
எனது பார்வையில் எனது கருத்துக்களை வைத்திருந்தேன். ஆனால் படைத்தவரே முன்வந்து தனது படைப்பிற்கு விளக்கங்கள் தரும்போது, இன்னும் விபரமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
[quote]படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்
எல்லோராலும் படைக்க முடியாது. உங்களால் அது முடிகிறது. கண்ணதாசன் கூட ஒரு பாடலில் குறிப்பிடுவார் படைப்பதனால் நான் இறைவன் என்று.

[quote]வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்
நல்லது, அஜீவன் நீங்கள் தூவும் விதைகள் வளர்ந்து விருட்சமாகவும் எடுத்த பணிகள் வெற்றிதரவும் வாழ்த்துக்கள்.

உங்கள் விளக்கங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
Reply
#11
எச்சில்போர்வை

சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுழைகிறது, கூடவே நாங்களும் நுழைவது போன்ற பிரமை.

ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது

ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன.

லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும் , தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன்.

ஓரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமாராப் பார்வை.

கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை.

யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது, சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது.

முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை.

கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.

புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?
அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
Reply
#12
இனிய அன்பு உள்ளங்ளே,
உங்கள் விமர்சனங்களில் தெரியும் பாராட்டுகள் உண்மையில் எம்மைத் தாலாட்டகின்றன.

இது ஒரு தனி மனிதனின் வெற்றியல்ல என்னோடு இணைந்து கரம் கோர்த்த அனைவரதும் வெற்றியாகத்தான் கருதுகிறேன். உங்கள் விமர்சனங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்வேன்.அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு என் நன்றிகள்.

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் அல்லது வெற்றிக்காக இணைந்து நிற்கும் பலர் வெளிச்சத்தில் தெரிவதில்லை.

ஒரு மரத்தின் வளர்ச்சியைப் பார்த்து பிரமிக்கும் நாம்இ அதன் வளர்ச்சிக்கு உதவிய ஒளி - காற்று - நீர் - சுற்றம் -------- இன்னும் எத்தனை எத்தனையோ விடயங்களை நாம் கணக்கிலெடுப்பதில்லை.

அதுபோல் என் படைப்புகளில் சேர்ந்திருந்து வேதனைகளைத் தாங்கி உரமான மற்றும் கருத்து முரண்பட்டு - பொறுமையற்று - எனது பிடிவாதங்ளை
( கொள்கை) ஏற்றுக் கொள்ளாது என்னை நட்டாற்றில் விட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி சொல்ல யாழ் இணையம் வழி என் இதயம் துடிக்கிறது.

தாங்கள் குறை கானும் போதும் மகிழ்வோடு தங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறது மனது.

சுவிசின் திரைப்பட விழாவில் 5 விருதுகளைப் பெறும் போது Swiss மக்களுடன் சேர்ந்து கரவொலி செய்யவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது தனித்து நின்று குமுறிய என் இதயத்துக்கு தாக சாந்தி செய்தது போன்ற உணர்வு உங்கள் பாராட்டுகள் - விமர்சனங்கள் -தாக்குதல்கள் மூலம் கிடைத்ததில் அக மகிழ்ச்சி.நன்றிகள்...............

அடுத்த படைப்பான
அழியாக் கவிதை குறும் படம் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.

லட்சங்களுக்காக வாழும் மக்கள் மத்தியில் லட்சியங்களுக்காக வாழும் ஒரு சிலராவது இல்லாமலில்லை.
நன்றியறிலுடன்
அஜீவன்.
Reply
#13
இன்னமும் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->விசாரித்து பார்க்கிறேன்
Reply
#14
அன்பு முல்லைக்கு,
அணு அணுவாக படத்தை விமர்சிக்கும் தங்களது பாணி வியக்க வைக்கிறது.
நன்றிகள்;....................பல.
அருமை!!!!

தொபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல் என்று குறிப்பிட்டிருக்குமிடத்தில் ஓர் சிறு திருத்தம் ;-

அது ஊரில் ஏஜன்சிகாரனுக்காக பிணை நின்றவரது கோபக் குரல்.
(படத்தில் நடிப்பவர்தான் அக் குரலுக்குரியவர்.)


கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.
என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இதே போன்றதொரு கேள்வியை சுவிசின் மாநில திரைப்பட விழாவில் கேட்ட போது நான் சொன்ன அதே பதிலை தற்போது முன் வைக்க விரும்புகிறேன் .-

"அனைத்து ஜீவராசிகளதும் தேவையறிந்து முன் செல்வதற்கோ பின் வாங்குவதற்கோ உறுதுணையாக செயல்படுவது கால்கள்தான்.

ஒருவனது மனம் சோர்ந்து விடும் போது உடனடியாக அவனது கால்கள் வலுவிழந்து விடுகின்றன. அதனால்தான் சோகம் என்று வந்தவுடன்
"அய்யோ" என்று கைககளத் தலையில் வைத்துக் கொண்டாலும் , அவன் ஏதோ ஒரு மூலையில் நிலை குலைந்து அமர்ந்து விடுகிறான்.
அப்படியான ஒரு மன நிலையிலுள்ள அவனுக்கு நண்பனாக நானிருக்கிறேன் என்று கால்கள் அறிவரை சொல்வது போல அக் காட்சி அமைக்கப்பட்டது."

புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?

இன்னும்.........இன்னும்....... எத்தனை........எத்தனை.......

நன்றியறிதலுடன்
உங்களால் ஆக்கப்பட்டவன்
அஜீவன்
Reply
#15
அந்தத் தொலைபேசி அழைப்பை யார் எடுத்தார்கள் என்று நான் குழம்பியதுண்டு . திருத்தம் செய்ததற்கு நன்றி

பார்த்தீர்களா? அந்த குறும்படத்தில் எவ்வளவு விடயங்களைச் சொல்ல வருகிறீர்களென்று. ஆக நீங்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்ததாகக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே வருகின்றது.

நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.

கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?

ஏனெனில் இன்று தென்னிந்தியக் கலைஞர்கள் நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்தான் படம்பிடித்துப் போகின்றார்கள். எங்கள் கதைகளையே படமாக்கி எங்களுக்குப் போட்டுக் காட்டும் நிலையே அவர்களிடம் இப்போது உள்ளது.

தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.

முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.
Reply
#16
அன்பு முல்லைக்கு
புரிந்துணர்வுக்கும் - விளக்கம் கிடைத்ததற்கும்; நன்றி

[quote=Mullai]நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.

நாம் முயன்றால் , எமது மக்கள் மனம் வைத்தால் எதுவுமே தூரத்திலில்லை.
அண்மையில் இருப்பதை கருத்திலெடுக்காமல் தூரத்தில் தெரியும் கானலை நீர் என்று மயங்கி ; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல நடந்து கொள்ளும் நம்மால்தான் நாம் பின் தங்கி நிற்கிறோம் என்பது வேதனைதான்.இது பற்றி ஏற்கனவே ஓர் கட்டுரை வரைந்தேன்.

அதன்சில பகுதிகள்:-
எனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும் அவற்றை தமிழ் - சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய - உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும்இ அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.

இலங்கையிலும்இ தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டுஇ அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.

எமது கலைப்படைப்புகள் எவருக்கு போய்சேர வேண்டும் என்பதைக்கூட சிந்திக்காமல் ஒரு பெரிய இயக்குனர் போல் அவர்கள் பேசுவது பரிதாபத்துக்குரியது.
இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால் போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.

சினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய்இ படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து..................... வேண்டியதாகிவிடும்.

இதுதவிர மேடை நாடகத்துக்கும் - சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்பட்டது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் - நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.

பணபலமும்இ ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும்.


<b>அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.
இவர்களுக்காக நாம் வருந்த வேண்டியதில்லை. </b>


நான் இலங்கையிலிருக்கும் போது என் சிங்கள நண்பனொருவன் 1975 -76 களில் என்று நினைவு ; கருத்தரங்கொன்றில் வைத்து சிலோன் தியட்டர் அதிபரிடம் இப்படிச் சொன்னான் :-

<b>இப்ப நீங்க லக்ஸ் கொண்டு வந்து விக்கிறீங்க : நாளைக்கு அவன் நேரே உங்களுக்கும் சேர்த்து நேரடியா விப்பான்.அப்ப கடையை மூடிட்டு வீட்டில இருந்து நீங்களும் வாங்கி தேச்சு குளிப்பீங்க."

சொல்வது புரியுமென்று நினைக்கிறேன்.....................

[quote=Mullai]கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?

தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணமில்லை.அது நிலையானதல்ல எனக்கு யதார்த்தமான எமது புலம் பெயர் வாழ்வுடன் கலந்த கதையுடன் உள்ள படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறேன். தற்போது சுவிஸ் கலைஞர்களுடன் ஒரு முழு நீள ஜேர்மன் படத்தை முடித்திருக்கிறேன்.

[quote=Mullai]தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.

வைரமுத்து சொன்ன ஒரு கருத்து :-
[b]"கள்ளிக்காட்டு படைப்பை (இலக்கியத்தை) எழுதுவதற்கும் அதை ரசிப்பதற்கும் கள்ளிக்காட்டில் வாழ்ந்தவனால் மட்டுமே முடியும்." </b>

தற்போது " அழியாக் கவிதை " குறும் படம் தொகுக்கப்பட்டக் கொண்டிருக்கிறது.
வெகு விரைவில் உங்கள் ஆதங்கம் நிறைவேறும்...................

[quote=Mullai]முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.

கண்ணனின் தூன்டதல்கள்தான் நான் இங்கே எழுதக்; காரணம்.கண்ணன் மட்டும் இல்லாமலிருந்தால் நான் களத்துக்குள் வந்தேயிருக்க மாட்டேன்.

நன்றிகளுடன் தொடரும்.............
Reply
#17
உங்கள் கட்டுரையின் முழுப்பகுதியையும் தரமுடியுமா???

இப்ப நீங்க லக்ஸ் கொண்டு வந்து விக்கிறீங்க : நாளைக்கு அவன் நேரே உங்களுக்கும் சேர்த்து நேரடியா விப்பான்.அப்ப கடையை மூடிட்டு வீட்டில இருந்து நீங்களும் வாங்கி தேச்சு குளிப்பீங்க."

யார் சொன்னாலும் உண்மை இதுதான்
Reply
#18
இவ் இணைப்பைத் தருகிறேன், பாருங்கள்:-

http://www.yarl.com/articles.php?articleId=96
Reply
#19
[size=18]அஜீவனின்

சூரிய உதயத்தையோ, அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும், உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை.
நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர் ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம் மனத்தில் தோன்றத்தான் செய்தது.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில் திரும்பியது. ராதிகா சமைக்கும் விதமும், கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும் யதார்த்தமாகவும், ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன.

குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும். இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது. ஆனாலும் ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு பாரது}ரமானதாக இருக்காது.
அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.

புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம் இல்லாமல், அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போது, ராஜவாழ்க்கை, காதல் கணவன்... என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து
தனிமையே துணையாகி, அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக் கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்.. தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம்.

இந்தப் படம் பார்த்து ரசிப்பதற்கான வெறும் குறும்படமாக மட்டுமாக இல்லாமல், புலம்பெயர்ந்த குடும்பங்களில் தொடர்கதையாகும் நிழல்யுத்தங்களின் காரணங்களைக் கண்டு திருந்திக் கொள்ள ஏதுவான கருவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.

தம்மைத்தாமே புரிந்து கொள்ளாத.. திருத்திக் கொள்ளக் கூட முயலாத நிலையில் உள்ள தன்மைகள் கொண்ட பாத்திரங்களை இப் படத்தில் கண்டு கொள்ள முடிந்தது. இது பார்ப்பவர்கள் மனதில் சிந்தனையைத் து}ண்டி அவர்தம் பிழைகளை உணர வைக்குமென்றே நம்புகிறேன்.

உதாரணமாக பாலகிருஸ்ணன் களைத்துத்தான் வீடு திரும்புகிறார். இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருக்கு இந்த வாழ்க்கை சில வருடப் பழக்கமாகி விட்டது. ஆனால் அவர் மனைவி ராதிகாவோ சுற்றம், சூழலை விட்டு இப்போதான் வந்திருக்கிறாள். கணவனில் இருந்து தனிமை வரை அத்தனையும் புதிது. அவள் மனநிலையை உணர்ந்து கொள்ளும் தன்மையில் அவன் இல்லை.

தனியே பஞ்சாபி விடயத்தைப் பார்த்து விட்டு அவளைத் திட்ட முடியாது.
நான் மேலே குறிப்பிட்டது போல, ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி, கறியை எரிய வி;டுமளவுக்கு பாரது}ரமானதாக ஒரு போதும் இருக்காது.
அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. அதற்கான காரணம் எங்கே என்று தெரிய வேண்டும். அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு சம்பவங்கள் அங்கு நடந்திருக்க வேண்டும். பாலகிருஸ்ணன் அதற்கான சரியான விளக்கங்களை அங்கு கொடுக்காதிருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் கள்ளம் பிடிபட்டுப் போச்செண்டு.. என்ற வார்த்தைகளை அவள் கொட்டியிருக்கத் தேவையில்லை.

வேலையிடத்தில் அவன் நாய் மாதிரி... நீ இங்கே... இவை பல ஆண்களின் வாயில் வரும் வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் எந்தளவு து}ரத்துக்கு ஒரு மனைவியைப் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

நண்பன் வீடு மாற உதவி செய்தவன் மனைவி காத்திருப்பாள் என்பதை எண்ணியிருந்தால் ஒரு தடவை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது நிலையை அவளுக்கு விளக்கியிருக்கலாம். தன்னந்தனியான அந்தக் காத்திருப்பு என்பது அந்தப் படத்தில் காட்டியதையும் விட- மனதில் அதி விரக்தியையும் வேதனையையும் வெறுப்பையும் கொடுக்கக் கூடியது. போகும் போதாவது இன்று நண்பனுக்கு உதவி செய்ய வேண்டிய பிரச்சனை ஒன்று உள்ளது. நான் வரத் தாமதமாகலாம் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கலாம். எனக்கு மட்டுந்தான் பிரச்சனை. நீ இவைகளை அனுசரி என்பது போலல்லவா பாலகிருஸ்ணனின் செயல்கள் அமைந்துள்ளன.

இப் படத்தின் மூலம் ஆண்கள் இந்தத் தவறுகளை உணர்ந்து திருந்திக் கொள்வார்களேயானால் அதற்கான நன்றி அஜீவனையே சென்றடையும்.

மற்றொரு கோணத்தில் நின்று பார்த்தால்.. இவைகளை மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

மொத்தத்தில் இப்படம் சமூகத்துக்கான ஒரு நல்ல படைப்பு.
ஒரு பெரிய பிரச்சனை சில நிமிடங்களுக்குள் மிகவும் யதார்த்தமாக முன் வைக்கப் பட்டுள்ளது. படத்தில் தேவையற்ற விரிசல்களோ, ஒடிசல்களோ ஏற்படாதவாறு கன கச்சிதமாக வெட்டல்களும், ஒட்டல்களும் நடந்துள்ளது.
இது இந்தத் துறையில் அஜீவனுக்குள்ள அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.

காரிலே போகும் போது இப்படிச் சண்டை போடுகிறார்களே..! ராதிகா இந்தக் கட்டத்தில் பொறுமை காக்காலாமே..! ஒரு பெரிய விபத்துக்கு இது வழியாகலாமே..! என மனசு அந்தரப் படுகையில் விபத்து நடப்பதாகக் கனவு-
நன்றாகவே அமைந்துள்ளது.
இன்னும் இப்படத்துக்குள் நிறையவே தேடலாம். புரியலாம்.
எனது நேரம் கருதி தற்போதைக்கு இத்துடன் நிறைக்கிறேன்.

இப் படம் பற்றிய முல்லையின் பார்வையும், எனது பார்வையும் பல இடங்களில் ஒன்றாக இருந்திருக்கின்றன போலவே எனக்குத் தோன்றுகின்றது.
ஆனாலும் அவைகளை விமர்சனமாக முன் வைப்பதில் முல்லையிலிருந்து நான் சற்று வேறு பட்டே நிற்கிறேன்.
அதே நேரம் முல்லை எனது பார்வையையும் தாண்டி வேறு சில விடயங்களையும் ஊன்றிப் பார்த்திருக்கின்றார் என்பதையும் என்னால் உணர முடிகிறது.

முடிந்தால் நிழல்யுத்தம் பற்றி இதிலே எழுத மறந்தவைகளை மீண்டும் வந்து எழுதுகிறேன். ..
Nadpudan
Chandravathanaa
Reply
#20
அன்புடன் சந்திரவதனாவுக்கு

எமது குறும் படங்களுக்குள் நிறையவே தேடியிருக்கிறீர்கள் ; புரிந்தும் இருககிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

எமது படங்கள் பற்றிய மணிதாசன் - முல்லை மற்றும் உங்கள் பார்வையில் பலவிதமான வித்தியாசமான கோணங்களை பார்க்க முடிகிறது.

ஆனாலும் அவைகளை விமர்சனமாக முன் வைப்பதில் ஒருவருக்கொருவர் சற்று வேறு பட்டே நிற்கிறீர்கள்.

இதுதான் யதார்த்த சினிமாவுக்கும் ; பொழுது போக்கு சினிமாவுக்கும் இடையே உள்ள வேறுபாடு.

பொழுது போக்கு சினிமா பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது.

யதார்த்த சினிமா,பார்வையாளனை சிந்திக்கவும் பார்வையாளனே ஒரு சுயமான முடிவை எவரது வற்புறுத்தலுமில்லாமல் தேர்ந்தெடுக்கவும் வழி வகுக்கிறது.

உங்கள் விமர்சனங்களினூடாக அவை சாத்தியப் பட்டிருப்பதில் அளவிலா மகிழ்சிகள்....................!!!

நன்றிகளுடன்...........
அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)