Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
மனித ஆண் மனிதப் பெண் இதிலிருந்து தான் மிச்ச எல்லா உறவுகளும் வந்தன....முதலில் நீங்கள் எந்த நிலையிலிருந்து எழுத ஆரம்பிக்கின்றீர்கள் என யோசித்தா பதில் எழுதுகிறீர்கள்...அப்படி சிந்தித்திருந்தால் இப்படியான கண்மூடித்தனாமான கேள்விகளை சிறிய மூளையை நன்கு பாவித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வணக்கம் குருவிகள்...

உங்கள் கருத்துக்கு பதில் எழுதி வைத்திருந்தேன்,
அது கேள்விக் குறிகளாகிட்டுது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

சரி பிறகு ஆறுதலா பதில் எழுதுகிறேன். ஆனால்
அதற்கு முன்னர் சிறு சந்தேகம்:
பெண்ணின் மூளை ஆணின் மூளையைவிட
கனவளவில் சிறியது, எனவே இயல்புகளும்
குறைவாகவே இருக்கும் என்று கற்பனை
செய்திருந்தீர்கள். ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரம்
தரவில்லை. எங்கிருந்து இந்தத் தகவல்கள் பெற்றீர்கள்
என்று. முடிக்கப்படாத விஞ்ஞான ஆய்வுகளை
எழுதி வீண் வாதம் செய்கிறீர்கள் என்றே
தோன்றுகிறது. அதுதவிர பெண்ணின் மூளை
ஆணின் மூளையைவிடக் கனவளவில் சிறியது
எனினும் அதன் இயல்புகளில் எந்தவித
வேறுபாடுகளோ மாற்றங்களோ இல்லையென்பது
ஆய்வாளர் கருத்து. ஆதாரம் பி.பி.சி. என்றோ
வாசித்தது - முகவரியில்லை - பின்னர் எழுதுகிறேன்.

நன்றி


Reply
நன்றி இளைஞரே....
மனித மூளையின் கனவளவு அதிகரிப்பானது ஆண்களிடத்து பெண்களிடமிருந்து செல்வாக்கு செலுத்தவில்லை என எங்காவது ஆய்வு முடிவிருந்தால் கொண்டுவந்து சமர்பியுங்கள்....பெண்களின் மூளைக் கனவளவு சிறியது என்பது உண்மை..அத்துடன் அது குறிப்பிட்ட அளவில் மூளையின் நுண்ணியக்க செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் வேறுபாட்டைக்காட்டுகிறது என்பதும் உண்மை.... மனித மூளையில் உள்ள மடிப்புக்களின் அளவே நுண்ணறிவுக்கு உதவியளிக்கிறது....மனிதனுக்கு மனிதன் மடிப்புக்களின் எண்ணிக்கை மாறுபடும் போது நுண்ணறிவின் அளவு மாறுபடுகிறது..எனினும் ஆண் பெண் இருவரினதும் மூளை மடிப்புக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சம அளவாகவே இருப்பதனால் தான் பாரிய நுண்ணறிவு வெறுபாடுகள் காட்டப்படவில்லை....ஆனால் மனித மூளைக் கனவளவானது மாறுபடும் அளவிற் கேற்ப அதன் தொழிற்பாட்டுரீதியான வேறுபாடுகளைக் காட்டுவது நிரூபிக்கப்படள்ளமை உண்மையாகும் ..அந்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளைச் செயற் பாட்டு வேற்றுமை உண்டு அது ஆண் பெண் இருவரினதும் தனித்துவ செயற்பாடுகளுக்கு உதவியளிக்கிறது....என்பதும் உண்மை...!

ஆனால் விஞ்ஞானத்தால் மூளை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிறைய விடயங்களும் இன்னும் உண்டு....என்பதையும் நினைவில் கொள்ளூங்கள்.....!

:evil: Idea :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று....
http://www.sciam.com/article.cfm?articleID...E49809EC588EEDF

:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Alai Wrote:ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.

நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.

தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.

மகனும் சமுதாயத்தில் ஒரு ஆண்தானே?! வருங்காலத்தில் ஒரு பெண்ணின் கணவன்தானே?!
இன்றுள்ள ஆணும் யாரோ ஒரு பெண் பெற்ற மகன்தானே? தொட்டில் பழக்கம் சுடுகாடு என்கிறார்களே.. தொட்டிலில் மகனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்க ஒரு பெண்ணால் ஏன் முடியாமல் போனது?
மேலே ஆண்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளில் பல மிகைப்படுத்தப்பட்டனவாகவே தோன்றுகிறது.. சிலவற்றை செய் எனப் பெண்கள் பணிக்கப்படுகிறாள்.. உதாரணமாக விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு தேனீர் வழங்க மனைவியை நாடும் கணவன்மார் நிறையவே உண்டு.. ஆனால் கர்ப்பிணிகளை சித்திரவதை செய்தல்.. கொடுமை செய்தல் என்பன ஏதோ ஆயிரத்துக்கு ஒன்று இரண்டாகத்தான் நிகழ்கிறது.. இவற்றை ஆண் சமுதாயத்துக்கே உரித்தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.. இவற்றை ஒரு சம்பவமாக அல்லது விதிவிலக்காகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். தந்தை மகனை கண்டிப்பது தந்தையின் அடக்குமுறை ஆகாது.. அது அன்பினாலும் பாசத்தாலும் உரிமையாலும் விளைவது.. இதைப்போல சில சமயங்கள் கணவன் மனைவி இடையேயும் கண்டிப்புகள் கட்டுப்பாடுகள் இடம்பெறலாம்.. ஆகவே எல்லாவற்றையும் அடக்குமுறை எனப் பார்க்க முடியாது.. அதற்காக அடக்குமுறை இல்லை என சொல்ல வரவில்லை.. ஆனால் அடக்குமுறை வெகுவாகக் குறைந்து.. ஏதோ சிலரிடம்தான் உள்ளது.. அதை ஆண்கள் சமுதாயம் என்றோ வர்க்கம் என்சோ வகுத்து.. குடும்பக் குலைவுகளுக்கு ஏதுவாக இல்லாமலிருந்தால் கருத்துகள் கனமாகும்..
.
Reply
sOliyAn Wrote:
Alai Wrote:ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.

நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.

தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.

மகனும் சமுதாயத்தில் ஒரு ஆண்தானே?! வருங்காலத்தில் ஒரு பெண்ணின் கணவன்தானே?!
இன்றுள்ள ஆணும் யாரோ ஒரு பெண் பெற்ற மகன்தானே? தொட்டில் பழக்கம் சுடுகாடு என்கிறார்களே.. தொட்டிலில் மகனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்க ஒரு பெண்ணால் ஏன் முடியாமல் போனது?

சோழியான்

எனது இந்தப் பதில்
வேறு ஒரு கேள்வியுடன் பொருந்தி வருகிறது.
nadpudan
alai
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:பெண் அடக்கப்பட வேண்டியவள். ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது

சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும்

[quote=Alai]ஹிட்லரும்இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.

கணணிப்பித்தன்/Kanani Wrote:இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?

Alai Wrote:பெண்ணை அடக்கி அடக்கியே வாழ்ந்து பழகிய உங்களுக்கு பெண் பேசினால் துள்ளுவது போல் தெரிகிறதாக்கும்.

கணணிப்பித்தன்
உங்கள் கருத்துக்களில் ஓரளவுக்காவது நியாயங்கள் இருக்குமென நினைத்தேன்.
ஆனால் அடாவடித்தனம்தான் தலை தூக்கி நிற்கிறது

நீங்கள் யார் பெண்ணை அடங்கு என்று சொல்ல..?
உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?
பெண்ணின் சுயசிந்தனையில் தலையிடவும்
அதற்கு கட்டுப்பாடு போடவும் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

[quote=kuruvikal]
நீங்கள் கேட்ட இதே கேள்விகளை...ஒரு குழந்தை தாய் அல்லது தந்தைப் பார்த்துக்கேட்டால்...சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரிடம் கள்வன் கேட்டால்...நாட்டில் சட்டம் போட்டு நியாயமான விதிகளை இயற்றும் அரசிடம் மக்கள் கேட்டால்...ஒரு மகானைப் பார்த்து சீடன் கேட்டால்...ஒரு ஆசிரியனைப் பார்த்து அல்லது அதிபரைப் பார்த்து மாணவன் கேட்டால்.......இப்படியே எல்லோரும் கேட்கத்தொடங்கினால்...நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சமூக நாகரிகங்கள் விழுமியங்கள் மனித நாகரிகம் என்று எல்லா அடிப்படைகளுமே சிதைந்து மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.....இதுதானா உங்கள் யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடு...உதுதானே உங்கள் பெண்விடுதலையின் எதிர் பார்ப்பு....?!

Alai Wrote:குருவிகள்

சிந்தித்துத்தான் பதில் எழுதுகிறீர்களா?
மூளை கனவளவில் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. அதைச் சரியான முறையில் பாவிக்கவும் தெரிய வேண்டும்.

தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவும் ஒன்றா?


ஆண் என்ன
நீதவானா..?
அல்லது தாயா..?
அல்லது அதிபரா..?
அல்லது பொலிஸா..?

ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.

நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.

தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.

kuruvikal Wrote:மனித ஆண் மனிதப் பெண் இதிலிருந்து தான் மிச்ச எல்லா உறவுகளும் வந்தன....முதலில் நீங்கள் எந்த நிலையிலிருந்து எழுத ஆரம்பிக்கின்றீர்கள் என யோசித்தா பதில் எழுதுகிறீர்கள்...அப்படி சிந்தித்திருந்தால் இப்படியான கண்மூடித்தனாமான கேள்விகளை சிறிய மூளையை நன்கு பாவித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்....!

[/color]

இரண்டும் மனிதம்.

இதில் ஒன்றையொன்று தாழ்த்த.. யார் யாருக்கு உரிமை தந்தது?

[color=#bf0000]மேலே குருவியின் கருத்தில் என்ன நியாயமிருக்கிறது?

மனித ஆண், மனிதப் பெண்ணை அடக்குவதற்கும்

தாய் - மகனுக்கும்
அதிபர் - மாணவனுக்கும்
பொலிஸ் - கள்வனுக்கும்...............

எந்த வகையில் முடிச்சுப் போட முடியும்...?
nadpudan
alai
Reply
ஒன்றையொன்று தாழ்த்த யாருக்கு உரிமையிருக்கிறது? நியாயமான கேள்விதான்....ஆனால் இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள்.
<b>Alai Wrote</b>
Quote:[quote]இரண்டும் மனிதம்.
இதில் ஒன்றையொன்று தாழ்த்த.. யார் யாருக்கு உரிமை தந்தது?
மேலே குருவியின் கருத்தில் என்ன நியாயமிருக்கிறது?
மனித ஆண்இ மனிதப் பெண்ணை அடக்குவதற்கும்
தாய் - மகனுக்கும்
அதிபர் - மாணவனுக்கும்
பொலிஸ் - கள்வனுக்கும்...............
எந்த வகையில் முடிச்சுப் போட முடியும்...?
பெண்ணுக்காக நீங்கள் எழுதுவது மட்டுமே நியாயம் என நீங்கள் நம்புகிறீர்களே. ஆண் பெண்களுக்காக மனிதாபிமானத்துடன் eடந்துகொண்டதைச் சொன்னால் விதிவிலக்குகள் என்கிறீர்கள் ஆனால் ஆண்கள் அனைவரும் பெண் கொண்டுவரும் பணத்திற்காகக் காத்திருப்பதாகஇஏங்குவதாகத்தானே கருதுகிறீர்கள். புகலிடத்தில் இப்போது சீதணம் விதி விலக்குகளால் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? அல்லது ஆண்கள்அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? அல்லது பெண்களால் (தாய்மார்களால்) முன்மொழியப்படுகிறதா?

-
Reply
மணிதாசன்
நீங்களும் பக்கச் சார்புதானா..???

ஒவ்வொருவரின் பிழைகளையும் எடுத்து அலசுவதற்கும்

பெண் அடக்கப்பட வேண்டியவள் என்று சொல்வதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

இது உங்களுக்குப் புரியவில்லையா?
அல்லது புரிந்தும் புரியாத மாதிரி பாவனை செய்கிறீர்களா?
nadpudan
alai
Reply
நீங்கள் கேட்டது போன்ற கேள்விகளை ஒரு மாணவன் அதிபரைப் பார்த்து மகன் தாயை அல்லது பெற்றோரை பார்த்து மேற்குலகில் கேட்கமுடியும்...அந்தளவுக்கு சுதந்திரம் உள்ளது....அதே நேரம் அந்தச் சுதந்திரம் அவர்களை எந்த அளவு பாதிக்கின்றது என்பதையும் நாம் கண்கூடாக கண்டுள்ளோம்....அதற்காக அவர்கள் வருந்துவதையும் மீண்டும் குடும்பம் சமூகக் கட்டமைப்பென்று வாழ் விரும்புவதையும் கண்டுள்ளோம்....இன்று நீங்களும் அதை நோக்கியதாகத்தான் கூச்சலிடுகிறீர்கள்...நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் பெண்களும் ஆண்களுக்கு நிகராக மனித உரிமைகளைப் பாவிக்க வேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் அதேவேளை சமுதாய நலன், விருத்தி நோக்கியதாக ஆணும் பெண்ணும் எப்படி தாயின் பாசத்தின் முன் மகனும் அதிபரின் அதிகாரத்தின் முன் மாணவனும் கட்டுப்பட்டுள்ளானோ அப்படி கட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது சமூக ஒழுக்கம் கட்டமைப்பு விழுமியம் பாரம்பரியம் என அனைத்தும் தகர்க்கப்பட்டு அநாகரிக சமூகம் ஒன்று பிறக்க வழியேற்படும்...அதே நேரம் ஆண்கள் மீது அபரிமிதமான , யாதார்தத்திற்கு அப்பாற்பட்ட குற்றச்சாட்டுகளையும் குற்றங்களையும் சுமத்தி சமூகத்தில் அவர்களை ஒடுக்கி பணிய வைத்தலும் நான் தான் பெரிது நீ சின்னன் என்று போட்டிபோடுதலும் முற்றாக தவிர்க்கபப்டுதலே ஆரோக்கியமான அன்பின்பாற்பட்ட ஆண் பெண் புரிந்துணர்வு ஏற்பட வழி சமைக்கும்...இதையே தேசிய தலைவரும் குறிப்பிட்டுள்ளார்...!

மணிதாசன் அங்கிளின் பார்வை ஆண்கள் சார்ப் நிலை எடுக்கின்றது எனக் கூறமுடியாது....அவர் உங்கள் கருத்துக்களின் போக்கை நன்கு அவதானித்தே கருத்து வைத்துள்ளார்...இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உங்கள் கருத்துக்கள் அடிப்படையிலேயே யாதார்தத்தை பார்க்கத்தவறி உணர்ச்சி வேகத்தில் கொட்டபப்டுகிறது என்பதை...!

மீண்டும் மீண்டும் உங்களின் வாதங்கள் ஒரே சக்கரத்துனுள்ளேயே சுற்றிச் சுற்றி வருவதால் ஒரே பதில்களையே விளக்கி விளக்கி எழுதிக் கொண்டிருக்க எம்மால் முடியாது...அதற்கு நேரமும் இல்லை....எனவே உங்களிடமிருந்து நியாய பூர்வமான பார்வைகளின் நிமிர்த்தம் வரும் கருத்துக்களுக்கே எனி மேல் பதில் அளிப்போம்....

அது வரை கருத்தாடலில் சளைக்காது பங்கேற்ற இரண்டு பெண்மணிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெறுகின்றோம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:அந்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளைச்
செயற் பாட்டு வேற்றுமை உண்டு அது ஆண் பெண்
இருவரினதும் தனித்துவ செயற்பாடுகளுக்கு
உதவியளிக்கிறது....என்பதும் உண்மை...!

ஆனால் விஞ்ஞானத்தால் மூளை தொடர்பில்
கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிறைய விடயங்களும்
இன்னும் உண்டு....என்பதையும் நினைவில்
கொள்ளூங்கள்.....!

வணக்கம் குருவிகளே...
உங்கள் கருத்திலேயே உங்களுக்கு முரண்பாடு இருக்கும் பொழுது என்னுடைய கருத்தை எப்படி உங்வாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்த்துவிட்டு, உங்களின் முடிவான ஒரு கருத்தை முன்வையுங்கள்.

நான் உங்களுடைய கற்பனைக்கு ஆதாரம் கேட்டால், அதைத் தராமல் நீங்கள் என்னுடைய கருத்திற்கே ஆதாரம் கேட்கிறீர்கள்.

என் செய்வேன்? என் செய்வேன்?


Reply
இப்ப முக்கிய பிரச்சினை ஏன் அடக்கப்பட வேண்டும் என்பது....

பெண்கள வீட்டுக்குள் பூட்டி வைத்த காலம் இருந்தது என்பதை யாவரும் அறிவர்...
அவர்கள் இப்பொழுது வெளியில் வந்து கல்வி பெற்று தொழில் செய்து சமுகக் கடமைகளில் பங்கேற்று வருகின்றனர்...இதுவும் யாவரும் அறிந்ததே..
எங்காவது புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவரையோ அல்லது ஓரளவு வேலை தெரிந்த ஒருவருக்கோ அதிகாரங்களையும் பொறுப்பபையும் கையளிப்பதில்லை.... இது யதார்த்தம். அதே நேரம் அவ்வேலையை திறம்பட செய்பவருக்கே அப்பொறுப்பும் அதிகாரமும் கையளிக்கப்படும்!

இவ்வளவு நாளும் நான் சொன்னது புரியவில்லை என்றால் மேலே குருவியண்ணை தந்த இணைப்பை சொடுக்கி அந்த 5 பக்க ஆராய்ச்சிக் கட்டுரையை ஆற அமர இருந்து வாசியுங்கள்.....அந்த முடிவுகளுக்கு வந்ததில் சிலர் பெண் விஞ்ஞானிகள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்! (பிறகு ஆண்கள் எடுத்த முடிவு என்று சொல்லுவியள்)

ஆணின் உடலமைப்பும் மூளையமைப்பும் தலைமைத்துவப் பண்பை காட்டி நிற்கின்றன.. இதனால் இன்று நேற்று மட்டுமல்ல என்றுமே மேலாதிக்கமும் தலைமைத்துவமும் ஆணிண் கைக்கே உரித்தான பண்புகள்....

இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவினால் மனித உரிமைகளும் மனித நேயமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பெண்களுக்கும் அவ்வுரிமைகளை (தலைமைத்துவமும் சமுகப்பொறுப்புகளும்) கொடுக்க முன்வந்துள்ளோம்...

ஆனால் இத்தகைய பண்புகளைக் காட்டுவதற்கு எமது (பொதுவாக தெற்காசிய) பெண்களுக்கு அறிவும் ஆளுமையும் சமுகப்பொறுப்புணர்வும் காணாது! இதற்கு சான்று பகரத்தானே அன்னை இந்திரா எமது சிறிமா மற்றும் சந்திரிக்கா, செல்வி ஜெயலலிதா....அடுக்கிக்கொண்டே போகலாம்....(இதை ஏற்றுக்கொள்ளவிட்டால் யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட வாதம் உங்களுடையது...தொடர்ந்நது பயனில்லை)

இந்நிலையில் ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒரு சமுகம் இயங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது!....இங்குதான் ஆணிண் கட்டுப்பாட்டுக்குள் பெண் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.....

உங்கள் ஆதங்கம் ஏன் மேற்கத்தேய பெண்கள் போல் எம்பெண்களும் இருக்க முடியாது என்று.... புலம்பெயர்ந்த உங்களுக்கு எமது அரசின் பொருளாதார அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டுதான் இவ்வகையான எண்ணங்கள் தோன்றுகின்றனவோ? பெண் விடுதலை பேசுவோர் தனிய பெண்களின் உரிமை பற்றி மட்டும் சிந்தித்து பலனில்லை. ஒரு சமுகத்தின் அரசியல் பொருளாதார நிலைகளையும் சிந்திக்க வேண்டும்.

எங்கள் அரசிடம் போதிய பணம் இருக்கா? இங்கு ஒரு மனிதன் அரசின் குழந்தை...ஆனால் இலங்கையில்???....இலங்கையில் களவு கற்பழிப்பு கொலை கொள்ளை மேற்குலகுபோல் வெகுவாக குறைந்து விட்டனவா? சட்டதிட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டுள்ளனவா?

எம்பெண்களின் பாதுகப்பும் எமது சமுகத்தின் அமைதியான வளர்ச்சியையும் கருத்திற்கொண்டே பெண் ஆணிண் கட்டுப்பாட்டில் இயக்கப்பட வேண்டியவள் என்கிறோம்....புரிந்தால் சரி...

அதுசரி இவ்வளவு விவாதித்த நீங்கள் பெண் விடுதலையின் அடிப்படையை அரசியல் சமுக பொருளாதார பின்னணி கொண்டு முன்வைத்தீர்களா? வெறுமனே பெண்விடுதலை என்று கோசமிடுவதும் நாம் விளக்கம் தந்தால் அடக்குமுறை அடாடவடித்தனம் என்று முறையிடுவதும் ஆரோக்கியமான வாதமாக நான் கருதவில்லை...கொஞ்சம் சிந்தித்து விஞ்ஞான பூர்வமாகவும் அரசியல் சமுக பொருளாதார பின்னணியுடன் உங்கள் பிரச்சினையின் நியாயத்தை ஆராய்ந்து முன்வையுங்கள்!
Reply
21.07.1903 ?

:roll:


Reply
21.07.**** புலி > பூனை
இளைஞன் இன்னும் கட்டுரை வாசிக்கேல்லைப்போல
வாசிச்சு எழுதுங்கோ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
இளைஞரே...
எங்கள் நிலையை பல தடவைகள் சரியாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்....தாங்கள் அவற்றை ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும்...வெறுமனவே பெண்களுக்கு சார்பாக ஏதேனும் எழுத வேண்டும் என்று எம்மில் பிழைபிடிக்காதீர்கள்...நிச்சயம் நீங்கள் அதில் வெற்றி பெறப்போவதில்லை....காரணம்...எம்மிடம் போதுமான ஆதாரங்கள் உண்டு...பழைய களத்திலும் சரி இக்களத்திலும் சரி நாங்கள் திரும்பத்திரும்ப ஒன்றையே சொல்லி வருகின்றோம்..அது மாத்திரமன்றி எங்களின் ஒவ்வொரு சொல்லின் பின்னும் நேரடி மறைமுக அர்த்தம் உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
21.07.****

மிருகம் [புலி; பூனை]

புலி =/ = பூனை => சரி
புலி > பூனை => பிழை

ஆண் புலி =/= பெண் புலி => சரி
ஆண் புலி > பெண் புலி => பிழை

மனிதன் =/= மிருகம் => சரி
மனிதன் > மிருகம் => பிழை


Reply
Quote:அது மாத்திரமன்றி எங்களின் ஒவ்வொரு சொல்லின் பின்னும் நேரடி மறைமுக அர்த்தம் உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்...!

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதை நீங்கள் சொல்லக் கூடாது குருவிகளே. வாசிப்பவர்கள் சொல்ல வேண்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
இளைஞரே...உங்களுக்கும் உயிரியல் உண்மைகளுக்கும் வெகு தூரம் போல் தெரிகிறது...அது மட்டுமன்றி...நாங்கள் எங்கள் பெருமைக்கு அங்கு குறிப்பிடவில்லை...நீங்கள் சொல்லகராதி தேடக் கூடாது என்ற நோக்கத்திலேயே குறிப்பிட்டோம்....! அந்தச் சாதாராண உண்மையையே உங்களால் சரிவரா இனங்காண முடியாத போது உங்களுக்கு எங்களின் பார்வை பழையதாகத்தான் தெரியும்...உங்களைப் போல..நாங்களும் இளைஞர்கள் தான்..என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....

நன்றி..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நிதானமாக யோசியுங்கள். இப்பக்கத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் யதார்த்தமாக எழுந்த வினாவுக்கு கோபப்படுதல் பக்கசார்பை உறுதிசெய்கிறது

-
Reply
ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும்;, போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன.

இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில்; குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம்
விலங்குகளிடமும் இருந்தது.

இதுதான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.
ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாது காப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்;புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றும் இந்த நிலை தொடர வேண்டிய அவசியமில்லை.
இதை வைத்து ஆண்கள் கெட்டிக்காரர்கள், ஆட்சி செய்யப் பிறந்தவர்கள்,
பெண்கள் அடக்கப் பட வேண்டியவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளவும் தேவையில்லை.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே.
அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள்.

இன்று மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு மிருகங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.

------------------------------------------------

ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும்.
அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள். இது ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.

ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபாரஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும்.


இப்படிப் பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால்
அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு.

ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது.
ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வெவ்வேறு வழிகளில் செயற் படுகின்றன.

இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை..

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.

பெண்ணை மட்டும் வீட்டுக்குள் அடங்கு என்று சொல்ல
இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம்.
அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
Nadpudan
Chandravathanaa
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)