04-12-2004, 01:48 AM
மெசன்சருக்கும் இதற்கும் என்ன வேறுபாடு.. ஒலித் தெளிவுமட்டும்தானா?
.
|
குறுக்கு வழிகள்
|
|
04-12-2004, 02:20 AM
ஆம் இதன் முக்கிய பயன்பாடு Voice Chat தான். ஒலித் தெளிவு காரணமாகத்தான் மெசன்சரை விட இது பிரயோசனமானதாக இருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-12-2004, 01:52 PM
<b>குறுக்குவழிகள்-45</b>
Full Screen இன்ரநெட் எக்ஷ்புளோரரில் ஒரு சட்டத்தை திறக்கும்போது திரை நடுவில் சிறியதாகத்தான் எப்போதும் திறக்கும். இதை தடுத்து எப்போதும் பெரிய அளவில் திறக்குமாறு செய்துவிட்டால் எமக்கு சிரமம் குறையும். இதை எப்படி செய்யலாம்? இதற்கு பல வழிகள் உள்ளன. 1) சிறிய திரையின் பக்கங்களை மொளசால் முடியுமான அளவிற்கு பெரியதாக இழுத்துவிடுஙகள். பின் File, Close ஐ கிளிக்பண்ணவும். F5 கீயை அழுத்தவும். மீண்டும் அதே லிஙை கிளிக்பண்ணினால் சட்டம் பெரிதாகவே திறக்கும். 2) சிறிய திரையை மொளசால் Restore பட்டனை கிளிக்பண்ணி பெருப்பிக்கவும். பின் Ctrl பட்டனை அழுத்திப்பிடித்திக்கொண்டு, Close பட்டனை (X) அழுத்தி மூடிவிடவும். 3) Ctrl+Shift+Alt ஆகிய மூன்று பட்டன்களையும் ஒன்று சேர அழுத்தி பிடித்துக்கொண்டு, மொளசால் நான்கு பக்கங்களையும் திரை முழுவதும் நிரம்பும் வகையில், முடிந்தளவு பெருப்பிக்கவும். அழுத்திபிடித்தபடியே மூலையில் உள்ள Close பட்டனை கிளிக்பண்ணி மூடிவிடவும். இதில் ஏதாவது ஒரு வழியில் முயன்று பாருங்கள். Also please see page no. 8
04-15-2004, 07:39 PM
<b>குறுக்குவழிகள்</b>
இத்தொடரை ஐம்பதாவதுடன் நேரமின்மை காரணமாக நிறுத்திக்கொள்ள எண்ணியுள்ளேன். அக்கறையுள்ள யாராவது இதைத்தொடர்வார்களாயின் பலர் பிரயோசனப்படுவார்கள். அல்லது இதைப்போல் புதியதாக ஒன்றை உங்கள் பெயரில் ஆரம்பிக்கலாம்.
04-15-2004, 10:57 PM
E.Thevaguru Wrote:<b>குறுக்குவழிகள்</b> வணக்கம் தேவகுரு, கணனி பற்றிய பல தகவல்களை அதனை பற்றி அடிப்படை அறிவே இல்லாதவர்களுக்கு கூட புரியும்படியாக இலகு தமிழில் தந்தீர்கள். அதற்கு நன்றிகள். அடிக்கடி எழுதமுடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதாவது தொடரவேண்டும் இது எனது வேண்டுகோள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-21-2004, 09:02 PM
<b>குறுக்குவழிகள்-46</b>
Intel Processor Frequency ID Utility கம்பியூட்டர்களின் உள்ளே காணப்படும் சிப் (Chip) களில் பெரிதானதுதான் கம்பியூட்டரின் மூளை எனப்படும் CPU (Central Processing Unit) அல்லது Microprocessor எனப்படுவது. Year of make, Model என்பன கார்களுக்கு எப்படியோ அப்படித்தான் இந்த processor க்கும் பெயர் வைக்கப்படுகிறது. Processor என்பது சக்திவாய்ந்த கல்குலேட்டர்தான்:வேறொன்றுமில்லை. இதன் வேகம்தான் இதன் சக்தி. ஒரு செக்கண்டில் பல இலட்சம் கணக்குகளை இது போடும். இந்த processor ல் இணைக்கப்படிருக்கும் மயிர்க்கனமுள்ள ஒரு Clock Wire எனும் கம்பியில் ஏற்படும் ஒரு மின் துடிப்பை ஒரு cycle என்கிறோம். சூடேறி பழுதாகாமல், ஒரு விநாடியில் அதிக பட்சம் துடிக்கக்கூடிய எண்ணிக்கையே clock speed என்கிறோம். Clock speed ஐ Mega Hertz ல் அளக்கின்றோம். (1 Cycle= 1 Hertz). இந்த அளவு procrssoer உற்பத்தியாகும் தொழிற்சாலையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. 1970 ல் வெளிவந்த Intel ன் 8088 என்ற processor ன் வேகம் 4.77 MHz. இதன் பின் 80286, 80386, 80486. Pentium, Pentium pro, Pentium MMX, Pentium I, Pentium II, Pentium III, Pentium IV என பல அளவுகளிலும், பெயர்களிலும் வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த Pentium IV என்பதன் வேகம் 1500 MHz ஆகும். சரி உங்களிடம் ஒரு 8 வருடம் பழைய கம்பியூட்டர் இருக்கின்றது. அதன் வேகம் என்ன? அதோடு தரப்பட்ட கையேடும் தொலைந்துவிட்டது. Microprocessor ன் மேல் தூசுபடிந்து எழுத்துக்களும் மங்கிவிட்டது. யாது செய்யலாம்? இருக்கவே இருக்கிறது Intel Processor Frequency ID Utility எனப்படும் ஒரு சிறிய புறோகிறாம் (838 KB). கீழே உள்ள் Intel ன் வெப்தளத்திலிருந்து டவுண்லோட்பண்ணி உங்கள் கம்பியூட்டரில் பொருத்தி இயக்கி பார்க்கவும். Processor, System bus இவை இரண்டின் வேகத்தையும் காண்பிக்கும். கம்பியூட்டரை மேம்படுத்ததும்போது புதிதாக Motherboard ல் jumper setting செய்தபின் சரியாக செட்டிங் செய்துள்ளீர்களா எனவும் இதன் மூலம் செக் பண்ணிப்பார்க்கலாம். http://support.intel.com/support/processor...b/CS-007623.htm
04-22-2004, 01:36 PM
மீண்டும் தொடருவது கண்டு மகிழ்ச்சி.
05-04-2004, 02:49 AM
<b>குறுக்குவழிகள்-47</b>
Bugbear - Virus பெரும்பாலும் வைரஸ் ஈமெயில் இணைப்புடனேயே வந்துசேர்வதுண்டு. ஆனால் முழுமையாக அப்படியென்றில்லை. Bugbear என்ற வைரஸ் ஈமெயில் உள்ளடக்கத்துடன் வந்து சேருகின்றது. இது தொற்றினால் மொளஸ”ம் ஒழுங்காக வேலை செய்யாது. புகழ் பெற்ற, விலைக்கு கிடைக்கும் Norton Anti-Virus போன்றவை அல்லது வேறு ஏதாவதொன்று பொருத்தியிருந்தால், வைரஸை காட்டித்தரும். இல்லாவிடின் நிலமை மோசம்தான். இந்நிலையில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான். Windows கீயை அழுத்தி start மெனுவை திறக்கவும். Arrows கீக்களை பாவித்து இன்ரர்னெட் எக்ஸ்புளோரரை தேர்வு செய்து Enter ஐ அழுத்தவும். பின்பு Tab கீயை அழுத்தி www. housecall.trendmicro.com என type செய்து Enter கீயை அழுத்தவும். இப்போது இதன் வெப்பக்கம் திறக்கப்படும். அதிலிருக்கும் Scan now. It is free என்ற பட்டனை கிளீக்பண்ணவும். மொளஸ் குழப்படிபண்ணுமென்பதால் கஷ்டப்பட்டு கிளிக்பண்ணவேண்டிநேரிடும். மீண்டும் Scan Now என்ற பட்டனை கிளிக்பண்ணவும்; Local disk "C" என்ற சொற்களின் இடதுபுறம் காணப்படும் பெட்டியில் கிளிக்செய்து, Autoscan, Scan என்ற பட்டன்களை கிளிக்செய்ய, ஸ்கானிங் நடைபெறும். இது அரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெறலாம். இதன் பின் காண்பிக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கமைவாக செயற்படவும். வேறு எந்த வைரஸ் தொற்றிவிட்டது என சந்தேகப்பட்டாலும் இம்முறையை கையாண்டு தொற்றை நீக்கலாம் தொற்று நீக்கப்பட்டாலும் இனிமேல் வரும் தொற்றுக்களை தடுப்பதற்காக ஒரு Anti Virus புறோகிறாம் நிறுவிக்கொள்வது அவசியம். Google ஐ பாவித்து Anti Virus புறோகிறாம்களை தேடி அதில் இலவசமாக உள்ளதை அல்லது குறைந்த விலையில் கிடைப்பதை நிறுவிக்கொள்ளலாம். AVG என்ற புறோகிறாம் www.grisoft.com/us/us_dwnl_free.php என்ற தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. Panda என்ற புறோகிறாம் குறைந்த விலையில் http://www.pandasoftware.com/, என்ற தளத்தில் கிடைக்கின்றது
05-14-2004, 06:49 PM
<b>குறுக்குவழிகள்-48</b>
Build Your Own PC ஒரு கம்பியூட்டருக்கு தேவையான மதர்போட், மெமறி, பவர் சப்ளை, ஹார்ட் டிறைவ், சீடி-றொம் டிறைவ், ஆகிய சகல பாகங்களை வாங்குவதிலிருந்து அவைகளை இணைப்பது, பின் உயிர் கொடுப்பது, எப்படி Boot பண்ணுவது, திறனை அதிகரிப்பது போன்ற சகல விபரங்களையும், 27 சிறிய அத்தியாயங்களாக விளங்கப்படுத்தப்பட்டுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் நீங்கள் படிக்கவிரும்பினால் கீழ்க்காணும் லிங் ஐ கிளிக்பண்ணவும். இந்த கட்டுரைகளில் காணப்படும் லிங் களின் ஊடாக வேறு தளங்களுக்கும் சென்று கம்பியூட்டர் பாகங்களின் மேலதிக விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக RAM ஐ பற்றி தெரிந்துகொள்ள www.crucial.com. என்ற லிங் தரப்பட்டுள்ளது மிகவும் பிரயோசனமான கட்டுரை இது என்பது எனது கருத்தாகும் http://www.pcmech.com/byopc/
05-16-2004, 07:00 AM
<b>குறுக்குவழிகள்-49</b>
Scrap Document 1) அவசரத்திற்கு நாம் சிலவேளை சில தேவைகளுக்காக் சிறு குறிப்பு எழுதுவதுண்டல்லவா?. அது தற்காலிக குறிப்புத்தான். அந்த குறிப்பு பின்பு நிரந்தர குறிப்பேட்டுக்கு மாற்றப்படுவதுண்டு அல்லது அழிக்கப்படுவதுண்டு. இதே வேலையை நாம் கம்பியூட்டரிலும் செய்யலாம். ஒரு டொக்கியூமெண்டை திறவுங்கள்; Resize பட்டனை கிளிக் பண்ணி அந்த சட்டத்தை சிறியதாக்குங்கள்; ஏதாவது ஒரு பந்தியை செலக் பண்ணவும். பின்பு அதை Drag பண்ணி டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன்களுக்கு அருகில் போடவும். அது இப்போது கோடு போட்ட கடதாசிப்பட ஐகொன்னாகவும் அதன் கீழ் Document scrap என்ற சொற்களுடனும் காணப்படும். பின்பு வேண்டுமானால் அதை இரட்டை கிளிக் பண்ண, அது Word ல் திறந்து காட்சியளிக்கும். அதை தேவைற்கேற்ற மாதிரி Save பண்ணிக்கொள்ளலாம். 2) டிஜிட்டல் Camera ஆல் படம் எடுப்பவர்கள், முக்கியமாக தமது கமெராவின் flash ன் வீச்செல்லைக்கு அப்பால் எடுக்கும் படங்களை edit பண்ணுவதற்கு வேண்டிய Digital Camera Enhancer மென்பொருளை கீழ்காணும் தளத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம். Digital Camera Enhancer (http://www.mediachance.com/digicam/enhancer.htm) 3) பலருக்கு ஒரே முறையில் e-mail அனுப்பும்போது "CC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை பேரின் விலாசங்களையும் நீங்கள் type செய்து அனுப்பும்போது அத்தனை பேரும் மற்றவர்களின் விலாசங்களை பார்ப்பார்கள். ஆனால் "BCC" என்பதன் வலது பெட்டியில் அத்தனை விலாசங்களையும் type செய்து அனுப்பினால், எல்லோருக்கும் e-mail போகும், ஆனால் யாரும் மற்றவர்களுக்கு போவதை அறியமாட்டார்கள். "BCC" என்றால் blind carbon copy என்று பொருள். அதாவது அதில் எழுதப்படும் விலாசங்கள் இருட்டடிக்கப்படும்
05-16-2004, 09:15 PM
<b>குறுக்குவழிகள்-50</b>
பிரயோசனமான வெப்தளங்கள் தேவையானவை எனக்கருதி கீழ்குறிப்பட்டுள்ள வெப்தளங்களை எனது குறிப்பேட்டில் குறித்துவைத்துள்ளேன். இவைகளை, நேரம் கிடைத்தபோது ஆராய்ந்துபார்த்து வாசித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும். வெப்தளம் --------------------- எதைப்பற்றி அறிந்து கொள்ள? 1) www.wown.com------------------ இரண்டு கம்பியூட்டர்களை இணைப்பது, 2) www.winguedes.com/registry-------- றிஜிஸ்றி சம்பந்தமாக 3) www.filext.net-------------------- வ்பைல் எக்ஷ்டென்சன் சம்பந்தமாக. 4) www.mlin.net/startupcpl.shtml----- startup control சம்பந்தமாக. 5) www.pcworld.com---------------- கம்பியூட்டர் பாகங்கள் வாங்குவது. 6) http://help-site.com-------------- மதர்போட் புத்தகங்கள் 7) www.snaptel.net----------------- கம்பியூட்டரில் இருந்து போனுக்கு 8) www.jeffs-icons.com--------------- icon படங்கள் 9) www.videohelp.com-------------- DVD, CD Video 10) www.naturewallpaper.net-------- Wallpaper 11) www.tek-tips.com-------------- Forums 12) www.personal-computer-tutor.com--- Tutorials 13) www.boot-us.com-------------- Boot files and disks 14) www.powerquest.com----------- Partion magic 15) www.answersathatwork.com------- Task list எல்லோருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள் -----------------<சுபம்>----------------.
08-11-2004, 02:51 PM
<b>குறுக்குவழிகள்-51</b>
பாகங்களை வாங்கி புதிய கம்பியூட்டரை உருவாக்குங்கள் என்னென்ன பாகங்களை ஏன், எதற்காக வாங்கவேண்டும் என்பது தொடங்கி எப்படி பொருத்திக்கொள்வது என்ற விபரங்கள் வரை 18 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. கம்பியூட்டர் பாவனையில் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. கீழெ உள்ள லிங்கை கிளிக் பண்ணவும். http://www.build-a-computer-guide.com/index.html http://www.pcmech.com/byopc/
08-11-2004, 03:17 PM
தகவலுக்கு நன்றிகள்...!
தமிழி எழுத்துக்களை உள்ளிட்டு வடிவங்கள் அமைக்க கு}டிய மென்பொருள்கள் பற்றி யாராவது அறிந்தால் அறியாதாருங்கள்...
<b> .</b>
<b> .......!</b>
08-12-2004, 01:09 AM
இதை இவ்வளவு நாளும் பார்க்காமல் இருந்துவிட்டேன் என்று இன்று கவலைப்பட்டேன்
08-23-2004, 03:59 PM
<b>குறுக்குவழிகள்-52</b>
Home Networking (step-by-step) நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆகவோ அல்லது workgroup ஐ internet உடனோ இணைக்கவிரும்பி அது பற்றிய விபரங்களை படங்களுடன் படிப்படியாக அறிய விரும்பினால் கீழ்க்காணும் லிங்குகளை கிளிக்பண்ணவும். இதில் விடயங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. அறையிலுள்ள கம்பியூட்டர்களை workgroup ஆக இணைத்தால் பொதுவாக ஒரு printer ஐ அல்லது ஒரு CD writer பழுதுபடின் மற்ற கம்பியூட்டருக்கு ஒரு document ஐ மாற்றி அதில் உள்ள CD writer மூலமாகவோ, எழுதவோ பாவிக்கவோ முடியும். இப்படியான சேகரித்து வைக்கக்கூடிய கட்டுரைகளை என்னிடமிருந்து பெறவிரும்புபவர்கள் இமெயில் மூலம் தங்களது முகவரியை தெரிவித்தால் தனிப்பட என்னால் பல கட்டுரைகளை அனுப்பிவைக்க முடியும். http://www.putergeek.com/home_network_2/ http://www.geekgirls.com/windowsxp_home_network.htm
08-23-2004, 08:16 PM
அண்ணா தகவலுக்கு நன்றி.....
நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|