Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான் நிலை தளர்ந்த போது ...........
#1
[size=15]நான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.

அதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.

நான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.

முன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.

உடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.

என் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.

இன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.
இவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.

நன்றிகள்
AJeevan
Reply
#2
உங்களுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திலிருந்து மீண்ட உங்களுக்காய் இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
ஆபத்துக்கள் தமிழனுக்கு புதியவையல்ல ஆனால் புகலிடத்தில் வந்திருக்கிறமையே புதிதாயுள்ளது எது எவ்வாறோ ஓர் கலைஞன் காப்பாற்றப்பட்டு விட்டான் என்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன் இதற்காய் உங்களுக்கு உதவிய உறவினர் நண்பர்கள் மற்றும் சுவிஸ் காவல் துறை மற்றும் தீயனைப்புப் படை ஆகியோருக்கும் எனது நன்றிகள்
உங்கள் படைப்புக்கள் தொடர வேண்டும் எ;கள் தமிழீனம் விழிக்கவேண்டும்
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
:oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#4
நண்பன் அஜீவன்,
இப்படியொரு செய்தியை அறிந்ததும் வேலைத் தளத்திலிருந்தே இம்மடலை எழுதுகிறேன்.
தங்களுடன் எமக்கு ஏற்பட்ட தொடர்பு, தங்களது குறும்படப் படைப்புகளின் வாயினால்தான். தங்களது திறமையைக் கௌரவிக்குமுகமாக சென்ற ஆண்டு பாhPல் தங்களுக்கான குறும்படமாலை ஒன்றை நிகழ்த்தி, நினைவுப் பரிசு 'சலனம்' சார்பாக வழங்கிக் கௌரவித்திருந்தோம்.

புகலிடக் குறும்பட, தமிழ்த்திரை முயற்சியில் தங்களால் தனித்துவமான தடம் பதிக்கமுடியும் என்பதை நாங்கள் நன்கறிவோம்.

தாங்கள் காப்பற்றப்பட்ட தகவல் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அழிவுறும் பொருட் சேதங்கள் பற்றிய கவலைகள் வேண்டாம். ஈழத்தமிழன் அழிவிலிருந்தே மீண்டெழுபவன். தாங்கள் இப்போது தீயினால் புடமிடப்பட்டுள்ளீர்கள். புத்தெழுச்சியுடன் எழுக!
நண்பா படைப்புகளால் ஈழத்தழினின் புகலிட இருப்பை தொடர்ந்தும் காத்திரமாகப் பதிவு செய்யுங்கள்.

என்றென்றும் உற்சாகத்துடனும், செயலு}க்கத்துடன் அஜீவன் வாழ இனிய வாழ்த்துகள்.

-முகிலன், அருந்தா, இளவேனில், இலக்கியன்.
Reply
#5
Á£ñÎõ ¾í¸û À¨¼ôÒì¸û ¦¾¡¼Ã Å¡úòÐì¸û.....
Reply
#6
மீண்டும் தொடருங்கள் உங்கள் படைப்புக்களை.... இனி முடிந்ததை பற்றி கவலை படாமல்....
[b][size=18]
Reply
#7
உயிராபத்துக்கள் புகலிடத்திலும் வருகின்றனவே. என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. கலைஞர்களுக்கு சோதனை வருவது வழமைதான். மனம் தளராமல் மீண்டும் உங்கள் கலை முயற்சிகளைத் தொடருங்கள்.
<b> . .</b>
Reply
#8
shanmuhi Wrote:Á£ñÎõ ¾í¸û À¨¼ôÒì¸û ¦¾¡¼Ã Å¡úòÐì¸û.....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அனைத்து அன்பு உறவுகளுக்கும் நன்றிகள்.

தனிப்பட்ட மடலிலும் தொலைபேசி வழியும் களத்திலும் எனக்கு ஆறதல் வார்த்தைகள் சொல்லி வரும் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வீட்டில் நடந்த தீ விபத்தில் நான் இரவு படுக்கைக் போகும் போது உடுத்திருந்த உடைகளான டீசேட்டும் உள்ளாடை மற்றும் பிசாமா தவிர தீயணைப்பு படையை தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்டு யன்னலால் பாய்ந்த hand phone தவிர எனக்கு வேறு எதையும் எடுக்க முடியவில்லை.

வெளியே பாய்ந்ததும் தீயணைப்புப் படையினருக்கு தெரிவித்தேன்.

மேல் மாடியில் இருந்தவர்களுக்கு அழைப்பு மணி மணியை அடித்து எழுப்பி வீடுகளை விட்டு வெளியேறுங்கள் என்று கத்தினேன்.

விழித்து கொண்டவர்கள் உதவி உதவி என்று கத்தத் தொடங்கினார்கள்.

பாதையில் வந்து கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் நின்றன.

வாகனத்தை விட்ட இறங்கியவர்கள் தீயணைப்பு படைக்கும் போலீசுக்கும் போண் பண்ணி உடன் வாருங்கள் என்று கத்துவதிலும் மேலேயுள்ளவர்களை மறு புறமாக வெளியேறுங்கள் கதவை மூடுங்கள் என்று ஒலியெழுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

என் வீட்டிலிருந்து தீ அடுத்த வீட்டுக்கு பரவியது.

தொடர்பு கொண்டு 10 நிமிடங்களில் முதலாவது தீயணைப்பு சிறிய முதல் வாகனம் வந்து பாதையில் நின்ற வாகனங்களை அப்புறப் படுத்தி கதுவுகளை மூடுங்கள் படி வழிகளால் இறங்குங்கள் என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.

ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குத்தார். குதித்தவர் எழுந்த போது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்தது.
நான் ஓடிப் போய் தூக்கிய போது என் காதலியை காப்பாற்று என்று கத்தினான் .

காரில் வந்த ஒருவர் தற்காலிக தீயணைப்பு கருவிகளான சிலின்டர்களை எடுத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுகளை உடைத்து உள்ளே நுமையும் போது தீயணைப்பு படையும் போலீசும் அம்புலன்சுகளும் பாதையில் நிறைந்து விட்டன.

இரு பக்கமுமிருந்து வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

அனைவரும் தனது பணிகளில் உக்கிரமானார்கள்.

போலீசாரும் தீயணைப்பு படையின் ஒரு பிரிவும் வீட்டுக் கதவுகளை தட்டி திறக்காத கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளிட்டார்கள்.

வெளியேற முடியாதவர்களை தூக்கிக் கொண்டு இறங்கினார்கள்.

இது ஒருபுறம் இருக்க
மறுபுறம்
தீயணைப்பு படையினர் எனது வீட்டின் முன் புறமும் பின்புறமுமாக தீயை அணைப்பதில் மும்முரமானார்கள்.

உள்ளே இருந்து வந்தவர்களை
வந்திருந்த 5 அம்புலன்சுகளும் முதலுதவிகளை செய்ய முற்பட்டது.

அதற்குள் தற்காலிக முதலுதவிக் கூடாரமொன்று அடிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.

சுவாசிக்க முடியாதவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு சில அம்புலன்சுகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் இம் முயற்சிகளுக்கு உதவுவதிலும்
எவரது உயிருக்கும் ஆபத்து வரக் கூடாது என்பதையுமே கருத்தில் கொண்டு போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும்
உதவிக் கொண்டிருந்தேன்.

எவருக்கும் ஆபத்தில்லை என்ற நிலை வந்த பிறகே என்னால் கீழே இருக்க முடிந்தது.

அதுவரை என்னை நான் உணராமல் இருந்திருக்கிறேன்.

என் காலில்
ஒரு செருப்புக் கூட இல்லாத நிலையை
நான் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

சுமுகமான ஒரு நிலை உருவாகும் போது என் வீடு சாம்பலாகியது கூட எனக்குத் தெரியாது.

அனைத்துமே சாம்பலாகி விட்டது.

குளிரில் நடுங்கி உறைந்து போன எனக்கு
சுவிசைச் சேர்ந்த ஒருவர் தன் செருப்பை தந்ததும் ஒரு இளம் பெண் எனக்கு தனது யக்கட்டை போர்த்தி விட்டதும் கனவு போல் இருக்கிறது.

அவர்களை நான் பார்த்தது கூட இல்லை.
நான் அவர்கள் பொருட்களை கொடுக்க தேடுகிறேன்.
இறைவன் வந்து உதவுவது இப்படியான வடிவங்களிலா?

ஒரு சிலர் குடிப்பதற்கு தண்ணீரும் தேனீரும்
கொண்டு வந்து தந்தார்கள்.
என்னால் தண்ணியை மட்டுமே குடிக்க முடிந்தது.


ஊடகங்கள் நிறைந்து செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

எமது வீட்டு பரிபாலன பெண்
எனது வீடுதான் தீயில் எரியத் தொடங்கியது என்று என்னை போலீசாருக்கு அறிமுகம் செய்தாள். அதுவரை
யாருடைய வீடு என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

உன்னிடம் பேசலாமா என போலீசாருக்கு பொறுப்பாக நின்ற நாடியா என்ற பெண் என்னிடம் கேட்ட போது நான் அவரோடு போலீசார் நின்ற இடத்தை நோக்கி நடந்தேன்.

ஒளிப்பதிவாளர்களும் , புகைப்படப்பிடிப்பாளர்களும் எம்மை சுற்றிக் கொண்ட போது என்னை தனது அங்கியால் அணைத்துக் கொண்டு அவர்களை
படம் பிடிக்காதவாறு தடுத்தாள்.

ஒரு ஒளிப்பதிவாளர் அவன் என் நண்பன் என்ற போது
இருக்கலாம் அவன் நிலையில் இது வேண்டாம். அவனை சுமுக நிலைக்குத் திரும்பும் வரை இருக்க விடுவதுதான் உங்கள் நட்புக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்றாள்.

அவர்கள் முன்னேறாமல் நின்றார்கள்.

என்ன நடந்தது என்ற விபரத்தைக் கேட்டாள்.

விபரத்தை சொன்னேன்.

ஒருமுறை வைத்தியசாலைக்கு போய் உன் சுவாசத்தை பரிசோதித்து வரலாம் என்றாள்.

இல்லை எனக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றேன்.

அது உனது மனநிலை.

என்னுடன் வா என்று அம்புலன்சுக்குள் அழைத்துச் சென்று ஆக்சிசனை கொடுக்க வைத்து விட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

முக்கிய வைத்திசாலைகளின் அவசரப்பிரிவு நிறைந்து விட்டதால் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு நானும் இன்னும் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்.

எமக்காகக் காத்திருந்த குழு எம்மை பரிசோதிக்கத் தொடங்கியது.

மற்ற இருவரது நிலையில் பாதிப்பு தெரிந்தது.

எனக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று சொன்ன வைத்தியர்
உங்கள் செயலால் எவருக்கும் உயிராபத்தில்லை என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உனது பொருட்களை விட வீடுகளிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறாய் என்று அங்குள்ளவர்கள் போலீசாருக்கு சொல்லியிருக்கிறார்கள் என்று என் கைகளைப் பற்றிய போது என் கண்கள் குளமாயின.

உனக்கு ஒன்றுமில்லை சில மாத்திரைகளைத் தருகிறேன்.
இதை எடுங்கள் என்று தந்தார்.

உங்களை அழைத்துப் போக நண்பர்கள் வெளியில் நிற்கிறார்கள் வரச் சொல்லுகிறேன் என்றார்.

சுவிசில் உள்ள கறுப்பினத்து நண்பனொருவனும் வெள்ளைகார பெண்ணும் நுழைந்தார்கள்.

கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்.

நான் நன்றி சொல்லிவிட்டு அவர்களோடு நடக்கும் போது உங்களுக்கு சிரம் இல்லையா என்றேன்.

இது கடமை என்றார்கள் புன் முகத்துடன்.

வீட்டுப் பகுதிக்கு வந்த போது போலீசாரும் தீயணைப்பு படையினரும் என்னை நோக்கி வந்தார்கள்.

வீட்டைப் பார்க்கலாம் வாங்கள் என்று அழைத்துச் சென்றனர்.

எல்லாம் சாம்பலாகியிருந்தது.
நான் வாயே திறக்கவில்லை.
போலீசின் தலைமை அதிகாரியான நாடியா என்னை அணைத்துக் கொண்டு சொன்னாள்
நீ உயிரோடு இருக்கிறாய்.
உன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நீ எப்படிப் பட்டவன் என்று தெரிகிறது.
உனக்கு உதவ எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாள்.

வெளியே வந்தேன்.

ஒரு விடுதியில் தற்காலிகமாக தங்கலாம் என்றாள்.

பக்கத்தில் இருந்த அயலவர்கள் தேவையில்லை.
அஜீவன் , எங்கள் வீட்டில் இருக்கட்டும் என்றார்கள்.

நாடியா என் முகத்தைப் பார்த்தாள்.

நீ தனியாக விடுதியில் இருப்பது நல்லதாக எனக்குப்படவில்லை.
இவர்களில் யாரோடாவது இரு.
நானும் வந்து பார்க்கிறேன் என்றாள்.

நான் அமைதியானேன்.

ஒரு குடும்பம் எனக்கு மிக நெருக்கமானவர்கள்.
அவர்களோடு நிற்கிறேன் என்றேன்.

அடுத்தவர்கள் எனக்கு
வேறு உதவிகளைச் செய்வதாக சொன்னார்கள்:

இரவு நோயெல் உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி வந்து தந்து விட்டுப் போனான்.

இன்று (8.10.04)காலை காப்புறுதி நிறுவனமும் போலீசாரும் , தொலைக்காட்சி பகுதியினரும் வந்திருந்தார்கள்.

தீ டெக்னிக்கல் டிபெக்டால் ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.

அத்தோடு எல்லாவற்றையும் தேடி விடலாம்
உன் படைப்புகளை எத்தனை கோடி கொடுத்தாலும் பெற முடியாது என்றார்கள்.

நாடியா (Police),
ஒரு நிறுவன உரிமையாளர் உன்னை இன்று மாலை சந்திப்பார். அவருக்கு உன் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்றார்.

மாலை என்னை சந்திக்க வந்த அந்த சுவிசின் நிறுவன உரிமையாளர்,
குடும்பத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள்.

என்னை அழைத்துச்
சென்று எனக்கு அளவான உடைகள் வாங்கித் தந்தார்கள்.

பின்னர் சாப்பிட ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்ற போது
என்னிடம் இன்று பெறப்பட்ட இன்டர்வியு தொலைக் காட்சியில்
அவர்களிடமிருந்த எனது குறும்படக் கிளிப்புகளுடன் போய்க் கொண்டிருந்தது.

என்னை அழைத்துச் சென்றவர்கள் உணவக உரிமையாளருக்கு என்னைப் பற்றிச் சொன்னார்கள்

ஒரு மாதம் சாப்பிட தான் ஒழுங்கு செய்வதாக உறுதிளித்தார்.

என்னை அழைத்துச் சென்ற பெரியவர் சொன்னார்.

நீ மறுபிறவி எடுத்திருக்கிறார்ய்.

உன்னைப் பற்றி நேற்றுத்தான் கேள்விப்பட்டேன்.

எவன் என்பதல்ல முக்கியம் .
எப்படிப் பட்டவன் என்பதே முக்கியம்.

உன்னைப் பற்றி சொல்பவர்கள் மூலம்
உன் நாட்டவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.

நான் தற்போது இருக்கும் வீட்டுக்கு வரும் போது எனக்கு ஒரு புது வீடு தற்காலிகமாக கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வந்தது.

சிலர் பணமும்
சில பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

காப்புறுதி கிடைக்கும் வரையும் செலவுக்கு பணம் பெற போலீசார் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து கொஞ்சம் பணம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளதாக சொன்னார்கள்.

மனம் தளராமல் இருக்க இறைவனும் நண்பர்களும் இருக்கிறார்கள் .........

எனவே இன்னும் நிற்க முடிகிறது.

வேறு இடத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் எழுத்து தவறுகள் ஏற்படலாம்.

புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் வாழ்கிறேன்.

என்னோடு தொடர் கொள்ள ஒரே ஒரு இலக்கம்:-

0041792091249
Reply
#10
அஜீவனின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.
அந்த சம்பவம் பற்றி சிறிது நேரத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். தொலைபேச முயற்சித்தேன். தொலைபேசி இயங்கவில்லை.
இலட்சகணகான சொத்துக்கள் நாசமாகிவிட்டதாக அறிந்தேன். ஓரு கலைஞனுக்கு அவனது கருவிகள் உயிர் போன்றது. அதனை எல்லாம் இன்று அஜீவன் இழந்து நிற்கிறார். வேற்று நாட்டவருக்கு உள்ள கரிசனை எமக்கும் இருக்கவேண்டும். எம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்ய முன்வரவேண்டும்.
நான் ஒரு Editing Computer வழங்க எண்ணியுள்ளேன். அதனை எந்த விளம்பரத்திற்காகவும் இங்கு நான் எழுதவில்லை. நான் வழங்கும் அதே பொருளை இன்னுமொருவர் வழங்காது தவிர்த்துக்கொள்வதற்கே.
அதே போல் அஜீவனிடமும் இன்னுமொன்றைக்கேட்டுக்கொள்கிறேன். இதனை எதுவித தன்மானக்குறைவாகவும் நினைக்காது. நாம் அன்பாக வழங்குபவற்றை ஏற்றுக்கொள்ளவும். அது பெரிய தொகையாக இருக்கலாம் அல்லது சிறியதொகையாக இருக்கலாம்.

திடமாக இருங்கள் இவை ஒன்றும் உங்களை நிலைதளர வைத்துவிடாது.
Reply
#11
நன்றிகள்.
சொல்லிய வார்த்தைகளே போதும்.
கோடி கிடைத்ததற்கு சமம்.
Reply
#12
உங்கள் கருத்தை வாசித்து .. என்ன சொல்வதென்றே தெரியவில்லை...அப்படி இருக்கிறது .... நான் என்ன சொல்லி ஆறுதல் படுத்த .. உங்கள் மன உறுதியின் முன் இது எல்லாம் ஒரு சில சோதனைகள்..அதை எல்லாம் தாண்டி நீங்கள் மேலும் உங்கள் துறையில் முன் வர வேண்டும்..
[b][size=18]
Reply
#13
உங்கள் படைப்புக்கள் அழிந்ததை எண்ணும் போது மிகவும் கவலையாக உள்ளது அண்ணா.. இருந்தும் நீங்கள் நலமாக உள்ளதை இட்டு மகிழ்ச்சி.. திடமாக இருங்கள் அவற்றைபோல் இன்னும் ஆயிரம் ஆயிரம் படைப்புக்களை உங்களால் உருவாக்க முடியும்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
எதிர்பாராமல் நடப்பதுதானே விபத்து.ஏற்பட்ட இழப்புகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட இதைவிட பெரிய இழப்பு ஏற்படாமல் போனதையிட்டு ஆறுதல்படுவது நல்லது. மீண்டும் பழைய உறுதியுடன் உழைக்க திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.
Reply
#15
மீண்டும் தொடருங்கள் உங்கள் படைப்புக்களை.... இனி முடிந்ததை பற்றி கவலை படாமல்....
Cry
Reply
#16
அண்ணா,திடமாக இருங்கள் உங்கள் மன உறுதியின் முன் இது எல்லாம் ஒரு சில சோதனைகள்..அதை எல்லாம் தாண்டி நீங்கள் மேலும் உங்கள் துறையில் முன் வர வேண்டும்..
Reply
#17
அஜீவன்..., உங்கள் கடிதம் பார்த்து எழுதவே வார்த்தை வரவில்லை. உங்களுக்கு எந்த குறையும் இல்லாமலிருக்கவும், இனி எல்லாம் சுகமாக அமையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Reply
#18
துன்பங்கள் உங்களை சோகப்படுத்தாமல் துவண்டுபோய் இருக்காமல் மீண்டும் உங்கள் படைப்புகளில் முன்னேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேம். உறுதி குலையாமல் இருந்து உங்கள் படைப்புக்கள் இன்னும் இன்னும் வெளிவர வாழ்த்துக்கள்.
:twisted: :evil: :oops: :evil: :twisted:
. . . . .
Reply
#19
<b>நன்றிகள்........</b>

<b>N.B:-</b>
எனது <b>வீடியோ ரெக்கார்டரின் உள் பகுதியில் </b>தொடங்கிய தீ ,
பரவி வியாபித்திருப்பதாக
போலீசாரின் தீ பற்றிய விசேட பிரிவினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

தயவு செய்து இரவு வேளைகளில்
தொலைக் காட்சி மற்றும் வீடியோ ரெக்கோடர் போன்றவற்றிற்கான மின் தொடர்பை முழுமையாக நிறுத்தி விட்டு தூங்கப் போங்கள்.

எனது நிலை யாருக்கும் வர வேண்டாம்.

அஜீவன்
http://ajeevan.blogspot.com/
Reply
#20
¿ýÈ¢ «ƒ£Åý ¾í¸û ¬§Ä¡º¨ÉìÌ.
þ󾿢¨Ä¢Öõ.... þ¨¾ìÜÚõ§À¡Ð ¾í¸û ¬úÁɾ¢ý ±ñ½«¨Ä¸¨Ç... ¯¾×õ ÁÉôÀ¡í¨¸ «È¢ÂÓʸ¢ÈÐ.
Å¡úòÐì¸û....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)