Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஜேர்மன் எம்.பி.க்கள் முன்னிலையில் யாழ். எம்.பி.க்கள் இருவர் மோதல்
இலங்கை வந்துள்ள ஜேர்மனி எம்.பி.க்கள் ஐந்து பேர் நேற்று முன்தினம் காலை பாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பு சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும், யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜாவிற்குமிடையில் பலத்த கருத்து மோதல் ஏற்பட்டது. இரு தமிழ் அரசியல்வாதிகளும் ஆங்கில மொழியில் நடத்திய கருத்து மோதலை ஜேர்மன் எம்.பி. க்கள் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள். அவர்களின் சார்பாகவே தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது என யாழ். மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா கூறினார்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நீதி நியாயமான தேர்தல் நடைபெறவில்லை. இதனைத் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய யூனியன் அறிக்கை உட்பட அனைத்து அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதனால் இருவருக்கிடையிலும் பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஜயந்த தனபாலவும் புலித்தேவனும் கொழும்பில் சந்திப்பு
சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் ஜெயந்த தனபாலவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவனும் சந்தித்து, தற்போதைய சமாதான முயற்சிகள் குறித்து உரையாடியுள்ளனர்.
பேச்சுவார்த்தை முறிந்துபோன பின்னர், உயர்மட்டத்தில் நடைபெற்றுள்ள இரு பகுதிக்குமிடையிலான இச்சந்திப்பிற்கு பலதரப்பு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், இது ஒரு பரஸ்பர சந்திப்பு மட்டுமே என்று ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.
வருகிற வார இறுதியில் கொழும்பிற்கு வருகை தரவுள்ள நோர்வே தரப்பினர், கிளிநொச்சி சென்று முக்கிய பேச்சுக்களை நடாத்தவுள்ளதுடன், அடுத்தகட்டப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து முக்கிய விபரங்களை வெளியிடவுள்ளார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், தனபால-புலித்தேவன் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எப்படியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதன் மூலம், தடைப்பட்டுள்ள சர்வதேச நிதியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி சந்திரிகா, இம்முறை நோர்வே தூதுவர்களுடாக பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படுவதை உறுதி செய்வார் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
----------------------------
கிளிநொச்சியில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர்!
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புறு ஹொவ்டே இன்று பிற்பகல் 2:30 மணியளவில் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானு}ர்தி மூலம் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்தில் சென்று இறங்கியுள்ளார்.
இவர் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இதனிடையில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் மாவட்ட பிரதிநிதிகளுக்கும், கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் செயற்படும் மாவட்டங்களில் போர் நிறுத்த உடன்படிக்கையை மேலும் பலப்படுத்தி, யுத்த நிறுத்த மீறல்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுதலைவர் ட்ரொன் புறு ஹொவ்டே, பிரதித் தலைவர் ஹக்ரப் ஹொக்லன்ட் மற்றும் வடக்கு, கிழக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, வன்னி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அனைத்திலும் பணியாற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் நிலைமைகளால் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதில் கண்காணிப்புக் குழுவினர் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இதனால், அவர்கள் தங்கள் பணிகள் குறித்து மீள்பரிசீலணை செய்யும் நிலையில் இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை கண்காணிப்புக் குழுவின் குரல்தரவல்ல அதிகாரி லீசா பொன்னபேர்க் மறுத்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சமாதான முயற்சிகளை ஜேர்மனி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது
இலங்கையின் சமாதான முயற்சிகளை ஜேர்மனி மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஜொஸ்கா பிஸ்கர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர், நேற்று முன்தினம் சிறிலங்கா ஐனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைக் கூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஐனாதிபதி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் தயாரித்;;;து முடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் பதிலுக்காகவே தாம் காத்திருப்பதாகவும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஜொஸ்கா பிஸ்கர், இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களை ஜேர்மனி மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருவதாகவும், இதன்படி இலங்கையில் மேலதிக முதலீடுகளை ஜேர்மன மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:சமாதான முயற்சிகளை ஜேர்மனி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது
:roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>கருணா நேற்று அதிகாலை வெளிநாடு பயணம்? </b>
தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலக்கப்பட்ட கருணா வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சிங்கப்பூர் நோக்கி பயணமான விமானத்தில் இவர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான அனுரா பண்டார நாயக்க சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இவரும் சிங்கப்பூர் வழியாக சீனா சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
போர் நிறுத்தம் செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்: கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்
போர் நிறுத்தம் செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ட்றொன் புறு}வ் ஹொவ்டே சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரை இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறிலங்கா அரச படைத்தரப்பில் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா அரசு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு போர் நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சூழலில் போர் நிறுத்த உடன்பாட்டை செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சிறிலங்காப் படையினரின் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். மட்டக்களப்பில் இடம்பெற்ற போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதிதாக உருவாகி அல்லது உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக் குழுக்களிடமிருந்து போர் நிறுத்த உடன்பாடு 1.8 புள்ளி சரத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இன்றைய சந்திப்பை முடித்துக்கொண்டு இன்று உலங்கு வானூர்தி மூலம் கொழும்பை சென்றடைந்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் விடுமுறையில் நோர்வே செல்லவுள்ளார்.
இன்றைய சந்திப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும் கலந்துகொண்டனர்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மலேசியா.. சிங்கப்பூர்.. அவுஸ்திரேலியா.. முந்தி போனவர் எண்டு அறிவிச்சாங்கள்.. திரும்ப கொழும்பிலையெண்டு தேடினாங்கள்.. இப்ப சீனாவுக்கோ..? சில்க.. அங்கைதான் மலிவு.. ஓருவேளை ஷொப்பிங் போனாரோ தெரியேல்லை..
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் தாத்தா போய் வந்து.. வந்து போய்....போயிருக்கலாம் தானே... ஒசி ரிக்கற்... நாங்களே போய் வரமாட்டம்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]திருமலைத் துறைமுகம் மீண்டும் விவகாரமாக்கப்படுகிறது?
கடந்த ஆண்டு ஐனாதிபதி சந்திரிகாவால் அமைச்சுக்களைக் கையகப்படுத்தக் காரணமாகக் காட்டப்பட்ட மணிராசன்குள முகாமும், திருமலைத் துறைமுகச் சுற்றுவட்டாரப் பாதுகாப்பும் பேச்சுவார்த்தைக்கான தடையாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றியுள்ளன.
மணிராசன்குள முகாம் விவகாரத்தை ரணில் அரசைக் கலைப்பதற்கான ஒரு காரணியாகப் பயன்படுத்திய சந்திரிகா, தாங்கள் பதவிக்கு வந்ததும் அவ்விவகாரத்தை கிடப்பில் போட்டிருந்தார்.
ஆனால் சர்வதேச நாடுகளால் நிதிவழங்குவதற்கான நிபந்தனையாக சமாதானப் பேச்சை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை மற்றும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழ்தேச விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் சிறீலங்கா அரசு செயற்பட்ட விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டமை என்பன சிறீலங்கா அரசை ஒரு இக்கட்டிற்குள் தள்ளியுள்ளது.
இந்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ சமாதானப் பேச்சை ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அரசு அதனைத் தடுப்பதற்கான மாற்றுவழிகளைப் பரிசீலித்து வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
இதனொரு கட்டமாக இந்திய உதவிகளை, கடன் வசதிகளைப் பெறுவதற்கான முயற்சியில் பிரதமரை ஈடுபடுத்தியுள்ள சந்திரிகா, சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறும் முயற்சியில் அநுரா பண்டாரநாயக்காவை ஈடுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, திருமலைத் துறைமுகத்தைச் சுற்றி புலிகள் முகாம்களை அமைத்துள்ளனர் என்றும், திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாகவுமான ஒரு குற்றச்சாட்டை ஐனாதிபதி உத்தியோகபூர்வமாக முன்வைத்து பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலைத் தள்ளிப்போட முனைவதாகத் தெரிய வருகிறது.
இதற்காகவே நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சரை சந்திரிகா அழைத்துள்ளதாகவும், அவர் கொழும்பு வரும் போது இந்தவிடயம் அவருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
கருணா விவகாரத்தில் சிறீலங்காவின் பங்கு ஐயந்திரிபுற நிரூபிக்கப்பட்டமையால் பாரிய புலனாய்வு, இராஜதந்திரத் தோல்வியைக் கண்டுள்ள சிறீலங்கா அரசு அவ்விவகாரத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவும் இதனை மேற்கொள்கிறது என உள்வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியற்துறையினர் திருமலை மாவட்டத்தின் சில இடங்களில் தனியார் வீடுகளில் அமைத்துள்ள சிறிய பணிமனைகளையே முகாங்களாகச் சித்தரித்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சியில், மணிராசன் குளத்தில் விடுதலைப்புலிகளின் அதிக பிரசன்னம் இருப்பதான சந்தேகமும் வெளியிடப்படவுள்ளது.
குறிப்பாக, திருமலைத்துறைமுகத்தைச் சுற்றிவளைத்து விடுதலைப்புலிகள் முகாங்களை அமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டோடு, துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் படையினர் தரைமார்க்கமாகப்போக முடியாதபடி விடுதலைப்புலிகள் முகாம்களை அமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்காக விடுதலைப்புலிகளின் அரசியற் பணிமனைகளை சந்திரிகா பயன்படுத்தவுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:மலேசியா.. சிங்கப்பூர்.. அவுஸ்திரேலியா.. முந்தி போனவர் எண்டு அறிவிச்சாங்கள்.. திரும்ப கொழும்பிலையெண்டு தேடினாங்கள்.. இப்ப சீனாவுக்கோ..? சில்க.. அங்கைதான் மலிவு.. ஓருவேளை ஷொப்பிங் போனாரோ தெரியேல்லை..
கொழும்பில இருந்து கொண்டு ரீலும் விடுவாங்கள் தாத்ஸ்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
பெரும்பான்மையினை நிரூபித்து சபாநாயகரை மாற்றுவோம்
என்று சவால் விட்ட அரசு மௌனம்
இந்திய பருப்பை அன்று எதிர்த்த ஜே.வி.பி. இன்று ஆதரவு
கோருவது வேடிக்கை என்கிறது ஐ.தே.க.
(எஸ்.ஸ்ரீகஜன்)
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்போம் என்றும் சபாநாயகரை மாற்றுவோம் எனவும் சவால்விட்ட அரசாங்கம் இன்று மௌனமாகவுள்ளது. அரசாங்கம் சொல்வதொன்றாகவும் செய்வதொன்றாகவும் இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களுக்களித்த வாக்குறுதிகளுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இம்முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனக் கூறிய அரசாங்கம் அதனை நிறைவேற்றாது, இன்று எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனக் கோருவது வேடிக்கையானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான ரவீந்திர ரந்தெனிய இதனைத்தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.எம்.பி. அகில காரியவசம், மாகாணசபை உறுப்பினர்களான சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் பேச்சாளர் ரவீந்திர ரந்தெனிய மேலும் தெரிவித்ததாவது:
அரசாங்கம் மக்களுக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கின்றது. 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது பெரும்பான்மையை நிரூபிப்போம் என அரசாங்கம் பறைசாற்றியது. சபாநாயகரை மாற்றப் போவதாக கூறியது. அவை எதனையும் செய்யாத அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியினரை பெரும்பான்மையினை நிரூபிக்குமாறு கோருகின்றது.
இதேபோல் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எதிர்கட்சியின் நிலைப்பாட்டினை ஜே.வி.பி.கேட்கின்றது. ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இடைக்கால நிர்வாக சபை குறித்து எதிர்க் கட்சியினரின் கருத்துக்களைப் பெறவேண்டும் என கூறியுள்ளார்.
சமாதான முயற்சியினை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடைக்கால நிர்வாகசபை குறித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது அரசாங்கமே தவிர எதிர்க்கட்சியல்ல. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆற்றிய உரையினை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எனவே இவ்விடயம் குறித்து எமது கருத்தினை தெரிவிக்க முடியாது. பாராளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட விடயம் ஒன்று தொடர்பில் நாம் கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல.
அகில காரியவசம் எம்.பி.
இந்தியாவில் இருந்து பருப்பு, கொத்தமல்லி போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அன்று எதிர்ப்புத் தெரிவித்த ஜே.வி.பி.இன்று இந்தியாவிடம் ஆதரவு கோரும் நிøயில் உள்ளது. இந்தியாவுக்கு பிரதமருடன் விஜயம் செய்த ஜே.வி.பி.அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க இந்தியா பெருமளவு உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக இன்று பேட்டியளித்துள்ளமை வேடிக்கையானது என்று இங்கு கருத்து தெரிவித்த அகில காரியவசம் எம்.பி.கருத்து தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்தித்து உதவி கோரவும் ஜே.வி.பி. இன்று தயாராகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
-வீரகேசரி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
புலிகள் - அரசுக்கு இடையே நேரடிப் பேச்சுக்களை நடத்த உதவுவதற்கு இந்திய அரசு மறுப்பு
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுவதற்கு இந்திய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
சமாதான முயற்சிகளில் அனுசரனை வழங்கிவரும் நோர்வேயை இந்த முயற்சிகளில் இருந்து தவிர்க்கும் நோக்கத்தோடு விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவவேண்டும் என்று சிறிலங்கா தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்திருந்த கோரிக்கையை இந்திய தலைவர்கள் நிராகரித்து விட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்திருக்கிறது.
விடுதலைப் புலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் காரணத்தால் இந்த முயற்சியில் இந்திய அரசாங்கத்தினால் சட்டாPதியாக மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜே.என்.டிக்ஷித் ஆகியோரும் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் ஆசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் கூடுதல் ஒத்துழைப்பு வழங்க இந்திய தலைவர்கள் உறுதியளித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு தகவல்களை சிறிலங்காவுடன் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உறுதியளித்திருக்கிறார்.
இதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு துறையின் நடவடிக்கைளை துல்லியமாக கண்காணிக்கும் வல்லமை கொண்ட நவீன தொழில் நுட்ப உபகரணங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருவது போன்ற பல தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை சிறிலங்கா படைத்துறைக்கு தெரிவித்திருப்பாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]Tamils cannot be divided and ruled -TNA
[TamilNet, July 23, 2004 08:31 GMT]
"The Sri Lankan state and military are using armed groups to divide and rule Tamil society in Batticaloa. They did it in the past. My people will never fall prey to the machinations of divisive forces because they have made immense sacrifices for the Tamil cause", said Mr. Senathirajah Jeyanandamoorthy, Tamil National Alliance MP for Batticaloa, speaking at a press conference by TNA regarding the current situation in the east.
"I spoke against the killings in Batticaloa, against the involvement of the military intelligence in backing the killers. Last night Police raided the house in which I was staying in Colombo. This is intimidation," the MP said.
The other TNA MPs from the Batticaloa and Amparai districts asserted that they will take forward the Tamil national mandate given by their people at the last general elections.
Ms. Thangeswari Kathiraman, TNA MP for Batticaloa, said she worked at the grass roots level to clarify the political situation and to address development issues affecting the backwaters of my district.
"There are reports in the press that the Tigers are occupying Trincomalee. There is nothing to occupy in Trincomalee because it is part of our homeland," said Mr. Eelaventhan, TNA national list MP.
"No one can divide and rule our people. Tamils will pay any price to defeat divisive forces. We strongly suspect that the Sri Lanka military intelligence was behind the recent killings in east. The bogey of regionalism has been raised from time to time to divide the Tamil people. But there is no history that it ever won," said Mr. Selvam Adaikalanathan, TNA MP for Vanni.
"I am a person from Batticaloa. But the people of the Vanni have elected me as their MP. This shows that our people are not swayed by regionalism," said Mr. Sivanathan Kishore, TNA MP for Vanni.
"All the post independence constitutions of Sri Lanka were made without our consent. There have been many attempts in the past to divide Tamil society. In the beginning it was said that Thanthai Selva (founder of the Federal Party) was christian. Then they tried to split our society on the caste issue. All these attempts failed. Regionalism too failed to divide Tamil society. We will win if the Sri Lankan state does not give us the Interim Self Governing Authority because then we would establish a separate state. We will win if we get the ISGA. Either way we would win", said Mr. M.K Sivajilingam, TNA MP for Jaffna.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
LTTE cadre shot dead in Batticaloa north
[TamilNet, July 23, 2004 14:36 GMT]
An LTTE cadre identified as Mr. Seenithamby Mahalingam, 28, was shot dead in Kandaladi, near Vakarai, 64 kilometres north of Batticaloa.
The LTTE cadre was shot dead by unidentified gunmen around 10.30 a.m. sources said.
---------------------------
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் கதிரவெளியில் சுட்டுக் கொலை
இன்று காலை பத்து மணிக்கு புளியங்கண்டடி கதிரவெளியில் வைத்து சீனித்தம்பி மகாலிங்கம் வயது 28 எனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
எமது தேசியத்தை பாழடையச் செய்யும் நோக்குடன் செயற்படும் இத் தேச விரோத சக்திகளை மக்கள் இனம் கண்டு இவர்களை எம்மத்தியிலிருந்து வெளியேற்ற தேசியத்தில் பற்றுள்ள அனைவரதும் தலையாய கடப்படாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு. அம்பாறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுட்டுக் கொல்லப்பட்ட சீனித்தம்பி மகாலிங்கத்தின் குடும்பத்தினருக்கும் இவ்வறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சகோதர யுத்தத்தை தவிர்க்கப் போவதாகச் சொன்ன கருணாவோ அல்லது கருணாவின் பெயரைப் பாவித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோ இக்கொலைகளைச் செய்கிறார்கள்?
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சகோதர யுத்தத்தை தவிர்க்கப் போவதாகச் சொன்ன கருணாவோ அல்லது கருணாவின் பெயரைப் பாவித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோ இக்கொலைகளைச் செய்கிறார்கள்?
<b> . .</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
கருணாதரப்பு விடுதலைப்புலிகளின் பிரபா அணி இக்கொலைகளை செய்வதாக சொல்லுகின்றதே.. யாரை நம்புவது..?
Truth 'll prevail
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
அப்ப பெரிய களையெடுப்பு நடக்கிறதா?
<b> . .</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
எனக்கு தெரியாதப்பா.. பலதுக்கும் இப்படித்தான் அறிக்கை விடுறாங்கள்.. தற்கொலைக்குண்டுகூட தங்களின்ரை இல்லையெண்டு கண்டன அறிக்கை விட்டாங்கள்.. யாரை நம்பிறது..?
Truth 'll prevail
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
கருணா விவகாரத்தால் சபையில் ஏற்பட்ட சர்ச்சை
(அ.நிக்ஸன், ஆர்.பிரியதர்ஷினி)
அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கருணாவை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் சபையில் உரையாற்றியமை தொடர்பாக அரசாங்கத்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே நேற்று சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவாஜிலிங்கம் எம்.பி. ஆற்றிய உரை ஊடகங்களில் வெளியானமையினால் அனுரா பண்டாரநாயக்கவின் உயிருக்கு ஆபத்து என்றும் ஆதாரம் இன்றி சிவாஜிலிங்கம் எம்.பி. சபையில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தமை அனுரா பண்டாரநாயக்கவின் சிறப்புரிமை மீறல் எனவும் அரச தரப்பு உறுப்பினர் மேவின் சில்வா சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பியபோதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சபாநாயகரின் அனுமதியுடன் மேற்படி சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய மேவின் சில்வா, விடுதலைப்புலிகளினால் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு ஏற்கனவே ஆபத்துள்ளது. அவரது சகோதரியும் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புலிகளின் தற்கொலைத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்தப்பினார். ஆனாலும் அவரது கண் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிவாஜிலிங்கம் எம்.பி.யின் மேற்படி ஆதாரம் அற்ற உரையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகம் ஒன்று பெரிதுபடுத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு சிவாஜிலிங்கம் எம்.பி.யின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சபையின் நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விடயத்தை மேவின் சில்வா பேசுகின்றார். அனுரா பண்டாரநாயக்க சபையில் இல்லாத வேளை அவர் சார்பாக சிறப்புரிமை பிரச்சினையை எழுப்ப முடியாது என்றார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த மேவின் சில்வா எம்.பி.உங்கள் கட்சியின் எம்.பி. அலிசாஹிர் மௌலானா கருணாவை மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு அழைத்து வந்ததாக கருணாவிடமிருந்து தப்பிச் சென்ற பெண் போராளிகள் தகவல் வெளியிட்ட போது எங்கள் கட்சியோ அல்லது அரசாங்கமோ அதனை பெரிதுபடுத்தவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் மனோ விஜயரட்ன, சிவாஜிலிங்கம் சபையில் கூறியமை அவரின் தனிப்பட்ட கருத்து. அது எதிர்க்கட்சியினதோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினதோ கருத்தல்ல. அத்துடன் மேவின் சில்வா எழுப்பிய பிரச்சினை சிறப்புரிமை மீறல் அல்ல. அது அனுரா பண்டாரநாயக்க பற்றிய தனிப்பட்ட கூற்று என்றார்.
மௌனமாக இவற்றை அவதானித்த சபாநாயகர், இந்த விடயத்தை தவிர்த்துக்கொள்வோம்; சபை நடவடிக்கைகளை தொடருவோம் என்றார்.
-வீரகேசரி
|