Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
#1
மனித சமூகத்தின் ஒரு அங்கமான பெண்கள் சமூகத்தில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அவற்றிற்கான காரணிகளை இனங்கண்டு பெண்களையும் ஆண்களையும் அவற்றிற்கு எதிராக விழிப்புணர்த்தி பெண்களின் சமூகத்திற்கு அவசியமான பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் அதே வேளை ஆண்களின் மீது வேண்டாத பழி சுமத்தல்களை தவிர்த்து அவர்களின் மீது உண்மையான யதார்த்தமான தவறுகள் இருக்குமிடத்து அவற்றை திருத்தக் கூடிய வகையில் சுட்டிக்காட்டி ஆணினதும் பெண்ணினதும் சமூக நிலைச்சமனிலை கலாசார விழுமியங்கள் காத்து இனத்தின் தனித்தன்மை காக்கும் வகையில் உங்கள் கருத்துக்களையும் பகிருங்களேன்!

நன்றி- குருவிகள்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தற்போது ஆண்கள்தான் புலததில் பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ளுகிறார்கள்.. சட்டரீதியாகவும் பெண்களுக்குத்தானே பாதுகாப்பு நிறைய இருக்கிறது.. சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதேங்கோ குருவி..!!
.
Reply
#3
பிரச்சனை என்னடா வென்டா ஆண்களின் குறை எழுத பக்கமில்லையே.... இருந்தால் எழுதிக் கொன்டே இருக்கலாம்! அத்தோட ஆண்களின் பிரச்சனைக்கு இப்படி தனிப்பக்கம் போதுமே எல்லாப் பக்கத்திலும் தனிய எல்லோ ஒதுக்க வேணும்! அப்பதான் கொஞ்சத்தை எண்டாலும் வெளியில சொல்லலாம்!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: :twisted:

பெண்கள் கோவிச்சுப் பூடாதேங்கோ இதுக்கையும் ஆண் ஆதிக்கம் எண்டு....உங்களை இங்க எழுத வேண்டாம் எண்டு ஒருத்தரும் சொல்லலலத்தானே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
http://www.yarl.com/articles.php?articleId=254 :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
kuruvikal Wrote:பிரச்சனை என்னடா வென்டா ஆண்களின் குறை எழுத பக்கமில்லையே.... இருந்தால் எழுதிக் கொன்டே இருக்கலாம்! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: :twisted:

!

<span style='font-size:25pt;line-height:100%'>ஆண்களின் பிரச்சினையே பெண்கள்தானே
ஆகவே ஆண்களும் தங்கள் பிரச்சினையை இங்கே எழுதலாம் தப்பில்லை என்று நினைக்கிறேன்.</span>
Reply
#6
இது நாட்டுக்குத் தேவையா?
.
Reply
#7
sOliyAn Wrote:இது நாட்டுக்குத் தேவையா?

எதைச் சொல்கிறீர்கள் சோழியான்?
பிரச்சினை வேண்டுமென்கிறீர்களா? வேண்டாமென்கிறீர்களா?
Reply
#8
ஆண்களே பெண்களுக்கப் பிரச்சினையாக இருப்பதாகக் சொல்லப்படும்போது.. இதுக்குள் எப்படி ஆண்களின் பிரச்சினையை எழுதுவதாம்?]
எதற்கும் ஆண்கள் தங்களது எண்ணங்களை.. அங்கலாய்ப்புகளை.. அனுபவங்களை.. சுமைகளை எல்லாம் இறக்கி வைப்பதற்காகவாவது ஆண்களுக்கும் யாழில் இட ஒதுக்கீடு தேவை.. :roll: Idea
.
Reply
#9
இட ஓதுக்கீடு தேவைதான்.
ஒதுக்காமல் இருந்தால் சரி. . ....
[b] ?
Reply
#10
ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை. அதே போல் தான் ஆண் இன்றி பிரச்சனைகள் இல்லை பெண் இன்றி பிரச்சனைகள் இல்லை. ஒரு குடும்பத்தில் பிரச்சனைகள் சகஐமே.பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்து போகும்.

திருமணத்திற்கு முன் எப்படா திருமணம் முடித்து வைப்பார்கள் என அழுதோர் திருமணத்தின் பின் ஏனடா திருமணம் செய்தோம் என அழுகிறார்கள் அல்லது சலித்துக்கொள்கிறார்கள். புலம்பெயர் தேசத்தில் இந்த சலிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இயந்திரத்தனமான வாழ்க்கை. எமக்கான பொழுதுபோக்குகளை வீட்டக்குள் முடித்து விடுதல். எந்த சந்தோசங்களையும் அனுபவிக்க முடியாத தன்மை. இப்படியாக பட்டியல் நீள்கிறது.

குடும்பம் கணவன் மனைவி என்கிறபோது கட்டாயம் அவர்களுக்குள் நட்பு என்பது மலரவேண்டும்.

இந்த புலம் பெயர் தேசத்தில் மனம் விட்டு பேசிக்கொள்ள யாரும் கிடைத்து விடுவதில்லை.

நட்பு மலரவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாக இருப்பது கட்டாயமாகிறது.

எத்தனையோ ஆண்களுக்கு இன்னமும் பெண்களின் மனதை புரிந்து கொள்கின்ற பக்குவம் இல்லை என்று தான் கூறலாம். அதே போல் ஆண்களின் மனதை முழுமையாக புரிந்து கொள்ளாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியானால் பிரச்சனை தான். இதற்கு காரணம் ஆண் பெண்களின் குறை அலஇல. எமகஇகான பிரச்சனைகளை விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ளாத தன்மையே.

வாழக்;கை ஒரே ஒரு முறை தான் இந்த வாழ்க்கையை அழகுற வாழ்ந்து மடிவதே நல்லது.

விட்டுக்கொடுத்தல் என்பதும் புரிந்துணர்வு என்பதும் கட்டாயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்தால் பிரச்சனைகள் தான் ஏது?

இடைக்கிடை ஊடல் தேவை என்றால் தொலைக்காட்சி பார்ப்பதிலும் குடித்த தேனீர் கப்பை கழுவாது வைத்தும் கொஞ்சம் கொஞ்சம் கோவித்துக்கொள்ளுங்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#11
நல்லதொரு கருத்துத்தான்

ஆனாலும் புலம்பெயர் மண்ணில் மட்டுமல்ல.......தாய்நிலத்திலும் புரிந்துகொள்ளும் தன்மை அரிதாகின்றது. திருணம் முடிந்து ஓரிரு வருடங்களில் இருக்கின்ற இறுக்கம் இழகுகின்றது. அதை தொடர்ந்து காண முடியவில்லை. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பெற்றோரிற்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றனவோ என்னவோ அவர்கள் தங்களை மறக்கின்றார்கள். தமக்கிடையில் பிள்கைளின் பெற்றோர்கள் என்ற பதவி மட்டுமே இருப்பதாக உணர்கின்றார்கள். கணவன் மனைவி என்பதை அறவே மறந்துவிடுகின்றார்கள்.

புரிந்துணர்வு ஊடல் கூடல் எல்லாம் காணவேண்டுமாயின் 50 ஆண்டுகள் பின்னுக்கு போகவேண்டும்.
[b] ?
Reply
#12
ஏன் 50 வயதக்குப்பிறகும் உந்த ஊடல் கூடல் எல்லாம் பாக்கலாம்
Reply
#13
தனித்து பெண்களின் பிரச்சனைகளை கதைப்பதால் தான் ஆண்களின் துன்ப துயரங்கள் மனத்தேவைகள் அறியப்படாமல் போகின்றனவோ என்னவோ. ஆகையால் இரு பாலாரும் பேசிக்கொள்ள இந்த களத்தை பயன்படுத்துகின்ற போது ஒப்பிட்டு ஆண் பெண்களுடைய மனவிருப்புக்களை அறியக் கூடியதாக இருக்கும்.

புலம் பெயர் தேசத்தில் அதிகம் ஆண்களே உழைப்பவர்களாக இருக்கின்றார்கள். இதனால் உடல் கழைப்பு மன உழைச்சல்களுக்கு அதிகம் ஆளாகின்ற சந்தற்பம் அதிகமாகிறது. இதை புரியாத மனைவியர் பலர் இன்றும் இருந்த கொண்டு தான் இருக்கிறார்கள். அது அவர்களின் தவறன்று. தனது வேலை இடத்து சிக்கல்களை புரியவைக்காத கணவனில் தான் பிழை அதிகம். மனைவியும் அவரின் வேலை கடினத்தை உணராது வேலையால் வந்ததும் வராததுமாக கோபித்து கொள்ளல். இது நான் அனேக வீடுகளில் கண்டிருக்கிறேன். ஆசுவாசமாக உடை மாற்ற கூட விடாது வேலை சொல்லுதல் சினத்தல் போன்றன. மனைவியிலும் பிழை சொல்லுவதற்கில்லை. காரணம் நாள் முழுவதும் வீட்டில் தனித்த நிலை வந்ததும் வராததுமாக கோபித்து கொள்ளல் அதை ஒரு ஊடலாக கூட கொள்ளலாம். ஆனால் அதை ஊடலாக ஏற்கும் மன பக்குவம் வேலையால் வந்த கணவனிடம் இராது. இங்கு பிரச்சனை எழுகிறது.

இன்னும் மலரும்.....

நளாயினி தாமரைச்செல்வன். :wink: :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#14
மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட hPவி பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்
[b] ?
Reply
#15
பிறேம். நான் சொன்ன 50 ஆண்டுகள் பின்னோக்கி என்பது. எமது தாய் தந்தையரின் பெற்றோர்களை. அவர்களை பாருங்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர்களாக எவ்வளவு மரியாதை அன்பு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். உண்மையில் இன்றைய இளம் கணவன் மனைவியிடையே அது குறைந்துள்ளது. எதற்கெடுத்தாலும் சீற்றமும் சினத்தலும்தான் காணப்படுகின்றது.

கணவன் மனைவிக்கு இடையில் ஒரு புரிந்துணர்வ இருக்கவேண்டும்.
மனைவிக்கு இந்த விடயத்தில் பிடிப்பு இல்லையேல் கணவன் அதை புரிந்து செய்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் மனைவியும் கணவனிற்கு பிடிக்காதவற்றை செய்வதை தவிர்க்கவேண்டும்.
அதை விட்டிட்டு எனக்கு பிடித்தததை நான் செய்வேன். அதை இவர் யார் தடுப்பது என்று புறப்பட்டால் பிறகு தண்டவாளம்தான். என்றுமே இணைய முடியாது

sethu Wrote:ஏன் 50 வயதக்குப்பிறகும் உந்த ஊடல் கூடல் எல்லாம் பாக்கலாம்
[b] ?
Reply
#16
நான் சொன்ன கருத்து என்ன என்றால் பலர் பலவிதமாக வாழ்கிறார்கள் ஆனால் முதியவர்கள் ஆகும்போது உணர்ந்து நடப்பதுமட்டுமல்ல அதிக அன்பாகவும் வாழ்கிறார்கள்
Reply
#17
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் காசம் வரும் - இதில்
அந்தரங்கம் கிடையாதையா
நாள்செல்ல நாள்செல்ல சுகம்தானையா!! Idea
.
Reply
#18
Karavai Paranee Wrote:மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்


<span style='color:#d10000'>மனைவி மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால்.......
[size=18]என்ன வரும்..?</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#19
Chandravathanaa Wrote:
Karavai Paranee Wrote:மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்


<span style='color:#d10000'>மனைவி மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால்.......
[size=18]என்ன வரும்..?</span>


இப்படி இரண்டு பக்கமும் கேள்வி கேட்டால் சண்டை வரும்
நிம்மதிதான் எப்போ வரும் :wink:
Reply
#20
மனைவி வேலையால் வரும் போது கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக்காட்சி பார்த்தால்.......
Nadpudan
Chandravathanaa
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)