Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புஷ் அடித்தார் தேர்தல் பல்டி...!
#1
[b]தீவிரவாதத்தை வெல்ல முடியாது


தீவிரவாதத்தை வெல்லவே முடியாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் புஷ், நேற்று முறைப்படி அக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நியூயார்க்கில் நடந்த இந் நிகழ்ச்சியின்போது புஷ்ஷைக் கண்டித்து போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆர்பாட்டத்தினரில் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் என்பிசி தொலைக்காட்சிக்கு புஷ் அளித்துள்ள பேட்டியில்,

தீவிரவாதத்தை நாம் வெல்லவே முடியாது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவோரை ஆதரிப்பவர்களை தடுக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இருந்து அமெரிக்கா பின் வாங்கினால் அது அடுத்த தலைமுறையினருக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும்.

இந்த உலகில் நாம் நமது பலவீனத்தை வெளிக்காட்ட முடியாது. அப்படி வெளிக் காட்டினால் அதை நமது எதிரிகள் தங்கள் வெற்றிக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்றார்.

புஷ்ஷின் இந்தப் பேச்சையே தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது. அக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் கெர்ரியும், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜான் எட்வட்ர்ஸ்சும் புஷ்ஷை கடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற ஒன்றை எதற்காக புஷ் ஆரம்பித்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், சர்வதேச அளவில் புஷ் நிர்வாகம் அடைந்த தோல்வியின் எதிரொலி தான் அவர் டிவி பேட்டி என்று கூறியுள்ளனர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
என்ன புஷ் இப்படி சொல்லிப்போட்டார்... அப்ப இனி என்ன செய்ய போறாராம்......?? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
இதெல்லாம் அரசியல்ல சகஜமுங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)