Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
ஒரு காலத்தில் படையினர் முன்னேறுவது போன்று ஒரு படத்தைப் போட்டு ஜெயசிகுறு தொடர்கிறது என்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்செய்தி வெளியிடும்

அந்த ஞாபகம் தான் வருகிறது தமிழலையின்(பொய்ப்பிரச்சாரப்பதிப்பு)செய்தியைப் பார்க்கும் போது

வெருகல் பகுதியில் வன்னிக் கும்பலின் தாக்குதலை முறியடிக்க புதிய வியூகம். கிழக்கு விடுதலைப்புலிகள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.

வெருகல் பகுதியில் பிரபா கும்பலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்து தமது நிலைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கிழக்கு விடுதலைப்புலிகள் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பிரபா கும்ப லின் தாக்குதல் திட்டத்தை தோல் வியடையச்செய்யும் வகையில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள் ளதாக கிழக்கு விடுதலைப்புலிகள் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

வியாழன் நள்ளிரவு வெ ருகல் ஆற்றுப் பகுதியில் திரும லை மாவட்ட தளபதி சொர்ணம் தலைமையில் தாக்குதல் அணி ஊடுருவி கிழக்கு விடுதலைப்புலி கள் மீது தாக்குதல் நடத்தியதைய டுத்து இருதரப்பிற்கும் இடையில் சண்டை இடம்பெற்றுள்ளது.

இந்த முறியடிப்புச்சமரில் சிக்கி நான்கு போராளிகள் வீரச்சா வைத் தழுவிக் கொண்டனர் மற் றும் பதின்மூன்று போராளிகள் கா யமடைந்து மட்டக்களப்பு, வாழைச் சேனை வைத்தியசாலைகளில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் மரியதாஸ், தர்மரெத்தினம், தனபாலசிங்கம், பாலசிங்கம், சசிதரன், உகிர் ம லையவன் ஆகியோரும், மட்டக்க ளப்பு வைத்தியசாலையில் வெல் லாவளியைச்சேர்ந்த பாரதிராஜ், பழுகாமம்-சத்தியன், கிரான்-சசிகர ன், கன்னன்குடா-தமிழ்மிஷா, அர சடித்தீவு - அகவல்லி, கொக்கட்டிச் சோலை - அந்தியா மற்றும் து}ய மதி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந் தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இரு வைத் தியசாலைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
\" \"
Reply
Sri Lanka 's president names herself defense minister as coalition partner boycotts Cabinet oath-taking ceremony

Associated Press, Sat April 10, 2004 11:30 EDT . KRISHAN FRANCIS - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lanka - 's president on Saturday named herself minister of defense while her key coalition partner boycotted the swearing-in ceremony for 31 members of the proposed 35-member Cabinet. Sri Lanka - 's presidents often take top Cabinet positions in an effort to consolidate power. Kumaratunga naming herself as defense minister is in line with her criticism that the former government of Prime Minister Ranil Wickremesinghe was too soft on Tamil Tiger rebels.
Lakshman Kadirgamar a hard-liner against the separatist rebels was sworn is as foreign minister.

Kadirgamar, who lost a battle for the seat of prime minister earlier this week to Mahinda Rajapakse, was also handed the transportation ministry on Saturday.

The new government is scheduled to go before Parliament for its first session on April 22.

Kumaratunga's family has a long history of rule on this island nation off the southern tip of India. Her father was once prime minister and her mother became the world's first woman prime minister in 1960, taking the post after her husband was assassinated.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka East on Edge After Rebel Factions Clash

Sat Apr 10, 2004 01:25 PM ET

By Lindsay Beck

COLOMBO (Reuters) - Sri Lanka's east remained volatile on Saturday with unconfirmed reports of fresh clashes between rival Tamil Tiger factions, a day after the worst fighting since a two-year truce halted the island's civil war.

Officials said the death toll in Friday's violence could be triple initial reports, and thousands of frightened civilians were holed up in schools after fleeing the clashes the government said were a violation of the February 2002 cease-fire.

"Fighting began again a short while ago about 16 km north of Valaichchenai," said Agnes Bragadottir, spokeswoman for the Sri Lanka Monitoring Mission, referring to a town in the eastern district of Batticaloa, about 220 km east of Colombo.

But an army official in Valaichchenai said he could not confirm the report.

"We can't give a strong no, but we don't hear any firing or see anything unusual," he said.

Military spokesman Colonel Sumedha Perera said the area had been calm overnight but that thousands of civilians had crossed into government-controlled areas, including about 350 children under five.

Reports on Friday said eight fighters and an ambulance driver had died in the clashes, but a spokesman for breakaway eastern commander Karuna said there were 10 dead on their side and officials said the main Tiger group could have lost 15-20.

Karuna -- the nom de guerre for eastern rebel commander V. Muralitharan -- broke from the Tigers in early March with about 6,000 of their 15,000 troops.

"That party launched the attack," Karuna's spokesman, Varathan, told Reuters, referring to the northern-based Liberation Tigers of Tamil Eelam (LTTE).

"We have recovered 10 dead bodies, but we have no idea of the casualties on their side. We are re-organizing our teams."

Military sources said Karuna's group had retreated south of a major east-west road controlled by the government leaving the northern troops on the other side -- a worry for the army, which does not want to get caught up in the conflict.

The main LTTE group does not take its wounded to hospitals in government areas, so officials said there was no firm estimate as to the number of casualties but from the types of heavy weapons fire exchanged they could be high.

"TRUCE VIOLATION"

A Defense Ministry statement said only that there had been "several casualties."

It added that, although the fighting had not drawn in government forces, it considered the clashes to be a violation of the Norwegian-brokered truce that has given the island its best chance to end the 20-year separatist war.

"It is intended to inform the Norwegian facilitators to convey to the LTTE that this is a violation of the cease-fire agreement," the statement said.

The president was scheduled to meet the Norwegian ambassador late on Saturday to discuss the situation that complicates her newly elected government's efforts to revive peace talks, on hold now since April 2003.

President Chandrika Kumaratunga told Secretary of State Colin Powell she would move to restart talks after next week's local New Year holidays and would not let the split in the Tigers stand in the way, but it is difficult to see how that would work in practice.

The Tigers consider themselves the sole representatives of the Tamil people and when Karuna broke away it was a major blow to their internal discipline.

The Tigers, who have been fighting for a separate Tamil state, are known to brook no dissent and have vowed to "get rid of Karuna from our soil."

Kumaratunga, an arch-foe of the Tigers whom they tried to kill in a 1999 suicide bomb attack, was expected to retain the defense portfolio when the island's new cabinet is sworn in later on Saturday.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE forces move into Vakarai

[TamilNet, April 10, 2004 16:22 GMT]

The Liberation Tigers took control of Vakarai, the main village south of the Verugal River, Saturday afternoon. There was no resistance from the Karuna Group when troops of the LTTEs Jeyanthan Brigade entered the village, 62 kilometres north of Batticaloa, sources in the area said. LTTE infantry units are consolidating positions in Vakarai and its southern environs close to the Panichchankerni Causeway.

Civilians who fled the area due to the military operations have begun to return, LTTE sources in the east said.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நேற்று மட்டும் 820 போராளிகள் தலைமைப்பீடத்திடம் சரன்?

ஜ கனடாவிலிருந்து கோபு ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்பிரல் 2004, 2:36 ஈழம் ஸ

நேற்று இடம்பெற்ற வாகரை மீட்பு நடவடிக்கையின் போது பெருமளவிலான போராளிகள் சரனடைந்துள்ளதாக களத்திற்கு சென்று திரும்பிய நிருபர் ஒருவர் ஐரோப்பிய வானொலி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை வாழைச்சேனைப் பகுதியில் சண்டைகள் ஆரம்பித்ததாகத் தெரிவித்த மேற்படி செய்தியாளர் நேற்றைய வாகரை மீட்புத் தாக்குதலில் சிறியளவு உயிரிழப்பே ஏற்பட்டது எனவும் உயிரிழப்புக்கள் பாரிய அளவில் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலே இந்தச் சண்டை முன்னெடுக்கப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எத்தனை பேர் சரனடைந்தார்கள் என்பதைப் பற்றிய செய்திகள் எதையும் விடுதலைப்புலிகள் வெளியிடாத போதும், போராளிகள் பறிமாறிக் கொண்ட தகவல்களின் படி, சுமார் 300 பெண் போராளிகள் உட்பட 820 போராளிகள் நேற்றுச் சரனடைந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.

Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புலிகள் மோதல் எதிரொலி: மீண்டும் அகதிகள் ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்:

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கருணாவின் படையினருக்கும் இடையே வெடித்துள்ள பயங்கர மோதலையடுத்து தமிழர்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர்.


இலங்கையில், சிறிது காலம் அமைதி நிலவி வந்தது. புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் சுமூக நிலை நிலவியது. இதையடுத்து தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகளில் பலர் மீண்டும் தாயகம் திரும்பிச் சென்றனர்.

இந் நிலையில் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டு கருணா தலைமையிலான படை மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதால் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அங்கிருந்து பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.

அவர்களில் சிலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 10 பேர் ராமேஸ்வரம் வந்துள்ளனர். தலா ரூ. 6,000 படகுக் கட்டணமாக கொடுத்து அவர்கள் தப்பி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Thanx: ThatsTamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ம் ஏன் வேறு இடங்கள் இல்லை

தூற்றுவதும் அவர்களைத்தான் தஞ்சம் கோருவதும் அவர்களைத்தான்
அப்படி அகதிகளாக இடம்பெயர்ந்திருப்பவர்கள் கருணாவின் குழுக்களாகத்தான்கட்டாயம் இருப்பார்கள். இது உள்வீட்டு யுத்தம் அதற்காக ஏன் அண்டை நாட்டுக்கு ஓட வேண்டும்
[b] ?
Reply
சிங்கள நாடும் அண்டைநாடுதான்.அதுக்கு உங்கள் விட்டுக்காக வர இயலும். முடிந்தால் சண்டை நடக்குமிடத்துக்கு போயிருங்களேன்.
Reply
ஆள் இல்லாமல் கருணா திண்டாட்டம்: இலங்கை அகதிகள் தகவல்

ராமேஸ்வரம்:

பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதற்கு ஆட்கள் இல்லாமல் கருணா திண்டாடுவதாக இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கருணா தலைமையிலான படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். சிலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

பாம்பன் பகுதியில் 2 இளைஞர்கள் இலங்கை ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பிரதீபன் (வவுனியாவைச் சேர்ந்தவர்), கனகேஸ்வர் (கிளிநொச்சியைச் சேர்ந்தவர்) என்பது தெரியவந்தது.

இருவரும் போலீஸாரிடம் கூறுகையில், இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெரும் மோதல் வெடித்துள்ளது.இதனால் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

கருணா படையினரிடம் போதுமான ஆட்கள் இல்லை. இதனால், தமிழ் இளைஞர்களை கட்டாயப்படுத்தி தங்களது படையில் சேர்க்கிறார்கள். எங்களது பெற்றோர்களை மிரட்டி பிள்ளைகளை உடனடியாக படையில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதற்குப் பயந்துதான் பல தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன. திரிகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு தமிழர் குடும்பங்கள் இடம் மாறிக் கொண்டுள்ளன.

தமிழகத்திற்கு வர பல தமிழ்க் குடும்பங்கள் காத்துக் கொண்டுள்ளன. ஆனால் போதிய பணம் இல்லாததால் அவர்களால் தப்பி வர முடியவில்லை என்றனர். இரு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

thatstamil.com
Reply
LTTE forces move into Amparai, Batticaloa south

[TamilNet, April 11, 2004 04:44 GMT]

The Liberation Tigers took control of the areas held by the Karuna Group in the Amparai District on Saturday night. Troops led by the LTTE's Amparai district military commander, 'Janarthan', moved into the main base areas in Kanjikudichcha Aaru region, about 96 kilometres south of Batticaloa, from Saturday evening, sources said. Meanwhile, advance commando teams of the LTTE moved into the southwestern sector of the Batticaloa district and began consolidating strategic positions there since Saturday morning.
A few Karuna Group cadres who were in the Thirukkovil and Akkaraipattu areas on the southeastern coast of the Amparai district left the region without offering any resistance, LTTE sources in the east said.

Troops under the LTTE commander 'Janarthan' are urging scattered remnants of the Karuna Group in the district to surrender to them since Sunday morning, according to the sources.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
குடாநாட்டில் இராணுவத்தின் சிறப்பு உளவுப்படை ~சிலந்தி|


இரகசியமாக நகர்ந்து இரையை நெருங்கி அதன் பலம், பலவீனத்தைக் கணிப்பிட்டதும் அதிவேகமாகப் பாய்ந்து வந்து தாக்கி விஷத்தைக் கக்கி எதிரியை அழிக்கும் பாணி சிலந்திக்குரியது.

இதே சிலந்தியின் இயல்புகளைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றைத் தோற்றுவிக்கும் நடவடிக்கையில் அரச படையினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது புதிய செய்தி. 'சிலந்தி" என்ற பெயரில் இராணுவத்தின் உளவுப்பிரிவைச் சேர்ந்தோருக்குப் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கை தற்போது தீவிரமாக்கப்பட்டிருக்கிறது.

யாழ். குடாநாட்டுக்கான இராணுவக்கட்டளை அதிகாரி மேஐர் nஐனரல் சுசில் சந்திரபாலவின் வழிகாட்டலின்கீழ் இராணுவத்தின் உளவுப்பிரிவினர்களுக்கு சிலந்தி எனப்படும் விசேட புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பயிற்சியை ஏற்கனவே நான்கு குழுவினர் முடித்துள்ளனர். ஆனால் அது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியில் கசியவில்லை. இப்போது ஐந்தாவது குழு பயிற்சியை முடித்து வெளிவந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே இது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

பயிற்சியை முடித்த ஐந்தாவது அணியில் 34 படையினர் இருந்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு வைபவம் கடந்த 31ஆம் திகதி பலாலியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மேஐர் nஐனரல் சுசில் சந்திரபால பயிற்சியை முடித்த படையினருக்கு சின்னங்களைச் சூட்டியதுடன் சிறப்பாகப் பயிற்சிகளை முடித்த லான்ஸ் கோப்ரல் ரணசிங்கவுக்கு கேடயத்தையும் வழங்கியிருந்தார்.

~சிலந்த| என்ற இந்தப் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? விசேட யுத்தப் புலனாய்வுப் பாதுகாப்புத் திட்டம் என்ற இத்திட்டத்திற்கே சிலந்தி என பெயரிடப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நவீன போர் உத்திகளுக்கு ஏற்ப சுயமாகச் செயற்பட்டு எதிரிகளைத் தாக்கி அழித்தல் இதுவே இந்தத்திட்டத்தின் அடிப்படை அம்சமாகும்.

சுயமாக இலக்குகளை கண்டறிந்து மிகக் குறைந்த வளத்துடன் அந்த எதிரி இலக்குகளை அழிப்பதற்கு சாதாரணமான பயிற்சி, நுண்ணறிவு என்பன போதாது.

ஒரு பெரும் படைப்பிரிவு என்றால் மரபு வழி யுத்தத்திலோ, கெரில்லா யுத்தத்திலோ பல பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். ஒரு பற்றாலியனில் உளவுத் தகவல்களைத் திரட்ட, திட்டமிடலை மேற்கொள்ள வழி நடத்த என பல பிரிவுகள் உள்ளடக்கப்படும்.

இவ்வாறு பெரும் படைப் பிரிவுகளை மரபு வழியுத்தத்தங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். யாழ். குடாநாடு போன்ற போர் முனைகளில் புலனாய்வுப் பிரிவு தகவல்களைத் திரட்டி திட்டமிடல் பிரிவுக்கு அதைச் சமர்ப்பித்த பின்னர் தாக்குதல் நடத்துவதென்பது கால தாமதத்தை மட்டு மன்றி நடமாடும் இலக்குகளைத் தவறவிட்டு விட கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தும்.

இதனால் யாழ்ப்பாணம் போன்ற சிக்கல் நிறைந்த பகுதிகளில் புத்திக்கூர்மையுடன் செயற்பட்டு முடிவெடுத்து தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை பெற்றவர்களை உதிரிகளாக நடமாட விடுவதே பொருத்தமானது எனப் படைத்தரப்பு இனம் கண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இதே பாணியைத்தான் கடந்த பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் கொழும்பிலும் புலிகளின் ~பிஸ்டல்| அணிகளின் செயற்பாடுகள் பற்றி அறியப்பட்டிருக்கின்றன.

தனித்தனி, இலக்குகளைத் தேடி புலனாய்வுத் தகவல்களைத் திரட்டி சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதைத் தாக்கி அழித்துவிட்டு வேகமாகத் தப்பி விடுவதுதான் புலிகளின் பிஸ்டல் குழுக்களின் தாக்குதல் பணியாகும்.

இதே தாக்குதல் முறைக்கான பயிற்சிகளைத்தான் இராணுவத்தரப்பு இப்போது ஆரம்பித்திருக்கின்றது. புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவது, திட்டமிட்டு அந்த எதிரி இலக்கை அழிப்பது என்பவற்றுக்குத் தேவையான அறிவையும், பயிற்சியையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் வட பகுதி இராணுவத்தலைமை இறங்கியிருக்கிறது.

50 நாட்களாக இரவு-பகல் குடாநாட்டில் பல்வேறு இடங்களிலும் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. புலனாய்வுப் படைப் பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு என்பன இந்தப் பயிற்சிகளை அடிப்படை உதவிகளை வழங்கி­யிருக்கின்றன.

ஏற்கனவே இராணுவத்தின் உளவுப்பிரிவின் ஒரு பற்றாலியன் குடாநாட்டில் நிலை கொண்டிருக்கின்ற போதும் அதற்கு மேலதிகமாக சுமார் 175 படை­யினரை புல­னாய்வு மற்றும் தாக்குதல் நடவடிக்கைக் காக தயார் படுத்­தியிருக்கிறது படைத் தரப்பு.

எதிர்காலத்தில் மோதல்கள் ஏற்படுகின்ற போது இந்த அணிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று படைத்தரப்பு எதிர்பார்ப்புடன் இரகசியமாகச் செயற்படும் புலிகளை நசுக்கவும் இது பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தாலும் குடாநாட்டில் நிலை கொண்டிருக்கும் படையினரை ஒரு முழு அளவிலான போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

இராணுவத்தை எப்போதும் தாக்குதல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையை தற்போது தொண்டர் படைகளின் தளபதியாக இருக்கும் மேஐர் சரத் பொன்சேகா கொண்டுள்ளார்.

இவர் எந்தவொரு இராணுவ நிலையும் விலக்கப்படக்கூடாதென்பதிலும், இராணுவத்தினருக்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறார்.

மேஐர் nஐனரல் சரத் பொன்சேகா குடாநட்டுக்கான படைத்தளபதியாக இருந்தபோது படையினருக்கான விசேட காலாற்படைப் பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தவர். நான்கு கட்ட பயிற்சிகள் இதுவரை முடிவடைந்திருக்கின்றன.

அதுபோன்றே கவச மீட்பு கவச வாகனங்களைச் செலுத்தும் படைப்பிரிவு ஒன்றும் அண்மையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவையெல்லாம் சமாதான காலத்தில் இராணுவத்தினர் தம்மைத் தயார்ப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.

எதிர்கால நடவடிக்கைகளுக்காக படையினர் மேற்கொண்டுவரும் இத்தகைய தயாரிப்புக்கள் யாவுமே ஒரு போர் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் இராணுவத்தினர் ஒரு முழுமையான போர்த் தயாரிப்பு நிலையில் இருக்கின்றனர். ஆங்காங்கே வீதிச் சோதனைகள், காவலரண் புனரமைப்புக்கள் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய அரசின் நிலைப்பாடு, சமாதான முயற்சிகளில் அது காட்டவிருக்கும் அக்கறை என்பன இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய அரசு புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றபோதும், அதற்கான முன் முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரக Nஐ.வி.பி.யின் துணையுடன் நிறுவப்பட்டிருப்பதால் புலிகளுடனான சமாதானப் பேச்சு உடனடியாக ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் வெளிநாட்டு அழுத்தங்கள் பேச்சை ஆரம்பிக்குமாறு அரசுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன இத்தகைய நிலையில் அரசு எடுக்கும் முடிவுகள் நிரந்தர சமாதானத்துக்காக அமையுமா? சண்டைக்கான வழியா? என்பதைத் தீர்மானிக்கும்.

virakesari + tamilnaatham
Reply
கருணாவை தனிமைப்படுத்தும் புலிகளின் தாக்குதல் ஆரம்பம்!

அனைவரும் எதிர்பார்த்தது போன்று கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்துவிட்டனர். திருகோணமலைக்கு அப்பால் கருணாவின் கட்டுப்பாட்டி ல் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பிட்டளவு பகுதியை விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கருணாவின் பகுதிகளைநோக்கித் தொடர்ந்தும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.


விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகி சுமார் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் கருணாவுக்கு எதிராக இந்தத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். கருணா விலகிய ஓரிரு நாட்களுக்குள்ளேயே கருணாவுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எவ்வேளையிலும் பாரிய தாக்குதல்களை தொடுப்பார்களென பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்தபோதிலும், புலிகள் உடனடி யாக எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை.

கிழக்கில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தவும், கருணாவுடன் இருக்கும் போராளிகளை அவரிடமிருந்து விடுவிக்கவும் விடுதலைப் புலிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததுடன், தலைமைக்கு எதிரான கருணாவின் புரட்சியின் பின்னர் அவரது பலம் மற்றும் பலவீனத்தை மிகத் துல்லியமாக அறியும் நடவடி க்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

கருணாவுக்கு விசுவாசமாக இருக்கும் பொறுப்பாளர்கள் யார், கருணா குழுவில் இருந்து விலகிச் செல்லவிரும்பும் போராளிகள் யார் என்ற தகவலை எல்லாம் இந்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் மிகவும் துல்லியமாகத் திரட்டி யதுடன், கருணாவின் நடமாட்டங்கள் குறித்தும், கருணா குழுவினருக்கு எதிராகத் தாங்கள் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கும் பட்சத்தில் கருணா குழுவினர் எவ்வாறு பதில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் விடுதலைப் புலிகள் ஆராய்ந்து வந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டி லேயே இருந்து வந்தது. புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட பின்பும் இதே நிலைமையே அங்கு இருந்தது. திருகோணமலை மாவட்டத்தையும், மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரிக்கும் மிகவும் குறுகலான தரைவழிப் பாதை வெருகல் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலும் இரு மாவட்டங்களையும் ஆறு ஒன்று பிரிக்கின்றது.

ஆற்றின் வடபுறக் கரையில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லையில் விடுதலைப் புலிகளும், ஆற்றின் தென்புறக் கரையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் கருணா குழுவினரும் நிலைகொண்டிருந்தனர். கருணாவுக்கு எதிராக உடனடி யாக புலிகள் தாக்குதல்களை ஆரம்பிக்கலாமென எதிர்பார்த்து கருணா குழுவினர் ஆற்றின் தென்புறக் கரையில் பாரிய பதுங்கு குழிகளை அமைத்து வலுவான காவலரண்களுடன் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி 24 மணிநேரமும் மிகுந்த உர்hர் நிலையில் முன்னரங்க நிலைகளில் போராளிகளை நிறுத்தியிருந்தனர்.



கருணா குழுவினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் உடனடியாகத் தாக்குதலை ஆரம்பிக்காத அதேநேரம், தேர்தலின்போது அல்லது தேர்தல் முடி வடைந்ததும் இந்தத் தாக்குதல் எவ்வேளையிலும் ஆரம்பமாகலாம் என்ற ஊகங்கள் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருந்தது. அதேபோன்று தேர்தல் முடி வடைந்து ஒருவாரத்திற்குள் கருணா குழுவினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தங்கள் நிலைகளை தாக்கி அழித்துக்கொண்டே விடுதலைப் புலிகள் முன்னேற முயல்வார்களென கருணா குழுவினர் எதிர்பார்த்துக் காத்திருந்ததுடன், அவ்வாறானதொரு தாக்குதலை புலிகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் பதில் தாக்குதல் தொடுக்கும் வகையில் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை அமைத்து முழு ஏற்பாட்டுடனும் காத்திருந்தனர்.

கடந்த சில தினங்களாக வெருகல் ஆற்றின் வடபுறத்தே விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்தப் பகுதியிலேயே அவர்கள் தாக்குதல்களை ஆரம்பிக்கலாமென்ற எதிர்பார்ப்பை கருணா குழுவினருக்கு ஏற்படுத்தவே. அதற்கேற்ப கருணா குழுவினரும் தங்கள் எதிர்த் தாக்குதல்களுக்கான விய10கங்களை வகுத்துக் காத்திருந்தனர்.

ஆனாலும், வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வெருகலுக்கு தெற்கே கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள கதிரவெளிக்கும், வாகரைக்கும் இடையே இருக்கும் கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் சுமார் 50 படகுகளில் அடுத்தடுத்து வந்து தரையிறங்கிய புலிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலைகொண்டதுடன், கருணா அணியினருக்கு எதிராக, வடபுறத்தே வெருகல் நோக்கியும், தென்புறத்தே வாகரை நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தனர்.

வெருகல் ஆற்றின் தென்பகுதியில் நிலைகொண்டி ருந்த கருணா குழுவினரை மையமாக வைத்தே இந்தப் பாரிய தாக்குதல் ஆரம்பமானது. அதேநேரம், கருணா குழுவினருக்கு தரைவழிய10டாக உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் பால்ச்சேனைப் பகுதியில் இருந்து புலிகளின் மற்றொரு பாரிய அணியொன்று கண்டலடிப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதிநோக்கி முன்னேறத் தொடங்கியது.

தங்களுக்குப் பின்புறமாக புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்ததை உணர்ந்துகொண்ட கருணா குழுவினர் பின்புறத்தால் தங்களை நோக்கி முன்னேறிவரும் புலிகளின் படையணிக்கு எதிராக எவ்வாறு தாக்குதல் தொடுப்பதென்று குழப்பமடைந்துபோயிருந்த வேளையில், ஆற்றின் வடபுறத்தே திருகோணமலையின் எல்லைப் பகுதியில் இருந்தும் புலிகளின் படையணி கருணா குழுவினர் மீது ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலை சரமாரியாக மேற்கொண்டது.

பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி, வெருகல் ஆற்றைநோக்கி முன்னேறத் தொடங்கிய புலிகள் நீண்டதூரம் செல்லும் மோட்டார்கள் மூலம் மிகக் கடும் தாக்குதலைத் தொடுக்கவே இருதரப்பிற்கும் இடையே சிலமணிநேரம் கடுமையான பீரங்கிச் சமர் நடைபெற்றது. ஆனாலும், வெருகலாற்றின் தென்புறக் கரையில் இருந்த கருணா குழுவினர் மீது திருகோணமலை எல்லைப் பகுதியில் இருந்தும், பால்ச்சேனைப் பகுதியில் இருந்தும் முன்னேறத் தொடங்கிய புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கவே கருணா குழுவினர் நிலை தடுமாறி அங்கிருந்து தப்பியோடத் தொடங்கினர்.

இதேவேளை, வெருகலாற்றின் தென்புறக் கரையில் நிலைகொண்டி ருந்த கருணா குழுவினருக்கு மேலதிக ஆட்களை வழங்குவதற்காக கதிரவெளிப் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பெருமளவு போராளிகள் வெருகலாற்றின் தென்பகுதிநோக்கியும், பால்ச்சேனைப் பகுதியில் இருந்து முன்னேறிக்கொண்டி ருக்கும் புலிகளின் படையணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுக்கவும் அனுப்பப்பட்டனர்.

ஆனாலும், சண்டை மூண்டு சிலமணிநேரத்திற்குள், தாக்குதலுக்குத் தலைமைவகித்து தங்களைநோக்கி முன்னேறி வந்துகொண்டி ருந்த புலிகளின் பொறுப்பாளர்களை இனங்கண்ட கருணா குழுவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலரும், நூற்றுக்கான போராளிகளும் தமது நிலைமையைத் தெரியப்படுத்தி விடுதலைப் புலிகளுடன் சென்று இணைந்துகொண்டனர்.

முன்னேறிக்கொண்டிருக்கும் புலிகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை நடத்த அனுப்பப்பட்ட போராளிகளில் 400 இற்கும் மேற்பட்டோர் புலிகளுடன் இணைந்து விடவே கருணா குழுவினர் நிலைதடுமாறிப் போய்விட்டனர். பதில் தாக்குதலைத் தொடுக்கச் சென்றவர்களே தங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதை உணர்ந்துகொண்ட கருணா குழுவினர் காடுகளுக்கூ டாகத் தப்பியோடத் தொடங்கிவிட்டனர்.

வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல், வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக தனது மூத்த சகோதரரான ரெஜியையே கருணா நியமித்திருந்தார். வெருகலாற்றினூடாக புலிகள் ஊடறுத்து மட்டக்களப்புக்குள் நுழைவதைத் தடுப்பதில்தான் தங்களின் பாதுகாப்பு தங்கியிருப்பதை உணர்ந்துகொண்டே அப்பகுதிக்கான பொறுப்பாளராக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சகோதரருமான ரெஜியை கருணா நியமித்திருந்தார்.

ஆனாலும், புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகி சிலமணிநேரத்தில் நிலைமைகள் தலைகீழாகிவிடவே, ரெஜி அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று, வாகரையை அடைந்ததுடன், அங்கிருந்து தொலைத்தொடர்புக் கருவிகள் மூ லம் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்தார். ஆனாலும், அவரது கட்டளையை ஏற்றுக்கொள்ளாத பொறுப்பாளர்களும் போராளிகளும் புலிகளுடன் சென்று இணைவதிலும் தப்பிச் செல்வதிலுமே முனைப்புக் காட்டினர்.

அதிகாலை 1 மணிமுதல் மூ ன்றுமணிவரை விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்து முன்னேறிச் சென்று கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், வெருகல் ஆற்றின் தென்பகுதிக் கரையில் நிலைகொண்டிருந்த கருணா குழுவினரையும் அங்கிருந்து விரட்டி யடிக்கவே பால்ச்சேனை முதல், திருகோணமலை எல்லைப்புறம் வரையிலான சுமார் 24 கிலோமீற்றர் தூரம் வரையான பகுதி அதிகாலை நான்கு மணிக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதேவேளை கருணா குழுவினரால், போரிடுவதற்காக, வலுக்கட்டாயமாக எல்லைப்புறப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டி ருந்த போராளிகளுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் விடுதலைப் புலிகள் மிகக் கவனமாகவும் நிதானமாகவும், தாக்குதலை நடத்தி இதேபோன்றே, கருணா குழுவினரால் சண்டைக்காக நிறுத்தப்பட்ட போராளிகளில் பெருமளவானோர் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துவதைத் தவிர்த்து, புலிகளுடன் சென்று இணைந்துகொண்டனர்.

இந்தச் சமரில் காயமடைந்த கருணா தரப்பினரில் பலருக்கு முழங்காலுக்குக் கீழேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கதிரவெளி கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்த கருணா குழுவைச் சேர்ந்த ஜெயம் என்பவரே படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள் கதிரவெளியில் உள்ள கருணா குழுவினரின் கடற்படை முகாமையும், அதற்குச் சமீபமாக இருந்த ஆட்லறித் தளங்களையும் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களைக் கைது செய்ததுடன், அந்தத் தளங்களை உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் களமுனையில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை, விடுதலைப் புலிகள் கதிரவெளிவரை முன்னேறி அப்பிரதேசங்களைக் கைப்பற்றி வெருகலாற்றுக்கு வடக்கே நிலைகொண்டி ருந்த தங்கள் அணியுடன் இணைந்துகொண்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் மற்றைய அணிகள் பால்ச்சேனையில் இருந்து தென்புறமாக வாகரை நோக்கி முன்னேறத் தொடங்கின. வெருகலாற்றின் தென்புறப் பகுதியில் தங்கள் நிலைகளைத் தகர்த்துக்கொண்டு புலிகளால் முன்னேற முடியாதெனக் கருணா குழுவினர் எண்ணியிருந்த போதிலும், நிலைமை தலைகீழாகிவிடவே, வாகரை நோக்கி முன்னேறும் புலிகளைத் தடுத்து நிறுத்த கருணா குழுவினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக வாழைச்சேனை மற்றும் மாங்கேணிப் பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஆட்களை கருணா குழுவினர் வாகரைநோக்கி அனுப்பத் தொடங்கினர். மகளிர் படையணித் தளபதியான சாவித்திரியின் தலைமையில், மதனன் படையணியைச் சேர்ந்த 300 பேரும், சம்பந்தன் தலைமையில் விசாலன் 2 ஆவது படையணியைச் சேர்ந்த 100 பேரும், அகிலன் தலைமையில் வினோதன் படையணியைச் சேர்ந்த 100 பேரும் வாகரைப் பகுதிநோக்கி அனுப்பப்பட்டனர்.

இவர்களுக்கு உதவியாக சினைப்பர் படையணியும், மோட்டார் தாக்குதல் அணிகளும் அனுப்பப்பட்டு நண்பகல் அளவில் கடும் எதிர்த் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், புலிகளின் உக்கிர தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது இவர்கள் பின்வாங்கித் தப்பிச் சென்றுவிட்டனர். வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் வாகரைப் பகுதியை அண்மித்தபோது அப்பகுதியில் கருணா குழுவைச் சேர்ந்த பெருமளவு சிறுவர்களே நின்றதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடி யாத நிலையில் கருணா குழுவினர் தொடர்ந்தும் பின்வாங்கவே வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் வாகரைப் பிரதேசத்தையும் தங்கள் ப10ரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தொடர்ந்தும் அங்கிருந்து முன்னேறத் தொடங்கினர்.

நேற்றுச் சனிக்கிழமை காலை விடுதலைப் புலிகள், ஏற்கனவே தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருவதுடன், பனிச்சங்கேணியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையில் கருணா குழுவினர் வாழைச்சேனைக்கு வடக்கே முக்கிய பிரதேசங்கள் எல்லாவற்றிலும் இருந்து வெள்ளிக்கிழமை மாலையே பின்வாங்கிவிட்டதாகவும், வெள்ளிக்கிழமை இரவுக்குப் பின்னர் வாழைச்சேனைக்குத் தெற்கே முக்கிய நிலைகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் முதல் கட்டத் தாக்குதல் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிýவடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இந்தத் தாக்குதல் மூýலம் விடுதலைப் புலிகள் கருணா குழுவினரின் பிடிýயிலிருந்து சுமார் 45 கிலோமீற்றர் வரையிலான பிரதேசத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் பகுதிகளை நோக்கித் தொடர்ந்தும் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும் அதேவேளை, வாழைச்சேனைப் பகுதியை ஊடறுத்து வெலிக்கந்தை ஊடாகச் செல்லும் மட்டக்களப்பு - பொலனறுவை வீதி இரானுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. தற்போது வீதிக்கு வடக்கே விடுதலைப் புலிகளும், தெற்கே கருணா குழுவினரும் நிலைகொண்டுள்ள அதேநேரம், வீதியில் இரானுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் முன்னேற முயலும் விடுதலைப் புலிகள் மீது கருணா குழுவினர் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் வீதியில் நிலைகொண்டுள்ள இரானுவத்தினர் இந்தத் தாக்குதலில் சிக்கவேண்டிýய கட்டாய சூýழ்நிலை ஏற்படும். இதேநேரம், இந்த வீதியை ஊடறுத்து விடுதலைப் புலிகள் கருணா குழுவினரின் பகுதிக்குள் செல்வதற்கு தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் இரானுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா விலகிய நாள்முதல் கருணாவின் நடவடிýக்கைகளுக்கு இரானுவப் புலனாய்வுத் துறை ப10ரண ஆதரவை வழங்கிவருவதுடன் இரானுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகலவும் கருணாவுடன் பலதடவைகள் தொடர்புகொண்டிýருந்தார். மோதல் வெடிýக்கும் பட்சத்தில் கருணா குழுவினருக்குப் படையினரின் ப10ரண ஆதரவு கிடைக்குமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வீதியைத் தாண்டிýச் செல்ல தாங்கள் விடுதலைப் புலிகளை அனுமதிக்கப் போவதில்லை எனப் படையினர் கூýறியுள்ளனர்.

ஆனாலும் படையினருடன் எவ்வித முரண்பாடுகளையும் ஏற்படுத்தாமல் இந்த வீதியைத் தாண்டும் மார்க்கங்களை விடுதலைப் புலிகள் நன்கு அறிந்துள்ளதைக் கருணா குழுவினரும் நன்கு அறிந்துள்ளனர். இதையடுத்தே இந்த வீதிக்குத் தெற்கே முக்கிய பகுதிகளில் நிலைகொண்டிýருந்த கருணா குழுவினர் அங்கிருந்து விலகி அம்பாறையில் தொப்பிகல மற்றும் கஞ்சிகுடிýச்சாறு காட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாக இரானுவப் புலனாய்வுப் பிரிவினரின் மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது.

கருணாவை தனிமைப்படுத்தும் அதேவேளை, அவருடன் இருக்கும் போராளிகளைப் பாதுகாப்பாக மீட்பதும் தங்களது முக்கிய குறிக்கோளென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதால் மோதல்கள் மீண்டும் வெடிýக்கும் பட்சத்தில் தனது தரப்பைச் சேர்ந்த மேலும் நூற்றுக் கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்துவிடலாமென்ற அச்சத்தில் மோதலைத் தவிர்த்துத் தங்கள் தரப்பினரை முக்கிய நிலைகளில் இருந்து கருணா திருப்பி அழைத்துள்ளதாகவும் கூýறப்படுகிறது.

கருணா குழுவுடன் இருக்கும் போராளிகள் 50 வீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்போராளிகள் என்பதுடன், ஆண் போராளிகளில் பெருமளவானோர் 13 வயதிற்கும் குறைவானவர்களே என்றும் தெரிவிக்கப்படுகிறது. வாகரைப் பகுதியில் அணி அணியாக வந்த விடுதலைப் புலிகளின் கட்டுமஸ்தான ஆண்போராளிகளை கருணா தரப்பின் 13 வயதிற்கும் குறைவான சிறுவர்களே எதிர்க்கவேண்டிýய நிலை ஏற்பட்டிýருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாவை விடுதலைப் புலிகள் துரத்திச் சென்றாலும் ஏனைய போராளிகளை காப்பாற்றுவதிலும், அவர்களை கருணாவிடம் இருந்து பிரித்தெடுப்பதிலும் புலிகள் ஆர்வம் காட்டிý வருகின்றனர். இதேநேரம், கருணா தரப்பினரைக் காப்பாற்றவேண்டிýய தேவை இரானுவத் தரப்பினருக்கு ஏற்பட்டிýருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல் தொடங்கிய அன்றையதினம் இரானுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் மட்டக்களப்பிற்குச் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், மந்திராலோசனைகள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதலில் கருணாவின் கை ஓங்கியிருந்தால் அவர்களுக்கு இரானுவத்தினரின் உதவிகள் பெருமளவில் கிடைத்திருக்கலாமெனவும், அவ்வாறான நிலைமை ஏற்படாது போனதால் தற்போது கருணா குழுவினரை எவ்விதத்திலாவது பாதுகாக்க வேண்டுமென்ற நிலையில் படையினர் இருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் கூýறுகின்றன.

வெறுமனே கருணாவை மட்டும் தங்கள் வசம் கொண்டுவருவதால் இரானுவத்தினருக்கோ, அல்லது தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கோ எதுவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. கருணா வசம் பெருமளவு போராளிகளும், அவரது கட்டுப்பாட்டிýல் பெருமளவு நிலப்பிரதேசமும் இருந்தால் மட்டுமே கருணாவினால் படையினருக்கோ, அல்லது தென்பகுதி அரசியல் தலைமைகளுக்கோ லாபம் ஏற்படும். கருணாவை ஒரு சக்தியாகக் காட்டிý அதன் மூýலம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் ரீதியிலும், இரானுவ ரீதியிலும் காய்களை நகர்த்த முடிýயுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனாலும், கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் முதல்நாள் தாக்குதல் கிழக்கின் உண்மை நிலையை அப்பட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. விடுதலைப் புலிகள் கூýறுவதுபோன்று கருணா ஒரு தனிமனிதன் என்பதையே இந்தத் தாக்குதல் நன்கு தெளிவுபடுத்துகின்றது. புலிகளின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடிýயாது தப்பியோடுவதிலேயே கருணா குழுவினர் ஆர்வம் காட்டிýவருகின்றனர். அவர்களுடன் உள்ள நூற்றுக்கணக்கான போராளிகள் புலிகளுடன் இணைந்து விட்டதும், புலிகளின் தாக்குதல் மேலும் தொடர்ந்தால் அவர்களுடன் இணைய மேலும் பல நூற்றுக்கணக்கான போராளிகள் தயாராக இருப்பதும் கருணா குழுவினருக்கு மிகப்பெரும் நெருக்கடிýயை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ளாமல் பின்வாங்கிச் சென்று காட்டுப் பகுதிகளுக்குள் மறைந்திருப்பதே தற்போதைய நிலையில் பாதுகாப்பானதெனவும் இதனால் எதிர்காலத்திலாவது தன்னுடன் குறிப்பிட்டளவு போராளிகளை தக்கவைத்துக் கொள்ள, முடிýயுமென கருணா உணர்ந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. இதனால் அவர் புலிகளுக்கு எதிராக பாரிய எதிர்த்தாக்குதலை திடPரென மேற்கொள்ளக்கூýடிýய வாய்ப்புகள் இல்லையென்றே இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் கூýறுகின்றன.

இந்த நிலையில், கருணாவை நோக்கி காட்டுப் பகுதிகளுக்குள்ளும் கூýட விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் முன்னேற்ற நடவடிýக்கை முடிýவொன்று கிட்டும்வரை முடிýயாதென்பதே உண்மையாகும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணா குழுவினரின் அழுத்தங்களால் திணறும் மட்டு-அம்பாறை எம்.பி.க்கள்

<b>பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற பரபரப்பான சம்பவங்கள்.

'வன்னியுடன் என்ன தொடர்பு? உடனே ஊர் திரும்புங்கள்; இது கருணாவின் உத்தரவு...."

-எம்.பி.க்களுக்கு வந்த கட்டளை</b>

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களிலிருந்து இம்முறை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது இருந்த சந்தோர் அலைகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இல்லாது போய்விட்டதாக மனம் திறந்து குமுறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக மொத்தமாக ஐவருமே பரிதாப பாராளுமன்ற உறுப்பினர்களாக காட்சி தருகின்றனர்.

வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுக் கூ ட்டம் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் இடம்பெற்றது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த செயற்குழுக் கூட்டம் தொடர்பாக செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் வீதியிலேயே நிறுத்தப்பட்டனர்.

இதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மற்றும் இரானுவத்தினரும், பாராளுமன்ற உறுப்பினர்களுடைய அந்தரங்கச் செயலாளர்கள் மற்றும் சாரதிகளும் வீதியிலேயே நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கூ ட்டம் காலை 10 மணிக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளதாக கஜேந்திரகுமாரின் இல்லத்தின் பிரதான வாயிற்காவலர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் வெளியில் நின்ற ஊடகவியலாளர்கள் ஆள்மாறி ஆள் தம்முடன் நெருங்கி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கையடக்கத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு உள்ளே என்ன நடக்கின்றது என்று வினாவும் போதெல்லாம் இன்னும் ஒரு மணித்தியாலத்தில் முடிவடைந்துவிடும் பொறுமையாக இருங்கள் எனத் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள்.

இவ்வாறு ஒரு மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் என தெரிவித்தே மாலை 6 மணியாகிவிட்ட நிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வி தங்கேஸ்வரி வெளியே எட்டி ப் பார்த்தார். இந்தநிலையில் ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆனால், அவர் மிகவும் பதற்றமான நிலையில் ஊடகவியலாளர்களை விலத்திக் கொண்டு அங்கு மிங்கும் பார்த்தவாறு இரு இளைஞர்களுடன் உரையாடினார். இதைத் தொடர்ந்து அவர் தனது வாகனத்தில் ஏறிக் கொண்டார். இதையடுத்து கிங்ஸ்லி இராசநாயகமும் வாகனத்தில் ஏறிக் கொண்டார்.

இவர்கள் இருந்த வாகனத்தை ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோர் அண்டி விடாத வகையில் பொலிஸாரும், இரானுவத்தினரும் மொய்த்துக் கொண்டனர்.

இவ்வாறான நிலையில் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிஸோர் வாகனத்திலிருந்தவர்களை அனுகி தயவு செய்து கையொப்பமிட்டுச் செல்லுங்கள் என கெஞ்சிக் கொண்டிருந்தார்.

இதுவரையும் எவ்வித செய்திகளும் இன்றி வீதியில் தவம்கிடந்த ஊடகவியலாளர்கள் உர்hராகிவிட்டனர்.

காலை முதல் மாலை வரை இடம்பெற்ற கூ ட்டத்தில் மட்டு. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒத்துப் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உள்ளே ஏதோ நடக்கின்றது. உள்ளே என்ன நடக்கின்றது என்பதை எவ்வாறாயினும் அறிய வேண்டும் என்றும், உள்ளே எப்படி ச் செல்வது என்றும் துடித்துக் கொண்டி ருந்தனர்.

இறுக்கமான பாதுகாப்புகளின் மத்தியில் எவ்வாறு உள்ளே செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தர் மூ லம் இதுவரை என்ன நடந்தது என்பதை ஓரளவு அறிய முடிந்தது.

காலை 10 மணிக்குக் கூ ட்டம் ஆரம்பமான போதிலும், மட்டு. அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எப்படியாவது வன்னிக்கு அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்யுமாறும் விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்த போதிலும், கருணா தரப்பினர் உங்களுக்கு'வன்னியுடன்" என்ன தொடர்பு உடனே ஊர் திரும்புங்கள். இது கருணா அம்மானின் உத்தரவு என, தொலைபேசி ஊடாக உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு மேல் எதையும் செய்ய முடி யாத நிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினரும், ஏனைய நால்வரும் திணறிப் போனார்கள்.

ஐவரும் ஆளுக்கு ஆள் தமது நெருக்கமானவர்களுடன் மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் எப்படியும் வன்னிக்குச் செல்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கொழும்பில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இவர்களுடன் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்குப் பாதுகாப்பிற்கு வந்த இரானுவத்தினருடைய பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தன் எம்.பி.கேட்டுக் கொண்டார். இவ்வாறான இழுபறி நிலையைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ஒருவர் இருவராக உள்ளே சென்றார்கள்.

இந்தநிலையில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட செல்வி தங்கேஸ்வரி, கிங்ஸ்லி இராசநாயகம், கனகசபை, ஜெயானந்தமூர்த்தி மற்றும் அம்பாறையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்மநாதன் ஆகியோரை அனுகி இங்கு என்ன நடக்கின்றது எனக் கேட்கத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் எதையும் சொல்ல மறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்முடைய உள்ளக் குமுறல்களை எவ்வாறாவது சொல்லி ஆறுதல் அடைய வேண்டும் என்பதற்காக வாய்திறக்க முற்பட்டனர்.

இந்த 'விக்டர்" யார் தம்பி எம்மை கொழும்பை விட்டு உடனே வெளியேறு என்பதற்கு எனக் கேட்டார். அப்போது ஐயா இந்த விக்டர் யார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. கருணா குழுவில் கல்விக்குப் பொறுப்பானவர். கல்விக்குப் பொறுப்பானவர் ஏன் அரசியலில் தலையிட வேண்டும் எனக் கேட்கப்பட்டது.

மட்டு. அம்பாறை மாவட்டத்தில் யார் தலைவன்? யார் யார் எதற்குப் பொறுப்பு?, யார் யார் கட்டளையிடுவது என்ற ஒரு கட்டுப்பாடும் கிடையாது. 'கொண்டுவா என்றால் கொண்டு வருபவர்கள்தான்" மட்டு.

அம்பாறை மாவட்டங்களில் மிஞ்சியிருப்பவர்கள் என்று அந்த வயது முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இவ்வாறு உரையாடி க் கொண்டிருக்கும்போது செல்வி தங்கேஸ்வரியின் கையடக்கத் தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியது, வேண்டா வெறுப்பாக அவர் பதிலளித்துக் கொண்டி ருந்தார். அவரின் பதிலின் மூலம், கருணா தரப்பினரால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்பதை புரியக் கூடியதாக இருந்தது.

இதையடுத்து செல்வி தங்கேஸ்வரி அழுகுரலில் ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், நான் மட்டக்களப்பிற்குச் செல்லப் போகின்றேன். போய் வருவதற்கு அனுமதியைப் பெறுங்கள் சம்பந்தன் ஐயாவிடம் என கண்கலங்கத் தெரிவித்தார்.

இந்தநிலையில் மட்டக்களப்பிலிருந்து இவர்களை இரானுவக் கவச வாகனம் சகிதம் பாதுகாப்பாக அழைத்து வந்த மேஜர் திலங்க, இவர்களை எப்படி யும் மட்டக்களப்பிற்கு அழைத்து வருமாறு தமது தலைமைப்பீடம் உத்தரவிட்டுள்ளதாக சம்பந்தன் எம்.பி.யிடம் தெரிவித்தார்இதையடுத்து இவர்கள் ஐவரும் மறுநாள் (வியாழக்கிழமை) காலை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு தேவை. இவர்களை விடுவிக்க முடி யாது என மேஜர் திலங்கவுடன் சம்பந்தன் எம்.பி. வாதிட்டார். இறுதியில் இரானுவத் தளபதி பலகலவுடன் தொடர்புகளை சம்பந்தன் எம்.பி.ஏற்படுத்தி தமது தரப்பு நியாயங்களையும், ஐவரின் முக்கியத்துவத்தையும் தெளிவு படுத்தினார்.

இருந்தபோதிலும் சம்பந்தன் எம்.பி.யின் வேண்டுகோளை இரானுவத் தளபதி நிராகரித்தார். இதையடுத்து இரவு 10 மணியளவில் ஜெயானந்தமூர்த்தி தவிர்ந்த ஏனைய நால்வரையும் பலத்த பாதுகாப்புடன் இரானுவத்தினர் மட்டக்களப்பிற்குக் கூட்டி ச் சென்றனர்.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இடம்பெற்ற நிகழ்வுகள் இது ஒருபுறமிருக்க மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பில் உள்ள பெரிய உப்போடை அலுவலகத்தில் வைத்துக் கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை விசு மற்றும் துரை ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி 'சுகயீனம் காரணமாக பிரசன்னமாகவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கு தடைவிதிக்கப்படாவிட்டாலும், வன்னித் தலைமைத்துவத்துடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு கருணா தரப்பினரால் தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறானதோர் நிலையில் மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் என ஆரம்பத்தில் ஊகங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், இவர்கள் ஐவரும், ஒட்டுமொத்தமாக இந்தப் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்து விட்டனர்.

கருணா தரப்பினரின் கடும்போக்கு மற்றும் அழுத்தங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக இவர்கள் ஐவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளபோதிலும், எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டாம் என வன்னித் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் மட்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்திக்கும், கருணா குழுவினருக்குமிடையில் கருத்து முரண்பாடுகளும், விரிசல்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

இம்முறை மட்டு. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசியலில் அனுபவம் என்பது அறவே அற்றவர்களாகக் காணப்படுவதால் கருணா குழுவினருடைய அழுத்தங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.

ஆனால், ஜெயானந்தமூர்த்தி பத்திரிகையாளர் என்ற முறையில் அரசியல் அனுபவங்களையும், அனுகுமுறைகளையும் நன்கு கற்று அறிந்தவர் என்ற வகையில் கருணா தரப்பினரின் சில நடைமுறைகளுக்கு எதிர்ப்பலை தெரிவித்து வருகின்றார்.

இது இவ்வாறிருக்க கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெயானந்தமூ ர்த்தி தனது ஆதரவாளர்களை வாழைச்சேனையில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவரைக் கடத்துவதற்கு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ஜெயானந்தமூ ர்த்தியின் ஆதரவாளர்களினால் தடுக்கப்பட்டுள்ளது.

5 ஆம் திகதி இடம்பெற்ற மட்டு. அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது தமது முயற்சிகள் தோல்வியடைந்ததை விசு 'பறவை பறந்துவிட்டது" அதாவது ஜெயானந்தமூர்த்தி தப்பித்துக் கொண்டார் என்பதை பட்டும்படாதவாறு தெரிவித்துக் கொண்டார்.

மட்டு.அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்துச் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணா தரப்பினர் ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை என்பதை நடந்துமுடி ந்த பல சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணா குழுவினருடைய அழுத்தங்களைச் சகித்துக் கொண்டி ருந்தாலும் இதைப்போன்று பெண் பாராளுமன்ற உறுப்பினரால் முடியவில்லை. கண்ணீர் வடி த்துக் கொண்டேயிருந்தார்.

இவர் எதையும் வாய்விட்டுக் கதைக்க முடியாதளவிற்கு கருணா குழுவைச் சேர்ந்த இருவர் செல்வி தங்கேஸ்வரியை சுற்றிக் கொண்டே திரிந்தார்கள். இவர்கள் அடி க்கடி தமது தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகளை ஏற்படுத்தி உரையாடி க் கொண்டேயிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டி ருந்தால் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியிருப்பார். ஏனெனில், வன்னித் தலைமைப் பீடத்திற்கும், கருணாவிற்குமிடையில் விரிசல்கள் ஆரம்பமானவுடனேயே சில வர்த்தகப் பிரமுகர்களிடமும், தமது ஆதரவாளர்களிடமும், தான் ஒரு அமைச்சர் ஆகுவேன் என பல தடவைகள் ராஜன் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தமிழ் வேட்பாளர்களுக்கும், கருணா தரப்பினருக்குமிடையில் சந்திப்புகள் இடம்பெற்றபோது, மட்டு. அம்பாறை மாவட்ட நலன்கள் மற்றும் அபிவிருத்தி மட்டுமே தேர்தல் பிரசாரங்களின்போது கதைக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டபோது, இதற்கு தமது முழு எதிர்ப்பினையும் தெரிவித்தவர் மட்டு.மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்கள் ஜோசப் பரராஜசிங்கம். இவருடைய நிலைப்பாட்டை ஆமோதித்தவர் திகாமடுல்ல மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் அரியநாயகம் சந்திரநேரு.

கருணா தரப்பினரால் நடத்தப்பட்ட பல எதிர்ப்புப் பேரணிகள், கூ ட்டங்கள் ஆகியவற்றில் தமது பங்களிப்பினை முற்றாகத் தவிர்த்தவர் ஜோசப் பரராஜசிங்கம். இந்த நிலையில் ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தல் பிரசார நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு, ஆரம்பத்தில் கருணா தரப்பினரால் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, நடந்துமுடி ந்த தேர்தலிலிருந்து ஜோசப் பரராஜசிங்கமும், அரியநாயகம் சந்திரநேருவும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

உண்மையில் ஜோசப் பரராஜசிங்கம் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்குக் இரு காரணங்கள் உண்டு. மட்டக்களப்பிலிருந்து வடபகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு நகர மக்கள் வாக்களிப்பில் ஈடுபடாமை என்பவை பிரதான காரணம்.

இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் 90 சதவீதமானவர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டபோதிலும், நகரில் 20 சதவீதமானவர்களே வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஜோசப் பரராஜசிங்கத்தை கருணா தரப்பினர் ஓரம் கட்டினாலும் மட்டு.நகர மக்கள் ஓரம்கட்டவில்லை. இவர்கள் முழுமையான வாக்களிப்பில் ஈடுபட்டி ருந்தால் நிச்சயமாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

தேர்தல் தினத்தன்று மட்டக்களப்பு நகரில் நிலவிய கடும் பதற்றம் மற்றும் கருணா தரப்பினரால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் என்பவற்றாலேயே நகர மக்கள் வாக்களிப்பில் ஈடுபடவில்லை.

திகாமடுல்ல மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், சந்திரநேருவை எப்படி யும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் கருணா தரப்பினர் கடும் போக்குகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறானதோர் நிலையில் மட்டு. அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும், புறக்கணிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களாவது சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்குவதற்கு கருணா குழுவினர் இடமளிக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>கதிர்காமர் ஐயாவுக்கு</b>

முன்னரும் ஒரு தடவை கடிýதம் எழுதியிருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதோ என்னவோ தெரியவில்லை

2001 டிýசம்பர் பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி தோற்கடிýக்கப்பட்டு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, வெளியுறுவு அமைச்சர் பதவியிலிருந்து நீங்கள் விலகிச்சென்றவேளை, உங்களுக்கு அக் கடிýதத்தை எழுதியிருந்தேன்.

வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த அந்த ஏழு வருடங்களில் நீங்கள் இலங்கைத் தமிழ்ச் சகோதரர்களுக்கு செய்தவற்றை எல்லாம் அக்கடிýதத்தில் விபரமாகக் குறிப்பிட்டிýருந்தேன்.

இப்போது மீண்டும் ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்று முடிýந்து, நீங்கள் சார்ந்த சுதந்திர முன்னணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருக்கும் தருணத்தில், உங்களுக்கு திரும்பவும் ஒரு கடிýதம் எழுதவேண்டுமென்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு உந்துதல்.

எமது இன நெருக்கடிý தொடர்பில் உலக அரங்கில் நீங்கள் செய்த பரப்புரைகளினால் மனம் நெகிழ்ந்துபோன அம்மையாரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுக்கு எவ்வாறு நன்றிக்கடனை செய்துமுடிýக்கலாம் என்று ஏங்கிக் கொண்டிýருக்கிறார்கள்.

நீங்கள் திறமையான ஒரு சட்ட வல்லுநர். காலத்தின் கோலத்தினால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். விரும்பியோ, தயங்கியோ அரசியலுக்கு வந்த சிலர் ஜமாய்த்திருப்பதைப் போல நீங்களும் அம்மையார் தரப்புக்காக எல்லை கடந்து அபார காரியங்களை செய்து காட்டிýயிருக்கிறீர்கள். நெறிமுறைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லாமல், ஒரு சட்ட நிபுணருக்கே உரித்தான பாணியில்தான் அரசியலையும் நீங்கள் செய்திருந்தீர்கள் - தொடர்ந்தும் செய்து கொண்டு வருகிறீர்கள்.

தனது கட்சிக்காரருக்காக வழக்கறிஞர் ஒருவர் திறமையாக வாதாடுவதைப் போன்றே அரசியலையும் நீங்கள் நினைத்ததால், உங்கள் 'கட்சிக்காரர்களுக்காக" நீங்கள் அபாரமாகவே ஆளுமையை வெளிக்காட்டிýயிருக்கிறீர்கள்.

வெளியுறவு அமைச்சராக இருந்து நீங்கள் அவர்களுக்காக செய்த சேவைக்காக என்ன கைம்மாறு செய்வதென்று மூýளையைப் போட்டு குழப்பித் தடுமாறிக் கொண்டிýருக்கும் அம்மையார், உங்களை எங்கெங்கோவெல்லாம் உயர்த்திவைக்க துடிýத்துக் கொண்டிýருக்கிறார்.

அரசியல் அதிகார பீடங்களின் வாசற்படிýகளில் வசதியான மாதிரி செயற்படக்கூýடிýய ஒரு வரப்பிரசாதம் உங்களுக்கு கிடைத்ததால் பெரிய பெரிய பதவிகளுக்கெல்லாம், "நான் மிகவும் பொருத்தமானவன், என்று சற்றும் மனச் சஞ்சலமில்லாமல் நீங்களும் நினைத்து விடுகிறீர்கள்.

கடந்த வருட இறுதியிலே பொதுநலவரசு அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு நீங்களும் போட்டிýயிட்டPர்கள். சிம்பாப்வேயின் ஜனாதிபதி றொபேட் முகாபேக்கும், பொதுநலவரசு நாடுகளில் வெள்ளையர்களின் முகாமுக்குமிடையேயான பிரச்சினை காரணமாக ஆபிரிக்க கறுப்பு, நாடுகள் மத்தியில் தோன்றிய "கிளர்ச்சி உணர்வு' காரணமாகவே அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு வேட்பாளராக நீங்கள் நிறுத்தப்படக்கூýடிýய சூýழ்நிலை தோன்றியது. வெள்ளையர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஆபிரிக்க நாடுகளின், குரலாக நீங்கள் செயற்படுவீர்கள் என்று அவர்கள் நினைத்ததாக, நீங்கள் பெருமைப்பட்டிýருப்பீர்களோ தெரியவில்லை. நல்லவேளை, டொன் மக்கினனே மீண்டும் செயலாளர் நாயகமாக தெரிவுசெய்யப்பட்டு விட்டார்.

பொதுநலவரசின் செயலாளர் நாயகமாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிýருந்தால், வெள்ளையரான மைக்கினனை விட எத்தனையோ மடங்கு அபாரமாக வெள்ளையர்களுக்காக சேவை செய்திருப்பீர்கள் நீங்கள் என்று பேசிய சிலர், நல்லவேளை கறுப்பர்கள் தப்பிக் கொண்டார்கள் என்று நையாண்டிý செய்ததை என் காதால் கேட்டேன் கதிர்காமர் ஐயா!

பொதுநலவரசு விவகாரம் முடிýந்து சில மாதங்கள் கழிந்த நிலையில், மீண்டும் இன்னொரு உயர்ந்த பதவிக்காக உங்களின் பெயர் அடிýபடத் தொடங்கியது - இலங்கையின் பிரதமர் பதவி.

கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தோற்கடிýக்கப்பட்டு, உங்கள் சுதந்திர முன்னணியும் வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை என்ற விசித்திரமானதொரு நிலையில், பிரதமராக அநேகமாக நீங்கள்தான் வரப்போகின்றீர்கள் என்று ஒரே பேச்சு. பத்திரிகைகளும் விளாசித்தள்ளின.

இலங்கையில் அதிகப் பெரும்பான்மையான தமிழர்களுக்கு கதிர்காமர் ஐயா, உங்களில் ஒரு மட்டுமீறிய ஆத்திரம். அதற்கு மத்தியிலும் கூýட இலங்கையின் பிரதமராக ஒரு தமிழன் வரப்போகின்றானே என்று சில தமிழர்களுக்கு உள்மனதுக்குள் அவர்களை அறியாமலேயே ஒரு அப்பாவித்தனமான புளகாங்கிதம்.

ஆனால், எனக்குத் தெரியும். அவ்வாறு அந்தத் தமிழர்கள் பெருமைப்பட்டால்கூýட உங்களுக்கு அது பெருமையாக இருக்காது. ஒரு விதத்தில் அசௌகரியமாகவே இருக்கும். இன ரீதியான பிணைப்புகள் பற்றி அறவே அக்கறைப்படாத ஒரு சர்வதேச பிரஜை ஐயா நீங்கள். நான் சொல்வது உண்மைதானே?

இறுதியில் பிரதமர் பதவியும் உங்களுக்கு கிடைக்காமல் நழுவிப் போய்விட்டது. உங்களுக்கான தனது கைம்மாறைச் செய்த நிம்மதியைப் பெற அம்மையார் கொண்டிýருந்த வாய்ப்பும் தவறிப்போனது. மஹிந்த ராஜபக்ர் பிரதமராகி விட்டார்.

பிரதமர் பதவியிலெல்லாம் எனக்கு ஆசை கிடையாது என்று முன்கூýட்டிýயே, 'பொய்க்காகவேனும்" ஒரு அறிக்கையை விடுத்திருந்தால், 'கனவான்" என்ற 'கௌரவமாவது" மிஞ்சி நின்றிருக்கும். என்னதான் இருந்தாலும் நீங்களும் உளமார ஆசைப்பட்டு விட்டPர்கள் ஐயா.ஆசை யாரைத்தான் விட்டது போங்கள்!

மஹிந்த ராஜபக்ர் பிரதமராக அம்மையார் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்த வைபவத்தில் எந்த அசௌகரியத்தையும் வெளிக்காட்டாமல் நீங்கள் கலந்துகொண்டு, அவரை கட்டிýத்தழுவி உச்சிமுகர்ந்தீர்கள். இருவரும் உள்மனங்களில் என்னதான் நினைத்திருந்தீர்களோ நாம் அறியோம் கதிர்காமர் ஐயா.

ஆனால், எனக்கு ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். இந்த வகையான அசௌகரியங்களுக்கு அப்பாற்பட்டவர் நீங்கள்.

'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் ஆழ்தல் கண்டு சிந்தை கலங்காரடி" என்று பாரதி அடையாளம் காட்டிýய 'மனவுறுதி" கொண்ட மனிதன் ஐயா நீங்கள்.

வணக்கம்

இங்கனம்சத்தியன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களை தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகளில் விடுதலை புலிகள்

<b>வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்</b>

மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.

மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களை தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகளில் விடுதலை புலிகள்

வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.

மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அம்பாறை மாவட்டம் தலைமைப்பீடத்தின் கட்டுப்பாட்டில், மட்டக்களப்பின் தென்பகுதியும் அவர்கள் வசமே.!

ஜ தீபன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்பிரல் 2004, 19:50 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப்புலிகளின் அணி நேற்றிரவு அம்பாறை மாவட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பின் தென்பகுதியில் தாம் இதுவரை மீட்ட இடங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.

கடந்த வெள்ளியன்று வாகரையை விடுவித்த புலிகள் தங்குதடையின்றி வாழைச்சேனை வரை முன்னேறியதையடுத்த அவர்கள் மட்டக்களப்பை நோக்கி நகர வேண்டுமானால் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசமான வாழைச்சேனையின் ஒருபகுதியைக் கடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியின் காவலைப் பலப்படுத்திய சிறீலங்காப் பாதுகாப்புப் படை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தை கடக்க முனைந்தால் அது யுத்தநிறுத்த மீறல் என்றும், அவ்வாறு தமது பிரதேசத்தைக் கடக்க முயல்பவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்ததுடன் மிகவும் உசார்நிலையில் வைக்கப்பட்டது.

மறுபுறமாக, இப்பிரதேசத்தினூடான கருணா அணியினரின் நகர்விற்கு பேருதவி புரிந்ததுடன் அவர்களின் அணியினர் பின்வாங்கவும் வழிவகுத்துக் கொடுத்திருந்தது. இந்நிலையில் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பின் பிற பகுதிகளிற்குள் எவ்வாறு செல்லப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் யாருமே எதிர்பாராதவாறு அம்பாறை மாவட்டத்தினூடக உள்நுழைந்த புலிகள், அம்பாறை மாவட்டத்தில் கருணா அணியின் பிரதான செயற்பாட்டிடமாக இருந்த கஞ்சி குடிச்சாறு பகுதியுட்பட அம்பாறை மாவட்டப் பகுதிகளை விடுவித்ததுடன், மட்டக்களப்பின் இதர பகுதிகளிற்குச் செல்வதற்கான நகர்வையும் அங்கிருந்து மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பில் விடுவிக்கப்பட்ட பிரதேங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பணியாளர்கள் மக்களிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், விளக்கங்களை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

சற்றுமே எதிர்பாராத வகையில் சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இந்நகர்வை அம்பாறை மாவட்டத்திற்கான தளபதியான ஐனார்த்தன் முன்னெடுத்தார். இந்நிகழ்வில் கருணா அணியினர் எத்தகைய எதிர்ப்பiயும் காட்ட முடியாது பின்வாங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE recovers arms, cadres from Karuna group

[TamilNet, April 11, 2004 14:31 GMT]

In the commando style attacks on the Karuna group in Vakarai, the Liberation Tigers of Tamil Eelam have recovered large quantities of arms and a large number of cadres, the ThamilAlai.com website (a shadow edition from the East of the Karuna group's TamilAlai) said.

The details of the arms recovered are as follows:
120 mm artillery - 3
120 mm artillery shells - more than1000
82 mm artillery - 4
82 mm artillery shells - 370
a large number of 5 mm mortars
50 caliber guns - 2
Small arms - 300.


In Vakarai alone, 450 cadres have been recovered from the Karuna group, according to the website. Meanwhile, the ThamilAlai said that in the Amparai district, which has been brought under the control of the LTTE, 200 cadres of the Karuna group, led by Atheeswaran and Vino, have deserted the group and joined the LTTE's forces.

The recovery of Vakarai from the Karuna group has aided large scale desertions from the group, and some cadres of the group are escaping to Colombo with the intention of going abroad, the ThamilAlai said, adding that the people of Vakarai have welcomed the expulsion of the Karuna group from the village and are assisting the LTTE's forces.

The attack in Vakarai was commanded by Mr. T. Ramesh, the special commander of the Batticaloa-Amparai district. The integration commander was 'Prabha', and the forward commander was 'Jeyaathaar,' the commander of the Jeyanthan brigade. Assisting in the operations of the Jeyanthan brigade were cadres from the Charles Anthony brigade and the Ambarasy brigade, the website said, quoting reliable sources.

கருணா தரப்பு ஆட்லறி போன்ற கனரக ஆயுதங்களையும் வைத்திருக்கின்றார்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணா குழுவினரிடமிருந்து பெருமளவு ஆயதங்கள் மீட்பு

11.04.2004

வாகரைப் பகுதிகளில்;; கருணா குழுவினர் மீது கடந்த வெள்ளிக்கிழமை; மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோ பாணியிலான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதியான செய்திகள் கிடைத்துள்ளது.


இதுவரை மீட்கப்பட்டுள்ள ஆயுதங்களின் விபரங்கள்:

120 மி.மீ பீரங்கிகள் - 3
120 மி.மீ பீரங்கிகளுக்கான எறிகணைகள் - 1000 இற்கு மேல்
82 மி.மீ பீரங்கிகள் 4
82 மி.மீ பீரங்கிகளுக்கான எறிகணைகள் - 370
5 மி.மீ மோட்டார்கள் - பெருமளவு
50 கலிபர்; துப்பாக்கி 2
சிறு ரக துப்பாக்கிகள் 300 இற்கு மேல்

இத்தாக்குதல்களின் வாகரைப் பகுதிகளில் மட்டும் கருணா குழுவைச் சேர்ந்த 400 வரையானோர் மீட்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இத்தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக மட்டு- அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேசும், ஒருங்கிணைப்புத் தளபதியாக பிரபாவும் , முன்னிலைத் தளபதியாக nஐயந்தன் படையணித் தளபதி nஐயாத்தன் அவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். nஐயந்தன் படையணியுடன் இணைந்து சாள் அன்ரனி சிறப்புப் படையணியும் மாலதி படையணியும் மீட்புப் பணிகளில்

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அம்பாறையில் 200 போராளிகள் மீட்பு,வாகரையில் மேலும் 50 பேர் மீட்பு, அம்பாறை மாவட்டம் பூரண கட்டுப்பாட்டில்

11.04.2004

இன்று அதிகாலை அம்பாறைப் மாவட்டப் பகுதிகளில் ஆரம்பமான மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெருமளவு மோதல்கள் எதுவும் இப்பகுதிகளில் இடம்பெறவில்லை. ஆதிசுவரன், வினோ ஆகியோர் தலைமையிலான 200 போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி மீட்புப் அணிகளிடம் வந்து சேர்ந்துள்ளனர்.

அதேநேரம் வாகரைப் பகுதிகளில் கருணா குழவைச் 400 பேர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி மேலும் 50 பேர் இன்று, ஞாயிறு மாலை கருணா குழுவைவிட்டு விலகி மீட்பு அணிகளில் வந்து சேர்ந்துள்ளனர்.

வாகரைப் பகுதிகள் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை பல போராளிகள் கருணா குழுவை விட்டு விலகி வருவதற்கு வாய்ப்பினை அளித்துள்ளது. அதே நேரம் கருணா குழுவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோடும் நோக்கோடு கொழும்பிற்கு தப்பிச் செல்வதாக செய்திகள் கிடைத்துள்ளது.

வாகரைப் பிரதேசம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து காணப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு சிறப்பான வரவேற்பை அளித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இந்நேரத்தில் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது.தன்னைப் பேட்டியெடுத்த வெளிநாட்டுப்பத்திரிகையாளரிடம் கெரில்லா இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதிய போர்முறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தானே மரபுப் படையாக மாற்றினேன் என்றும் தமக்கிருந்த அறிவுடன் போரியல் பற்றி பல்வேறுபட்டவர்களினது அனுபவங்களைக் கற்றதன் மூலம் இது சாத்தியமகியது பிதற்றியவர் கருணா இதனை B.B.C போன்ற நடுநிலை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு இனிமேல் புலிகள் இயக்கம் மறுபடியும் கெரில்லா இயக்கமாக மாறவேண்டியதுதான் என்ற சாரப்பட கருத்தும் வெளியிட்டன

விடுதலைப் புலிகளின் பலம் பலவீனம் தெரிந்துமே வெருகலின் கரையில் போரை எதிர்பார்த்து ஆயத்தம் செய்வது போன்ற முழுமுட்டாள் தனமான முடிவை எடுத்த இத்தளபதி போரியல் வரலாற்றை உண்மையிலேயே கற்றாரா என்பது அடிமட்டப் போராளிகளுக்கே எழக்கூடிய சந்தேகம்

எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்த்த தாக்குதல் இதுவே விடுதலைப்புலிகளின் வெற்றிக்காண உத்தி எனத் தெரியாத மடத்தளப்தியா கருணா? இவரா தலைவரின் கட்டளைகளுக்கிணங்க ஆனையிறவைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி விட்டு கடைசியில் தானே ஆனையிறவை வென்றேன் என்று பீற்றிக் கொண்ட தேசபிதா?
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 10 Guest(s)