Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய இராணுவம் செய்தது .....
#1
<span style='font-size:21pt;line-height:100%'>ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - ஒல்காரின் அறிவிப்பு (http://www.selvakumaran.de/padam/OlK-Notice.pdf) என்ற செய்தியை யாழ் இணையத்திலும் தனது குடிலிலும் சந்திரவதனா இணைத்திருந்தார். அதனை படித்த இந்திய தமிழர் ஒருவர் (வந்தியத்தேவன்) தனது எண்ணங்களை குடிலில் எழுத தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவற்றை இங்கே இணைக்கின்றேன் படித்துவிட்டு கருத்துக்களை உங்கள் கருத்துக்களை அவற்றின் பின்னூட்டங்களிலோ அல்லது இங்கேயோ எழுதுங்கள்.</span>

எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

<span style='font-size:21pt;line-height:100%'>அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை \"டா\"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன். </span>

http://vanthiyathevan.blogspot.com/2004/07...og-post_25.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
இந்த கருத்துக்குரிய பின்னூட்டங்கள் ....

Do you seriously think that India went to Sri lanka with the sole purpose of helping Tamils? You are either naive or in refusal to to accept the truth. Even Arulmozhi varman (Raja Raja Chozhan I) went to ilangkai with the notion of domination

"GEOPOLITICS" is the key word.

Did you live in Sri lanka when Indian Army was there. If not, as a person who lived there I have more knowledge and experience than you to totally refute, "அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்?" Stop kidding yourself.
-/peyarili. | Email | 08.10.04 - 1:32 pm | #

--------------------------------------------------------------------------------

vanthiyathevan,

i know a lot of common innocent ppl. men, women and children who suffered at the hands of IPKF. so callled 'peace keeping force'.

I am glad for once that ppl r coming forward to share their sorrows.

Even the U.S. is investigating the atrocities committed by its soldiers in iraq. do, u think such a thing will happen in india? will india ever investigate IPKF?

i could write more. but one has to have an open mind and be recptive. something seriously lacking in thamiz iNaiyam.
Mathy Kandasamy | Homepage | 08.10.04 - 2:53 pm | #

--------------------------------------------------------------------------------

வந்தியத்தேவன்

உங்கள் ஆதங்கமும், உங்கள் பதிவும், உங்களது பார்வையில் உங்களுக்குச் சரியாகப் படலாம்.
ஆனாலும் நாங்கள். பாதிக்கப் பட்டோம் மனசெரிந்தோம்.. வயிறெரிந்தோம்... போருக்கும் ஒரு தர்மம் உண்டு.
இந்திய இராணுவம் செய்ததில் போர் தர்மம் இருக்கவில்லை. அதர்மம்தான் இருந்தது.
மற்றவர்கள் செய்தார்களா இல்iலா என்பதைத் தனியாகப் பார்ப்போம்.
இந்திய இராணுவம் செய்தது. எங்களை உயிர்கள
Chandravathanaa | Email | Homepage | 08.12.04 - 1:30 am | #

--------------------------------------------------------------------------------

மற்றவர்கள் செய்தார்களா இல்லையா என்பதைத் தனியாகப் பார்ப்போம்.
இந்திய இராணுவம் செய்தது. எங்களை உயிர்களையே துடிக்க வைத்தது.மன்னிக்கலாம் விடலாம். அது அவரவர் மனங்களைப் பொறுத்தது.
மறப்பது முடியுமா..? தெரியவில்லை.
Chandravathanaa | Email | Homepage | 08.12.04 - 1:33 am | #

--------------------------------------------------------------------------------

வணக்கம் வந்தியத்தேவன்,

//காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.//

நீங்கள் கவிதையை விளங்கிக்கொள்ளாமல், குமுறுகிறீர்களோ என்று தோன்றுகிறது. கவிதையின் நோக்கம் "ஆழமான வடுவின்" வெளிப்பாடே ஒழிய, மேலும் காயத்தில் குத்துவதல்ல. "மறக்கவும் முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே ஒழிய, "மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் மு
ilaignan | Email | Homepage | 08.12.04 - 5:06 am | #

--------------------------------------------------------------------------------

முடியாது" என்ற ஒரு முடிவைச் சொல்லவில்லை. மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் முயற்சிக்கிறோம், விரும்புகிறோம் ஆனால் ஏனோ பாதிப்பின் தாக்கத்தில் இருந்து எம்மால் விடுபட முடியவில்லை. இதுதான் உண்மை. இதுதான் கவிதையின் நிலைப்பாடு!

மற்றைய உங்கள் கருத்துகளிற்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. காரணம் : //நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு.//
ilaignan | Email | Homepage | 08.12.04 - 5:07 am | #
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இதன் தொடர்ச்சியாக சுந்தரவடிவேலின் பதிவு ....

நம்பற்குரியர் அவ்வீரர்?!

அப்போது நான் கல்லூரியில் இளங்கலைப் படிப்பிலிருந்தேன். தேசிய மாணவர் படை முகாமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்திய இராணுவத்திலிருக்கும் வீரர்களால் பல்விதமான மைதானப் பயிற்சிகளோடு வகுப்பறைகளிலும் பாடங்கள் நடத்தப்படும்.

இந்த வகுப்புக்கு ஒரு நாள் ஒரு அவில்தார் வந்தார். கேரளத்துக்காரர். இவர் அன்றைக்குச் சொல்லித்தந்திருக்க வேண்டியது என்னவென்று எனக்கு நினைப்பில்லை. ஆனால் அப்போதுதான் இலங்கையிலிருந்து திரும்பி வந்திருந்தாராம். இந்திய அமைதிப் படையிலே இருந்தாராம். இவர், நம் இராணுவம் எதற்காகப் போனது என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையைச் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ எங்களுக்குச் சொல்லவில்லை. மாறாக அவர் சொன்னதெல்லாம் தான் எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றார் என்பதைக் கதையாகச் சொன்னார்.

இப்போது அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததற்காக வெட்கப் படுகிறேன். ஆனால் அன்றைக்கு எனக்கோ என்னையொத்த மாணவர் படையினருக்கோ அது ஒரு அவில்தாரின் வெற்றி பெற்ற காமக் கதை. வன்புணர்ச்சியாக இல்லாத போதும் இது ஒரு கீழ்த்தரமான பாலியல் ஒடுக்குமுறை. இது மிக மிக நாகரீகமான ஒரு உதாரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். இவை இரண்டும் ஈழத்தில் ஒரே ஒரு இடத்தில், வல்வெட்டித்துறையில், இரண்டு நாட்களில் இந்தியப் படையினரால் நிகழ்த்தப்பட்ட வன் செயல்கள். இது குஜராத் மதவெறிக் குண்டர்களின் கலவரத்திலிருந்தோ அல்லது சிங்களக் காடையரின் இனவெறியிலிருந்தோ சற்றும் குறையாமலிருப்பதை உணர்வீர்கள். இதை ஒரு இராணுவம் நிகழ்த்தியிருப்பது அசிங்கம். அதைவிட அசிங்கம் இது நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பது. ஊரடங்கை அமல்படுத்திவிட்டு 63 பொதுமக்களை வெட்டியும் எரித்தும் படுக்க வைத்து முதுகிலே சுட்டும், பாலியல் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டும், நூலகங்களைக் கொளுத்தியும் ஒரு இராணுவம் "அமைதிகாக்கும் பணி" புரிந்ததாம். இது ஒரே ஒரு உதாரணந்தான். இந்தியப் படையின் நடவடிக்கைகளை ஊர் ஊராக ஒவ்வொருவரும் பதிய ஆரம்பித்தார்களென்றால், வங்காலைக் கிராமத்தில் சன்னல், கதவிடுக்குகள் வழியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது போகிற போக்கில் தெருக்காரக் குடியானவனைக் குத்திக் குடலையுருவிப் போட்டுவிட்டுப் போன வீரக் கதைகளும் இன்னும் எத்தனையோவெல்லாமோ வந்து சேரும்.

இத்தகைய நிகழ்வுகளை, பாதிப்புகளிலிருந்து எழுந்த கதைகளை, கட்டுரைகளை இப்போது சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான தகவலையும் கீழே தந்திருக்கிறேன். இலங்கை இனப் போராட்டம் என்றவுடனேயே மாலை போட்டு ராஜீவ்காந்தி போட்டோவைத் தூக்கிக் கொண்டு வந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வாழைப்பழத்தின் மேல் குத்தி வைத்து விட்டுப் போராட்டத்தை இழிவு படுத்தும் நம் போக்கு மாற வேண்டும். நமது இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிகழ்த்திய அசிங்கங்கள் அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

http://sundaravadivel.blogspot.com/2004/08...og-post_08.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
இதற்கு மூக்கு சுந்தரின் பதில் .....

நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்
===============================================

இனிய சுந்தர்,

தனியே எழுதாமல், அப்படி என்ன பொதுக்கடிதம் வேண்டி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கும், உங்களையொத்த எண்ணங்கள் கொண்ட எமது சக ஈழத்து சகோதரர்களுக்கும் என் நிலையை சொல்ல வேணுமென்று தோன்றியதால் எழுதுகிறேன்.

வல்வை படுகொலையைப் பற்றி தம்பி கரிகாலன், மற்றும் ஈழநாதன் ஆகியோரது பதிவுகளுக்கு தொடர்ச்சியாக உங்கள் பதிவையும் கண்டேன். ஈழத்தமிழர்களின் சோகமும், சிங்களக் காடையர்கள் அவர்கள் மீது நடத்தி வரும் அரக்கத்தனமான ஒடுக்குமுறையும், அதன் விளைவாக உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கை மக்களும் எங்கள் பரிவுக்கும், அனுதாபத்துக்கும் உரியவர்கள். அதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் எது நடந்தாலும், இந்தியா எது செய்தாலும், அதில் குற்றங்கண்டுபிடித்து, இந்தியாவை இகழவும் தூற்றவும் செய்யும் உங்கள் அனைவரின் செயல்களும், எழுத்துக்களும் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது.

உங்கள் அனைவரைப் போல எனக்கு இந்திய இலங்கை ஒப்பந்தமும், திகதிகளும், புள்ளி விவரங்களும் விரல் நுனியில் தெரியாது. ஆயினும், இலங்கை தமிழ்ப் போராளிகளுக்காக இந்திரா தொடங்கி, எம்.ஜி.ஆர் அளித்து வந்த ஆதரவும், ஈழத் தமிழினத்துக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களும் என் மனதில் நிழலாடுகிறது. இவை அத்த்னையும் மாறியதற்கு முக்கிய காரணம் ராஜீவ் காந்தியின் படுகொலை. ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்துக்கு பலியாகி, புலிகளையும் பகைத்துக் கொண்டு, கடைசியில் சொந்த மண்ணிலேயே விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் அவர் என்பதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொது அபிப்ராயம்.

அவர் எதற்காக கொல்லப்பட்டார்..புலிகளிடம் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்துகொண்டாரா போன்ற விவாதங்கள் எல்லாம் நெடுந்தூரம். ஆனால் சித்தாங்களின் அடிப்படையில் மாறுபாடு கொண்டவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் புலிகளின் வேலை என்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு தீர்வே இல்லை. இப்படி இருக்கையில், இத்தனை அணுகுமுறைக் குறைபாடுகளையும், வன்முறையும், ரத்த வெறியையும் கொண்டுள்ள ஒரு கூட்டத்திடம் பரிவும், அனுசரணையும் காட்டும் நீங்கள், ஒரு அரசு கொடுத்த வேலையை செய்வதற்காக, நண்பன் யார்..பகைவன் யார்..இவர்கள் என்ன தந்திரம் செய்கிறார்கள் எனு எதுவும் தெரியாத சூழ்நிலையில், இலங்கை வந்து இறங்கிய இந்தியப் படையை, அதன் பொறுப்புகளை, நாம் பிறந்த நாடு இந்தியா என்பதையும் மறந்து புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

அபத்தத்தின் உச்சமாக, ஒரு அவில்தாரின், தனி மனித பாலியல் வாழ்வு சார்ந்த விடயத்தை, இந்திய அமைதிப் படையின் கூட்டுப் பொறுப்பில் ஏற்றி, ஒரு மூன்றாம் தர ஏடு செய்யும் விஷயத்தை, விஷமத்தனமாக செய்து இருக்கிறீர்கள். ஒரு நல்ல எழுத்தாளராகக் கூட இல்லை, ஒரு ந்ல்ல மனிதனாக இரண்டு பக்கமும் பாராமல், யோசியாமல், இப்படி ஒரு தலைப்பட்சமாக கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியா உங்கள் பிரச்சினையில் நுழைந்தாலும் குற்றம் , நுழையாமல் இருந்தாலும் குற்றம் என்ற உங்கள் நிலையினை நீங்கள் மறுபரிசீலனை செய்கிறவரை, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுகே தெரியாதவரை, இந்த சோகம் தொடரத்தான் போகிறது. இன்னமும் இம்மாதிரியான சோகங்களும், வேதனைகளும் தொடரக்கூடாதெனில், வன்முறைக்கெதிராக உயர்த்திப் பிடிக்கும் உங்கள் கொடியினை, உங்கள் பிரியத்துக்குரிய புலிகளின் பக்கமும் திருப்புங்களேன். வன்முறை விடுத்து அவர்களை சனநாயகப் பாதையில் திரும்பச் செய்ய உமக்கும், உம்மையொத்த எமது சக ஈழ சோதரர்களுக்கும் தெம்பிருக்கிறதா..??

இல்லையெனில், இதோடு பிறர் வன்முறையை மட்டும் கண்டிக்கும் இரட்டை வேட நிலையை விட்டு விடுங்கள்.


என்றென்றும் அன்புடன்

சுந்தரராஜன்

http://mynose.blogspot.com/2004/08/blog-post_09.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
கரிகாலனின் பதிவு

[color=cyan]<span style='font-size:25pt;line-height:100%'>இந்திய மைலாய் படுகொலை!

<img src='http://img.photobucket.com/albums/v296/kukan/IPKF4.jpg' border='0' alt='user posted image'>

தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில் தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.



இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன
மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று
பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.




63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.
எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்
அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள்
,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!


லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை


.editorial The sunday telegraph 13.08.89


over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.


such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment


My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி\"லைவ்\" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு
காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ




வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து
வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு
சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில் அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.</span>

http://karikaalan.blogspot.com/2004/08/blo...og-post_05.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
ஈழநாதனின் பதிவு ....

இந்தியாவுக்குக்; களங்கம் விளைவித்த வல்வைப் படுகொலைகள்....

<span style='font-size:21pt;line-height:100%'>இன்றைய உதயன் பத்திரிகையில் வெளியான செய்தி

'மிஸ்டர் மேனன்!... ஒரு நகரத்தை இவ்வளவு மோசமாகத் தாக்கி, வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக் கிறீர்... உம்முடைய செயல் எங்களுடைய நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது... இங்கு இருக்கின்ற பிரஜைகள் குழுவிடம் முதலில் நீர்மன்னிப்புக் கேட்க வேண்டும்....||


ஊறணி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நின்ற பிரிகேடியர் சமேராம், மிகவும் கடுப்பாக நின்றமை கப்டன் மேனனை நிலைகுலையச்செய்துவிட்டது.
1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்திய சாலையில் வெறியாட்டம் ஆடிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய கப்டன் கோபாலகிரு~;ணமேனன் அன்று தனது உயர் அதிகாரி பிரிகேடியர் சமேராம் முன்னால் தலைகுனிந்து கூனிக்குறுகி நின்ற போதே என்றோ ஒருநாள் இந்த வல்வெட்டித் துறைக் கிராமத்தை அழிக்கவேண்டும்|| என்று சபதம் எடுத்திருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித் துறைப்படுகொலைகள் இடம்பெற்று முடிந்தன.
1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர்.
ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச்செயற்பட்டான். அவனுடன் ஊரிக் காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர்சன் சிங் தலைமையில் ஏ வடிவ வியூகம் அமைத்து விடுதலைப் புலிப்போராளி களைக்குறிவைத்து நகர்ந்தபோதே இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பமானது.
வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்டகனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச்சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது.
அந்தக் கனவான் ஒப்பந்தத்தை மீறும் வகையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் செயற்பட்ட சீக்கியப்படைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அன்று அவர்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அன்று ஒன்பது சீக்கியச்சிப்பாய்கள் கொல்லப்பட்டது இந்திய ஆக்கிரமிப்பாளருக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும்.
அதன் விளைவு!...
வெறிகொண்ட இந்தியப்படைகள் ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகரத்தையும் அயல் ஊர்களையும் சுற்றிவளைத்து ஊரடங்குச்சட்டத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு ஆடிய வெறியாட்டத்தில் நேர்ந்த ஷஷவல்வெட்டித்துறைப் படுகொலைகள்|| வரலாற்றில் இந்தியருக்குக் கறைபடிந்த செய்தியாக இன்றும் நிலைத்துவிட்டது.
அமெரிக்க இராணுவத்தினரின் வெறியாட் டத்திற்கு ஆளாகிய வியட்நாமின் மைலாய் படுகொலை போல் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இந்தியாவின் ஷஷஜாலியன் வாலா பாக்|| படுகொலை போன்று இந்தியாவுக்கு ஒரு வல்வைப் படுகொலை களங்கம் சேர்த்துவிட்ட வரலா றாகிவிட்டது.
ஆம், அந்தப் படுகொலையின் விளைவாக
63 அப்பாவிப் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற பேதமின்றி வெட்டப்பட்டும், சுடப்பட்டும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.
நு}ற்றுக்கதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன.
15 திருமணமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.
50 இற்கும் அதிகமான இளம்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
பல இந்துக்கோயில்கள் சேதமாக்கப்பட்டன.
இவ்வளவும் செய்துமுடித்த இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குக் காரணமாக இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் அந்த ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் எப்படி நிம்மதியாக உறங்கியிருக்கமுடியும்?
அந்த அழியா நினைவுகள் - மறக்கமுடியாத அவலங்களை விதைத்துச்சென்ற கொடூரமான இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் துயரின் விளிம்பில் உழன்றுகொண்டிருக்கும் வல்வை மக்களால் எப்படி மறக்க முடியும்?... எப்படி மன்னிக்கமுடியும்?
அந்தநிலையிலும், இந்தியாவைத் தாய் நாடு என்று ஒரு காலத்தில் நம்பி இந்திய விசுவாசிகளாக இருந்து இந்தியர்களால் முதுகில் குத்தப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களில் ஒருசில ஆயிரமாக இருந்து கண்ணீர் விடுவதைத் தவிர விடுதலை வேள்விக்கு ஆயிரக் கணக்கான உயிர்களை ஆகுதியாக்கிய வல்வெட்டித்துறை மக்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்?
ஆனால், எமது நெஞ்சில் துயரங்களை விதைத்துச்சென்ற அந்தத் துன்பியல் நாள் களை நினைவு கூரும் ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளையும் ஈழத்தில் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்படு வதற்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்த ராஜீவ் காந்தியையும் நிம்மதியான ஒரு நிரந்தரத் தீர்வுக்குத் தடையாக இருக்கும் இந்தியாவையும் எப்படி வல்வெட்டித்துறை மக்களால் மறக்கமுடியும்.</span>

http://kavithai.yarl.net/archives/001564.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
மூக்கு சுந்தருக்கு சுந்தரவடிவேலின் பதில் ...

நண்பர் சுந்தரராஜனுக்கு ....

அன்பு சுந்தரராஜன்,

ஒரு இந்தியனாய் நான் எழுத முற்பட்டதெல்லாம் எப்படி என் நாட்டு இராணுவம் ஒரு அண்டை நாட்டிலே புகுந்து எம் தமிழ் இன மக்களைச் சீரழித்திருக்கிறது என்பதைத்தான். இதை எழுதியதன் மூலம் நான் புலிகளின் வன்முறைக் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக நீங்கள் கருதுவது ஒரு நீட்சியே. என் பதிவிலிருக்கும் ஒரு கீழ்நிலை அவில்தார் ஒரு சீரழிவைச் செய்தாரென்றால் அவருக்குச் சொல்லித் தரப்பட்டது என்ன, சொல்லித் தரப்படாதது என்ன, இதற்கு இராணுவம் தன்னைச் சீர் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கையும், இலங்கையிலே நிகழ்ந்தவை அனைத்துலகப் பொதுமக்களின் பரந்த பார்வைக்கு வர வேண்டும் என்பதையும் அடித்தளமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.

அபு க்ரெய்பிலே சிறைச்சாலைக்குள் நடக்கும் கொடுமையைக் கண்டு ஐயகோ என்று கதறும் நாம், வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் இராணுவ 'ஒழுக்கத்தைக்' கண்டும் காணாமல் விடுவதா? இதோ இந்து ராம் சொல்கிறார்,"இந்தியா 80களின் தவற்றை இனிச் செய்யாது", புலிகளும்தான் சொல்கிறார்கள் "அது ஒரு பழைய தவறு". எல்லோரும் தவறிழைக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எது சொல்லப் படுகிறது, எப்படிச் சொல்லப் படுகிறது, அதன் பின் விளைவுகள் என்ன என்பதைத்தான் நான் கேட்கிறேன். ராஜீவ் காந்தியின் கொலையைப் பற்றித் தெரிந்த நமக்கு இலங்கையில் நம் படையினரால் நடந்த பாதிப்புகள் தெரியுமா? இதைத்தான் வெளிக் கொணர இருக்கிறார்கள், இதைத்தான் எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் அபிமானிகளெல்லாம் புலிகளின் அபிமானிகள் என்று கூறப்படுவதும், தேசப்பற்றின் காரணமாக இந்திய இராணுவம் எது செய்தாலும் சரி என்று நிற்பதும் சரியில்லை. இப்போது மணிப்பூரிலே நடப்பவற்றைப் பார்த்தால் எந்தவொரு சராசரி மனிதனுக்கும் இந்திய இராணுவத்தின் மேல் அவநம்பிக்கை வரும். இந்திய ஒருமைப்பாட்டின் மீது கேள்வி எழும். கி.பி. 33லிருந்து, காக்கப்பட்ட, ஒரு அழகிய வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த மணிப்பூர் இப்போது சுதந்திர இந்தியாவில் பெறுவது என்ன? சீரழிவு. அங்கே இராணுவத்திற்குக் கேள்வி கேட்பாரின்றி எவ்விடத்தையும் சோதனையிடவும், யாரையும் எங்கேயும் கண்டதும் சுடவும் அனுமதி. விளைவு? தொடங்கிய நாளிலிருந்து மனோரமா தேவி வரை வன்முறைகளும், கொன்றொழிப்புகளும், பாலியல் கொடூரங்களும். இது மாதிரி ஏதும் நடக்கவில்லையென்று நேற்றைய கேபினட் கூட்டத்தில் இராணுவத்தால் சொல்ல முடியவில்லை. ஏன்? நடந்திருக்கிறது, நடத்தியிருக்கிறார்கள், அது கீழிருந்து மேல் வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இது எதனால் என்றால் தீவிரவாதிகள் அங்கே ஏகே 47 ஐத் தூக்கிக் கொண்டு மணிப்பூரி நடனமாடுகிறார்கள், போதைப் பொருள் கடத்துகிறார்கள் என்று தேசாபிமானம் சொல்லும். உண்மை அதிலிருந்து மாறுபட்டது என்று உள்மனதுக்கும், இராணுவத்துக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் தெரியும். தேசிய நீரோட்டத்தில் இந்த விடயங்களெல்லாம் அடித்துக் கொண்டு போகப் படுகின்றன.

இதில் பிறழ்ந்து போயிருப்பது என்ன? மனித உரிமையை மதித்தல். இது இல்லாமையினாலேயே இலங்கையில் அந்த அவில்தார் அப்படி நடந்தார், எண்ணற்ற வீரர்களும் ஆண்மையற்ற செயல்களைச் செய்தனர். இதனைத் தனி மனிதப் பாலியல் வாழ்வு சார்ந்த விடயமாக ஒதுக்க முடியாது. ஒரு போர்க்களத்தில், அமைதியை நிலைநாட்ட வந்த இடத்தில் ஒரு இராணுவ வீரன் பாலியல் ஆட்டம் போட எது காரணம், அதற்குப் பின்னணியிலிருந்த தூண்டுகோல்/கண்டுகொள்ளாமை, இராணுவத்தில் கற்பிக்கப்படும் மனித நேயம், தேசிய மாணவர் படை மாணவர்களுக்குச் சொல்லப்படும் கதைகள் ("நாங்கள்லாம் இராணுவத்துல இப்படியெல்லாம் அனுபவிச்சோம், நீங்களும் இராணுவத்துல சேர்ந்தா இதையெல்லாம் அனுபவிக்கலாம்"னு ஒரு முன் மாதிரியா இருந்த திறம்!), இதையெல்லாம் ஆராய வேண்டும். இதற்கெல்லாம் பரிகாரம் கிடைக்குமாவென்று தெரியாது. ஆனாலும் நடந்ததை உலகறிய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையை, புலிகளின் வன்முறைகளைப் பேசும் நாம், நம் பக்கத்துத் தவறுகளையும் மறுதட்டில் வைத்தே எடை போட வேண்டும். எல்லை என்பதை நாம் உண்மையின் வாசலுக்கு வெகு முன்னரேயே வைத்து விட்டு எல்லையை மீறக் கூடாது என்று கூவக் கூடாது. உண்மைகள் வரட்டும். தேசாபிமானத்தின் குறுக்கீடின்றி எல்லாப் பக்கத்து உண்மைகளும் வரட்டும். அதுதான் வரலாறு, மொத்த முழுப் பார்வை.
மற்றபடிக்குச் சில சொந்தச் சொல்லாடல்கள் நம் நட்பைக் காயப்படுத்தவில்லையென்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்
சுந்தரவடிவேல்

http://sundaravadivel.blogspot.com/2004/08...og-post_10.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
சுந்தரவடிவேலுக்கு வந்தியத்தேவனின் காரசாரமான பதில் ...

பெருமதிப்பிற்குரிய சுந்தர்வடிவேல்,

<span style='font-size:21pt;line-height:100%'>கும்பகோண தீ விபத்திற்கு இயலாமையில் எட்ட நின்று நான் மாரடித்தேன். நீங்கள் பல படி மேலே சென்று கலாம் வரை வலைபதிவாளர்களின் குரலை எடுத்துச் சென்றீர்கள். இறந்துபோன தளிர்களுக்காகவும், இனி இவ்வாறு நடக்கக் கூடாதெனும் உங்களின் மனித நேயம் வாழ்க !!!

அதே மனித நேயம் தங்களது \"நம்மற்குரியர் அவ்வீரர்\" பதிவிலும் காணப்பட்டது. என்ன ஒரே ஒரு வித்தியாசம். வல்வெட்டித்துறையில் வன்முறையில் இறந்து ஈழத்தமிழருக்காக மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. நடந்தது தவறு என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்களின் ஒருவழி அணுகுமுறைதான் பலமாய் இடிக்கிறது.

ண்CC'ல் ஒரு ஹவில்தாரின் \"கதை\" கேட்டு அமைதிப்படையின் நோக்கத்தையே எடை போட்டு விட்டீர்களே? பேஷ்..பேஷ்...கதை கேட்டதற்கு வெட்கப்படுவதாய் பாவமன்னிப்பு வேறு கேட்டு விட்டீர்கள். நாணயத்தின் இருபுறத்தையும் சீர் தூக்கி எழுதவேண்டியது எழுத்தாளனின் சமூகக் கடமை. இணையத்தில் ஈழம் பற்றி பேசவே பல \"தமிழ்நாட்டுத் தமிழர்கள்\" அஞ்சுகின்றார்கள். தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குகின்றார்கள். இதே பாலஸ்தீனம், அமெரிக்கா, ஈராக் என்றால் பத்தி பத்தியாக கதைக்கின்றார்கள். ஏனிந்த இழிநிலை?

மிகுந்த இழப்புகளைச் சந்தித்து, புலம் பெயர்ந்து, எழுதும் ஈழத்தமிழர்களின் பதிவுகளைப் படித்து வருகின்றேன். அவர்களின் கண்ணீரிலிருக்கும் சூடு, பிற தமிழர்களின் பதிவில் நீலியாக நீர்த்துத்தான் தெரிகிறது.

பல ஈழ இணையங்கள் புலிகள் வீரமாய் போரிட்டு இந்திய சிப்பாய்களைக் கொன்றதாக தெரிவிக்கின்றது. ஆறு வயது சிறுவனிலிருந்து, பெண்கள் வரை யாரையும் விடாத தற்கொலைப் புலிகள் மத்தியில் அமைதி காக்க வந்து, அவமானச் சின்னங்களுடன் திரும்பிய இந்திய இராணுவத்தின் கதையை \"எல்லை தாண்டி எரிந்த சிறகுகளில்\" எழுதினேன்.

யாராவது நூல் பிடித்து \"அறிப்பூர்வமாகவோ\", \"உணர்வுப்பூர்வமாகவோ\" எழுதுவார்களா என ஏங்கிய காலமுண்டு. மூக்கு சுந்தரின் பதிவு மிகவும் துணிகரமான ஒன்று. அவரெழுப்பிய பல நியாயமான கேள்விகட்கு பதில் காணும் தருணம் இது.

ஆமாம். ஆளாளுக்கு இந்திய இராணுவத்தை இழுக்காக்கிறார்களே? ஏன்? ஆக்கிரமிப்பு இராணுவமாம்...அமெரிக்கா குவைத்தில் கொண்ட காதலா இது? தேயிலைக்கும், காபிக்கொட்டைக்குமா இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது? யாழ்ப்பாணத்தை அடைய ஒரு மாதம் ஆனதாம்...ஐயா...ஆக்கிரமிப்பு செய்ய ஆசைப்பட்டிருந்தால் உண்மையிலேயே எவ்வளவு நாளாயிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.

வானவெளியிலிருந்து உணவுப்பொட்டலங்கள் போட்டவன்தானே ஈPKF அனுப்பிய ராஜீவ் காந்தி? ஜெயவர்த்தனேவின் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து, ஈPKF'க்காக தினமும் 2 கோடிக்கு குடிக்க/குண்டி கழுவ என்று அனைத்து ரேஷனும் பெங்களூரிலிருந்து இலங்கை எடுத்துப் போனோமே? அங்கே 1200 சிப்பாய்கள் இழந்தோமே? சுந்தரவடிவேல் இறந்தவர்கள் பெயர் தெரியுமா உமக்கு? நானும் இணையத்தில் தேடித் தேடி அலுத்து விட்டேன். 93 தளிர்களுக்கு ஒப்பாரி வைத்த உங்கள் உள்ளம் இப்போது கல்லாகி விட்டதா?

வல்வெட்டித்துறை வன்முறைக்கு ராஜீவின் சாவுக்கடியில் அசிங்கம் கண்டுபிடித்த அவலம் உங்களைப் போல் அதிமேதாவிகளாலேயே முடியும். இப்படி வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ராஜீவ் என்கின்ற ஆரியன், ஈழத் திராவிட தமிழர்களை அழிக்க நினைத்தான் எண்டு நினைப்போம். அது பிடிக்கவில்லையெனில் ராஜீவுக்கு பார்சிய ரத்தத்தை விட பார்ப்பனீய ரத்தம் அதிகமுள்ளதெனப் பேசுவோம். உங்களுக்குத்தான் எதிலுமே ஆதியும் அந்தமும் வேண்டுமே?

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பின்னூட்டம் வேறு விட்டிருக்கிறீர்கள்? பாரத சமுதாயம் பற்றி பேச உமக்கு என்ன தகுதி? ண்CC'ல் பணியாற்றியதா? ஈPKF பணியாற்றிய சமயத்தில் MP'யான வை.கோபால்சாமி கள்ளத்தோணி ஏறி பிரபாகரனை சந்தித்து சாதனை படைத்தார். பின்னர் பிரேமதாசா \"இந்திய இராணுவமே வெளியேறு\" சொன்னபின் வந்த ஈPKF கடைசிக் கலத்தை வரவேற்க கூடச் செல்லாத கோமான் அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர். நான் இவ்விருவரையும் (உங்கள் கட்டுரை படித்தபின்) இன்று ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் டாக்டர் சுந்தரவடிவேல்...உம்மை...வார்த்தைகள் வரவில்லை.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் ஒரே ஒரு ஈழ இணையத் தமிழனைக் எனக்கு காட்டுங்கள். ஆச்சரியமாக உங்களால் முடியாது.இன்னொரு நிதர்சனம். புலிகள் ஒத்துக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் இலங்கைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது.

மேலும் பதிவேன்.</span>


http://vanthiyathevan.blogspot.com/2004/08...og-post_10.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
வந்தியத்தேவனின் இன்னுமொரு பதிவு ...

பெண்ணுக்கு மரியாதை

அனைத்து நாட்டுப் படைகளிலும் பயிற்சியின் போது பெண்களுக்கு தரப்படவேண்டிய மரியாதை பிரதானமாக இருக்கும். எனது பயிற்சி அனுபவம் இதோ. கப்பலின் நுழைவாயிலில் (Gஅங்நய்) அடியெடுத்து வைக்கும்போது ஆபீஸர்களுக்கு சல்யூட் வரவேற்பு தரப்படும். அதே மரியாதை கப்பலுக்கு வருகை தரும் பெண்களுக்கும் உண்டு. வயது வித்தியாசம் பாராமல் அடுத்தவரின் துணைவியாரை "மேடம்" என்றே விளிக்க வேண்டும். எவ்விடத்திலும் பெண்கள் வருகை தந்தால் கமாண்டிங் ஆபீஸரிலிருந்து, கடை நிலை ஊழியன் வரை எழுந்து நின்று மரியாதை தர வேண்டும். அவர்கள் அமர்ந்த பிறகே, அவர்கள் அமர வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் முடிந்தால், உண்ணும் போது கூட முதலில் குழந்தைகள், பெண்கள் பிறகே ஆண்கள் சாப்பிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக கப்பலையே "ஸ்கெ" என்றுதான் விளிப்பார்கள். இது எவ்வளவு பேருக்குத் தெரியுமென நானறியேன். இது வெறும் இந்திய மகளிருக்குத்தானோ என்ற வெட்டிக் கேள்விகட்கு இங்கே விடையில்லை.

மற்றபடி "சேலை உருவுவதற்கு" பிரத்யேக பயிற்சி தரப்படுவதில்லை. ஒருவேளை அது களப் பயிற்சி (ஒன் தெ ஜொப் ட்ரைனிங்) எனக் கருதி விட்டு விட்டார்களோ என்னமோ?

இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களை விசாரிக்க வேண்டுமென்னும் கேள்வி மிக நியாயமானது. அப்படியாவது எங்கள் அரசாங்கத்திற்கு ஈPKF பற்றி ஞாபகப்படுத்தலாம். வியட்நாம் போரை எதிர்த்த அமெரிக்க மக்கள் கூட அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் வருடா வருடம் அப்போரில் உயிர் நீத்த இராணுவ மக்களுக்கு "Mஎமொரிஅல்" சென்று அஞ்சலி செய்கிறார்கள். அமைதிப்படை வீரர்களை இந்தியாவில் மக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் கூட புறக்கணித்து விட்டதென்பதே உண்மை.

இப்போது அட்டூழிய விசாரணக்கு வருவோம். வலைபதிவார்கள் குரலாய் அனைவரும் இந்திய அரசாங்கத்துக்கு மனுப் போடுவோம். என் பெயரும் அதில் கட்டாயமாய் இருக்கும்.

இல்லாவிடில் பூந்தமல்லியில் இன்னொரு சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய்வோம். ஏனென்றால் தீர்ப்புகளைத்தான் நாம் வழக்கம் போல் சுகமாக மறந்து விடுவோமே?

சுந்தரவடிவேல் "சேலை உருவிகள்" என்றார். நான் அனைவரும் அப்படியல்ல என்றேன். வன்முறையில் உயிர் நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் இறந்துபட்ட இராணுவத்தினருக்கும் (சேலை உருவாத) அநுதாபம் செய்யுங்கள் என்றேன். எனக்கு கிடைத்த பட்டங்கள் "நகைச்சுவையாளன்", "ஓப்பன் மைண்ட் இல்லாதவன்", "கண்மூடிய தேசப்பற்று உள்ளவன்", இன்னும் பல. ஏசுவோர் தாராளமாக ஏசிக்கொள்ளுங்கள்.

அமைதிப்படையை அம்மணப்படுத்தும் படை என்று சித்தரித்துக் காட்டும் விஷமத்தனமான பதிவு மதிக்கு "யதார்த்தமாய்" தோன்றுகிறது. ஓப்பன் மைண்ட் என்பது எதிர் வினையில் உள்ள தார்மீக நியாயங்களையும் ஏற்றுக் கொள்வதுதானே? இராணுவம் பற்றிய பதிவில் காந்தீயம், வெள்ளையுடை தேவதைகள், என்ற பின்னூட்டங்களால் நீர்த்துப் போகின்றது. திரும்பவும் சொல்கிறேன். வன்புணர்ச்சிக்குட்பட்ட சகோதரிகளுக்காக நான் விடுவது முதலைக் கண்ணீர் இல்லை. இவ்வழிச் செயல்களில் ஈடுபட்டவரை வன்மையாக கண்டிப்பது வெளிவேடமில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அமைதிப்படையை "ஆக்கிரமிப்புப் படை", "சேலை/குடல் உருவிகள்", (இன்னும் பல ஏசல்களுக்கு ஆயிரமாயிரம் வலைத்தளங்கள் உண்டு) என்று சொன்னால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை ஏன் ரமணீதரன், மதி, வதனா, மெய்யப்பன், தங்கமணி போன்றவர்கள் எதிர்க்க வேண்டும்?

புலிகளை ஆதரிக்காததாய் சொல்பவர்கள் அவர்களது "வீர தீர பராக்கிரமங்களை" சொல்லும் இணையத்தளங்களுக்கு மட்டும் சுட்டிகள் கொடுப்பார்களாம். அடடே...ஒரு "நாங்கள் புலி எதிர்ப்பாளர்கள்" என்று "Dஇச்cலைமெர்" போட்டு விடலாமே?

ஈராக் யுத்தத்தின் போது புஷ் சொன்னார்"ஏஇதெர் யொஉ அரெ நித் உச். ஒர் எல்செ சுப்பொர்டிங் தெ டெர்ரொரிச்ட்". அதேபோல் "நீங்கள் ஒன்று என் பக்கம். இல்லாவிட்டால் சேலை உருவிகள் பக்கம்" என்பது என்ன நியாயம்? இதைச் சொன்னால் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடுகின்றேனாம்?

அப்புறம் எம்ஜியார் துப்பாக்கி கொடுத்தார். அதனால் நாங்கள் (அட புலிகள்'ங்க) சும்மா சுட்டுப் பார்த்தோம். குறுக்கே அமைதிப்படை வந்தது. ஒரு 1,200 பேர் செத்துப் போயிட்டாங்க அப்படின்னு கதை விடாதீங்க. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும் பாடம் படிக்காத அப்பாவி இந்தியத் தமிழர்கள் நாங்கள்.

குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக அமர்ந்து நியாயம் கேட்டு நாம் தொடர்ந்து போராடுவோம். என்னாங்கய்யா ஆச்சு இணையத்துக்கு? ஜால்ராவுக்கு பழக்கமான செவிகளுக்கு எதிர்வினைகள் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்.

என்ன கப்பற் படையிலிருந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட சேலை உருவ எனக்கு வாய்ப்பு கிட்டாத கோபம். அதைத்தான் வலைப்பதிவில் தீர்த்துக்கொல்கிறேன். அப்படின்னும் சொல்லுங்களேன். கூடிய சீக்கிரம் இணைய துச்சாதனன் என்ற பட்டமும் கொடுங்களேன்.

காத்திருக்கின்றேன்.

http://vanthiyathevan.blogspot.com/2004/08...5672433989.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
இவற்றில் சில கேள்விகளுக்கு சந்திரவதாவின் பதில் ....

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்

கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். இங்கே எனதான உதவும் நோக்கம் முழுமன ஈடுபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் என்ற தலைப்பில் இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த போதான ஒவ்வொரு அவலங்களையும் சேகரித்து ஒரு புத்தகமாகப் பதியப் போகிறார்கள்.

இந்த அறிவித்தலை எனது மனஓசையில் பதிந்த பின் அது பற்றியதான சர்ச்சைகள் வலைப்பதிவுகள் சிலவற்றில் இடம் பெற்றது பற்றி சுந்தரவடிவேல் எனது பதிவில் சுட்டும் வரை நான் அறியவில்லை. சமீபத்தில் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் கூட இந்திய இராணுவம் சம்பந்தமானதாக இருந்தது என்னுள் கேள்விக் குறியாகியதே ஒழிய விபரம் புரியாதிருந்தது.

முதலில் சுந்தரவடிவேலுக்கு நன்றி. சுந்தரவடிவேலின் சுட்டலின் பின்தான் நேற்று முன்தினம் வந்தியத் தேவனின் எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள் பதிவைப் பார்த்தேன்.

வந்தியத்தேவனின் ஆதங்கத்துக்கு என்னால் அரசியல் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. அரசியல் எப்போதும் அரசியல்தான். அதற்குள் நான் தலைப்போடவில்லை.

ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை. அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.

அந்தக் கவிதையில் உள்ள வரிகள்

<b>நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை</b>
இன்னும்..........

பொய்யில்லை. இந்த வரிகள் பொய்யில்லை.

எங்கள் தேசத்தின் மீது, எங்கள் வாழ்வின் மீது, எங்கள் சுயத்தின்... மீது இந்திய இராணுவமும் நெருப்பள்ளிக் கொட்டியது என்பது மறுக்கப் பட முடியாத, மறக்கப் பட முடியாத உண்மை.


<b>வந்தியத்தேவனின் இந்தக் கேள்வி </b>

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

அர்த்தமற்றதாகவே எனக்குப் படுகிறது.

இந்திய இராணுவத்தையும் இந்திய மக்களையும் ஒன்றாக ஏன் பார்க்க வேண்டும்.
சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழர்களைப் பாதுகாத்தவர்களில் சிங்கள மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பதவியைத் துர்ப்பிரயோகம் செய்யும் இராணுவத்தையும், மனித நேயமிக்க சாதாரண பொது மக்களையும் எந்தக் காலத்திலும் ஒன்றாகப் பார்க்க முடியாது.

நாட்டுப் பற்றோடு போர் புரிய வந்தவன் எவனும் காட்டு மிராண்டித்தனமானவனாய்.. உடலிச்சை கொண்ட வெறித்தனமானவனாய்.... போர் தர்மத்தை மறந்த அதர்மவாதியாய் இருக்க மாட்டான். எந்த அரசியல் வலைகளில் அவர்களில் சிக்கியிருந்தாலும்... யாரது பகடைக்காய்களாக அவர்கள் ஆகியிருந்தாலும்.. அவர்கள் செய்தது அவர்களது தனிப்பட்ட இச்சையினாலான செயற்பாடுகள்.

http://manaosai.blogspot.com/2004/08/blog-post_12.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
கருணாமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்திய இராணுவத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை என்னவென்பது தெரிகிறதே.. மேலும் ஜேர்மனியிலிருந்து பைனாகுலரில் பார்த்து எழுதிய கட்டுரை.. கவிதை.தானே.. :wink:
Truth 'll prevail
Reply
#12
நல்லாய் போகுது விவாதம்... விடுங்கோ தாத்தா.. இந்த பிரச்சனைகள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது.... சற்று பொறுக்குவம் என்டால்.... நீங்கள் இந்த கருணாவை இங்க கொண்டுவாறீயள்... கள நண்பர்களே... உங்களது கருத்துக்களையும் பதியுங்கள்.. எங்களைப்போன்ற வரலாறு தெரியாதவர்கள்.. இவற்றை வாசிப்பதன் மு}லம்.. தெரிந்து கொள்ள முடியும்... இதனை இங்கு இணைத்த நண்பர் BBC யிற்கு நன்றிகள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
[quote=Mathivathanan][size=14]கருணாமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்திய இராணுவத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை என்னவென்பது தெரிகிறதே.. மேலும் [b]ஜேர்மனியிலிருந்து பைனாகுலரில் பார்த்து எழுதிய கட்டுரை.. கவிதை.
Truth 'll prevail
Reply
#14
இந்தக் கவிதைய யாரால், எங்கிருந்து எழுதப்பட்டது என்பது தெரியாமல் உங்கள்பாட்டிற்கு எழுந்தமானமாக ஜேர்மனியிலிருந்து எழுதப்பட்டதாகக் குறிப்பிடுவதை என்ன சொல்வது?

கனடாவில் இருந்து தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதை அந்த "அறிவிப்புத்தாளில்" கவனிக்கவில்லையா?

பிகு: கண்ணாடியைக் கழட்டிட்டு லென்ஸ் போடவும்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#15
BBC Wrote:இவற்றில் சில கேள்விகளுக்கு சந்திரவதனாவின் பதில் ....

[size=14]கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். ...........

<b>ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை.</b> அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.


http://manaosai.blogspot.com/2004/08/blog-post_12.html

அந்த கவிதை தன்னுடையதல்ல என்றும் ஒஸ்கார் குழுவில் உள்ள ஒருவரால் எழுதப்பட்டது என்றும் சந்திரவதனா குறிப்பிட்டிருக்கின்றார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
தாத்ஸ் மேலோட்டமாய் படிச்சால் இப்படித்தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#17
<b>தங்கமணியில் வலைப்பதிவில் இருந்து ....</b>

சுந்தருக்கு:

இங்கு அமைதிப் படை என்ன செய்தது என்பது பெரிய பிரச்சனை இல்லை. எல்லா இராணுவமும் ஒன்றே! ஆனால், மைலாய் படுகொலைகள் விமர்சிக்கப்பட்டது போல, ஈராக்கிய படுகொலைகள் கண்டிக்கப்பட்டது போல (இதையெல்லாம் வெளிப்படுத்தியது அமெரிக்க இராணுவ வீரர்களே!!) இந்திய ஊடகங்கள், விமர்சகர்கள், சிந்தனையாளர்கள், நடுநிலைவாதிகள் ஈழக்கொடுமைகளை கண்டித்தார்களா என்பதுதான்? எனக்குத் தெரிந்து கலைஞர் கருணாநிதி மட்டும்தான் இதை ஆண்மையோடு செய்தார். அவர் மேல் எனக்கு மிகுந்த விமர்சனங்கள் உண்டு என்றாலும், அந்தச் சமயத்தில் அவர் தனக்கு உண்மையாய் நடந்துகொண்டார் என்றே கூறுவேன். அப்படிப்பட்ட விமர்சனங்கள், கண்டனங்கள், நீதி விசாரணைகள் மூலம் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் இராஜீவ் படுகொலை தவிர்க்கப் பட்டிருக்கவும்கூடும்.

http://ntmani.blogspot.com/2004/08/blog-post_12.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
இந்திய இராணுவம் குறித்த செய்தி ஒன்று ....

<img src='http://im.rediff.com/news/2004/aug/10spec.jpg' border='0' alt='user posted image'>

<b>A guide to the Armed Forces (Assam and Manipur) Specials Powers Act, 1958, which has provoked such unprecedented hostility in Manipur.

What is the turmoil in Manipur all about?</b>

http://in.rediff.com/news/2004/aug/10spec2.htm
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
ம்.. போராட்டம் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கேயெல்லாம் உபயோகிக்கப்படும் மிகவும் மலிவான வலிமையான அனுதாப ஆயதம் இந்த "றேப்" என்னும் ஆயதம். நம்மவர் கொஞ்சம் அதிகமாகவே இந்த "றேப்" என்னும் ஆயதத்தை உபயோகிக்கிறார்கள் அவ்வளவுதான்..
Truth 'll prevail
Reply
#20
தாத்தா... உங்களுக்குத்தான் இந்தப் பகுதி சரி...வெட்ட வெட்ட எழுதுவியள்...! வாழ்க உங்கள் மாற்றுக் கருத்து என்று பொய்மூட்டை அவிழ்ப்புக்கள் அதுக்கு நல்லாத்தான் கள நிர்வாகமும் மறைமுகமா உதவுதோ என்னவோ....?????! நாங்க இப்ப இங்க எழுதினத காணவே இல்லையே....! (Waste of time) அதுதான்....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)