Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் டிக்சிட்
#1
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டி.என்.டிக்சிற் நியமனம்

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய டி.என்.டிக்சிற், புதிய காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராஐhங்க அமைச்சில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இதுவரை இருந்த பிரNஐஸ் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சி கைமாறியதும் இராஐpனாமாச் செய்ததை அடுத்தே, டி.என்.டிக்சிற் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஐPவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா அதீத நாட்டம் காட்டுவதற்கு அப்போதைய ஐனாதிபதியாக இருந்த Nஐ.ஆர்.ஐயவர்த்தன டி.என்.டிக்சிற் மூலமாகவே தனது திட்டங்களை நிறைவேற்றினார்.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பை, ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறாத ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவந்த டி.என்.டிக்சிற் இப்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது, இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் கடும்போக்கையே காட்டுகிறது என்று ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விளைவுகளை நன்கு அறிந்த டி.என்.டிக்சிற், தற்போதைய இனப்பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை மீண்டும் அதிகரிக்க ஆலொசனை வழங்க வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
புலிகளுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த நிலைப்பாட்டை பேண சோனியா காந்தி விருப்பம் தெரிவிப்பு?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த சமரச நிலையை ஒத்த தன்மையைக் கைக்கொள்வதற்கு சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வமைச்சரை தொடர்பு கொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இலங்கை இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் மேற்கத்தைய நாடுகள் தலையிடுவது இந்திய வல்லான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாமென்றும், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமரச முயற்சிகளை பேணுவதற்கான தனிப்பட்ட கொள்கையினை தான் கொண்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிருபம் சென் தெரிவித்துள்ளார்.

puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
India names key security adviser


<b>Former Indian foreign secretary JN Dixit has been appointed to the crucial post of national security adviser.</b>

Mr Dixit, a former high commissioner to Pakistan, is expected to play a key role in peace negotiations.

He succeeds Brajesh Mishra, a leading confidante of defeated prime minister Atal Behari Vajpayee.

Mr Vajpayee began peace moves last year, and Mr Mishra is credited with a central role in how talks have been conducted so far.

India's new Congress-led government has promised to continue the fledgling peace process.

'Professional'

The country's national security adviser is instrumental in shaping internal and external security policy.


As India's former top diplomat, Mr Dixit clearly does not lack experience, and is well versed in ties with Pakistan, observers say.

But they expect a different emphasis with his predecessor gone.

"Brajesh Mishra came with political baggage, but Dixit is expected to work full-time only as the adviser and give more professional opinions," Rahul Bedi, a leading defence analyst in Delhi, told the BBC.

He said the new adviser would have to create a national security culture.

"The concept of national security only evolved in India in the mid-1980s."

Another analyst said the fact Mr Dixit was an old hand in foreign affairs would stand him in good stead.

Policy agenda

Mr Dixit, 68, was born in the southern city of Madras, and spent nearly four decades in India's Foreign Service.

He retired 10 years ago to write and teach, and recently joined the Congress party.

He is expected to take up his new duties shortly, an official announcement said on Wednesday.

It came as partners in the centre-left coalition were trying to sort out last-minute differences over the government's policy agenda - due to be published on Thursday.

The so-called common minimum programme focuses mainly on economic issues, and no shift is expected on the talks with Pakistan.

http://news.bbc.co.uk
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
இலங்கை அமைதி முயற்சிக்கு ஆதரவு - மன்மோகன்!


இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண அந்நாட்டு அரசு விடுதலைப் புலிகளும் நடத்திவரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு தரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

பிரதமராக பொறுப்பேற்ற மன்மோகன் சிங்கிற்கு இலங்கைப் பிரதமர் மஹிண்டா ராஜபச்சே வாழ்த்து தெரிவித்து தொலைபேசியில் பேசியபோது, இலங்கை அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக மன்மோகன் தெரிவித்தார் என அயலுறவு பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் உள்ளிட்டு அங்கு வாழும் அனைத்துப் பிரிவு மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றக் கூடிய எந்தத் தீர்வையும் இந்தியா ஆதரிக்கும் என்று மன்மோகன் கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையே விரிவான பொருளாதார ஒப்பந்தம் உருவாக்குவது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் அயலுறவு பேச்சாளர் தெரிவித்தார்.

Webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
பிராந்திய மேலாண்மை என்ற நிலையிலிருந்து பிராந்தியத்தில் வல்லாதிக்கம் செலுத்தும் நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்வதின் முதற்படியாக இதனைக் கருதலாம்.

டிக்சிற் ஈழத்தமிழர்களை மரந்திருக்கலாம் ஈழத்தமிழர் டிக்சிற்றை மறந்திருக்க மாட்டார்கள்,மீண்டும் ஒரு கசப்பனுபவமோ துன்பியல் சம்பவமோ நடைபெறாவிட்டால் சரி
\" \"
Reply
#6
துன்பியல் சம்பவம்? இந்தியாவை பயமுறுத்துகின்றீர்கள் போல இருக்கின்றது? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
ஒரு நாட்டின் சட்டமுறைகளில் அதியுச்சபட்ச தண்டனை மரணதண்டனை அப்படிப் பார்த்தால் அரசாங்கம் பொதுமக்கள் எல்லோரையும் பயமுறுத்தித் தான் வைத்திருக்கிறது,இன்னின்னது செய்தால் மரண தண்டனை என்றால் தான் குற்றம் குறையும் எது செய்தாலும் ஆயுள் தண்டனைதான் என்றால் சுரணை கெட்டுவிடும்
\" \"
Reply
#8
கடுமையான சட்டங்கள், தண்டனைகள், மிக உயர்வான அபராதங்கள் போன்றவை நடைமுறையில் இருக்கும் நாட்டில் இருப்பதால் அதுபோன்ற ஒரு நடைமுறையையே இலங்கையிலும் எதிர்பார்கின்றீர்கள் போல இருக்கின்றது. அதனை நான் ஆதரிக்காக போதிலும் யாழ்பாணத்தின் தற்போதைய நிலவரம் குறித்து வெளிவரும் செய்திகளை பார்த்தால் அதை தவிர வேறு வழி இல்லை போல இருக்கின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
மன்மோகன் சிங்...சோனியா இருவரின் கருத்துகளும் நல்லெண்ணத்தின் ஆரம்பம் என எடுத்துக்கொள்ள இயலாமல் செய்கிறது டிக்சிற் றின் நியமனம்.
ஈழத்தமிழர்கள்மேல் தீராத வெறுப்புக்கொண்டவரை (இராஜீவுக்கு தவறான திசைகாட்டியாக இருந்தவரை) பாதுகாப்புத்துறை ஆலோசகராக்கியிருப்பது குட்டையைக் குழப்ப ஒரு பழைய மட்டையைத் தேடியது போல இருக்கிறது

-
Reply
#10
<img src='http://www.india-today.com/webexclusive/contributors/dixit100.jpg' border='0' alt='user posted image'> டிக்சிற் (india-today.com and puthinam)

டிக்சிற்....தனது கடந்த காலத் தவறுகளை மீட்டு அதற்கேற்ப ஆலோசனை வழங்கத்தவறின் அவருக்கு வழங்கப்பட்ட பதவியால் இந்தியாவுக்கு ஒரு உருப்படியான நன்மையும் கிடைக்காது...ராஜீவ் காந்தியின் வெளிவிவகாரக் கொள்கையால் தான் அன்று இந்தியாவின் ஆட்டத்திற்கெல்லாம் ஆடும் நிலையில் இருந்த அதன் அயல்நாடுகள் எல்லாம் இன்று தனித்து இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி இயங்க முடிகிறது....!
இது ராஜீவே எதிர்பார்க்காமல் மற்றைய நாடுகளுக்குச் செய்த பேருதவி என்றுதான் சொல்ல வேண்டும்....! இன்றேல் ஈழத்தமிழர் விவகாரமும் இந்தியா- இலங்கை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று இன்றும் இந்தியாவின் நலன் பேணும் ஒரு விடயமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும்....ஆனால் இந்தியா எம்மைக் கை கழுவியதால் தான் அது சர்வதேச மயமாகியது...எனி அதில் யாரும் இலகுவாக கை வைத்து விளையாட்டுக் காட்ட முடியாது என்ற நிலையையும் புலிகள் மிகச் சாதுரியமாக உருவாக்கித் தந்துள்ளனர் என்பதும் மிகையல்ல....! ஈழத்தமிழரின் மீது ஒரு சர்வதேசப் பார்வையை உருவாக்கியதன் மூலம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தாந்தோன்றித்தனமாக ஈழத்தமிழர் விடயங்களைக் கையாள முடியாது ஒரு கவசம் இடப்பட்டுள்ளது....அதை பல இடர்களுக்கு மத்தியிலும் சாதித்தவர்கள் புலிகள்...அதுவும் ஏகாதபத்தியத்தின் கழுகுப்பார்வையையும் கடந்து அதை அவர்கள் சாதித்துள்ளனர்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Probe Rajiv murder: Arjun's first advice to PM

Thursday May 27 2004 10:31 IST
NEW DELHI: What does the Rajiv Gandhi assassination case have to do with the Ministry for Human Resource Development? Obviously, little.

But two days into his job and Union HRD Minister Arjun Singh is pushing an agenda far removed from IIM autonomy or history textbooks: he has asked Prime Minister Manmohan Singh to get the probe into the conspiracy behind Rajivs assassination back on track.

Singhs request, which could embarrass ally DMK only on Tuesday it got all the portfolios it wanted has already prompted a flurry of high-level exchanges: the CBI director briefed the PMO on Tuesday and the Home Secretary held a special meeting on Wednesday.

This despite the fact that the Multi Disciplinary Monitoring Agency (MDMA), set up by the BJP government and whose term expires on May 31 has found little, its staff virtually unemployed.Now, the MDMA seems set for another extension.

The MDMA was set up after the Jain Commission indicted the DMK in 1998. This indictment was used by the Congress to pull down the Gujral government of which the DMK was a partner.

Now that the DMK is the Congresss ally its member Subbulakshmi Jagadeesan, under MDMA scrutiny, was sworn in as Minister whats Arjun Singhs provocation?

My impression is the MDMA concluded there was nothing substantial against the DMK, Arjun Singh admitted to this website's newspaper on Wednesday. There is nothing much in that (against the DMK).

However, he added: The last government ran the MDMA in a mechanical manner. It should be given an extension, more importance and emphasis. There must be be a final report soon and more chargesheets.

When contacted, CBI director U S Mishra said: The MDMA is an active desk of the CBI. Some investigations are in progress and at this stage I cannot rule out the possibility of a supplementary chargesheet.

Facts speak otherwise: The MDMA has been given extension after extension but over the past year or so, has barely been able to add anything substantial to the eight final reports which are gathering dust in the CBI.

Save a lone representative of the Intelligence Bureau (IB), there is nothing that justifies the multi disciplinary aspect of the MDMA now.

The CBI has two offices for the MDMA, manned by 30-odd staffers who admit they have little to do and have given other assignments.

MDMA staff say that besides asking for extension, they have been busy sending reminders to 23 countries where the conspiracy angle was being pursued. Of the 23 countries, only four have responded.

As for former Delhi High Court judge, Milap Chand Jain, who authored the controversial Jain Commission report, he would rather not elaborate. Early this year when the Congress and the DMK got together, Jain had told this website's newspaper: The Congress appears to have had a change of heart. If the DMK resumes to give support to the cause of Tamil Eelam as it did earlier, things may become difficult again.

On Wednesday, however, he was more reserved. Asked about Arjun Singhs demand to get the MDMA back on track, he said: I do not know what sort of work the MDMA has done so it is not possible for me to give any comment... Politics in New Delhi has completely changed. What can I say to all this?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
ராஜீவ் படுகொலை: விசாரணைக் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அர்ஜூன் சிங் கோரிக்கை


புதுதில்லி, மே 27} முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணைக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பரிந்துரை செய்துள்ளார் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் அர்ஜூன் சிங்.


பாஜக ஆட்சியின்போது இதுகுறித்து விசாரிக்க 'எம்எம்டிஏ' என்னும் பன்முக விசாரணை அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் தற்போது மே 31ம் தேதியுடன் முடிவடிகிறது. இந்நிலையில், இந்த அமைப்பிற்கு கால நீட்டிப்பு வழங்க அர்ஜூன் சிங் முடிவு செய்துள்ளார். இதற்கான ஒப்புதலை பெறுவதற்காக பிரதமருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.


காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் தங்களுக்கு தேவையான இலாகாக்களை 2 நாட்களுக்கு முன்னர் தான் திமுக கேட்டுப் பெற்றது. அமைச்சரவையில் திமுக சார்பாக இடம்பெற்றுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக 'எம்எம்டிஏ' விசாரணைக் குழுவால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அந்த விசாரணைக் குழுவின் காலத்தை நீட்டிப்பு செய்ய அர்ஜூன் சிங் முடிவெடுத்துள்ளதும், இந்த குழுவின் இறுதி அறிக்கையை பெறுவதில் விரைவு காட்டவேண்டும் என்று கூறியிருப்பதும் காங்கிரஸ் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பும் என்று கூறப்படுகிறது.


'எம்எம்டிஏ' விசாரணைக் குழு பற்றி பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் சிபிஐ இயக்குனர் புதன்கிழமையன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், உள்துறை செயலாளரும் இதுகுறித்து தனது சக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார்.


காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் முடிவெடுத்திருப்பது கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
<img src='http://www.thinakkural.com/2004/May/27/moorthy.gif' border='0' alt='user posted image'>

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
எரிகிற நெருப்பை அணைக்கிறேன் என்று சொல்லி எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்ப்பதும்,தானாகக் கையைக் கொடுத்து சுட்டபின் ஐயோ சுட்டுவிட்டதே எனக் குளறுவதும் இனிமேல் நடக்காது என்று நம்புவோம்
\" \"
Reply
#15
Eelavan Wrote:எரிகிற நெருப்பை அணைக்கிறேன் என்று சொல்லி எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்ப்பதும்,தானாகக் கையைக் கொடுத்து சுட்டபின் ஐயோ சுட்டுவிட்டதே எனக் குளறுவதும் இனிமேல் நடக்காது என்று நம்புவோம்

சரியாக சொன்னீர்கள் ஈழவன்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
சோனியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்த ஜெயலலிதா வகுத்த வியூகமே புலிகள் மீதான தடை நீடிப்பு


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்திருந்த தடையை, இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிýத்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவை அடுத்து 'இந்தியாவின் புதிய அரசு, விடுதலைப்புலிகள் இயக்கம் மீது கடும் போக்கை கடைப்பிடிýக்க உள்ளது" என்ற கருத்துப்பட, கட்டுரைகள் எழுதப்படுவதையும், அதையொட்டிý அரசியல் ஆய்வுகளும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காணக்கூýடிýயதாகவுள்ளது.

காங்கிரஸ் கட்சிக் கூýட்டணியின் தலைமையில், புதிய அரசு அமைக்கப்பட்டிýருந்த போதிலும், இந்தப் புதிய அரசிற்கும், இத் தடைச்சட்ட நீடிýப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மையாகும். சற்று ஊன்றிக் கவனித்தால் சில விடயங்கள் புலனாகும்.

சில கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நடாத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்களிப்பு, மே மாதம் 10 ஆம் திகதியன்று நடைபெற்றது. இப்பொதுத் தேர்தலின் தீர்க்கமான முடிýவுகள் 13 ஆம் திகதியன்று வெளிவந்து விட்டன. சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக் கூýட்டணியானது, எதிர்பாராத வெற்றியைப் பெற்று, ஆட்சியை அமைக்கக் கூýடிýய நிலை மே மாதம் 13 ஆம் திகதியன்று தெளிவாக உருவாகியது. அதற்கு அடுத்த நாள், அதாவது மே மாதம் 14 ஆம் திகதியன்று இந்திய உள்துறை அமைச்சு, ஓர் ஆணையொன்றைப் பிறப்பிக்கின்றது. சட்டவிரோத நடவடிýக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, முன்னைய மத்திய அரசு நீடிýக்கின்றது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு சட்டவிரோத இயக்கம் என்றும் 'இந்திய நாட்டிýன் இறையாண்மைக்கும், ஒற்றுமைப்பாட்டிýற்கும், விடுதலைப்புலிகளின் வன்முறைச் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும்" என்றும் இந்த தடை நீடிýப்புக்கு இந்திய உள்துறை அமைச்சு காரணம் காட்டிýயிருந்தது.

இந்த ஆணையை, இந்திய உள்துறை அமைச்சு தமிழ்நாடு மாநில அரசிற்கு அனுப்பிய தினம் மே மாதம் 14 ஆம் திகதி வெள்ளக்கிழமை.

ஆனால், இந்த தடை உத்தரவை தமிழ்நாடு மாநில அரசு தன்னுடைய சிறப்பு அரச வர்த்தமானி ஊடாக வெளியிட்ட தினம் மே மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை.

அதாவது, இந்தியாவின் முன்னைய மத்திய அரசு பிறப்பித்த இந்த தடையுத்தரவை, சரியாக ஒருவாரம் கழித்து, ஜெயலலிதாவின் மாநில அரசு வர்த்தமானிய10டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வர்த்தமானிப் பிரகடனத்தைக் கூýர்ந்து கவனித்தால், இந்தியாவின் முன்னைய அரசு இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்த தினம் மே மாதம் 14 ஆம் திகதி என்று இருப்பதைக் காண முடிýயும். ஜெயலலிதா சரியாக ஒரு வாரம் காத்திருந்து மே மாதம் 21 ஆம் திகதி அன்று, இத்தடையாணையைப் பிரகடனப்படுத்தியதன் காரணங்கள் யாதோ?

சிலவற்றை நாம் எளிதாகவே ஊகிக்க முடிýகின்றது. மே மாதம் 21 ஆம் திகதி ராஜீவ் காந்தியின் நினைவு தினமாகும்! சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கூýட்டணி வெற்றி பெற்று, அரசு அமைக்கும் இந்த வேளையில், வை. கோபாலசாமியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்சிகள் காங்கிரஸ் கூýட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த வேளையில் இலங்கைப் பிரச்சினை குறித்து, இந்தியாவின் புதிய அரசு உத்தியோகப10ர்வமாக எதுவும் சொல்வதற்கு முன்னால், சோனியா காந்தி அம்மையாருக்கு ஒரு தர்மசங்கட நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட செயற்பாடுதான் இது.

ஏற்கனவே, தன்னுடைய கீழ்த்தரமான அரசியல் பிரசாரங்கள் ஊடாக, திருமதி சோனியா காந்தியைக் கேவலமாக விமர்சித்து வந்த ஜெயலலிதா இம்முறை ஒரு அரசியல் பின்னடைவை புதிய அரசிற்கு ஏற்படுத்த முனைந்திருக்கின்றார்.

இந்த முயற்சிகளின் எதிர்வினைகள் மீண்டும் ஜெயலலிதாவுக்கு எதிராகவே வந்து முடிýயும் என்பதை ஏனோ அவர் உணர முடிýயாதவராகவே இருக்கின்றார்.

விடுதலைப்புலிகள் மீதான இந்தத் தடை நீடிýப்பு துரதிர்ர்;டவசமான ஒன்றுதான்! அதில் சந்தேகமில்லை. ஆயினும் இத்தடை நீடிýப்புக்கான காரணங்களை இன்றைய காலகட்டத்தில வைத்து ஆராய்ந்தால், அவை வலுவில்லாத, பொருத்தமில்லாத காரணங்களாக இருப்பதையே காண முடிýகின்றது.

சட்டவிரோத நடவடிýக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை, மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிýத்தமைக்கு இவ்வர்த்தமானியில் கூýறப்பட்ட காரணங்களில் முக்கியமான ஒன்றாக கீழ்வரும் காரணம் கூýறப்பட்டுள்ளது.

'தனது வன்முறை மற்றும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை விடுதலைப்புலிகள் கைவிடாத பட்சத்தில் அவர்களது நடவடிýக்கைகள் காரணமாக, இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிýற்கும் ஆபத்து ஏற்படக் கூýடும்" என்று, இத்தடை நீடிýப்பின் முக்கிய காரணம் தெரிவிக்கின்றது. இது சரியான காரணமா? இந்தக் காரணத்தில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா?கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக, யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு, }லங்கா அரசோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு வந்துள்ளார்கள். }லங்காவின் அரசு இந்த ஆண்டு மாறியபோதும் கூýட, ஜனாதிபதி சந்திரிகா புதிய அரசோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு ஒன்றினை அடைவதற்கு விடுதலைப்புலிகள் முயன்று வருகின்றனர். ஆகவே முன்னாள் இந்திய மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வன்முறை நிலைப்பாடு என்ற சொற்றொடர் உண்மையற்றதும், பொருத்தமற்றதுமாகும்.

அடுத்து இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை, விடுதலைப்புலிகள் கொண்டுள்ளார்கள் என்று தடை நீடிýப்பிற்கான காரணத்தை முன்னைய இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிýனை கொண்டிýருக்கின்றார்களா?இந்தியாவுடனான உளப்ப10ர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடிý, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை தமிழீழத் தேசியத் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. தன்மீது இந்திய அரசியல் இராணுவ அழுத்தங்கள் இருந்த நேரத்திலும் சரி, அத்தகைய அழுத்தங்களை வெற்றி கொண்ட வேளையிலும் சரி, சிங்கள அரசுகளுடனான போரில், இராணுவ வெற்றிகளையும், அரசியல் வெற்றிகளையும் பெற்றிட்ட போதும் சரி, தமிழீழத் தேசியத் தலைமை, தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின் மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படுத்தியே வந்துள்ளது. வரலாற்றிலிருந்து, சில சம்பவங்களைச் சுட்டிýக் காட்டுவது இவ்வேளையில் பொருத்தமாக இருக்கும்.

இந்திய- இலங்கை ஒப்பந்தக் காலகட்டத்தின் போது அதாவது சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய சுதுமலைப் பிரகடனப் பேச்சின் போதும், இந்தியாவுடனான நட்புறவை வலியுறுத்திப் பேசி இருந்ததை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் காட்ட விழைகின்றோம். 'இந்திய- இலங்கை ஒப்பந்தமானது தமிழ் மக்களுக்கு எந்த விதமான உரிமையையும் பெற்றுத் தராது" என்பதை விளக்கிய பிரபாகரன், அதே மேடையிலேயே, இந்தியாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையையும், நட்புணர்வையும், தெளிவுபடுத்தியிருந்தார், 'நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம், நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல" என்று விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை அன்றே தலைவர் தெளிவாக்கியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், உலக நாடுகள் அனைத்தினது கவனத்தையும் ஈர்த்து, நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டின் போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடனான நட்புறவு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசி இருந்தார்.

1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்த இராணுவ அரசியல் பலம் வேறு, 2002 ஆம் ஆண்டு புலிகள் கொண்டிருந்த இராணுவ அரசியல் பலம் வேறு! இந்தப் பதினைந்து ஆண்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ அரசியல் வளர்ச்சி மிகப்பெரிய பரிமாணத்தை எட்டிவிட்டது. ஆயினும், இந்த இரண்டு வித்தியாசமான காலப்பகுதியிலும் அதாவது 1987 இலும், 2002 இலும் இந்தியாவுடனான நட்புறவு குறித்து ஒரே கருத்தைத்தான் தமிழீழ தேசியத் தலைமை கொண்டிருந்தது.

பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போதும், இந்தியாவின் அனுசரணையையும், நட்பையும் விடுதலைப்புலிகள் நாடியதையும் நாம் சுட்டிக் காட்ட விழைகின்றோம். ஆனால், துரதிர்ர்;ட வசமாக முன்னைய இந்திய அரசு விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து நாம் விருப்பு வெறுப்பின்றி சிந்தித்துப் பார்த்தால் அதில் ஓர் அடிப்படை நியாயம் பலமாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடி யும். சுருக்கமாகக் கூறினால், ஈழத் தமிழர்கள் குறித்த ஆனால், ஈழத் தமிழர்கள் சம்பந்தப்படாத 'இலங்கை- இந்திய" ஒப்பந்தம் ஒன்றை ஈழத் தமிழர்கள் மீது திணிக்க முனைந்த போது, தனது உரிமையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற ஈழத் தமிழினம் போராடியது. இதேபோல், வேறு ஒரு வல்லரசு இந்தியா சம்பந்தப்படாத ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால், இந்தியா தன்னுடைய உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடியிருக்கும். இதில் இருக்கும் அடிப்படை நியாயத்தை நாம் புரிந்து கொள்வது கடினமான ஒன்றல்ல.

ஆகவே, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருக்கின்றது என்பதை தடை நீடிப்புக்கான காரணமாக, இந்திய முன்னாள் மத்திய அரசு கூறியிருப்பது மிகத் தவறானதாகும்.

அடுத்து, 'விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற குற்றச்சாட்டு, இத்தடை நீடிப்பின் ஊடே முன் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகத் தவறான கருத்தாகும்.

இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்கும், இறையாண்மைக்கும் எதிராக }லங்கா அரசுகள் தான் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளன. காலாகாலமாக இந்தியாவின் விரோத சக்திகளுடன்தான் }லங்கா அரசுகள் நட்பு பாராட்டி வந்துள்ளன. சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவை }லங்கா அரசுகள் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது அமெரிக்காவின் மேலாண்மையை, தென் கிழக்காசியப் பகுதிகளில் மேலோங்கச் செய்வதற்கும் }லங்கா உதவி செய்து வந்துள்ளது.

ஆனால், தமிழரின் விடுதலைப் போராட்டம் இந்தியாவுக்கு உண்மையிலேயே நன்மையைத்தான் அளித்துள்ளது. சரியாக சொல்லப் போனால், விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குத் துணையாகத்தான் இருந்துள்ளது.இன்று தமிழர் தேசம், தனது நிலப்பரப்புகளைத் தம்மிடமே தக்க வைத்துக் கொண்டிருப்பதனால்தான், இந்தப் பகுதிகளுக்குள் இந்திய விரோத சக்திகள் புகமுடியாமல் போனது. இல்லாவிட்டால் அந்தப் பகுதிகளையெல்லாம் இந்திய விரோத நாடுகளுக்கு }லங்கா அரசு குத்தகைக்குக் கொடுத்திருக்கும்! இப்பொழுது வாயளவிலும், காகிதத்திலும் போடப்படுவதாகச் சொல்லப்படுகின்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள், முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு, இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகளில், இந்திய விரோத சக்திகள் தான் குடியிருந்திருக்கும்!

பல்வேறு சமயங்களிலும் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியா குறித்தும், இந்தியாவுடனான நட்புறவு குறித்தும் வெளியிட்ட கருத்துகளை நாம் மீண்டும் இப்போது குறிப்பிட விரும்புகின்றோம். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு வருமாறு:

'இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை".

'இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல".

'இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருக்கப் போவதில்லை".

'இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக பொருளாதார நலன்களுக்கு எதிராக, விடுதலைப்புலிகள் செயற்படுபவர்கள் அல்லர்".

'இந்தியாவின் பிராந்திய அரசியல் களத்தில் குழப்பம் எதையும் விளைவிக்க விடுதலைப்புலிகள் விரும்பவில்லை".

'இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி நட்புறவோடு இணங்கிச் செயற்படவே விடுதலைப்புலிகள் மனப்ப10ர்வமாக விரும்புகிறார்கள்".

'இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாக நேச சக்தியாகவே விடுதலைப்புலிகள் கருதுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவின் முன்னைய அரசால் விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ள வேளையில் இந்தியாவின் புதிய அரசு ஆக்கப10ர்வமானதும், நியாய ப10ர்வமானதுமான முடிவுகளை எடுக்கும் என்று நாம் நம்புகின்றோம். இன்றைய காலகட்டத்தில் இலங்கைத் தீவின் அரசியல் இராணுவக் களங்களில் விடுதலைப்புலிகளும் }லங்கா அரசும் சம பங்காளிகளாக இருக்கும் நிலை உருவாகி உள்ளது. விடுதலைப்புலிகளே, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற உண்மை வெளிப்படையாகவே நிரூ பிக்கப்பட்டு விட்டது. மதச் சார்பற்ற ஆட்சியை வழங்குவதற்கு உறுதி ப10ண்டுள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, அதே போன்ற மதச்சார்பற்ற நிர்வாகத்தை தன்னுடைய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை ஊடாக வழங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகளின் நேசக்கரத்தைப் பற்றிக் கொள்ளக் காலமும் கனிந்து வந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும் செயற்பாடுகள் குறித்தும் மேலும் விளக்கமும், தெளிவும் தேவைப்படும் பட்சத்தில அவற்றை இரு தரப்பும் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான காலமும் இதுவே! இந்தியாவின் புதிய அரசு, புதிய பாதையினூடே பயணம் செய்வதன் மூலம் ஈழத் தமிழினத்தோடு நேர்மையான நல்லுறவை, நட்புணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்லவை நடக்க வேண்டும். அவை விரைவிலேயே நடைபெற வேண்டும்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
LTTE still a threat to India's sovereignty

NT Bureau
Chennai, May 28:

The activities of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) continues to pose threat to, and are detrimental to, the sovereignty and territorial integrity of India as also public order, according to a notification issued recently by the Union Home Ministry, extending the ban on the outfit.

The notification which was republished by the Tamilnadu government on 20 May said it is necessary to declare the LTTE an unlawful association because of its continued violent and disruptive activities prejudicial to the integrity and sovereignty of India and its strong anti-India posture besides posing a grave threat to the security of Indian nationals.

Enquiries on the activities of the LTTE cadres and dropouts who have been traced out recently in Tamilnadu suggest that the cadres sent to Tamilnadu would ultimately be utilised by the LTTE for unlawful activities, the notification said.

The activities of pro-LTTE organisations and individuals have come to notice in India, despite the ban in force and attempts have been made by these forces to extend their support to the LTTE, the notification observed.

Besides, the LTTE continues to be an extremely potent, most lethal and well-organised terrorist force in Sri Lanka and has strong connections in Tamilnadu and certain pockets of southern India. The LTTE continues to use Tamilnadu as the base for carrying out smuggling of essential items like petrol and diesel, besides drugs to Sri Lanka.

Apart from the above reasons, the Central government also felt that the LTTE leaders have been cynical of India's policy on their outfit and reaction of the State manchinery in curbing their activities. The resolution passed in the Tamilnadu State Assembly to extradite the LTTE leader V Prabhakaran, evoked strong criticism from pro-LTTE elements in India and in Sri Lanka, the notification pointed out.

The LTTE's objective for a separate homeland (Tamil Eelam) for all Tamils threatens the sovereignty and territorial integrity of India, and amounts to ceding a part of the territory of India and thus fall within the ambit of an unlawful activity.

The turbulence in Sri Lanka is being exploited by pro-LTTE forces to draw support for the LTTE and its cause by taking out processions, demonstrations etc, in spite of the ban, causing disquiet and threat to the security of Tamilnadu.

Most of the criminal cases involving the LTTE and pro-LTTE groups like Tamil National Retrieval Troops (TNRT), Tamilnadu Liberation Army (TNLA) and Tamilar Pasarai, have ended in conviction but the Tamil Eelam concept still remains as a goal among the pro-LTTE groups in Tamilnadu, the notification added.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
இந்த இறையாண்மை இறையாண்மை என்று சொல்கிறார்களே அது மற்றைய நாடுகளுக்கும் இருக்கின்றது என்பதை உலகின் மிகப்பெரிய'ஜனநாயக' நாடு ஏற்றுக் கொள்ள மறுப்பது கஸ்டம் தான்

பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்தைப் பிரித்தபோது பாகிஸ்தானுக்கென்று ஒரு இறையாண்மை இருக்கவில்லையா?

இலங்கைக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக போராளிகளுக்குப் பயிற்சி அளித்தபோதும் சரி,பின்னர் அதே போராளிகளை அடக்குகிறேன் என்ற பெயரில் இலங்கையின் இறையாணமைக்குள் தலையிட்டபோதும் சரி அது தன் இறையாண்மையைப் பாதிக்கும் என அந்நாட்டுத் தலைவர்கள் ஏன் சிந்திக்கவில்லை?
\" \"
Reply
#19
சிங்களவனோடை நொட்டுவாங்கள்.. அவன் குண்டுபோட இந்தியாவிட்டை ஓடுவாங்கள்.. கும்பிட்டு மண்டாடுவாங்கள்.. வாவெண்டு கூப்பிடுவாங்கள்.. பிறகு சிங்களவனோடை கூட்டுச்சேர்ந்து இந்தியாவுக்கு அடிப்பாங்கள்.. பிறகு சிங்களவனோடை சண்டைபிடிப்பாங்கள்.. ரஜீவ் கொலைக்குப் பிறகு அங்கையும் போகேலாது.. தலைபான் சதாம் நிலைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#20
அப்படியானால் இந்தியாவின் இறையாண்மை சந்தர்ப்பவாத இறையாண்மை என ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்படித் தானே தாத்தா

அது சரி யார் அது புதிதாக தலைபான்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)