Posts: 46
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
கணணிப்பித்தன்/Kanani Wrote:பூனை ஏன் புலி மாதிரி இல்லை?
பூனை ஏன் பாய்ந்த விழுந்து ஒரு மானையோ அல்லது மரையையோ வேட்டையாட முடியாது?
குருவியண்னை பதில் வேணும்....சிலபேர் கேக்கினம் :wink:
கணணி அண்ணை
ஆண் புூனையோ, பெண் புூனையோ,
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சீதனம் என்பது தம்பதியருக்கே அன்றி ஆண்களுக்கல்ல...ஆனால் அதனால் எழும் ஆதிக்க வெறி மட்டும் பெண்களிடம் தான் வருகிறது ஏன்....இதிலிருந்து புரிகிறதா யார் ஆதிக்க சக்திகளாக விரும்புகின்றனர் எனபது....தமக்குள்ளேயே ஆதிக்கம் போட்டி பொறாமை ஒற்றுமையின்மை கோள் முடிதல் ஆண்களைத் தூண்டிவிடுதல் இப்படிப் பலதும் செய்து கபட நாடகம் போட்டு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுபவர்கள் பெண்கள்...இதையெல்லாம் ஒட்டு மொத்த குடும்ப நலன் கருதி தாங்கிக் கொள்ளும் சுமை தாங்கிகள் தான் ஆண்கள்...இறுதியில் ஆதிக்க சக்தி என்ற பட்டம் சூட்டுதலும்....இதுதான் ஆண்கள் விழிப்படைய முக்கிய காரணம்...பெண்களே திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்....! ஆண்களாலல்ல மனித சமூகத்தால்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
இதுதான் சீதனம் எண்ட பெயரை தொடர்ந்து வைத்திருக்கக்கூடாது....அதே பெயரைத் தொடர்ந்தால் ஏதோ நாங்கள் அவையின்ர காசில வாழுறமாதிரித்தான் கதைவிடுவினம்....
வாழ்க்கையைத் தொடக்கத் தேவையான மூலதனம் இரு வீட்டாரிடமுமிருந்து!
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வட்டம்
சங்கிலிச்
சட்டம்
வேண்டும்
சீர்திருத்தம்
வேண்டாம்
வீண்வாதம்
ஆணாதிக்க
சமூகம்-இதில்
ஆணல்ல
சமூகம்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஆண் ஆதிக்கம் என
ஒரு சாரார் பகர
பெண் ஆதிக்கம்
கொடிகட்டிப் பறக்குது...!
சீர்திருத்தமதை வரவேற்போம்
ஆணும் பெண்ணும்
சமூகவியல் சமத்துவம் கொண்டிளங்க
நாம் கை கோர்ப்போம்...!
ஆணைச் சாடி பெண்ணின் குற்றம்
மறைத்தல் என்றும் அனுமதியோம்...!
பெண்ணிற்கு இனியும் சலுகைகள் தரோம் - என்று
இன்றே பறை சாற்றிடுவோம்...!
அடுக்களை இன்று சமத்துவம் கண்டுவிட்டது
சீதனமும் பெயர் மாறி சமனாய் பகிரப்படட்டும்
தனியே பெண்ணைச் சீண்டுதலை ஆணும்
ஆணைச் சீண்டுதலைப் பெண்ணும் தவிர்க்கட்டும்
சமத்துவம் என்று
அநாகரிகம் வளர்ப்பதை சமூகத்திற்காய்
பெண்ணிடமும் ஆணிடமும் தவிர்ப்போம்..!
சமூகக் குற்றங்களில்
பெண் அநுதாபம் களைவோம்
நீதியை நாட்டுவோம்
ஆணைக் கடிதல் தவிர்ப்போம்...!
இத்தனையும் செய்ய ஆண்கள் பலர் தயார்
பெண்கள் தயாரா...?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
கடந்த மாதம் 9ஆம் திகதி தந்தையான பஞ்சாட்சரம் சிறீகாந்தன் என்பவரி னால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் 15வயதுச் சிறுவன் சிறீகாந்தன் தயாளனின் மரண விசாரணை நேற்றுமுன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இடம்பெற்றது.மானிப்பாய் பொலீஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தி நீதி மன்றின்முன் ஆஜர் செய்தனர். அப்போது இறந்தவரின் 14வயதுச் சகோதரி தொடர்ந்து சாட்சியமளிக்கும்போது கூறியதாவது:-
~இறைச்சிக்காக மாடுகளை வாங்கிவிற்கும் தொழிலை அப்பா மேற்கொண்டு வந்தார். நாளாந்தம் அவர் குடித்துவிட்டே வீட்டுக்கு வருவார். நாங்கள் கோப்பாயில் குடியிருந்தோம். பிறகு ஆனைக் கோட்டையில் நிரந்தரமாக குடியிருக்க வந்து குடியிருக்கின்றோம்.~~எங்களுடன் சொந்தம் எதுவும் இல்லாத ஒருபெண்ணையும் எங்கள் வீட்டில் அப்பா கொண்டுவந்து இருத்தியிருந்தார். இவருடன் மிகவும் அன்பாக அப்பா பழகுவார். அவரையும் அம்மாவைப் போன்றே நடத்துவார்.
~~இந்தப் பெண்ணுக்கும் அம்மாவுக்கும் இடையில் அடிக்கடி சண்டை வரும். பிறகு அம்மா அப்பெண்ணை வீட்டிலிருந்து துரத்திவிட்டார். அதன்பின் அப்பா வீட்டிற்கு வந்து ஒவ் வொரு நாளும் சண்டை பிடிப்பார்.~~அப்பாவை கடந்த மாதம் 7ஆம் திகதி பொலீஸார் வீட் டிற்கு வந்து பிடித்துச்சென்றனர். அதன்பின்னர்தான் வீட்டில் இருந்து சென்ற பெண் காரணமாக அப்பா கோப்பாயில் சண்டை பிடித்துள்ளதாக எனக்குத் தெரியும். நீதிமன்றில் இருந்து அப்பாவை அம்மாவே பிணை எடுத்தார்.
~~அம்மாவுடன் எமது உறவினர்களான செல்வராசா, சந்திரன், சீலன் ஆகியோரும் நீதிமன்றுக்குச் சென்றிருந்தனர். ஆனால், அம்மாதான் முதலில் வீட்டுக்கு வந்தார். பிறகுதான் அப்பாவும் ஏனையவர்களும் வீட்டுக்கு வந்தனர்.~~வீட்டிற்கு வரும்போதே வெறியில் வந்த அப்பா, ~எல்லோ ரும் இருங்கோ வெட்டுகின்றேன்| என்று கூறிக்கொண்டே வந் தார். அப்போது இறந்துபோன அண்ணா வீட்டின் வெளியில் நின்றார்.~~வீட்டுக் கூரையில் மீன் வெட்டும் கத்தி ஒன்றை அப்பா ஒளித்து வைத்திருப்பார். அக்கத்தியை எடுத்துக்கொண்டு அண்ணாவைப் பிடித்துவிட்டார். நாங்கள் கத்திக்கொண்டு ஓடி வந்தோம்.~~அப்போது அப்பா அண்ணாவைக் கத்தியால் பிடரிப்பக்கம் அடிப்பதைக் கண்டேன். நாங்கள் எல்லோரும் பயத்தில் மாமி வீட்டை ஓடிவிட்டோம். பிறகு மாமா வந்து கூறிய பின்னர்தான் அண்ணா வெட்டப்பட்ட இடத்திற்கு வந்தோம்|| - எனவும் குறிப் பிட்டார்.
[size=9]நன்றி உதயன்
இந்த ஆணாதிக்கமிருக்கே.. அது சொல்லி மாளாது
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
[quote=Manithaasan]
சகோதரிகளிருக்க தனது மாப்பிளைக்கு கூட சீதணம் கொடுத்ததால் தனது மாப்பிளை உயர்ந்தவர் என சகோதரிகளிடமே பேசிய பெண்களும் எமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றனர்..
மணிதாசன்
விதிவிலக்குகள் விதிவிலக்குகள்தான்.
பெரும்பான்மையான பிரச்சனை எதுவென்றுதான் பார்க்க வேண்டும்.
nadpudan
alai
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இன்னமும் யாரும் அடிப்படைப் பிரச்சினைக்குள் வரவில்லை.
எல்லோருமே வெளியில் தான் நின்று கொண்டிருக்கிறீர்கள்.
விளங்குதர்?
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
கணணிப்பித்தன் இதை சமூகம் ஏற்பதாக நான் சொல்லவரவில்லை. சமூகத்தில் இருப்பதைத்தான் குறிப்பிட்டேன்.
ஏதாவது ஒன்றிரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இங்கு கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.
எனது பங்கிற்கு இது.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இதில் ஒன்றை விட்டுவிட்டீர்களே? பெண்கள் ஏன் வீட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டும்.. அவர்களை அடக்க சட்டம் இடம் கொடுக்கிறதா? அல்லது அவர்களால் ஆணின் துணை இல்லாமல் வாழ முடியவில்லையா? பெண்கள் வீட்டுள் அடங்கி இருக்க ஆண்கள்தான் காரணமென்றால்.. அவர்களை சட்டத்தின் முன்னே கொண்டு வர ஏன் பெண்கள் பின் நிற்கிறார்கள்? அதற்கு யார் போடும் அடக்குமுறை காரணமாகிறது? கொஞ்சம் விளக்குங்களேன்.
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-Mullai+-->QUOTE(Mullai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
கைகழுவினால் துடைத்துத்தான் விடுவார்கள் ஆண்கள்....பிறகு ஜீவானாம்சம் சொத்தில் பாதிதா பிள்ளையை பொறுப்பெடு என்று சுமைகளை போடுவது யார்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது நல்லாயிருக்கு.
உங்களுடைய பிள்ளைக்கு உங்களுடைய சொத்தைக் கொடுப்பதிலும் சுயநலமா?
பிள்ளையை ஆண்களிடம் விட்டுவிடுங்கள்..அவர்களின் சொத்தென்றால் பிறகேன் எடுத்துக் கொள்கிறீர்கள்...பிள்ளையைச் சாட்டியும் பிடுங்களோ.... இன்று ஆண்கள் தங்கள் பிள்ளையை தாய் மாருக்கு ஈடாக வளர்க்கத் தெரிந்திருக்கிறார்கள்...சமூகத்து விதிவிலக்குகளை இங்கு இழுத்து வாதத்தை திசை திருப்ப வேண்டாம் பின் நாமும் உள்ள குப்பை கூழங்களைக் கொட்ட நேரிடும் கொட்டினால் களம் நாறும்...! பெண்களின் மானமும் கப்பல் ஏறும்...தேவையா அது....விதிவிலக்குகள் ஆண்களிலும் உண்டு அதே அளவு பெண்களிலும் உண்டு ...இதை பல தடவை இக்களத்தில் சொல்லியாயிற்று.... மீண்டும் மீண்டும் சுப்பரின் கோடிக்குள்ளையே சுத்துவதன் நோக்கம் என்ன கருத்துப் பற்றாக் கூறையா...?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Alai Wrote:[quote=Manithaasan]
வெளிநாட்டு மாப்பிள்ளை, டொக்ரர், இஞ்சினீயர்,மாப்பிள்ளை தேடியது எமது சமூகம்.அதை உள்வாங்கிய பெண்கள் பலர் அத்தகைய மாப்பிள்ளைகளையே வேண்டுமென நின்றதும், .
தனக்கு வரப் போகும் பெண் எப்படியிருக்க வேண்டுமென ஆண் எதிர்பார்ப்பது போல
ஒரு பெண் தனக்கு வரப் போகும் ஆண் எப்படியிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.
தவறானவை சீதனம் என்ற பெயரில் பெண் வீட்டாரைக் கஸ்டப் படுத்துவது... போன்ற விடயங்களே!
ஆண்கள் ஒன்றும் காசைக் காட்டி எனக்கு டொக்டர் பொம்பிளை அல்லது இங்சினிஞர் மாப்பிள்ளை என்று கேட்டதாக சரித்திரம் கிடையாது...பெண்களின் பெற்றோர் பெண்களின் தூண்டுதலின் பேரில் 'என்ற பிள்ளை கட்டினா டாக்குத்தரத்தான் கட்டுவா இல்லாட்டி இஞ்சினியர் இல்லாட்டி எங்கவுண்டன்'...அப்ப எங்களை மாதிரி இங்க அங்க ஒடி ஆடி வேலை செய்யுற ஏதோ ஒரு தொழில் செய்யுற பொடியள் என்ன பண்ணுறது..... அங்கினேக்க கிடக்குற கழிவு கட்டைகளை கட்டி ஏத்துவினமாக்கும்...அதுகளுக்கு மனம் வந்தோ வராமலோ வாழ்வு கொடுக்கிற பல ஆண்களைக் கண்டுள்ளோம்..அங்கே ஆண்களின் மனது கவனிக்கப்பட்டதா ஆக டாக்குத்தருக்கும் இஞ்சினியருக்கும் எங்கவுண்டனுக்கும் தான் மனசு அதோட அவையை கட்டுற பொம்புளையளுக்கும் தான் மனசு மற்றவனுக்கெல்லாம் என்ன கல்லே....
மனசைப் பாருங்கோ சேட்டிபிக்கற்ற பிறகு பாப்பம்.... அப்படியே செய்யுறியள்....என்ன டாக்குத்தர் என்டால் நாலு காசு சுளையா கொண்டுவர தன்ற பிள்ளை நல்லா இருக்கும் எண்டு அங்க காசைக் கொடுத்து பொருளை வாங்கிற மாதிரி வாங்கிப்போட்டு பிறகு சீதனம் ஆண்கள் காசுப் பிசாசுகள் வாழ்க்கை கொடுக்கிறாங்கள் இல்லை எண்டுறது ஆரு அதும் நீங்கள் தான்......என்ன கதைக்கிறியளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்....ஆண்களை கெடுக்கிறதும் நீங்களே...திருந்தவும் விடமாட்டியள் நீங்களும் திருந்த மாட்டியள்.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Alai Wrote:[quote=இளைஞன்]இன்னமும் யாரும் அடிப்படைப் பிரச்சினைக்குள் வரவில்லை.
எல்லோருமே வெளியில் தான் நின்று கொண்டிருக்கிறீர்கள்.
விளங்குதர்?
இளைஞன்
அடிப்படை பிரச்சனையை யாருமே ஏற்றுக் கொள்வதாயில்லை.
பெண்ணை அடக்கிக் கொண்டே(வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டே)
அவர்கள் ஏன் வெளியில் வரவில்லையென்று கேட்டுக் கொண்டிருப்பவர்களால் எப்படி அடிப்படைப் பிரச்சனையை விளங்கிக் கொள்ள முடியும்.
ராசா இளைஞன்...என்னப்பு அந்த அடிப்படைப் பிரச்சனைகள் அதுகளை கொஞ்சம் வரிசப்படுத்துங்கோ பதில் தரலாம் அதைவிட்டுட்டு 'அடிப்படை பிரச்சனை' எண்டு எழுத்தில எழுதுறதால எங்களுக்கு அடிப்படையானது அவைக்கு அடிப்படையா இருக்காது அவைக்கு அடிப்படையானது எங்களுக்கு அடிப்படையா இருக்காது எண்ட வாதமும் புதுசா முளைக்கவெல்லா ஆரம்பிச்சிடும்...!
நீங்கள் சொல்லுறதை எல்லோரும் அடிப்படை எண்டு ஏற்றிச்சினம் என்டா அதுக்குப் பிறகு நாங்கள் பதில் தரச் சரியா இருக்கும் அதுவரைக்கும் பதில் எழுதிறதில பலனில்லை ராசா...! நாங்கள் சில அடிப்படையில நிண்டுதான் கருத்தை வைக்கிறம் ஆனால் அது எங்களுக்கான அடிப்படைதானே தவிர சமூகத்துக்கான முழுமையான அடிப்படையல்ல.....! சமூகம் என்று போனால் பல விடயங்களை நுட்பமாக ஆராய்ந்தால் பல அடிப்படைகளை தேடலாம்..அப்படித்தேடி எழுதினால் PhD பட்டம் வாங்கிடலாம்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>