Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்
#1
அக்டோபர் 15, 2004
thatstamil.com

இலங்கை: கட்சிக்கு அங்கீகாரம் கருணாவுக்கு சிக்கல்

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் நிலவுவதாக இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறியுள்ளார்.


தற்போது ராணுவ உதவியுடன் தலைமறைவாக இருந்து வரும் கருணா தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

ஆனால், அந்தக் கட்சி இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.

இது குறித்து கொழும்பில் இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறுகையில்,

தற்போது வட கிழக்கு மாகாணங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல் ஆணைய சட்டப்படி, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது.

எனவே கருணாவின் புதிய கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சியாக கருணாவின் கட்சி இயங்குவதாக வெளியாகும் செய்திகள் தவறு என்றார் சேனநாயகே.

சேனநாயகேவின் இந்தப் பேட்டியால் கருணா ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சட்டப்படி, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இந்த சட்ட சிக்கலிலிருந்து மீண்டு தங்களது கட்சியை பதிவு செய்வது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Reply
#2
செய்திக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவைப் பயன்படுத்தி இராணுவ hPதியாகப் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சி தோற்றுப்போய்விட்டது. இதனை நன்கு உணர்;ந்துள்ள வெளிநாட்டுச் சக்திகள் சில, புலிகளுக்கு எதிரான போக்குடைய பிற தனித்தனி ஆள்களை கருணாவின் பெயருக்குப் பின்னால் ஒன்றிணைய வைப்பதன் மூலம் ஈழத் தமிழர் தரப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பலவீனப் படுத்தும் திரைமறைவு சதிவேலையில் இறங்கியிருக்கின்றன.
கருணாவை ஜனநாயகவாதி வேடத்தில் - அரசியல் கட்சி என்ற நாடகத்தின் மூலமாக - களமிறக்கும் முயற்சிகளுக்கு முண்டு கொடுக்கும் பின்னணியில், சூத்திரதாரிகளாக இச்சக்திகளே உள் ளன என்று தமிழர் தரப்புத் தலைவர்கள் மத்தியில் சில செய்தி கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட கருணாவோடு, ஏற்கனவே புலிக ளுக்கு எதிராக இயங்கிய சில தமிழர் தரப்பு களும் இப்போது சேர்ந்து இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் -
இந்தக் கூட்டிணைவை நெறிப்படுத்தும் பின் னணியில் அயல்நாடு ஒன்றின் உளவுப் பிரிவு அதிக பங்களித்திருப்பதாகவும் -
சில செய்திகள் கசியத்தொடங்கியிருப்பது தமிழர் தரப்பை பெரும் அதிர்ச்சிக்கும் அதிருப் திக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.
கருணாவுக்குப் பின்னணியில் அரசுத் தரப் பின் சில ஏஜென்ஸிகளே செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக இப்போது வேறு பிற சக்திகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
இதை உறுதிப்படுத்துவது போல கருணா பெயரில் ஒன்றிணையும் ஆள்களின் பட்டியலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா இருந்த சமயம் அவருக்கு எதிராக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்தை - குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை - சேர்ந்தோரை ஒதுக்குகின்றார் அல்லது ஒடுக்குகின்றார் எனக் குற்றச்சாட்டுக்களை அடுக் கியவர் கருணா.
ஆனால், அவரது பெயரில் இப்போது உருவாக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான பல்வேறு தனித்தனி ஆள்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் செயலாளராகக் கூறப்பட்டவர் ஞானராஜா. இவர் பரந்தனைப் பிறப்பிடாமாகக் கொண்டவர். ஈ.என்.டி. எல்.எவ்வைச் சேர்ந்த பரந்தன் ராஜனின் சகோதரர்.
பரந்தன் ராஜன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேற் றப்பட்ட பின்னர் ஈ.என்.டி.எல்.எவ்வை உருவாக்கி இந்தியத் தரப்பின் எடுபிடி அமைப்பாக அதைச் செயற்படுத்தியவர். இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த போது அதன் கூலிப்படைபோன்று ஈ.என்.டி.எல்.எவ். செயற் பட்டது. இந்தியப் படை நாடு திரும்பிய பின்னர் இந்தியா வைத் தளமாகக் கொண்டு செயற்படுபவர் பரந்தன் ராஜன். அவரின் சகோதரர் மூலம் கருணா அணிதிரட்டப்பட்டிருக் கின்றார்.
லண்டனில் இருந்து வானொலி சேவை நடத்தும் ஒருவர், டென்மார்க்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படும் ஒருவர், பாங்கொக்கை மையமாக வைத்து இணையத்தளம் ஒன் றின் ஊடாக புலிகள் எதிர்ப்புப் பிரசாரம் நடத்தும் வடம ராட்சியைச் சோந்த நபர் ஒருவர் என்று பல புலி எதிர்ப்பு ஆள்களே கருணா அணியின் பின்னால் வந்துள்ளனர் என்று பிரசாரப்படுத்தப்படுகின்றது. இவர்கள் எவரும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
இவர்களை கருணாவின் பெயரில் ஒன்றுதிரட்டி -
ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா, ஈரோஸின் சங்கர் ராஜி மற்றும் ஆனந்தசங்கரி போன்றோரோடு ஒரே குடை யின் கீழ் இயங்க வைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப் படுத்தலாம் என்று திட்டமிடுகின்றன மேற்படி உளவுச் சக்தி கள் எனக் கூறப்படுகின்றது.
கருணா அணி என்ற பெயரில் ஒரு குழுவை இராணுவ hPதியாகக் கிழக்கில் இயங்கவைத்து, புலிகளைப் பலவீனப் படுத்தும் முயற்சி பிசுபிசுத்துப்போய்விட்டது. இந்த நிiயில் ஜனநாயகவாதி என்ற வேடத்தில் கருணாவை நிறுத்தி, அரசியல் கட்சி என்ற நாடகத்தை ஆரம்பித்து, புலிகளைப் பலவீனப்படுத்தலாமா என்ற திரைமறைவுத் திட்டம் இப் போது பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றது.
தனித்தனியாக இயங்கும் பலரையும் கருணா என்ற பெயரின் பின்னால் இணைப்பதன் மூலம் புலிகளைப் பல வீனப்படுத்துவது இந்த வெளிநாட்டு உளவுப் பிரிவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதற்கான மும்முர நடவடிக்கைகளில் அந்தப் பிரிவு இறங்கியிருப்பதா கவும் கூறப்படுகின்றது.
இவற்றை மோந்து மோப்பம் பிடிப்பதில் புலிகளின் புல னாய்வுப் பிரிவு மும்முரமாக இருப்பதாக ஒரு செய்தி தெரி வித்ததது.
நன்றி உதயன்
Reply
#4
வெளிநாட்டு உளவுப்படை என்றால் அது நிச்சயமாக இந்திய அரசின் உளவுப்படையாகத்தான் இருக்கும்...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)