Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
குருவியண்ணை உது எப்பிடி இருக்கு என்றால்..... மாற்றுக் கருத்துக்கள் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைக் கொண்டு செல்லப்படுகிறது......
"நீங்கள் செய்யுங்கோ உது ஆபத்திலதான் முடியும்" என்று சொல்கிறீர்கள்....பலனில்லை!

உண்மைகளை எடுத்துரைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் இல்லையேல் இக்கருத்துக்கள் நிலைபெற்று சமுதாய சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்

பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது உதாரணமாக ஒரு ஆண் தன் சுயநலவாதங்களுக்கும் ஆசைகளுக்கும் மதிப்புக் கிடைக்காதவிடத்து பெண்கள்மீது தன் வலிமைகொண்டு பிரயோகிக்கும் வன்முறை! இது தவிர்க்கப்பட வேண்டும்

சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும்
எம் பெண்களின் இன்றைய பெண்ணிலை வாதம் தம்மையும் தம் கலாசாரச் சூழல்பற்றிய சுயசிந்தனையின்றி மேற்கத்தேய பின்னனியுடனேயே முன்வைக்கப்படுகிறது. இது ஒருபோதும் ஏற்கப்படமாட்டாது! தம்நிலை உணர்ந்து எம்மவருக்கேற்ற பெண்ணிலை வாதங்கள் மட்டுமே வரவேற்கத்தக்கன. ஆரோக்கியமற்ற சிந்தனைகளுடன் கலாசார வரம்பை மீறும் வகையில் வைக்கப்படும் வாதங்கள் கண்டிக்கத்தக்கன.
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும்
.
சமுதாயத்தின் பலி ஆடுகள் பெண்கள்.
கணணிப்பித்தன் அப்படித்தானே உங்கள் கருத்து ?
Reply
பலியாடுகள்
நல்ல அருமையான வரிகள்
[b] ?
Reply
எங்கும் பலி இடப்படுவது கடாக்கள் தான் ஆடென்றால் என்ன மாடென்றால் என்ன கோழி என்றால் என்ன...மனிதனிலும் தான்.... ஆனால் உண்மைகள் மறைக்கப்படுவது மனிதனில் மட்டும் தான்...ஏன்....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal] எங்கும் பலி இடப்படுவது கடாக்கள் தான் ஆடென்றால் என்ன மாடென்றால் என்ன கோழி என்றால் என்ன...மனிதனிலும் தான்.... ஆனால் உண்மைகள் மறைக்கப்படுவது மனிதனில் மட்டும் தான்...ஏன்....?

மனிதனில் மாறிவிட்டது குருவிகளே.

மாற்றிவிட்டார்கள் இந்த ஆண்வர்க்கம்.

தங்களுக்கு நல்லது வேண்டி கடவுளாருக்கு விலங்குகள் பலி.
சமுதாய நலனென்று சொல்லி இங்கு பெண்கள் பலி.

இரண்டுமே மூடத்தனத்தின் உச்சக் கட்டம்.
Reply
கடவுளை ஏன் இழுக்கிறீர்கள் தினமும் உணவுக்காக எத்தனை சேவல்கள் அறுக்கப்படுகின்றன..ஆட்டுக்கடாக்கள்...காளை மாடுகள்...இப்படி தினமும் கொன்று குவிக்கின்றீர்கள்...இயற்கையாக விட்டிருந்தால் அதிகம் பெண் பிராணிகள் தான் இரை கொள்ளப்பட்டிருக்கும்...காரணம்...அவற்றிற்கு ஆணைவிட எதிரிகளிடமிருந்து சயோசிதமாக தப்பும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு....!


மனிதனிலும் அப்படித்தான் திருமணம் என்று கால் விலங்கிட்டு கட்டிவைத்து அடிமைகளாக நடத்துகின்றனர் ஆண்களை....பல ஆண்கள் தின்னவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழிக்கின்றனர்...என்ன சமுதாயக் கட்டுக் கோப்புகளைப் பாதுக்கவென்றுதான்....பெண்கள் பலியிடப்பட்டதாகத் தெரியவில்லை...வீட்டிலிருந்து நேரா நேரத்துக்கு கொட்டுதல்.... வேலை என்று போனால் ஜொள்ளர்களுடன் ஜொள்ளுவிடுதல்.....அப்பப்ப தான் பெண் என்று காட்டி பலவீனப் பிசாசுகளிடம் பலன் பெறுதல்.. ..இன்று பல துறைகளிலும் அநேகம் பெண்கள் திறமைகளுக்கு அப்பால் முன்னிடம் வகிக்கக் காரணம் ஆண்களில் இருக்கும் விதிவிலக்கான பலவீனப் பிசாசுகள்....அதற்காக திறமை மிகு பெண்கள் இல்லை என்றும் அல்ல ஆனால் குறைவு....பலமான ஆண்கள் பலரும் இல்லை என்பதும் இல்லை....அவர்கள் தான் அதிகம்....!

எனவே பெண்கள் தான் ஆண்களைக் தினமும் பலியிட்டு தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர் ...அற்ப சொற்பங்களுக்காக அறியாப் பேதை ஆண்களும் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்...ஆக மிஞ்சிப்போய் தங்கள் மீது தவறான பார்வை விழுகிறது என்று கண்டு கொண்டால்.... பாலியல் வன்முறை பலாத்காரம்..இம்சை என்று சொல்லி பெண்விடுதலை கோஷம் போட்டு தப்பிவிடுவார்கள்..அதுவரை கொடுப்பதெல்லாம் கொடுத்து வாங்குவதெல்லாம் வாங்கிக் கொண்டு நல்ல வியாபாரமே நடத்துவர் பெண்கள்...இறுதியில் பெண்களின் வஞ்சக வலையில் சிக்கி பலியான கடாக்களால் ஒட்டு மொத்த ஆண்களும் பலியாகிக் கிடக்க வேண்டியதுதான்...பெண்களோ நல்ல முகமூடிகளை அணிந்து கொண்டு கற்புக்கரசிகளாக பவனிவந்து பலவீனம் கண்டு வலை வீச்சுக்கள் தொடர்வர்....இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடக்கிறது.....பல மன்னர்களின் சாம்பிராட்சியங்களின் வீழ்ச்சியில்லிருந்து இன்று எயிட்ஸ் வரைக்கும் வியாபித்து நிற்கிறது...இதற்கு மேலும் ஆண்கள் பலியாகத்தான் வேண்டுமா...சிந்தியுங்கள் ஆண்களே....!
பெண்ணென்று இரங்குதல் வேண்டாம் ...பெண்ணென்றாலே ...பத்தடி விலகி நிற்கும் காலமிது.....துட்டரைக் கண்டால் தூர விலகுவதுதான் எமக்குப் பெருமை...! பாதுகாப்பு...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mullai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]
சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும்
.
சமுதாயத்தின் பலி ஆடுகள் பெண்கள்.
கணணிப்பித்தன் அப்படித்தானே உங்கள் கருத்து ?
சமுதாயத்தில் ஆணாதிக்கம் இல்லையென்றால் அடங்கா ஆடுகள்தான் பெண்கள்தான். அதைத்தான் கூற வருகிறேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
அடங்காத ஆடுகள் பெண்களென்றால் அடங்காத ஆண்களுக்கும் ஒரு உவமானம் இருக்கும்தானே.
அதையும் சொல்லுங்கள் கணணி

-
Reply
ஆண் வலிமையானவன் அவனை அடங்காப்புலி அல்லது அடங்காச்சிங்கம் என்று கூறலாம்.

சமுதாயத்தில் தீயதை அழித்து நல்லவை வளர்க்க சட்டங்களும் விதிமுறைகளும் ஆண்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன! பெண்ணை அடக்க ஒரு ஆண் போதும் (இக்காலத்தில் அது சந்தேகம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) ஆனால் ஒரு ஆணை அடக்க இன்னொரு ஆணால் மட்டும் முடியாது! இதனால்தான் சமுதாயம் எனும் கூட்டுக்குடும்பம் ஒன்றாக இயற்றிய சட்டங்களும் விதிமுறைகளும் ஆணை அடக்குவதற்கே உருவாக்கப்பட்டன.

இப்பொழுது பேசப்படும் பெண் விடுதலை இந்தச் சட்டதிட்டங்களை சாதகமாக பயன்படுத்தி ஆணைச் சுரண்டும் ஒரு செயலாக கொண்டுசெல்லப் படுகிறது!

குருவியண்ணை கூறியதுபோல் ஆணின் பலமும் பலவீனமும் அவனது பாலியல் நடைமுறைதான்! விரைவான மூளைச்செயற்பாடும் திறனுள்ள பார்வைத்துாண்டலுமே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைகிறது!
அதைப்பற்றி....எழுதலாம்...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
எழுதலாம் எழுதலாம் என்று சொல்லாமல் எழுதுங்கள் . அலையும், முல்லையும் அதற்கும் பதில் வைத்திருப்பார்கள் .ஆண்களுக்கு பலமும் பலவீனமும் உண்டென நீங்கள் சொல்வது போல.பெண்களுக்கும் பலமும் பலவீனமும் உண்டு. அதுபற்றி அவர்களும் சொல்லாமலா விடுவார்கள்..அவர்கள் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்ல நீங்கள் சொல்லவேண்டியதை அவர்கள் சொல்வார்களோ? சொல்லுங்கள் உள்வாங்க பலர் ஆவலுடன் காத்திருப்பர்..
Reply
பெண்களிற்கு பலத்தைவிட பலவீனங்கள்தான் அதிகம் இருக்கின்றன
பலவீனங்களால் பல சரித்திரங்களே உருவாகியிருக்கின்றன
இராமாயணம் பாரதம் எல்லாம் பலவீனங்களால்வந்தவவைதானே
பலத்தாலும் உருவாகியுள்ளனதான். இல்லையென்று சொல்லமுடியாது
[b] ?
Reply
எழுதலாம்.. எழுதுவதற்கு முதல்.. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என போட்டு எழுதுங்கள்.. :mrgreen:
.
Reply
kuruvikal Wrote:கடவுளை ஏன் இழுக்கிறீர்கள் தினமும் உணவுக்காக எத்தனை சேவல்கள் அறுக்கப்படுகின்றன..ஆட்டுக்கடாக்கள்...காளை மாடுகள்...இப்படி தினமும் கொன்று குவிக்கின்றீர்கள்...
குருவிகளா பெண்ணினத்தால் பலன்கள் அதிகமென்று தெரியாதா? சேவல் முட்டையிடுமா? காளை பால் தருமா?
ஆக வீட்டுப்பிராணிகளைப் பொறுத்தவரை எதில் பலனுண்டோ அதைத்தான் வளர்ப்பார்கள்.
பண்ணைக்கு ஒரு காளையும,; மந்தைக்கு ஒரு கிடாயும், கூட்டுக்கு ஒரு சேவலும் போதும். மிச்சத்தை விட்டால் சும்மா கூவிக்கொண்டு திரியும் பிடிச்சுக் கறி ஆக்கத்தானிருக்கு.
Quote:இயற்கையாக விட்டிருந்தால் அதிகம் பெண் பிராணிகள் தான் இரை கொள்ளப்பட்டிருக்கும்...காரணம்...அவற்றிற்கு ஆணைவிட எதிரிகளிடமிருந்து சயோசிதமாக தப்பும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு....! ...
பெண்பிராணிகளுக்குத் தங்களைப் பாதுகாக்கத் தெரியும். ஏனென்றால் பெண் இனத்துக்கு முன்ஜாக்கிரதை அதிகம்.
ஆண்பிராணி, தன்னைவிட்டால் ஆருமில்லையென்ற மதப்பிலே வருகின்ற ஆபத்தைக்கூட கருத்தில் கொள்ளாமல் போய் பலியாவதுதானே உண்மை.
Quote:பெண்களின் வஞ்சக வலையில் சிக்கி பலியான கடாக்களால் ஒட்டு மொத்த ஆண்களும் பலியாகிக் கிடக்க வேண்டியதுதான்...பெண்களோ நல்ல முகமூடிகளை அணிந்து கொண்டு கற்புக்கரசிகளாக பவனிவந்து பலவீனம் கண்டு வலை வீச்சுக்கள் தொடர்வர்.......
ஏன் ஆண்களுக்கு பகுத்தறியத் தெரியாதா? அவ்வளவு மட்டமா?
Quote:இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடக்கிறது.....பல மன்னர்களின் சாம்பிராட்சியங்களின் வீழ்ச்சியில்லிருந்து இன்று எயிட்ஸ் வரைக்கும் வியாபித்து நிற்கிறது...இதற்கு மேலும் ஆண்கள் பலியாகத்தான் வேண்டுமா...சிந்தியுங்கள் ஆண்களே....! ...
தெரிந்தும் தவறா? போகாதீர்கள்
Quote:பெண்ணென்று இரங்குதல் வேண்டாம் ...
குருவி இரங்கவோ, இறங்கவோ வேண்டாம் அடக்காமல் ஆதிக்கத்தைச் செலுத்தாமல் இருங்கள் அது போதும்
Quote: துட்டரைக் கண்டால் தூர விலகுவதுதான் எமக்குப் பெருமை...! பாதுகாப்பு...! ...
சரி
Reply
ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி.....
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
[size=9]வரிகள்- கண்ணதாசன்
Reply
[quote=Mullai]ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி.....
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
[size=24]வரிகள்- கண்ணதாசன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
<img src='http://www.geocities.com/Athens/Delphi/9687/bharathi1.gif' border='0' alt='user posted image'>
பெண் விடுதலைக் கும்மி

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் புூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் - அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் - அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
குட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
வற்புறுத் திப் பெண்ணைக்கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படிக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச்
சாதிபடைக்கவும் செய்திடுவோம்
காத லொருவனைக் கைப் பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.
Reply
[quote=GMathivathanan] வரிகள்- கண்ணதாசன்
பெரிதா எழுதியிருக்கிறீர்கள். அவரென்றால் உங்களுக்குப் பிடிக்குமா?

நீங்கள் எழுதியதை ஒரு தடவை பாருங்கள். பாடலைவிட பாடலாசிரியர்தான் முன்னிற்கின்றார்.

செதுக்கியவனுக்காக சிலையை ரசிக்காமல், சிலையில் உள்ள நுட்பங்களை ரசியுங்கள்.
Reply
சேவல் இல்லாமல் வளமான முட்டை வருமா.? காளாயில்லாமல் கன்று பால் வருமா.....? பூமியில் இயற்கையாக ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்று தான் அநேக விலங்குகளில் பால் தீர்மானிக்கப்படுகிறது....அப்படியிருக்க உங்களை யார் காளைகளையும் சேவல்களையும் கொன்று திண்ணச் சொன்னார்...?!
இயற்கையில் பால் சமத்துவம் சீர்குலைந்து பெண் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த இனத்திலும் வளமான இன விருத்திக்கு உதவாது.....!

ஆண் பிராணிகளுக்கு பலமும் வேகமும் விவேகமும் கூர்மையான அவதானிப்பும் உண்டு பெண் பிராணிகளுக்கு அப்படியல்ல...ஏனெனில் பெண் பிராணிகள் குட்டி சுமத்தல் பராமரித்தல் இப்படி கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதால் ஆண் தான் சமூகத்திற்க்கு தலைமை தாங்கி இனத்தை சமூகத்தை வழி நடத்தப் படைக்கப்பட்டுள்ளான்.... அது இயற்கையின் நியதி...அதை சட்டங்கள் கூச்சல்கள் போடுவதால் மாற்ற முடியாது....அது பாரம்பரியம் மூலம் கடத்தபப்டுகிறது.....மாற்றவிரும்பினால...கடவுளிடம் முறையிடுங்கள்....!

ஆண்களுக்கு பகுத்தறிவு நிறையவே உண்டு பாலியல் செயல் பாடுகள் என்பது இயற்கையான ஒன்று...அதைக் கட்டுப்படுத்தும் பங்குவம் மனிதனிடம் உண்டு...ஆனால் அது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது...உலகில் ஒரு விவேகானந்தர் தான் இருக்கிறார் ஏன் பலர் உருவாகவில்லை...மனவடக்கமும் பாரம்பரிய அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது...பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்...அது ஒன்றும் புத்திசாலித்தனம் பகுத்தறிவின் பெருக்கத்தால் வந்ததல்ல...சிறு புத்தி பெருகியதால் வந்தது..!


இரக்கத்தால் இரந்ததால் வாழ்ந்தவர்கள் பெண்கள்...எனியும் கெளரவமான ஆண் உங்களுக்கு இரங்கவும் மாட்டான் உங்களிடம் இரக்கவும் மாட்டான் இறங்கவும் மாட்டான்... சலுகைகள் பறிக்கப்பட்டு நீங்கள் உங்கள் முழு முயற்சியில் வாழ வகை செய்யப்படவேண்டிய காலம் வந்தாச்சு அப்போ தெரியும் உங்கள் கோஷத்தின் பாதிப்பு...நீங்களே உங்களை அழித்துக் கொள்ள நாங்கள் ரோபோக்களை உருவாக்கி மனித இனத்தை பெருக்கிக் கொள்வோம்...முயற்சிகள் வெற்றி இலக்கைத் தொடும் தறுவாயில் ஒட்டு மொத்த பெண்களையும் அழிக்கும் வகை எங்களுக்குத் தெரியும்...தேவையா....?! நேசக் கரம் நீட்டுகிறோம்.... பற்றி ....உங்கள் நியாயமான ஏற்கனவே மனிதனுக்குள்ள உரிமைகளை சரியாக இனங்கண்டு அதை பாவிக்கக்கற்று அன்பால் கூடி வாழுங்கள் அதுதான் மனிதனுக்கு சிறந்தது...இல்லை தேவையில்லாத கூச்சல் போடுவோம் என்றால் போடுங்கள் எங்களுக்கு பாதிப்பு வராது எம்மை பாதுகாக்கவும் வழி தெரியும்...!



அது மட்டுமல்ல நீங்கள் மேலே காட்டிய பெண் விழிப்புணர்வு
வாதிகள்...அல்லது அதன் காரண கர்த்தாக்கள்..ஒன்றும் பெண்கள் இல்லை...ஆண்கள்..கண்ணதாசன்...மகாகவி பாரதியார்...அவர்கள் தூண்டித்தான் இப்படி பேசவே வழி செய்தது..ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது சமூகத்தில் பாவிக்கதூ கிடந்த நியாயமான பெண்ணுருமைகளின் பாவனையும் சமூகப் பாதுகாப்பும் அபிவிருத்தியும்..ஆனால நடப்பதோ பெண் விடுதலை என்பதும் சமூகச் சீரழிவுகளும் தான்றோன்றித்தனமான செயற் பாடுகளும் ஆணை அடக்குமறை செய்ய முயல்வதும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=Mullai]<img src='http://www.geocities.com/Athens/Delphi/9687/bharathi1.gif' border='0' alt='user posted image'>
பெண் விடுதலைக் கும்மி

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் புூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் - அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் - அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
குட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
வற்புறுத் திப் பெண்ணைக்கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படிக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச்
சாதிபடைக்கவும் செய்திடுவோம்
காத லொருவனைக் கைப் பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அதே பாரதி இன்றிருந்தால் இவ்வாறு பாடியிருப்பான்....
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
ஏட்டைத் தொட்டு தலைக்கனம் பிடித்த
உன் அராஜகத்தில் இன்று பலர் மாய்ந்துகொண்டிருக்கிறார்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
வீட்டைவிட்டோடி நீ செய்த காரியத்தால்
இன்று பலர் தலை குனிந்தார்.
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் - அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!
வீட்டைவிட்டு நீ வெளியே திரிந்து குடும்பம்
சீரழிந்ததை எண்ணி இன்று நீ தலையிலடி
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
கற்புக்கு விலை கேட்கும் உன்னை
இன்று எங்கு வைப்போம்?
காத லொருவனைக் கைப் பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி
இன்று காதலித்தவனை விட்டு அப்பன் விலைபேசியவனை
கட்டி வாழும் உன்னை எண்ணி அழுவேனடி.


எனக்கும் கவிதைக்கும் வெகுதுாரம் இருந்தாலும் சிறு முயற்சி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
[quote=கணணிப்பித்தன்/Kanani] இன்று காதலித்தவனை விட்டு அப்பன் விலைபேசியவனை
கட்டி வாழும் உன்னை எண்ணி அழுவேனடி
அட.. உங்களுடைய பிரச்சினை இதுதானா?

இதற்காகத்தான் பெண்களை வெறுக்கின்றீர்களா?

என்ன ஒருதலைக் காதலா?

சரி விடுங்கள். பெற்றோரைக் கேட்டு எங்கேயாவது
வீட்டிற்குள் அடைந்திருக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)