Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொஞ்சக்கூட வெட்கம் இல்லை
#1
என்னதான் நாகரிகம் வளர்ந்து வந்த போதும், மனித நடத்தைகளில் அது தொற்றிக்கொண்ட போதும் இன்னும் மாறாதுள்ள பெடிகளை என்னவென்பது. அதிகரித்து வரும் திருமணப்போட்டிகளை எண்னும் போது பெரும் வேடிக்கை யாகவும் வேதனையாகவும் உள்ளது. தெருவில் போகும் போதோ, பஸ் தரிப்பு நிலையத்தில் நிற்கும் போதோ பசித்த ஒருவர் வந்து எம்மிடம் கையேந்தினால் முகத்தைச் சுழிக்கின்றோம். 'உனக்கு உழைத்துப் பிழைக்க இயலாதா? என்ற கேள்வி வேறு. ஒருவர் இக்கட்டான நிலையில் பெற்றகடனை மீளச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவன் அவனை மரியாதைக் குறைவாகப் பேசிவிடுகிறான். கடன்பட்டவன் அவமானத்தால் குறுகிப் போகிறான். ஒருவரிடமிருந்து சும்மா காசு வாங்கவேண்டியேற்படும் போது மனம் என்னபாடுபடுகிறது.
ஆனால் திருமணம் என்றபெயரில் லட்சக்கணக்கான சொத்துக்களைக் கேட்கும் ஒரு இளைஞன், வெட்கப்படுவதில்லையே ஏன்? அடுத்தவர் உழைப்பை ஒரு பெண்ணுடன் தான் சேர்ந்து வாழ்வதற்கான கூலியாகவா கேட்கிறான். அப்படித்தான் கொட்டிக்கொடுத்து ஒருவனுக்கு பெண்ணைத்தாரைவார்க்கும் பெற்றோர், பெண்ணை வைத்துக்காப்பாற்றத்தான் சீதனம் கொடுக்கிறோம் என்கிறார்களே அவன் அந்தப் பெண்ணை வைத்துக்காப்பாற்றுகிறான். இல்லையே தாலி கட்டினால் மனைவி, காலையில் தேநீர் கொடுக்க, உணவு சமைத்துப்பரிமாற, உடை தோய்க்க, பாய்விரிக்க என்று ஒரு சம்பளமற்ற வேலையாளாகத்தானே போகிறாள். இன்னும் வீட்டுக்கு உழைக்கும் பெண்களும் கூட சீதனம் கொடுக்கிறார்கள். எல்லாம் சரி, தனக்கு வரும் வாழ்க்கைத்துணையிடம் கை நீட்டிப்பணம் வாங்கி, அந்தப் பணத்தில் தாலிக்கொடி செய்து. அந்தப்பணத்தில் கலியாணவீட்டுச் செலவையும் செய்து 'பஸ்ஸொன்றையே ஒரு ஹையேஸ்" வாகனத்தையோ வாடகை அமர்த்தி நண்பர்கள் உறவினர்களை ஏற்றி விலாசம் காட்டும் போது கொஞ்சம் கூட வெட்கம் ஏற்படுவதில்லையோ?
கணவனைவிட மனைவி கூடப் படித்தால் சரியல்ல, வயசு கூடிற்றால் பெரிய வேலையில் கூடியசம்பளத்தில் இருந்தால் சரியல்ல, சீதனம் வாங்கும் போதுதான் விலைக்கு அவிழ்த்த மாடுதான் என்ற நினைப்பு ஏன் வருவதில்லை. இளைஞன்கள் சமூகமே.... மானமிழந்து போவதுபோலதான் தெரிகிறது.

குருவிகூட தாமாகக் கூடுகட்டியபின்தான் குடும்பம் தொடங்குகிறது. எனக்குத் தெரிந்த விலங்கினங்கள்கூட தமது இடத்தை நிச்சயம் செய்தபின்பே கூடுகின்றன. மனிதன் மட்டும் கலியாணம் செய்யுமுன் வீட் கட்டித்தாறியளோ என்று மாமனாரைக் கேட்கிறான். சீதனம் என்பதே கேவலம். ஆண்மைக்கு விடப்படும் ஏல விற்பனையை வேறெப்படிச் சொல்வது.

திருமணம் முடித்து புதுக்கருக்கழியாத சோடிபட்டு வேட்டி கூறைப்புடவை சகிதம் கோவிலுக்கு வருகிறது. புதிதாக எடுத்த மோட்டார் சைக்கிள் பெண்ணின் கழுத்தில் இன்னும் தொய்யதா வட்டத்தாலிக் கொடி அட்டியல் கைநிறைந்த தங்கவளையல், பத்து விரல் மோதிரம், மார் பதக்க சங்கிலி, முத்துக்குவியல் தோடு, மாப்பிள்ளையும் ஒரேவிரைவிரலில் இரண்டு மோதிரம், சங்கிலி என அட்டகாசமாகத்தான் வருகிறார். அவர்களோடு ஓட்டியவளாக மாமியார்.

பெண்ணின் தாய். 'மாப்பிள்ளை எவடம்" பேச்சுக் கொடுத்தேன். யாழ்ப்பாணம் 'ஆ...." என்றேன். பக்கத்தில் நின்றபெண், 'என்ன முடிஞ்சுது" என்று கேட்டாள். மாமியார் மனம் நோக, மூண்டு லச்சம், காச அஞ்சுலெச்சம், இனி மோட்டார் சைக்கிள், வீடுவளவு, கலியாணச் சிலவு, தரகர்கூலி எல்லாமா ஞாயமா முடிச்சுது. என்றார் கண்கலங்க. மாப்பிள்ளை பெண்ணுடன் கோயிற் பிரகாரம் சுற்றிவருகிறார். பெண்ணின் நகையை, நேர்செய்துவிடுகிறார். ஏதோ அதில் காழ்ப்பவுணாவது அவர் செய்து போட்டது போல அவனைப் பார்க்கும் போது ஒரு கொள்ளைக்காரனைப் பார்க்கும் உணர்வ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.


மாயா - ஈழநாதம்
thanks: sooriyan.com

-------------------------------------------------
இந்த தலைப்பை பற்றி நிறைய கருத்தாடல்கள் நடந்திக்கிறது இருந்தும்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
கவலையாகத்தான் இருக்கிறது
ஆனால்

வரதட்சனை வாங்க மறுக்கும் ஆண்களை யார் மதிக்கிறார்கள்....
Reply
#3
ஆண் குருவி குழையால் வீடு கட்டினால் பெண் குருவி சண்டை பிடிக்காம குடும்பம் நடத்தும்.... காரும் பட்டும் பணமும் பகட்டுமா எதிர்ப்பார்குதுகள்... கூட நாலு குச்சி தானும் தாங்கி கூடிக் கூடுகட்டுது.... ஆனா மனிதப் பெண் அப்படியில்லையே... ஒப்பீடுகள் ஏற்றத்தாழ்வுகள்.... வெளிநாட்டு சொகுசுகள்.... வசதிகள் வாய்ப்புக்கள்... கார்கள் நகைகள் ரீவிகள் மொபைல் போன்கள்...இன்னும் இன்னும்....அடிக்கிக் கொண்டே போகலாம்...இவற்றை ஓரிரவுக்குள் எதிர்பார்க்கும் பெண்கள் தான் உலகில் அதிகம்..... இவர்களுக்கு ஆண் மட்டும்தான் தானே உழைத்துக் கொடுத்து குடும்பம் நடத்த வேண்டும் என்றால்... கொள்ளைதான் அடிக்க வேண்டும்....!

ஆண் அதிகம் படித்திருந்தாலும் மனைவியை மட்டம் தட்டுவது குறைவு..... பெண்கள் படித்ததைப் பிரயோகிக்கிறார்களோ இல்லையோ ஆணை மட்டம் தட்ட மட்டும் நன்றே கற்றுக் கொள்கிறார்கள்.... இப்படியான குணங்களை முதலில் பெண்கள் களைய வேண்டும்... இன்றேல் பெண்ணின் செருக்கடக்க ஆண் முறுக்கோடுதான் நடக்க வேண்டிவரும்...அது இயல்பு.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
குருவியால் முடிந்தது இலை குலைகளினால் ஆன வீடு.. இது ஒரு ஒப்பீடு தான்.. அதைப்போல் ஏன் ஆண் சுயமாக சம்பாதித்து ஏன் வீடு கட்ட முடியாது? அப்படி கட்டினால் பெண் வாழ மாட்டாலா என்ன..?? மொத்தத்தில.. பெண் கொண்டு வருகிறதில குடித்தனம் நடத்திறதுக்கு காத்திருக்கிறார்கள்...! அதை விட குருவி என்ன சீதனாமா வாங்கிறது.. பெண் குருவி சண்டை பிடிக்க.. சீதனம் வாங்கினால் கேக்காமலா விடுவாள்...??
அதை விட ஒரு பெண் கணவினிடம் இப்படிப்பட்ட பொருட்களை கேட்பதிலை என்ன தவறு இருக்கிறது.. கணவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்...?? முடிந்தால் வேண்டிக் கொடுக்கிறது இல்லாட்டால் நிலையை பெண்ணுக்கு புரியவைத்தால் அதை பெண்களால் புரிந்து கொள்ள முடியும்...

ம் ஏதோ வேலைக்கு போற பெண்களை மட்டும் சீதனம் கேக்கிறதில்லை என்ட மாதிரி எல்லோ கதைக்கிறீங்கள்... சீதனம் எல்லாரையும் தான் கேக்கிறீங்கள்..!

அப்படி ஆண் படித்து பெண் குறைவாக படித்த குடும்பங்களை போய் பாருங்கள் தெரியும்.. ஆண்கள் மட்டம் தட்டுகிறார்களா இல்லையா என்டு... அங்க தான் அதிகமாக இருக்கும் எடுத்ததெல்லாத்திற்கும் நடக்கும்.. உனக்கு இது பற்றி என்ன தெரியும் என்டு...!

பெண்கள் சாதாரனமாக ஏதாவது சொல்ல முற்பட்டால் கூட படிக்காத ஆண்கள்.. அதனை மட்டம் தட்டுவது என்று தான் எடுத்து கொள்வார்கள்.. வாயால மடடும் சொல்லலாம் அது அப்படி இப்படி என்டு ஆனால் நடக்கிறது என்னவோ வேறை மாதிரி தான்...!
மனதில இருக்கிற அந்த ஆண் என்ற குணம் தான் இந்த மட்டம் தட்டலுக்கு காரணம்...! என்க்கு என்ன ஒரு பெண் சொல்லுறது என்டு ஒரு எண்ணம் அதனால் தான் இந்த மட்டம் தட்டல்.. ஆனால் பெண் அப்படி இல்லை கணவன் சொன்னால் சரியோ பிழையோ கேட்டே ஆக வேணும்..என ஆண்கள் நினைக்கிறார்கள் ...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
காசு வேணாம் என்றால் கசநோயோ என்று பார்க்கிறீர்கள்...
காணி நிலம்வேண்டாம் என்றால் ஒரு கால் சரி இல்லையோ என்று சந்தேகமாய்ப்பார்க்கிறீர்கள்....
கட்டின புடவை போதும் என்றால்.. அரை லூசோ என்று நினைக்கிறீர்கள்....

காசும் வேணும் காரும் வேணும்..
காணிவீடும் வேண்டும் என்றால்
மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று மரியாதை செய்யுறீங்கள்....

என்ன உலகமப்பா?
Reply
#6
இப்படி பட்ட காரணங்களை வசதியாக ஆண்கள் கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்... சனத்திற்காக மற்றவரிகளிக்காகவா?? நீங்கள் திருமணம் செய்கிறிங்கள் இல்லையே பின்பு எதற்கு உங்களுக்கு மற்றவர்களது கருத்துக்கள்.. உங்களது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டியது தானே...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
பெண்கள் எப்பவும் கேட்டுப்பெறும் நிலையில் இருக்காமல் தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு வரவேண்டும்... கணவன் என்பதற்காய் மனைவியின் கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்க முடியாது... அதற்காக கணவன் மனைவி மீது அன்பும் அக்கறையும் இல்லாதவர் என்பதல்ல அர்த்தம்.... கணவனின் குடும்பத்தின் பொருளாதார நிலையை உணர்ந்து அதற்கேற்ப பெண்கள் வாழ முன்வரவேண்டும்... பெண்கள் கேட்டுத்தான் அல்லது ஒரு பெண்ணுக்காகத்தான் படிப்பும் வீடும் காரும் வசதிகளும் ஒரு ஆணுக்கு அவசியம் என்று வாழ்பவன் போல் முட்டாள் உலகில் இருக்க முடியாது...!

ஒரு ஆணின் துணைவிதான் மனைவி.... ஒரு பெண்ணின் துணைவன் தான் கணவன்.. சீதனம் என்று கொடுக்கப்படுபவைகளால் குறித்த ஆண் மட்டுமன்றி பெண்ணும்தான் நலம் பெறுகின்றாள்.. சீதனம் என்பது வற்புறுத்திப் பெறப்படாது வசதி உள்ள ஆணிடம் இருந்தென்றலும் பெண்ணிடம் இருந்தென்றாலும் அவர்களின் குடும்பத்துக்கான ஒரு முதலீடாக வருவதில் தவறில்லை அதில் வெட்கமும் இல்லை....! மேலைநாடுகளில் அரச பணத்தில் தான் வாழ்க்கை ஓட்டுகிறார்கள் அதிகம் பேர்...கிரடிட் காட் லிமிட் கடந்திட்டுது என்பதற்காக காதலைக் கழற்றிவிடும் நிலையில் தான் மேற்கத்தையப் பெண்கள் இருக்கிறனர் அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்த இளைஞர்களும் தாயகத்தில் பெண்ணெடுக்கக் காரணம் அவர்கள் தான் தங்களில் குறை கண்டுபிடிக்காமல்.. பிடிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாதவர்களாக கேள்விகள் கேட்க முடியாதவர்களாக முற்பணமும் பீஆரும் இருக்கும் என்ற நம்பிக்கையால்தான்....! பீஆருக்கென்றே எத்தனை திருமணங்கள் நிச்சயக்கப்படுகின்றன...(இந்த நிலைமை ஈழத்திலே அங்கு வாழ்பவர்களுக்கும் அல்லது இந்தியாவிலையோ இல்லை என்பதையும் கவனியுங்கள்).....வரும் பெண்களும் வசதிகள் கண்டு வாயடைத்து இருப்பர் சிறிதுகாலத்துக்கு... பின்னர் நிலைமை மோசமாகத்தான் ஐயோ குய்யோ என்று கத்துவர்...எனவே பெண்கள் சுயநலத்துக்காக வாழ்க்கை அமைக்காமல் குடும்பம் என்ற ஒன்றின் பொதுநலம் நோக்கி பரந்த நோக்கில் தம் வாழ்வையும் தம் சார்ந்தோரையும் வாழ்வையும் வழிநடத்தக்கூடியவர்களாக உள்ள வரை சீதனம் போல பல பிரச்சனைகள் இருக்க்கத்தான் செய்யும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இன்றைய சூழ்நிலையில் உழைக்கிற பெண்கள் தான் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.. அது புலம் என்றாலும் சரி தாயகம் என்றாலும் சரி.. பெண் தனக்கு தேவையானவற்றை தானே வாங்க கூடிய நிலையில் இருந்தும் கணவனைக்கேட்க வேண்டிய நிலை இருக்கிறது காரணம்..
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!

ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??

சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!
கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...
தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
மாக்கற்றிலை ஏலத்திலை போட்டு ஃபிறீயாத்தாறன் எண்டு சொல்லியும் ஒருத்தனும் வாங்கிறானில்லையெண்டால் வயித்தெரிச்சலாத்தானிருக்கும்.. இல்லையோ..?

மருந்தில்லாத குச்சியோ தெரியேல்லை.. செக்பண்ணிப் பாருங்கோ.. மருந்து இருக்கோவெண்டு..
:wink:
Truth 'll prevail
Reply
#10
[size=24]கொஞ்சக்கூட வெட்கம் இல்லை
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? :roll:




[quote=sennpagam][size=24]கொஞ்சக் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
எனக்கு வெக்கமாயிருக்கு.. கொஞ்ச..
என்னை விட்டிடுங்கப்பா..
:wink:
Truth 'll prevail
Reply
#13
Quote: பெண் தனக்கு தேவையானவற்றை தானே வாங்க கூடிய நிலையில் இருந்தும் கணவனைக்கேட்க வேண்டிய நிலை இருக்கிறது காரணம்..
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!


பெண்கள் எங்கே ஆண்களைக்கேட்கிறார்கள்...
சீட்டுப்பிடிச்சு அந்தக்காலத்திலேயே பழகியவர்கள்..
கண்ணுக்கு மை உதட்டுக்கு சாயம், கைப்பை,
புதிது புதிதாய் சேலைக்கேற்ற செருப்பு, செருப்புக்கேற்ற சேலை.....
சமையலுக்கு
காப்பி போடுவதற்கு
றொட்டி சுடுவதற்கு என்று எத்தனை
எல்லாம் கேட்டா வாங்குகிறார்கள்.
பாவம் கணவன் வீட்டுக்கு வந்து பார்த்தால் அன்றைய மாத உழைப்பு வேண்டாத பொருளாக வீட்டில் குடியிருக்கும்

பெண் உழைப்பவள் என்றாள் தனது பணத்தை பக்குவமாக வங்கியில் போட்டுவிடுவாள்
இல்லை பெற்றோருக்கு அனுப்பி வைப்பாள்...
தம்பியை வெளிநாடுகூப்பிட வேண்டும் என்பாள்..
இல்லை என்று சொல்ல முடியுமா?...
சொன்னாள் இரண்டு வாரம் எங்கே சாப்பிடுவது....
பேச்சு வார்த்தை இருக்காது
ஆனால் வசவு மட்டும் இருக்கும்...
இதை எல்லாம் கேட்க முடியுமா?
கேட்டாலும் ஆணின் நற்பெயரை இதைவைத்தே சிதைத்துவிடுவாள் பெண்.

நீ சுயநலவாதி என்று பட்டம் கொடுத்துவிடுவாளே...
எல்லா ஆணும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கவே
வாழ்நாளை செலவுசெய்து வீணாகிறார்கள்...

வீணாகிப்போனதே என் வாழ்வு என்று
கொஞ்சம் குடிக்கிறார்கள்..
வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்...
பாவப்பட்ட இனம் ஆயிற்றே அவர்கள்...

Quote:ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??

மனைவியின் கோரிக்கைளை நிiவேற்ற வேண்டும் கணவன் இல்லை என்றாள்
என்ன கணவன்? என்று ஏளனமாய் பேசிவிடுகிறார்கள்...
என்ன மனைவியர்.. ? இவர்கள் வெறும் சுயநலவாதிகள்...
கணவனும் மனிதன் தானே...
அவனுக்கு துணையாக வாழ்வதை விட்டுவிட்டு
அவன் கேட்பதை கொடுக்கவேண்டும் இல்லை என்றாள் ஆண்மைக்கே இழுக்காக
ஒரு வார்த்தையை பிரயோகித்து கேவலப்படுத்துவது...

Quote:சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!



சீதனம் மட்டும்தான் அவள் கொண்டுவருகிறாள்....
அதன்பின் எல்லாம் அவன்தானே...
கல்யாணம் செய்துவைத்தபின் பெண்வீட்டாரைப்பார்க்கவேண்டுமே...
எவ்வளவு சந்தோசமாய் இருப்பார்கள்...
இனிக்கவலையில்லை இனி செலவு எல்லாம்
அந்த இளிச்சவாயன் பார்த்துக்கொள்வான்...
விட்டுது தொல்லை என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்..

ஏமாந்த ஆண் அதன்பின்
ஏற்படப்போகும் பெரிய பெரிய செலவுகளை
எல்லாம் அறியாதவனாய்..
தண்ணீர்கொதிக்கவைத்த பானைக்குள் இருக்கும் தவளைபோல
சுகமாக இருக்கிறது சுகமாக இருக்கிறது என்று
தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்கிறான்...

Quote:கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...


தன் கைப்பணம் எல்லாம்
பெண்ணின் ஆசையைப்புூர்த்தி செய்ய முதலில் செலவு செய்துவிடுகிறான்
அப்படியும் அவை அடங்கவில்லை...
சரி இன்னும் முயற்சிக்கலாம் என்று
கடன் அட்டையைபயன்படுத்துகிறான்..
பேராசைபிடித்த பெண்கள் பணம் இல்லை என்றால்
கேவலமாக ஆணை மட்டம் தட்டிவிடுவார்கள்
என்ன ஆண் நீ
என்ன கவணன் நீ
என்ன காதலன் நீ.. என்று
என்ன செய்வார்கள் ஆண்கள்... பாவம் ..

Quote:தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!

தாயகத்தில் இருந்து பெண் எடுப்பது ஏன் என்றால்
அவளுடைய தேவைகள் குறைவாக இருக்கும்
அப்படியும் அவள் தேவைகளை அதிகப்படுத்திக்கொண்டாலும்
கொஞ்சம் நாள் எடுக்கும்...
அனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு
யாரையும் பார்த்து அது வேண்டும்
இது வேண்டும் என்று அடம்பிடிக்கும் தாயகப்பெண்களும் உண்டு.
இல்லை என்றால் மரியாதைஇல்லை என்று
மரியாதைக்காக பொருட்களைவாங்க வைத்து
கணவனை கடன்காரணாக்கம் பெண்களும் உண்டு

மகளுக்குகொடுத்த பணத்தை ஏன் பெண்வீட்டார் ஊரெல்லாம் சொல்லி
ஒப்பாரிவைக்கிறாhகள்....
அவள் நல்லா வாழ்வதற்கு உதவியாகத்தானே கொடுத்தது...

மாப்பிள்ளை வீட்டாரை மட்டம் தட்ட இது ஒரு நல்ல காரணமாக
பயன்படுத்துகிறார்கள்...

சரி எதற்காக இப்படியெல்லாம் சீதனம் கொடுத்து கட்டிவைக்கிறார்கள்...
சமுதாயத்தில் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய
எத்தனையோ பேர் தயாராக உள்ளார்கள்..
அவர்களுக்கு பெண்களை கட்டிவைக்கலாமே..
அவர்களிடம் நொட்டைபிடிப்பார்கள்...
பணம்கொடுத்து வாங்கினாத்தான் எதற்கும் மதிப்பு இந்த சமுதாயத்தில்..
இல்லை என்றால் அது...
[/quote]
Reply
#14
சீட்டுபிடிச்சு அழகு சாதனப்பொருட்கள் வாங்கிய பெண்களை நாம் காணவில்லை.. ஆனால் அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதில் என்ன தவறு இருக்கு.. அவளும் உழைக்கிறாள் வேலைக்கு போகிறாள்.. வேலைக்கிபோறவள் அவற்றை பாவிக்க தானே எண்ணுவாள்....அதுவும் ஒரு தேவை தானே..??

இன்றைய சூழ் நிலையில இப்படி பட்ட இயந்திரங்கள் வீட்டிற்கு அவசியம்.. வேலைக்கு போவதற்கு நேரம் போய்விடும் அவளாக நின்று எல்லாவற்றையும் செய்ய முடியாது.. கணவனுக்கு. பிள்ளைகளிற்கு என்று தனித்தனியாக செய்து கொண்டிருக்க முடியாது தானே.. இப்படி பட்ட இயந்திரங்களை பாவிப்பதனால்.. வேலை மிச்சம் நேரம் மிச்சம் சமயத்தில வீட்டில ஏற்படுகின்ற பிரச்சனைகள் கூட குறையும்... நேரத்திற்கு சமைக்கல்ல.. தேனீர் போடல என்ற சின்ன சின்ன சண்டைகளை கூட குறைக்க உதவுது.. அதோட இவைகளை சும்மா பெற முடியாது.. காசு கொடுத்து தான் பெற வேணும்.. இல்லையா..?? இவைகள் ஒன்டும் வடிவுக்க வைக்க பயன்படுற பொருட்கள் இல்லை தானே...!

ஆண்களுக்கு இழுக்கு அல்ல.. சீதனமும் வாங்கிறீங்க.. இதில குறைந்த பட்சம் எல்லாம் வேண்டாம் ஒரு சில வற்றையாவது தீர்த்து வைக்க தானே வேண்டும்... ஆனால் இப்ப எல்லாம் அப்படி இல்லை... பெண்கள் தாங்கள் உழைப்பதிலேயே.. தங்கள் தேவைகளையும் ஏன் கணவன் மாரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறார்கள் சில வீடுகளில்....!


சீதனம் மட்டும் அவள் கொண்டு வருவாள்.. அதன் பின் ஏற்படுகின்ற செலவுகள்.. என்றால்.. அந்த செலவுகள் யாவும் பெண்ணால் மட்டுமா ஏற்படுகிறது.. பெண்ணுக்காக மட்டுமா ஏற்படுகிறது.. இல்லையே குடும்பம் என்று வந்திட்ட ஏற்படுகின்ற இன்பம் துன்பம்.. செலவு வரவு எல்லாம் சமனாகிறது.. இதில பிறகென் சீதனம் வாங்கிறிங்கள்.. அது வாழ்க்கை பூரகாவும் பயன்படப்போறது இல்லை.. ஒரு கொஞ்சக்காலம் தான் ஆனால் அதை சேமிக்க அந்த சீதனத்தை புரட்ட ஒரு பெண்ணின் தகப்பனோ.. இல்லை சகோதரனோ எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள்.. எத்தனை நாள் நித்திரை இல்லாமல் இருந்திருப்பார்கள்...?? ஏன் இது ஒவ்வொரு விட்டிலும் நடந்திருக்கலாம் தானே..?? அதைவிட இந்த கலியாணம் நடக்க எங்க வீட்டில எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்டு அந்த பெண்ணுக்கு கூட என்ன தோன்றும் இல்லையா சில நேரங்கள்...??

அது தானே விரலுக்கேற்ற வீக்கம் என்டு எமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. உங்களுக்கு ஏற்றவாறு செலவு செய்கிறது உங்களது நிலயை பெண்ணுக்கு புரிய வைக்கிறது ..வைக்க வேணும்.. இது காதலிக்கும் போதும் சரி.. கலியாணம் முடிந்த புதிசிலும் சரி.. அதை சொல்ல மாட்டார்கள் சொல்லி புரியவைக்க மாட்டார்கள்.. கடன் அட்டைகளை தாங்களே போட வேண்டியது பிறகு சொல்லுறது.. அவளுக்கு எது கொடுதடதாலும் அடங்காது என்று.. அந்த பெண் இதற்கு முதல் வாழ வில்லையா எப்படி வாழ்ந்தாள்.. குடும்பத்தின் செலவில் அல்லது தனது உழைப்பில்.. முதலில் அவளால் வாழ முடிந்தது இப்ப ஏன் இப்படி கேட்கிறாள்.. ஏன் என்றால் ஆண்கள் கொடுத்த இடம் முதலிலேயே இது தான் பிரச்சனை இப்படி தான் நாம் வாழ வேணும் என்டு எடுத்து கூறி வாழ்வை தொடங்கினால் யாவும் ஒரு வரம்புக்குள்ளேளே நிக்கும்... குடிக்கவும் தேவையில்லை அழவும் தேவையில்லை...! இதில நல்ல பெயர் வாங்கவேணும் என்று அமைதியாக இருக்கிற கதைக்கே இடம் இல்லை... பின்னால கஸ்டப்பட போறது யார். அவர்கள் தானே.. அதை தவிர்க்க வேணும் என்றால் முதலில் நிலைமையை சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே...!

பெண் உழைக்கிற பணத்தை வங்கியில் போடுகிறாள் என்றால்.. அந்த பணம் என்ன பயனற்று போகவா போகிறது.. இல்லையே இன்னொரு இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் தான் பயன்படபோகிறது..
அதென்னது ஆணும் உழைக்கிறார் பெண்ணும் உழைக்கிறா.. ஆண் மட்டும் வீட்டுக்கு அனுப்புவார்.. உறவினர்களை வெளிறாட்டுக்கு கூப்பிடுவார்.. ஏன் பெண்களால் (முடியாது ) ஏன் அவள் செய்ய கூடாது...?? ஏன் அவர்கள் குப்பிடக்கூடாது.. அவளால் முடியுது.. அல்லது சில கணவன்மார் கூப்பிட அவர்களும் உதவுகிறார்கள் அதனால் கூப்பிடுகிறாள்... இதில் என்ன இருக்கு...!

சமூகம் மதிப்பு கொடுக்காது சீதனம் வாங்காவிட்டால் என்கிறதை விடுங்க... காதலிச்சாலும் தான் சமூகம் அப்படி இப்படி என்டுது காதலிக்காமல் விடுறீங்களா...?? அதைவிட எல்லாரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வெளிக்கிட்டால் பிறகு சீதனம் வாங்கிறவர்களை தான் ஏளனமாக பேசும் சமூகம்.. நாம் தானே எல்லாம்.. முதலில் நாங்கள் செய்து செய்கிறவர்களையும் ஊக்க படுத்தி... அப்படி கதைக்கிறவர்களையும் வாயை முடும் படி புத்திமதி கூறுகிறது.. காலப்போக்கில் எல்லாம் சரி ஆகி விடும். இதுவரை சீதனம் கொடுக்கிறதை வழைமையாக கொண்டவர்கள்.. தீடீரென இப்படி வாங்காமல் செய்ய ஏதாவது கதைப்பார்கள்.. பிறகு இதுவே சாதாரணமாக போய்விடும் அதனால் இந்த சழூகம் அப்படி இப்படி என்டு பயப்பட தேவையில்லை...?? சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்... அவர்கள் எதற்காகவும் தலை குனிகிறதாக காணவில்லை சீதனம் வாங்காததனால்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
Quote:மாக்கற்றிலை ஏலத்திலை போட்டு ஃபிறீயாத்தாறன் எண்டு சொல்லியும் ஒருத்தனும் வாங்கிறானில்லையெண்டால் வயித்தெரிச்சலாத்தானிருக்கும்.. இல்லையோ..?

மருந்தில்லாத குச்சியோ தெரியேல்லை.. செக்பண்ணிப் பாருங்கோ.. மருந்து இருக்கோவெண்டு..

தாத்தா மாக்கெட்டுக்கே போகவே தேவையில்லை.. இதில எங்க ஏலம் பிறகென்க வயித்தெரிச்சல்...

வெறும் குச்சி கிடையாJ தீக்குச்சி.. தீயின் குணம் தெரியும் தானே என்ன செய்யும் என்டு.....??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
ஓமோம் தெரியும்.. தீக்குச்சி உரச பத்தும்.. தீ சமைக்க உதவும்.. சில நாடுகளிலை குளிர்காய உதவும்.. ஆனால் பத்தாத குச்சியை வாங்கி என்ன பிரயோசனம்.. அதுதான் ஒருத்தருக்கும் தேவைப்படேல்லையோ.. எண்டு யோசிச்சன்..
Truth 'll prevail
Reply
#17
திருமணம் என்பது இரு மனம் ஒருமித்து வாழ்வது... ஆண் உழைத்தால் என்ன பெண் உழைத்தான் என்ன....ஆண் கொண்டு வந்தால் என்ன பெண் கொண்டு வந்தால் என்ன குடும்பம் என்று ஒன்று வருகின்றபோது இருவருக்கும் அங்கு எதிலும் சம பங்களிப்பு என்ற அவசியம் ஏற்படுகிறது...! அதை ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி உதாசீனம் செய்யமுற்பட்டால் பாதிக்கப்படுவது அவர்களின் குடும்பம் என்பதை விளங்கிக் கொண்டால் சரி...பிரச்சனைகள் தீரவாய்ப்பு வரக்கூடும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
Mathivathanan Wrote:ஓமோம் தெரியும்.. தீக்குச்சி உரச பத்தும்.. தீ சமைக்க உதவும்.. சில நாடுகளிலை குளிர்காய உதவும்.. ஆனால் பத்தாத குச்சியை வாங்கி என்ன பிரயோசனம்.. அதுதான் ஒருத்தருக்கும் தேவைப்படேல்லையோ.. எண்டு யோசிச்சன்..

ஏன் தாத்தா குச்சிதானே சொல்லுது தான் தீக்குச்சி என்று... ஓ.... நீங்கள் அது உரசின குச்சியோ உரசாத குச்சியோ என்று படம்பிடிக்கிறீங்கள் போல... நடக்கட்டும் நடக்கட்டும்.... குச்சியோட உரசி தீ பத்திட்டா உதவிக்கு 999 க் கூப்பிடுங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
ஒருக்கால் தானே பத்தும் அதுமட்டுமா... எரிக்கவும் உதவும் ஆக்கலையும் தான்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
பேச்சில தான் ஆண் கொண்டு வந்தால் என்கிறிங்கள்.. நடை முறையில பெண்ணை தானே கேக்கிறார்கள்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)