Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
எமது (இந்து)சமயத்தில் சொல்லப்படும் கதைகளில் வரும் அரக்கர்கள் பெரும்பாலனவர்கள் செய்யும் அநியாயம் என்னவென்றால் தேவர்கள்(பார்பனர்) செய்யும் யாகத்தை அல்லது வேள்வியைத் தடுப்பது அல்லது குழப்புவது. ஏன் இந்த அரக்கர்களுக்கு தேவர்கள் செய்யும் யாகமோ அல்லது வேள்வியோ பிடிக்கவில்லை?? இதற்கான விடையை எந்தச் (சமயக்)கதையும் சொல்லவில்லை.
ஏன் இந்த யாகத்தை வேள்வியை அந்த அரக்கர்கள் தடுத்திருப்பார்கள்?
இந்தக் கேள்விக்கு உங்களின் பதில் என்ன???
<b>
?
- . - .</b>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
அரக்கர்கள் முதலில் சிவனுக்கு தவமிருப்பார்கள். சிவனும் அருள் பாலிப்பார். பின்னர் ஆணவம் வரும் எமக்கு விரும்பியயர் போல சித்தரிக்கப்பட்டவர்களை(தேவர்கள்) இம்சிப்பர். தேவர்கள் சிவனிடம் முறையிட அவரும் யாரையாவது அனுப்பி சம்காரம் செய்வர். ஆனால் அரக்கர் பெற்ற சாகா வரத்தின் காரணமாக எமக்கு தெரிந்த ஏதாவது விலங்காக உருமாறுவர். தத்துவம் என்னவென்றால் ஆணவத்தை அழிப்பது மட்டுமே. ஆனால் நாம் விரதம் இருந்து அதற்கு பிழையான அர்தம் கற்பிக்கின்றோம்.
அது சரி இது போன்ற செயல்கள் எமக்கு தெரிந்த காலத்தில் நடைபெறாதது ஏன்? எம்மை எல்லாம் சிங்களவன் அடிக்கிறான் நாமும் கடவுளிடம் முறையிடுகிறோம்.... கடவுள் தேவர்களுக்கு மட்டும் தானா உதவுவார்? அப்படியானால் அந்த கடவுள் இருப்பதனால் மனிதர்களுக்கு என்ன மீட்சி?
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
காலையில் சிறிதளவேனும் சாப்பிட வேண்டும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. காரணம் இரத்ததிலுள்ள குளுக்கோசின் அளவு மாறாமல் இருக்க காலை ஆகாரம் கட்டாயம் தேவை. அல்லாமல் குளுக்கோசின் அளவு இரத்ததில் மாறுபட்டு கொண்டு இருக்குமானால் உடல் பருத்து விடும். பருத்த உடலுக்கு பாமசி தேவை என்று ஒரு சினிமா பாடல் சொல்கிறது
தலைப்பில் இருந்து பதில்கள் விலகி செல்கின்றன... மன்னிக்கவும். ஏனையவர்களை தலைப்புக்கே பதில் எழுதுமாறு கேட்டுகொள்கிறேன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இந்து சமயமென்ன நம்ம சமயத்திலேயே நடக்குதே...இப்ப தமிழர்கள் நடத்திற விடுதலை வேள்வியை சந்திரிக்கா 95 இல குழப்பேக்க சந்திரிக்கா என்னவா தெரிஞ்சா நமக்கு..??! ஏனங்க கையுக்க உதாரணம் இருக்க தேவை இல்லாமல் பார்பணியத்துக்க உதாரணம் தேடி அதுக்கு இன்னும் வாழ்வு கொடுக்க முயல்கிறீர்கள்... இலங்கையில் பார்பணிய ஆதிக்கம் என்பது நாம் கண்டதில்லை....அதுக்கு ஆட்பட்டதும் இல்லை...இப்பதான் இந்திய பார்பணிய பாணியில ( அங்கையும் அது வீழ்ச்சி காணுது , அவர்கள் மதத்தை வைச்சு தவறாக விளங்கிக் கொண்டு விளக்கிக் கொண்டு பிழைப்பு நடத்திய கூட்டம்....!) நீங்க கருத்துச் சொல்லுறியள்.....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
நாங்கள் சந்திரிக்காவை எப்படிப் பார்க்கிறோம் என்பது ஒரு புறம் இதுக்கட்டும்.
எமது போராட்டத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் எப்படிச் சித்தரிக்கிறாரகள்.
கொலைவெறி பிடித்த பயங்கரவாதிகளின் போராட்டம்.
ஒருவேளை எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டால்(நடக்காது) அரக்கர்களின் கொட்டத்தை அம்மன் சந்திரிக்கா அடக்கிவிட்டார். என புதிய வரலாறு எழுதப்படலாம். பின்னர் சந்திரிக்காவிற்குக் கூட கோயில் கட்டி எமது வருங்கால சந்ததி வழிபடலாம்.
எமது நாட்டின் அரசன் இராவணனை கொன்ற இராமனை நாங்கள் கும்பிடுவதைப் போல...
<b>
?
- . - .</b>