07-23-2003, 04:15 AM
[quote=Chandravathanaa]ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும்;, போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன.
இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.
குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில்; குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.
ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.
அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.
இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம்
விலங்குகளிடமும் இருந்தது.
இதுதான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.
காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.
ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாது காப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.
இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்;புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.
இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்றும் இந்த நிலை தொடர வேண்டிய அவசியமில்லை.
இதை வைத்து ஆண்கள் கெட்டிக்காரர்கள், ஆட்சி செய்யப் பிறந்தவர்கள்,
பெண்கள் அடக்கப் பட வேண்டியவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளவும் தேவையில்லை.
மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே.
அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள்.
இன்று மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு மிருகங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.
------------------------------------------------
ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும்.
அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். இது ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.
ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபாரஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும்.
இப்படிப் பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால்
அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு.
ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது.
ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற் படுகின்றன.
இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை..
ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.
பெண்ணை மட்டும் வீட்டுக்குள் அடங்கு என்று சொல்ல
இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம்.
அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
[quote=kuruvikal]இதைத்தான் நாம் இரத்தினச் சிருக்கமாய் சொன்னோம் சூழல் காரணிகளால் பெண்கள் அடங்கினார்களே தவிர அடக்கப்படவில்லை என்று....
இறுதியாக சுத்தி வளைத்து நீங்களும் எங்கள் புள்ளியைத்தான் தொட்டுள்ளீர்கள்...அது மட்டுமன்றி எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக எளிய நடையில் எழுத்யிருக்கிறீர்கள் நன்றி..!
குருவிகள்
காட்டு வாழ்க்கையை விட்டு
நாட்டில் வீடு கட்டி
பாது காப்பாக வாழும் நிலைக்கு என்றைக்கோ வந்து விட்டோம்.
இருந்தும் அடிப்படை ஆதிகாலப் பிரச்சனையைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இன்னும் ஏன் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டும்?
அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால்,
இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் என்று ஆண்கள் ஏன் கருத வேண்டும்?
வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைக்கிறார்கள்.
இதெல்லாம் பிழை. முந்தி நாம் வீட்டுக்குள் தங்க வேண்டியிருந்தது. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சிந்திக்கத் தொடங்கிய பெண்கள்தான் ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறார்கள்.
அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். இன்றைய பெண்களின் விழிப்பு நிலை இதற்குத் தடையாகி விட்டது. இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இன்று அடக்குமுறை என்பது ஏன் எதற்கு என்று தெரியாமலே வெறுமே ஆண்களின் சுயநல நோக்குக் கருதியே நடக்கிறது.
ஆணுக்குத்தான் எல்லாம் தெரியும்.
ஆண்தான் ஆட்சி செய்யத் தகுதியானவன்.....
போன்ற வாதங்கள் வீண் விவாதங்களே!
அன்று தம்மை விட பலமான விலங்குகளுக்குப் பயந்து சில நடைமுறைகள் இருந்தன. இன்றுதான் அவை இல்லையே1
பெண்கள் தமது வலிமையையும் திறமையையும் உணரும் பட்சத்தில் அவர்கள் மூளை காலப் போக்கில் அதற்கேற்ப இசைவாக்கம் பெறும்.
மற்றும் படி பெண்கள் அடக்கப் படவில்லை.
அடங்கினார்கள் என்பதெல்லாம் பொய்வாதம்.
அன்று தேவை கருதி வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்தார்கள்.
காலப்போக்கில் ஆண்களால் அடக்கப் பட்டார்கள்.
அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்தார்கள்.
இன்று ஓரளவுக்காவது பெண்கள் விழித்துள்ளார்கள்.
ஆண்கள் ஒன்றும் தாங்களாக மாறி பெண்களுக்கு விடுதலையைக் கொடுக்க வில்லை. பெண்களின் கோசங்களும், எழுத்துக்களும்
சில உண்மைகளை ஆண்களுக்குப் புரிய வைத்தன. புரிந்தாலும் புரியாத மாதிரி அவர்கள் தொடர்ந்த போதுதான் பெண்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்கி தமக்கான விடுதலையை தாமே எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
ஆனாலும் முழுமையான விடுதலை என்பது இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. பெரும்பாலான ஆண்களும் சமூகமும் அதற்குத் தடையாகத்தான் இருக்கிறார்கள்.
[quote]ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->