Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலையுதிர்ந்துபோகும் எம் வசந்தகாலங்கள்
#1
<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...! </b>


மனிதனைவிட
மரங்கள் மேலானது...!

கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை...!

கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்னகுற்றம்
செய்தன...?

மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்கரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
©த்துக் குலுங்கியது..!

சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்...!

அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?

எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!

இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

<b>வே.த. தமிழீழதாசன்
24.10.2004 (பாரீஸ்)</b>
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#2
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்!
Reply
#3
தங்கள் வாழ்துக்களுக்கு நன்றி ஹரி
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#4
வாழ்த்துக்கள் அண்ணா
Reply
#5
<b>வாழ்த்துக்கள் அண்ணா</b>
----------
Reply
#6
அன்னை நிலத்தில்
தன்னை தாங்கிய நிலத்தில்
ஆக்கிரமிப்பாளன் தான் நிற்க
அவன் தங்க நிழலும் தரேன்
தாகம் கொண்டு
மாமரம் வசந்தம் இழந்தது...!
அது வீர மண்ணில்
விளைந்ததல்லவா அதுதான்...!
விடிவு வர
வசந்தம் கொள்ளும் மாமரம்
ஆக்கிரமிப்பாளனின் ஆதாரமாம்
மரமாய் வாழும் மனிதர்கள்
விடுதலை வந்தும்
வசந்தம் பெறார்...!

நல்ல கவி...தங்கள் கவிக்கு எம் வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
தொடர்ந்து களத்தில் உங்கள் கவிகள் தவழ்ந்திட வாழ்த்துக்கள் தொடருங்கள்... தமிழீழதாசன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
வாழ்துக்கள் தொடர்ந்து தாருங்கள் உங்கள் கவிகளை
[b][size=18]
Reply
#9
வாழ்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
மீண்டும் அடுத்த கவிதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#10
<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...! </b>
«ரு¨ÁÂ¡É ¾¨ÄôÀ¢ø ¸Å¢¨¾ Åடிò¾¢ரு츢ȣ÷¸û.
þ¨Äயு¾¢÷óதது Á¡ÁÃõ Áðடுõ þø¨Ä.
புÄõ ¦ÀÂ÷󾾡ø þýனுõ ±ò¾¨É ±ò¾¨É ¦¾¡¨Äòது ¿¢ü¸¢§È¡õ.
¸Å¢¨¾ «ரு¨Á.
Å¡úòதுì¸û....
§Áலுõ ¦¾¡¼ருí¸û...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)