09-03-2004, 09:14 PM
வேண்டும்......!
<img src='http://tamilini.yarl.net/archives/CACPE3U1.jpg' border='0' alt='user posted image'>
சுதந்திரமாய் ஒரு
சூரிய உதையம்
தாய் நிலத்தில்.. என்
தாயுடன் வேண்டும்...!
என்னை தீண்டும்
காற்றலைகள்
சுதந்திரமாய்
தூய்மையாய் வேண்டும்...!
நீண்ட இரவதில்
நிசப்தத்தில்
நின்மதியாய்
நிலவை ரசிக்க வேண்டும்...!
அழுகுரல்கள் இன்றி...
அமைதியாய்
அன்னை மடியில்
அயர்ந்து தூங்க வேண்டும்...!
பிஞ்சுகளாய் நாங்கள்
பஞ்சுப் பாதம்
பதித்த பாதைகள்
குண்டும் குழியும் இன்றி
மிதிவெடிகள் இன்றி...
மீண்டும் எம்மை
ஏந்திட வேண்டும்...!
ஓரக்கண்ணால் ஒழிந்து
பார்க்கும்..
கொலைகார பாவிகள்
வெளியில் போக வேண்டும்..!
அரிச்சுவடி கற்ற..
பாலர் பாடசாலை..
பாழாய் போன பாவிகள் இன்றி
பழைய படி எமக்கு வேண்டும்...!
சுதந்திரமாய் என் நாய்
நிலவை பாத்து குரைக்க வேண்டும்
நாய் குரைக்கும் ஒலி கேட்டு..
நாசக்காரர்கள் என்று
நடுங்கி நாம் பதுங்கிய
நிலை அகல வேண்டும்...!
நினைவுக்காய் செதுக்கிய தூபிகள்...
நிலை பெற்று நிக்கவேண்டும்..
காணமல் போனோர்
பட்டியல் அற்று போகவேண்டும்..
சிறைச்சாலைக்காய் அலையும்
உறவுகள் அற்று போக வேண்டும்...!
உறக்கத்தின் இடையில்....
உள்ளே நுழையும்..
சிங்கள பேய்கள்... தங்கள்
ஊர் திரும்ப வேண்டும்...!
அடையாளம் காட்ட
அட்டைகள் கேட்ட...
அந்நியப்பாவிகள்
அழிந்து போகவேண்டும்...!
இனத்தை காட்டிக்கொடுத்து....
தமிழ் மண்ணை விற்று
வயிறு வளக்கும் கள்வர் கூட்டம்...
கல்லாய் போக வேண்டும்..!
தமிழ் இனத்திற்காக..
உயிரை கொடுத்த...
வேங்கைகள் என்றும்...
விடிவெள்ளிகளாய் வேண்டும்...!
மண்ணை பிரிந்து...
அந்நிய நாட்டில்...
அகதியான நான்
தாய் மண்ணில்
மரிக்கவாவது வேண்டும்...!
<img src='http://tamilini.yarl.net/archives/CACPE3U1.jpg' border='0' alt='user posted image'>
சுதந்திரமாய் ஒரு
சூரிய உதையம்
தாய் நிலத்தில்.. என்
தாயுடன் வேண்டும்...!
என்னை தீண்டும்
காற்றலைகள்
சுதந்திரமாய்
தூய்மையாய் வேண்டும்...!
நீண்ட இரவதில்
நிசப்தத்தில்
நின்மதியாய்
நிலவை ரசிக்க வேண்டும்...!
அழுகுரல்கள் இன்றி...
அமைதியாய்
அன்னை மடியில்
அயர்ந்து தூங்க வேண்டும்...!
பிஞ்சுகளாய் நாங்கள்
பஞ்சுப் பாதம்
பதித்த பாதைகள்
குண்டும் குழியும் இன்றி
மிதிவெடிகள் இன்றி...
மீண்டும் எம்மை
ஏந்திட வேண்டும்...!
ஓரக்கண்ணால் ஒழிந்து
பார்க்கும்..
கொலைகார பாவிகள்
வெளியில் போக வேண்டும்..!
அரிச்சுவடி கற்ற..
பாலர் பாடசாலை..
பாழாய் போன பாவிகள் இன்றி
பழைய படி எமக்கு வேண்டும்...!
சுதந்திரமாய் என் நாய்
நிலவை பாத்து குரைக்க வேண்டும்
நாய் குரைக்கும் ஒலி கேட்டு..
நாசக்காரர்கள் என்று
நடுங்கி நாம் பதுங்கிய
நிலை அகல வேண்டும்...!
நினைவுக்காய் செதுக்கிய தூபிகள்...
நிலை பெற்று நிக்கவேண்டும்..
காணமல் போனோர்
பட்டியல் அற்று போகவேண்டும்..
சிறைச்சாலைக்காய் அலையும்
உறவுகள் அற்று போக வேண்டும்...!
உறக்கத்தின் இடையில்....
உள்ளே நுழையும்..
சிங்கள பேய்கள்... தங்கள்
ஊர் திரும்ப வேண்டும்...!
அடையாளம் காட்ட
அட்டைகள் கேட்ட...
அந்நியப்பாவிகள்
அழிந்து போகவேண்டும்...!
இனத்தை காட்டிக்கொடுத்து....
தமிழ் மண்ணை விற்று
வயிறு வளக்கும் கள்வர் கூட்டம்...
கல்லாய் போக வேண்டும்..!
தமிழ் இனத்திற்காக..
உயிரை கொடுத்த...
வேங்கைகள் என்றும்...
விடிவெள்ளிகளாய் வேண்டும்...!
மண்ணை பிரிந்து...
அந்நிய நாட்டில்...
அகதியான நான்
தாய் மண்ணில்
மரிக்கவாவது வேண்டும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: