Eelavan Wrote:சமயோசிதமாக எழுதுவதென்பது ஆளாளுக்கு வேறுபடும் குருவிகாள் நீங்கள் ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் போது அது உங்களுக்கு சமயோசிதமான கருத்தாகத் தோன்றலாம் இன்னொருவருக்கு அலட்டலாகத் தோன்றும் அதுதான் யோசிப்போம் என்று சொன்னேன்.
யார் என்ன சொன்னாலும் அதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை அதற்குச் சொல்லும் பதில் அந்த இடத்தில் தேவையா பொருத்தமானதா என்று பார்த்துத் தான் சொல்லவேண்டும்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போதே அதனைப் பற்றி தன்னைச் சுயவிமர்சனம் பண்ணிக்கொண்டே வரவேண்டும் அதையே மயூரனும் செய்திருப்பார் என நம்புகின்றேன் அதையே "அவர் அப்போது அப்படிச் செய்தார் நான் இப்போது இப்படிச் செய்கிறேன்" என்று விதண்டாவாதப் சொல்வதில் அர்த்தம் இல்லை
Eelavan
தவறைச்சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
ஆனால் தவறுகளைச்சுட்டிக்காட்டவதனால் மட்டும் களம் அழகாகிவிடாது.
இங்கு எழுதும் ஒவ்வொருவரின் எழுத்தில் தான் அது உள்ளது.
எல்லோரும் வருடத்திற்கு ஒரு முறை வந்து தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டினால் களம் வளர்ந்துவிடாது.
களத்தில் நிறைய எழுதுபவர் என்ற ரீதியில் குருவிகள் தனது கருத்தை முன்வைத்தது சரியே.
அதே போல்த்தான் நானும் கேட்டிருந்தேன்.
அப்படி என்ன தான் மலசலகூடத்துடன் ஒப்பிடும் அளவுக்கு எழுதப்பட்டிருந்தது.
மலசலகூடத்துடன் ஒப்பிடக்கூடிய கருத்துக்களை அப்பகுதிக்கு பொறுப்பானவர்கள் நீக்காது இருக்கின்றனரா?
அதனை மயூரன் விளக்குவாரா?
இதனைக்கேட்ட போது தெளிவாக எழுதியுள்ளாராம்.
தலைப்புக்கு பொறுத்தமில்லாததும். தேவையில்லாதுமாம்.
அது தான் எது ஐயா?
சும்மா நொட்டை நொடுக்கு சொல்லாமல் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.
கண்காணிப்பாளர்களுக்கு இலகுவாக இருக்கும் அதனை அகற்றுவதற்கு.
அதே போல் நாமும் அறிந்து கொள்ளலாம். உண்மையில் அவை மலசலக்கூடக்கருத்தா அல்லது உங்கள் கண்ணில் கோளாறா என்று?
என்னைப்பொறுத்தவரை
மற்றவர்களின் கருத்தை மலசலகூடத்துன் ஒப்பிட்டதே தவறு. அப்படி எழுதி நீங்கள் தான் களத்தை அசிங்கமாக்கிவிட்டீர்கள்.
நான் இங்கு சிநியளவே எழுதியுள்ளேன். அவற்றில் சில சிலவேளை மயூரன் கண்ணுக்கு மலசலக்கூடகருத்தாக இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் சிலர் அதிகளவில் எழுதுகின்றனர். அதில் பல நல்லவிடயங்கள் உண்டு.
சில தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் அவை மலசலகூடத்துடன் ஒப்பிடுமளவுக்கு அருக்கவில்லை.
நான் எல்லாப்பகுதிகளும் வாசிப்பதில்லை. அதனால் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.
அது தான் கேட்கிறேன். எங்கு அப்படி உள்ளது?