Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சித்தப்பா
#1
<b><span style='font-size:30pt;line-height:100%'>சி த் த ப் பா</b></span>

அன்புக்குரிய
நட்புக்குரிய
மதிப்பிற்குரிய
சித்தப்பா...

உனதுடல் உனதுயிர் எனத் துயில் கொள்வதோ
எமதுயிர் கணந்தொறும் அழுதிடல் அறிவியோ
கனமிகும் கவலைகள் சுமந்திடல் காண்பியோ
உறவெலாம் உருகிடச் சென்றனை முறையோ?

நினைவுகள் ஆயிரம் எம துளம் நிரப்பிடும்
கனவுகள் நிறைந்தவுன் கண்கள் முன்தோன்றிடும்
பகல் வெளி தோறிலும் இரவுகள் சூழ்ந்திடும்
பார்வைகள் தேடினும் உன்முகம் காண்பமோ?

ஆசானாய் இருந்துநீ அறிவுரைகள் சொன்னாய்
அமெரிக்கா சென்றும் அறிவுநூல்கள் அளித்தாய்
நேசமாய் இருந்தவெம் நெஞ்சங்கள் நொந்திட
மோசமாகி முடிவில் வெந்ததும் முறையோ?

தூரங்கள் கடந்து நீயும் போனதும் போனாய்
போதா தென்று இன்னும் தூரமாய்ப் போனாய்
பேசாமல் கொள்ளாமல் எங்கேநீ போனாய்
எங்குநீ போயினும் எமதெண்ணத்தில் வாழ்வாய்!

சித்தப்பா...
நீங்கள் எம்மோடு
இருந்தது சிறப்பு
இறந்தது இழப்பு!


பி.கு.: கடந்த மாத இவ்வுலக வாழ்வைக் கடந்து போன எனது சித்தப்பாவிற்காய் இந்தக் கவிதை. ஜேர்மனியிற்கு வந்தபோது முதன்முதலாக எனது கையில் ஒரு புத்தகைத்தைத் திணித்து வாசிக்கும் ஆர்வத்திற்குத் தீனி போட்டவர். எனது நல்ல எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்...


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)