Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்..
#1
<b>சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் மறைந்தார் ;</b>ஈழமெல்லிசைக் கலையின் முன்னோடிகளில் ஒருவரும்..இலங்கை வானொலி..சிங்கப்புூர் வானொலிகளில் இசைக்கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்தவரும,;.இசைமேதை பாலமுரளிகிருஸ்ணா அவர்களின் மாணவருமான சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் வியாழனன்று பாரிசில் காலமானார்...
ஈழத்திரையின் குத்துவிளக்கு படத்திற்காக "ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே" என்ற பாடலையும் இலங்கைவானொலியில் பல மெல்லிசை பாடல்களையும் பாடிய இவர் பாரிஸ் நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு.இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளுpலும் தன் குரல் வளத்தை நிரூபித்துள்ளார்.
ஆழ்ந்த இசைஞானமும்..அதிமதுரக் குரல்வளமும் கொண்ட அவரின் ஆத்மாசாந்தியடைய அஞ்சலிக்கிறேன்

-
Reply
#2
சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்....
Reply
#3
[align=center:b965ea9e82]<img src='http://anesthesia21.com/condolence_nosign.jpg' border='0' alt='user posted image'>[/align:b965ea9e82]
<b>சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் சிங்கையில் வாழ்ந்தபோது அங்கு வாழ்ந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் இடம் பெற்றிருந்தார்.அங்கு ஒலி-ஒளி நிகழ்ச்சிகளில் கலந்து பாடி வந்தார்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

AJeevan</b>
Reply
#4
சங்கீதபூஷணம் எம்.ஏ.குலசீலநாதன் அவர்களின் இழப்பு ஈழத்து கலையுலகிற்கு ஓர் பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்.. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

இங்கே...! அந்த கவிக்குயில் தனது மதுர குரலால் பாடிய பாடல்களில் ஒன்று... எஸ்.கே.பஞ்ச் அவர்களது இசையில்...!
http://www.tamilamutham.de/kulaseelanathan.WMA
.
Reply
#5
நாம் அறியாத போதும் அறிந்தவர்கள் சொல்லும் அளவிற்கு புகழ் பூத்த ஈழத்துக் கலைஞரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போமாக....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ஈழத்தில் மெல்லிசையின் பங்குக்கு அத்திவாரமான மூத்த கலைஞர்களில் ஒருவரான சங்கீதபுூஷணம் <b>எம்.ஏ.குலசீலநாதனின் </b>இழப்பின் போது -
தன் வளமான குரலால் பாடி பலரது மனமேடைகளில் இடம் பிடித்துக் கொண்ட அவர் பாடிய ஒரு பாடலை என்னால் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.


சந்தன மேடை என் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி

பாட்டுக்கு ஆடிடும் பாவைதான்
அவள் பாபம் எல்லாம் புதுமை ராகந்தான்
மானுடத்தின் குரல் ஒன்றுதான்
அவள் மனதை மயக்கியது உண்மைதான்

கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கு கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்தில் ஒளிரும் நட்சத்திரமாய்
எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்.

இப்பாடலை அமரர் எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரன் என் சண்முகலிங்கம்.
இசையமைத்தவரும் குலசீலநாதனே.

இப்பாடல் இன்னும் தொடர்கிறதோ தெரியவில்லை. என் நினைவில் இருக்கும் வரிகளே இவை.
Nadpudan
Chandravathanaa
Reply
#7
<span style='font-size:22pt;line-height:100%'>இறந்த பின் நினைக்கும் நாம், அவர் வாழும் போது இப்படி அவரைப் பற்றி எழுதியிருந்தால், நம்மவருக்கு எதையாவது இன்னும் செய்துவிட்டுப் போயிருப்பார்.
இவரைப் போன்ற பல கலைஞர்கள் எங்கெங்கோ மூலைகளுக்குள் தள்ளப்பட்டு வாழ்கிறார்கள்.
அவர்களைப் பற்றியும் அவர்களது தொடர்புகள் பற்றியும் எழுத முடிந்தால் நலம் பயக்கும்.

உயிரோடு இருக்கும் நபர்களைப் பற்றி முடிந்தவர்கள் தனியாகச் சென்று ஒரு பேட்டியாவது எடுத்து <b>யாழுக்காவது</b> எழுதுங்கள்.

மாண்டவர் மீண்டு வரப் போவதில்லை.ஆனால் இருப்பவர்களால், நமது சமூகத்துக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என்று பாருங்கள்.
வாழும் போது எதையாவது செய்பவர்கள் பற்றி நொட்டு............... சொல்லிக் கொண்டிருப்பவர்களை விட எதையாவது சாதிக்க முயல்பவர்கள்தான் நமக்குத் தேவை.

[align=center:ad2944453b]<img src='http://www.alt-peru.de/medien/bilder_gr/191.jpg' border='0' alt='user posted image'>[/align:ad2944453b]
<b>நக்கீரர்கள் நமக்குத் தேவையில்லை.
தன்னம்பிக்கையோடு எதையாவது செய்யத் துடிக்கும் முடவன்,
நக்கீரனை விட கோடி மேலானவன். </b>

AJeevan</span>
Reply
#8
மாற்று படம் எடுத்த
தயாரிபாளரையும் நடிகரையும்
பேட்டி எடுத்து போடுகிறேன்
அவர்கள் திறமை பாராட்ட
பட்ட வேண்டியது
Reply
#9
kuruvikal Wrote:நாம் அறியாத போதும் அறிந்தவர்கள் சொல்லும் அளவிற்கு புகழ் பூத்த ஈழத்துக் கலைஞரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போமாக....!

தமிழ் அன்னை மடிவந்த கலைஞரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்றேன்!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
ஏங்க துயர் பகிரவும் குவாட் பண்ணிறிங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
திரு.நடேசன் அவர்களுக்கு
எனது அூழ்ந்த அனுதாபங்கள்
இந்த கொலையை செய்தவர்களை
யாராக இருநதாலும் மன்னிக்க கூடாது
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)