07-19-2004, 03:14 AM
<b>அரசு - புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும்: இந்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் </b>
[ கொழும்பிலிருந்து சேரலாதன் ] [ ஞாயிற்றுக்கிழமை, 18 யுூலை 2004, 18:36 ஈழம் ]
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிக்கின்றார்.
இது விடயத்தில் இந்திய நிலைப்பாட்டில் எதுவித மாறுதலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக புூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதம மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் கொழும்பு தனியார் வானொலியின் நிருபருக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கான முதலாவது உத்தியோக புூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஜெயராஐ; பெர்ணான்டோபுள்ளே அநுரகுமார திசநாயக்க ஆகியோரும் இடம்பெற்றார்கள்.
புதுடில்லி விமான நிலையத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சென்றடைந்தபோது இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் அவரை வரவேற்றார்கள்.
இதன்போது இந்தியாவிற்கான இலங்கைத் து}துவர் மங்கள முனசிங்கவும் பிரசன்னமாகி இருந்தார்.
இன்று காலை இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள ஒபராய் ஹோட்லில் நடைபெற்றது.
இதன்போது வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜெயராஐ; பெர்ணான்டோ புள்ளே, விவசாய அமைச்சர் அநுரகுமார திசநாயக்க ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இடையிலேயே தடைப்பட்டமை தங்களுக்கு வருத்தத்தை தந்தது எனவும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
நோர்வே இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும் இந்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.
நன்றி
புதினம்
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுதல் என்பது இதுதானோ?