Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
றோவின் தயவில் தேசத் துரோகக் கும்பல் ஒன்றின் உதயம்...!
#1
<b>இந்திய உளவுத்துறையின் நேரடி கண்கானிப்பில் தேசவிரோதிகளின் புதிய கூட்டமைப்பு.</b>

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/top.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என்ற தமிழ்த்தேசவிரோதி (வி.முரளீதரன்) என்பவரும் புளொட் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பரந்தன் ராஜனின் சகோதரன் ஞானராசா என்பவரும் புதிய கட்சி ஒன்றை <b>தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் </b>என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்கள். இருவரும் பண மோசடி கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் அமைப்பு விதிகளை மீறிய காரணங்களுக்காக கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பாட்டவர்கள். புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தலைவராக கருணாவும் செயலாளராக ஞானராசா (ஈ.என்.டி.எல்.எவ்-முக்கியஸ்தர் தற்போது இந்தியாவில் இருக்கின்றார் பரந்தனை சொந்த இடமாக கொண்டவர்.) என்பவரும் இருப்பார்களென அக் கட்சி பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் சர்வதேச பொறுப்பாளராக இலண்டன் ரிபிசி வானொலி நடத்துனர் Ramarajah என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் டென்மார்க் பொறுப்பாளராக மதி குமாரதுரையும் (திருகோணமலை) சுவீடன் தலைவராக Asian Tribune நடாத்தும் கே.ரி.ராஜசிங்கமும் (வடமராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் மத்தியகுழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை டென்மார்க் வீபோக்கில் இருந்து மதி குமாரதுரை நடாத்துகின்றார் என்பதும் குறப்பிடத்தக்கது
மேலதிக தகவல் மிகவிரைவில் நிதர்சனம் ஆகும்.

தகவல் : நிதர்சனம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அப்படியா செய்தி தகவலுக்கு நன்றிகள்...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
மேலே தரப்பட்ட செய்தி தொடர்பாக சிறீலங்காவின் பதில்....

<b>புதிய கட்சிகள் எதுவும் பதிவு பெறவில்லை - தேர்தல் திணைக்களம் </b>

தற்போது எந்தவொரு அரசியல் கட்சியையும் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் தினைக்களத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவரும், தற்போது தமிழினத்திற்கெதிரான தேசவிரோதச் செயல்களில் முனைப்புடன் ஈடுபடுபவருமான கருணாவை தலைமையாகக் கொண்டு ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழின விரோத ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக உள்நாட்டு ஊடகங்கள் இன்று தேர்தல் திணைக்களத்ததுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறிப்பிட்ட பெயரில் எந்தவொரு கட்சியும் இதுவரை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருணாவை மையமாக வைத்து துணைப்படையை உருவாக்க முயலும் சிறீலங்கா அரசின் முயற்சிகளிற்கான காற்கோளாகவே இவ்வாறான செய்தி இதர அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் துணையுடன் பரப்பப்பட்டுள்ளதாகவே மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசிய துணைப்படை என்ற பெயரில் இயங்க முயற்சித்த போதும் அது தோல்வி கண்டதாலேயே தற்போது புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பான புரளி திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டுள்ளது. இம் முயற்சியின் பின்னணியில் சமாதானத்தை விரும்பாதவர்கள், குறிப்பாக அரச ஆதரவு ஆயுதக்குழுவினரே செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
கட்சியின் பெயர் கொடி என்று அனைத்து விபரமும் தந்து செய்தி தந்த நிதர்சனச் செய்தி உண்மையா...புதினத்தின் செய்தி உண்மையா.... பொறுத்திருந்து பார்ப்போம் எது உண்மை என்று....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அவர்கள் ஒரு இணய தளமும் பதிந்து வைத்திருக்கிறார்கள் போல உள்ளது.

http://www. *****


இணைய முகவரி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#6
"றோவின்" ஆதரவில் "டக்கிலசு, பரந்தன் ராசன், சிறீலங்காவின் புலணாய்வுத் துறையின்" உந்துதலில் <b>"மீண்டும் கருணாவின் பெயரால்"</b> என்ற நாடகத்தில் இன்னெரு பக்கம் அரங்கேறுகிறது உண்மையே.

இதற்கு <b>"இனம் இனத்தையே நாடும்"</b> என்பதைப் போல புலம் பெயர்ந்த நாடுகளில் காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்டு வரும் எச்சில் இலைக்கு அலையும் " ராமராசு, குமாரதுரையர், டேவிட்சன், ...." முக்கியஸ்தகர்களாம். இவர்களின் கொள்கை வந்து கொலை, கொள்ளை, காட்டிக்கொடுப்பு, கற்பளிப்பு தானாம்.

இந்த நக்கின எச்சிலிலைகளையே நக்குகிற இங்கிருக்கும் ஒரு கூட்டம் ( யேர்மனியிலிருந்து செமினி, செண்முகதோசன், சுவிசிலிருந்து விக்டரு, நோர்வேயிலிருந்து ராசனு, டென்மார்க்கிலிருந்து இறவி ) ஆழுக்கொரு இணையத்தளம் ( அதிரடி, கராட்டியடி, தேனி, இலையான், கழுதை ஆடும், மீன் பாடும் ) ஆரம்பிச்சிருக்குதுகள்.

இந்தக் <b>"கருணாவின் பெயரால்"</b> நடாத்தப்படும் இந்த மாதிரி நாடகங்களில் அந்த "பூஸ்வானம் கருணாவானது" கதானாயகனோ, வில்லனோ அன்றி எடு பிடியாகவும் நடிக்கவில்லை, மாறாக <b>"எடுப்பார் கைப்பிள்ளையாக"</b> போய் விட்டது.
" "
Reply
#7
kuruvikal Wrote:கட்சியின் பெயர் கொடி என்று அனைத்து விபரமும் தந்து செய்தி தந்த நிதர்சனச் செய்தி உண்மையா...புதினத்தின் செய்தி உண்மையா.... பொறுத்திருந்து பார்ப்போம் எது உண்மை என்று....!
http://www.eezhanaadu.com/achieves/1310200...ews1.html#news3
Reply
#8
உங்கள் அனைவரின் தகவலுக்கும் நன்றி
[b][size=18]
Reply
#9
[size=18]நிதர்சனம்.கொம்மின் தகவல் 100 வீதம் உண்மையானது. மேலதிக விபரங்களுக்கு: எனது விரிவான குறிப்பை யாழ் இணையத்தில் கிழ்வரும் இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
நேசமுடன் நிதர்சன்
www.vannithendral.tk

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
இந்த "பரந்தன் ராசனின்" தம்பியும், "பூஸ்வானம் கறுணாவின்" செயலாளருமாகியா "பரந்தன் ஞானராசா" என்பவர் பரந்தன் - குமரபுரம், குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் மாடுகள், நெல்லு மூட்டைகள், தேங்காய்கள் களவெடுத்தல், பொம்பளைச் சேட்டைகள் போன்ற சிறப்பான தொழில்களையே செய்தவர். இந்த தகுதிகளே போதும் ஞானராசாவிற்கு கறுணாவின் செயலாளராக வருவதற்கு.
" "
Reply
#11
இதில் ஆச்சரியம் என்னவென்றால் "கறுணாவிற்கும்" "ஞானராசாவிற்கும்" எப்படி தொடர்பு ஏற்பட்டிருக்கும் என்று...
இந்தக் "ஈ.என்.டி.எல்.எப்" கூலியின் அடிக் கூலி ராமராசனினால் நடாத்தப்படும் ரி.பி.சி வானொலியில் கறுணாவானவன் இயக்கத்தை விட்டு விலக்கும் வரை கடுமையாக விமர்சிக்கப்பட்டவன்.
" "
Reply
#12
பாடை, சுடலை எங்கே போய்விட்டீர்கள்? இந்த பரதேசிகளுக்கு ஒரு பாடை கட்டமாட்டீர்களா?
Reply
#13
<b>இலங்கையில் புதிய அரசியல் கட்சி பதிவு செய்ய முடியாது. </b>

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை தோற்றுவித்துள்ள தமிழ் தேசவிரோதி கருணா கட்சியை பதிவு செய்யமுடியாது என்று நம்பகரமாக தெரியவருகிறது. ஏற்கனவே வடகிழக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலிற்கான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தல் நடாத்தப்படாமல் இருப்பதாலும் அரசாங்கத்தால் மாகாணசபை கலைக்கப்பட்டிருப்பதாலும் புதிய கட்சியை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே கடந்த பத்து வருடங்களாக இலங்கையில் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. இதேவேளை அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் கட்சி பதிவில் உள்ளதால் அதனை பெயர் மாற்றம் செய்து பதிவு செய்து கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

source : nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
கடந்த பத்து வருடங்களாக எந்தக்கட்சியும் பதியப்பட வில்லை. என்றால் அண்மையில் எப்படி முஸ்லீம் மக்களின் பதிய கட்சி பதிவானது? அதற்கு மன் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எங்கே பதிவு செய்தனர்?
ஜாதிக ஹெல உறுமய எப்போது உருவானது?
சிறீலங்கா அரசு அறிக்கை மூலம் ஏதாவது சாட்டுச் சொல்லாம் ஆனால் உண்மை என்ன என்பது சிறீலங்காவை உற்று நோக்கிக் கொண்டிரக்கும் அனைவருகும் தெரியும். நிதர்சனம்.கொம் செய்தியாளர்கள் தயவ செய்த இச் செய்தியை மீளாய்வ செய்து பாருங்கள் .ப்போது கட்சி பதிவு செய்ய முடியாது என்பது உண்மையே ஆனால் கடந்த பத்து வருடங்களாக எந்தக்ட்சியும் பதிவு செய்யப்படவில்லை என்பது.........
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
எல்லாம் நல்லதற்கே!

"பாடையார்", "சுடலையார்" ஆயத்தம் செய்யுங்கள். ஒரு துரோகக் கூட்டம் உங்களை நோக்கி வருகிறார்கள்.

"ஆவியாரும்" உங்களை பாடுதான் நினைக்கப் பாவமாகவுள்ளது, ஏனென்றால் உங்கும் உவங்கள் வந்தும் இங்கு செய்தவைகளைத்தான் செய்யப் போகிறான்கள். என்னத்திற்கும் "இயமனார்", "சித்திரகுப்தனுக்கும்" மெல்லமாக போட்டு வையுங்கோ.
" "
Reply
#16
ஒண்டு முடிஞ்சு இன்னொண்டு தொடங்கியிருக்கினம் போல இருக்கு!!!

அவர்களின் இணையம் ஒன்றில் தான் கீழ் உள்ள தகவலைக்கண்டேன்.

இணைய முகவரியை தர விரும்பவில்லை.

======================================================================

Quote:திகதி:- 15-10-2004


தமிழ்ப் பேசும் மக்களுக்கு வணக்கம்,

அன்புடையீர்!

தமழீழ மக்களின் விடுதலையை வென்றெடுக்க எங்கள் இயக்கங்களான, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் (TMVP), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் (ENDLF) இணைந்து "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி (TIVM)" என்ற குடை அமைப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்தி செய்து தமிழ் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்க ஒன்றிணைந்து போராடுவது
இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இருபது ஆண்டுகள் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டுள்ளனர். உயிர் தப்பினால் அதுவே சுதந்திரம் என்ற நிலை ஏற்பட்டு, அதுவே தமிழ் மக்களின் கொள்கையாக்கப்பட்டுவிட்டது. இழந்த உரிமையை மீட்கப்போய் எங்கள் இனம் கொடிய பயங்கரவாதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டது.

சுதந்திர வாழ்வென்பதே அமைதியும் சமாதானத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான். அதனை அடையத்தான் எங்கள் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். சுதந்திரமாக, பாதுகாப்பாக, அமைதியாக, உரிமையுடன் வாழவேண்டும் என்பதே இனப்போராட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

மேற்சொன்னவற்றை இலங்கை அரசிடமிருந்து பெற்றாலும் பெறலாம் ஆனால், பிரபாகரனிடமிருந்து தமிழ் மக்களுக்கு இவை கிடைக்காது என்பது உறுதி. எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்;. அவற்றுக்கு முன்னோடியாக எங்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டு அமைப்பை ஏற்படுத்தி
யுள்ளன.

இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ள கூட்டறிக்கை இன்று (15-10-2004) வெளியிடப்படுகிறது. தமிழர்களது நிரந்தரத் தீர்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இவ்வண்ணம்,
ஒருங்கிணைப்பாளர்,
பா.இராஜரெத்தினம்.
Reply
#17
தகவலுக்கு நன்றி.....

புதிய புதிய
ஆட்சிகள் மாறட்டும்..
புதிய புதிய
கட்சிகள் முழைக்கட்டும்
புதிய புதிய
தலைவர்கள் வரட்டும்..
புதிய புதிய
ஜனாதிபதிகள் பிரதமர்கள் ஆழட்டும்
ஆனால் ..
எமது தலைவர்
வே.பிரபாகரனே..!
எமது கட்சி
தமிழீழ விடுதலை புலிகளே..!
எமது அரசு
தமிழீழ விடுதலை புலிகளே...!
எமது நாடு
தமிழீழமே..!
நாங்கள் விரும்புவது
எம் தலைவரையே..!
[b][size=18]
Reply
#18
பாவம் கருணா... தனது கரங்கள் கறை படியாதவை எனக் காட்ட வெளிக்கிட்டு இருந்த கறையைவிட மேலும் கறை படிய வைத்தது மட்டுமல்லாது கறை படிந்து கறள் பிடித்த கரங்களோடு கூட்டு வைத்திருப்பதானது...... இந்திய இராணுவத்துடன் இணைந்து பிள்ளை பிடித்தவர்கள் படுகொலை செய்து புதைத்தவர்கள் தமிழீழச் சகோதரிகளை சகோதரர்களை வேட்டையாடிவர்கள் என்று மக்களே தீர்ப்பளித்தவர்களுடன் இணைந்தது..... கருணாவின் உண்மை முகத்தை உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் காட்டிக் கொடுத்துள்ளது...!

இந்த ஐந்தெழுத்து ஆயுதக்குழுக்கள் செய்த செய்யும் அராஜகங்கள் தமிழ்மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல... என்ன தமிழ்தாயின் வயிற்றில் பிறந்த இந்த தத்தாரிகளுக்கு இன்னும் புத்தியில் உண்மை உறைக்கவில்லை என்பது...தமிழன் அறிவாளி என்று சுயபிரகடனம் செய்த முட்டாளா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது...!

எமது மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறும் வரை இப்படி நாலெழுத்து ஐந்தெழுத்து ஆறெழுத்து இயக்கங்களுக்கு குறைவே இருக்கப் போவதில்லை... இவை தமிழர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளன் எமது மண்ணில் நிலை இருக்கும் வரைதான்... இவர்களால் தமிழர்களின் எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது என்பது இவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு தாராளமாகவே கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்.....! இவர்கள் தமிழ் மக்களின் புதல்வர்களாம் புலிகளுக்கு ஒரு சவாலாக அமையவே முடியாது.....வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பாளனின் அருவருடிகளாக மக்களுக்கு எதிரான நாச வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு சட்டைப் பைகள் நிரப்பி ஆயுத சன நாயகம் நடத்தி சன நாய் அகம் உச்சரிப்போரை ஏமாற்றலாம்....! அவ்வளவும் தான் இவர்களுக்கான தற்போதைய சாத்தியப்பாடு...பிழைப்புக்கான வழி....!

:evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
ாி.எம்.வி.பி தவிர ஈ.என்.ாி.எல்.எப் உம் கறுணாவம் சே÷ந்து வேறொரு புதிய கட்சியினை பதிவுசெய்துள்ளா÷களாம். நான் நினைக்கின்றேன் ாி.எம்.வி.பி பதிவு செய்ய முடியாமல் போனதை தொட÷ந்து ஈ.என்.ாி.எல்.எப் ஐ பெயா் மாற்றம் செய்து புதுப்பிப்பது போல் வேறொரு கட்சியினை ஆரம்பித்திருக்கின்றா÷கள்.

இது கடைசியாக இந்திய அரசியல் மாதிாிதான் வரப்போகுது. யாராவது கவிதை பாட விரும்பினால் கட்சிகளின் பெய÷களை தொட÷ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கோ. கவிதை வரும்.
Reply
#20
<b>இராணுவ ரீதியான முயற்சிகள் தோற்றுப் போனதால்
ஜனநாயக வேடத்தில் கருணாவை
களமிறக்கும் சதியில் வெளிச்சக்தி..!</b>

புலிகளுக்கு எதிரான போக்காளர்களை
ஒன்று திரட்டும் திரைமறைவு சதி நாடகம்
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவைப் பயன்படுத்தி இராணுவ ரீதியாகப் புலிகளைப் பலவீனப்படுத்தும் முயற்சி தோற்றுப்போய்விட்டது. இதனை நன்கு உணர்ந்துள்ள வெளிநாட்டுச் சக்திகள் சில, புலிகளுக்கு எதிரான போக்குடைய பிற தனித்தனி ஆள்களை கருணாவின் பெயருக்குப் பின்னால் ஒன்றிணைய வைப்பதன் மூலம் ஈழத் தமிழர் தரப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பலவீனப் படுத்தும் திரைமறைவு சதிவேலையில் இறங்கியிருக்கின்றன.

கருணாவை ஜனநாயகவாதி வேடத்தில் - அரசியல் கட்சி என்ற நாடகத்தின் மூலமாக - களமிறக்கும் முயற்சிகளுக்கு முண்டு கொடுக்கும் பின்னணியில், சூத்திரதாரிகளாக இச்சக்திகளே உள்ளன என்று தமிழர் தரப்புத் தலைவர்கள் மத்தியில் சில செய்தி கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட கருணாவோடு, ஏற்கனவே புலிகளுக்கு எதிராக இயங்கிய சில தமிழர் தரப்புகளும் இப்போது சேர்ந்து இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் -
இந்தக் கூட்டிணைவை நெறிப்படுத்தும் பின்னணியில் அயல்நாடு ஒன்றின் உளவுப் பிரிவு அதிக பங்களித்திருப்பதாகவும் -
சில செய்திகள் கசியத்தொடங்கியிருப்பது தமிழர் தரப்பை பெரும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.

கருணாவுக்குப் பின்னணியில் அரசுத் தரப்பின் சில ஏஜென்ஸிகளே செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக இப்போது வேறு பிற சக்திகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

இதை உறுதிப்படுத்துவது போல கருணா பெயரில் ஒன்றிணையும் ஆள்களின் பட்டியலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா இருந்த சமயம் அவருக்கு எதிராக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்தை - குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை - சேர்ந்தோரை ஒதுக்குகின்றார் அல்லது ஒடுக்குகின்றார் எனக் குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர் கருணா.
ஆனால், அவரது பெயரில் இப்போது உருவாக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான பல்வேறு தனித்தனி ஆள்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் செயலாளராகக் கூறப்பட்டவர் ஞானராஜா. இவர் பரந்தனைப் பிறப்பிடாமாகக் கொண்டவர். ஈ.என்.டி. எல்.எவ்வைச் சேர்ந்த பரந்தன் ராஜனின் சகோதரர்.
பரந்தன் ராஜன் புளொட் அமைப்பிலிருந்து வெளியேற் றப்பட்ட பின்னர் ஈ.என்.டி.எல்.எவ்வை உருவாக்கி இந்தியத் தரப்பின் எடுபிடி அமைப்பாக அதைச் செயற்படுத்தியவர். இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த போது அதன் கூலிப்படைபோன்று ஈ.என்.டி.எல்.எவ். செயற்பட்டது.

இந்தியப் படை நாடு திரும்பிய பின்னர் இந்தியா வைத் தளமாகக் கொண்டு செயற்படுபவர் பரந்தன் ராஜன். அவரின் சகோதரர் மூலம் கருணா அணிதிரட்டப்பட்டிருக்கின்றார்.
லண்டனில் இருந்து வானொலி சேவை நடத்தும் ஒருவர், டென்மார்க்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படும் ஒருவர், பாங்கொக்கை மையமாக வைத்து இணையத்தளம் ஒன்றின் ஊடாக புலிகள் எதிர்ப்புப் பிரசாரம் நடத்தும் வடமராட்சியைச் சோந்த நபர் ஒருவர் என்று பல புலி எதிர்ப்பு ஆள்களே கருணா அணியின் பின்னால் வந்துள்ளனர் என்று பிரசாரப்படுத்தப்படுகின்றது. இவர்கள் எவரும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இவர்களை கருணாவின் பெயரில் ஒன்றுதிரட்டி -
ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா, ஈரோஸின் சங்கர் ராஜி மற்றும் ஆனந்தசங்கரி போன்றோரோடு ஒரே குடையின் கீழ் இயங்க வைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தலாம் என்று திட்டமிடுகின்றன மேற்படி உளவுச் சக்திகள் எனக் கூறப்படுகின்றது.

கருணா அணி என்ற பெயரில் ஒரு குழுவை இராணுவ ரீதியாகக் கிழக்கில் இயங்கவைத்து, புலிகளைப் பலவீனப் படுத்தும் முயற்சி பிசுபிசுத்துப்போய்விட்டது. இந்த நிiயில் ஜனநாயகவாதி என்ற வேடத்தில் கருணாவை நிறுத்தி, அரசியல் கட்சி என்ற நாடகத்தை ஆரம்பித்து, புலிகளைப் பலவீனப்படுத்தலாமா என்ற திரைமறைவுத் திட்டம் இப்போது பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றது.

தனித்தனியாக இயங்கும் பலரையும் கருணா என்ற பெயரின் பின்னால் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்துவது இந்த வெளிநாட்டு உளவுப் பிரிவின் சதித் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதற்கான மும்முர நடவடிக்கைகளில் அந்தப் பிரிவு இறங்கியிருப்பதா கவும் கூறப்படுகின்றது.
இவற்றை மோந்து மோப்பம் பிடிப்பதில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு மும்முரமாக இருப்பதாக ஒரு செய்தி தெரிவித்ததது.

uthayan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)