Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
வக்கரையை நோக்கி விடுதலைப் புலிகள் படை!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க வியாழன் இரவு தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாவின் முக்கிய முகாம் அமைந்துள்ள வக்கரையை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியையும், கிழக்குப் பகுதியையும் பிரிக்கும் வெறுகல் ஆற்றைக் கடந்த விடுதலைப்புலிகளின் படையின் மீது, கருணாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக புலிகள் ஆதரவு இணைய தளமான தமிழ் நெட் கூறியுள்ளது.

1997 மற்றும் 99ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலின் போது அதற்கு கடும் பதிலடி கொடுத்து ஆனையிரவு ராணுவ முகாமை கைப்பற்றிய தளபதி ஜெயந்தன் தலைமையிலான (?) சக்தி வாய்ந்த படைப்பிரிவு இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் நெட் கூறியுள்ளது.

நேற்று நடந்த தாக்குதலில் விறுகல் ஆற்றங்கரையில் சிக்கிக் கொண்ட கருணா குழுவினர் சரணடைந்தது மட்டுமின்றி தங்கள் வசம் இருந்த 120 எம்எம் பீரங்கிகளை ஒப்படைத்துவிட்டதாகவும் புலிகள் செய்தி கூறுகிறது.

ஜெயந்தன் படைப்பிரிவினருடன் மட்டக்களப்பு, அம்பாரை பகுதிகளில் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையிலான படைகளும் கருணாவின் துணைத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் தலைமையிலான படைகளும் வக்கரை நோக்கி முன்னேறி வருவதாக அச்செய்தி கூறுகிறது.

இந்தப் போரில் இதுவரை எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் ஏதும் கிட்டவில்லை. இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த தனது பாதுகாப்புப் படைகளின் தளபதிகளை மட்டக்களப்பிற்கு செல்லுமாறு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் நடத்தி வரும் தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று இலங்கை அரசு கருதுவதாக புலிகளிடம் தெரிவிக்குமாறு நார்வே தூதுக்குழுவை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.


Thanx: Webulagam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தல் முடிவுகள் தமிழினத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றதா?


மிகப் பெரிய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெற்றியை, தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் உறுதி செய்துள்ளதால், தமிழினத்திற்கு இது ஒரு பாரிய வெற்றியாகக் கணிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவுகளும் அதன்பின் உருவாகியுள்ள ஆட்சி நிலைப்பாடுகளும், தமிழினத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளனவா என்று ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

மஹிந்த ராஐபக்ஷ பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே லக்ஷ்மன் கதிர்காமர் தான் பிரதம மந்திரி என்று பரவலாக நம்பப்பட்டதுடன், ஐனாதிபதி கூட, அவரது பெயரையே முதலில் முன்மொழிந்தாலும், பின்னர் நீண்ட நேர ஆலோசனைகளை நடாத்தி, மஹிந்தவை பிரதமராக அறிவித்தார்.

<b>பிரதம மந்திரி பதவியின் பலம்</b>

உண்மையில், ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த பிறிதொரு கட்சியின் தலைமையில் பாராளுமன்றம் இருந்த காரணத்தினாலேயே, பிரதம மந்திரி என்ற பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றது. அதற்கு முன்னர், ஆளும் கட்சியிடமே ஐனாதிபதி, பிரதம மந்திரி என்ற இரு பதவிகளும் இருந்த போது, பிரதம மந்திரியாக யார் இருந்தார் என்று கூட பலருக்குக் தெரியாது. உண்மையில், ஐனாதிபதி பதவியேற்றதும், பிரதம மந்திரியாக தனது தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்காவையே நியமித்திருந்தார். அவர் அந்தக் கதிரையில் ஒரு கௌரவ பொறுப்பாளராக உட்கார்ந்திருந்தாரோ ஒழிய, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பலம் உட்பட, நாட்டின் ஆட்சி சார்ந்த அத்தனை முடிவுகளையும் எடுக்கும் பலம் ஐனாதிபதிக்கே இருக்கிறது.

Nஐ.ஆர்.ஐயவர்த்தன ஐனாதிபதியாக இருந்த காலத்தில், உருவாக்கப்பட்ட பலம்பொருந்திய சர்வ அதிகாரங்களையும் உள்ளடக்கிய ஐனாதிபதிப் பதவிக்கு முன்னே, பிரதமர் பதவி ஒரு செல்லாக் காசுதான். திடிரென ஐனாதிபதியின் கட்சி தவிர்ந்த இன்னுமொரு கட்சி பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கின்ற நிலை வந்தபோதுதான், Nஐ.ஆர்.ஐயவர்த்தன அவரது காலத்தில் தனது கதிரையின் பலத்தை உறுதிசெய்ய என்னவெல்லாம் செய்திருந்தார் என்பது பலருக்குப் புரிய ஆரம்பித்தது.

எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.முன்னணி, பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றபோதும், ஆரம்பத்திலிருந்தே ஐனாதிபதியின் சர்வ அதிகாரத்திற்கு முன்னே, ஒவ்வொரு அசைவிற்கும் ஐனாதிபதியின் தலையசைப்பை எதிர்பார்த்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோதுகூட, ஐனாதிபதியின் பலத்திற்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமைச்சுக்களைப் பறித்தமை, தேசிய ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியமை, பாராளுமன்றத்தைக் கலைத்தமை, முப்படைத் தளபதிகளை தனது நேரடித் தலைமையில் வைத்திருந்தமை உட்பட, ~நாட்டின் இறைமைக்குக் குந்தகம்| நிகழ்வதாகக் கூறி, எதைச் செய்வதற்கும் ஐனாதிபதி என்ற கதிரைக்கு உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பிரதம மந்திரியாக யார் இருந்தாலும், அவர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காரணம் கூறாது தடுத்து நிறுத்தும் உரிமை கூட ஐனாதிபதியிடமே இருந்தது.

இப்போது நிலமை வேறு. ஆட்சி மீண்டும் ஐனாதிபதியின் கட்சியிடமே வந்துவிட்டது. ஐனாதிபதியின் கட்சியிடம் பாராளுமன்றம் இருக்கும்வரை, பிரதம மந்திரியின் ஆசனம் ஒரு வெற்றுக்கதிரையே. கிட்டத்தட்ட இந்தியாவின் ஐனாதிபதி கதிரையும் சிறீலங்காவின் பிரதம மந்திரி கதிரையும் ஒரே தகுதியைக் கொண்டது தான். ஆக, பாராளுமன்றத்தை தலைமை தாங்கி நடத்துகின்ற வாய்ப்பு ஒன்று இருந்தாலும், அங்கே ஐனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே எந்த முடிவுகளும் எடுக்கப்படுவதோடு, கருத்துக்களும் முன்வைக்கப்படும். பாராளுமன்றத்தை அவசர அவசரமாகக் கலைத்து, பொதுத்தேர்தலொன்றை அறிவித்ததற்குக் கூட அதுவே முக்கிய காரணம்.

<b>பொதுத்தேர்தலுக்கான காரணம் </b>

ஐனாதிபதி சந்திரிகாவின் கட்சித் தலைமையில் பாராளுமன்றமும் இருந்தபோது, எதிர்க்கட்சியினர் மக்களின் எதிர்ப்பலையை எழுப்பியதன் மூலம், பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான குழப்பம் ஏற்பட்டபோதே, வேறுவழியின்றி ஐனாதிபதியாக இருந்த சந்திரிகா, பொதுத் தேர்தலை அறிவிக்க நேர்ந்தது. தேர்தலில் தோற்றதும், சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, எப்படியும் ஆட்சியைத் தனது கட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் மட்டுமே பொதுத் தேர்தலுக்காக வியூகமமைத்து Nஐ.வி.பி.யுடன் கூட்டணி அமைத்தார்.

இப்போது அவர் நினைத்தபடியே அவரது கட்சித் தலைமைக்குக் கீழே ஆட்சி முழுமையாக வந்துவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி, தனக்கு அமைச்சிலுள்ள ஒருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதன் மூலம், விரைவில் ஐனாதிபதி ஆட்சிக்கு முடிவுரை எழுதி, பிரதம மந்திரியின் கதிரைக்கு அதிக பலத்தைக் கொடுக்கும் அதே நேரத்தில், ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில், பிரதம மந்திரி ஆசனத்தில் தானே அமர்வதுதான் தற்போதைய நோக்கம். எள் என்றால் எண்ணையாக் காலடியில் வந்து நிற்கும் கதிர்காமரை பிரதமர் கதிரையில் இருத்தி விட்டால், வேலையை சுலபமாக முடிக்கலாம் என்று சந்திரிகா விரும்பினாலும், எதிர்ப்புக் கிழம்பியபோது, ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து பிரதம மந்திரி ஆட்சிக்கு குறிப்பிட்ட மாதத்திற்குள் ஆயத்தம் செய்வதற்கு இணங்கும் ஒருவரை மட்டுமே நியமிக்கும் நிலைப்பாடு சந்திரிகாவிடம் இருந்தது. அதை நிறைவேற்றக்கூடிய ~தாய் சொல்லைத் தட்டாத| அடுத்தவரான மஹிந்த அந்தக் கதிரைக்கு வழிமொழியப்பட்டார்.

அந்த விசுவாசமான குழந்தை, பதவிப் பிரமாணம் செய்த கையுடன், மறக்காது தனது விசுவாசத்தை வெளிக்காட்டியது. ஐனாதிபதி ஆட்சியை மாற்றியமைத்து, சந்திரிகாவை பாராளுமன்றத்தின் பிரதம மந்திரிக் கதிரையில் இருத்துவதே எனது முதல் கடன் என்று தெட்டத்தெளிவாக உள்ளதைச் சொல்லி விட்டது அந்த எஐமானனுக்கு விசுவாசமான ஊழியன்.

<b>தமிழ் கூட்டமைப்பின் வெற்றி மூலம் சாதிக்க விரும்பியதென்ன?</b>

சரி. விசயத்திற்கு வருவோம். எப்படியும் சந்திரிகா கூட்டணியைவிட, ரணில் கட்சி சற்று அதிகமான ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் கூட்டணி இணைந்து ஆட்சியமைக்க தமிழ்க் கூட்டமைப்புக்குப் பலம் சேர்ப்பதே எமது திட்டமாக இருந்தது. இறுதிவரை, ஐ.தே.முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, பாராளுமன்றத்திற்கான பெரும்பான்மைப் பலத்தை இலகுவாக நிரூபிப்பார்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஐ.தே.மு.வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து 113 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் என்பதில் இருவேறு கருத்து யாருக்கும் ஆரம்பத்தில் இருந்ததில்லை. இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, வடக்கு, கிழக்கு, தெற்கில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், சில நிரந்தர மாற்றங்களை உருவாக்கி விட்டன.

கிழக்கின் குழப்பங்கள், முஸ்லிம் கட்சிகளுக்கு ஓரிரு ஆசனங்களை அதிகமாகக் கொடுக்க வழிசெய்தன. தெற்கில், ஹெல உருமயவின் திடிர் உதயம், ரணில் கனவில் மண்அள்ளிப் போட்டன. மலையகத்தின் உட்கட்சிப் பூசல்கள், சில ஆசனங்கள் கைதவறிப் போக வழிசமைத்தன. வடக்கில், ஆனந்தசங்கரியின் குழப்பத்தால், வெறும் இரண்டாயிரம் வாக்குகள் குறைந்ததால் ஒரு ஆசனம் ஈ.பி.டி.பி.யிடம் பறிபோனது. ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து 104 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஒன்பது ஆசனங்கள் சிக்கலை உருவாக்கின.

முஸ்லிம் காங்கிரசின் 5 ஆசனங்களும், மலையகக்கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் இரு ஆசனங்களும் அடங்கலாக 111 ஆசனங்கள் தம்வசம் உள்ள நிலையில், வெறும் இரண்டே ஆசனங்கள் குறைவான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை முற்றாக இழந்தது. யாழ். தொகுதியில் ஒரு ஆசனம், அம்பாறையில் ஒரு ஆசனம் உட்பட, கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒருவரை நியமித்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு ஆசனத்தையும் இழந்த நிலையில், தற்போது சர்வசங்கடமான பாராளுமன்றப் பிரவேசமே காத்திருக்கிறது.

தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன், முழு ஆசனங்களையும் பெற்று, ஆட்சியமைக்கும் கட்சியின் முடிவை நிர்ணயிக்கும் பலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வரவேண்டும் என்பதே உள்ளுர எமது திட்டமாக இருந்தபோது, கற்பனை பண்ணிக்கூடப் பார்க்காத சந்திரிகா வெற்றி, பொங்கி வரும்போது தாழி உடைந்த கதையாகிப் போனது.

<b>முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுகட்சிகளின் விழுக்கு</b>

பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையுள்ள கட்சியாக பாராளுமன்றம் நுழைந்தால் மட்டுமே, நாம் விரும்பும் அளவுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, எமது இலக்கை நோக்கி நகர வாய்ப்பு உருவாகியிருக்கும்.

சந்திரிகா கட்சிக்குத் தாவவேண்டிய தேவையேற்படலாம் என்ற வியூகத்தில், இறுதி நேரத்தில் ரணில் கட்சிக்கெதிரான கருத்துக்களைப் பரவலாகத் தெரிவித்து வந்தவர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் காங்கிரஸ் தற்செயலாக 8 ஆசனங்களைப் பெற்றிருந்தால், இம்முறை தேர்தலின் வெற்றி நாயகனாக ஹக்கீமே திகழ்ந்திருப்பார். அறுதிப் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியிருக்கும். 7 ஆசனங்கள் பெற்றிருந்தால் கூட, ஈ.பி.டி.பி. கைகொடுத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் உள்ளவை 5 மட்டுமே. அதனால், மனிதர் அடங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறார். (இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்தாக தயவுசெய்து எடுக்க வேண்டாம், ஹக்கீமின் தேர்தல் குறித்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வாதம்).

<b>பாராளுமன்றத்தில் தனிக்குரலாக ஒலிக்க முடியுமா?</b>

இப்போது நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், முற்று முழுதாக ஈழத் தமிழினத்தின் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு வாய்ப்பு வழங்கிய தேர்தலல்ல. மூன்றாவது பலமான கட்சியாக உருவெடுத்திக்கின்ற திருப்தியும், ஒரு தலைமையின் கீழ் ஒன்றாக நிற்கின்ற வெற்றியும் திருப்தியளித்தாலும், பாராளுமன்றத்தில் தனிக் குரலாக ஒலிப்பதற்கான பலத்தை நாம் நிஐமாகத் தவறவிட்டுள்ளோம் என்றே கருதவேண்டியுள்ளது.

இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விடயங்கள் சிலவும் உண்டு. குறைந்தது எட்டு ஆசனங்களையாவது தம்வசம் வைத்திருக்கும் ஹெல உருமய அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்க மறுக்கும் பட்சத்தில், மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாக, புதிய தேர்தலுக்கு நாள் பார்க்கும் நிலை வரும். ஹெல உருமய இணைந்து செயற்பட இணங்கும் பட்சத்தில் கூட, Nஐ.வி.பி.க்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே கருத்துமுரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்ட நிலையில், ஹெல உருமயவின் வருகை மேலதிக நெருக்கடிகளையே தோற்றுவிக்கும். தொழிலாளர் காங்கிரஸ் இணைவதற்கு இணங்குவதாக இருந்தால்கூட, அவர்கள் கேட்கப்போகும் முக்கிய இரு அமைச்சுக்களை ஏற்கனவே Nஐ.வி.பி. தனதாக்கிக் கொண்டுள்ள நிலையில், அதுவும் கல்லில் நாருரிக்கும் கதைதான்.

ஆக, இந்தத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர வெற்றி தரும் தேர்தலல்ல. இன்னுமொரு தேர்தல் வரலாம், அதுவும் மிக விரைவில் வரலாம் என்று பார்க்கும்போது, ஈழத்தமிழர்கள் இன்னும் செறிவாகத் தங்கள் ஆசனங்களை உறுதிசெய்து, மலையகக் கட்சிகளை முற்றாக ஒன்றிணைத்து, பாராளுமன்றத்தின் ஆட்சிப் பீடமேறும் கட்சியைத் தீர்மானிக்கின்ற பலத்தைப் பெறுவதே, எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் நிரந்தரப் பலத்தைத் தரும்.

நன்றி - காவலூர் கவிதன்/தமிழ்நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
More than 11,000 civilians flee Sri Lanka fighting

(AFP)

10 April 2004

TRINCOMALEE, Sri Lanka - More than 11,000 Sri Lankans have fled their homes since the Tamil Tigers launched an offensive on a breakaway rebel, officials said on Saturday, as relief workers used a lull in fighting to hand out relief supplies.


At least two civilians were reported killed and many more wounded since the main Tamil Tiger group launched a major offensive Friday to re-take territory held by a renegade regional commander just south of here, officials said.

The main civil administrator in the Batticaloa district, C. Punyamoorthy, estimated the number of people who fled their homes in the troubled areas was in excess of 11,000.

About 4,000 have moved to school buildings, but others have gone to safer areas to live with their friends or relatives, Punyamoorthy said. We are making arrangements to provide them with rations for three days.

The International Committee of the Red Cross (ICRC) said it had begun handing out emergency relief supplies such as plates, cups and other cooking utensils.

We are getting manpower from the local Red Cross society to help with the distribution, ICRC spokesman Sukumar Rockwood said amid a lull in fighting.

Military sources said only sporadic firing was heard overnight after intense battles Friday afternoon near the coastal town of Vakarai, which appeared to have fallen to the main rebel group.

The defence ministry said the new government considered the break out of factional fighting a violation of a truce arranged by peace broker Norway in February 2002 between the government and the main leadership of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

It is intended to inform the Norwegian facilitators to convey to the LTTE that this is a violation of the ceasefire agreement and the government expects to take up this issue with the LTTE leadership, a ministry statement said.

The President (Chandrika Kumaratunga) directed the chief of defence staff and service commanders to visit the area and take all necessary steps to enforce law and order, the ministry statement said.

It was not immediately clear how security forces could do so as the rebel fighting was concentrated in an area where government forces have no control.

The renegade leader, V. Muralitharan, better known by his nom de guerre Karuna, withdrew his fighters in the face of an onslaught of artillery, mortar bombs and automatic assault rifles, military sources said.

Karuna has said nine of his fighters were killed in the battles.

Aid workers and medical staff said two civilians were killed: an ambulance driver and a paramedic.

Seven child soldiers were among 15 people treated at two hospitals in Batticaloa, south of the Trincomalee port, doctors said. The Tigers have long faced international criticism for using underage fighters.

The main LTTE leadership based in northern Sri Lanka has vowed to get rid of Karuna who on March 3 broke away from the Tigers saying the LTTE ignored the interests of Tamils in the east.

The guerrillas are not known for tolerating dissent and previous challengers to the leadership of Tiger supremo Velupillai Prabhakaran, 49, had been eliminated ruthlessly.

The internecine fighting broke out a week after national elections that were narrowly won by Kumaratungas Freedom Alliance, which includes hard-liners opposed to concessions to the rebels.

Kumaratunga was due to induct a new cabinet of ministers Saturday, but she is expected to retain the key defence and finance portfolios.

Prabhakarans main LTTE this week called for a revival of peace talks with the incoming government, but warned it would return to fighting if it was not granted self-rule.

Diplomats said the fresh fighting further dimmed prospects for reviving the Norwegian-brokered peace process, which has been stalled since April.

More than 60,000 people have died in the three-decade campaign by the LTTE to set up a separate homeland for the Tamil minority.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணாவின் அணி பின்வாங்கியது

ஜ தீபன் ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 17:25 ஈழம் ஸ

சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கருணா தமது அணியில் வைத்திருப்பவர்களை பின்வாங்கச் செய்து, தான் இருக்கும் தொப்பிக்கல காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதாகத் தெரியவருகிறது.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகப் பணியாற்றும் இந்தியர் ஒருவர் கஐ_வத்தை எனுமிடத்திலிருந்து மேற்படி செய்தி நிறுவனத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கிய செய்தியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின் படியே இத் தகவலை வழங்கிய மேற்படி பத்திரிகையாளர், சுமார் 2,000 பேரை கருணா இவ்வாறு பின்வாங்கச் செய்து தனது தளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

வாகரைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலையடுத்து அங்கிருந்த சுமார் 500 கருணா அணியினர் அப்பிராந்தியத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக மேற்படி பத்திரிகையாளர் அக் குறிப்பில் எழுதியுள்ளதானது வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதையும், மேற்குறிப்பிட்ட 2,000 பேரில் ஏனையவர்கள் மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

மட்டக்களப்பின் எந்தெந்தப் பகுதிகளிலிருந்து இந்த பின்வாங்கல் இடம்பெற்றது என்ற விபரமேதும் தெரியாத போதும், தான் தற்போது பலாத்காரமாக இணைத்து வைத்திருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் வாகரையில் இடம்பெற்றதையடுத்தே இவ்வாறான நடவடிக்கையில் கருணா அணியினர் ஈடுபட்டிருக்கலாம் என பிறிதொரு செய்தி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை வைத்திருந்தால் தமது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குவதுடன், இவ்வாறான சரணடையும் சம்பவங்கள் மற்றும் தமக்கெதிராகப் போரிடும் சம்பவங்களைத் தவிர்க்கலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும், அத்தோடு தலைமைப்பீடத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையைச் சமாளிப்பதற்காகவும் இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச் செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தி ஆய்வாளர் கூறியுள்ளார். இதேவேளை கருணா அணியினர் தமது பின்வாங்கலின் போது இராணுவ ட்றக் வண்டியைப் பயன்படுத்துவதை காட்டும் புகைப்படம் ஒன்றை பிறிதொரு செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.

வாகரையில் இருந்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சண்டை பற்றி ஒரு பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த போது, 'கட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலையாக வெருகல் பக்கத்திலிருந்து திரண்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது கருணா போர்நிறுத்த காலத்தில் இணைந்த, புதிதாகப் பயிற்சி பெற்ற, சண்டைக்கள அனுபவமற்ற பல போராளிகளையே தன்வசம் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இ தற்கான காரணம் யாதெனில், ஏற்கனவே இணைந்த போராளிகள் தலைமைப்பீடத்தின் மீதான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதோடு, தலைமைப்பீடத்தின் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதே. ஏனினும் புதிய போராளிகளும் அவ்வாறான அணுகுமுறைகளையே மேற்கொள்வதால் தற்போது கருணா அணி குழப்பமானதொரு நிலையிலுள்ளது.

எனவே தனது அணியினர் மத்தியில் இருக்கும் போராளிகளின் தலைமைப்பீடத்தின் விசுவாசம் குறித்த அச்சத்தைக் கொண்டுள்ள கருணா யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தொப்பிக்கல மீது தாக்குதல் இடம்பெற்றால் கருணாவின் அணியின் முன்னணிப் போராளிகளே தலைமைப்பீடத்திற்கு உதவுவார்கள் என்பதையுமே களநிலமை குறித்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மட்டு. நிலவரம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்த அறிக்கை

ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 22:04 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவுக்கும், அவருடைய சகாக்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக கீழே தருகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா, தொடர்ந்தும் தலைமைப்பீடத்திற்கு எதிரான செயற்பாடுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு உந்துதலாக தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சக்திகளும் பின்புலத்தில் செயற்படுகின்றன.

கருணாவினால் இயக்க நடைமுறைக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தை எமது தலைமைப்பீடம் இரத்தக்களரி, உயிரிழப்புக்கள் இன்றி சுமுகமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது.

ஆயினும் போராளிகள் தமது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறி, இயக்கத்துடனோ அன்றி பெற்றோருடனோ இணைந்து கொள்வதற்கு தடையாக இருப்பது மட்டுமல்ல, போராளிகளை அழிப்பதற்கான செயற்பாடுகளிலும் கருணா இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களையும், போராளிகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தலைமைப்பீடம் தள்ளப்பட்டுள்ளது. எனவே கருணாவை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்;திலும், அநேக போராளிகள் எம்மிடம் திரும்பிவந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வீணான உயிரழப்புக்களைத் தவிர்ப்பற்கு, எஞ்சியுள்ள போராளிகளையும் இயக்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கோருகிறோம்.

இதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கான போராட்டத்தில் தமது பிள்ளைகளை மனமுவந்து இணைத்துவைத்த பெற்றோர்கள் கருணாவின் துரோகச் செயல்களுக்கு தமது பிள்ளைகளை பலியாக்கிவிடாது அவர்களை மீட்டு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம். என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இன்று பதவியேற்ற அமைச்சர்களின் விபரம்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 20:39 ஈழம் ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, இன்று ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்னிலையில் பதவியேற்றது.

1. பெருந்தெருக்கள் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஐபக்ஷ

2. கைத்தொழில், சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க

3. தபால் தொலைத் தொடர்புகள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.nஐயரத்ன

4. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரசிறி தொடாங்கொட

5. சுகாதார நலன் மற்றும் போஷாக்கு அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா

6. விமானப் போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர

7. சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி

8. வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்

9. வர்த்தக வாணிப நுகர்வோர் விவகார அமைச்சர் nஐயராஐ; பெர்னாண்டோ புள்ளே

10. ஆற்றுவள அபிவிருத்தி, ரஐரட்ட அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

11. நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் Nஐhன் செனிவிரத்ன

12. மகளிர் அபிவிருத்தி மற்றும் சமூக நல அமைச்சர் சுமேத nஐயசேன

13. நிதி அமைச்சர் - சரத் அமுனுகம

14. கிறிஸ்தவ மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் - மில்றோய் பெர்ணான்டோ

15. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ஐPவன் குமாரதுங்க

16. சமுர்த்தி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சர் - பவித்திரா வன்னியராச்சி

17. பெருந் தோட்டத்துறை அமைச்சர் - அனுர பிரியதர்சன யாப்பா

18. சுதேச மருத்துவ அமைச்சர் - திஸ்ஸ கரலியத்த

19. நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அமைச்சர் - தினேஷ் குணவர்த்தன

20. விவசாய, சந்தை அபிவிருத்தி, இந்து விவகாரம், தமிழ் மொழி பாடசாலை மற்றும் தொழிற் பயிற்சி வடக்கு அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா

21. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை கிழக்கு மாகாண கல்வி மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் - பேரியல் அஷ்ரப்

22. சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் - சுசில் பிரேமnஐயந்த

23. தொழில் உறவு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் - அதாவுட செனிவிரத்ன

24. பிராந்திய உட்கட்டமைப்பு அமைச்சர் - ஆர்.எம்.எஸ்.பி. நாவின்ன

25. திறமை அபிவிருத்தி தொழிற் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் - பியசேன கமகே

26. மாகாண சபைகள், உள்ளுராட்சி சபை அமைச்சர் - ஐனக பண்டார தென்னக்கோன்

27. போக்குவரத்து அமைச்சர் - பீலிக்ஸ் பெரேரா

28. தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - சி.பி.ரட்னாயக்க

29. கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் - ஏ.எல்.எம்.அதாவுல்லா

30. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - றெஐpனோல்ட் கூரே

31. விஞ்ஞான தொழில்நுட்பத் துறை அமைச்சர் திஸ்ஸ விதாரன

இன்று ஐனாதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கவில்லை.

Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
புலிகள் தாக்குதல்: தனது பகுதியைக் காக்க கருணா பகீரத முயற்சி

இலங்கை: நேற்றிரவு கருணாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பேர் இறந்தனர். சுமார் 300 கருணா ஆதரவாளர்கள் பிரபாகரன் படையினரிடம் சரணடைந்தனர்.

இதனால் சில கிலோ மீட்டர் பகுதி புலிகள் வசமானது.

2002 ஆம் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகள் தரப்பில் நடக்கும் பெரிய சண்டை இதுவே என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

புலிகளின் இந்தத்தாக்குதலை அடுத்து தோப்பிகலா பகுதியைப் பாதுகாக்க சுமார் 2000 பேரை கருணா அனுப்பியுள்ளதாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இப்பகுதி கொழும்பிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இப்பகுதிக்குச் செல்லவேண்டுமெனில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியைக் கடந்து சென்றாக வேண்டும். பிரபாகரன் தரப்பினர் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் நுழைந்தால் அது அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயலாகக் கருதப்படும்.

ஒருவேளை பிரபாகரன் தரப்பினர் இப்பகுதியில் ஊடுருவ முயன்றால் அரசுத்தரப்பினருடன் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காட்டுப்பகுதி தொப்பிகலாவிலிருந்து 6 மைல் தொலைவியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் நேற்றைய சண்டைக்குப் பிறகு அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

நேற்றைய தாக்குதலில் நிலைகுலைந்த கருணா படையைச் சேர்ந்த 500 பேர் வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர்.

கருணா படையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கடைசி வரை போராடுவோம் என்று கூறினார்.

இலங்கை ராணுவம் இப்பிரச்சினையில் தலையிடாமல், இருதரப்பிலும் உயிரிழந்தவர்களை மீட்க உதவுமாறு தன் ராணுவத்திற்கு அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

Thanx: Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிளவுகளும் பின்புலங்களும் கருணா - மாத்தையா

கருணா! மாத்தையாவை தொடர்ந்து விடுதலைப்போருக்கும் தேசியத்தலமைக்கும் துரோகம் இழைத்துள்ள மற்றுமொரு பெயர்.மாத்தையாவிற்கு வீசப்பட்டது போன்ற பதவி ஆசைதான் கருணாவிற்கும் வீசப்பட்டுள்ளது ஆனால் இம்முறை மிகச்சமார்த்தியமான முறையில் நடத்தப்பட்டுள்ளது இந்த நகர்வு.வெறுமனே பதவி என்கின்ற ஒன்றைவிடவும் பிரதேசவாதம் என்பதையும் மேம்படுத்தி இதில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.இதற்காக கிட்டத்தட்ட இரு
ஆண்டுகள் மேல் பிடித்துள்ளது. கருணாவிற்கு மிக நெருக்கமான வன்னித்தலமையோடு நெருங்கிய தொடர்புகள் அற்ற ஒருவரால் தொடர்ந்து போதிக்கப்பட்ட விடயங்களே இந்த நிலை மாற்றத்தின் அடிப்படை

இதைவிடவம் கருணாவின் உயிருக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை இராணுவம் முழுமையான ஆதரவை யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மாத்தையாவின் துரோகம் வெளி உலகிற்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை ஆனால் இம்முறை பிரச்சாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டது

உள்ளுரில் அராங்க ஊடகமும் தனியார் ஊடகம் ஒனறும் இதற்கென முன்கூட்டியே தயார்ப்படுத்தப்பட்டுள்ளன அதற்கு ஏதுவாக ஜனாதிபதியிடம் இருந்த அமைச்சுப்பொறுப்புகள்
இந்த விடயத்தை கையாண்ட இலங்கை பிரதிநிதியான கதிர்காமருக்கு வழங்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யயப்பட்டன.

இதேவேளை விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வளங்களின் கோட்டையாக கருதப்படும் ஐரோப்பாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி அங்கும் தமிழர்களின் ஒற்றுமையயை குலைப்பதன் மூலம் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்தி தேசியத்தலமையை பலவீனப்படுத்த பாரிய திட்டம் தீட்டப்பட்டது.

மட்டக்களப்பை சேர்ந்த நுNனுடுகு அமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளும் ராமராஜ்
தலமையில் ஆரம்பிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் நின்று போனதாக அறிவிக்கப்பட்ட வுடீஊ ஐ மீண்டும் உடனடியாக ஆரம்பிக்க பூரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 30000 அதிகமான பவுண்ஸ் மீளத்திறப்பிற்காக கைமாற்றப்பட்டள்ளது.


இந்த மீள் திறப்பிற்கு வரதராஐப்பெருமாளின் பிரதிநிதியான தம்பா நியமிக்கப்பட்டதோடு அவருடைய வழிநடத்தல்கள் முதன்மை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.கதிர்காமரின் ஆசிகளுடன் தேசிய சேவை வுடீஊ க்கு 1 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.நேயர் ஆதரவு குறைந்த தேசிய சேவையில் 1 மணி நேரம் நாள்தோறும் ஒலிக்கும் வுடீஊக்கு புலிகளின் சார்பு பத்திரிகைகளான சுடரொளி மற்றும் தினக்குரல் முலம்
முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டு இலங்கைதமிழ் மக்களை அதன் பால் ஈர்க்கும் தந்திரோபாயமும் கையாளப்பட்டதோடு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.வித்தியாசமான செய்திகளால் மக்கள் கவரப்பட்டாலும் அதனை நம்ப தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.

ஐரோப்பாவில் பிரதேசவாதத்தை சரியான முறையில் பரப்புவதோடு மாற்று கட்சி உறுப்பினர்கள் மூலம் புலிகள் மீதான வசைபாடல்களும் அதிகித்துள்ளன

கருணாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியபடி தலைமை மீது மக்களிற்கு தப்பான அபிப்பிராயங்கள் தோன்றும் வண்ணம் பழைய சம்பவங்களை கிளறி திரிபு படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர் .

கருணாவிற்கு வழங்ஙகப்பட்டதாக கருதப்படும் உறுதி
குறிப்பிட்ட தொகை படையினரோடு பிரிந்துவந்தால் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சராக கருணா அறிவிக்கப்படுவார். அதற்குரிய சரத்து இ.இ ஒப்பந்தத்தில் உள்ளது

ஐ.ம.சு முன்னணி ஆட்சி அமைத்தால் புதிய தீர்வு யோசனைகள் முன்வைப்பது சாத்தியப்படாது காரணம் துஏP எனவே இந்தியாவின் ஆதரவோடு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை து}சு தட்டி குறைந்தபட்ச சலுகைகளோடு கருணாவிடம் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை வழங்கி சர்வதேச சமூகத்திடம் தம்மை நல்லவர்களாக காண்பித்தல். அதேபோல் கருணாவும் பிரபாகரனும் முட்டி மோதி சண்டையிட்டு தமிழர்களின் பலத்தை குறைத்தபின் தமிழர்களை ஒரேயடியாக அடிமைப்படுத்துவது இந்த திட்டத்தின் இறுதிக்கட்டம்.

வரதராஜப்பெருமாள் இப்போது செல்லாகாசாகிப்போன நிலையில் அவருடைய ஆலோசகர் என்று கருதப்படும் தம்பாவையும் இந்திய தயவில் காலத்தை ஒட்டி அறிக்கைகள் விடும்
நுஇNஇனுஇடுஇகு அமைப்பின் உதவியினையும் கொண்டு பரப்புரைகளை வழங்கி பிரச்சனையை பெரிதுபடுத்தி அதன் மூலம் பிராந்தியத்தில் தனக்குள்ள ஒரே ஒரு பலம்மிக்க அச்சுறுத்தலான
புலிகளை பலவீனப்படுத்தவே இந்த முயற்ச்சி என்பது தெளிவான உண்மை.

இதைவிடவும் இலங்கையில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு சரியான பதில் ஒன்றை உறுதிப்படுத்தவும் புதிய கூட்டணி இந்த நகர்வினையே நம்பிஉள்ளது.கூடுதல்
வாக்காளர்களின் பக்கம் சாயக்கூடிய அரசியல் வரலாற்றைக்கொண்டுள்ள இ.தொ.க மற்றும்
முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றைவிடவும் இம்முறை 20 ஆசனங்களுக்கு மேலாக வெற்றிகொள்ளும்
என்று நம்பப்படும் த.தே.கூ பலத்தை சிதறடித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை தம்வசம தக்க
வைத்துக்கொள்வதற்காகவே இந்த காலப்பகுதி தேர்வுசெய்யப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில்
புழஎநசnஅநவெ ஆயமiபெ Pழறநச என்று வர்ணிக்கப்பட்ட த.தே.கூ பலத்தை சிதறடிப்பதோடு தமக்கு சார்பான டக்ளஸின் கட்சிக்கு கூடுதல் ஆசனங்களை பெற்றுக்கொடுத்து தமிழ் பிரதிநிதித்துவம் தமக்கு ஆதரவு என்ற மாயையை தோற்றுவிக்கும் ஏற்பாடு இது.

வடக்கு கிழக்கிற்கான குறைந்தபட்ச அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் ஐனாதிபதி முன்பு திட்டமிட்டது போல் கருணாவிற்கு வழங்கப்படும் அதேவேளை மத்தியில் கூட்டாட்சி அமைக்கப்போகும் டக்ளஸின் ஆதரவும் இதற்கு வழங்கப்படுவதன் மூலம் வி.புலிகள் இன்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டுவிட்டதாக சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதோடு.வி.புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு என்ற போர்வையில் இந்திய படைகள் தமிழீழத்திற்கு நகர்த்தப்படும் சாத்தியங்களும்
தோன்றியுள்ளன. இதனை தொடர்ந்து விடுதலைப்பலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்தேறும்.


முன்பு தேசியசேவை ஊடாக மட்டுமே ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் தற்போது தென்றல் ஊடாக இலங்கை முழுவதற்கும் எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது ஈ.பி.டீ.பியின் பிரச்சார பத்திரிகையிலும் விளம்பரம் இடம்பெற்றுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்க மற்றுமொரு அம்சம்.

விடுதலைப்புலிகளின் தலமை மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற படுகொலைகள கைது நடவடிக்கைகள் தலைவர் பிரபாகரனின் நேரடி
நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டவை என்ற செய்தி புலிகளோடு சேர்ந்தியங்கிய கருணாவின் மூலமாக வெளியாகி பரப்பப்படுவதற்கு இந்த ஊடகங்களை பயன்படுத்தல் இதன் மூலம்
சர்வதேச சமூகத்திடம் தலமை பிழையானது என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்தல் ஆகிய அம்சங்களே முக்கிய இடம் பிடித்துள்ளமை கண்கூடு.

Thanx" அபிராம் & தமிழ் ஓசை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கருணாவுக்கு எதிரான தாக்குதலில் மாங்கேணி நோக்கி முன்னேறும் புலிகள்
விலகிவரும் போராளிகளுடன் பெற்றோர் சந்திக்க ஏற்பாடு

<img src='http://www.thinakkural.com/2004/April/10/map.jpg' border='0' alt='user posted image'>

மட்டக்களப்பு, திருகோணமலை எல்லைக்குச் சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, கருணா குழுவினருக்கெதிரான தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் மாங்கேணி நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கும் வெருகல் பகுதியில், மிகக் குறுகிய தரை வழிப் பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிýல் வைத்திருந்த கருணா குழுவினர் இரு மாவட்டங்களையும் பிரிக்கும் ஆற்றுக்குத் தெற்கே நிலை கொண்டிýருந்தனர்.

இதேவேளை, அந்தக் குறுகிய பிரதேசத்தின் ஆற்றுக்கு வடக்கே விடுதலைப் புலிகள் நிலை கொண்டிýருந்தனர்.

விடுதலைப் புலிகள் தங்கள் மீது எவ்வேளையிலும் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆயத்தங்களுடன் கருணா குழுவினர் இந்தப் பகுதியில் நிலை கொண்டிýருந்தனர். வாழைச்சேனைக்கு வடக்கே மாங்கேணி முதல் வெருகல் வரையிலான பகுதிகளுக்கான கட்டளைத் தளபதியாக கருணாவின் சகோதரர் ரெஜி (விநாயகமூýர்த்தி சிவநேசத்துரை) நியமிக்கப்பட்டிýருந்தார்.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கதிரவெளிக்கும் வாகரைக்கும் இடையேயுள்ள கடலோரப் பகுதியான பால்ச்சேனைப் பகுதியில் பல படகுகள் மூýலம் திடPரெனத் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் பாதுகாப்பாக நிலை கொண்டதுடன், கருணா அணியினருக்கெதிராக வடபகுதி நோக்கியும், தென்பகுதி நோக்கியும் பாரிய தாக்குதலை ஆரம்பித்தன.

வெருகல் ஆற்றுப் பகுதியை மையமாக வைத்து வடபகுதியை நோக்கி பால்ச்சேனையிலிருந்து புலிகளின் படையணியொன்று பாரிய நகர்வொன்றை ஆரம்பித்த அதேநேரம், பால்ச்சேனையில் தரையிறங்கிய புலிகளின் மற்றொரு படையணியொன்று கண்டலடிýப் பகுதியை மையமாக வைத்து தென்பகுதியை நோக்கி பால்ச்சேனைப் பகுதியிலிருந்து முன்னேறத் தொடங்கியது.

விடுதலைப் புலிகள் பாரிய அளவில் படகுகள் மூýலம் பால்ச்சேனைப் பகுதியில் தரையிறங்கி திடPர்த் தாக்குதலை ஆரம்பித்த பின்பே, தங்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஆரம்பமானது கருணா குழுவினருக்குத் தெரிய வந்தது.

பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியையே முக்கிய மையமாக இலக்குவைத்து மோட்டார்கள் மற்றும் கனரக ஆயுதங்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னேறத் தொடங்கிய அதேநேரம், வெருகல் ஆற்றுக்கு வடக்கே தங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகள் ஆட்லறிகள் மற்றும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டு வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கி முன்னேறி வரும் படையணிக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிýருந்தனர்.

பால்ச்சேனைப் பகுதியிலிருந்து வெருகல் ஆற்றுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிýருந்த விடுதலைப் புலிகளின் படையணிக்கும், கருணா தரப்பினருக்குமிடையே அதிகாலை ஒரு மணியளவில் கடும் சமர் வெடிýத்த அதேநேரம், பால்ச்சேனைக்குத் தெற்கே கண்டலடிýயை நோக்கி முன்னேறிய புலிகளின் படையணிக்குப் பாரிய எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதிகாலை ஒரு மணிமுதல் 3 மணிவரை கடும் மோதல் நடைபெற்ற அதேவேளை, புலிகளின் படையணி கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வெருகல் ஆற்றங்கரையை அண்மித்தது.

இதேவேளை, பால்ச்சேனையிலிருந்து கண்டலடிý ஊடாக தெற்கு நோக்கி நகரத் தொடங்கிய புலிகளின் படையணி பாரிய எதிர்ப்புகளின்றி அதிகாலை நான்கு மணியளவில் வாகரைக்குச் சமீபமாகச் சென்றடைந்தது.

வெருகல் ஆற்றுப் பகுதியில் கருணா குழுவினர் சற்று எதிர்ப்புக் காட்டிýயதால், அதிகாலை 3 மணியின் பின்னர் தங்கள் தாக்குதலின் வேகத்தைச் சற்றுத் தளர்த்திய புலிகள், ஏனைய பகுதிகளில் இருந்து கருணா குழுவினரை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிýனர்.

<b>ஜெயம் படுகாயம்</b>

ஆட்லறிகள் மற்றும் மோட்டார்களின் உதவியுடன் முன்னேறிய புலிகள் கனரக ஆயுதங்கள் மூýலம் இந்தத் தாக்குதலை நடத்தியதில் வாகரைப் பகுதிக்கான கருணா குழுவின் முக்கிய தளபதி ஜெயம் படுகாயமடைந்தார்.

இதேவேளை, வெருகல் ஆற்றுப் பகுதியில் நிலை கொண்டிýருந்த கருணா குழுவினரின் படையணிக்குப் பொறுப்பாக இருந்த, 'கருணாவின் சகோதரரான ரெஜி" அங்கிருந்து தப்பிச் சென்று வாகரையை வந்தடைந்ததாக நேற்றுக் காலை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, புலிகளின் பாரிய தரையிறக்கம் மற்றும் தாக்குதலை அடுத்து கருணா குழுவினரில் பலர் அவ்விடங்களை விட்டு தப்பிச் சென்றதாகவும் இதேவேளை, 400க்கும் மேற்பட்ட போராளிகள் ஆயுதங்களுடன் வந்து விடுதலைப் புலிகளின் படையணிகளுடன் இணைந்து கொண்டதாகவும், இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் புலிகளின் தளபதி ஒருவர் தெரிவித்தார்.

<b>கதிரவெளி கட்டுப்பாட்டிýல்</b>

இதேவேளை, வாகரையிலிருந்து வடக்குப் புறமாக சுமார் 12 கி.மீ.தூரத்தில் இருக்கும் கதிரவெளிப் பகுதியிலுள்ள கருணா குழுவின் முகாம் பகுதியை சுற்றி வளைத்த கடற்புலிகள், அப்பகுதியில் கடும் தாக்குதலை நடத்தியபோது கருணா குழுவினர் கடும் எதிர்ப்புக் காட்டாது அங்கிருந்து விலகிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், கதிரவெளியிலுள்ள கருணா குழுவின் முகாமிற்குப் பொறுப்பாக இருந்த மார்க்கானுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லையென அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 3 மணிக்குப் பின்னர் பாரிய மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே இரு தரப்பிற்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நடைபெற்றதாகவும், விட்டுவிட்டு துப்பாக்கிச் சூýட்டுச் சத்தங்களும், மோட்டார் குண்டுச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிýருந்ததாகவும் சம்ப10ர்ப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கருணாவை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிýருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதேநேரம், குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் கருணா குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு போராளிகளை விடுவிக்கும் நோக்கிலும் இந்த நடவடிýக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று அதிகாலைக்குப் பின்னர் பாரிய மோதல்கள் இடம்பெறாதபோதிலும், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிýக்கைகள் கிழக்குக் கடற்பரப்பில் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகளின் நடவடிýக்கைகள் கடற்பரப்பினூடாகவே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பிற்குமிடையே கடும் சமர் ஆரம்பித்ததையடுத்து, தக்க சமயத்தில் கருணா குழுவிலிருந்து விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த பொறுப்பாளர் சிலர் உட்பட பெருமளவு போராளிகள் எதுவித எதிர்ப்பும் காட்டாது புலிகளின் அணிகளுடன் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பால்ச்சேனைக்கு வடக்கேயும், தெற்கேயும் முன்னேறிச் சென்ற விடுதலைப் புலிகள், ஆங்காங்கே கருணா குழுவினரின் முகாம்களை பெட்டிý வடிýவில் சுற்றி வளைத்துள்ளதாகவும் வெருகலில் பெரும் பகுதியும், கதிரவெளிப் பகுதியும் புலிகளின் ப10ரண கட்டுப்பாட்டிýற்குள் வந்துவிட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவித்தன.

பால்ச்சேனைக்குத் தெற்கே முன்னேறிச் சென்ற புலிகளின் அணிகள், பாரிய எதிர்ப்புகள் எதுவுமின்றி வாகரைப் பகுதியையும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிýருப்பதாகவும், வாகரைப் பகுதியின் காட்டுப் பகுதிகளை அண்டிýய பனிச்சங்கேணி மற்றும் கட்டுமுறிவுப் பகுதிகளில் ஆங்காங்கே மோதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கருணாவின் முக்கிய தாக்குதல் பிரிவின் பொறுப்பாளரான ஜிம்கலித் தாத்தாவின் அணியை நோக்கி நேற்று மாலை தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

தற்போது விடுதலைப் புலிகள் வாழைச்சேனையிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டிýருப்பதாகவும், இவர்கள் மேலும் முன்னேறுவதற்கான அறிகுறி இருக்கும் அதேநேரம், மட்டக்களப்பு - கொழும்பு வீதியைத் தாண்டிýச் சென்றால் மட்டுமே, தற்போது கருணா இருக்கும் தொப்பிக்கல பகுதிக்குச் செல்ல முடிýயும் என்பதால் புலிகளின் அணி முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபடக் கூýடும் எனவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

<b>மட்டக்களப்பில் இராணுவத் தளபதி</b>

நேற்றுப் பிற்பகல் விசேட ஹெலிகொப்டர் மூýலம் மட்டக்களப்பிற்குச் சென்ற கூýட்டுப்படைகளின் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல் லயனல் பலகல மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோர் மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் நீண்டநேரச் சந்திப்புகளை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.

விடுதலைப் புலிகள், கருணா இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி முன்னேறுவதானால் மட்டக்களப்பு - கொழும்பு வீதியை கடந்தே செல்ல வேண்டிýயிருக்கும். தற்போது இந்த வீதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிýலேயே இருக்கின்றது. விடுதலைப் புலிகள் இந்த வீதியை கடந்து செல்லாதவாறு தடுப்பதில் படையினர் பெரும் முனைப்புக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிýருந்தபோது, வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிýருந்த, கருணாவின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான முக்கிய பொறுப்பாளராகக் கருதப்படும் பிள்ளையான் என்பவர் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பிலிருந்து வெளி மாவட்ட மக்களை துரத்தும் நடவடிýக்கையில் மிக மும்முரமாக பிள்ளையான் இருந்தவர் எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றபோது அவர்களுக்கு கருணா அணியினரைக் காவலுக்கு அனுப்பியதுடன், அவர்களை அங்கிருந்து மீண்டும் பலவந்தமாக மட்டக்களப்பிற்கு கொண்டு வந்ததில் பிள்ளையானுக்கே முக்கிய பங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்றைய மோதல்களின்போது கருணா குழுவிலிருந்து விலகி வந்து தங்களுடன் இணைந்த நூற்றுக் கணக்கான போராளிகளை அவர்களது பெற்றோர் சந்திக்க உடனடிýயாக ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அமைப்பிலிருந்து விலகிச் செல்ல விரும்பும் போராளிகளுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வன்னியிலுள்ள புலிகளின் தலைமையுடன் தொடர்பு கருணா தரப்புடன் தொடர்பெதுவுமில்லை
- கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர்

மட்டக்களப்பில் இடம்பெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை என்பதால் அதில் தாம் தலையிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் துணைத் தலைவர் ஹொக்லண்ட் தமக்குக் கருணா தரப்பினருடன் எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து நேற்றுக் காலை 11 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தை சந்தித்துப் பேசியுள்ளேன். இது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இச் சண்டையில் அரசாங்கப் படைகள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனினும், இச் சண்டை சமாதான நடைமுறைகளுக்கு ஆபத்தானது.

இச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்தோ, கருணா தரப்பினரிடமிருந்தோ, அரசாங்கப் படையினரிடமிருந்தோ புகார்கள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை.

எனினும், இப்போது நடைபெறுவது விடுதலைப் புலிகளின் உள் விவகாரப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் என அவர்கள் சகல தரப்பினரையும் எச்சரித்துள்ளனர். இப் பிரச்சினையில் இராணுவம் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனவே, மோதல் நடைபெறும் இடத்திற்கு நாங்கள் போக முடியாது. போகப் போவதுமில்லை.

எமக்கும் கருணா குழுவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், வன்னியில் உள்ள புலிகளின் தலைமைப் பீடத்துடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.

இப்போது நாங்கள் கிழக்கின் நிலைவரம் பற்றி விசாரணை செய்து வருகிறோம். ஆனால், அங்கு சண்டை தொடர்ந்தால் எம்மால் அங்கு செல்ல முடியாது. செல்லப் போவதுமில்லை.

நாம் இப்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் செயற்படுகிறோம். கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செயற்படவில்லை. கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் செல்லவில்லை. செல்லவும் முடியாது. செல்லப் போவதுமில்லை.

தற்போதைய சண்டை கருணாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெறுவதால் நாங்கள் அங்கு செல்லப் போவதில்லை.

Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதலுக்கு செல்ல இடமளிக்கப்படாது
- கிழக்கு மாகாண படையதிகாரி தெரிவிப்பு

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதல்களுக்குச் செல்ல புலிகளுக்கோ அல்லது கருணா தரப்பினருக்கோ இடம் கொடுக்கப் போவதில்லையென கிழக்கு மாகாண படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் பற்றி அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ளது. அதில், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல புலிகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் செல்ல படைத் தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை இராணுவம் இதுவரை மீறவில்லை. புலிகளும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமக்கு புலிகளென்றோ கருணா குழுவென்றோ வேறுபாடு கிடையாது. பொதுவாக அவர்களை நாம் புலிகளாகவே பார்க்கிறோம்.

அதனால் புலிகள் ஆயுதங்களுடன் எமது பகுதிகளுக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எவராவது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மற்றப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முனைந்தால், அதற்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனையும் மீறி செயற்பட முனைந்தால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விடயத்தில் இராணுவம் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும்.

எங்களைப் பொறுத்தவரை போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பையும் முழு உர்hர் நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
ஹெல உறுமயவின் நடவடிýக்கை ஆச்சரியத்தை தருவதாக கூýறுகிறார் ஆனந்தசங்கரி

ஜாதிக ஹெல உறுமய கட்சி தனது தேசியப் பட்டிýயல் மூýலமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எனக்கு வழங்க முன்வந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது என்று தமிழர் விடுதலை கூýட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.

தேசியப் பட்டிýயலில் இடம் பிடிýக்க சிலர் படும் பாட்டையும், எமது கட்சி உறுப்பினர் சிலர் தமது கொள்கைகள், இலட்சியங்களை தூக்கி எறிந்து விட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற கையாண்ட நாகரிகமற்ற தன்மைகளையும் பார்க்கும் போது, ஜாதிக ஹெல உறுமய கட்சி இப்பதவியை எனக்குத் தரமுன்வந்தமையை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக கருதுவதோடு எனக்கு அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வது, எனது நிலைப்பாட்டிýற்கு நியாயமாகாது என தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூýற விரும்புகின்றேன்.

கடந்த தேர்தலில் நான் சுயேச்சைக் குழுவாக கட்டாயத்தின் நிமித்தம் போட்டிýயிட்டாலும் எனது கட்சியின் கொள்கை, இலட்சியங்களுக்கு கட்டுப்பட்டே இயங்குகின்றேன். எனது கட்சியை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டிýய புனிதமான கடமையும் எனக்குண்டு.

எனது கட்சிக்குள்ளேயே 1990, 1995, 1999 ஆகிய வருடங்களில் மூýன்று முறை தேசியப் பட்டிýயலில் உறுப்பினராகும் வாய்ப்பை கொள்கை அடிýப்படையில் நிராகரித்தவன் நான்.

எனது கட்சியில் உள்ள சிலரைப் போல் பட்டம், பதவி தேடிý யாருக்கும் பின்னால் போகிறவன் அல்ல நான் என்பதை எனது ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுதியாக கூýறுகின்றேன்.

Thanx: Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மின்னஞ்சலில் வந்த செய்தி ஒன்று ... வெப்தள முகவரி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உங்கள் கருத்துக்களுக்காக ....

<b>மட்டுநகர் செய்தியாளர்களுக்கு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
மிரட்டல்.</b>

மட்டுநகரில் வாழும் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் அதற்காக குரல் கொடுக்கும்
செய்தியாளர்களுக்கும் மட்டக்களப்பு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
அங்கிருந்து கனடிய தமிழ்வானொலி , லண்டன் சங்கமம் வானொலி , தமிழ்வெப்றேடியோ ஆகிய
ஊடகங்களின் செய்தியாளர்களை உதயகுமார் அச்சுறுத்தி வருகிறார். முன்னர் ஐரோப்பியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளரான இவர் கருணாவை விடுதலைப்புலிகள்
இயக்கத்திலிருந்து நீக்கியதன் பின்னர் கருணாவுக்கு எதிராக தான் செய்தியைத்தரமாட்டேன் என முரண்பட்டு வந்தார். அப்போது அங்கிருந்து உண்மையான நிலவரங்களை அறியத்தந்து கொண்டிருந்த செய்தியாளர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று தான் சொல்லும்வரை கருணாவுக்கு எதிராகச் செய்திகளை வெளியில் கொடுக்கக்கூடாது என உளரீதியாக செய்தியாளர்களை தாக்கத்துக்கு உள்ளாக்கி வந்தார்.

சங்கமம் வானொலியின் பணிப்பாளருடனும் கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவது பற்றி
முரண்பட்ட உதயகுமாரை சங்கமம் நிர்வாகம் தமது வானொலியிலிருந்து நீக்கியது. வானொலி
தன்னை நீக்கியதால் மாதாமாதம் தனக்குக் கிடைத்து வந்த கொடுப்பனவை இழந்து போன
உதயகுமார் தற்போது நமது செய்தியாளர்களை கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவதற்கு
தண்டனையை விரைவில் அனுபவிக்கப்போகிறீர்கள் எனவும் மிரட்டிவருகிறார்.

நேற்றுமுதல் செய்தியாளர்கள் பலர் செய்தி வழங்குவதிலிருந்து விலகி ஒரு அடக்முறைக்கு
மத்தியில் தமது உண்iiயான குரல்களைக் காட்ட முடியாது இக்கட்டான நிலையில் இருப்பது
வேதனை தரும் விடயமாகவுள்ளதை புலம்பெயர் உறவுகள் புரிந்து கொண்டு இந்தச்
செய்தியாளரின் செயலைக்கண்டிக்குமாறு வேண்டுகிறோம்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற தமிழரசுக் கட்சியின்
வெற்றிகளை காதில் வாங்கிக் கொள்ளாது பீபிசி தமிழ்ச்சேவையானது ஆனந்தசங்கரி ,
டக்ளஸ் தேவானந்தா போன்றோரை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு தமிழர்
மனங்களை பீபீசி தமிழோசை நோகடித்ததை நாம் மறந்து விடவில்லை. நேற்றைய பீபீசி
தமிழோசை செய்தியில் கூட கருணாவின் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டும வகையில்
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராளிகள் மீட்புப்போரை கொச்சைப்படுத்தும் முகமாக செய்திகளை வெளியிட்டது.

யாருக்கோ தமது விசுவாசத்தை நிலைநாட்டும் தமிழோசைக்கு செய்தி வழங்கும் செய்தியாளர்
உதயகுமாரின் இச்செயலை அனைத்துப்புலம் பெயர் தமிழர்களும் கண்டிப்பதோடு இப்படியான
செய்தியாளர்களினை இனங்காண வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

குறிப்பு - உதயகுமார் சங்கமம் பணிப்பாளருடன் தான் கருணாவின் ஆள் எனக்கூறிய
ஒலிப்பதிவும் சங்கமம் வானொலி நிர்வாகத்திடம் ஆதாரமாக உள்ளது. தேவை ஏற்படும் போது
உதயகுமாரின் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் அடங்கிய எதிர்புக்குரலை
நேயர்களுக்குத் தருவோம்.

ஊடகவியலாளன் என்பதன் அர்த்தத்தை மறந்து மட்டக்களப்பைச் சேர்ந்த தேசிய நேசம்மிக்க ஊடகவியலாளர்கள் பலரை உதயகுமார் மிரட்டிவருவதானது இனிவரும் காலங்களில்
மட்டக்களப்பிலிருந்து செய்திகள் வெளியுலகுக்கு சவருவதை தடுத்து நிறுத்தும் என்பதனை நாம்
புரிந்து கொண்டு உதயகுமாரின் இத்தகைய போக்கினைக்கண்டித்து உண்மையான
ஊடகசுதந்திரத்துக்காக குரல் கொடுப்போம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka army to restore law, order amid Tiger war

Colombo, April 10. (PTI): Sri Lankan security forces have been ordered to restore law and order in the island's east amid a fighting between Tamil Tiger factions even as the new Government said it will take up with peace broker Norway, the issue of the internecine war because it was "violation" of an Oslo-arranged truce.

The fighting, which erupted between the main Liberation Tigers of Tamil Eelam (LTTE) and their rival faction in the east of the country yesterday had caused civilian casualties, the Defence Ministry said in a statement.

"The President directed the chief of defence staff and service commanders to visit the area and take all necessary steps to enforce law and order," it said.

It was not immediately clear how security forces would move to restore law and order as the rebel fighting was concentrated in an area where Government forces have no control.

However, the Defence Ministry said peace broker Norway, will be informed of the intense fighting with a complaint that the outbreak of hostilities was a violation of the truce that is in force since February 2002.

"It is intended to inform the Norwegian facilitators to convey to the LTTE that this is a violation of the ceasefire agreement and the Government expects to take up this issue with the LTTE leadership," the statement said.

The rebel fighters are led by regional commander V. Muralitharan, better known as Karuna.

நன்றி - த ஹிண்டு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதலுக்கு செல்ல இடமளிக்கப்படாது
- கிழக்கு மாகாண படையதிகாரி தெரிவிப்பு

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதல்களுக்குச் செல்ல புலிகளுக்கோ அல்லது கருணா தரப்பினருக்கோ இடம் கொடுக்கப் போவதில்லையென கிழக்கு மாகாண படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் பற்றி அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ளது. அதில், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல புலிகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் செல்ல படைத் தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை இராணுவம் இதுவரை மீறவில்லை. புலிகளும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமக்கு புலிகளென்றோ கருணா குழுவென்றோ வேறுபாடு கிடையாது. பொதுவாக அவர்களை நாம் புலிகளாகவே பார்க்கிறோம்.

அதனால் புலிகள் ஆயுதங்களுடன் எமது பகுதிகளுக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எவராவது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மற்றப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முனைந்தால், அதற்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனையும் மீறி செயற்பட முனைந்தால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விடயத்தில் இராணுவம் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும்.

எங்களைப் பொறுத்தவரை போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பையும் முழு உர்hர் நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thanx: Thinakkural

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர் நடமாடி வருகின்றனர்
படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து வர்த்தகர்களை மிரட்டியுள்ளனர்

இலங்கை இராணுவம் என்ன சொல்ல வருகிறது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றா?
\" \"
Reply
Eelavan Wrote:
BBC Wrote:இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதலுக்கு செல்ல இடமளிக்கப்படாது
- கிழக்கு மாகாண படையதிகாரி தெரிவிப்பு

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதல்களுக்குச் செல்ல புலிகளுக்கோ அல்லது கருணா தரப்பினருக்கோ இடம் கொடுக்கப் போவதில்லையென கிழக்கு மாகாண படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் பற்றி அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ளது. அதில், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல புலிகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் செல்ல படைத் தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை இராணுவம் இதுவரை மீறவில்லை. புலிகளும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

எமக்கு புலிகளென்றோ கருணா குழுவென்றோ வேறுபாடு கிடையாது. பொதுவாக அவர்களை நாம் புலிகளாகவே பார்க்கிறோம்.

அதனால் புலிகள் ஆயுதங்களுடன் எமது பகுதிகளுக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எவராவது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மற்றப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முனைந்தால், அதற்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனையும் மீறி செயற்பட முனைந்தால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விடயத்தில் இராணுவம் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும்.

எங்களைப் பொறுத்தவரை போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பையும் முழு உர்hர் நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Thanx: Thinakkural

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர் நடமாடி வருகின்றனர்
படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து வர்த்தகர்களை மிரட்டியுள்ளனர்

இலங்கை இராணுவம் என்ன சொல்ல வருகிறது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றா?

இலங்கை அரசாங்கள் சொல்வது பிரபாகரன் தலைமையிலாம புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியை உபயோகிக்க முடியாது என்பது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசாங்க படைகள் செயற்படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அதுவே வாழைச்சேனைக்குள் புகுவதற்கும் அங்கிருந்து தொப்பிக்கலவுக்கோ மட்டக்களப்பின் இதயப்பகுதிக்கோ செல்வதற்கும் மட்டக்களப்பு-கொழும்பு வீதிதான் ஒரே மார்க்கமென இராணுவம் நினைப்பின்
விடுதலைப்புலிகளை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எண்ணத் தோன்றும்
\" \"
Reply
கருணாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை

<img src='http://www.yarl.com/forum/files/ltte.jpg' border='0' alt='user posted image'>

Saturday, 10 April 2004

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவுக்கும், அவருடைய சகாக்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக கீழே தருகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா, தொடர்ந்தும் தலைமைப்பீடத்திற்கு எதிரான செயற்பாடுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு உந்துதலாக தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சக்திகளும் பின்புலத்தில் செயற்படுகின்றன.

கருணாவினால் இயக்க நடைமுறைக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தை எமது தலைமைப்பீடம் இரத்தக்களரி, உயிரிழப்புக்கள் இன்றி சுமுகமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது.

ஆயினும் போராளிகள் தமது சொந்த விருப்பத்தின்பேரில் வெளியேறி, இயக்கத்துடனோ அன்றி பெற்றோருடனோ இணைந்து கொள்வதற்கு தடையாக இருப்பது மட்டுமல்ல, போராளிகளை அழிப்பதற்கான செயற்பாடுகளிலும் கருணா இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களையும், போராளிகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தலைமைப்பீடம் தள்ளப்பட்டுள்ளது. எனவே கருணாவை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்;திலும், அநேக போராளிகள் எம்மிடம் திரும்பிவந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வீணான உயிரழப்புக்களைத் தவிர்ப்பற்கு, எஞ்சியுள்ள போராளிகளையும் இயக்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கோருகிறோம்.

இதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கான போராட்டத்தில் தமது பிள்ளைகளை மனமுவந்து இணைத்துவைத்த பெற்றோர்கள் கருணாவின் துரோகச் செயல்களுக்கு தமது பிள்ளைகளை பலியாக்கிவிடாது அவர்களை மீட்டு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
\" \"
Reply
Eelavan Wrote:அதுவே வாழைச்சேனைக்குள் புகுவதற்கும் அங்கிருந்து தொப்பிக்கலவுக்கோ மட்டக்களப்பின் இதயப்பகுதிக்கோ செல்வதற்கும் மட்டக்களப்பு-கொழும்பு வீதிதான் ஒரே மார்க்கமென இராணுவம் நினைப்பின்
விடுதலைப்புலிகளை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எண்ணத் தோன்றும்

கருணவின் பகுதிக்குள் புலிகளால் போகமுடியாது என்று நானும் நினைக்கவில்லை. அரசபடைக்கள் இருக்கும் பூகோள நிலைமையை பார்க்கும்போது புலிகளின் முன்னேற்றத்துக்கு கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தலாம். அவ்வளவுதான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நிச்சயம் புலிகளுக்கு சிரமத்தைஏற்படுத்தத் தான் போகின்றார்கள்

முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் சந்திரிகாவுடன் கலந்தாலோசித்துள்ளனர் முதற்கட்டமாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் ஆதாரத்துடனான முறைப்பாடு செய்வதற்காக தருணத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் இருபக்கதிலும் காயமடைந்தவர்களை மீட்டல் என்ற பெயரில் கருணா தரப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்றைய நிலையில் யாழ் மருத்துவ அதிகாரிகளின் வெளியேற்றம் எவ்வளவு தவறான முடிவு என்பது புலப்பட்டிருக்கும்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 20 Guest(s)