Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்கப்படாத சில கேள்விகளும் சொல்லப்படாத பல பதில்களும்
#1
கேட்கப்படாத சில கேள்விகளும் சொல்லப்படாத பல பதில்களும்.......

09.04.2004


கருணா விவகாரம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. கொழும்பு, இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் கருணா, வரதன் குழுவினர் இவ் ஊடகங்களுக்கு விருப்பமானவற்றையே பேசி வருவதையம் இவ் ஊடகங்களும் அப் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.


பிரச்சினையின் ஆரம்ப நாட்களில் ஒன்றிற்கு ஒன்று முரணானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கருத்துகளை ஊடகங்களில் அள்ளித் தெளித்து தமிழ் தேசியத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தேடத் தொடங்கிய கருணா தரப்பினர், சர்வதேச ஊடகங்களை அழைத்து வந்து ஆயுதக் கண்காட்சியையும் நடத்தினர். இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் பற்றிய பொய்யானதும் பக்க சார்பானதுமான கருத்துகளை வழங்கி வந்த இந்திய ஏடுகளும், ஐலண்ட் போன்ற சிங்கள இனவாத பத்திரிகைகளும் கருணா விவகாரத்தை தமக்குக் கிடைத்த ஓர் அதிஷ்டப் பரிசாகக் கருதி ஊதிப் பெரிதாக்கின.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு முரணாக பல பாரதூரமான குற்றச் சாட்டுகளுக்கு ஆளான கருணா, தனக்கான தண்டனையை முன்கூட்டியே ஊகித்து பல புதிய சோடினைக் கதைகளை ஊடகங்களுக்கு முன் வைத்ததுடன் தனது குற்றச் செயல்களை திசை திருப்புவதற்கும் மறைப்பதற்குமான ஒரு தந்திரமாக, மட்டுநகரை முதன்மைப் படுத்தி பிரதேச வாதத்தைத் தூண்டினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக தான் மேற்கொண்ட புதிய நிலைப்பாட்டை போராளிகளுக்கு முன் நியாயப்படுத்துவதற்காக தன்னை மட்டுநகர்ப் போராளிகளின் காவலனாகவும் மட்டுநகர் அபிவிரித்திக்காகவே தலைமையுடன் மோதவேண்டி வந்ததுபோலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார்.

கருணாவும் அவரது குழுவினரும் இதுவரை முன்வைத்துள்ள முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் பற்றி அவரைத் தாங்க முனையும் ஊடகங்களால் இதுவரை கேட்கப்படாத சில கேள்விகளையும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு கருணாவில் அளிக்கப்படாத பதில்கள் பற்றியமே இங்கு எழுத முற்படுகிறோம்.

கேள்வி 1 உங்கள் மீது முன் வைக்கப்;பட்டுள்ள பணமோசடி, பாலியற் குற்றச்சாட்டு போன்றவற்றிற்கான உங்களின் பதில் என்ன? இதுவரை போராளிகளான எங்களுக்கோ அல்லது மக்களுக்கோ நீங்கள் பதில் அளிக்காததன் மர்மம் என்ன?

கேள்வி 2 போராளி ரஞ்சன் கொல்லப்பட்டது எவ்வாறு? இதுவரை இதற்கு நீங்கள் பதிலளிக்காததன் மர்மம் என்ன?

கேள்வி 3 மட்டுநகர் அபிவிரித்தி என்றும் தமிழீழப் பொறுப்பாளர்களில் கிழக்கைக் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை என்றும், உங்கள் மீது பாரதூரமான குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் இந்நேரத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்குவது ஏன்? இருபது வருடங்களாக நீங்கள் இயக்கத்தில் இருந்தும்கூட இதுபற்றி முன்னர் எப்போதாவது கதைத்துள்ளீர்களா?

கேள்வி 4 நீங்கள் மீண்டும் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு முன் நிபந்தனையாக சில முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழேந்தி அண்ணன், பொட்டம்மான, நடேசன் அண்ணன் போன்றோரை இயக்கத்;திலிருந்து விலக்க வேண்டும் என்று கூறினீர்கள். மட்டுநகரை முன்நிலைப்படுத்தி, இயக்கத்தைவிட்டு விலகி தனித்தியங்குவதாக நீங்கள் முதலில் சொன்ன காரணங்களுக்கும் இயக்கத்திலிருந்து மேற்சொன்னவர்களை விலக்குமாறு கேட்பதற்குமான தர்க்க hPதியான தொடர்பு என்ன?

கேள்வி 5 பிரச்சினைகளைக் கதைப்பதற்கு ஏன் வன்னி செல்லவில்லை என ஒரு நிருபர் கேட்டதற்கு வன்னி சென்றால், பதுமனிற்கு நடந்தது போல நான் கைது செய்யப்பட்டிருப்பேன் என்று கூறினீர்கள். முன்பு அடிக்கடி எதுவித பயமுமின்றி மிடுக்காக வன்னி சென்று வந்த நீங்கள் இம்முறை கைது செய்யப்படலாம் என்று பயப்பட்டதற்கான காரணம் என்ன?

கேள்வி 6 முசலிம்கள் எமது சகோதரர்கள் என்றும் Õவன்னித் தலைமையின்Õ தூண்டுதலாலேயே இதுவரை அவர்களோடு முரண்படவேண்டி வந்தது என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் எங்களது அரசியல் வகுப்புகளில் நீங்கள் கதைத்ததெல்லாம் உண்மையில்லையா? ஹக்கீம் வெளிநாட்டிற்கு போனபோது இங்கு அவரது கதிரையைப் பிடுங்கி விட்டார்கள் என்று சொல்லி சிரித்தீர்;களே. அந்தச் சிரிப்பிற்கும்; Õவன்னித் தலைமையின்Õ தூண்டுதல்தான் காரணமா?

கேள்வி 7 உங்களது மனைவி பிள்ளைகள் எங்கே? அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு உங்களுக்கு உதவியவர்கள் யார்? அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?

கேள்வி 8 மட்டு அம்பாறை மாவட்டத்தில் இயக்கத்திற்காக உழைத்தவர்கள் பலர் இருக்க சத்தியமூர்த்திக்கு நீஙகள் முண்டு கொடுத்ததன் பின்னணி என்ன?

கேவ்வி 9 அண்மையில் கொல்லப்பட்ட சத்தியமூர்த்தியை மாவீரன் , மாமனிதர் என்றீர்களே? இதுவரை அவர் தேச விடுதலைக்காக ஆற்றிய பணி என்ன? மாமனிதராக அவரை பிரகடனப்படுத்துவதற்கு அவர் புரிந்த தியாகம் என்ன?

கேள்வி 10 விடுலைப் புலிகளோடு மட்டுமே முரண்பாடு. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் என்றீர்களே. உங்கள் அன்புக்குரியவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்ததோடு அவர்களை 500 ரூபா பணத்தோடு விரட்டியது ஏன்?

கேள்வி 11 புூபதி அம்மாவின் சமாதியில் சத்திய மூர்த்தியையும் அவரது உறவினைரையும் புதைத்தீர்களே, உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த மட்டுமண்ணின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?

கேள்வி 12 தலைவர் எனக்கு கடவுள் போன்றவர் என்று கூறினீர்களே. தலைவரின் படங்களை கிளிக்கச் சொன்னதும் நீங்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நடந்தவற்றிற்கும் நீங்கள் பொறுப்பில்லையா?

கேள்வி 13 வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உங்களுக்கு மிகுந்த வரவேற்பு அளித்ததாகக் கூறினீர்களே. உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் இன்னொரு முறை அங்கு சென்று அம் மக்களைச் சந்திக்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதா?

கேள்வி 14 உங்களை நம்பி பல பொறுப்புகளை எமது தேசியத் தலைவர்; ஒப்படைத்தாரே. இருபது வருடமாக உங்களை வளர்த்து விட்டவரை முதுகில குத்துவதுதான் உங்களது பண்பாடென்றால், இன்று உங்களை நம்பி நிற்கும் போராளிகளது முதுகில் குத்துவதற்கு உங்களுக்கு எத்தனை நாளாகும்?

கருணா அவர்களே, கேள்விகள் இன்னும் நிறையவே உள்ளன. உங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருக்கும் இந்நேரத்தில், தாக்குதல்களிலிருந்து தப்பியோடும் அவசரத்தில் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களுக்கு நேரமிருக்காது. எனினும் நீங்கள் எங்கு தப்பியோடினாலும் மட்டு மண்ணின் வரலாறு இக்கேள்விகளை திரும்ப திரும்ப உங்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வரலாற்றை விடுங்கள். உங்களுக்குள் இன்னும் மீதமாகியிருக்கும் மனச்சாட்சியின் மீதங்கள், இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களைக் கேள்வி கேட்கும்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எங்களுக்கு தெரிந்தவைதான். ஆனாலும் உங்கள் பதிலை அறியும் ஆவலிலேயே கேட்கிறோம்

கருணாவோடு துணைநின்று தேசியத்திற்கு துரோகம் புரியும் நண்பர்களே, முடிந்தால் இக் கேள்விகளுக்கு உங்கள் கருணாவிடம் பதில் பெற்றுச் சொல்லுங்கள்.


-போராளி அறிவொளி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)