Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு
#1
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு.
எதிர்வரும் 23 ம் திகதி பிரதமர் லண்டன் வருகின்றார் அவருடன் தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகையாளர்களம் வருகிண்றனர்.
Reply
#2
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்றுவரும் சகல கொலைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

விடுதலைப்புலிகளின் கப்பல் தாக்கப்பட்டதன் எதிரொலியாக பாரிய விளைவுகளை எதிர் நோக்க நேரிடுமென விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலை பாரது}ரமாகக் கருதமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபட்ச பாராளுமன்றத்தில் இன்று கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெரிவு படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். சபாநாயகரின் விசேட அனுமதியைப் பெற்று சபையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்றுவரும் சகல கொலைச் சம்பவங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென புலிகள் கூறிவருவதாக சுட்டிக்காட்டிய அவர் இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
Reply
#3
போராளிகள் நடமாட்டம் கடலில்தொடரும் படையினர் தடுத்தால் மோதல் ஏற்படக் கூடும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் தமிழ்செல்வன் தெரிவிப்பு.

எமது கடற் பிரதேசத்தில் போராளிகளின் போக்குவரத்து மற்றும் பயிற்சிகள் தொடரும். இந்தப் பிரதேசத்தில் எமது கலங்களை தடுத்தல், பரிசோதித்தல் போன்ற செயற்பாடுகளை சிறீ லங்கா கடற் படையினர் தவிர்க்கவேண்டும். இதை மீறி கடற் படையினரின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அது மோதல் ஏற்பட வழிவகுக்கும். இப்படிக் கூறினார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். கிளிநொச்சிக்கு வருகைதந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரிக்வே டெலிவ்சனிடம் தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு 14.06.2003 காலை வந்த டெலிவ்சன், புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் தமிழ்ச் செல்வனை முற்பகல் 11.30 மணிக்கும் சந்தித்து இரு மணி நேரம் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

எமது கடற்பகுதியில் போராளிகள் போக்குவரத்து மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அந்தப் பகுதிக்குள் கடற்படையினர் சோதனை, தடுத்து நிறுத்தல் போன்ற அச்சுறுத்தற் செயற்பாடுகளைத் தவிர்க்கவேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தோம். கடற்படையினர் அச்சுறுத்தற் செயற்பாடுகளில் ஈடுபடுவது மோதல் ஏற்பட வழிவகுக்கும். இந்த விடயம் பற்றி சரியான நடவடிக்கைளை கண்காணிப்புக் குழு மேற்கொள்ளவேண்டும். பரஸ்பரம் ஆள்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இரு தரப்பினரும் நீடிக்க விடக்கூடாது. இந்தநிலை தொடர்ந்தால் நெருக்கடி, முறுகல் நிலை என்பன ஏற்படலாம். அத்தகையதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்க யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். ஒரு தரப்பு ஒருவரைக் கைது செய்யும் போது ஏற்படும் யுத்த நிறுத்த மீறல் செயலை கண்காணிப்புக் குழு உடன்விசாரித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தவேண்டும். இந்தப் பொறுப்பை கண்காணிப்புக் குழு ஏற்கவேண்டும் என்று ஆலொசனை வழங்கியுள்ளோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்களை நிறுத்தவேண்டியது, அந்தப் பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணுபவர்களின் பொறுப்பாகும். இத்தகைய செயல்கள் அங்கு அதிகரிப்பதற்கு அவர்களின் பலவீனம்தான் காரணம். தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களினதோ அல்லது வேறு பொது மக்களினதோ கொலைகளுக்கு நாம் பொறுப்பல்ல.

கண்காணிப்புக்குழுவின் ஒழுங்கு, நடைமுறைகள், ஆள்களை அதிகரித்தல், அதிகாரங்களை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து எம்மிடம் கண்காணிப்புக் குழுத்தலைவர் பிரஸ்தாபித்தார். கடல் நடமாட்டம் தொடர்பாக எதிர் காலச்செயற்பாடுகள் குறித்து ஆலோசனைகள், பரிந்துரைகளை அவர் தெரிவித்தார். அவை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறினோம் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவருடன் குழுவின் பேச்சாளர் அக்னஸ் பிரகடொட்டிர், தலைமையக அதிகாரி ஹெயின்றிட்ஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.
Reply
#4
நாட்டில் மீண்டுமோர் யுத்தம் மூளக்கூடாது என்பதே எமது நோக்கம். அதையும் மீறி யுத்தமொன்று உருவாகுமானால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இராணுவ ரீதியில் உதவிகளை எமக்கு வழங்கும் என நம்பிக்கையுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
Reply
#5
முல்லைத்த~Pவுக்கு அப்பால் ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல் கடற்படையினரின் தாக்குதலிலா அல்லது வெடிவிபத்திலா மூழ்கடிக்கப்பட்டது என்பது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கும் அரசுக்கும் பெரும் புதிராக இருந்து வருகிறது.
இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் குறித்து முற்றிலும் முரண்பாடான இரண்டு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமைச் செயலகம் விடுத்த அறிக்கையில், புலிகளின் கப்பல் தாக்கப்படவில்லை எனவும் எச்சரிக்கை உத்தரவை மீறி முன்னேறிச் சென்ற கப்பல் வெடித்துச் சிதறியது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஜனாதிபதி செயலகம் இச்சம்பவம் குறித்து விடுத்த அறிக்கையில், புலிகளின் கப்பலில் இருக்கும் பொருட்களைச் சோதனையிட அனுமதி கோரிய போது, புலிகளின் கப்பலிலிருந்து பதில் கிடைக்காததால் கடற்படை தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விரு அறிக்கைகளின் படியும் புலிகளின் கப்பல் மூழ்கிய விதம் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கும் அரசுக்கும் சரியான த~Pர்மானத்துக்கு வர முடியாதிருப்பதாக சிரே~ட அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இக்கப்பல் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்ட உடனேயே, போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி கண்காணிப்பாளர் ஒருவரையும் அழைத்துச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையின் அதிகாரிகளின் பிரதானிக்கு தான் பணிப்புரை விடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருக்கிறார்.
""கடற்படைத் தளபதி நாட்டில் இல்லாததால் அதிகாரிகளின் பிரதானிக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்தேன். ஆயினும், அந்த பணிப்புரையின்படி கண்காணிப்பாளர்கள் புலிகளின் கப்பல் இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை'' எனவும் மாரப்பன கூறியிருக்கிறார்.
இச்சம்பவம் பற்றிய அறிக்கையை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் உதயன்
Reply
#6
எட தம்பி சேது,

என்னடா மேனே? உவையள் இனித்தான் உதவி செய்யப் போகினமோ? இவ்வளவு காலமும் என்ன செய்தவையளாம்?

ஒருவர் எங்கடை பொடியள் முன்னூறு பேர் இருக்கிற காலத்திலேயே வந்து என்னத்தை கிழித்தவையள் எண்டு எல்லோருக்கும் தெரியும் தானே! ஏன் இப்ப கடல் கப்பல் பிரட்சனை எல்லாமே அவரின் திருவிளையாடல்கள் தானாம்.

மற்றவரும் சும்மா விடவில்லையாம். உந்த ஆணையிறவோடு துண்டைக்காணோம் துணியைக்காணோம் எண்டு இருந்தவராம். உதுக்கடா அவையள் தானாம் முழுப்பாதுகாப்பு செற்றப்புமாம். அதுக்கு மேலே இற்றைக்கு 30, 40 வருசமாடா பக்கத்து நாடு கியூபாவிலேயே கிழிக்கினமாம்.

"அட தம்பி ஆணைகளுக்கும் அடி சறுக்குமாடா"
" "
Reply
#7
சரியா சொன்னியள்
Reply
#8
எட தம்பி சேது,

"அட தம்பி ஆணைகளுக்கும் அடி சறுக்குமாமடா"
" "
Reply
#9
சந்திரிக்கா, ரணிலின் விருப்பம் நான்காம் கட்ட ஈழப்போரா?

விடுதலைப்புலிகளுக்கும், அரசிற்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 16 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களின் காவலர்களான விடுதலைப்புலிகளுக்கும் எதிரான கெடுபிடிப் போக்கினை அரசும் அரசபடைகளும் தொடர்ந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக கடந்த சனிக்கிழமை (14.06.2003) முல்லைத்தீவுக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளின் எண்ணெய்க் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டதுடன் அதில் பயணம் செய்த போராளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய இச்சம்பவம் அப்பட்டமான போர் நிறுத்த மீறலாகும். இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கூட அறிய முடியாத நிலையில் அரசு திணறுவதைக் காணமுடிகின்றது.

தமிழர்களின் பலமும் பாதுகாப்பும் விடுதலைப்புலிகள் மட்டுமே. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையிலேயே போர்நிறுத்தத்தை மேற்கொண்டு சமாதானப் பேச்சுக்களுக்கு வந்தனர். யுத்தச் சூழலில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களைக் கருத்திற் கொண்டே விடுதலைப்புலிகள் இந்த முடிவுகளை எடுத்தனர்.

ஆனால் போர் நிறுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்ட போதிலும், போராளிகளை இழக்கவேண்டி வந்த போதிலும், போராளிகள் அவமானப் படுத்தப்பட்ட போதிலும் புலிகள் தொடர்ந்து பொறுமை காத்து வந்தனர். ஆனால் விடுதலைப்புலிகளின் பொறுமையைச் சோதிக்கும் நடவடிக்கைகளும் அவர்களின் பலத்தைக்குறைக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கு அரசு இறங்கி வறந்தது. விடுதலைப்புலிகளின் பலம் இழக்கப்பட்டால் தமிழர்களுக்கு விமோசனவே இல்லை ஏனவே முல்லைத்தீPவுச் சம்பவமே இறுதிச் சம்பவமாக இருக்கட்டும். யுத்தம் மூலமே தமழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென அரசாங்கம் உண்மையிலேயே நினைக்குமானால் விடுதலைப்புலிகள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபட்டு தமது பலத்தையும், தமிழர் பலத்தையும் உலகறியச் செய்ய வேண்டும். எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அத்தகைய முடிவை எடுப்பாரானார் தமது மக்கள் தமது முழு ஆதரவையும் தரத் தயாராகவே உள்ளனர்.

பிரித்தாலும தந்திரத்தை பாவித்து தமது நோக்கங்களை நிறைவேற்றலாம். என அரசோ ஏனைய சக்திகளோ நினைத்தால் அதற்கு விடுதலைப்புலிகள் என்றுமே அனுமதிக்கக் கூடாது என்பதையே தமழ் மக்களின் ஏகோபித்த வேண்டுகோள்.

எனவே தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் காவலர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றம
Reply
#10
பொங்குதமிழ் ஏற்பாட்டாளர்களுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை இறானவம் இதனை செய்து வருவதாக தெரியவருகிறது
Reply
#11
[img]C:\Documents and Settings\sethu.SETHU-ZL1IRWP8V\My Documents\My Pictures[/img]
Reply
#12
<img src='http://www.virakesari.lk/20030612/PICS/p2.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
<img src='http://www.virakesari.lk/20030612/PICS/p6.jpg' border='0' alt='user posted image'>
Reply
#14
<img src='http://www.virakesari.lk/20030612/PICS/p7.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
<img src='http://www.virakesari.lk/20030612/PICS/p4.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
http://www.virakesari.lk/20030612/peace.HTM
Reply
#17
சமாதான பேச்சுக்கள் தேக்கநிலை அடைந்ததை அடுத்து, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான பொ.ஜ.மு. புலிகள் இணைந்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க திட்டம். நேற்றைய தினம் இரகசிய இடமொன்றில் வைத்து புலிகளின் சமாதான செயலர் புலித்தேவன், பொ.ஜ.மு. யின் முன்னைநாள் அமைச்சர்களான மங்களசமரவீர, சரத் அமுனுகம ஆகியோர் கொழும்பில் சந்தித்து பேசியுள்ளனர். நேற்றைய இவ் சந்திப்பு நட்புhPதியாக இருந்ததாக பொ.ஜ.மு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உறுதிப்படுத்தமுடியவில்லை.
Reply
#18
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான நடவடிக் -கைகள் தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. -புலித்தேவன்-

விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அந்தச் சங்கத்தின் சமாதான செயலக அலுவலக முக்கியஸ்தர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியொன்றை முற்றாக மறுத்த புலித்தேவன் பொதுஜன ஐக்கிய முன்னணியின் எந்த உறுப்பினர்களுடனும் தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று தாம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் மாத்திரமே சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தமது அமைப்பு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பத்திரிகையில் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த மூன்று பொதுஜன ஐக்கிய முன்னணி சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்ததாக கூறிய அவர், ஆனால் தமது அமைப்பு பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
Reply
#19
அமரிக்க யுத்தக்கப்பலின் வருகை அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது
Reply
#20
குட்டனியை இந்தியா சந்தித்து கலந்துரையாடியது ஏன்?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)