Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கவனிப்பாரற்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை
#1

<b>கவனிப்பாரற்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை தரும் அறிகுறி </b>

தாய்லாந்து பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை விருத்தி செய்ய வியர்வை சிந்தி உழைத்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இறுதியில் ஒளிமயமான எதிர்காலம் ஒன்று தென்படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்துடனேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தாய்லாந்து க்குள் வாழ்ந்துவரும் சுமார் ஒரு மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு தொடர்ந்து வசிப்பதை ஒழுங்குமுறைப்படுத்தும் கொள்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் ஜூலை மாதம் முதலாம் திகதிதொடக்கம் அமுல் செய்ய இருப்பதால் இந்த நம்பிக்கைஒளி பிறந்துள்ளது.

இக்கொள்கையின்படி, ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்படாத புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களது தொழில் தருநருக்கு ஊடாக அன்றி நேரடியாகவே தங்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். தொழிலாளரின் குடும்ப உறுப்பினர் எவரும் அவருடன் வந்திருந்தால் அவர் தொழில் வாய்ப்பின்றி இருந்தாலும் அவரையும் பதிவு செய்து கொள்வதற்கான வசதி அளிக்கப்படும்.

பதிவு செய்து கொண்டதும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதால் இக் கொள்கையின் அடிப்படை நோக்கம் சிறந்ததே. இந்த அடையாள அட்டையை அவரே வைத்திருக்கலாம். தொழில் கொள்வோரிடம் கொடுக்க வேண்டியதில்லை என்றுவட பகுதி நகரான சியாங்மாயில் அமைந்துள்ள மைக்றன்ட் அக்ஷன் ப்ரோகிறாம் எனப்படும் அரச சார்பற்ற அமைப்பை சேர்ந்த ஜக்கி பொலக் கூறுகிறார்.

பொலிஸாரால் அல்லது அவர்களது தொழில் கொள்வோரால் துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு ஓரளவு பாதுகாப்பை இது கொடுக்கும் என்று பொலொக் கூறினார்.

மேலும், ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட இருக்கும் கொள்கையின்படி புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக உத்தரவாதமும் அளிக்கப்பட இருக்கிறது. இத்தகைய உத்தரவாதம் இதுவரை வழங்கப்படாதிருந்தால் உரிமை மீறல்களும் துஷ்பிரயோகங்களும் இடம் பெற்று வந்தன.

தாய்லாந்துத் தொழிலாளர்களுக்கான தொழில் சட்டங்களின்கீழ் அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவிருக்கிறது. மேலும் தாய்லாந்துத் தொழிலாளர்களுக்கு உத்தரவளிக்கப்பட்டுள்ள ஊதியங்கள் அனுகூலங்கள் அனைத்தையும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்வர்.

தற்போதைய ஆகக் குறைந்த ஊதியம் நாளொன்றுக்கு 135 பாஹ்த் (3.35 அமெ.டொலர்) ஆகும். சுகாதார பராமரிப்பு, புலம்பெயர் தொழிலாளர்களில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கல்வி அனுகூலங்களும் கிடைக்கின்றன.

ஆனால் தாய்பர்மா எல்லைக்கருகில் மாயே சொட் போன்ற நகரங்களில் தங்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் பர்மிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் தொழில் கொள்வோர் அவர்களுக்கு போதிய சம்பளம் கொடுப்பதில்லை என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.

ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்படாத புலம்பெயர் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 50 பர்த்திலிருந்து 80 பாஹ்த் (1.282.0 அமெ.டொலர்) வரை ஊதியமாகப் பெறுகிறார்கள்.

இதுபற்றி முறைப்பாடு செய்வோர், கைது. நாடு கடத்தல் அல்லது துஷ்பிரயோகம் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கென ஒழுங்கு முறையிலான சட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான தாய்லாந்தின் முயற்சி உலகளாவிய போக்கின் ஒரு பிரதிபலிப்பே என்று சர்வ தேச புலம்பெயர் ஸ்தாபனத்தின் பாங்கொக் அலுவலகத்தில் திட்ட அதிகாரியாக பணியாற்றும் றிக்கார்டோ கொர்டேரோ ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

இத்தொழிலாளர்களை அனுப்பும் நாடுகள் இவர்களை பாதுகாப்பதற்காக இவர்களுக்கு வேலை வழங்கும் நாடுகளின் அரசாங்கங்களுடன் செய்து கொண்டஒப்பந்தங்களின் பயனாக இது சாத்தியமாகி உள்ளது.

பர்மா, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுடன் தாய்லாந்து செய்து கொண்ட ஒப்பந்தங்களால் கடைப்படிக்கப்பட இருக்கும் புதிய கொள்கையே ஜூலை மாதத்திலிருந்து அமுல் செய்யப்பட இருக்கிறது என்று றிக்கார்டோ தெரிவித்தார்.

தாய்லாந்து எதிர்நோக்கும் சவால் பாரியது என்பது தங்களுக்குத் தெரியுமெனக் கூறிய றிக்கார்டோ புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், ஒப்பந்தங்கள் ஒரு முக்கிய முதல் நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.தாய்லாந்தில் ஏறத்தாழ 1.2 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அநேகமானோர் இந்த தென்கிழக்காசிய நாட்டில் பணியாற்றுவதற்கு அவசியமான ஆவணங்கள் இல்லாதிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பர்மாவைச் சேர்ந்தவர்கள். 110,000 பேர் லாவோஸையும் 88,000 பேர் கம்போடியாவையும் சேர்ந்தவர்களாவர்.

2001 ஆம் ஆண்டில் பாங்கொக், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் இயன்ற அளவு தொகையினரை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்யும் பணிகளை ஆரம்பித்தது. ஆனால் மொத்தம் 568,000 பேர் மாத்திரமே அவ்வேளை பதிவு செய்து கொண்டார்கள். இவர்களில் சுமார் 460,000 பேர் பர்மாவிலிருந்து சென்றவர்களாவர்.

அடுத்த வருடத்தில் பதிவு செய்து கொண்டோர் தொகை 409,000 ஆக வீழ்ச்சி அடைந்தது.

தாய்லாந்தின் முக்கிய பொருளாதார வளங்களான விவசாயம், மீன்பிடி, ஆடை உற்பத்தி ஆகியன அயல் நாடுகளிலிருந்து செல்லும் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களிலேயே தங்கி உள்ளன.இதற்கு மேலாக, கட்டிட நிர்மாண புலம் பெயர் தொழிலாளர்களே கூடுதலாக பணியாற்றுகிறார்கள். வீட்டுப் பணிகளைச் செய்ய உள்ளநாட்டுப் பெண்கள் அதிகரித்து ஊதியம் கோரி வருவதால் வெளிநாட்டுப் பெண்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

உதாரணமாக,2000ஆம் ஆண்டில் தாய்லாந்தின் பொருளாதாரத்திற்கு பதிவுசெய்யப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் மொத்தப் பங்களிப்பு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் என்று அந்நாட்டு தொழில் திணைக்களம் மதிப்பிட்டது.

2003 ஆம் ஆண்டில், 80,000 பர்மிய தொழிலாளர்கள் பணியாற்றும் வடமேல் மாகாணமான டக்கில் இயங்கிவரும் தொழிற்சாலை உரிமையாளர்களின் அமைப்பான டக் கைத்தொழில் பிரிவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 12 மாதகாலத்தில் அப் பிராந்தியத்தில் 125 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதிக்கப்பட்டதாக தெரிவித்தது.

பர்மாவில் பொருளாதார வீழ்ச்சி, ஆளும் இராணுவ அரசாங்கத்தின் அரசியல் ஒடுக்குமுறை ஆகியன காரணமாக பர்மிய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து தாய்லாந்துக்குள் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், தாய்லாந்துக்கும் பர்மாவுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக தாய்லாந்து அதன் புதிய கொள்கையை அமுல் செய்ய ஆரம்பித்ததால் இவர்கள் தாய்லாந்தில் பதிவு செய்து கொள்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஒப்பந்தத்தின்படி, பர்மிய அதிகாரிகளின் சிபாரிசுடன் கூடிய தொழிலாளர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே தொழில் அனுமதிப் பத்திரங்களும் அடையாள அட்டைகளும் வழங்கப்படுமென தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் கவலை அடைந்தார்கள். பர்மிய அரசாங்கம் தங்கள் பெயரை வைத்து என்ன செய்யுமோ என்றும் தங்களை பர்மியர்கள் என்று பர்மிய அதிகாரிகள் அங்கீரிப்பார்களா என்றும் அவர்கள் அஞ்சினார்கள்.ஆனால், நாளாந்தம் நாடு திருப்பப்படும் பெருந்தொøயான பர்மிய தொழிலாளர்களை பர்மிய அரசாங்கம் கைது செய்யவோ அவர்களை பின்தொடர்ந்து செல்லவோ இல்லை என்பதால் இத்தகைய அச்சம் அநாவசியமானது என்று பர்மிய வழக்கறிஞர் சபையைச் சேர்ந்த பீஜோய் சேன் தெரிவித்தார்.

Veerakesari
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)