Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைக்கூ கவிதைகள்
#21
<img src='http://www.uk-vodafone-mobile-phones.co.uk/_common/images/phones/motorola/big/c350.jpg' border='0' alt='user posted image'>

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது

விட்டுவிடு என்னை
Reply
#22
<img src='http://www.mesc.usgs.gov/resources/education/butterfly/images/finger300.gif' border='0' alt='user posted image'>

நீ விட்டுச் சென்ற நினைவுகள்
இன்னும் என்னுடன்..
Reply
#23
<b>மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
அகதி</b>
<b>-மழை-</b>


<b>வெளிச்சக் கணவனை
விரோதித்து விட்டு
இரவுக் காதலனை கண்டு
கதை பேச வந்தாள்
கறுப்பு அழகி</b>
<b>-இருட்டு-</b>

<b>இவை எனது அபிமான அறிவிப்பாளர் மப்றூக் எழுதிய ஹைகூ </b>
----------
Reply
#24
<img src='http://www.local354.org/oil%20lamp%202web.jpg' border='0' alt='user posted image'>

விடியல் என வேடமிட்டு
விட்டில்ப்புூச்சிகளை ஏமாற்றும் வேடதாரி...
Reply
#25
<img src='http://www.greengrants.org/img/reg_adv_lower_girl_thatch.jpg' border='0' alt='user posted image'>

கள்ளமற்று
வெள்ளையாய்ப்புன்னகைக்கும்
மலர்
Reply
#26
தூங்கிப்போழுது கழிக்கும்
ஆட்டோக்காரன்
சவாரி என்றதும்
ஐந்து ரூபாய் கேட்பான் அதிகமாய்..
Reply
#27
புதிதாய் வாங்கிய
வெள்ளைச்சட்டை
ஆசையாய்ப்போட்டு கடைத்தெரு சென்றபோது
விலைவாசி ஏறிவிட்டது எனக்குமட்டும்
Reply
#28
வயல்காட்டு பொம்மைக்கு
கால்சட்டை
விவசாயின் இடுப்பில்
வெறும் கோவணம்
Reply
#29
பல ஆயிரம் செலவுசெய்து
வண்ண வண்ணமாய் விநாயகர் பொம்மைகள்

அத்தனையும் கடலில் கரைப்பதற்காம்...
Reply
#30
இறந்துபோன பணக்கார அரசியல்வாதிக்காக
பெட்டிக்கடையை
மூடிவிட்டு பசியுடன் வியாபாரி....
Reply
#31
புதிது புதிதாய்
வீதியோரக்கடைகள்..

போலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்
Reply
#32
கடிதங்களுக்காக்
காத்திருந்து
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து
தற்கொலை செய்து கொண்டது
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி
Reply
#33
Quote:கடிதங்களுக்காக்
காத்திருந்து
காத்திருந்து கடைசியாக மனமுடைந்து
தற்கொலை செய்து கொண்டது
எங்கள் வீட்டுத் தபால்ப்பெட்டி
ஐயோ பாவம்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
பாவம் நிலாப்பெண்

எத்தனை காதலர்கள்
கண்சிமிட்டியபடி
Reply
#35
ஊரிலே திருவிழா
வளையல்கடைகளை மொய்த்து
கன்னியர்கள்,

காளையர்கள்
Reply
#36
கைநிறைய பொற்காசுகள்....

கதவைத்தட்டி கனவைக்
கெடுத்தான்
கடன்காரன்...
Reply
#37
கவலையை மறக்கிறேன் என்று
மதுக்கடையில் கணவன்..

மனைவி கவலையுடன்
Reply
#38
பரந்த வயல்

பசியுடன் கதிர் அறுக்கும்
கூலிக்காரப் பெண்கள்...
Reply
#39
கல்யாணமாகி வேற்று ஊர்
சென்றுவிட்ட போதும்
இன்றும் ஆற்றங்கரையில் காத்திருக்கும்
தேய்ந்த கஸ்தூரிமஞ்சள்...
Reply
#40
அடிக்கடி அம்மாவிற்கு
சோதிடம் சொன்ன பல்லி
கதவிடுக்கில் வாலைத்
தொலைத்தது
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)