Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நல்லது இளைஞன் அவர்களே எமது பார்வை அர்த்தமில்லாததாக இருக்குமானால்....மனிதக் கூர்ப்பின் பாதயில் மேலே விளக்கப்பட்டதற்கு உங்களால் சரியான எதிர்க் காரணத்தை தரமுடியுமா....? அது மட்டுமன்றி ஆண்கள் பெண்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கின்றனர் என்றால் எத்தவகையான அடக்குமுறைகள்...அவை உயிரியல் நடத்தைக் கோலத்துக்கு புறம்பான செயல்களாக கருதப்படுவதற்கான காரணங்கள்...அவற்றிற்கான ஆண்களின் தேவையென்ன...அப்படி அடக்குமுறையை பிரயோகிப்பதனால் ஆண்கள் அடையும் உயிரியல் நன்மை என்ன...... அதனால் மனிதன் அடைந்த அல்லது அடையும் நன்மை தீமை என்ன...? என்பவற்றை விளக்கினீர்கள் என்றால் எக்கருத்து யதார்த்தத்தின் பாதையில் செல்கிறது என்பது புரியும்...நீங்கள் மனிதனை பெண்களை பிரித்துப்பார்க்கலாம் ஆனால் எம்மைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் என்ன இரு பிரிவினரையும்... மனிதன் ....உலக உயிரி என்ற கோட்பாட்டில் வைத்துத்தான் பார்க்கின்றோம் அப்படிப் பார்த்தால்...இங்கு எழுதப்படுவதெல்லாம் இயற்கைக்கு உயிரியலுக்கு மாறான நடைமுறைச் சாத்தியமற்ற வெற்றுக் கூச்சல்கள் என்பது இலகுவாக விளங்கும் எது விஞ்ஞான பூர்வமானது என்பதும் புரியும்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
இதென்ன லொஜிக்? யோசிச்சுத்தான் எழுதுறியளோ?
பெண்கரு இருந்தால் ஆண் அடக்குறார் ஆண்கரு இருந்தால் பெண் அடக்குறார்
இதெந்த விஞ்ஞானம்?
ஆணோ பெண்ணோ கருவில் எல்லாம் ஒன்றுதான் பிறகுதான் ஓமோன் சுரக்கும்
சரியோ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அலை அவர்களே நாங்கள் இல்லாத ஒன்றை எழுதிப் பெண்களை மட்டம் தட்ட வேண்டும் என எண்ணம் கொண்டு அதை எழுதவில்லை...பெண் விழிப்புணர்வு என்பது உண்மைகளை மறைத்து பெறப்படுவதல்ல...பெண்கள் தங்கள் பலத்தையும் பலவீனத்தையும் சரி வர அடையாளம் கண்டு தம்மை பலப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்..... நாம் ஒரு போதும் பெண் விழிப்புணர்வுக்கு எதிரானவர்கள் அல்ல...அதே நேரம் பெண் விழிப்புணர்வு என்று ஆண்கள் மீது குரோத உணர்வும் அவன் பெண்ணிற்கு எதிரான குற்றவாளி அடக்குமுறையாளன் எனும் பொருள் பட கருத்துக்கள் விதைக்கப்பட்டு பெண்களிடம் ஆண்களுக்கு எதிரான வன்மம் வளர்க்கப்படுதலையும் அதன் மூலம் பெண் விழிப்புணர்வு அல்லது 'பெண்விடுதலை' எனும் ஓர்மம் மிக்க பலன் ஈட்டப்படுதலையும் வன்மையாக எதிர்க்கின்றோம் ....எதிர்ப்போம்...அதற்கான நியாயங்கள் எம்மிடம் உண்டு...!
:evil:

:evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[quote="sOliyAn"][quote]பெண்களுடைய சுயசிந்தனையையும் அதன் அடிப்படையிலான சுதந்திரமான செயற்பாட்டையும் மையமாகக் கொண்டு 'உண்மையான" பெண்விடுதலைக் குரல் எழும்பினதென்றால்.. அந்தக் குரலானது யாருக்கு எதிராகக் கிளம்பியது? பெண்ணின் அனுமதியின்றி, சுயசிந்தைனைக்கும் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் ஆண்கள் எவ்வாறு தடைபோட முடியும்? .
சோழியான்
ஒரு சின்ன உதாரணம்:
விடுதலைப் போராட்டத்தை விட்டு விட்டு
புலம் பெயர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தக் குடும்பத்தில்
ஆணானவன் ஒரு குறும்படத் தயாரிப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அது சம்பந்தமாக அந்த ஆணுக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும்.
வெளியில் போவான். வருவான். நீண்ட நேரங்கள் இது சம்பந்தமாக தொலைபேசியில் உரையாடுவான்...
இன்னும் மனைவியுடன் ஆற அமர இருந்து கதைக்கவே அவனுக்கு நேரமிருக்காது.
மனைவி சமைத்ததைக் கூட அவக் அவக்கெனச் சாப்பிட்டு விட்டு ஓடுவான்.
களைத்து வந்து விழுந்து படுப்பான்.
இத்தனையையும் ஒரு மனைவி
அவள் ஒரு பொறுமைசாலியாக இருக்கும் பட்சத்தில் கணவனின் முன்னேற்றம் கருதி பொறுத்துக் கொள்வாள். பக்கபலமாய் இருப்பாள்.
பொறுமை குறைந்த மனைவியாக இருந்தால் அதிருப்திப் படுவாள்.
அவள் அதிருப்திப் படும் போது கணவன் என்ன சொல்லுவான்
என்ரை முன்னேற்றத்துக் தடையாக இராதை என்றோ..
அல்லது நான் எனக்குப் பிடிச்சதை செய்வன் என்றோ...தான்
எங்காவது ஒரிரு கணவன்மார்தான் மனைவியின் அதிருப்தி கருதி தமது விருப்பத்தைத் தியாகம் செய்வார்கள். அதாவது அவர் படத்தயாரிப்பாளராயிருந்தால்
மனைவிக்குப் பிடிக்கவில்லையே என்று அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்.
இப்போ
அந்த மனைவியை ஒரு படத்தயாரிப்பாளராகக் கற்பனை செய்து பாருங்கள்.
படத்தயாரிப்பாளரான ஆண் நடந்து கொண்டது போல அந்த மனைவி நடந்து கொண்டால் வீட்டில் எத்தனை புூசல்கள் வரும்.
கணவன் அந்த வேலையை நிறுத்து என்று அதிகாரக் கட்டளை இடும் பட்சத்தில் கண்டிப்பாக அவள் அதிலிருந்து ஒதுங்க வேண்டி வரும்.
(எங்காவது ஓரிரு கணவன்மார் மனைவியின் திறமையைக் கணக்கிலெடுத்து உறுதுணையாக இருக்கலாம்.)
இதில் உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடிக் கொள்ளுங்கள்.
nadpudan
alai
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது...நல்லம் ஏனெனில் உங்கள் பிரசாரங்கள் ஆதாரம் ஆதரவு என்ற கொழுகொம்பாகிய ஆண்களை விட்டு கொடிகள் படரும் என்ற நிலயில் இருக்கிறது...படருங்கள்...வினைகள் வரும் போது எதிர் கொள்ளவும் தயாராகுங்கள்...கொழுகொம்புகள் வெள்ளை இளைஞர்கள் போல டாட்டா காட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை....! எமக்கும் சுதந்திரமாய் சமூதாயச் சிறையுடைத்துப் பறக்கத்தெரியும் நாம் பறக்க முனைந்தால் நீங்கள் போட்டியிட முடியாது...அழுது புலம்ப திண்ணைகளும் இராது....! எமது சுதந்திரத்தை பரீட்சிக்கும் விசப்பரிட்சையில் இறங்கி உங்களை நீங்களே நிக்கதி ஆக்கிக் கொள்ளப் போகிறிர்கள்...நீங்கள் உங்கள் கணவன்மாரின் காலடியே சரணம் என்று கிடந்து கொண்டு இங்கு வாய் வீரம் காட்டி அப்பாவி யுவதிகளைத்தூண்டி விட்டு அவர்களின் எதிர் காலத்தை வீணடிக்காதீர்கள்....எது நியாயமோ அதை எழுதுங்கள் எது உண்மையோ அதை தெளிவுபடுத்துங்கள்...அப்பொழுதுதான் பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து தம்மை சமூகத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்வார்கள்...இல்லை என்று வீண் அபரிமிதமான தோற்றப்படுகளைக் காட்டி அவர்களின் நியாயமான முன்னோக்கிய சிந்தனைகளுக்கும் குழிபறிக்காதீர்கள்...ஆண்கள் மத்தியிலும் பெண்கள் தொடர்பான தப்பபிப்ராயங்கள் வளர இடமளியாதீர்கள் அப்படி செய்தால் உங்கள் சமூகக் கட்டமைப்பு சீர் குலைந்து நீங்கள் அற்புதமாகக் காணும் அபரிமிதக்கனவு நனவாக பெண்கள் உங்களுடன் கூட வரமாட்டார்கள்.....! ஒண்டிகளாக வாழ்வதை விட்டு நேரம் ஒரு ஆண் என்று பப்பில் கிடப்பார்கள்...அதுதான் உங்கள் கனவென்றால் தொடருங்கள் உங்கள் பிரச்சாரத்தை வெற்றிக்கு வாழ்த்துக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>