06-17-2004, 03:45 PM
vallai Wrote:உதிலை உவன் கணேசுத்தம்பி வேலை செய்யுறன் எண்டான் நீங்களும் கணேசண்ணா எண்டு வழிஞ்சியியள் அவரும் பதிலுக்கு வழிஞ்சார் இப்ப என்னடாவெண்டா அவ வியூ சற்றடே வியூ சண்டே வியூ எண்டுறியள்
இப்பத்தான் பழைசையெல்லாம் கொஞ்சம் கிண்டிப்பாத்தன்
கணேசண்ண கள உறுப்பினர்...அதுபோக அவர் ஒரு செய்தியாளர்...அவரோ அல்லது எவரோ ஒரு நிறுவனத்திற்குள் வேலைக்குச் செல்லும் போது அந்த நிறுவனத்தின் பின்னணி அதன் மூலம், நோக்கம் என்று என்று எல்லாம் அறிந்துதான் செல்ல முடியுமா...??! அது மிகுந்த சாத்தியக் குறைவான விடயம்..ஒரு சாதாரண நபருக்கு......!
சரி அவர் அவ்வாறு எல்லாம் அறிந்து சென்றிருந்தாலும் கூட அவருக்குள் இருக்கும் அவருடைய நிலையை நியாயப்படுத்தும் அம்சங்களை கண்டறிவதே அவர் ஏன் அங்கு சென்றார்...ஏன் அடிப்படைப் பொதுநியாயங்களுக்கு அப்பால் விலகிச் செல்கிறார்...அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மை என்ன....அப்படி நியாயத்துக்கு அப்பால் சென்று அவர் சாதிக்கப் போவதென்ன......என்பவற்றை இயன்றமட்டில் கண்டறிந்து.....அவை ஒருவகையில் அவருக்கே கெடுதியாகும் என்பதை அவருணரத்தக்கதாக அவருக்கே சிநேகித பூர்வமாகச் சொல்ல வேண்டுமே தவிர ...வெட்டுவேன் கொத்துவேன் துரோகி என்பதாலோ எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை...அப்படிச் செய்வது அவர்கள் தொடர்ந்து நியாயத்துக்கு அப்பால் விலகிச் சென்று அநியாயங்கள் பக்கம் சாயவே துணை புரியும்.....உண்மையில் அவருடைய கருத்துக்களை நிதானமாகப் பார்க்கின்ற போதே உண்மையில் அவர் சுயநலம் கருதித்தானா இவற்றைச் செய்கிறார் என்றும் அறியக்கூடியதாக இருக்கும்....அதுமட்டுமன்றி பலர் தம்மை அறியாமலே அநியாயக்காரர்களின் சூழ்ச்சிவலையில் சிக்கியும் உள்ளனர்....ஏன் அப்படியான ஒருவராக அவர் இருக்க முடியாது...???!
அதுபோக வெளிப்படையாக தமிழ் தேசியத்தையும் தேசத்தையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு அதற்கு எதிராக ஆக்கிரோசமாக செயற்படுபவர்கள் மத்தியில் ஒருவேளை கணேசண்ணை தமிழ் தேசியத்திற்கும் தேசத்திற்கும் எதிரானவாரக இருப்பினும்....அவர்களைவிட மேல் என்றே நாம் கருதுகிறோம்....தேசத்துரோகிகள் தாமாகவும் உருவாகுகின்றனர்....உருவாக்கப்படுபவர்களும் இருக்கின்றனர்....அதேபோல் வெளிப்படையாக தெரியும் துரோகிகள் ஆபத்துக் குறைந்தவர்கள்...வெளிப்படையாகத் தெரியாத துரோகிகளே ஆபத்தானவர்கள்...அவர்களை ஆடையாளம் காண்பதே தேசத்துரோகிகள் மேலும் மேலும் பெருகாமல் இருக்க வழி வகைகளைச் செய்ய முடியும்.... !
அத்துடன் தேசத்துரோகிகளுக்குள்லும் ஒரு மனம் உண்டு அதைப்படிப்பதன் மூலமே அவர்கள் பாதையில் சென்று அவர்களை வழிநடத்தி சரியான இலக்கு நோக்கி அழைத்துவர முடியும்...நாம் துரோகிகள் என்று அவர்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கு இடம்கொடுக்காமல் அவர்களைத் துரத்திக் கொண்டிருப்போம் என்றால் எதிரிகள் அவர்களை நண்பர்களாக்கி இப்போது செய்வதைவிட இன்னும் பல் மோசமான கெடுதிகளை தொடர்ந்து முடிவில்லாமல் செய்து கொண்டிருப்பர்.....ஒருவரைத் துரோகி என்று விலக்கி வைக்க முன் இவற்றையும் கவனத்தில் எடுங்கள்.....!
நாகங்களின் மத்தியில் வாழ்ந்தாலும் அவற்றோடு கூடி வாழும் பாம்பாட்டியைவிட சாதாரண மனிதன் அவற்றிற்கு அதிகம் அஞ்சுவான்..நாகங்களின் பலம் பலவீனம் அறிந்தவன் பாம்பாடியாகவும் வாழுவான் சாதாரண மனிதனாகவும் வாழக் கற்றிருப்பான்.....நாகங்கள் மத்தியில்....! அதுவே விவேகம்....! நாகங்களைக் கொல்வதைவிட.....! காரணம் கொல்வதால் ஒரு நாகத்தை அந்தவேளைக்கு மட்டும் அழிக்கலாம் ஆனால் ஆபத்து என்னவோ தொடர்கதைதான் மற்றைய நாகங்களால்.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&