Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய இராணுவம் செய்தது .....
#61
புளட் இயக்கம் செய்த ஒரே ஒரு நல்ல விசயம் அதிலை இருந்த ஒருதர் எழுதிய வங்கம் தந்த பாடம். ஆனால் இதை பற்றி அறியதா ஜடங்கள் விசர் கதை கதைக்குதுகள். நம்மடை ஆக்கள் இந்திய செய்திகளை கேட்டு பழக்கப்பட்டவர்கள். அதைஉண்மை என்றும் நம்புகிறார்கள். வங்மகம் தந்த பாடத்தின் பின் ஈழம் தந்த பாடம் அதை நம்ப பலர் மறுப்பதுதான் புரியாத புதிர்!
Reply
#62
உண்மையைச் சொன்னா மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலப்படுத்துவதைவிட இந்தியாவை நம்பினார்கள்...நம்பிக் கெட்டார்கள் என்பதே நிஜம்....பட்டபின்னாடி பாடம் படிச்சுப் பிரயோசனம் இல்லை.... உதுக்கு நல்ல சாட்சி...94 இல சந்திரிக்கா ஆட்சிக்கு வரேக்க சனம் புக்கை பொங்கினது..சமாதான தேவதைக்கு....அதே தினம் ஈழநாதத்தில பாலகுமாரன் எழுதின கட்டுரை ஒன்றில் சந்திரிக்காவின் இன்றைய முகத்தை அன்றே காட்டி எழுதி இருந்திருந்தார்... புலிகளும் மக்களே திரண்டு வாருங்கள் படை நகர்வை முறியடிப்போம் என்று.... மக்கள் திரண்டார்கள்...அசைலம் தேடி என்பதுதான் உண்மை.....! அந்நிய தேசங்களில் சுக வாழ்வுக்கு....! உந்தச் சுகம் கண்டவைக்கு பொழுது போக்கத்தான் ஈழ அரசியலே ஒழிய தேசப்பற்று உள்ளவன் அங்க களத்தில நிக்கிறான் இல்ல புலத்தில தேசத்துக்காய் உண்மையா உழைக்கிறான்...அது அசைலக் கேசில இலட்சத்தில ஒன்று....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
ம்..ம்.. ஆயுத சன நாய் அகம் எண்டால் அப்படித்தான்.. துவக்கு வைச்சிருக்கிற பேயுக்கு எப்படி சொல்லி விளங்கப்படுத்திறது.. அதுதான் அசைலம் தேடி திரளுதுகளாக்கும்.. ஈழம் தந்த பாடமும் அதுதானே.. துவக்கு வைச்சிருக்க பேயோடை ஆடி பாடி வெளிக்கிட்டு வந்து அசைலம் தேடுறதுதானே..
மற்றாட்டம் தொடங்க ஆகக்குறைஞசது 2 இலச்சம் எதிர்பார்க்கலாம்..
Truth 'll prevail
Reply
#64
ஐயா நான் சொன்னது திருமலையின்ர "அன்றைய" முக்கியத்துவம். நீங்கள் கதைகிறது "இன்றைய" முக்கியத்துவம். அன்றைய பனிப்போர் நேரம் ஜயவர்த்தனா பாகிஸ்தானோட சேர்ந்‌து ஆடேக்கை தான் அவன்களுக்கு திருமலை தேவைப்பட்டது. "இப்ப" பனிப்போரெண்டது இல்லையெண்டாகிப்போச்சு (குறிப்பா சோவியத் யூனியன் உடைஞ்ச பிறகு). இப்ப அவனுக்கு திருமலையும் வேண்டாம் ஏன் நீங்கள் சொல்றமாதிரி மன்னாரும் வேண்டாம். இந்தக்காரணத்தால தான் பெரிசா உதுக்குள்ள தலைப்போடாமலும் இருக்கிறான்.

எல்லாம்போக அவன்ர நாட்டுக்கு ஏதும் அச்சுறுதலெண்டால் இப்பவெண்டாலும் கட்டாயம் வருவான். ஏதேனும் சாட்டு வைச்சு.

எல்லாம் போக நான் பனிப்போர் பனிப்போரெண்டு கதைக்குறது உங்களுக்கு விளங்குதோ எண்டது எனக்குச் சந்தேகமாக்கிடக்கு. "பனிப்போர்" (cold war) எண்ட சொல்லையாகுதல் முந்‌திப்பிந்‌திக் கேள்விப்பட்டிருக்கிறியளோ? அல்லது அதுக்குத் தனியா விளக்கம் வேணுமோ?

தெரியாட்டிக் கேளுங்கோ சொல்லித்தரலாம். காசு கேக்கமாட்டன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#65
ஒப்பரேசன் லிபரேசன்போது கத்து கத்தெண்டு கத்தி இந்தியாவை கூப்பிட்டிட்டு உவங்கள் உப்பிடி எத்தனை போர் சொல்லி கறப்பாங்கள்.. இப்பவும் றொக்கற் விடக்கூடிய இடம் கேந்திர முக்கித்துவம் உள்ள தளம் அமெரிக்கா.. யப்பான்.. இந்தியா.. வெண்டு படம் காட்டித்தான் கறக்கிறாங்கள்.. உதுக்கெல்லாம் எடுபட நம்ம சனம் கைநாட்டுக்கள்தானே.. வெளியேறின சனத்தின்ரை தொகை மில்லியனெண்டு கணக்கு.. கொழும்புக்கு இடம்பெயர்ந்த சனத்தின்ரை தொகை 5 இலச்சம்.. எல்லாம் உவங்கடை தனிநாட்டு பனிப்போர் தந்தது.. தமிழருக்காக அடிபடுறாங்களாம்.. சனம் எங்கை விட்டிட்டு ஓடலாமெண்டு காத்திருக்கிது..
Truth 'll prevail
Reply
#66
தாத்தா, உங்கள் எஜமான சேவகம் நன்றாக உள்ளது. அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் நீங்கள் ஒரு வீதமாவது மக்கள் (புலிகளை விடுங்கள்) படும் கஸ்டங்களைப் பற்றி சிந்த்தித்து பாருங்கள்.

ஒருவரிடமும் சிறு கிள்ளுக்கூட வாங்காமல் வாழுவதனால் உங்களுக்கு மற்றையோரின் துயரம் தெரிய வாய்ப்பில்லை.

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்?
<b> . .</b>
Reply
#67
மக்கள் கஸ்டம் பற்றித்தான் எழுதிறன். வேண்டி வைச்சிருக்கிற தலையிடி காச்சல் பற்றித்தான் எழுதிறன்..

தமிழனை தமிழன் ஆளவேணும் எண்டதிலை தமிழனைத்தான் வருத்திறம்.. தமிழனைத்தான் கொலைசெய்யிறம்.. தமிழனைத்தான் துரத்திறம்.. தமிழனிட்டைத்தான் வறுகிறம்.. தமிழனுக்குத்தான் துவக்கு நீட்டுறம் எண்டதுகூட மறந்துபோச்சு இவங்களுக்கு..

உந்த தலைவலி காச்சலெல்லாம் இந்தியன் கொண்டுவந்து தந்ததே.. சிங்களவன் தந்ததே..
இலெக்ஷன் வர உணர்ச்சியூட்டிப் பேசுறவங்கள் ஏவிவிட எறியிற காச்சலும்... சறம் புடவை கடத்தலுக்கு இடைஞ்சலெண்டவுடனை பிடிக்கவந்தவனை அடிக்கிற தலையிடியும் தான்தான் தேடிக்கொண்டது.. அதுதான் பொலீசை இராணுவத்தை கண்டு பயப்படுற குலைப்பன்காச்சலாய் வளர்ந்தது..
எல்லாத்தையும் தேடிவைச்சுக்கொண்டு ஓலம்போட்டு அவங்களை வரவழைச்சுப்போட்டு அவன்தான் தந்தான் எண்டால் எப்பிடி..?
Truth 'll prevail
Reply
#68
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?
Reply
#69
Shan Wrote:நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஏவிவிட கல்லு குண்டு எறிஞ்ச.. ...
சறம் புடவை கடத்தல் செய்த. ...
பொலீசை இராணுவத்தை கண்டு ... பயப்பட்டுது </span>
:wink:
Truth 'll prevail
Reply
#70
அப்ப தாத்தா நீங்கள் சொல்லுறபடி பாத்தால் நாங்களெல்லாம் இவ்வளவு நாளும் குருதிசிந்தி சேர்த்த ஆயுதங்களையும் போராட்டத்தையும் எல்லாத்தையும் கைவிட்டுப் போட்டு,... ஈபிடிபியோ அல்லது புளட்டோ தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித்தருமெண்டு சொல்லிக்கொண்டு.....வானத்தை ஆவெண்டு அண்ணாந்‌து பாத்துக்கொண்டு இருக்கவேணும் அப்பிடித்தானே?
Reply
#71
ம்.. ம்.. சேர்த்த ஆயுதத்தாலை தமிழரின்ரை வாழ்க்கையே போராட்டமாப்போச்சுது.. பாதி.. உலகம் பூரா ஓடி ஒளிச்சிருக்கு.. மிச்சம் பாதி.. சிங்களப்பகுதியிலை தஞ்சமடைஞ்சிருக்கு.. இனவாதி அவங்களெண்டுறியள்.. அவங்களிட்டைப்போய்த்தான் அடைக்கலம் இருக்கிதுகள்.. யாருக்காக பொராடுறியளோ தெரியேல்லை..
:wink:
Truth 'll prevail
Reply
#72
அப்ப முடிவா என்ன சொல்லுறியள்....போனது போகட்டும்....இனி அதை மாத்தேலாது. இனியெண்டாலும் திருந்தி நடக்கலாமெண்டு பாக்கிறம். உங்கட அறிவுரைய சொல்லுங்கோவன் கேட்டு நடந்‌து பாப்பம்.

ஆரை நம்பிறதெண்டு நீங்கள் சொல்லுறியள்: இலங்கை அரசாங்கம்? இந்திய அரசாங்கம்? டக்ளஸ்? சித்தார்த்தன்? சங்கரி? வேறயார்....கருணா? சிஹல உருமய? மல்வத்த பீடம்? அஸ்கிரிய பீடம்? சோமவன்ச அமரசிங்க? விமல் வீரவன்ச? ரணில் விக்கிரமசிங்க? ஓ ஒருதரை மறந்‌திட்டன்..... கதிர்காமர்?

ஆரை நம்பிறது எண்டு அறிவுரை சொன்னால் சின்னப்பிள்ளையள் எங்களுக்கு வழிகாட்டியா இருக்கும்...... :? :?:
Reply
#73
தாத்தா நம்ப சொன்னாலும் சொல்லுவார் தாத்தாவை மாதிரி rpலரை வாழ வைப்பது என்னவோ அவர்கள் தானே...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#74
ஆயுதத்தை கீழை போடுறதை நம்பினால் எல்லாம் சரியா நடக்குமெண்டு அப்ப தொடக்கம் சொல்லுறன் திரும்ப திரும்ப கேக்குறியள்..
Truth 'll prevail
Reply
#75
சத்தியமாவே? அப்ப 1950 களில, சுதந்திரம் கிடைச்சவுடன எப்பிடி இருந்தமோ அப்பிடியே? சரி சரி....
அப்ப 1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?..... சிங்களவன்ர காலை நக்கி........ "ஐயோடா அடிக்காத" என்டு கெஞ்சுறதே?
அதையும் ஒருக்கா சொன்னியள் எண்டா நல்லது.
Reply
#76
உவங்களிட்டை பேச்சுச் சுதந்திரமில்லாமல் இருக்கிறதைவிட்டு அவங்களோடை பேசி சுதந்திரமாயிருக்கத்தானே போயிருக்கிதுகள்.. கேள்விகேட்டால் சுடுறவனைவிட சிங்களவனுக்கு மத்தியிலை "ஐயோடா அடிக்காத" எண்டு சொல்லி கெஞ்சி இருக்கிறது பரவாயில்லையெண்டு நினைச்சுதுகளாக்கும்.. கொஞ்சநஞ்சமே.. 10 இலட்சமாக்கும்.. கொழும்பிலை மாத்திரம் 5 இலட்சமெண்டால் பாருங்கோவன்..
ThamilMahan Wrote:சத்தியமாவே? அப்ப 1950 களில, சுதந்திரம் கிடைச்சவுடன எப்பிடி இருந்தமோ அப்பிடியே? சரி சரி....
அப்ப 1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?..... சிங்களவன்ர காலை நக்கி........ "ஐயோடா அடிக்காத" என்டு கெஞ்சுறதே?
அதையும் ஒருக்கா சொன்னியள் எண்டா நல்லது.
Truth 'll prevail
Reply
#77
அவன் அடிக்கிறதுக்கு உங்கட பதில் என்னண்டு கேட்டா 10 லச்சம் 5 லச்சம் எண்டு ஏதேதோ குழப்பிறியள்.... நாங்கள் சின்னப்பிள்ளையள் கண்டியளே அப்பு... கொஞ்சம் விவரமா சொன்னாத்தான் விளங்கும். உங்கட இடக்கரடக்கல் குழூஉக்குறி எல்லாம் தெரியாது. ஆனபடியா தயவுசெய்து சுத்திவளைக்காமல் கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கோவன்.....

(கேள்வி மறந்‌து போச்செண்டால்.... இதுதான் கேள்வி: "1956 இல சிங்களவன் அடிச்ச மாதிரி பிறகும் அடிச்சா? தமிழாராச்சி மாநாட்டில சாத்தினமாதிரி சாத்தினா?.....ஆரை நம்பிறது?" )
Reply
#78
56 இல் அகிம்சைப்போராட்டம்தான் நடந்தது.. 74 இலும் கல்லெறிஞ்சு கூட்டவந்து அவங்களுக்கு அடிக்க கூட்டமா திரத்தி அவன் மேலை நோக்கி சுட சனம் ஓட போஸ்ற் உடைஞ்சு தந்திக்கம்பி அறுந்து விடுந்துதான் செத்ததுகளே தவிர அவங்கள் அடிச்சு உங்கை ஒண்டும் நடக்கேல்லை..
உவங்களிட்டை பேச்சுச் சுதந்திரமில்லாமல் இருக்கிறதைவிட்டு அவங்களோடை பேசி சுதந்திரமாயிருக்கத்தானே போயிருக்கிதுகள்.. கேள்விகேட்டால் சுடுறவனைவிட சிங்களவனுக்கு மத்தியிலை "ஐயோடா அடிக்காத" எண்டு சொல்லி கெஞ்சி இருக்கிறது பரவாயில்லையெண்டு சிங்களவனை நம்பித்தான போயிருக்கிதுகள்..

பழைய கதையை விட இப்ப ஆதாரம் இருக்கிற கதை எழுதினால் அதுக்கு சடையல் பதிலாக்கிடக்கு.. 10 இலச்சம் சிங்களவனிட்டை தஞ்சம் கோரியிருக்கு..

உங்களுக்கு சண்டை தேவை .. இன்னும் கொஞ்சம் ஊனமாக்கி அகதியாக்கி பட்டியல்போட்டு கறக்க யுத்தம் தேவையெண்டு சொல்லுங்கோ..
Truth 'll prevail
Reply
#79
இதிலும் பார்க்'க ஓட்டைச்சிரட்டையிலை தண்ணியை குடிச்சு சாகலாம். அது சரி வாழ்க்கையிலை போராடின ஆட்களுக்கு தானே அந்த அர்த்தம் விழங்கும். வாழ்க்கையையே விழங்காத ஜென்மங்களுக்கு ஏதுகள் விழங்காது. போராட்டம் புலம் பெயர்வு அதிலை வந்த வசி வாழ்கை இதை அனுபவித்தபடி இதுவும் உழுதலாம் இன்னமமு;ம எழுதலாம். அனால் திடீரெண்டு 83 இலை விழுந்த அடி போடைக்க எங்கை ஓடுவியள்? ஓடவாவது ஒரு இடம் வேணும். ஆனால மானங்கெட்ட சிலதுகள் தங்கடை மானத்ததை வித்தாலும் விக்குங்கள்., இஞ்சை வந்டது உழுதிற மாதிரி!
Reply
#80
Mathivathanan Wrote:56 இல் அகிம்சைப்போராட்டம்தான் நடந்தது.. 74 இலும் கல்லெறிஞ்சு கூட்டவந்து அவங்களுக்கு அடிக்க கூட்டமா திரத்தி அவன் மேலை நோக்கி சுட சனம் ஓட போஸ்ற் உடைஞ்சு தந்திக்கம்பி அறுந்து விடுந்துதான் செத்ததுகளே தவிர அவங்கள் அடிச்சு உங்கை ஒண்டும் நடக்கேல்லை..
உவங்களிட்டை பேச்சுச் சுதந்திரமில்லாமல் இருக்கிறதைவிட்டு அவங்களோடை பேசி சுதந்திரமாயிருக்கத்தானே போயிருக்கிதுகள்.. கேள்விகேட்டால் சுடுறவனைவிட சிங்களவனுக்கு மத்தியிலை "ஐயோடா அடிக்காத" எண்டு சொல்லி கெஞ்சி இருக்கிறது பரவாயில்லையெண்டு சிங்களவனை நம்பித்தான போயிருக்கிதுகள்..

பழைய கதையை விட இப்ப ஆதாரம் இருக்கிற கதை எழுதினால் அதுக்கு சடையல் பதிலாக்கிடக்கு.. 10 இலச்சம் சிங்களவனிட்டை தஞ்சம் கோரியிருக்கு..

உங்களுக்கு சண்டை தேவை .. இன்னும் கொஞ்சம் ஊனமாக்கி அகதியாக்கி பட்டியல்போட்டு கறக்க யுத்தம் தேவையெண்டு சொல்லுங்கோ..

தந்திக்கம்பம் விழுந்தா ஆக்கள் இறந்தவை...நாங்கள் வேற மாதிரியெல்லே அறிஞ்சிருக்கிறம்... நச்சிமார் கோவில் வரை கலைத்துக் கலைத்துச் சுட்டதாக அக்காலத்தில் பொலிஸ் சேவையில் இருந்த உங்கள மாதிரி ஒரு தாத்தா சொல்லித்தந்தாரே...நீங்க வேற மாதிரிச் சொல்லுறியள்....! அப்ப நீங்கள் துரையப்பாவோட கூட்டே... சந்திரிக்காவின்ர அம்மாவுக்கு ஆலவட்டம் பிடிச்சனியளே...அப்ப சரி...வாலாட்டி விசுவாசம் காட்டத்தான் வேணும்..நல்லாக் காட்டுங்கோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)