தமிழீழ விடுதலைப்புலிகள் (Liberation Tigers of Tamil Ealam)
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்து நீண்டகாலமாக தொடர்ச்சியான நிலையான ஆயுத அரசியல் போராட்டத்தினை முன்னெடுத் திருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமானது 25வது வருடத்தை நிறைவு செய்கிறது. உருக்குப் போன்ற உறுதியுடனும், உன்னதமான உணர்வுடனும் வீரகாவியங்கள் படைத்த வீரமறவர்களின் வரலாறு இது. புரட்சிகர வரலாற்றுச் சூழ்நிலையால் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் தலை மறைவு கரந்தடி அணியாகத் தோன்றி இன்று பரந்து பட்ட மக்களின் அபிமானத்திற்கும் ஆதரவிற்கு முரிய மரபுவழி தேசிய விடுதலை இயக்கமாகப் பரிணமித்துள்ளது. விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கும் போது தமிழீழத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய வரலாற்று பின்னணியைக் குறிப்பிடுவது இன்றியமையாதாகும்.
அஹிம்சாரீதியாக, சாத்வீக - சட்ட ரீதியான - மென்முறை வடிவில் மோற்கொள்ளப்படும் அரசியல் கிளர்ச்சிகள் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படும் போது, சாத்வீக அஹிம்சைப் போராட்டங்களில் இழையோடுகின்ற ஆத்தீக உணர்வுகளை ஒடுக்கு முறையாளன் நிர்த்தாட்சண்மாயமாக அசட்டை செய்யும்போது அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வடிவத்திலேயே வெடித்துக் குமுறுகிறது. இதையே உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று நியதியிலேயே தமிழ் தேசியச் சுதந்திரப் போராட்டம் நெறிப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.
தமிழ் மக்கள் காலங்காலமாக அஹிம்சை வழியிலேயே தங்களது அரசியற் போராட்டத்தினை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்ப தற்காக காந்திஜியின் அஹிம்சை வழிக்கோட் பாட்டினைப் பின்பற்றியே தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்களால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழ் மக்களின் அஹிம்சா ரீதியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களை
தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் அலை அலையாகத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நாசகார இனப்படுகொலைத் திட்டத்தைச் சிங்கள பேரினவாத அரசே திட்டமிட்டு மேற்கொண்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவில் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டன. இறுதியாக, தமிழ்ப் பிரதேசம் பூரண இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு தமிழருக்கெதிரான ஒடுக்கு முறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைவர்கள் நிரந்தரமாக இழைத்து வந்த நம்பிக்கைத் துரோகங்களும் சமாதான முறையில் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் தமிழருக்கிருந்த சகல நம்பிக்கைகளையும் அழித்து விட்டன. அரசியல் அரங்கில் தமிழர்கள் நிராதரவாக்கப்பட்டார்கள். வரலாற்றின் இந்த நெருக்கடியான கால கட்டத் தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் (சுநஎழடரவழையெசல யுசஅநன சுநளளைவயnஉந ஆழஎநஅநவெ) தோற்றம் பெற்றது. அரசு கட்ட விழ்த்து விட்ட காட்டு மிராண்டித்தனமான, இன வழிப்பு தழுவிய ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறெந்த வழியும் இருக்கவில்லை.
எனவே 1970களின் ஆரம்பத்தில் தமிழ் மண்ணில் தோற்றம் கண்ட ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை வளர்ச்சியும், விரிவாக்கமும் அடைந்த தமிழரின் அரசியற் போராட்ட வடிவமாகவே நாம் கொள்ள வேண்டும். தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய இறுதி கட்டத்திற்குத் தள்ளப்படும் மக்கள் வன்முறைப் போராட்டத்தை வரித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. எனவே இந்த வன்முறைப் போர் வடிவமானது எமது அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடன்றி வேறொன்றுமல்ல. இரு தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இந்த முரண்பாடானது, காலப்போக்கில் அடக்குமுறையையும் அதற்கு எதிரான ஆயுத எழுச்சியையும் படிப்படியாக கூர்மையடையச் செய்தது.
புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக்கொண்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கையாண்ட ஒடுக்கு முறை இனவாதக் கொள்கைகளால் தமிழினத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஏற் பட்ட பாரது}ரமான பாதிப்புக்களே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. படித்த தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கத்துறையில் வேலை வாய்ப்புகள் பூரணமாக நிராகரிக்கப்பட்டபோது அவர்களுக்கு இருள்மயமான எதிர்காலம் மாத்திரமே மிஞ்சிக் கிடந்தது.
சிங்கள அரசாங்கத்தின் பாரபட்சமான - தமிழர்களுக்கு எதிரான ஷதரப்படுத்தல்| கல்விக் கொள்கையும் ஷசிங்களம் மட்டும்| என்ற மொழிக் கொள்கையும் தமிழ் மக் களின் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்பினையும், வேலை வாய்ப்பினையும் இல்லாமல் செய்து விட்டது. மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் மோசமாகிக் கொண்டிருந்தது. பொலீஸ், இராணுவ தரப்பால் தமிழ் இளைஞர்களைக் காரணம் ஏதுமில்லாமலேயே கைது செய்தும், மோசமாகச் சித்திரவதை செய்தும் கொன்றும் அட்டூழி யங்கள் இழைத்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாதத்திற்கு நேரடியாக இலக்காகி கொடூரமான - மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர்.
தொழில் வாய்ப்புகளும் உயர் கல்வி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட விரக்தியும், தொடர்ச்சியான பொலீஸ், இராணுவ அட்டூழியங்களால் சினங்கொண்ட தீவிரவாதத் தமிழ் இளைஞர்கள் தங்களின் இந்த மோசமான வாழ்நிலைமைகளைப் பூரணமாக மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் மூலமே தங்களின் தலை விதியை மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதைப் போல, மோசமாகிக் கொண்டிருந்த தேசிய ஒடுக்கு முறையின் மத்தியில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் மாத்திரமே ஒரேயொரு தீர்வாக எஞ்சி நின்றது. 1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாக மெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அரசியற் கோட்பாட்டையும், நடைமுறையையும் கொண்ட புரட்சி அமைபொன்றை நாடி நின்றது. இந்தப் பிரத்தியேகமான அரசியற் சூழ்நிலையில்தான்.
அதாவது 1972ல், விடுதலைப்புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. எமது இந்தப் புரட்சி இயக்கம் கரிகாலனால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த கரிகாலன்தான் இன்றைய தமிழீழத் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன். இயக்கம் தொடங்கப்பட்ட அதன் ஆரம்பக் காலத்தில் புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர் 1976ம் ஆண்டு மே 5 திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டது. விடுதலைப்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும், அர்ப்பணிப்பும், போரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை பெருமளவில் தேசிய விடுதலைக்கான நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்தில் தோய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கம் வெகு விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமாகப் பரிணமித்தது.
இச்சந்தர்ப்பத்தில் 1980களின் நடுப்பகுதியிலும் அதனையடுத்த காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதுடன் ஷகெரில்லா போர் வடிவமும், மரபுவழி யுத்த முறையாக| விஸ்தரிப்படைந்து முன்னேற்றமடைந்தது. இதன் விளைவாக ஆட்டம் கண்ட சிறிலங்கா அரசு இந்திய அரசின் துணையோடு திம்புப் பேச்சுவார்த்தையை முன் னெடுத்தது. ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட ஆகக்குறைந்த உரிமைகளைக் கோரும், அதாவது - பெரும்பான்மை இனத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நியாயமான திம்புக் கோரிக்கைகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியதனால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்பிருந்ததைவிட தீவிரப் படுத்தியதனால் பல கள வெற்றிகளையும், ஆயுதப் போராட்ட சாதனைகளையும் பெற முடிந்தது. அதனால், சிங்கள ஆயுதப்படையினரின் ஆட்டம் அடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். ஆயுதப் போராட்ட சாதனைகளின் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட எமது தாயகத்தின் பல பகுதிகளையும் விடுவித்ததன் மூலம் விடுதலைப் புலிகள், தமிழீழத்தின் தேசிய இயக்கமாகப் பரிணமித்தனர். அத்தோடு அவர்களுடைய மேலாதிக்கம் நிலவிய தமிழ்ப்பகுதிகளின் நிர்வாகத்தையும் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்பகுதிகளில் சிறிலங்கா அரசிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய நிழல் அரசாங்கம் ஒன்று செயற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழீழ மக்களின் நீண்ட நாள் கனவு நனவாக்கப்பட்ட காலமாக அக்காலம் மிளிர்ந்தது என்றே சொல்லவேண்டும்.
இதனைச் சகித்துக்கொள்ள இயலாத சிறிலங்கா அரசானது, வடமராட்சி மேல் ஷஒப்பரேசன் லிபரேசன்| எனப் பெயர் கொண்ட இரா ணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால், சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய முகாமான நெல்லியடி முகாமைத் தகர்த்தெறிந்ததன் மூலம் அந்த ஆக்கிரமிப்பை ஆட்டம் காண வைத்தனர் புலிகள். அந்தத் தாக்குதலின் மூலம் பிறந்தது கரும்புலிகள் என்னும் புதிய சகாப்தம். மில்லர் எனும் தியாக நெருப்பினால் அந்த முகாம் சாம்பலாக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் இருப்பிற்கு பலவழிகளாலும் அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக சிறிலங்கா அரசும், முக்கூட்டுப்படையும் குழம்பிப்போயின. செய்வதறியாது, இந்தியாவின் உதவியை நாடின. அதனையடுத்து தமிழர் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளின் சம்மதமின்றியே இலங்கை - இந்திய ஒப்பந்தம் 29.07.1987ல் கைச்சாத்திடப்பட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய வல்லாதிக்கக் கால்கள் தமிழீழ மண்ணில் பதிந்தன. அதன் பின்னர்தான் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இடம் பெற்றது. தேசியத் தலைவர் தமிழீழ மக்களின்முன் தோன்றி உரை நிகழ்த்தினார்.
ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு வைக்கப்பட்ட பொறி என்பதை தொடர்ந்து வந்த நிகழ்வுகள் நிரூபித்தன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையில் 5 அம்சக்கோரிக்கை நிறைவேற்றப்படாததையடுத்து, திலீபன் உண்ணாவிர தமிருந்தார். ஆனால், இலங்கை - இந்திய அரசுகளின் பாராமுகத்தால் 26.09.1987ல் திலீபனுடைய ஆவி பிரிந்தது. அதனையடுத்து குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரச்சாவுடன் இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளுடன் மோதிய இந்திய இராணுவம் பலத்த அனர்த்தங்களை விளைவித்தது. எனினும் இறுதியில் அரசியல் இராணுவத் தோல்வியுடன் இந்திய இராணுவம் 24.03.1990 அன்று தமிழீழத்திலிருந்து தனது இறுதிச் சிப்பாய்களையும் மீள அழைத்துக்கொண்டது. இதேவேளை, அந்நாள் சிறிலங்காவின் ஜனாதிபதி பிரேமதாஸ அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், வழமைபோல் திரைமறைவு வேலைகளில் பேச்சுவார்த்தையும் முறிவடைந்தது. 01.06.1990ல் 2ம் கட்ட நிர்வாகத்தின் கீழும் இருந்தன. பல இராணுவ முகாம்கள் விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்டன. விடுதலைப்புலிகள் தமிழீழத்தை நோக்கி விரைந்து சென்ற காலமது.
ஆனால், 1995ல் பதவிக்கு வந்த சந்திரிகா அரசு, தன்னை சமாதான தேவதையாக உலகிற்கும், மக்களுக்கும் காட்டும் முயற்சிகளில் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றாது வெறுமனே ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதிலும், போர் ஆயத்தங்களில் சிறிலங்கா அரசானது, தனது அரசியல், இராணுவ சக்தி அனைத்தையும் பயன்படுத்தி யாழ். குடா நாடு மீது சூரியக்கதிர் எனும் இராணுவ நடவடிக்கையை 17.10.1995ல் ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் பலத்த எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர்.
எனினும் மக்களினதும், போராளிகளினதும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு விடுதலைப்பலிகள் தந்திரோபாய ரீதியாகப் பின்வாங்க முடிவெடுத்தனர். மக்களும், விடுதலைப்புலிகளுடன் இடம் பெயர்ந்தனர். அந்த இடப்பெயர்வு ஒரு வரலாற்று நகர்வாகும். இராணுவ நடவடிக்கையிலிருந்தும் அதன் பின்னணியிலுள்ள அரசியற் பொறியிலிருந்தும் தப்பித்து வெளியேறிய மக்கள், சந்திரிகா அரசின் தந்திரோபாயத்தைப் பிசுபிசுக்கச் செய்ததன் மூலம் சாவுமணி அடித்தனர். சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழினம் இனித் தயாராகயில்லை என்பதனையும், மக்களும், புலிகளும் வேறல்ல என்பதனையும் அந்த இடப்பெயர்வு சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டியது.
விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக அகில உலகமெங்கும் ஓடி ஓடி கொக்கரித்துக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஓயாத அலைகள் -01 இராணுவ நடவடிக்கை மூலம் முலைத்தீவு இராணுவ முகாமை முழுமையாகக் கைப்பற்றி முல்லை மாவட்டத்தை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்ததன் மூலம் விடுதலைப்புலிகள் தமது இராணுவ, அரசியல் பலத்தை சிறிலங்கா அரசிற்கும், உலகிற்கும் எடுத்துக் காட்டினர். அந்த இராணுவ நடவடிக்கை 19.07.1996ல் இடம்பெற்றது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதை திறப்பதாகவும் அதன் மூலம் விடுதலைப்புலிக ளின் முதுகெலும்பை உடைப்பதாகவும் கூறி மே 13.1997ல் ஷஜெயசிக்குறு| எனும் இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர். அந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்றது. மாங்குளம் பகுதியை அண்மித்த நிலையில் 27.09.1998ம் திகதி விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் -02 இராணுவ நடவடிக்கை மூலம், கிளிநொச்சி மாவட்டத்தைப் பூரணக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதனால் பலவீனமடைந்த சிறிலங்கா இராணுவம் ஷஜெயசிக்குறு| இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததாயினும் வேறு பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
ஆனால், இராணுவத்தினர் பலத்த ஆளணி, தளபாட இழப்பிற்கும் மத்தியில் கைப்பற்றிய வன்னி நிலப்பரப்பை ஐந்தே நாட்களில் விடுதலைப்புலிகள் மீட்டெடுத்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி, சிறிலங்கா இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓட வைத்ததுடன், அகில உலகத்தையும் ஆச்சரியப்பட வைத்தனர். ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கை 02.11.1999ல் ஆரம்பமாகிய ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கை வன்னி பெருநிலப்பரப்பின் மீட்பினைத் தொடர்ந்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, குடாரப்பு தரையிறக்கங்கள் மூலம் ஆனையிறவின் பாதுகாப்பு வலயங்களை மீட்டெடுத்தது. (குடாரப்பு தரையிறக்கம் இராணுவ ஆய்வாளர்களினால் ஷபிரான்ஸ் நோமண்டி| தரையிறக்கத்துடன் ஒப்பிடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது).
இராணுவ தந்திரோபாயத்துடன் கூடிய முற்றுகையின் மூலம் ஆனையிறவுப் பெருந்தளம் ஏப்ரல் 22.02.2000ம் அன்று முற்றாக விடுதலைப்புலிகளின் கையில் விழுந்தது. தமிழீழ தேசத்தில் 240 வருடகாலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழத் தேசியத்தலைவரின் வழிநடத்தலில் ஓயாத அலைகள் -03 படையணிகளால் மீட்கப்பட்டது. 240 சதுரக் கிலோ மீற்றரில் பரந்திருந்ததும், 15,000 இராணுவத்தினரைக் கொண்டிருந்ததும், யாழ். குடா நாட்டின் வாசலில் பெரும் தடைக்கல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீட்கப்பட்டதானது, தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் ஒரு மைல் கல்லாகும். 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட இப்பெருந்தளத் தாக்குதலில் வெற்றிக்கு வித்தாக 35 போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்.
ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கையானது வடமராட்சி கிழக்குப் பகுதியால், நாகர்கோவில் வரையும், யாழ். நகர் நோக்கி எழுதுமட்டுவாள், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை என யாழ். குடா நாட்டின் முக்கிய பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டு யாழ். நகரின்மையப்பகுதியை அண்மித்த வேளை, இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகளின் அழுத்தம் காரணமாக யாழ். குடா மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக மக்களின் பாதுகாப்புக் கருதி இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கையானது, விடுதலைப்புலிகள் மரபார்ந்த படையணியாக வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதை அகில உலகிற்கும் எடுத்துக்காட்டியது. சிறிலங்கா அரசு தனது இராணுவத்தைக் குடா நாட்டிலிருந்து மீளப்பெறுவதற்கே வெளிநாட்டு உதவியைக் கோர வேண்டிய நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் ஆனையிறவு பெருநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஷகினிஹிர| இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிலையில் விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 26, 2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கை மூலம் கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையிலான நீண்ட இராணுவ முற்றுகையைத் தகர்த்து 8 கிலோ மீற்றர்கள் பரப்பளவை மீட்டெடுத்து இரா ணுவத்தை பின்னோக்கி நகரச் செய்தனர்.
இதேவேளை, நோர்வே அரசின் சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் 02.11.2000ம் அன்று வன்னியில் தேசியத் தலைவரைச் சந்தித்து சர்வதேச அரசியலில் மாபெரும் அரசியல் இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டார். இது சந்திரிகா அரசின் கடந்த 5 வருட கால பொய்த்திரையை ஒரே நாளில் கிழித்தெறிந்தது. அதன் மூலம் தேசியத்தலைவர் இராணுவ நகர் வில் மாத்திரமல்ல அரசியல் நகர்விலும் சாணக்கியன் என்பதை வெளியுலகமும், சந்திரிகா அரசும் புரிந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் பின்னர் டிசம்பர் 24ம் திகதியிலிருந்து விடுதலைப்புலிகள் சமாதானத்தின் நல்லெண்ண சமிஞையாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்தவராயினும் சிறிலங்கா அரசு அதனை அலட்சியம் செய்தே வந்தது. இதேவேளை, புலிகள் மீது இராணுவம் தாக்குதல்களை நடத்தியது, ஆனால், யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடித்தபடியால், தற்பாதுகாப்பு நடவடிக்கையை மட்டுமே புலிகள் மேற்கொண்டனர். அந்த நிலையிலும் 4 மாதங்கள் போர் நிறுத்தத்தை நீடித்து வந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசின் கடும் போக்கான விட்டுக்கொடாத போர்க் குணம் காரணமாக ஒரு தரைப்பட்ச போர் நிறுத்தத்த நடவடிக்கையை ஏப்ரல் 24ம் திகதியுடன் நிறுத்திக ;கொண்டனர்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை நிறுத்திய 5 மணி நேரத்தில் சிறிலங்கா அரசு இராணு வத்திற்கு உத்தரவிட்டதையடுத்து, இராணுவம் ஆனையிறவுத் தளத்தைக் குறிவைத்து நாகர் கோவில், எழுதுமட்டுவாள், கிளாலிப் பகுதிகளிலிருந்து ஷதீச்சுவாலை| என்ற பெயருடன் பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த இராணுவ நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஷகொச்சைப்படுத்திய| இராணு வத்தை வீரஞ்செறிந்த தாக்குதல் நடவடிக்கை மூலம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் அரசியல் பலத்தை மட்டுமல்ல, இராணுவ பலத்தையும் மீண்டும் ஒருமுறை மேற்குலகுக்கு நிரூபித்தது.
25 ஆண்டுகளுக்கு முன் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கரந்தடிப் படையானது, ஒரு சிறந்த தலைமையைப் பெற்றிருந்த காரணத்தால் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு தேசிய விடுதலை இயக்கமாக, தேசிய இராணுவத்திற்குரிய பண்புகளோடு தமிழர் இராணுவமாக வளர்ச்சியடைந்துள்ளதை உலகம் புருவமுயர்த்திப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. பல படைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கமைக்கப்பட்ட இராணுவமாக விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் இராணுவப்படையணிகள் குறித்து எமக்குக் கிடைத்த விபரங்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தரைப்படை
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு
சிறுத்தைப் படையணி
ஜெயந்தன் படைப்பிரிவு
கிட்டு பீரங்கிப் படைப்பிரிவு
விக்ரர் கசவ வாகன எதிர்ப்பு படையணி
இம்ரான் பாண்டியன் விமான எதிர்ப்பு படையணி
வேவுப்புலிகள்
வழங்கல் பிரிவு
மருத்துவப் பிரிவு
கரும்புலிகள்
கடற்புலிகள்
கொமாண்டோப் படையணி
நீரடி நீச்சல் தாக்குதல் பிரிவு
வழங்கற் பிரிவு
கடற்கரும்புலிகள்
மகளிர் படையணிகள்
மாலதி படையணி
சோதியா படையணி
அன்பரசி படையணி
சுகன்யா படையணி
மேலும் சில...
எல்லைக்காவற் படை
சிறப்பு எல்லைக்காவற்படை
என உபபிரிவுகளையும் விடுதலைப்பலிகள் இயக்கம் கொண்டுள்ளது. மேலும், ஆகாயப்படை (வான்புலிகள்) அணியைப் பொறுத்தவரை 1998ம் ஆண்டு மாவீரர் நாளின்போது மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது விமானத்திலிருந்து மலரஞ்சலி செலுத்தியதன் மூலம் விடுதலைப்புலிகளிடம் விமானப்படையணி உண்டு என உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இவற்றோடு ஒரு நாட்டின் கட்டு மானத்திற்குரிய பல நிர்வாக, அபிவிருத்தி, சமுதாய மேம்பாட்டு அமைப்புகளையும் அவற்றை வழிநடத்தக்கூடிய திட்டங்களையும் விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகள் எவ்வளவு து}ரம் இராணுவப் படையணியிலும் இராணுவ தந்திரோபாயத்திலும் வளர்ச்சியடைந்துள்ளார்களோ அந்தளவிற்கு அரசியலிலும் து}ர நோக்குடனும், மதி நுட்பத்துடனும் தந்திரோபாயத்துடனும் அரசியல் வளர்ச்சியடைந்து பலம் பொருந்திய இராணு வமாக நிலை பெற்றுள்ளார்கள். அத்தோடு அரசியல், நிர்வாக, சமூகக் கட்டமைப்பிலும் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை குடாநாடு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்கள் உணர்த்துகின்றன. அதே நிலையை சமகாலத்திலும் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளில் காண முடிகின்றது. ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது சிறிலங்கா இராணுவத்தை விடவும் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
நோர்வே அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்வந்திருப்பதானது, தமிழீழ விடுதலைப்புலிகள்தான் தமிழீழ மக்களின் ஏகப் பிரநிதிகள் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதை உணர்த்துகின்றது. இந்நிலையானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கான முன்னெடுப்பு எனவும் கூறலாம்.விடுதலைப்புலிகள் இயக்கம் 25வது ஆண்டை நிறைவு செய்யும் வேளை, யாழ். குடா நாட் டிலிருந்து சிறிலங்கா இராணுவம் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும், நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புகளும் சேர்ந்து தமிழர்களுக்கென ஒரு சுதந்திரமான தாயகம் விரைவில் மலரும் என்கிற நம்பிக்கையைத் தருவதாக உள்ளன.இத்தகைய ஒரு வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருப் பவர், 25 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கி அதை செம் மையான பாசறையாக கட்டியெழுப்பிய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றால் எதிரிகூட அதை ஏற்றுக்கொள்வான்.
தென் கிழக்காசியாவில் இராணுவம், அரசியல் ஆகிய இரண்டிலும் 25 வருடகால அனுபவம் பெற்ற சிறந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே என்பது பல உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. இந்த யுகத்தில் தமிழ் மக்களுக்கு வரலாறு தந்த வரம், கொடை, நம்பிக்கைச்சுடர் தேசியத் தலைவர்தான். அத்தகைய மேன்மையும் மகத்துவமும் பொருந்திய தலைவனின் பின்னால் அணி திரண்டு தமிழீழம் நோக்கிய வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம். அன்றிலிருந்து இன்று வரை தமது இன்னுயிரைத் தாயக விடுதiலைக்காக ஆக்கிரமிப்பாளர்களின் கைகளால் உயிர் பறிக்கப்பட்ட எமது மக்களுக்கும் வணக்க அஞ்சலி செலுத்த தமிழினம் கடமைப்பட்டுள்ளது.
இக்கட்டுரையானது முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரையல்ல. இதில் கிடைக்கப்பெற்ற தரவுகள் மாத்திரமே தொகுக்கப்பட்டுள்ளன.
http://www.webtamilan.com/ealam/ltte_page03.htm