Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீரப்பன் என்ற ப(கா?)ட்டுப் பூச்சியை, கதைமுடிப்பதற்காக
#1
<b>இயக்கியது இதயம்... தாக்கியது மூளை! </b>

சத்தியமங்கலம் அதிரடிப் படை முகாம்... அது ஒரு கல்யாண மண்டபம்தான். அதன் மணமகன் அறையில் கூடுதல் டி.ஜி.பி-&யான விஜயகுமார் அமர்ந்து அடுத்தகட்ட ஆலோசனைகளில் மூழ்கி இருக்க... மணமகளுக்கான அறை எஸ்.பி&யான செந்தாமரைக்கண்ணனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதிரடிப்படையின் உளவு மற்றும் ஆபரேஷன் பிரிவுக் கான தலைவர் இவர்.
<img src='http://www.vikatan.com/jv/2004/oct/27102004/p34.jpg' border='0' alt='user posted image'>

அடர்ந்த காடு எனும் கூட்டையே தனது வீடாக்கி, அதனுள் தன்னை வளர்த்துக் கொண்டிருந்த வீரப்பன் என்ற ப(கா?)ட்டுப் பூச்சியை, கதைமுடிப்பதற்காக வெளியே கொண்டு வந்த இந்த திட்டத்துக்கு ஆபரேஷன் ககூன்Õ (ஆபரேஷன் பட்டுக்கூடு) என்று பெயர். படபடக்க வைக்கும் இந்த திட்டத்துக்கு உற்சாக ரத்தம் பாய்ச்சிய இதயம் விஜயகுமார் என்றால், அதை செயல்படுத்திய மூளை செந்தாமரைக்கண்ணன்.

அவருக்கு நாம் கைகொடுத்துப் பாராட்டினோம்.

தாங்க்ஸ் என்றார் செந்தாமரைக்கண்ணன் சின்ன சிரிப்புடன்.

நாடே நன்றி சொல்லவேண்டியது உங்களுக்கெல்லாம்தான்!ÕÕ என்றபடி, அவர் முன் அமர்ந்தோம்.


அக்டோபர் பதினெட்டாம் தேதி இரவு வீரப்பன் கும்பலை வேட்டையாடி முடித்ததைத் தொடர்ந்து, புகைமூட்டமாக கவிந்துகொண்ட பல சந்தேகங்களுக்குத் தீர்வு தேடி அவரிடம் கேள்விகளை வரிசையாக வைத்தோம். மொத்தமாக விவரிக்க ஆரம்பித்தார் செந்தாமரைக்கண்ணன்.

தனது அடுத்த காரியமாக, பெங்களூரில் உள்ள வி.வி.ஐ.பி. யாரையேனும் கடத்திவந்து, பணயத் தொகையாக இருநூறு கோடி ரூபாய் வரை பறிப்பதற்குத் திட்டமிட்டிருந்தான் வீரப்பன். தானே இந்தக் கடத்தலை நடத்தாமல், நாட்டுக்குள் ஒரு கூலிப்படையை அமர்த்தி, அவர்கள் மூலம் வி.வி.ஐ.பி&யை கடத்தி வரச் செய்ய முடிவெடுத்திருந்தான்.

அவன் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணில் பொறை. நடக்கும்போதுகூட லேசாகத் தடுமாறுகிறான் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. மற்றபடி அவன் உடம்பு ÔஎஃகுÕதான்! கண்ணுக்கு டிரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு கடத்தலை நிறைவேற்ற முடிவு செய்திருந்தான்.

நாட்டில் தனக்காக ÔவேலைÕ பார்க்கப் போகும் கூலிப்படை யார் என்பதில் அவன் வெவ்வேறு சாய்ஸ்கள் வைத்து, அதுபற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அந்த காலகட்டத்தில்தான் அதுபற்றி எங்களுக்கு தகவல் வந்தது. எங்கள் தலைவர் (விஜயகுமாரை சிலிர்ப்போடு இப்படித்தான் அழைக்கிறார்) ஐடியாப்படி பத்துமாதங்களுக்கு முன்பு ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். Ôபகையாளி குடியை உறவாடிக் கெடுÕ என்ற பழமொழியை நாட்டு நன்மைக்காக பிரயோகிக்கத் தீர்மானித்தோம்.

எங்கள் தலைவர் வைத்த பெயர்தான் ஆபரேஷன் ககூன்Õ. இதற்கான திரைக்கதை, வசனம், நடிகர்கள் என்று எல்லாமே நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பொறுப்பையும் சுதந்திரத் தையும் தலைவர் எனக்குக் கொடுத்தார். என்னை இயக்குகிற டைரக்டராக அவர் இருந்தார்.
சத்தியமங்கலத்தில் உற்சாக வலம்..

எல்லாம் எனது கட்டுப்பாட்டில். அசகாய வில்லன் மட்டும் காட்டில். அவன் நடவடிக்கைளை துப்பறிந்து, இங்கிருந்தே ஒரு கணக்குப் போட்டு நான் உருவாக்கிய திட்டத்தில், எந்தெந்த காரெக்டரில் இடம் பெற யார்யார் ஏற்றவர்கள் என்று தலைவருடன் அவ்வப்போது ஆலோசித்து நானே தேர்ந்தெடுத்தேன். எங்கள் அதிரடிப் படையை வெவ்வேறு திசைகளில் நிறுத்தி, பெண்ணாகரம் ஏரியாவைச் சுற்றி மட்டுமே வீரப்பனின் நடமாட்டம் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். அதேசமயம், குறிப்பிட்ட அந்த பெண்ணாகரம் ஏரியா மீது எங்கள் கவனம் இல்லை என்று அவன் நம்பும்படி செய்தோம்.

இந்த நேரத்தில் நாங்கள் அனுப்பிய ஆட்களை வீரப்பனின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினோம். அதில் வெற்றி கிடைத்தது. வெவ்வேறு திசையிலிருந்து வந்த வர்கள் போல, அவர்கள் வீரப்பனின் நம்பிக்கையைப் பெற ஆரம்பித்தார்கள். பழைய வீரப்பனாக இருந்தால் அத்தனை சுலபமாக அவர்களை நம்பியிருக்க மாட்டான். இப்போது அவனுக்குள் எங்கோ ஒரு சின்ன அலட்சியம், திமிர்த்தனம் வந்திருந்தது. கோடிக் கணக்கில் பணம் இருக்கின்ற எக்களிப்பும் அவனிடம் சேர்ந்து கொண்டது.

கண்பார்வைக்கு சிகிச்சை எடுத்து, கொஞ்ச காலத்துக்காவது சுகமாக வாழ வேண்டும் என்ற அவனது ஆசையை எங்கள் ஆட்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்! சின்னதும் பெரியதுமாக இவர்களுக்கு டெஸ்ட் வைத்துப் பார்த்துவிட்டு, திருப்தியடைந்துவிட்டான் வீரப்பன். திடீரென்று வீரப்பன் ஆசையாக ஒரு பொருளைக் கேட்பான். அந்த நேரம் பார்த்து, வீரப்பன் இருக்கிற இடத் துக்கு மிக நெருக்கமான பகுதி வரையில் அதிரடிப் படை ரெய்டு போய்விட்டு, வெறுங்கையோடு திரும்பும். அந்தப் படையின் நடமாட்டத்துக்கு நடுவே, நாங்கள் அனுப்பிவைத்த ஆட்கள் காட்டைவிட்டு வெளியேறி... வீரப்பன் கேட்டதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். வீரப்பன் நெகிழ்ந்து போய்விடுவான். இவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையில் இதை எப்படிப்பா சாதிச்சே?Õஎன்று உருகிப் போய்விடுவான். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

மும்பறச்சி மலை, முத்தூர் மலை, அக்கா மலை.. இந்த மூன்றைச் சுற்றிலும்தான் அவன் நடமாட்டம் இருந்தது. அவனோடு சேர்ந்து சுற்ற ஆரம்பித்த எங்க ஆட்கள், மெள்ள மெள்ள போதனை செய்ய ஆரம்பித்தனர். அவனது அலைபாயும் எண்ணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். நாட்டு வாழ்க்கையின் சுகங்களைச் சொல்லி அவனுக்கு நப்பாசை உண்டாக்கினர். Ôகொல்லி மலை பகுதிகளில் போலீஸ் தொந்தரவு இருக்காது. அங்கே ஜாகையை மாற்றிக் கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம்Õ என்றனர். கண்ணுக்கு சிகிச்சை பெறும் வகையில் கொல்லிமலை காட்டோரத்தில் ஒரு பண்ணை வீடு ரெடியாக இருப்பதாகவும் சொன்னார்கள்.

ஆனால், வீரப்பன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. Ôடாக்டரை காட்டுக்குள்ளாற கூட்டினு வந்து இங்கேயே ஆபரேஷன் பண்ணிடலாம்பாÕ என்றான். அதற்கு இணங்குவதுபோல் பேசி நாட்களைக் கடத்திவிட்டு, Ôவிசாரித்தோம். காட்டுக்குள் கண் ஆபரேஷன் என்பதெல் லாம் உச்சகட்ட ரிஸ்க் ஆகிவிடுமாம்Õ என்று சொல்லி விட்டனர் எங்கள் ஆட்கள். உபாதை அதிகமானபோது, அவன் தானாக ஒப்புக்கொண்டான், வெளியில் வர! இப்படித்தான் நாட்டுக்குள் ஆபரேஷன் என்ற முடிவுக்கு அவனை சம்மதிக்க வைத்தனர் எங்கள் ஆட்கள்.ÕÕ

<span style='color:red'>உங்கள் ஆபரேஷனுக்கு இந்தப் பதினெட்டாம் தேதியைக் குறித்ததில் தனி விசேஷம் உண்டா? என்று கேட்டோம்.

ம்ஹ§ம்! அதை வீரப்பனிடமே விட்டோம்! Ôவியாழக்கிழமை எனக்கு ஆகாது. வேறு எந்த நாளாக இருந்தாலும் வரத்தயார்Õ என்றான். பிறகு. 18&ம் தேதி திங்கள்கிழமை என்று சொன்னவனும் அவனே! நேரத்தையும் அவன் சாய்ஸ§க்கே விட்டோம். அன்று இரவு 10 மணி வரை நேரம் சரியில்லை என்றான். Ôசரி, 10.10&க்கு வண்டி வரும். அதில் ஏறிப் போய்விடலாம்Õ என்றனர் எங்கள் ஆட்கள். அதற்கு வீரப்பன் ஒப்புக் கொண்டான் என்ற தகவல் வந்ததும்தான், ஆம்புலன்ஸை அனுப்புவது... அதையும் சேலம் ஆஸ்பத்திரி பெயரில் அனுப்புவது என்ற முடிவுகளை எடுத்தோம்.

ஆம்புலன்ஸ் மீது வீரப்பனுக்குக் கொஞ்சம்கூடவா சந்தேகம் வரவில்லை?

வர வாய்ப்பில்லை. காரணம், அந்த ஆம்புலன்ஸ் எந்த ஆஸ்பத்திரியையும் சேர்ந்தது இல்லை என்றும் அது பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட போலி ஆம்புலன்ஸ்தான் என்றும் அவனிடம் சொல்லிவிட்டனர் எங்கள் ஆட்கள்.

அவனைக் காட்டுக்குள்ளிருந்து அழைத்து வரும் பொறுப்பு ஒரு இயக்கத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் எங்கள் ஆட்கள் சொல்லி வைத்திருந்தார்கள்! கற்பனையாகவே, ஒரு அண்டர்கிரவுண்ட் இயக்கம் உருவாகி இருப்பதுபோல் சொல்லி அவனை நம்ப வைத்தோம். ஆம்புலன்ஸில் வருகிறவர்களும் இயக்கத்து ஆட்கள்தான் என்றும், அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் என்றும் சொல்லிவிட்டோம்.. இதற்குமேல் இந்த சப்ஜெக்ட்டில் வீரப்பனே எதுவும் கேட்கவில்லை... நீங்களும் கேட்காதீர்கள்!ÕÕ (சிரிப்பு)

ஆம்புலன்ஸில் ஏறியதுமே வீரப்பனை உயிரோடு சுற்றி வளைத்திருக்கலாமே?

எலிப் பொறி இருக்கிறது. அதன் அருகில் எலி வந்துவிட்டது. நாம் அதை கட்டையால்கூட அடித்துவிட முடியும். ஆனால், இவ்வளவு தூரம் நெருங்கிவிட்ட எலியை நோக்கி அவசரப்பட்டு கை ஓங்கினால், காரியம் கெட்டு அது திரும்பி வளைக்குள்ளேயே ஓடிப் பதுங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? மாதக்கணக்கில் பொறுமையோடு காய்நகர்த்திய நாங்கள், சில நிமிடங்களுக்காக அவசரப்பட விரும்பவில்லை.

வீரப்பனைக் கொல்ல ஐந்து முதல் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் வரை முன்பு பல வாய்ப்புகள் வந்தன. அப்போதெல்லாம் கொஞ்சம் பொறுமை காத்தோம். நூறு சதவிகித சான்ஸ் இப்போது வந்தது.பயன்படுத்திக்கொண்டோம்.

பல வருடங்களுக்கு முன்பு, கர்நாடக வனத்துறை அதிகாரி சீனிவாசனை தன் ஆட்கள் மூலம் நம்ப வைத்து காட்டுக்குள் வரவழைத்து கழுத்தறுத்தான் வீரப்பன். அதே ஸ்டைலில் நாங்கள் அவனை எங்களை நோக்கி நாட்டுக்குள் வரவழைத்தோம்.

வீரப்பன் எந்தளவுக்கு உங்கள் ஆட்களுடன் நெருங்கிப் பழகினான் என்று விளக்க முடியுமா..?

சாகும்போது வீரப்பன் போட்டிருந்த டிரஸ் எங்கள் ஆட்கள் கொண்டுபோய்க் கொடுத்ததுதான். Ôஅடையாளம் தெரியாமல் இருக்கட்டும்Õ என்று எங்கள் ஆட்கள் சொன்னதன் பேரில், தனது பிரபல அடையாளமான மீசையைக் கடைசி நாளன்று நறுக்கிக் கொண்டான். Ôராசியான துப்பாக்கி. கொஞ்சம் மக்கர் பண்ணுதுப்பாÕ என்று வீரப்பன் ஒரு டபுள் பேரல் துப்பாக்கியைக் காட்டியிருக்கிறான். ரிப்பேர் பண்ணிக் கொடுப்பதாக அவனிடமிருந்து எங்க ஆட்கள் வாங்கிவந்த அந்தத் துப்பாக்கி, இப்போது எங்கள் முகாமில் பத்திரமாக இருக்கிறது.

இந்த உளவு காலத்தில் வீரப்பனின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தகவல் கிடைத்ததா?

நிறைய! ஆனால், அந்தப் பின்னணி மனிதர்கள் யாரை நோக்கியும் நாங்கள் சுட்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம். நாங்கள் நினைத்திருந்தால், வீரப்பனுக்கு எங்கள்மூலம் போன பால் பவுடரில் விஷத்தை வைத்தே அவன் கதையை முடித்திருக்கலாம். அவனது வெளி வட்டார தொடர்புகளை முழுதாகத் தெரிந்துகொள்ளவும், சரியான சந்தர்ப்பத்தில் கூட்டாளிகளோடு சேர்த்து அவனை ஒழிக்கவும்தான் Ôககூன்Õ திட்டம் வரை காத்திருந்தோம்.

அவனோடு உங்கள் ஆட்கள் சென்று கலந்தது பற்றி கொஞ்சமாவது சொல்லுங்களேன்!

காட்டுக்குள் வசிக்கும் பழங்குடி நபர்கள் சிலர் மூலம்தான் கூலிப்படை அமர்த்த திட்டமிட்டிருந்தான் வீரப்பன். தமிழ்த் தீவிரவாதிகள் பலமாக இருக்கிற பெண்ணாடம், பெரம்பலூர் போன்ற ஊர்களுக்கு அந்த பழங்குடியினரை அனுப்பி வைத்தான். அவர்கள் மூலம் அறிமுகமான ஒரு நபர், புதிய துப்பாக்கி வாங்கித் தருவதாகச் சொல்லி ஐந்து லட்ச ரூபாயை வீரப்பனிட மிருந்து வாங்கிக்கொண்டு தலைமறை வாகிவிட்டான். அதில் வீரப்பன் வெறுத்துப் போய்விட்டான். Ôமுஸ்லிம் தீவிரவாதி யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வாங்கய்யா. அவங்கதான் நம்பகமானவங்கÕ என்று பழங்குடி தூதர்களிடம் அவன் சொன்னான். அந்த இடத்தில்தான் நாங்கள் நுழைந்தோம், போதுமா!

இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்...

குறிப்பாக, கோவை சிறையில் உள்ள முஸ்லிம் தலைவரான மஹ்தனியின் ஆட்கள் யாரையாவது வீரப்பன் சந்திக்க விரும்புகிறான் என்று பழங்குடியினர் மூலம் எங்களுக்குத் தெரியவந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற, படித்துப் பட்டம் பெற்று வேலையில்லாமல் இருக்கின்ற நான்கு முஸ்லிம் இளைஞர்களை தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்குத் தைரியமும் பயிற்சியும் மனஉறுதியும் கொடுத்து, வீரப்பனிடம் முஸ்லிம் தீவிரவாதிகளாக அறிமுகப்படுத்திக் கொள்ளும்படி சொல்லிக் காட்டுக்குள் அனுப்பி வைத்தோம். இவர்கள் வீரப்பனுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தனர். கறி சாப்பாடு... வி.ஐ.பி&யை கடத்துவது.. கோத்தகிரி காட்டுப் பகுதியில் தினமும் துப்பாக்கி சுடும் பயிற்சி என்று அவனது நம்பிக்கையைப் பெற்று பிஸியாக இருந்திருக்கிறார்கள்.

அந்த நாலு பேரையும் தனித்தனியே வைத்திருந்தானாம் வீரப்பன். அவர்களால் சேர்ந்து பேச முடியாத சூழ்நிலை. இவர்கள் சேகரித்து வந்த விவரங்கள்தான் வீரப்பனின் தேவைகளையும் பலவீனங்களையும் எதிர்கால திட்டத்தையும் எங்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்தது. அதன்பிறகு எங்கள் ஆட்கள் இதே பாணியில் போய் அவனோடு கலந்தார்கள்.

சுப.இளவரசன்தான் இந்த விஷயத்தில் முக்கியமாக உங்களுக்குத் துப்புக் கொடுத்ததாக சொல்லப்படுகிறதே...?

நிச்சயமாக இல்லை. நாங்கள் பிரபலமான யாரையும் வைத்து இந்த ஆபரேஷனை நடத்தவில்லை. வீரப்பனுக்கு உதவுபவர்களில், சிறிய லெவலில் இருக்கும் ஆட்களைத்தான் முழுக்க முழுக்க பயன்படுத்தினோம். பெரிய ஆட்களிடம் இருந்து ஒத்துழைப்பு இருக்காது என்பதால்தான் அவர்களைத் தவிர்த்துவிட்டோம்.

அடிப்படையான ஒரு சந்தேகம்... குண்டு மழையால் வீரப்பன் இருந்த ஆம்புலன்ஸை துளைத்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஆம்புலன்ஸின் முன்புற கண்ணாடியில் ஒரு புல்லட்கூட பாயவில்லையே?

ஆபரேஷன் நடத்த தீர்மானித்திருந்த அந்த இடத்தில், மறைந்து சுட வாகாக ஒரு மணல் லாரியை சாலையோரம் நிறுத்தியிருந்தோம். ரோட்டுக்கு குறுக்கே ஆம்புலன்ஸை தடுத்துநிறுத்த கரும்பு லோடு ஏற்றிய லாரியை பயன்படுத்தினோம். மணல் லாரி பின்னாலிருந்தும் சாலையின் மறுபுறம் இருந்த பள்ளிக் கட்டடத்தின் மீதிருந்தும்தான் எங்கள் வீரர்கள் சுட்டுத் தள்ளினார்கள். பக்கவாட்டில் இருந்து சுடும்போது முன்புற கண்ணாடிக்கு எப்படி சேதாரம் வரும்?

தன் கணவர் இறந்தது போலீஸ் புல்லட்டால் அல்ல... அவரே கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று முத்துலட்சுமி சொல்லியிருக்கிறாரே?

ஆம்புலன்ஸின் பின்பகுதியில் நாங்கள் பொருத்தியிருந்த Ôபின் ஹோல்Õ காமிராவில் பதிவான காட்சிகளை, கரும்பு லாரிக்குள் வைத்திருந்த மினி கண்ட்ரோல் ரூமில் இருந்தபடி Ôலைவ்Õவாக பார்த்துக் கொண்டேதான் இருந்தோம். இருளுக்குள்ளும் ஊடுருவிப் பார்க்கும் காமிரா அது. வேனில் ஏறியதும், அந்த நால்வரும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை ஸீட்டுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டார்கள்.

ஓடுகிற வண்டியை நிறுத்திவிட்டு, எங்கள் ஆட்கள் இருவரும் அதிலிருந்து குதித்து வெளியேறிய சில நொடிகள் வரை வீரப்பனுக்கு, தான் சிக்கிக் கொண்டது புரியவில்லை. வண்டிக்குள்ளிருந்து இறங்கி ஓடிவரும்போதே, சப்&இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை ஒரு கண்ணீர்புகை குண்டை உள்ளே உருட்டிவிட்டுதான் வந்திருந்தார். அந்தக் குண்டு வெடித்ததில் உள்ளேயிருந்தவர்கள் பொறி கலங்கிவிட்டார்கள். அதன்பிறகு, எங்களை நோக்கி சுடுவதற்குதான் அவர்கள் முயன்றார்களே தவிர, அவர்களில் ஒருவருமே தற்கொலைக்கு முயலவில்லை. அதுவும் தவிர, வாழ்கிற ஆசையில்தான் வந்து மாட்டிக் கொண்டான் வீரப்பன். அவனா தற்கொலைக்கு முயல்வான்?

வீரப்பன் உள்ளிட்ட நால்வரை கொன்ற கையோடு, அவனை ஏற்றி வந்த இடத்துக்கே போய் காட்டுப்பகுதியில் ஒரு அதிரடி வேட்டை உடனே நடத்தியிருந்தால், மிச்சம் மீதியிருக்கும் அவன் ஆட்களையும் பிடித்திருக்கலாமே..?

அதை நாங்கள் செய்யாமலா இருந்திருப்போம்? இங்கே ஆபரேஷன் முடிந்தவுடனேயே இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் அந்த இரவு முழுக்க காட்டுக்குள் சலித்துவிட்டோம். வீரப்பன் இருந்ததற்கான தடயங்கள் மட்டும் தெரிந்ததே தவிர, வேறு ஆட்கள் யாரும் இல்லை. இருந்தாலும், எங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் வேட்டை தொடரும்..!

செந்தாமரைக் கண்ணன்... குட்டையான உருவம். சிரித்துக்கொண்டே இருப்பார். அதிர்ந்து பேசமாட்டார். அடிப்படையில் புரபஸராக இருந்துவிட்டு போலீஸ் டி.எஸ்.பி&யாகத் தேர்வானவர். படிப்படியாக பதவி உயர்வு பெற்று எஸ்.பி&யானர். அதிரடிப்படைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. இவர் ஒரு இரவுப் பறவை. சந்திப்புகள் & தகவல் பரிமாற்றம் எல்லாமே இரவுநேரங்களில்தான்! பெரும்பாலான நேரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் அவர் காதில் இருக்கும். எதிர்முனையில் சங்கேத பாஷையில் Ôஇன்ஃபார்மர்Õகள் தரும் தகவல்களை உம் கொட்டியபடியே குறிப்பெடுப்பார்.

அதிரடிப்படை முகாமிலிருந்து தனது பழைய மாருதி வேனை தனியாக ஓட்டிக்கொண்டு போவார். எங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்பதெல்லாம் இவருக்கும் விஜயகுமாருக்கும் மட்டுமே தெரியும்!



ஆர்.பி.
Kumudam.com

</span>
Reply
#2
<img src='http://www.vikatan.com/av/2004/oct/31102004/p9.jpg' border='0' alt='user posted image'>
[size=15]கூட்டிக் கழித்துப் பார்த்தால்
நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டிய
காவலர்கள்
<b>வீரப்பனை</b>
கொலை செய்திருக்கிறார்கள் என்பது
தெட்டத் தெளிவு.

<b>காக்கக் காக்க........
என்கவுண்டர்</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)