Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசூல்ராஜா M.B.B.S
#1
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் வித்தியாசமான கலகலப்பான காமெடி படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். கமலுடன் இயக்குனர் சரண், இசையமைப்பாளர் பரத்வாஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்நேகா ஆகியோர் முதன்முதலா இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.


வசூலிக்க முடியாத கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்து கொடுத்து, அதற்காக கமிஷன் வாங்கும் தொழிலைச் செய்யும் முரட்டு ரௌடி கும்பலின் தலைவன் கமல்ஹாசன். ஆனால் அதிலும் ஒரு நியாயம் பார்ப்பவர். அவருடன் பிரபு, கருணாஸ் இருக்கிறார்கள். ஊரில் வசிக்கும் அப்பா நாகேஷ், அம்மா ரோஹினி ஹட்டாங்குடி ஆகியோரிடம் அவர்கள் சந்தோஷத்திற்காக டாக்டர் தொழில் செய்வதாக பொய் சொல்லியிருந்ததால், அவர்கள் வரும்போது, குண்டர்பட்டறை மருத்துவமனையாக அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. மகனை உண்மையில் டாக்டர் என்று நினைத்துவிட்ட நாகேஷ் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி 'டீன்' ஆன தனது பழைய நண்பர் பிரகாஷ்ராஜின் மகள் ஸ்நேகாவை பெண்கேட்க குடும்பத்துடன் செல்கிறார்.


கமல் தனது சிறுவயதுத் தோழி ஸ்நேகாவுக்கு முன்னதாக போன் செய்து உண்மையைச் சொல்லி, அப்பாவின் சந்தோஷத்திற்காக மட்டும் பெண்பார்க்க வரும் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுமாறு கேட்டுக் கொள்கிறார். ஸ்நேகா கமல் விளையாட்டாகக் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார். அதே சமயம் கமல் பற்றிய உண்மை வேலைக்காரி மூலம் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது. ஸ்நேகாவை பொய் சொல்லி அனுப்பிவிட்டு, பெற்றோருடன் வீட்டுக்கு வந்த கமலை அவமானப்படுத்தி விடுகிறார். மகன் டாக்டர் இல்லை என்று தெரிந்த நாகேஷ் மனம் நொறுங்கி ஊர் திரும்புகிறார்.


ரௌடியான கமல் அப்பாவுக்காகவும் பிரகாஷ்ராஜை 'டார்ச்சர்' பண்ணவும் டாக்டர் கிரேஸி மோகனை ப்ளேக்மெயில் செய்து நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக பாஸ் பண்ணி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார். அங்கு அவர் எப்படி 'டீன்' பிரகாஷ்ராஜை டார்ச்சர் பண்ணினார், எப்படி பிரகாஷ்ராஜ் மகள் ஸ்நேகாவின் காதலை பெற்றார் என்பதும் அவரது பிரத்யேக 'கட்டிபிடி வைத்தியம்' எவ்வாறு மாயங்கள் செய்தது என்பதும் மீதிக்கதை.


ரௌடி மருத்துவக்கல்லூரி மாணவனாக இருக்கும் வித்தியாசமான பின்னணியில் கதை இருப்பதால், படத்தில் கலகலப்பான காட்சிகள் அதிகம். அதிலும் 'அமர்க்களம்' படத்தை பழைய சினிமா தியேட்டர் பின்னணியிலும் 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தை சிட்டி பஸ் பின்னணியிலும் எடுத்த இயக்குனர் சரணுக்கு சொல்லவா வேண்டும்? கமல், பிரபு இருவரும் ரௌடியாக இருந்தும் படத்தில் வன்முறையான காட்சிகளோ சண்டைகளோ தினிக்கப்படாதது ஒரு ப்ளஸ் பாயிண்ட். ஆனால் ரகசியாவின் கவர்ச்சியான பெல்லி டான்ஸை 'சீனா தானா' பாடலில் வியாபாரத்திற்காக திணித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.


கமல்ஹாசனின் வயதுக்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அத்துடன் பாத்திரத்திற்கேற்றாற்போல் தோன்றும்படி உடல் தோற்றத்தையும் கொண்டுவந்திருக்கிறார். முரட்டுத் தோற்றத்துடன் படம் முழுக்க அவர் காமெடி செய்தாலும், அவ்வப்போது நம்மை உருகவும் வைத்து விடுகிறார். மகன் டாக்டர் இல்லை என்று தெரியும் போது "உயிரை மட்டும் தனியா உருவிட்டியேடா" என்று உருக்கமாக நாகேஷ் சொல்வதும் கமல் பதைபதைப்பதும் இரு தேர்ந்த நடிகர்களை நமக்கு உணர்த்துகின்றன. 'ஸ்டமக் கேன்சர்' நோயாளி ஜெயசூர்யா ஆறுதல்படுத்தும்போதும், ஜெயசூர்யா வலியுடன் துடித்து இறக்கும்போதும், கமல் நம் உணர்வுகளை பிழிகிறார். 12 வருட கோமா பேஷண்ட்டுக்கும் முதியவர் காக்கா ராதா கிருஷ்ணனுக்கும் அவர் செய்யும் வித்தியாசமான ட்ரீட்மெண்ட்கள் அலாதியானவை.


கமலின் அஸிஸ்டெண்டாக வரும் வாய்ப்பு குறைவா, குறைக்கப்பட்டதா தெரியவில்லை. ஸ்நேகா கொடுத்த வேடத்தை சரியாகச் செய்திருக்கிறார். அவர் பிரகாஷ்ராஜின் மகள் என்பது கடைசி வரை கமலுக்கு தெரியவில்லை என்பது உலகமகா உடான்ஸ். 'சிரிப்பு வைத்தியம்' செய்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் கேரக்டர் வித்தியாசமாக இருந்தாலும், 'சிரிப்பு வைத்தியம்' திரும்ப திரும்ப 'ரிபீட்' ஆவதால் போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. அன்பான அணைப்பை மகன் கமலுக்கு தரும் ரோஹினி ஹட்டாங்குடியின் முகம் பாசத்தை பொழிகிறது. கருணாஸுக்கும் வாய்ப்பில்லை. மாளவிகா மிகச்சிறய ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.


வைரமுத்துவின் பாடலுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். 'கலக்கப் போவது யாரு', 'சீனா தானா' ஹிட் ரகம். 'சீனா தானா' பாடலை கருணாஸின் மனைவி கிரேஸ் பாடியிருக்கிறார். வெளிநாட்டுப் பாடல் காட்சிகளில் ஏ. வெங்கடேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. கிரேஸி மோகனின் வசனம் ஓ.கே.


'வசூல்ராஜா' வசூலித்து விடுவார்.


Thanx: CineSouth

முடிந்தால் ஒரிஜினல் முன்னாபாய் M.B.B.S ஐயும் பாருங்கள் - BBC
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
வசு}ல் றாஜாவை பார்க்க....!

www.tamilstate.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நன்றிங்க நன்றி...! நல்லாத்தான் தேடுறீங்க போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இப்படி தான் அங்கினை ஒன்டிரன்டை பாக்கிறானே...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
சரி சரி ஏதோ நல்லதாப் பாத்துப் பயன்பெற்றால் சரி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நல்ல விமர்சனம், நல்ல சுட்டி, படம் பார்க்க, நன்றி நண்பர்களே!.
<b>
</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)