Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சுதந்திரமும்.. யதார்த்தங்களும் பல கனவுகளும்...
#1
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom.jpg' border='0' alt='user posted image'>

[size=16]
பெண்களுக்கு சுதந்திரம்

"பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!"

"பெண் சமத்துவத்தை நிலை நாட்டுவோம்!"

- என்று கோஷமிட்டு பெண் சமுதாயம் முன்னேற பாடுபட்ட பெண்கள் திடீர் என்று பாதை மாறி அவர்களை ஆண்களோடு ஒப்பிட தொடங்கினர். அங்கே தான் ஆரம்பித்தது பெண்களுக்கு பல கஷ்டங்கள்!

ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு காரியங்கள் செய்ய இயற்கை படைத்திருக்கின்றது. ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என்பதை நிரூபிக்க நாம் ஏன் ஆண்களைப் போல் நடக்க வேண்டும்? பெண்களாக இருப்பதில் தவறு என்ன?

"நீ பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்! ஒரு ஆண் அளவுக்கு திறமைசாலி!"

"இவ என் பெண்ணே இல்லை. என் பையன் மாதிரி அவ்வளவு உதவியா இருக்கா!"

இப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் தினமும் கேட்கிறோம். சொல்லவே வெட்கமா இருக்கு, இதை கேட்டு சந்தோஷம் வேற படறோம்!

முன்னே இருந்ததைவிட நம்ம நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. அலுவலகத்தில் வேலை செய்தாலும், வீட்டு வேலைகளை நாம தான் செய்ய வேண்டும்!

பத்மஜா வயது 29, குழந்தை பெற்றபின் வேலையை ராஜினாமா செய்தவர். "குழந்தையையும், வீட்டு வேலையையும் பார்க்கவே நேரம் பத்தல. இதுல வேலைக்கு எங்கே போக முடியும்? இவர் வீட்டிலே ஹெல்பா இருந்தாலும், மொத்த வேலை நான்தானே செய்யனும்."

ஆண்களுக்கு என்ன, ஜாலி தான்! பெண் பணமும் சம்பாதிக்கிறாள், வீட்டு வேலையும் செய்கிறாள். குழந்தைகளையும் சமாளிக்கிறாள், எதைத் தான் செய்யவில்லை!

பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சுஜாதாவுக்கு வயது 28, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

"எனக்கு ஆபீஸ்ல வேலை செய்ய ஆசை. ஆனால் குழந்தைங்களை ஸ்கூல்ல கொண்டு விட்டு திருப்பி கூட்டிட்டு வர ஆளில்லை. நான் அவங்க ஸ்கூல்ல டீச்சரா இருக்கிறதால இப்போ இந்த பிரச்னை இல்லை. குழந்தைகளுக்காக நாம இதுகூட செய்யலேன்னா எப்படி?" என்கிறார்.

பெண் விடுதலை போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் ஆண்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் தலைவலி போதாது என்று அவர்களுடைய தொல்லைகளில் பாதியை வாங்கிக் கொண்டோம்!

எவ்வளவுதான் செய்தாலும், இன்னும் பெண்களை சமமாக நடத்த மறுக்கிறார்கள் ஆண்கள். ஷீரின் வயது 26, கம்ப்யூட்டர் என்ஜினியர். "எனக்கு மாசத்துக்கு ரூ 30,000 சம்பளம். ஆனா நான் இந்த மாசம் வேலையை ரிசைன் பண்ணுறேன். காரணம் அவருக்கு சம்பளம் ரூ 22,000, அதனாலே அவருக்கு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு! வீண் சண்டையை அவாய்ட் செய்யத்தான் இந்த ரெஸிக்னேஷன். சமுதாய கட்டுப்பாடு பெண்களைத்தான் அடங்க வைக்கிறது.

ஷீரின் கதையை படிக்கும் பலர், "அய்யோ ஒரு என்ஜினியரிங் சீட்டு வீணாப் போச்சே, முன்னேயே ஒரு பையனுக்கு விட்டு கொடுத்திருக்கலாம்!" என்று சொல்லலாம். ஆனால் "காரணமே இல்லாமல் நல்ல படிச்ச பெண்ணோட படிப்பு வீணாப் போச்சே!" என்று எத்தனைப் பேர் சொல்வார்கள்?

வெட்கப்படுவதும், சேலை கட்டுவதும், இன்னமும் பல மென்மையான உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருந்தவள் பெண். இப்போது பெண் பெண்ணாக இருக்கவே தயங்குகிறாள்!

ஆண்களுக்கு நிகராக உடை அணிந்து, அவர்களைப் போல் நடப்பதும், பேசுவதும் தான் பெண் முன்னேற்றமா? அப்படின்னா ஆண்களை சேலை உடுத்த சொல்லலாமே!

"பெண் சிசுக் கொலை எத்தனையோ குறைந்து விட்டதே!" என்று பலர் சொல்லலாம். குறைந்து விட்டது தான் இதற்கு காரணம். பெண் முன்னேற்றம் இல்லை. கருவிலேயே பெண் என்று கண்டுபிடித்து அதை கொன்று விடுவது தான்!

24 வயது வைஷாலியும் இதைத்தான் செய்தார். காரணம் அவர் முதல் குழந்தையும் பெண் என்பதால் தான் என்கிறார். "எங்க மாமியார் வீட்டிலே அடுத்த குழந்தை பையனா இருக்கனும் அப்படின்னு ஆசைப்பட்டாங்க".

<b>விரும்பியோ, விரும்பாமலோ பெண்கள் இன்றும் ஆண்களின் நிழலில் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை!</b>
<img src='http://www.webulagam.com/women/life/images/2001_05/0531_freedom1.jpg' border='0' alt='user posted image'>


இவை தம் விடுதலை சுதந்திரம் பற்றி சாதாரண பெண்களின் உணர்வுகள்....!

நன்றி வெப்புலகம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!


'பெண்கள் இப்போது மிகவும் முன்னேறிவிட்டார்கள்." இன்று பலராலும் முன்வைக்கக்கூடிய கூற்று இது. இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதுதான். ஆனாலும் இந்த முன்னேற்றம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதாகிறது. முன்னேற்றம் என்பது துணிச்சல் தன்னம்பிக்கை என்கின்ற இரண்டு விடயங்களில் தங்கியிருக்கின்றது. இந்த இரண்டு விடயங்களுமில்லாத பெண்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாருமே முன்னேற முடியாது.
எமது சமூகத்தில் பெண்கள் மிகவும் வேகமாக முன்னேற வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் பாதிப்புகளும் பிரச்சினைகளும் மூடக் கொள்கைகளும் முரண்பாடுகளும் பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றன. இவை நிச்சயமாக முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். இந்தத் தடைகளை உடைத்து அல்லது தகர்த்து முன்னேற வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்குரியது. அப்பொழுதுதான் பெண்கள் இலகுவில் முன்னேற முடியும்.

பெண்கள் பல கோணங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். பெண்ணின் ஒவ்வொரு திசையும் பயங்கரமானதாக, கரடு முரடானதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இதை விட காலங்கலமாக பெண் பற்றி நிலவி வந்த உருவகங்களும் இன்றைய பெண்களின் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடுவனவாகவே இருப்பதை காண்கின்றோம்.

பெண்ணின் ஆற்றல், ஆளுமை என்பன பெரியளவில் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே இருப்பதை பல இடங்களில் பெண்ணின் ஆளுமை வெளிப்படுவதை அவள் சார்ந்தோர் விரும்பாத நிலையும் இருக்கின்றது. பெண் என்பவள் இரண்டாம்படி நிலையில் இருப்பதுதான் அவளின் பெண்மைக்கு புனிதம் கற்பிப்பது என்ற மாதிரியான கருத்தும் இருந்து வருகின்றது. பல இடங்களில் பெண்தானே என்கின்ற அலட்சியம் அல்லது அக்கறையின்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான பார்வைகளையும், படிநிலைகளையும் தாண்டி முன்னேற வேண்டிய நிலையிலேயே இன்றைய சாதாரண பெண் இருக்கின்றாள்.

இன்று பெண் தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டவும் ஆற்றல்களை வெளிப்படுத்தவும் பல வழிகள் இருக்கின்றன. எமக்கு முந்தைய சந்ததியினரைப் போல பெண்கள் ஏக்கம் நிறைந்தவர்களாகவோ இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியவர்களாகவோ இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அருகிவிட்டன. பாதைகள் பல முனைகளில் திறந்திருக்கின்றன.

இருந்தும், எத்தனை பேர் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஏதோ ஒரு விதத்தில் ஏற்படும் பயமும், தயக்கமும் அநீதிக்குட்பட்டவர்களின் உணர்வுகளை மரக்கச் செய்து விடுகின்றன. அல்லது மௌனிக்க வைத்து விடுகின்றன. என்றே சொல்ல வேண்டும். உண்மையில் எப்பொழுதும் அநீதி இழைப்பவர்கள் தான் அச்சமுறவேண்டும். ஆனால் இங்கே மாறாக அநீதிக்குட்படுபர்களே அச்ச முறுகின்றார்கள்.

காலங்காலமாய் பெண் இப்படித்தான் இருப்பதற்குப் பழக்கப்பட்டிருக்கின்றாள். அநீதிக்கெதிராககுரல் கொடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பது என்பது பெண்ணுக்கு அவமானம், களங்கம் என்று அன்றைய காலம் போதித்தது. ஆகவே, அன்றைய பெண் எப்படி வாழ்ந்தாள், அந்தக் கருத்தும், ஆழமான வழி நடத்தலும் இன்றும் சில இடங்களில் ஊறி இருப்பதை நாம் காண்கின்றோம். இவை களையப்பட வேண்டிய கருத்துக்களாக இருக்கின்றன.

சிறிலங்காவின் தேச வழமைச்சட்டம் பெண்களுக்கு மனத்துணிவை ஏற்படுத்துவதாக இல்லை. ஆனால் எமது தமிழீழச் சட்;டங்கள் பெண்களுக்கு உரிய முறையில் நீதி வழங்கக்கூடிய வகையில் இருக்கின்றன. இருந்தும், அநீதிகளுக்கு எதிராக துணியாதவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சட்டம் தெரியாதவர்கள் என்பவர்களைவிட சட்டம் பற்றி முழுமையான தெளிவிருந்தும் முன்வராதவர்கள் தான் அதிகம்.

சமூக மட்டங்களில் இன்னமும் துன்புறுத்தப்படும், ஏமாற்றப்படும், அவதிக்கப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் எல்லோருமே இந்த அநீதிகளை எதிர்த்து போராட முன் வருகின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

ஏன் இவர்கள் இப்படி ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அவமானம் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் என்ன செய்வது பெண் என்றால் இதெல்லாம் சகஜம் என நினைக்கும் மனோபாவம் என்பவையே காரணங்களாக அமைகின்றதை அறிய முடிகின்றது.

இதன் மூலம் அநீதி இழைப்பவர்கள் தப்பிக் கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலுடனும், மாற முடியாத துன்பத்துடனும் வாழ நேரிடுகிறது. மேலும், அநீதி இழைப்பவர்கள் மீண்டும் மீண்டும் இதே அநீதியை இவர்களுக்ககோ, அல்லது இன்னும் பலருக்கோ இழைக்கும் மனத்துணிவும் இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்யப்படுவதை வெறுமனே அனுமதித்திருப்தும் மாபெரும் தவறாகிறது.

தவறிழைப்பவர்களை மன்னித்துவிடுகிறோம். அல்லது அலட்சியம் செய்துவிடுகின்றோம். இதனால் தவறிழைப்பவர்கள் மனச்சாட்சியின் உறுத்தலால் திருந்திக் கொள்வார்கள் என்பது எல்லாம் முழுமையான உண்மையல்ல. மன்னிப்பது பெருந்தன்மையை வெளிப்படுத்துவது என்று கருதப்பட்டாலும் கூட, இது எல்லா அநீதிகயாளர்களையும் திருத்தி நல்லவர்களாக்கும் என்று கூறிவிட முடியாது.

ஆகவே, பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது. போராட வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. இந்தக் கிளர்ச்சி அல்லது போராடும் மனப்பான்மை தான் பெண்களின் முன்னேற்றங்களுக்கு உந்துதலாக அமையும்.

ஆதிலட்சுமி சிவகுமார்


நன்றி சூரியன் இணையம்
\" \"
Reply
#3
உண்மைதான். பெண்கள் மட்டும் அல்ல யாராக இருந்தாலும் தமக்கு இழைக்கப்படும் -அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதவரை உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
உண்மை B.B.C
குரல் கொடுப்பதுடன் நின்றுவிடாது சிலவேளைகளில் போராடித்தான் சில உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது எமது தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம் சிறந்ததொரு உதாரணம்
\" \"
Reply
#5
<img src='http://sooriyan.com/images/stories/seithi01/aj1.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:red'><b>மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். </b>


[size=16]எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில். பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.
'டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தர் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து 'தண்ணி' அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மனபேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்யூ) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்யூ ஆய்வு மேற்கொண்டது. இதில் 'ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை' என்று தெரிய வந்துள்ளது.

'ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள்' என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்யூ உறுப்பினர் ஒருவர்.

'ஆண்களை எப்போதுமே 'சுபீரியர் செக்ஸ்' என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது. எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது.' என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி.

'கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருபதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது' என்பது ஜ.ஆர்.சி.டபிள்யூ. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

'அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று பூர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும்' என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர். ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.

பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.

மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.

சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும். </span>

sooriyan.com

-----------------------

[size=16]இந்த ஆய்வினால் கண்டதென்ன பெண்களுக்கு தங்கள் நிலையையே உணரக்கூட சிந்திக்க முடியவில்லை என்பதைத்தான்.....அதற்கு ஆண்கள் என்ன செய்ய முடியும்....??????! ஆண் "supreme sex" எண்டது என்னவோ மாற்ற முடியாத இயற்கையின் உண்மை.....! உண்மைக்கு அப்பால் சென்று எதைத் தேடினாலும் கோடி என்ன மனித இனம் அழியும் வரை பெண்கள் தங்கள் நிலையைப் சமூகத்தில் உணரமுடியாமலே இருக்கும்....! ஆணின் "Supreme sex" எனும் நிலையையும் அன்பால் புரிந்துணர்வின் பால் தகர்க்கலாம் சுயமாய்ச் சிந்தித்து முயன்று பாருங்கள்....முரண்டால் முட்டி மோதுவதுதான் வாழ்க்கை ஆகும்....!
(our view)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
குருவி இந்த கட்டுரையை ஏற்கனவே இந்த பகுதியில் போட்டுள்ளேன், அதில் மறுப்பு அறிக்கை என்று இன்னொரு கட்டுரையும் போட்டுள்ளேன், அதற்கும் உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
<span style='color:red'>கணவர்களின் கொடுமை : என்ன செய்யவேண்டும்?
<img src='http://www.webulagam.com/women/life/images/2002/06/abused1.jpg' border='0' alt='user posted image'>

வரதட்சிணை, கள்ளக் காதல் என்று பல விதமான காரணங்கள் காட்டி பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதை கிட்டத்தட்ட தினமுமே செய்தித் தாள்களில் படிக்கிறோம். ஸ்டவ் வெடித்து' பலியாகும், அல்லது மிக சீரியஸாக தீக்காயம் அடையும் பெண்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.

ஆனால் கணவர்கள் மனைவியைச் சித்திரவதை செய்வது நாம் நினைப்பதை விட அதிகமாவே நடக்கிறது. பல பெண்கள் தாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் படும் வேதனைகளை வருடக்கணக்கில் வெளியே சொல்லாமலே குமைவதுதான் சோகம்.

ஒரு கணவன் தன் மனைவியிடம் வன்முறையைக் காட்ட ஆரம்பித்துவிட்டால் பிறகு அதற்கு முடிவே இல்லாமல் போகிறது. அதன் உக்கிரம் தீவிரமடைகிறதே தவிர குறைவதில்லை.

நீண்ட காலமாக கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் மனதை பயம்தான் பிடித்து ஆட்டுகிறது. அந்த பயம் தன்னைப் பற்றி மட்டுமில்லாமல் தன் குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயமாகவும் மாறுகிறது. எழை - பணக்காரர்கள், ஜாதி - மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு பெண் ஏன் இத்தனை அநியாயங்களை சகித்துக்கொள்ளவேண்டும்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. இன்று எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டாலும் `மனைவி கணவனை விடத் தாழ்ந்தவள்' என்கிற கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை. விவாகரத்து என்பது நம் பெண்களுக்கு வெளிநாடுகளில் மட்டுமே சாத்தியமாகிற விஷயமாகத் தெரிகிறது.

வாழாவெட்டி என்ற `கான்செப்ட்'டை இப்போதும் பத்திரமாகப் பேணிக்காத்து வருகிறார்கள். மகள் என்ன அவதிப்பட்டாலும் பெற்றோர் தரும் அட்வைஸ் இதுதான்: "நீதான் அனுசரித்துப் போகவேண்டும்." கணவன் ஒரு பொறுக்கியாக இருந்தாலும் அவனைப் பிரிந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் மனைவி நினைப்பதும் இந்த சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.

வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. `சாதா' கொடுமைகளை குடும்ப விவகாரம், அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.

தொடர்ந்து அடிபட்டு, அடிபட்டு ஓய்ந்து போன மனைவிகளுக்கு அதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடுகிறது. தாழ்வு மனப்பான்மை, விரக்தி எல்லாம் உருவாகி அவர்கள் அடங்கிப் போகிறார்கள். இவர்களில் சிலர்தான் உயிரோடு எரிந்து சாகிறார்கள்.

கணவர்கள் எதற்காகத் தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்? கணவர்களே தங்கள் சிறு வயதில் பெற்றோரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம், அவர்கள் தாய் அவர்கள் கண்முன் அடித்து உதைக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியிருக்கலாம், அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்.

ஒரு கணவனால் வீட்டில் மட்டும்தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தன் உள்மன வன்முறையை வெளியே காட்ட முடிகிறது. மனைவியை அடித்தால் அவள் திருப்பி அடிக்கவா போகிறாள்? அப்புறம் மன்னிப்பு கேட்டால் போயிற்று! மனதில் இருக்கும் அத்தனை கோபங்களையும் காட்ட மனைவிதான் சரியான இலக்கு.

பொதுவாக மனைவியைச் சித்திரவதை செய்வது மூன்று கட்டங்களில் நடக்கிறது :

முதலில் சின்னச் சின்ன சண்டைகள், பிறகு அடி உதை, பிறகு குற்ற உணர்வு ஏற்பட்டு மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொஞ்சுகிறார்கள். மன்னிப்பு கேட்பது கூட சில தம்பதிகள் விஷயத்தில்தான் நடக்கிறது.

பிரச்னை எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். கணவனிடம் பணம் கேட்பது (பெரும்பாலும் வீட்டு செலவுக்காகத்தான் இருக்கும்; நகை, புடவை வாங்குவதற்கு கணவனை நச்சரிக்கும் பெண்கள் கை எப்போதும் ஓங்கியிருக்கும்), கணவனிடம் வீட்டு வேலை செய்ய உதவி கேட்பது, அவள் சமையல் கணவனுக்குப் பிடிக்காமல் போவது,,`மூட்' இல்லாததால் மனைவி உடலுறவு கொள்ள மறுப்பது - இப்படி எதிலும் தொடங்கும்.

இதற்கு அடுத்து அவளுக்குப் பல விதமான `தண்டனை'கள் கிடைக்கின்றன. பல கணவர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கிறார்கள், கழுத்தை நெரிக்கிறார்கள், எட்டி உதைக்கிறார்கள், கத்தியால் கீறுகிறார்கள், சுவற்றில் மோதுகிறார்கள், தள்ளுகிறார்கள், அவள் நடத்தையைப் பற்றி சம்பந்தமில்லாமல் திட்டுகிறார்கள். . . அடுத்தது மன்னிப்பு கேட்கும் படலம்.

அடித்த பிறகு கணவனுக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறதா, நிஜமாகவே மன்னிப்பு கேட்கிறானா, அல்லது அவனுக்குத் தன் மனைவி மேல் உண்மையான காதல் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமில்லை. தன் மீது எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட அவனுக்கு உரிமை இல்லை என்பதை மனைவி அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

<img src='http://www.webulagam.com/women/life/images/2002/06/abused3.jpg' border='0' alt='user posted image'>

ஒரு பெண் தன் பாதுகாப்புக்குப் பல முன்னேற்பாடுகளை செய்துகொள்ள முடியும். இவை மிகவும் சுலபம். கொஞ்சம் பணம், பட்டச் சான்றிதழ்கள் மற்றும் இதர சர்ட்டிஃபிகேட்கள் போன்ற ஆவணங்கள், கார் / பைக் சாவி, இதையெல்லாம் சட்டென்று கிடைக்கும் ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கவேண்டும். அவசரம் என்றால் எடுத்துக்கொண்டு கிளம்ப வசதியாக இருக்கும்.

போலீஸ் மற்றும் நண்பர்களின் ஃபோன் நம்பர்களை கைக்குக் கிடைக்கும் இடத்தில் வைத்திருப்பது நல்லது. எப்போது வீட்டை விட்டு வெளியேறினாலும் (குழந்தை இருந்தால் குழந்தையுடன்) உடனே தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்துகொள்வது ரொம்ப முக்கியம் - உதாரணமாக, ஒரு தோழியின் / தோழரின் / உறவினரின் வீடு, அல்லது ஏதாவது மகளிர் சேவை நிறுவன அலுவலகம்.

ஒரு விதத்தில் பார்த்தால் கணவன் அடிக்க வரும்போது சினிமாவில் வரும் அடியாள் போல வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. கணவன் அடிக்க முயற்சி செய்தால் மனைவி தன்னால் முடிந்த வரை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கணவனை அடக்க முடியவில்லை என்றால் உடனே போலீசுக்கு ஃபோன் செய்யவேண்டும். உடனே தன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

அருகில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெறுவதும் அவசியம். எந்த இடங்களில் எந்த மாதிரி அடிபட்டது, எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற மருத்துவ ரெக்கார்டுகளும், தேவைப்பட்டால் அடிபட்ட இடங்களின் புகைப்படங்களும் கண்டிப்பாகத் தேவை. கணவன் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது இவை மிகவும் உதவும்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. நண்பர்கள் மட்டுமல்ல, பெண்களின் நலனுக்காகவே இயங்கும் ஆயிரத்தெட்டு தனியார் அமைப்புகள் உதவிக்கு வரத் தயார் நிலையில் இருக்கும். இவர்கள் ஒரு புது வாழ்க்கை தொடங்கவும் ஆலோசனை தருவார்கள்.

பெண்களுக்கான அவசர அடைக்கல மையங்கள், உடனடி தொலைபேசி உதவி சேவைகள், சமூக சேவை நிறுவன நிறுவனங்கள், மருத்துவமனைகளின் எமர்ஜென்சி ரூம்கள் என்று உதவி பெற இடத்திற்குப் பஞ்சமில்லை.

மற்றவர்கள் உதவுவது இருக்கட்டும். ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர், பிறகுதான் ஒரு மனைவி, தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப்படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஜனிஃபர் பேக்கர் ஃப்ளெமிங் என்ற எழுத்தாளர் 'Stopping Wife Abuse' ' என்ற புத்தகத்தில் சில பயனுள்ள அட்வைஸ்களைத் தருகிறார். கணவனால் கொடுமைப்படுத்தப்படும் ஒரு பெண் கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர் :

நான் அடித்து சித்திரவதை செய்யப்பட்டால் அதற்கு நான் காரணம் இல்லை. இன்னொருவனின் வன்முறையான நடத்தைக்கு நான் காரணம் ஆக முடியாது.


இந்த வன்முறை எனக்குப் பிடிக்கவில்லை. இதை நான் நிச்சயம் எதிர்ப்பேன். நான் இதை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நான் ஒரு முக்கியமான மனுஷி. நான் யாருக்கும் குறைந்தவள் இல்லை.

நான் மற்றவர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் தகுதியானவள். என்னை மதிப்பவர்களைத்தான் நானும் மதிப்பேன்.

என் வாழ்க்கை என் கையில்தான் இருக்கிறது. என் கையில்தான் இருக்க முடியும்.

என் உரிமைகளைப் பயன்படுத்தி என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

எனக்கு எது நல்லது என்று நானே முடிவு செய்ய முடியும்.

என் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால் அதை நான் நிச்சயம் செய்ய முடியும்.

நான் நிராதரவானவள் இல்லை. எனக்கு யாரும் அபலைப் பட்டம் கட்ட முடியாது. எனக்கு மற்றவர்களின் உதவி சுலபமாகக் கிடைக்கும்.

என் வாழ்க்கையை பாதுகாப்பாக, சந்தோஷமாக வைத்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு.

மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அதே போல சமூகமும் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும், தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.</span>


webulagam.com

--------------------------

[size=14]இப்படி எல்லாம் பெண்களுக்குப் புத்திமதி சொல்லப்படுகிறதே...பெண்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்....நீங்கள் எட்டடி பாய்ந்தாய் ஆண் 64 அடி பாய்வான்.....! அதற்கான வல்லமையும் திறமையும் அவனிடன் உண்டு...ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும் ஆண் பெண் என்று பாராமல் குடும்ப மட்டத்திலும் சரி சமூக மட்டத்திலும் சரி அனைவரிடத்திலும் வன்முறைக்கான தோற்றுவாய்களைக் களைய வேண்டும்...அதை அன்பாலும் புரிந்துணர்வாலுமே செய்ய முடியும்...ஒரு பிரச்சனைக்கு ஒரு விவாகரத்து அல்லது ஒரு வீட்டை விட்டு ஓடுதல் அல்லது போலீசுக்கு போன் செய்தல் என்பதே தீர்வாகக் காட்டப்பட்டால் வாழ்வே வீட்டை விட்டு ஓடுவதிலும் போலீசுக்குப் போன் செய்வதிலுமே கழியவும் நேரிடலாம்...!அதுமட்டுமன்றி ஒரு ஆணுடன் ஒரு பிரச்சனைக்கு ஒரு விவாகரத்து என்றால் இன்னொரு ஆணுடன் இன்னொரு பிரச்சனைக்கு இன்னொரு விவாகரத்து என்று...வாழ்க்கையை விவாகரத்தில் ஓட்டவும் நேரிடலாம்.

ஆண்களே பெண்களே இப்போ எதைத் தெரிவு செய்யப் போகிறீர்கள்....அன்பின்பாலான புருந்துணர்வுடனான வாழ்வையா...விவாகரத்துக்களுடனான வாழ்வையா......??????! தீர்மானிப்பது நீங்கள்....!

சமூகத்தில் குடும்பத்தில் வன்முறைகளுக்கான தோற்றுவாய்களாக ஆண்கள் மட்டும் இருக்கவில்லை சம அளவில் பெண்களும் அவர்களின் நடத்தைகளும் கோலங்களும் இருக்கின்றன என்பதை மேலே கட்டுரைகள் வரைந்தவர்கள் ஏன் சிந்திக்கவில்லை...???????! அல்லது சிந்திக்க நேரம் கிடைக்கவில்லையோ...அல்லது ஆணின் மீதே முழுப்பழியையும் போடுவதில் தன்னிலை மறந்து போய்விட்டதோ என்னவோ....???! :roll:

இக்கட்டுரை வாயிலாக ஆண்கள் கவனிக்க வேண்டியது...

மேலே கட்டுரையில் பெண்களுக்கு சொல்லப்பட்ட உக்திகளைப் பெண்களால் வன்முறைக்கு ஆளாகும் ஆண்களும் பின்பற்றலாம்...தேவை என்றால்... நீங்கள் உங்களுக்கே உரித்தான பாணியில் புதிய உக்திகளையும் வகுத்துக் கொள்ளலாம்....வன்முறைக்கு வன்முறையால் பதில அளிக்க ஆண்கள் எப்போதும் தயங்கக் கூடாது....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படிச் செய்யத் தயங்குவது ஆணுக்கு இழுக்கு...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39609000/jpg/_39609591_girldrinking203.jpg' border='0' alt='user posted image'>

<b>அதிகரிக்கும் இளம் பெண் குடிகாரிகள்....!

பெண்களின் கெட்ட துர்நடத்தைகள் மனித சமூகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளமை ஆய்வென்றில் கண்டறியப்பட்டுள்ளது....! இதன் மூலன் பெண்கள் ஆண்களைவிட விரைந்து தறிகெட்டு குட்டிச் சுவராவது நிரூபிக்கப்படுகிறது....சமூக விழுமியங்கள் பண்பாடுகள் கலாசாரங்களை விட்டுவிலகி விலங்குகளை விட கீழ்த்தரமாக வாழ விளையும் இந்த நிலை தொடர்ந்தால் எங்கே செல்லுமோ வளமான நாளைய சந்ததியின் உருவாக்கமும் அபிவிருத்தியும்...! யாரறிவார்...????!

தற்கால சமூகத்தில் ஆணுக்குப் பெண் சமம் என்று கொண்டு பெண்கள் தறிகெட்ட ஆண்களுக்கு நிகராக தாங்களும் தறிகெட்டுப் போய்க்கொண்டு தங்களையும் சீரழித்து ஒட்டு மொத்த சமூகத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்....!

ஏன் இந்த புத்தி மந்திய நிலை...உண்மையை உணர்வார்களா...அல்லது விரைந்து அழிவுக்கு வழிவகுப்பார்களா...???!

-------------

[b]Women's bad habits getting worse</b>

(March, 2004)

Drinking among young women is on the increase
Young women are drinking and smoking more than ever, according to new figures released by the government.
The General Household Survey, put together from interviews with more than 20,000 people, has raised concerns about women's habits.

Weekly drinking levels amongst young women have increased significantly and smoking has become much more popular with teenage girls.

Campaigners blame increased income and marketing aimed at young women.

Lee Lixcnberg, spokesman for Alcohol Concern, said: "I think a major factor is that more and more women in that age group have established careers.

Target young women

"That means they have more of a disposable income now which gives them more freedom to drink.

"Another contributing factor is the fact that a lot of marketing tends to target young women in terms of the alcoholic products they sell these days."

The figures for 16-24 year-old women who drank more than the recommended weekly 14 units, virtually doubled from 17 to 33% between 1992 and 2002.

You often see pictures of models like Kate Moss with a cigarette in their mouth - I think images and role models like these have quite an influence on young girls

The statistics revealed that more women smoke than men in this age group with 29% taking up the habit compared with 22% of teenage boys.

No Smoking Day director, Ben Youdan, puts the results down to a difference in role models.

He said: "I think with young teenage girls smoking is higher than boys because there is a strong link between smoking and glamour.

"You often see pictures of models like Kate Moss with a cigarette in their mouth.

Health inequalities

"I think images and role models like these have quite an influence on young girls.

"With boys it is different because they are more associated with sportsmen like footballers. Advertising is more based on athletes so they have different role models to girls."

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39905000/gif/_39905186_smoking2_gra203.gif' border='0' alt='user posted image'>

Despite the findings, the survey did show an overall drop in smoking among men and women over the last 20 years.

Up to 38% of men and 33% of women were cigarette smokers in 1982.

But recent results show that the latest figure has fallen to 27% for men and 25% for women.

Welcoming the statistics, Melanie Johnson, Minister for Public Health said: "I am delighted by these results, these figures show that the government's programme to reduce the numbers of adults who smoke is working.

"They also show that smoking rates are falling in manual groups, which is crucial in tackling health inequalities."

bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
வணக்கம்...

சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.

அதைப் போல பெண்களுக்கும் கவலை இருக்குந்தானே? கணவன் குடிச்சுப் போட்டு அடிக்கிறார், அல்லது இன்னொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருக்கிறார் என்று நிறைய கவலைகள் இருக்குந்தானே?

சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!? மன்னிக்கவும்! குருவிக்கு பகுத்தறிவு இல்லை என்பதைக் கொஞ்சம் மறந்து போட்டன். எண்டாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னான்.

ஒரு ஆண் செய்வதைப் பார்த்து இன்னொரு ஆண் செய்கிறான். ஒரு சமூகம் கலாச்சாரத்தைப் பார்த்து சமூகம் செய்கிறது. ஒரு நாடு அணுகுண்டு தயாரிப்பதைப் பார்த்து இன்னொரு நாடு செய்கிறது. அவன் செய்யிறான், நான் செய்யக்கூடாதா? அவர்கள் செய்கிறார்கள் நாங்கள் செய்யக்கூடாதா? அந்நாடு செய்கிறது நம்நாடு செய்யக்கூடாதா? என்ற கேள்விகள்தானே இவற்றிற்கு அடித்தளம்!? அப்படியிருக்கும்போது பெண்ணும் அப்படி எண்ணுகிறாளோ என்னவோ!

அப்பா சிகரெட் பத்துறார் என்றால் அதைக் கவனிக்கும் பிள்ளையும் "அப்பா பத்துறார் தானே நான் பத்தினால் என்ன" என்று தான் கேட்கும். அதற்கு அம்மா "சின்னப்பிள்ளைகள் பத்தக்கூடாது" என்று பதில் சொன்னால், அவன் வளர்ந்ததும் "நான் வளர்ந்திட்டன்" சிகரெட் பத்தலாம் என்று சிகரட் பத்த வெளிக்கிடுவான்/ள். இது இயல்பு!!!


Reply
#10
இளைஞன் Wrote:<span style='color:#ff0009'><b>சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.</b>

[size=14]உண்மை பெண்களை தூற்றுவதற்கு முக்கிய காரணங்களாக இவை இருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் ஒரு பெண்ணை விரும்பி அதை பெண் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதன்பின் அவளை தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். அனைத்து ஆண்களும் அல்ல ஒரு சிலர்தான். நீங்கள் எழுதியதை படித்தவுடன் அண்மையில் கேட்ட சினிமா பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன இளைஞன்.

இதோ அந்த வரிகள் ..... கண்களால் கைது செய் படத்தில் (பாடல் - ஆகா தமிழா) இருந்து .....

<b>\"ஒரு பெண் ஏமாற்றினால் பெண்களை பிழை என்பதா\"</b></span>

[quote=இளைஞன்]
சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!? மன்னிக்கவும்! குருவிக்கு பகுத்தறிவு இல்லை என்பதைக் கொஞ்சம் மறந்து போட்டன். எண்டாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னான்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
இளைஞன் Wrote:வணக்கம்...

சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.

அதைப் போல பெண்களுக்கும் கவலை இருக்குந்தானே? கணவன் குடிச்சுப் போட்டு அடிக்கிறார், அல்லது இன்னொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருக்கிறார் என்று நிறைய கவலைகள் இருக்குந்தானே?

சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!?
!!!
[align=center:ee2e8603ad][Image: women_right_erki.jpg][/align:ee2e8603ad]
<span style='font-size:22pt;line-height:100%'>நறுக்காக நாலு வார்த்தை சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன்.மகிழ்ச்சி..........

களத்துக்கு வருவோரையே பருந்து என நினைத்து புதிதாக வரும் கோழிக் குஞ்சுகளைத் துரத்தி சந்தோசப்படும் சில மனநோயாளிகள் தமக்கு கிடைத்தவளை இதே போல் துன்புறுத்தி கோட்டை விட்டு விட்டு அத்தனை பெண்களையும் அதே நோக்கில் அவதூறு கூறுவதில் வியப்பில்லை.

ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிரும் உணர்வுகளும் இருக்கிறது என்று உணர முடியுமானால் பகுத்தறிவு என்று ஒருவருக்கு இருக்குமானால் பெண்களது உரிமைகளை மறுப்பதற்கு எவருக்கும் பிரச்சனை இருக்காது.

ஒருவரை அடிமைப்படுத்த நினைப்பதைவிட, ஒரு புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள முனைவதே மகிழ்வான வாழ்வுக்கு அடித்தாளம்.................</span>
[Image: votes-women.jpg]
[size=14]ajeevan
Reply
#12
AJeevan Wrote:[quote=இளைஞன்]வணக்கம்...

சில பேர் தன் மனைவி விவாகரத்து (அல்லது ஓடுதல், விலகல்) பெற்றதால், அவள் கூடாதவள், அவளைப் போல் தான் மற்றைய பெண்களும் என்று தூற்றுவார்கள். மனைவி கணவனை விட்டு விவாகரத்துப் பெற்றுவிட்டாள் (அல்லது ஓடிவிட்டாள்?) என்ற கவலையில் சில ஆண்கள் குடிக்கிறார்கள். சில பேர் தற்கொலை செய்கிறார்கள்.

அதைப் போல பெண்களுக்கும் கவலை இருக்குந்தானே? கணவன் குடிச்சுப் போட்டு அடிக்கிறார், அல்லது இன்னொரு பெண்ணுடன் தகாத தொடர்பு வைத்திருக்கிறார் என்று நிறைய கவலைகள் இருக்குந்தானே?

சில ஆண்கள் சந்தோசத்துக்காதக குடிக்கிறார்கள். பெண்ணும் மனிதப்பிறவிதானே? அவளுக்கும் துக்கம் சந்தோசம் இருக்குந்தானே!? குருவி என்பதால் கூட்டுக்குள்ள பிடிச்சு வச்சு நீ கூட்டுக்குள்ளதான் இருக்கோணும் என்று சொன்னால் எந்தக் குருவி ஏற்றுக்கொள்ளும்!?
!!!
[align=center:63e4f60e72][Image: women_right_erki.jpg][/align:63e4f60e72]
<span style='font-size:22pt;line-height:100%'>நறுக்காக நாலு வார்த்தை சொல்லியிருக்கிறீர்கள் இளைஞன்.மகிழ்ச்சி..........

களத்துக்கு வருவோரையே பருந்து என நினைத்து புதிதாக வரும் கோழிக் குஞ்சுகளைத் துரத்தி சந்தோசப்படும் சில மனநோயாளிகள் தமக்கு கிடைத்தவளை இதே போல் துன்புறுத்தி கோட்டை விட்டு விட்டு அத்தனை பெண்களையும் அதே நோக்கில் அவதூறு கூறுவதில் வியப்பில்லை.

ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிரும் உணர்வுகளும் இருக்கிறது என்று உணர முடியுமானால், பகுத்தறிவு என்று ஒருவருக்கு இருக்குமானால், பெண்களது உரிமைகளை மறுப்பதற்கு எவருக்கும் பிரச்சனை இருக்காது.

ஒருவரை அடிமைப்படுத்த நினைப்பதைவிட, புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள முனைவதே மகிழ்வான வாழ்வுக்கு அடித்தாளம்.................</span>
[Image: votes-women.jpg]
[size=14]ajeevan
Reply
#13
பெண்களை நாங்கள் தூக்கவும் இல்லை தூற்றவும் இல்லை நாறடிக்கவும் இல்லை... ஏமாத்ததுவும் இல்லை ஏமாறவும் இல்லை...ஆனா சமூகவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டு BBC நாறடிக்குது....!

கோழிக்குஞ்சுகள் களம் வந்திருந்தா களம் சந்தைக்கெல்லே போயிருக்கும்.....களம்
வந்ததுகள் சில காகக் குஞ்சுகளா வந்து கண்ட இடமெல்லாம் நாறடிச்சுப்போட்டுதுகள்...அதுகளோட சேர்ந்து சில விளம்பரம் தேடிக்... காகங்கள் இன்னும் கரையுதுகள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
காகச் செட்டை ஒன்றை கட்டிவிட்டா கிட்ட வராயினம்.. தூரத்தில நின்று கத்திக்கொண்டிருப்பினம்... கத்திப்போட்டுப் போகட்டுமன்.. என்ன குருவி?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#15
kuruvikal Wrote:பெண்களை நாங்கள் தூக்கவும் இல்லை தூற்றவும் இல்லை <b>நாறடிக்கவும் இல்லை</b>... ஏமாத்ததுவும் இல்லை ஏமாறவும் இல்லை...ஆனா சமூகவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டு <b>BBC நாறடிக்குது</b>....!

முரண்பாடுகள்: BBC நாறடிக்குது என்று சொன்ன அதே கருத்தை, நீங்கள் களத்தில் மீண்டும் அதை இட்டால் அதன் பொருள்தான் என்ன? வீதியில் நாய் மலம் கழித்தது. அது துர்நாற்றம் வீசியது. ஆனால் அந்த மலத்தை வீட்டுக்குள் நீங்கள் கொணந்து வைத்துவிட்டு நான் நாறடிக்கவில்லை நாய்தான் நாறடிக்கிறது என்றால், என்ன சொல்வது?

உண்மையில் BBC தனது ஆய்வறிக்கையை ஒரு சமூகக் கண்ணோட்டத்தோடுதான் பார்த்ததே தவிர, நாறடிக்கவில்லை. அதற்கு மேலும் சுயவெறுப்பை வெளிக்காட்டும் சாயம் பூசி சுயஇன்பம் காண்பதையே இங்கு சுட்டிக்காண்பிக்க முனைகிறேன்.

அடுத்தது, ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் புகைப்பிடிவதற்கு இங்கு முன்வைக்கப்பட்ட உங்கள் காரணம் கண்மூடித்தனமான ஒரு விளக்கம். BBC தனது ஆய்வறிக்கையிலேயே(?) சில விளக்கங்களை முன்வைத்துள்ளது. அதில் இருந்து தெளிவாவது ஆண்மையவாத சமூகத்தின் விளம்பரப் போக்கே தவிர, ஆண்கள் செய்வதால் தாங்களும் செய்யவேண்டும் என்கிற போக்கு அல்ல. ஆண்மையவாத சமூகத்தின் விளம்பர யுக்தியில் பெண்களேயே முதன்மையாகப் பயன்படுத்துவதும், அதை முன்னுதாரணமாக எடுப்பதுமே முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

சுதந்திரம் என்பது பலவேளைகளில் அநேகமானோரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. அதில் பால் வேறுபாட்டை முன்னிறுத்துவது ஆண்மையவாதப் போக்கே தவிர சமூகக் கண்ணோட்டமல்ல. இளைஞர்களைப் பொறுத்தவரையில் சகதோழியிடம் இருந்தோ, தோழனிடம் இருந்தோ, பெற்றோர்களிடம் இருந்தோ பழக்கவழக்கங்கள் உள்வாங்கப்படுகின்றன. ஆண் புகைப்பிடிப்பதால் நாங்கள் புகைப்பிடிக்கிறோம் என்று எந்த இளைஞியும் சொல்வதில்லை. புகைப்பிடிப்பதற்கும், மதுபானம் அருந்துவதற்கும் காரணங்கள் இருபாலாருக்கும் ஒரே அடிப்படைதான்.

"ஒரு பெட்டச்சியே இது செய்யிறாள், நான் செய்யிறதுக்கு என்ன" என்று சொல்லிக்கொள்வது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஊறிஉறைந்த சில ஆண்கள். --> இதை என்ன சொல்வது? இது ஆணாதிக்க சமூகக் கொழுப்பு!?

இது சமூகத்தின் ஒரு உதாரணம் தான். இதே மாதிரி நிறைய சுட்டிக்காட்டல்களை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சினைகளை எப்போதும் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கவனிக்க வேண்டும். கருத்து வைக்கவேண்டும். சுயவிருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு சமூகத்தைக் காயப்படுத்தினால் அந்தக் காயத்தின் கிருமிகள் அதே சமூகத்தில் அங்கத்துவராக இருக்கும் தன்னையும் ஒருநாள் தொற்றிக்கொள்ளும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்!


Reply
#16
பிபிசி நாறடிப்பது பெண்களின் நடிப்பை...சமத்துவம் என்ற போர்வைக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் போடுகின்ற பல்வேறு கெட்ட நடத்தைகளுக்கான வேடங்களையும் கூத்துக்களையும்...அதை மறைக்கவே பெண்ணியமும் ஆணாதிக்கமும் என்ற பரப்புரைகள் இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன...பெண்கள் இப்படி தறிகெட்டுப் போவதால் பயனடையும் கேடுகெட்ட ஆண்கள் தான் இன்றைய பெண்ணியத்தின் வால் பிடிகள்....! உண்மையில் அவர்கள் மனித இனத்தின் விருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான பெண்ணிற்கும் ஆணிற்குமான சமூகவியல் சமத்துவத்தை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை....! பல சமத்துவம் பேசும் கேட்கும் பெண்களும் அதை உணர்ந்திருக்கவில்லை.....!

ஒரு ஆண் குடித்தால்...குடித்துவிட்டு மதியிழந்து அடித்தால்...அதுவே ஆண் அடிக்கிறான் கொடுமைப்படுத்துகிறான் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று ஆகிறது...ஆனால் இன்று பெண்களும் குடிக்கிறார்கள் மதியிழந்து வீடென்ன வீதியிலேயே அலைகிறார்கள்....அவர்கள் மட்டும் வெறி போட்டுவிட்டு அப்பாவி ஆண்களை குழந்தைகளை ஆதிக்கம் செய்ய மாட்டார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்...! வெறி போட்டதுகள் எல்லாமே மதி கெட்டதுகள் தான் அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன...! ஆனால் இன்னும் ஆண் குடிப்பதை பெரிய குற்றமாகக் காணும் பெண்கள், பெண் குடித்துவிட்டுப் போடும் கும்மாளத்தை மறைப்பதேன்....??????! குடிகாரிகள் குற்றம் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்....???! அப்போ பெண்களும் குடித்துவிட்டு ஆண்களை ஆதிக்கம் செய்கிறார்கள் என்றால்... அதை குடிகாரர்களை வைத்துப் பெண்ணியம் பேசும் பொய்யர்கள் ஏற்றுக் கொள்வார்களா...????!

இப்படித்தான் அநேக சமூகவியல் குற்றங்களுக்கும் பெண்கள் பெரிதும் காரணமாக இருந்து கொண்டு ஆணின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆணாதிக்கம் பெண்விடுதலை... சமத்துவம் அது இது என்று பிதட்டிக் கொண்டு உலகில் அனைத்துத் தரப்பிலிருந்தும் சமூகவியல் குற்றங்கள் பலமடங்கு பல்கிப் பெருக ஒத்தாசை செய்து கொண்டிருக்கிறார்கள்...!

அதென்ன ஆண்மையமான விளம்பரம்...அநேக விளம்பரங்களில் பெண்கள் தானே இழுத்துப் பிடித்துக் கொண்டு அரையும் குறையுமாய் அலைந்து கொண்டு குடிப்பதில் இருந்து கும்மாளம் இடுவதுவரை காட்டுகிறார்களே...ஒரு சமூக முன்மாதிரிக்காக அப்படியான சமூகச் சீரழிவைத் தேடும் விளம்பரங்களில் நாம் நடிக்க முடியாது என்று ஒதுங்கினால் ஆண் என்ன கட்டி வைத்தா கூத்துக்காட்ட முடியும்....அப்படிச் செய்வது விளம்பரத்துக்கு ஆகுமா.....???!
ஆக... சமத்துவம் என்ற போர்வையில் ஆணை விஞ்சி மனித இனத்துக்கு அவசியமான பகுத்தறிவு கடந்து அலையோ அலையென்று அலைந்து கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்துக் கொண்டு தங்களின் கீழ்மைகளுக்கு சமூக அங்கீகாரம் தேட நல்லா ஆணாதிக்க பெண்விடுதலை கட்டுரைகளை வரைந்து கொட்ட வேண்டியதுதான்.....!

ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் அன்று சான்றோர் ஏன் சமூகக் கட்டுப்பாடுகளை விதித்து மனிதனின் தறிகெட்ட மதிக்கு விலங்கிட்டிருந்தார்கள் என்று...இன்று அவற்றை மூட நம்பிக்கை என்று அதீத புத்திசாலித் தனத்தால் சமூகத் தடைகள் என்று கூறி விலக்கி வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறீர்கள்...இதற்கான உண்மையான பலனை நீங்கள் அல்ல உங்கள் எதிர்கால சந்ததி அனுபவிக்கும் போது உணர்வீர்கள் நீங்கள் விட்ட தவறுகளை...அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்......!

ஒரு ஆண் குடிகாரன் ஆனால் ஆகக்கூடியது புதிய சந்ததிக்கான வித்தை இடமுடியாது போகலாம் மரணத்தை அணைக்கும் வரை...ஆனால் ஒரு பெண் குடிகாரியானால் அழிவது அவள் மட்டுமல்ல அவள் உருவாக்கும் அவளின் சந்ததிகளும் என்பதை மறந்துவிடாதீர்கள்...இன்று அநேகம் குழந்தைகள் கருவிலேயே ஊனமடையவும் கருக்கலைவு நடைபெறவும் பெண்களின் தற்கால நடத்தைக்கும் நெருக்கிய தொடர்புண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்...இது BBC சொல்ல மறந்த விஞ்ஞான பூர்வ மற்றும் சமூகவியல் உண்மை......!

நாம் தவறிழைக்கும் பெண்ணைப் பேசுவது அவள் கெட்டழித்து போகவேண்டும் என்பதற்கல்ல அவள் தன் தவறுணர்ந்து தன் எதிர்கால சமூகத்தின் நிலை உணர்ந்து தொலை நோக்கோடு ஆணையும் விஞ்சி சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் நோக்கிலேயே......! <b>போலியாய் பெண்ணைப் புகழ்ந்து அவளை சீரழிக்க நாம் முனைய மாட்டோம்.....அதை என்றும் எம்மளவில் எதிர்ப்போம்....!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
இளைஞன் Wrote:[quote="
'ஒரு பெட்டச்சியே இது செய்யிறாள், நான் செய்யிறதுக்கு என்ன" என்று சொல்லிக்கொள்வது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஊறிஉறைந்த சில ஆண்கள். --> இதை என்ன சொல்வது? இது ஆணாதிக்க சமூகக் கொழுப்பு!?

இது சமூகத்தின் ஒரு உதாரணம் தான். இதே மாதிரி நிறைய சுட்டிக்காட்டல்களை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சினைகளை எப்போதும் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கவனிக்க வேண்டும். கருத்து வைக்கவேண்டும். சுயவிருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு சமூகத்தைக் காயப்படுத்தினால் அந்தக் காயத்தின் கிருமிகள் அதே சமூகத்தில் அங்கத்துவராக இருக்கும் தன்னையும் ஒருநாள் தொற்றிக்கொள்ளும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்!
இப்பிடி எழுதுற எத்தினையோ பேரக்காணவில்ல. எங்க இவ்வளவு நாம் போனிங்க.
Reply
#18
<b><span style='font-size:30pt;line-height:100%'>பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..? </b> </span>


<span style='font-size:21pt;line-height:100%'>Monday, 29 March 2004
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇன இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான்.
பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும்;இ போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில்; குருதி வாடையும்இ பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடிஇ ஒன்றாக உண்டுஇ போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும்இ குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.

இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.

ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும்இ குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றிஇ மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்;புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்இ
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்லஇ விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில்
விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.
இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.
பெண்ணை மட்டும்; அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.
அன்று சு10ழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால்இ இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோஇ அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள்.
ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமைஇ பெண்அடக்குமுறைஇ பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள்இ தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.

இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோஇ அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.

காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
28.2.2004

நன்றி - பதிவுகள்.கொம்</span>
Reply
#19
Arrow
Reply
#20
சபாஸ் இளைஞன். ஐந்தாம் அறிவின் ஆள்மன வெளிப்பாட்டை அருமையாக விளக்கினீர். உம் கருத்து சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது.

குருவியாரே ஏனய்யா உந்த புறங்கூறல் ? உங்களிட்டை நல்ல கருத்தக்களஞ்சியம் இருக்கு அதை நல்லபடியாத் தாங்கோ வாசிக்கிறோம். வளர்கிறோம். ஏன் காகத்தையும் , நாயையும் கூப்பிட்டு....?????????????

குருவிகள் நீங்கள் குறிப்பிட்ட சிலரது பிழைகளைத்தான் து}க்கி உச்சியில் வைத்து உருவெடுக்கிறீர்கள். ஆனால் யதார்த்தத்தில் நடைமுறையில் பெண்கள் ஆதிக்க சமூகத்தினரால் பாதிக்கப்படுவதுதான் நிசம்.


விளம்பரம் என்றால் பெண்களை அரைகுறையாக்கினால்தான் தனக்கு இலாபம் என்பதை கருத்திலெடுக்கும் முதலாளி தனது வியாபாரத்தைப் பெருக்க பெண்களை பயன்படுத்துகிறான். ஆனால் அந்தப்பெண்கள் எல்லாருமே பெண்ணிலையில் கரிசனையானவர்கள் அல்ல. அவர்கள் அதையொரு தொழிலாகச்செய்யலாம். பெண்ணின் முன்னேற்றமென்பது விளம்பரங்களில் அலங்காரம் காட்டும் பெண்களுக்கானது அல்ல. அது இன்னும் லட்சோப லட்சம் பெண்களின் ஆள்மனங்கள் புதைந்து கிடக்கும் ஆண்மேலாதிக்கத்தின் கால்களுக்குள் நசிந்து கிடக்கிறது.

இந்த முன்னேறிய நாடுகளில்கூட பெண்களின் ஆழுமைகள் பெருமளவில் வெளிப்பட்டாலும் கொடுப்பனவு இன்னும் ஆணுக்கு 50என்றால் பெண்ணுக்கு 40தான். அப்படியாயின் ஏன் தொழில் செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா ? சமவேலைக்குச் சம கொடுப்பனவு கேட்டு முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு பணியமனசு இடம்கொடுக்காது வேலைகளையும் பலர் இழந்துள்ளார் புரியுமோ ? Idea

தொழில் என்றால் என்னவும் செய்யலாமா என்றும் குருவிக்குஞ்சு கேக்குமெண்டும் தெரியும். நாங்கள் பணம் கறக்கும் , அல்லது பணம் சேர்க்கும் மனிதச்சதைகள் பற்றிப்பேசுவதை விட்டு யதார்த்தமாகப்பெண்ணின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து பேசி தீர்வு காணுதல் சாலப்பொருந்தும். :roll:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)