07-22-2004, 12:16 AM
[url=http://www.eelampage.com/index.shtml?id=200406212110465961&in=http://[/url]]http://www.eelampage.com/i....&in=[url][/url]
'கேள்விக்குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம்" - விடுதலைப்புலிகள் பத்திரிகை
கேள்விக் குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம் என்ற முகப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடாக 'விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் ஆனி-ஆடி மாதத்திற்குரிய 117வது இதழ் இன்று வெளிவந்துள்ளது.
சமாதானப் பேச்சுக்ள் தொடர்பாக சந்திரிகா அம்மையாரின் குழப்பகரமான கருத்துக்களும் சிங்கள அரசின் ஸ்திரமின்மையும் ஒன்று சேர்ந்து சமாதான சூழலை கேள்விக்குறியாக்கி வருகின்றது.
சமாதானப் பேச்சை அர்த்தமுள்ளதாக்க தேவையான அரசியல் நடைமுறைகளை புலிகள் இயக்கம் தெளிவாக வரையறுத்து உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது கசப்பான கடந்தகால அனுபவங்களை கருத்தில் எடுத்து பேச்சுக்களை இடைநடுவில் குழம்பா வண்ணம் விவேகமான வகையில் அரசியல் நிகழ்ச்சி நிரலை புலிகள் வரைந்து அரசிடம் கையளித்திருந்னர்.
ஆனால் சந்திரிகா அரசு இதுவரை புலிகளின் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை முற்றாக நிராகரிக்கவும் இல்லை. அதற்குப் பதிலாக நேரத்திற்கு ஒரு கருத்தைக் கூறி காலத்தை கடத்தும் தந்திரத்தையே அது கடைப்பிடித்து வருகிறது.
1994ஆம் ஆண்டு அம்மையார் வெளியிட்ட தீர்வுப் பொதியின் அடிப்டையிலேயே பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் என்று அவர் பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். இத்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஒரு ஆலோசனை சபை வேண்டுமென்று கூறி அதற்கு நாடாளுமன்று உறுப்பினர்கள் கொண்ட சபை அமைக்கப்படும் என்றும் அம்மையார் கூறியுள்ளார்.
அம்மையாரின் முன்னைய தீர்வுப்பொதி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு எப்போதோ செத்துப் போய்விட்டது. பத்து வருடங்களின் பின் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க அம்மையார் முனைவது எந்தப் பயனையும் கொடுக்கமாட்டாது. ஏற்கனவே இருக்கின்ற அமைப்பு முறையே சமாதானத்தை முன்நகர்த்த உதவாதபோது மேலும் ஒரு சபை என்ற கருத்து சலிப்பைத் தருவதாவவே உள்ளது.
இதேவேளை அம்மையாரின் ஆட்சிப் பங்காளிகளான ஜே.வி.பியினர் பேச்சுவார்த்தை எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சிங்கள மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்;டும் என்று கூறியுள்ளனர்.
இவையெல்லாம் தற்போதைய சமாதானச் சூழலுக்கு ஏற்புடைய விடயங்களல்ல. பேச்சை அரசு விரும்பவில்லை பேச்சை நடாத்தும் நிலையிலும் அரசு இல்லை என்ற உண்மையைத் தான் காட்டுகின்றன.
ஒரு கூட்டத்தில் சமாதானம் பற்றி அம்மையார் ஒரு கருத்தைக் கூறுகிறார். பின்னர் அதை அவரே மறுக்கின்றார். அம்மையார் கூறியதற்கு முரனாக ஜே.வி.பி இன்னொரு கருத்தைக் கூறுகிறது. அதை அம்மையாரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று ஜே.வி.பி கூறுகின்றது. தமிழ்த் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று பச்சை இனவாதத்தை ஜே.வி.பி தலைவரே கூறுகிறார்.
புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு எதிராக நச்சுப்பிரச்சாரத்தை சிங்களப் பேரினவாத சக்திகள் வேகப்படுத்தியுள்ளன.
ஜே.வி.பி இதில் முன்னணி வகிக்கின்றது சிங்கள ஊடகங்களும் தமது பங்கிற்கு இனவாதப்பணி செய்கின்றன.
கிராமங்கள் தோறும் ஜே.வி.பி. இந்த நச்சுப்பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றது. சமாதான முயற்சிகள் தொடர்பாக புலிகளின் நிலைப்பாடுகள் எதையும் ஏற்க மறுத்துள்ள ஜே.வி.பி. இப்போதே போர்ப்பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டது சந்திரிகா அம்மையாரும் தமது கட்சியின் நிலைப்பாட்டை நிராகரிக்கவில்லை என்று ஜே.வி.பி. கூறிவருக்கின்றது.
இத்தைகய சமாதான விரோதக் கருத்துக்கள் தமிழ் மக்களை விரக்தியின் விளிம்புக்கு கொண்டு செல்கின்றது. சமாதான வழியில் தமிழரின் இன்பிரச்சினை தீர்க்கப்பட முடியாத ஒன்று எனத் தமிழ் மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.
சமாதானப் பேச்சைத் தட்டிக்கழிக்கும் அதேவேளை சிங்கள அரசு தமிழ்த் தேசியத்தை சிதைக்க முனையும் அரசியல் சதிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. தனது இராணுவப் புலனாய்வுப்பிரிவினரை பயன்படுத்தி கிழக்கில் கொலைகளிலும் குழப்பத்தை உண்டு பண்ணும் செயல்களிலும் ஈடுபடுகின்றது.
இத்தகைய சதி அரசியல் மூலம் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று சிங்கள அரசு நினைத்தால் அது பல வரலாற்றுப் பாடங்களை மறந்து விட்டது என்பது தான் அர்த்தமாகும்.
துரோகங்களும் சதிகளும் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு பதிலாக பலப்படுத்தியுள்ள பல வரலாற்றுச் சம்பவங்களை எமது போராட்ட வாழக்கையில் காணலாம்.
சமாதானத்திற்கு சாதகமாகவும் சிங்கள அரசு செயற்படவில்லை போர் நிறுத்தத்தையும் அது மதிக்கவில்லை. ஆனால் சமாதானச் சூழல் நிலவுகின்றது என உலகிற்கு காட்ட விரும்புகின்றுது.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சமாதானமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை மீள்குடியேற்றமும் இல்லை. அகதி வாழ்வும் தொலைந்த பாடு இல்லை நிகழ்கால நிம்மதியுமில்லை எதிர்கால நம்பிக்கையும் இல்லை என்ற விரக்தி நிலையிலேயே உள்ளனர்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலைக்கு மதிப்பளிக்கவேண்டிய நிர்பந்தம் புலிகள் இயக்கத்திற்கு உண்டு. போர்மூலம் தோற்கடிக்க முடியாது தமிழரின் விடுதலைப்போராட்டத்தை சமாதானம் என்ற சதி அரசியல் மூலம் தோற்கடிக்க சிங்கள அரசு முயல்கின்றதோ! என்ற ஐயம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
காலம் கடந்தபடி உள்ளது சமாதானத்திற்காக காத்திருக்க புலிகள் தயார். ஆனால் சிங்கள அரசு ஒரு சூழ்ச்சிகரமான நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்காக சமாதானச் சூழலை இழுத்தடிப்பதை உணர்ந்து கொண்டும் முட்டாள் தனமாக காத்திருக்க புலிகள் இயக்கம் தயார் இல்லை அதை தமிழ் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலையை சந்திரிகா அரசும் சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி. புதினம்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: