Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?
#1
<span style='font-size:25pt;line-height:100%'>செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?- </span>
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'வீரப்பன்"
பெயருக்குள்ளேயே வீரத்தை
விதைத்து வைத்த விழுது நீ.
போர்ப்பித்தனாய் உன்னைப்
புதுப்பித்துப் புதுப்பித்து....
பெருலாபமடித்தோர்க்கு
பெரும்பலமாய் இருந்தாயாம்.

செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?

மர்மங்கள் நிரம்பிய உன் சாவில்
கொலைகாரர் , கொள்ளையர்கள் ,
எல்லோரும் வெற்றியென்று மார்தட்ட
நீ மட்டும் மௌனப் பிணமாக....?
உண்மை ஊமையாக....
ஊகங்கள் செய்திகளாய்....ஆய்வுகளாய்....

சந்தனக்கடத்தலும் , தந்தக்கடத்தலும்
தனியே நீ செய்தாயா....?
இல்லையில்லை....கொள்ளையிடும் வல்லவரின்
கைப்பைகள் நிரம்புதற்கு
கைப்பொம்மையானாய் நீ.
இதுவே உண்மையாகும்.

உன்பக்கம் எல்லாம்
நியாயமென்று சொல்லமாட்டேன்.
தம்பக்கம் இருந்த கறை கழுவுதற்கு
உன்பெயரைத் தமதாக்கிக் கொண்டவரே
முதற்குற்றவாopகள்....முகமூடிக்கள்வர்கள்....

வாழ்வில் வலிகண்டோர்
வாழ்வைப் பலிகொள்ளும்
வஞ்சகர் வலையுந்தன்
வாழ்வைப் பலிகொண்டதென்பேன் நான்.

வனாந்திரத்தெருவெங்கும்
வழக்கமாய் நடக்கும் உன் கால்களுக்கு
வாகனத்தேவையென்ன வந்ததுவோ....?
தேவையைத் தமக்குரிய தேர்வாய் தெரிந்தோரின்
வஞ்சக வலையில் நீ.
வலமெது இடமெது வஞ்சகர்க்கே வெளிச்சம்.

ஓர் வீரப்பன் மறைந்து போனாய்
இன்னும் எத்தனை வீரப்பன்களை
உருவாக்கிப் போனாயோ.....?

21.10.04.
Reply
#2
Quote:வாழ்வில் வலிகண்டோர்
வாழ்வைப் பலிகொள்ளும்
வஞ்சகர் வலையுந்தன்
வாழ்வைப் பலிகொண்டதென்பேன் நான்.
¸Å¢¨¾ «ரு¨Á....
Å¡úòதுì¸û.....
Reply
#3
Å£ÃôÀý þருó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý, þÈó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý ¾¡ý.
Reply
#4
Quote:உன்பக்கம் எல்லாம்
நியாயமென்று சொல்லமாட்டேன்.

நன்றாய் இருக்கு கவி உண்மையை சொல்லியிருக்கிறியள்.. வாழ்த்துக்கள்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
கவிதை அருமை.கவிதைக்கு நன்றிகள் .. நானும் இவ்வாறு கருத்தை எனது குடிலில் சொல்லி இருந்தேன். பலர் அதனை கொடுமை என்று வர்ணித்திருந்தார்கள்.... இன்னும் சிலர் உண்மை என்றார்கள்...
[b][size=18]
Reply
#6
வஞ்சகரே வஞ்சகனை தண்டிக்கும் வஞ்சகம் கண்டெழுந்த கவிதை நன்று...!

தங்களைக் காவு கொண்ட வஞ்சகம் அழிந்ததோ அக்கா... களத்தில் விசாரிப்பதாகக் குறை நினைக்க வேண்டாம்...இக்களம் தந்த உறவுதான் நீங்கள்...அதனால் இங்கேயே கேட்டுக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Quote:Å£ÃôÀý þருó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý, þÈó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý ¾¡ý.

சண்முகி எனக்கு இது அடியோடு விளங்கவில்லை!
பிளீஸ் இது எப்படி எண்டு சொலுங்கோ
<b>
?
- . - .</b>
Reply
#8
Quote:Quote:
Å£ÃôÀý þருó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý, þÈó¾¡லுõ ¬Â¢Ãõ ¦À¡ý ¾¡ý.


சண்முகி எனக்கு இது அடியோடு விளங்கவில்லை!
பிளீஸ் இது எப்படி எண்டு சொலுங்கோ

வீரப்பன் இருந்தபோது... மலைக்குடி மக்கள் பயன் பெற்றார்கள். சந்தனக்கடத்தலின் மூலம் பல பெரிய புள்ளிகள் லாபம் பெற்றார்கள். அவனை உயிருடன் பிடித்திருந்தால் பல அரசியல்வாதிகளின் தலைகள் உருண்டு அம்பலத்துக்கு வந்திருக்கும்.

வீரப்பன் இறந்தபோதும்... 752 பேருக்கு மூன்று லட்சங்கள் என்ன... பதவி உயர்வு என்ன... வீட்டு மனைப்பட்டா என்னா... அதைவிட வீரப்பனை கொன்றது தமிழக அதிரடைப்படையாக இருந்தாலும் கர்நாடகத்துக்கும் பங்கு இருப்பதாக பணத்தை வாரியிறைப்பதைப் பார்த்தால்... அப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது.
Reply
#9
சரியாச்சொல்லியிருக்கிறியள் அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
Quote:வீரப்பன் இருந்தபோது... மலைக்குடி மக்கள் பயன் பெற்றார்கள்.
வீரப்பனைப் பிடிக்கிறோம் எண்டு சொல்லிக் கொண்டு அதிரடிப்படை மலைவாழ் மக்களிற்கு எதிராகப் புரிந்த வன்முறைகளையா சொல்லுகிறீர்கள். பாலுறுப்புக்களில் மின்னாரம் பாய்ச்சியும், விரல் நகத்துக்கிடையே குண்டூசி ஏற்றியும், உடலில் சிகரெட்டால் சுட்டும் உடம்பில் ஸ்ரெப்பிளர் கிளப்பால் அடிக்கப்பட்டும் கொடுமை படுத்தப் பட்டதையா சொல்கிறீர்கள்??????????

இந்தப் பயனை காணும் காணும் எண்டு சொல்லுற அளவிற்கு மலைக்குடி மக்கள் பெற்றுவிட்டனர்.
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)