sOliyAn Wrote:இதில் ஒன்றை விட்டுவிட்டீர்களே? பெண்கள் ஏன் வீட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும்.. அவர்களை அடக்க சட்டம் இடம் கொடுக்கிறதா? அல்லது அவர்களால் ஆணின் துணை இல்லாமல் வாழ முடியவில்லையா? பெண்கள் வீட்டுள் அடங்கி இருக்க ஆண்கள்தான் காரணமென்றால்.. அவர்களை சட்டத்தின் முன்னே கொண்டு வர ஏன் பெண்கள் பின் நிற்கிறார்கள்? அதற்கு யார் போடும் அடக்குமுறை காரணமாகிறது? கொஞ்சம் விளக்குங்களேன்.
நல்ல கேள்வி கேட்டீங்கள் சோழியான்.
கருவிலிருக்கும் போதே ஒரு குழந்தை வெளியில் தன்னருகில் கேட்கும் சத்தங்களைக் கிரகித்துக் கொள்கிறது.
அங்கு தாயின் குரல் மட்டுமல்ல தந்தையின் குரலையும் குழந்தை உள்வாங்கிக் கொள்கிறது.
தந்தை எப்போதும் மனைவியுடன் அன்பாகத்தான் பேசுகிறாரா..! என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லையென்ற பதில்தான் வரும். பேசுவதுடன் மட்டும் நின்றால் பரவாயில்லை. தந்தையின் அதட்டல்கள், உருட்டல்கள், அதிகாரக் குளறல்கள் எல்லாமே குழந்தையின் மூளையில் பதிவாகிறது.
இத்தனையின் போதும் தாய் பயந்து அழுது ஒடுங்கும் போது குழந்தையும்; சோகமாகிப் போகிறது.
குழந்தை பிறந்த பின் - தொடர்ந்து....
தாயானவள் எப்படி சுற்றியுள்ள ஆண்களால் நடாத்தப் படுகிறாள் என்பதையும் ஆண்கள் எப்படி அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பதையும் பெண்கள் அதை மீற முடியாமல் அடங்கிப் போவதையும் குழந்தை தனது அறியாப் பருவத்தில் கூட மூளையில் பதித்துக் கொண்டே வளருகிறது.
இதுவே வளர்ந்த பின்னும் தான் அடங்க வேண்டியவள்தான் என்ற எண்ணத்தை ஒரு பெண் குழந்தை தனக்குள் வளர்த்துக் கொள்ள ஏதுவாகி விடுகிறது....
இது பற்றி சரியான முறையில் சிந்தித்தீர்களானால் நிறையவே புரிந்து கொள்வீர்கள்.
பெரும்பாலும்-
ஒரு தந்தை என்னென்ன வேலைகளை தினமும் வீட்டில் செய்கிறாரோ - அந்த வேலைகளை ஆண்குழந்தைகளும்,
தாய் என்ன செய்கிறாளோ - அதைப் பெண்குழந்தைகளும் செய்வார்கள்.
என்பதை ஒவ்வொரு குடும்பத்தையும் அவதானித்துப் பார்த்தீர்கள் என்றால் கண்டு கொள்வீர்கள்.
இது பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.
ஆனால் எழுதுவதில் பயன் ஏதும் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை.