Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
இதே செய்தியை முதலில் ரொய்ரரும் தந்து இதற்கு முன் மேலே இடப்பட்டுள்ளது...!

<span style='color:red'>Kumaratunga requests Norway to resume facilitation

[size=9][TamilNet, April 23, 2004 08:37 GMT]

[size=14]Sri Lanka's President Chandrika Kumaratunga phoned Norwegian Prime Minister Kjell Magne Bondevik Thursday evening and requested Norway to resume its role as a third party facilitator in the peace process between the government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), said a press release issued by the Norwegian Prime Ministers Office in Oslo Friday. Norway, however, said it would resume its role as facilitator if the LTTE also made a similar request to Oslo. Norway said it was temporarily withdrawing from Sri Lanka's peace process in November last year.
Norway said it was temporarily pulling out after President Kumaratunga took over the ministry of defence from former Prime Minister Ranil Wickremesinghe's government. Mr. Wickremesinghe said he could not continue talks without the defence ministry.

"I told her that Norway would be prepared to facilitate if the LTTE also makes a similar request to us to play the same role, said Bondevik" according to the Norwegian press release.

"When we receive a request from both the parties to continue our role, we would consult with the parties on how to take forward the the process. said Mr. Kjell Magne Bondevik", according to the press release. </span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Norway invited to Sri Lanka talks

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40072000/jpg/_40072601_tamilsoldiers203.jpg' border='0' alt='user posted image'>
The Tamil Tigers' initiated the ceasefire more than two years ago

Sri Lankan President Chandrika Kumaratunga has invited Norway to resume its role as negotiator between her government and Tamil Tiger rebels.
Norway's Prime Minister Kjell Magne Bondevik said he had been asked by Mrs Kumaratunga to help resume peace talks, which broke down in November.

Norway helped broker a 2002 ceasefire that has held ever since.

Norway has replied with a conditional "yes", but stated it must be invited by rebel chiefs too before re-commencing.

The BBC's Frances Harrison in Colombo says there is no reason to think the rebels would have a problem endorsing the role of the Norwegians as the have always strongly supported international involvement in the peace process.

<b>Fresh thaw </b>

Peace talks between the two sides stalled last year when Tamil leaders pull out of negotiations amid a government power struggle in the capital, Colombo.

Mrs Kumaratunga has previously accused Norway of being biased towards the rebels.

We hope [the Tamils' request] will come. If so, we will consult both sides about how the process can be brought forward

Kjell Magne Bondevik

But Mr Bondevik said a recent election and subsequent new government in Sri Lanka could be the reason for the welcome thaw.

"I said that Norway was willing to comply, on condition that we also get a request from the Tamil Tigers," he said.

"If that comes, and we hope it will, we will consult both sides about how the process can be brought forward."

The Tamil Tiger rebels have fought Sri Lankan authorities for 19 years in pursuit of a separate Tamil state.

The ethnic civil war is estimated to have caused 64,000 deaths in the country.


bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>சமாதானப் பேச்சுக்களைத் தொடர மத்தியஸ்தம் செய்ய வருமாறு நோர்வேக்கு சந்திரிகா வேண்டுகோள்

இரண்டு வருடங்களுக்கும் மேலாக, சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருவதிலும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதிலும் மத்தியஸ்தர்களாகக் கடமையாற்றிய நோர்வே பிரதிநிதிகள், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தங்கள் பணிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்கள்.

ரணில் அரசின் அமைச்சரவையிலிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களைப் பறித்தெடுத்த ஐனாதிபதி சந்திரிகா, சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அதிக உரிமைகளைக் கொடுக்க முயற்சிப்பதாக ரணிலைக் குற்றம் சாட்டியதுடன், இதற்கு நோர்வேயும் உடந்தையாக இருப்பதாகவும் பகிரங்கமாக ஊடகங்களில் குற்றம் சாட்டி வந்தார்.

பாதுகாப்பு, ஊடகத்துறை உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை ஐனாதிபதி திடிரெனப் பொறுப்பேற்றதன் காரணமாக, யுத்த நிறுத்தத்தைத் தொடரவோ உறுதிசெய்யவோ தம்மிடம் போதிய அதிகாரம் இல்லை என்று காரணம்காட்டி, சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதை ரணில் அரசு தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நோர்வே அரசின் பிரதிநிதிகளும், சிறிலங்காவில் எழுந்துள்ள அதிகாரப்பீட இழுபறிகள் தீர்ந்து ஒரு சுமூக நிலை ஏற்படும்வரை தங்களது மத்தியஸ்தத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்கள்.

தங்களது மத்தியஸ்தத்தை நோர்வே விலக்கிக்கொண்ட போதும், யுத்த நிறுத்தக் கண்காணிப்பில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டுவந்த ஸ்கன்டிநேவிய கண்காணிப்பாளர்களின் பணியை விலக்கிக்கொள்ளாது செயற்பட அனுமதித்ததால், மீண்டும் போர் மூளும் அபாயம் தவிர்க்கப்பட்டே வந்தது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, இரு பிரதான கட்சிகளுமே மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சமிக்ஞைகளைக் காட்டியிருந்தார்கள்.

இருந்தபோதும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. உட்பட, ஹெல உறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகள் நோர்வேயின் மத்தியஸ்தத்தை நிராகரிக்கும்படியே கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது ஆட்சியமைத்துள்ள ஐ.ம.சு.மு.யின் தலைவரும், நாட்டின் ஐனாதிபதியுமான சந்திரிகா குமாரணதுங்க, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலும், மீண்டும் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தான் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதி கூறியிருந்தார். இருந்தாலும், ஏனைய அனைத்துக்கட்சிகளின் தலைமையையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தும் எண்ணத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா, யப்பான், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றன நேரடியாகவே ஐனாதிபதி சந்திரிகாவுக்கு, பேச்சுவார்த்தைகளை உடனடியாக விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்கும்படி அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில், இன்று சந்திரிகா நோர்வேயின் பிரதம மந்திரி திரு.கியெல் மக்னே பொன்டெவிக் அவர்களைத் தொடர்புகொண்டு, நோர்வேயின் சமாதானப் பிரதிநிதிகள் 'மூன்றாம் நிலை" மத்தியஸ்தத்தைத் தொடருவதற்கு உடனே முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நோர்வே பிரதமர், சிறிலங்காவின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாண நோர்வே முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் வழங்கும் என்றும், இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மத்தியஸ்தம் வழங்குவதாக இருந்தால், விடுதலைப் புலிகளின் தலைமையிடமிருந்தும் தமக்கு இதே அழைப்பு வரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது என்றார்.

இரு பகுதியும் விண்ணப்பித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் மட்டுமே நோர்வே மத்தியஸ்தர்கள், இரு பகுதிகளையும் சந்தித்து, எத்தகைய புதிய நிபந்தனைகள் கட்டுக்கோப்புக்கள் நிலைப்பாடுகளுக்குக் கீழே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று ஆராய்வார்கள் என்று நோர்வே பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். </span>

நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>த.வி.கூ உறுப்பினர்கள் மீதான தடை உத்தரவை நீக்குமாறு கோரி மனுத் தாக்கல்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் ஆலோசனைகளின்றி கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.சம்பந்தன், சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் பிரதிவாதியாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிடப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் ஆலோசனைகள் எதுவும் பெறப்படாமல் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அரசியல் பீட உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் உறுதி செய்திருந்தமை நீதிக்குப் புறம்பானது என்று மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த இடைக்கால தடை உத்தரவின் காரணமாக கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளதால் அதனை இரத்துச் செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. </span>

நன்றி புதினம்...!

--------------------

[size=14]தேர்தல் சமயத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னம் உட்பட பல வகைகளில் அக்கூட்டமைப்புக்கு தேர்தலை எதிர் நோக்கவே நெருக்கடிகளைக் கொடுத்தவர் சங்கரி என்பதும் அந்தத் தடைகள் தாண்டப்பட்ட நிலையிலேயே கருணா பிளவு பற்றி அறிவித்ததும் கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறையில் கூட்டமைப்பின் இடையே பிளவை உண்டு பண்ண முனைந்ததும் நடைபெற்றது என்பதையும் இங்கு குறிப்பிடுதல் நன்று....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க
கருணா விவகாரமும் முட்டுக்கட்டை!அவரை ஒளித்து வைத்திருக்கும் அரசுடன்
பேசுவதா எனத் தயங்குகின்றனர் புலிகள்</b>

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகள் ஆரம்பமாவதற்கு முட்டுக்கட் டையாக இருக்கும் விடயங்களில் கருணா விவகாரம் முக்கியமானது எனத் தெரியவருகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவை இலங்கை அரசு தஞ்சம் கொடுத்து வைத்துள்ளது என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவரைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருகின்றது என்றும் புலிகள் கருதுகின்றனர். இத்தகைய அரசுடன் பேச்சு நடத்துவதா என்ற விசனம் புலிகளின் தலைமையிடம் பலமாக நிலவுவதை உணரமுடி கிறது.விடுதலைப் புலிகளின் நடவடிக்கை களுக்கு அஞ்சி கிழக்கிலங்கையை விட்டுத் தப்பியோடிய கருணாவும் அவ ரது நெருக்கிய சகாக்களும் இலங்கை அரசுப் படைகளிடம் தஞ்சமடைந்திருக் கின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஆனால், இதை இலங்கை அரசுத் தரப்பு அடியோடு மறுத்துள்ளது.
எனினும், கருணாவோடு கொழும்புக்குத் தப்பியோடிப்பின்னர், மீண்டும் கிழக்கிலங்கைக் குத் திரும்பி வந்து புலிகளுடன் இணைந்துள்ள கருணாவின் முன்னாள் சகாக்கள் சிலர் நேர டியாகத் தெரிவித்துள்ள தகவல்க ளும் -
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரி வினருக்குக் கிடைத்துவரும் புலனாய்வுத் தகவல்களும் -
கருணா, இலங்கை அரசுப் படைகளின் பாதுகாப்பில் தெற்கில் ஓரிடத்தில் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்துகின்றன என புலிகளின் வட்டா ரங்கள் தகவல் வெளியிட்டன.
தென்னிலங்கையில் உள்ள அதி ரடிப் படையினரின் ஒரு முகாமில் அல்லது இராணுவத்தளம் ஒன்றில் கருணா பத்திரமாக வைக்கப்பட்டிருக் கின்றார் எனப் புலிகள் கருதுகின்ற னர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் துக்குள் ஊடுருவி, புலிகளின் தலை மையை இலக்குவைக்கும் சதித் திட் டங்களைச் செயற்படுத்துவதற்குக் கரு ணாவை ஒரு கருவியாகப் பயன்படுத்த இராணுவத்தரப்பு எத்தனிக்கலாம் என் றும் புலிகள் சந்தேகிக்கின்றனர்.
ஆபத்தான பேர்வழி ஒருவருக்குத் தஞ்சமளித்து, அவர் மூலம் புலிகள் இயக்கத்தின் தலைமையை ஆட்டங் காணச்செய்ய முயலும் ஓர் அரசுத் தலைமையுடன் ஒரே மேசையில் இருந்து சமரசம் பேசுவது குறித்து சிந்திக்கலாமா எனப் புலிகளின் மூத்த பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சமாதான முயற்சிகளை ஆரம் பிக்க முன்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவேண் டும் எனக் கருதும் புலிகளின் தலைமை, கருணா விவகாரம் குறித்தும் தீர்க்கமான ஒரு முடிவு எட்டப்படவேண்டும் என விரும்புகிறது எனவும் தெரிகின்றது.


<b>மகாவலி அமைச்சுக்கு இழுபறி ஏன்?
திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! </b>

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சிகளான சிறீலங்கா சுதந் திரக்கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இடையில் இழுபறியை ஏற்படுத் திய விவகாரங்களில் முக்கியமானதொன்று மகாவலி அபிவிருத்தி அமைச்சுப் பற்றிய சர்ச்சை யாகும்.
ஐ.ம.சு. கூட்டமைப்புக்கான உடன்பாடு ஏற்பட்ட சமயம், கூட்டமைப்பின் உத்தேச புதிய அர சில் மகாவலி அபிவிருத்தி அமைச்சைத் தங்களுக்குத் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும் -
அது இப்போது மறுக்கப்பட்டு - மறக்கப்பட்டு - சு.க.பிரமுகருக்கு வழங்கப்பட்டுவிட்டது என வும் - தெரிவித்து சீற்றம் கொண்டுள்ளனர் ஜே.வி.பியினர்.
இவ்வளவு து}ரம் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்காக இருதரப்பும் பிய்ச்சல் - பிடுங்கல் படுவது ஏன் என்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்து இலங்கையில் அதிகளவு ஆயுதத் தளபாடங்களையும், இராணுவப்பயிற்சி பெற்ற அணிகளையும் கொண்டிருக்கும் அமைச்சு இதுதான் என்ற விவரம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதனால்தான் அந்த அமைச்சுக்காக இவ்வளவு போட்டா போட்டி.
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் விக்டோரியா, மாதுறுஓயா, கொத்மலை, ரந்தெனிகல, மொறகஹந்த ஆகிய ஐந்து பாரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் கீழ் உள்ள ஐந்து பாரிய அணைக்கட்டுக்களையும் சுமார் இரு நு}று நீர் வாய்க்கால்களையும் பாது காக்கும் பணியில் இராணுவத்தின ரால் முழுதாகப் பயிற்றுவிக்கப்பட்ட 650 பாதுகாவலர்கள் உட்பட சுமார் 800 பாதுகாவலர்கள் இந்த அமைச் சின் கீழ் பணியாற்றுகின்றனர்.
இந்த அமைச்சின் கீழ் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ரி.56 ரகத் துப்பாக்கிகள் - 450 மற்றும் ரி.59 ரக சீனத் தயாரிப்பு பிஸ்டல்கள்-23 உட்பட குறைந்தது 615 ஆயுதங்கள் உள்ளன.
இந்த அமைச்சின் கீழ் காடுகள் மற்றும் சுமார் ஆறு லட்சத்து 40 ஆயி ரம் ஏக்கர் பாசன நிலமும் உள்ளன. மேலும் 8 ஆயிரம் கிலோமீற்றர் நீள மான கால்வாய் வலையமைப்பையும் இந்த அமைச்சே நிர்வகிக்கிறது.
இத்தகைய பெறுமதிமிக்க அமைச்சு இது என்பதைத் தெரியாமலேயே சு.க. பிரமுகர்கள் பலர் முன்னர் ஜே.வி. பிக்கு உறுதியளித்தபடி அந்த அமைச்சை ஜே.வி.பிக்கு வழங்கினால் என்ன என்ற கருத்தை வெளியிட்டு வந்தனராம். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஜனாதி பதி இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. ஜே.வி. பிக்கு அந்த அமைச்சைக் கொடுக் கலாம் என்ற சாரப்பட அங்கு சிலர் கருத்துக் கூறியபோது அவர்களின் வாயை மூடும் விதத்தில் கடுமையான தொனியில் பதில் தந்தாராம் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலா ளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன.
மகாவலி அமைச்சின் முக்கியத் துவம் என்னவென்பது எனக்கும் ஜனா திபதிக்கும்தான் தெரியும். பாதுகாப்பு அமைச்சுக்கு அடுத்து அதிகளவில் ஆயுதங்களையும் இராணுவப்பயிற்சி பெற்ற ஆள்களையும் கொண்டுள்ளது இந்த அமைச்சுதான். அதனிடம் ஆயு தங்கள், n~hட்கன்கள், வெடிபொருள் கள் எல்லாம் நிரம்பிக்கிடக்கின்றன. இராணுவப்பயிற்சி பெற்ற பெரியபடையணியே இந்த அமைச்சின் கீழ் உள் ளது.
ஷஷஅதைத்தவிர இலங்கையில் மிகப் பெரிய காடுகள் மகாவலி அபி விருத்தி அதிகார சபையின் கட்டுப் பாட்டிலும் நிர்வாகத்திலும்தான் உள் ளன. இந்த அமைச்சை ஜே.வி.பிக் குக் கொடுத்தால் சத்தமின்றி இராணு வப்பயிற்சி ஒன்றை முன்னெடுப்பதற் கான சகல வளங்களையும் அவர் களுக்கு வழங்கியதாகிவிடும். தெற் கில் மூன்றாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு நாமே வழி செய்தவர்களாகி விடு வோம்|| என்று அவர் கூறியதும் அரச தரப்பில் ஜே.வி.பிக்கு வக்காலத்து வாங்கியவர்கள் ஷகப்சிப்| ஆகிவிட்ட னராம்.
இந்த விடயத்தில் ஜே.வி.பிக்கா கப் பேசி வந்த அனுரா பண்டார நாயக்க, மங்கள சமரவீர போன்றோரும் இந்தத் தகவலோடு அடங்கிப் போய்விட்டனர் என்று கூறப்படுகின்றது.

<b>
கருணாவின் ஆள்கள் இருவர்
தஞ்சைப் பகுதியில் கைது? </b>

கருணாவின் ஆள்கள் எனக் கருதப்படும் இருவர் தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக் கின்றனர் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் ஷநக்கீரன்| சஞ்சிகை தக வல் வெளியிட்டிருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட எல்லையோரப் பகுதியில் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங்கோட்டை கால்நடைப் பண்ணை யில் வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் கடந்த வெள்ளி இரவு வழக் கம்போல் வேலை முடிந்து தனது சொந்தக் கிராமமான சாமிப்பட்டிக்குப் போய்க்கொண்டிருந்தார். வழியில், யுூக்ளிபட்ஸ்| காடு. திடீரென அவரை இரண்டுபேர் வழி மறிக்க மிரண்டு போனார் மணிமாறன்.
விடுதலைப் புலிகளின் உடையில் இருந்த இருவரும் 4 நாள்களுக்குத் தேவையான சாப்பாட்டை எங்களுக் குத் தயார் செய்து கொடு|| என மிரட்ட மணிமாறன் மறுத்துள்ளார். சட்டெனக் கைத்துப்பாக்கிகளை எடுத்த இருவரும் துப்பாக்கி முனையில் மணி மாறனை மிரட்டினர். பயந்துபோன அவர் சாப்பாடு தயார் செய்து தருவ தாகச் சொல்லிவிட்டு கிராமத்துக்குச் சென்று மக்களைத் திரட்டிக்கொண்டு மீண்டும் காட்டுக்கு வந்தார். மக்க ளைப் பார்த்ததும் அந்த இருவரும் காட்டுக்குள் ஒளிந்துவிட்டனர்.
கால்நடைப் பண்ணை உதவி இயக்குநர் பெரியசாமியிடம் இந்தத் தகவலை மணிமாறன் சொல்ல அவர் பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இரவோடு இரவாக காட்டைத் துளாவிய பொலீஸ்படை, இரண்டு பேரையும் வளைத்துப்பிடித்தது. தற்போது க்யுூ| பிரிவுக் காவலில் இருக்கும் அவ்விருவர் பற்றியும் பொலீஸார் மூச்சு விட மறுக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் தஞ்சை, திருச்சி பிரசார நேரத்தில் இந்தச்சம்பவம் நடந்ததால், வி~யத்தை அமுக்கியே வைத்துள்ளனர்.
மணிமாறனைத் தேடி கால்நடைப் பண்ணைக்குச் சென்றபோது, அவரும் பொலீஸ் பாதுகாப்பில் இருப்பது தெரி யவந்தது.
ஷக்யுூ| பிரிவினரிடம் இரகசியமாகத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டபோது ஷபிடி பட்டவர்கள் விடுதலைப் புலிகள்தானா?|| என்று கேட்கப்பட்டது.
ஷஷகருணாவின் ஆள்கள் என்பது எங் கள் விசாரணையில் தெரியவந்திருக் கின்றது. தேர்தல் நேரமாக இருப்ப தாலும் கலைஞரின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுப்பயணம் நடக்கவிருப்பதாலும் ஊடகங்களுக் குத் தகவல் போய்விடக்கூடாது என்ப தில் கவனமாக இருக்கிறோம்|| - என் றார் ஷக்யுூ| பிரிவினர்.
- இப்படி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன் 26-04-2004
Reply
<b>மட்டக்களப்பில் 7 விடுதலைப் புலிகள் வீரச்சாவு </b>

[ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ][ திங்கட்கிழமை 26 ஏப்பிரல் 2004 19:51 ஈழம் ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரச்சாவு அடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள்.

கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த்இ இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன்இ ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும்இ 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இத்தாக்குதலில் ஈடுபட்ட தேசவிரோத குழுவினர்இ ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர்.

கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி)இ லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை)இ 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்இ சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதாகவும்இ அரச படையினரோடு இணைந்து செயற்படும் தேசவிரோத சக்திகளேஇ இவ்விரு சம்பவங்களுக்கும் பொறுப்பு என்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுணதீவு ஊடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டு வவுணதீவு ஊடாகவே இக்குழுவினர் தப்பிச் சென்றதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும்இ ஆகவே இச்சம்பவத்திற்கு இராணுவத்தினரின் அனுசரணை இருந்ததை தாங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும்இ போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதுடன்இ இச்சம்பவங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் சந்தித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளைஇ இன்று மாலை சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடைபெற்ற முள்ளாமுனை வேளாண் பண்ணை புலிகள் முகாமிற்கு சென்று சம்பவத்தின் பாதிப்புக்களை நேரடியாகக் கண்டறிந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது வீரச்சாவு அடைந்த 7 விடுதலைப் புலிகளினது வித்துடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டன. நாளை பிற்பகல் 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவர்களது வித்துடல்கள் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும்இ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நன்றி புதினம்


<b> மட்டக்களப்பில் பதற்றம் தோற்றுவிக்கப்படுகிறது? </b>

[ கொழும்பிலிருந்து பகலவன் ] [ திங்கட்கிழமை, 26 ஏப்பிரல் 2004, 20:23 ஈழம் ]

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் ஒரு திசை திருப்பற் சம்பவமாகவே கொழும்பின் முக்கிய ஆய்வாளர் ஒருவரால் நோக்கப்படுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற சபாநாயகர் தேர்தலில் தோல்வியுற்றதையடுத்து இந்த ஆட்சியை பொதுசன மக்கள் ஐக்கிய முன்னணியால் கொண்டு நடத்த முடியுமா என்பது குறித்த கேள்விகள் இலங்கையில் ஏற்கனவே எழுந்துள்ளன.

இந்நிலையிலே, புலிகளுடன் பேசுவதற்குத் தயார் என்ற அறிவிப்பை சந்திரிகா நோர்வேக்கு விடுத்துள்ளார். இது ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 4,500 மில்லியன் டொலர்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்காக ஐனாதிபதி ஆடும் நாடகம் என்றே கருதும் மேற்படி ஆய்வாளர்,

ஆனால் ஆட்சியில் பங்குவகிக்கும் Nஐ.வி.பியின் நிலைப்பாடு குறித்த கேள்விகள் பலரிடையேயும் எழுந்ததுள்ளது என்றும், Nஐ.வி.பி.யுடன் ஐனாதிபதிக்குள்ள பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பாக அது என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதிலேயே இந்த விவகாரம் தங்கியுள்ளது என்றும்,

Nஐ.வி.பி. நோர்வே வெளியேற்றப்பட வேண்டும், பேச்சுக்கள் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடாது, இடைக்கால நிர்வாகம் இல்லை என்ற கொள்கைகளைக் கொண்டுள்ளதால் அது எவ்வாறு பேச்சுக்களை நடத்த அனுமதிக்கப் போகின்றது என்ற கேள்வியால் சர்வதேசம் ஆளும்கட்சி அரசின் மீதும், ஐனாதிபதியின் மீதும் நம்பிக்கையை இழந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

இதனாலேயே எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐப்பானின் விசேட தூதுவர் அகாசி இலங்கைக்கு வரவுள்ளதாகவும், நோர்வே கூட பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அவதானமாக கையாள முயற்சிப்பதற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் கருணா விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றி பிரஸ்தாபிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், கருணா தங்களிடம் இல்லை என்று காட்டுவதற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இங்குள்ள தினசரிப் பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்ட போது, ஐனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்குத் தேவையான பெரும்பாண்மையை சந்திரிகா இந்த ஆட்சியில் பெறமாட்டார் என்பது கண்கூடு என்றும் எனவே கருணாவை சரியாக பாவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் Nஐ.வி.பி., இதர இனவாதிகளைச் சமாதானப்படுத்துவதற்கு இவ்வாறான தாக்குதல் உதவும் என்றும், எனவே புலிகளுடன் பேச ஐனாதிபதி முயற்சிப்பதை அவர்கள் எதிர்க்காமல் விடலாம் என்றும் தான் கருதுவதாகத் தெரிவித்ததோடு,

இதற்காகவே கடந்தவாரம் கருணா இன்னமும் இலங்கையிலே இருக்கிறார் என்ற செய்தியை முக்கியத்துவமாக வெளியிட முயன்றதாகவும் தெரிவித்ததோடு, வவுணதீவு முகாமிலிருந்து வந்தவர்களே இதனைக் செய்ததை பொதுமக்கள் பார்த்ததாக திரு. கௌசல்யன் தெரிவித்துள்ளது உறுதிப்படுத்தப்படுமிடத்து, இது ஒரு போர் நிறுத்த மீறல் என்றும் இதனை கண்காணிப்புக்குழு எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமான விடயம் என்றும்,

தற்போதைய அரசு இந்த விடயங்களை அவதானமாகக் கையாளவிட்டால், அது மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதே இது பற்றிய தனது கருத்து எனத் தெரிவித்தார்.

நன்றி புதினம்
Reply
இது குறித்து கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட செய்தி குறித்து நீங்கள் குருவிகளின் யாழ் வலைப்பூவில் பார்க்கலாம்..இந்திய உபகண்டத்தில் எனும் தலைப்பின் கீழ் செய்திப்பகுதியில் உள்ளது....
http://kuruvikal.yarl.net/[/size]
---------------------
<span style='color:red'>கதிர்காமரின் கூற்று நகைப்புக்கிடமானது: விடுதலைப் புலிகள்

தமிழீழத் தேசியத் தலைவரை இந்தியாவின் புதிய அரசாங்கம்; நாடு கடத்துமாறு கோரலாம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தெரிவித்த கருத்துக் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் நகைப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரை நாடு கடத்துமாறு இந்தியாவின் புதிய அரசாங்கம் கோரிக்கை விடலாம் என்றும், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தன்னாட்சி அதிகார சபை ஆலோசனைகள் தனிநாட்டுக்கு வழிவகுக்கக் கூடியவை என்றும் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணப்பாளர் புலித்தேவன் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, லக்ஸ்மன் கதிர்காமர் வேண்டுமானால் வன்னி வந்து தமது தலைவரை நாடு கடத்துவதற்கு முயற்சிகளைச் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லக்ஸ்மன் கதிர்காமரின் இத்தகைய கருத்துக்கள் இலங்கையின் சமாதான முயற்சிகளை பாதிக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.</span>

-------------------

<span style='color:red'>கதிர்காமரின் கூற்றுக்கு தமிழ்க் கூட்டமைப்பு கடும் ஆட்சேபம்

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

லக்ஸ்மன் கதிர்காமரின் இக்கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவரை நாடு கடத்துமாறு இந்தியாவின் புதிய அரசாங்கம் கோரிக்கை விடலாம் என்றும், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தன்னாட்சி அதிகார சபை ஆலோசனைகள் தனிநாட்டுக்கு வழிவகுக்கக் கூடியவை என்றும் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வேளையில், அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், லக்ஸ்மன் கதிர்காமரின் இத்தகைய கருத்துக்கள் இலங்கையின் சமாதான முயற்சிகளை பாதிக்கலாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. </span>

------------------

<span style='color:red'>கதிர்காமரின் கூற்றுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் வழங்கக்கூடாது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருப்பதானது, மிகவும் வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரியம், போராட்டத்தின் தார்ப்பரியங்கள் தொடர்பாக கதிர்காமருக்கு என்ன தெரியும்? விடுதலைப் புலிகளிடம் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை கொடுக்கவேண்டாம் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அருகதை உண்டு? இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

கதிர்காமர் கூறியுள்ள கருத்தானது, அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது இலங்கை அரசாங்கத்தின் கருத்தா என்று இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறுவதன் முக்கிய நோக்கம் என்னவென்று புரியவில்லை. உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்பதற்காகவா அல்லது வெளிநாட்டுப் பணத்தை பெற வேண்டும் என்பதற்காகவா இந்த பேச்சுவார்த்தை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்திற்கு நட்ட ஈடு வழங்கப் போவதாக இலங்கை அரசு கூறுகிறது. இவ்வளவு காலம் நட்ட ஈடு வழங்காது தற்போது இந்த முடிவை எடுத்து இருப்பது கண்துடைப்பாகவே கருத வேண்டியுள்ளது.

இனப்பிரச்சனை உக்கிரமடைய இந்த இனக்கலவரமே காரணம். எனவே அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கையை எடுப்பதை விடுத்து பொய்யாக இவ்வாறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் உயிரை இந்த அரசாவது திருப்பி கொடுக்குமா என்று தமிழரசுக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். </span>

நன்றி புதினம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கதிர்காமரை பேச்சுவார்த்தைக்குழுவில் இணைத்துள் கொள்ளாத விவகாரம்: ஐ.ம.சு.மு. அரசுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குழுவில் சிறிலங்காவின் அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இணைத்துக் கொள்ளாத விவகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் நலன்கணைப் பேணும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகள் பல தடை செய்வதற்கு காரணமாகவிருந்த லக்ஸ்மன் கதிர்காமர் தற்போது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையில் உள்ள சிலர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கான அரச தரப்புப் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் சிறிலங்கா ஐனாதிபதியும், அவரது நெருங்கிய அரசியல் ஆலோசகர்களுமே ஈடுபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை, அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவில் லக்ஸ்மன் கதிர்காமர் இடம்பெறுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாலேயே, அவரை அரசதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவில் ஐனாதிபதி சேர்த்துக் கொள்ளவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி புதினம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/05/berlin_conf_3_25941_435.JPG' border='0' alt='user posted image'>

International community's role in Sri Lanka's peace discussed in Berlin

[TamilNet, May 27, 2004 00:05 GMT]

Representatives of the Sri Lankan Government, the Liberation Tigers and the International Donor Community participated in a conference titled, 'New perspectives in the Sri Lankan Peace Process - the current political situation and the role of the International community,' organised by the Berghof Foundation for Conflict Studies and Transformation in Berlin Wednesday, sources said.
Discussions centered on issues preventing early resumption of peace talks between the Government of Sri Lanka (GoSL) and the Liberation Tigers (LTTE)

The Roundtable was chaired by Dr. Norbert Ropers, Director, Berghof Foundation for Conflict Studies Sri Lanka Office.

Mr. S. Pulithevan, Secretary General of the LTTE's peace secretariat and Dr. Jeyampathy Vickramaratne, Senior Advisor to Sri Lanka's Ministry of Constitutional Affairs participated in the roundtable.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.airwar.ru/photo/mig27/ind19.jpg' border='0' alt='user posted image'>

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக ரஷ்சிய தயாரிப்பு யுத்த விமானம் கட்டுநாயகா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுநாயக்காவுக்கு அருகில் உள்ள களப்புப் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது....! கட்டுநாயக்காவுக்கு அருகில் முன்னரும் ஒரு மிக் ரக யுத்த விமானம் குடிமனைகள் உள்ள பகுதியில் விழுந்து நொருங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது....!

--------------------------

SLAF Mig 27 crashes

[TamilNet, June 09, 2004 09:28 GMT]

A Sri Lanka Air Force (SLAF) Mig 27 aircraft crashed near the Colombo international airport, Wednesday, military sources said.
The Russian built Mig 27 plunged into a lagoon shortly after take-off, the sources said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.combataircraft.com/aircraft/fmig27_d.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.combataircraft.com/aircraft/fmig27_vl.jpg' border='0' alt='user posted image'>

மிக் 27 இன் இயல்புகள்....

Origin: USSR

Type: single-seat ground-attack aircraft

Max Speed: 1,017 kt / 1,170 mph

Max Range 1,080 km / 670 miles

Dimensions: span 13.965 m / 45.9 ft

length 16.7 m / 54.8 ft

height 4.82 m / 14 ft 9.2 in

Weight: max. take-off 18,850 kg /
41.556 lb

Powerplant: one Soyuz (Tumanski) R-29B-300 turbojet rated at 77 kN (17,310 Ib) or 110kN (24,728 Ib) with afterburner.

Armament: one internal GSh-23L 23-mm twin-barrel cannon in semi-conformal fuselage gondola, plus up to 3000 kg of ordnance, including UV-32-57 (57 mm) and S-8 (80 mm) rocket pods, KMG-U bomblet dispensers, free-fall bombs up to 500 kg, UPK-23-250 cannon pods, AS-7 Kerry ASMs and podded reconnaissance sensors.

Operators: India, Kazakhstan, Russia, Sri Lanka.

Thanks... <i>http://www.combataircraft.com </i>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40092000/jpg/_40092519_chandafp.jpg' border='0' alt='user posted image'>

விடுதலைப் புலிகளின் நிபந்தனையை ஏற்றார் சந்திரிகா!

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமெனில் இடைக்கால சுய ஆட்சி ஆணையம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்கின்ற விடுதலைப் புலிகளின் நிபந்தனையை இலங்கை அதிபர் சந்திரிகா ஏற்றுக் கொண்டுள்ளார்!

தன்னைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சந்திரிகா குமாரதுங்கா, தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணங்களை இணைத்து இடைக்கால சுய ஆட்சி ஆணையத்தை அமைப்பது குறித்து புலிகள் அளித்துள்ள வரைவுத் திட்டத்தின் மீது பேச்சுவார்த்தையை நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.

இத்தகவலை சந்திரிகாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்மந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

புலிகள் அளித்துள்ள இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது குறித்து புலிகள் அளித்துள்ள வரைவுத் திட்டத்தின் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைக் கூறுகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை துவங்க புலிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

"புலிகளுடன் இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று சந்திரிகா கூறிவிட்டார். அதனை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தான 6 மாதத்திற்குள் சுய ஆட்சி ஆணையம் என்று உறுதியளித்துள்ளார். அந்த இடைப்பட்டக் காலத்தில் இலங்கை இலப்பிரச்சனையின் அடிப்படை கூறுகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சந்திரிகா வலியுறுத்துகிறார்" என்று தமிழ் தேசிய கூட்டணியின் அமைப்பாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கே. பிரேமச்சந்திரன் யு.என்.ஐ. செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது தொடர்பான தனது ஒப்புதலை நார்வே தூதுக் குழு வாயிலாக புலிகளின் தலைமைக்கு ஏற்கனவே சந்திரிகா தெரிவித்துவிட்டார் என்று கூறிய பிரேமச்சந்திரன், சந்திரிகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதத்தில் துவங்கலாம் என்றும் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று இரவு விருந்திற்கு அழைத்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அவர்களுடன் கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனை, யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் மறுகுடியேற்றம் ஆகியன குறித்து விவாதித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் இதற்கு மேலும் சிங்கள பேரினவாத நிர்வாக அமைப்பு தொடர்வதை விரும்பவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் தமிழர்களை கொண்ட நிர்வாக அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் பொழுது இலங்கை அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த், மங்கள சமரவீரா, நிர்மல் ஸ்ரீபல டிசில்வா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் அயலுறவு அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கலந்துகொள்ளவில்லை.

(webulagam.com)

---------------------------------

Sri Lankan talks 'set for August'

A Tamil political group in Sri Lanka says peace talks between Tamil Tiger rebels and the government could resume in August.

Joseph Pararajasingham, a member of Tamil National Alliance, said President Chandrika Kumaratunga had agreed to discuss a rebel proposal for self-rule.

(bbc.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/afp/20040610/capt.sge.dch68.100604132423.photo00.default-384x289.jpg' border='0' alt='user posted image'>

(Sri Lanka's army chief Lionel Balagalle (left) hands over a souvenir to visiting US Pacific Commander, Lt. General James L. Campbell at the military headquarters in Colombo(AFP))

அமெரிக்க பசுபிக் பிராந்திய படைத்தளபதி இன்று யாழ் விஜயம்

அமெரிக்க படையினரின் பசுபிக் பிராந்திய படைத்தளபதி லெப். ஜெனரல் ஜேம்ஸ் எல்ஹம்பல் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் இவர், இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருப்பார் எனவும், இக்காலப்பகுதியில் யாழ் நிலவரங்கள் தொடர்பாக அவர் ஆராய்வார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேசமயம், கொழும்பிலுள்ள சிறிலங்காப் படைத் தலைமையகத்துக்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அமெரிக்கப் படையினரின் பசுபிக் தளபதி லெப்ரினன்ற் ஜெனரல் ஜேம்ஸ் எல்.ஹம்பல், சிறிலங்காவின் படைத்தளபதி லெப். ஜெனரல் லயனல் பலகல்லவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(puthinam.com)

----------------------------------

U.S. General visits Jaffna

[TamilNet, June 11, 2004 10:34 GMT]

United States Commander for Pacific Region, Lt.General James L.Campbell, currently on a visit to strengthen relationship between Sri Lanka and the U.S., is arriving in Palaly Sri Lanka Army (SLA) military base to have discussions with the Commander of Sri Lanka Northern region and other Senior SLA officers, local media reported.
Lt.Gen.Campbell who arrived in Colombo yesterday was received with military parade at the Sri Lanka Military Head quarters in Colombo Thursday afternoon, according to reports.

Commander of Sri Lanka Security Forces, Lt.Gen Lionel Balagalle met with Lt.Gen.Campell at the Head Quarters Thursday for discussions centering on strengthening military cooperation, reports added.

(tamilnet)

__________________________

US turns to Sri Lanka for tactics to fight in Iraq, Afghanistan


COLOMBO (AFP) - The United States can learn from the Sri Lankan military's bloody war with Tamil Tiger rebels as it fights insurgents in Iraq (news - web sites) and Afghanistan (news - web sites), a top US army commander said.

Lieutenant General James L. Campbell, commander of the US Army in the Pacific, said he was looking into the possibilities of military cooperation between the two countries to help the United States learn tactics.

"Sri Lankan security forces have experience in facing the kind of situation that our men and women are facing today in Iraq and Afghanistan," Campbell told reporters during a visit to the Sri Lankan military headquarters on Thursday.

"We can benefit from the tactics and on dealing with improvised explosive devices. ... We can learn from them how best to deal with such things," he said.

Sri Lankan army chief Lionel Balagalle said: "Our troops have learnt the hard way and we are prepared to share our knowledge with each other."

The Sri Lankan military has suffered heavy casualties in the three-decade ethnic war, losing 18,000 troops until a Norwegian-brokered truce went into effect in February 2002.

The Tigers, who have been fighting for a separate Tamil homeland, have incurred similar casualties while more than 20,000 civilians are estimated to have died.

Both Sri Lankan forces and the rebels have been accused of gross human rights violations, although the two sides later began lessons conducted by the International Committee of the Red Cross on how to treat civilians under the Geneva Conventions.

Campbell is due on Saturday to open Sri Lanka's first peacekeeping exercise, hosted jointly by the United States, that will also train troops from Bangladesh, Nepal and Mongolia.

Campbell said Sri Lanka sending 750 troopers to Haiti next month as part of a UN force was a sign of Sri Lanka emerging as a key nation in international peacekeeping.

Sri Lanka has sought UN peacekeeping slots for soldiers who are likely to be demobilised once a final settlement is reached in the Tamil separatist conflict.

But Balagalle said there was no decision to send Sri Lankan troops to Iraq or Afghanistan.

"That is a foreign policy decision for the government and there is no such decision at the moment," Balagalle said.

(AFP...yahoo.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'><b>அமைச்சரினால் பறக்க விடப்பட்ட சமாதானப் புறா இறந்து நிலையில் வீழ்ந்தது! </b>

பல்தேசிய படைத்துறைப் பயிற்சிப் பட்டடறையின் போது சிறிலங்காவின் அமைச்சர் இரட்னசிறீ விக்கிரமநாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது.

குக்குளு கங்கையில் உள்ள சிறிலங்காப் படையினரின் முகாமில் இடம்பெற்ற பல்தேசிய படையினர் கலந்து கொண்ட படைத்துறைப் பயிற்சிப் பட்டறையின் போது, அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய கட்டளைத் தளபதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் பலர் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் ஆரம்பமாக சமாதானப் புறாக்களையும் வானில் பறக்கவிட்டனர்.

இப்பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட புத்தசாசன அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் படைத்துறையின் பிரதியமைச்சருமான இரட்னசிறீ விக்கிரம நாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா வானில் பறந்த சில நொடிகளில் கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது. </span>

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" வெளியீட்டு விழாவில் தேசியத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிப்பு!

'போரிடும் வல்லமை சேர்ப்போம்" இறுவெட்டு வெளியீட்டு விழாவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட இவ் இறுவெட்டை வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார்.

விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் உருவாக்கத்தில் புலிகளின் குரல் சிட்டு கலையகத்தின் வெளியீடாக 'போரிடும் வல்லமை சேர்ப்போம்" எனும் இறுவெட்டு நேற்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.

இதற்கான இசையுருவாக்கத்தை இளைய இசையமைப்பாளரும் போராளியுமான செயல்வீரன் அவர்கள் ஆக்கியுள்ளார். நிதர்சனப் போராளி வீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக முதன்மைச் சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஏற்றிவைத்ததேடு இதுவரை காலமும் வீரச்சாவடைந்த மருத்துவப் பிரிவுப் போராளிகளை நினைவுகூரும் முகமாக வரையப்பட்டிருந்த பொதுப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளி மாவீரான் கப்டன் யாழ்வேலின் திருவுருவப்படத்திற்கான ஈகச் சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றி வைத்ததோடு மலர்மாலையையும் அணிவித்தார்.

தொடர்ந்தும் மருத்துவப்பிரிவுப் பெண் போராளிகளின் மாவீரர் வணக்க நடனத்துடன் உள்ளரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ் வெளியீட்டு விழாவின் வெளியீட்டு உரையினை விடுதலைப் புலிகளின் வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் ஆற்றினார்.

தொடர்ந்தும் வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் இறுவெட்டை வெளியிட்டு வைக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து இவ்வுருவாக்கத்தில் பங்கெடுத்த அனைத்துக் கலைஞர்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

'போரிடும் வல்லமை சேர்ப்போம்" இறுவெட்டின் மதிப்பீட்டு உரையினை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு வே. பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். இறுதியாக நன்றிவுரையினை யாழ்வேல் மருத்துவமனைப் பொறுப்பாளர் திரு சிவா அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வுக்கு போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், வைத்தியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவப் பிரிவுப் போராளிகள் கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டத்தின் சமர்க்களங்களிலெல்லாம் தாம் மனப்பதிவுகளாகிய பலவிடயங்களும், அவர்களின் உள்ளத்து உணர்வுகளும் இங்கு பாடல் வடிவம் பெற்று உயிரூட்டப்பட்;டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இப்பாடல்கள் வரலாற்றுப் பதிவுகளாகவும், மீட்டப்படும் நினைவுகளாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.


நன்றி புதினம்...& ஈழநாதம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஜனாதிபதி முரண்பாடான நிலைப்பாட்டால் சமாதான பேச்சினை மீள ஆரம்பிப்பது கடினம்: நெதர்லாந்து அரசாங்க தூதுக்குழுவிடம் தமிழ்க் கூட்டமைப்பினர் தெரிவிப்பு

'ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பேச்சுவார்த்தைக்கான அடிப்படை விடயங்களில் தீர்க்கமான முடிவினை எடுக்காது, முரண்பாடான நிலையினைக் கடைப்பிடித்தால் சமாதானப் பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதென்பது கடினமான விடயமாக அமைந்து விடும்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெதர்லாந்து தூதுக்குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நெதர்லாந்து நாட்டின் அரசாங்க தூதுக் குழுவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுக்காலை சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் அந்நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளான ஜெசில்லா கொவ்லண்ட், ஹரிஜேஜே வால்டிஜ்க் ஆகியோரையே கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.

சமாதான முயற்சியின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை, இடைக்கால நிர்வாக சபை என்பன குறித்தும் கூட்டமைப்பினரிடம் நெதர்லாந்து குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

சமாதானப் பேச்சுவார்த்தையினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு எமக்கு சந்தேகமளிப்பதாகவுள்ளது. கடந்த வாரம் எம்மை சந்தித்து பேசிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச்சு நடத்தி அதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திய பின்னரே இறுதி தீர்வு குறித்து பேசத்தயார் என்று தெரிவித்திருந்தார்.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச்சு நடத்தி அதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திய பின்னரே இறுதி தீர்வு குறித்து பேசத்தயார் என்று தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினை கோருவதனால் தமது நிலைப்பாட்டினை மாற்றியுள்ளதாக தெரிவித்திருந்தார் ஆனால் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில், முரண்பாடான நிலை காணப்படுகிறது. இத்தகைய முரண்பாடு சமாதான முயற்சிக்கு பாதகமாகவே அமையும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெதர்லாந்து பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எம்மிடம் இடைக்கால நிர்வாக சபை குறித்து முதலில் பேச தயார் என ஜனாதிபதி தெரிவித்த அதேவேளையில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் இறுதி தீர்வுக்கான பேச்சுவார்த்தையின் போது இடைக்கால நிர்வாக சபைகுறித்த பேச்சுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு சமாதான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு உதவப்போவதில்லை என்றும் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.

வட - கிழக்கில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வழங்கப்படுவது அவசியமாகும். யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான வட - கிழக்கை புனரமைக்க உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் கூட்டமைப்பினர் விரிவாக எடுத்து விளக்கியுள்ளனர்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்காகவோ ஜே.வி.பி.யை சமாளிப்பதற்காகவோ, இத்தகைய முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக சந்தேகமெழுகின்றது எனவும் இச் சந்திப்பில் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர்.

இச் சந்திப்பில் கூட்டமைப்பின் எம்.பி. க்களான ஜோசப் பரராஜசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையின் நிலைவரம் குறித்து அறிந்து வரும் நெதர்லாந்து குழுவினர் தமது அரசாங்கத்துக்கு தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i15064_01.jpg' border='0' alt='user posted image'>

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் ஐ.நா முகவர் அமைப்பு பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளுடன் சந்திப்பு

வடக்கு, கிழக்கில் பணியாற்றும் அனைத்துச் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும், ஐ.நா.முகவர் அமைப்புகளுக்குமான கலந்துரையாடல் இன்று காலை 11.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான செயலகத்தில் நடைபெற்றது.

திட்டமிடல் அபிவிருத்திச் செயலகப் பணிப்பாளர் திரு.தூயவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன், திட்டமிடல் அபிவிருத்திச் செயலகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.மாறன், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினதும் ஐ.நா. நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.தியாகராஜா, அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி.தமிழினி, சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு.புலித்தேவன் மற்றும் அனைத்து சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களும், ஐ.நா. முகவர் நிறுவனங்களும் கலந்து கொண்டன.

இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:- கேள்வி: இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் என்ன என்று கூறுவீர்களா?

பதில்: இன்று நாங்கள் எமது தாயகப் பிரதேசத்திலே மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற ஐ.நா. அமைப்புக்களையும் தொண்;டர் ஸ்தாபனங்களையும் அழைத்து இன்றைய நிலைப்பாடு சம்மந்தமாக கலந்துரையாடியிருக்கின்றோம்.

முக்கியமாக இங்கே எமது மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமானப் பணிகளை செயற்படுத்தப்படுத்தப்படுவது குறித்தும், உள்ளுர் ஸ்தாபனங்களோடு இணைந்து எமது மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய செயற்பாடுகளை ஆராய்வது குறித்தும் கலந்தாலோசித்துள்ளோம்.

முக்கியமாக தமிழர் தாயகத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய மனிதாபிமான பணிகளை எந்த வகையில் எப்படியான ஒருங்கிணைப்போடு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடினோம்.

கேள்வி: உதவி வழங்கும் நாடுகள் தமது உதவிகளை அதிகரிக்குமா?

பதில்: நாங்கள் இந்தக் கலந்துரையாடலில், தொண்டர் ஸ்தாபனங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து மட்டுமே கலந்துரையாடினோம். ஏற்கனவே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளை உள்ளுர் அமைப்புக்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்கின்ற வகையில் ஒரு சிறப்பான செயல்திட்டத்தை ஏற்படுத்துகின்ற நோக்கோடும் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

கேள்வி: சமாதான நடவடிக்ககைள் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது?

பதில்;: ஏற்கனவே நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டுமென்று இல்லை. இன்று சமாதான முன்னெடுப்புக்கள் எல்லாம் ஒரு முடக்கமான கேள்விக்குறியில் தள்ளப்பட்டிருக்கின்றன.



நன்றி.... புதினம் மற்றும் விடுதலைப்புலிகளின் சமாதான தலைமைச் செயலக இணையத்தளம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'><b>Pakistan-based Islamic group eyes eastern Sri Lanka - analyst</b>

[size=9][TamilNet, June 15, 2004 12:17 GMT]</span>

Pakistan’s plans to appoint a former Director of its Intelligence Bureau (IB) as Ambassador to Sri Lanka "could have serious implications for the national security of India" a senior Indian analyst said this week, citing Colombo's importance as a base for Pakistani agents and a Pakistan backed militant group's increasing activities in Sri Lanka's eastern districts.
B. Raman, a former senior civil servant, argues in the latest issue of the weekly magazine Outlook that India must urge Sri Lanka to reject the planned appointment of [Col (retd) Bashir Wali] which was reported by Jang, a Pakistani Urdu daily.

Raman, Director of the Institute for Topical Studies in Chennai says a gradual militarisation of the internal IB, formerly a police organization, “has made it for all practical purposes a wing of the ISI” [Inter-Services Intelligence].

“There has been no evidence so far of the ISI using Colombo as a base for covert actions directed against India. However the Lashkar-e-Toiba (LET) has been showing increasing interest in taking jihad to the Muslims of the Eastern Province of Sri Lanka,” he says.

The LET, a Pakistan-based Kashimiri group, is described as the armed wing of the Markaz Dawa-Wal-Irshad, an Islamic fundamentalist organization.

Pakistan denies assisting LET, whose ideology, according to some analysts, goes beyond Kashmiri independence to the establishment of Islamic rule over all parts of India.

“There have been persistent reports of the beginning of a radicalisation of small sections of the Tamil-speaking Muslim youth of the Eastern Province [of Sri Lanka],” Raman says.

He cites the activities of the ‘Osama Brigade’ amidst the communal clashes in the Eastern province in 2002 and reports that Tamil Nadu police had arrested some members of a local organisation called the Muslim Defence Force who said they had planned meetings with the LET in eastern Sri Lanka.

“The LET is very close to the ISI and it would not have taken its initial moves to explore the possibility of using Sri Lanka as a clandestine base for its activities and for creating sleeper cells there without the knowledge and prior clearance of the ISI,” Raman feels.

“In the past, the ISI had posted its officers in junior and middle level clerical posts as well as in diplomatic posts in the Pakistani High Commission in Colombo [but] it had never posted its officers as the head of the Pakistani diplomatic mission [though] a journalist who was allegedly close to the ISI [was],” he says.

“Past evidence indicated that the main interest of the ISI in using Colombo as a base was to collect intelligence about developments in sensitive Indian nuclear and missile establishments, many of which are located in South India, particularly in Tamil Nadu and Kerala.”

“For collecting intelligence about these establishments, the ISI generally uses Sri Lankan Tamil-speaking Muslims visiting India as well as South Indians visiting Colombo,” Raman says.

“Colombo also serves as a convenient transit point for arranging clandestine visits of Indians co-operating with the ISI to Karachi by the flights of the Pakistan International Airlines without any entry of their visits in their passports.”


------------------------------


இதெல்லாம் எங்க கொண்டுபோய் விடப்போகுதோ...???!

எதற்கும் தமிழர்கள் எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கத் தக்க வகையில் விழிப்பாய் இருப்பது இன்றைய சர்வதேச மற்றும் உள்ளூர் நெருக்கடிகள் நிறைந்த இக் காலக்கட்டத்தில் மிகக் கட்டாய தேவையாகிவிட்டது...பல்முனைக் காய்நகர்த்தலில் ஈடுபடும் சர்வதேச மற்றும் உள்ளூர் குள்ளநரிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தையும் தேசத்தையும் இனத்தையும் பாதுகாகக் வேண்டிய வரலாற்றுக் கடமை உண்மையான தேசபிமானமுள்ள, இனப்பற்றுள்ள மனித சுதந்திரத்தை, விடுதலையை, நாகரிகத்தை, தன் சொந்த நிலத்தில் சுதந்திர வாழ்வை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும்.....!

மதவாத சக்திகளுக்காகவோ அல்லது பேரினவாத அல்லது பிராந்திய மேலாதிக்க அல்லது ஏகாதபத்திய சக்திகளுக்காகவோ தமிழர்கள் தமது மண்ணில் தமது அடிப்படை உரிமையான சுதந்திர வாழ்வுரிமையை விட்டுக் கொடுக்க முடியாது....எந்தச் சக்தியினதும் எநத வழியிலானானதும் ஊடுருவல்களை எமது மண்ணில் எனியும் அனுமதிப்போமானால் குரங்கு அப்பம் பிய்த்துண்டது போல எம் மண்ணும் உரிமைகளும் விலை பேசப்படலாம்... அதையிட்டு எமது தியாகங்களின் மீதும் இழப்புகளின் மீதும் மற்றவர்கள் சுகபோகம் நடத்தவோ அல்லது தமது அநியாயங்களைத் திணிக்கவோ இடமளிக்க முடியாது...எவர் எந்தச் சதிவலை தீட்டினும் அவற்றை எல்லாம் எமது மதிநுட்பத்தாலும் ஒன்றிணைந்த அரசியல் மற்றும் இராணுவ பலத்தாலும் முறியடிக்க வேண்டியது எமது கட்டாய தேவை......என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணர்ந்து செயற்படுதல் அவசியம்....!

காட்டிக்கொடுக்கும் கும்பல்களும் இந்தக் குள்ளநரிகளுடன் கரம் கோர்க்கும் என்பது வெளிப்படை...குள்ளநரிகள் எத்தகைய பலம் வாய்ந்தனவாக இருந்தாலும் அவற்றின் தற்காலிக நோக்கம் மற்றும் இறுதி இலக்கென்னவோ எமதைவிடப் பலவீனமானது என்பதே எமது பலமாகும்.....! எமது இலட்சியத்திற்காய் உயிரையே ஆயுதமாக பாவிக்கவும் ஒருபோதும் நாம் பின்னிற்கக் கூடாது.....! எமது சகலதுறைப்பலத்தினை சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவன் மூலமே அனைத்து குள்ளநரிகளின் சதித்திட்டங்களுக்கும் சாவுமணி அடிக்க முடியும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அடடே.. இவங்கள் இப்ப இந்தியாப்பாட்டு பாடத்தொடங்கீட்டாங்களல்லே..

இனி பாக்கிஸ்தான் எதிர்ப்பாட்டு பாடுதெண்டு சொன்னால்த்தானே வியாபாரமாகும்..

அதுதான் விளம்பரம் செய்யிறாங்கள்போலை..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
குருவி நான் நைக்கேல்லை உந்த பருப்பு இனி வேகும் எண்டு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)