09-28-2004, 11:19 AM
இரவெல்லாம் மழை
விடிந்தபோது
காணாமல் போயிருந்தது
நெல்வயல்
விடிந்தபோது
காணாமல் போயிருந்தது
நெல்வயல்
|
கைக்கூ கவிதைகள்
|
|
09-28-2004, 11:19 AM
இரவெல்லாம் மழை
விடிந்தபோது காணாமல் போயிருந்தது நெல்வயல்
09-28-2004, 11:26 AM
வீரம் பேசிய கோடரி
தோத்துப்போனது வாழைந்தண்டிடம்
09-28-2004, 04:59 PM
கோவிலில்
பக்திப்பாட்டு கூட்டம் சேர்க்கும் புூசாரி
09-28-2004, 07:30 PM
காவலுக்குவந்த
பெண்காவலர்கள் கடைக்கண்ணால் ரசிக்கும் இளைஞர் கூட்டம்
09-28-2004, 07:46 PM
கட்ட மறந்த கைக்கடிகாரம்
கையை உறுத்தியது அடிக்கடி
09-29-2004, 06:16 AM
தேங்கிநின்ற மழை நீர்
குனிந்தவுன் முகம் பார்த்தேன்
09-30-2004, 06:02 AM
குளக்கரையில் குனிந்தபடி
முகம் பார்க்கும் மரங்கள்
09-30-2004, 06:05 AM
பரம்பரை பரம்பரையாக
நிலவைப்பிடிக்க முயற்சிக்கும் பனைமரங்கள்
09-30-2004, 07:55 PM
பிண ஊர்வலத்தில்
தப்பித்துவீழ்ந்த ரோஜாபுூ தரையில் புரண்டு கெஞ்சும் 'மறுவாழ்வு கொடுங்கள்"
09-30-2004, 08:25 PM
பனைமரத்தில் சிக்கும் வரை
நீ சிறிது நான் பெரிது சண்டைபோடும் காற்றாடிகள்...
10-01-2004, 06:22 AM
தாமரை இலையில்
ஓடிவிளையாடும் நீர்துளிகள் தாம் உயர்ஜாதியென இறுமாப்புக்கொள்ளும்
10-02-2004, 08:20 AM
ரோஜாப்புூக்கள்
தேன் எடுக்கும் பட்டாம்புூச்சி வெட்கிப்போயின வீரம்பேசிய முட்கள்
10-02-2004, 08:22 AM
புூ விற்கும் புூ
புூ வைத்துவிட யாரும் இல்லை
10-02-2004, 08:30 AM
கறையான் புற்றுகள்
பாம்பு ஒருநாள் வந்ததனால் நாகாத்தம்மன்கோவிலென பெயர்பெற்றது
10-02-2004, 08:31 AM
எனக்கும் குழந்தைபிறந்துவிட்டது
இன்னும் அம்மா நிலவைப்பிடித்துதரவில்லை
10-02-2004, 08:34 AM
காற்றிலே மண்
காதலி கண்ணைப்பார்த்தபடி காத்திருக்கும் காதலன்
10-03-2004, 07:57 PM
..
10-03-2004, 08:11 PM
வெயிலுக்கு பிடித்த குடைக்குள்
எப்போது மாட்டிய விண்மீன்கள்
10-06-2004, 06:08 AM
உன்னைப்பார்த்தபின்
ஏதோ இடம் மாறிவிட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன்...
10-06-2004, 06:54 AM
வறண்ட புல்வெளியில்
உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள் தண்ணீர் தெளித்து எழுப்புங்கள் |
|
« Next Oldest | Next Newest »
|