Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
Breaking News
இன்றைய உணமை நிலையை காட்டும் ஒ'ரு நல்ல தெளிவான கேலிச்சித்திரம்.
Reply
சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் எம்.பி.க்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கட்சி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டிýருக்கும் தேசியப் பட்டிýயல் உறுப்பினர்களில் இரண்டு தமிழர்களும், இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

அந்தப் பட்டிýயலின் முழு விபரம் வருமாறு:

லடீ;மன் கதிர்காமர், பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, சட்டத்தரணி சேகு. இஸ்ஸதீன், சட்டத்தரணி அன்வர் இஸ்மயில், டிý.யு.குணசேகர, கீதாஞ்சன குணவர்தன, ஜனதாச பீரிஸ், ராமலிங்கம் சந்திரசேகரன், பிலிப் குமார லியனகே, ஈ.ஏ.டிý.சி. வீரசேகர, மேரி லுசிற்றா, வசந்த சமரசிங்க.

நன்றி - தினக்குரல்

யார் இந்த ராமலிங்கம் சந்திரசேகரன்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
LTTE demands talks on self-rule plan

COLOMBO, APR 8 (PTI)

Tamil Tiger rebels today demanded that the new Sri Lankan government open peace talks with them based on their blueprint for self rule which was previously rejected by President Chandrika Kumaratunga.

The demand was made through LTTE's proxy Tamil National Alliance (TNA) which won 22 seats in the April 2 elections and has emerged as a powerful force in a hung parliament.

"The TNA urges that steps be taken forthwith to commence negotiations with the LTTE... for the setting up of an Interim Self-Governing Authority, on the basis of the proposals submitted by the LTTE," the TNA said in a statement.

It said government must recognise the LTTE as the sole representatives of minority Tamil community which accounts for about 12.5 per cent of the island's 19 million population.

"We strongly submit that the agony and anguish of the Tamil people cannot continue and there is an imperative need to bring the same to an end without further delay." The statement came as President Kumaratunga said her new government was preparing to open peace talks with Tamil Tiger rebels, but did not give details.

"We shall undertake all necessary actions to re-commence negotiations with the LTTE," Kumaratunga said in an address to the nation last night.

Kumaratunga said she wanted to establish peace but did not say when the talks would begin or whether LTTE's blueprint unveiled on October 31 last year would be the basis.

Kumaratunga's Freedom Alliance, which won 105 seats in the 225-member assembly and is set to nominate a cabinet tomorrow to lead a minority government, had opposed the LTTE's self-rule plan.

நன்றி - Outlook India
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
பி.பி.சி கேட்டது

சில ஆண்டுகளுக்கு முன் யாரிந்த லக்ஷ்மன் கதிர்காமர் என்று கேட்டோம்..அதைப்போதலவேதான் இவரும் ஜே.வி.பியின் கையாள்..என்ன கனவுகளோடு களமிறங்கியிருக்கிறாரோ தெரியவில்லை..வெற்றோன் தொலைக்காட்சியில்இவரது நேர்காணல் பார்த்தேன்..கதிர்காமருக்கு எதிர்காலத்தில் அல்வா கொடுப்பார்போலுள்ளது..கழுவியதில் நழுவிய மீனாக தன்னை இனம் காட்டுகிறார்..

Reply
முன்பு ஒரு செய்திதளத்தில் வாசித்தது
கதிர்காமரின் வாரிசு என்று ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார்கள்.
அப்போதுதான் தெரிந்தது வம்சம் வம்சமாகவே தமிழை அழிக்கவென்று கங்கணம்கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் ஓரு கூட்டம் இந்த கதிர்காமர் என்று

இப்போது ராமலிங்கம் சந்திரசேகரன்
இவரும் அவ்வாறே இருப்பார் போல தோன்றுகின்றது

ஒரு தமிழன் இப்படி சுதந்திர முண்ணனியின் தேசியப்பட்டியலில் அங்கம் வகிக்கின்றார் எனும்போதே தெட்டத்தெளிவாக விளங்கும் இவரும் முழங்காலிற்கும் மொட்டந்தலைக்குமு; முடிச்சுப்போடும் கதிர்காமர் வம்சதான் என்று
[b] ?
Reply
இன்றைய அரசியல் ம் இ;ல்லை இலங்கை இந்தியாவின் கைப்பொம்மை என்பதை கடந்த இருதினங்களினுள்ளேயே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதது.பாராளுமன்ற தேர்தல் அதை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

கட்டுக்காசே எடுக்கமுடியாமல் தோற்றுப்போன ஆனந்தசங்கரிக்கு ஓர் ஆசனம் ஒரு ஆசனமே பெற்ற ஈபிடிபிக்கு ஒர் முதன்மை ஆசனம் போன்றவற்றை வழங்க சந்திரிகா அரசு முன்வந்துள்ளது. இதன் பிண்ணனியில் இந்தியா இருப்பது வெளிச்சமாகியுள்ளது.

ஆட்டத்தொடங்கிவிட்டார்கள் இனி எல்லாமே ஆட்டம்தான்
[b] ?
Reply
நல்லகாலம் இந்த முறையும் "வராத"ராஜப்பெருமாளை அனுப்பி அவருக்கும் ஒரு கதிரை கொடுக்கவேண்டும் என்று கேட்காமல் விட்டார்கள்

இலங்கை அரசுகள் ஒரு புறத்தில் கோடரிக்காம்புகளை உருவாக்குகின்றன என்றால் இந்திய அரசுகள் பட்ட மரங்களை நீரூற்றித் தளிர்க்கச்செய்கின்றன

Reply
பிரதமர் தேர்வுக்கு முதல்நாள் BBCசிங்கள சேவையில் இடம்பெற்ற பேட்டியின் போது அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு சில அரசியல்வாதிகள் கொடுத்த சுவாரசியமான பதில்களை இங்கு தருகிறேன்.

அறிவிப்பாளர்: கதிகாமர் மகிந்த இவர்களில் யார் பிரதமராக வந்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன்: மகிந்த ராஜபக்ஸவே சிறந்தவர். இவருக்காவது அரசியல்தெரியும். கதிர்காமருக்கு என்ன தெரியும்?

(JVP)சோமவன்ச: இவர் ( கதிர்காமர்) நேர்மையான மனிதர். மகிந்த ராஜபக்ஸ ஒரு தெருக் குடிகாரன்.

அறிவிப்பாளர்: (சந்திரிகாவின் செயலாளரிடம்) ஒரு பிரதமரைத் தெரிவு செய்யும் ஆரம்பமே பிரச்சனையாக இருக்கிறதே நீங்கள் எப்படி சமாதான நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

சந்திரிகாவின் செயலாளர் : இந்த பிரச்சனை உடனடியாகத் தீர்ந்துவிடும்.

அறிவிப்பாளர்: சரி இனி சபாநாயகர் யார்? அதுவும் முக்கிய பிரச்சனையாச்சே ? எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர் ஒருவரே சபாநாயகராக வேண்டும். பிரதமர் தேர்விலே இவ்வளவு இழுபறியென்றால் அது இதைவிட இழுபறியாக இருக்குமே?

சந்திரிகாவின் செயலாளர் : அதுபற்றி அதிபர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்) யுத்தமொன்றுக்கு போக வேண்டிய நிலை வந்தால் தர்மம் போதிக்க வேண்டிய நீஙகள் என்ன செய்வீர்கள்?

ஹெல உறுமய தேரர்: பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் யுத்தத்துக்கு போவதில்லையே.

அறிவிப்பாளர்:அதைக் கேட்கவில்லை யுத்தத்துக்கான தேவைகள் அதாவது நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால்.............?

ஹெல உறுமய தேரர்: செய்யும் காரியம் நல்லதாக இருந்தால் ஆதரவளிப்போம்.

அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்)தமிழர் ஒருவர் பிரமராக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஹெல உறுமய தேரர்: அவரும் இந்த நாட்டு குடிமகன்தானே? அது பெரும்பாலானவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

அறிவிப்பாளர்: ஜேவீபியினருடனான வெறுப்பு காரணமாகத்தான் சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுக்க மறுப்பதாக பேச்சடிபடுகிறதே?

ஹெல உறுமய தேரர்:ஜேவீபியிலுள்ள குழந்தைகள் தேர்தல் காலத்தில் எவ்வளவோ இழிவு படுத்தினார்கள். சாணி அடித்தார்கள் , எம்மை தாக்கினார்கள் , கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறை நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும்.

[b]எப்படி ஓடும் இந்த வண்டி?????????????????

Reply
அனுரத்த ரத்வத்தை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் வருகை?

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 2:18 ஈழம் ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 13 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் விபரங்களை, அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஐயந்த் தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர், விஸ்வா வர்ணபாலா, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ரிஷ விதாரண, கீதாஞ்சனா குணவர்த்தன, செகு இசாடின், அன்வர் இஸ்மாய்ல், ராமலிங்கம் சந்திரசேகரன், ஐனதாச பீரிஸ், இ.டி.சி.வீரசேகர, குமாரசிங்க லியனகே, எச்.எம்.வசந்த சமரசிங்க, Nஐ.ஏ.மேரி லுசிடா ஆகியோரே இவ்வாறு தேசிய ஆசனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், ஐனாதிபதி மாளிகையிலிருந்து கசிந்துள்ள இரகசியத் தகவல்களின்படி, இந்தப் பதின்மூன்று பேரில், மூவர், ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னதாக தாங்களாகவே ராஐpனாமா செய்வார்கள் என்றும், அந்த இடங்களுக்கு முன்னாள் பிரதம மந்திரி ரத்னசிறீ விக்கிரமநாயக்க, முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தை உட்பட இன்னுமொருவர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது. மூன்றாவதாக நியமிக்கப்படவுள்ளவர் ஆனந்தசங்கரியாக இருக்கலாம் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

வழங்கப்படுகின்ற பட்டியிலில் இவர்களைச் சேர்க்குமிடத்து Nஐ.வி.பி.யிலிருந்தும் சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களிட மிருந்தும் சிங்கள மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கும் சந்திரிகா, இரகசிய ஒழுங்கின்படி, இப்போது அறிவிக்கப்பட்டவர்களில் மூவர் பதவிவிலகுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதாகப் பிந்திய இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
அஜீவன் செய்திகஇகு நன்றி .இப்படி இடைக்கிடை சிங்கள ஊடகங்கள் பார்வையையும் போட முடிந்தால் நன்று(நேரம் கிடைக்கும்போது)
Reply
சங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய பட்டியலில் இடமளிக்க வலியுறுத்து

விடுதலைப்புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு தலை வணங்காது போராடி வரும் வீரத்தமிழரான ஆனந்தசங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசியப்பட்டியலில் இடமளிக்குமாறு அதிஉயர் பீட உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதால் இது தொடர்பாக கட்சிதீவிரமாக ஆராய்ந்து வருவதாக கட்சியின் அதி உயர் பீட உறுப்பினரான ஓமல்பே சோபித்த தேரர் கேசரிக்குத் தெரிவித்தார்.

புலிகளின் அச்சுறுத்தலை சந்தித்து கொண்டிருக்கும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். சுயேச்சைகுழுவில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினாலும் ஆனந்தசங்கரிபாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவது அவசியமாகும்.

இத்தேசியப்பட்டியல் உறுப்புரிமையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரது விருப்பத்தை பொறுத்ததாகும் என்று ஓமல்பே சோபித்த தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அதுரத்லிய ரதன தேரரிடம் இதுதொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழர்களின் ஜனநாயகத்திற்கான ஏகோபித்த குரலாக ஆனந்த சங்கரியை நாம் கருதுகிறோம். எனவே அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றார்

நன்றி - வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
எம்மையாரும் கடத்தவில்லை சபை கூடியதும் கொழும்பு செல்வோம் அம்பாறை புதிய உறுப்பினர் கூறுகிறார்

கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்று கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிக்கு திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பி வந்தது குறித்து கொழும்பு ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் தெரிவித்துள்ளார். எம்மையாரும் கடத்திவரவில்லை. பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் எமது தொகுதிகளுக்கு திரும்பியிருக்கிறோம். பாராளுமன்றம் கூடும்போது மீண்டும் கொழும்பு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்

நன்றி - வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
கிழக்கு தமிழ் எம்.பி.க்கள் நால்வர் பாதுகாப்பாக மட்டக்களப்பைச் சென்றடைந்தனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இராணுவ பாதுகாப்புடன் வியாழன்காலை மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர். கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களான த.கனகசபை, செல்வி தங்கேஸ்வரி, கதிர்காமன், கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரே மட்டக்களப்பு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கொழும்பு நகரிலேயே தங்கியுள்ளார். அவர் சுயாதீனமாக கட்சித் தலைமையுடன் இணைந்து செயற்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கிழக்கு மாகாண புலிகள் அமைப்பின் தளபதியக இருந்து விலக்கப்பட்ட கேணல் கருணாவுக்கு அனுசரணையாக செயற்படுபவர் என்று நம்பப்படுகிறது. அம்பாறை மாவட்ட தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.பத்மநாதன் இதுவரை தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கிளிநொச்சியில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்திக்க மாட்டார்களென கருணா தரப்பு உத்தியோக பூர்வ நாளிதழான "தமிழ் அலை' செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
உரிமைகளை மறுத்தால் தமிழீழமே தீர்வு ஐ.நா.சபையும் அங்கீகரிக்க வேண்டும்ஜெனிவாவில் கரிகாலன்

சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தால் பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஜெனிவாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியின் கட்சியிலேயே இருக்கிறார்.பொதுத் தேர்தலில் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது தென்னிலங்கை சக்தியாக உள்ளது. இச் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா ? என்பது சந்தேகமே . உலக நாடுகள் சிங்கள அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்.இல்லையேல் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.தந்தை செல்வாவின் கனவை நனவாக்கி தமிழீழத்தை அமைக்கவும் புலிகள் தயங்கமாட்டார்கள்.

தமிழ்த் துரோகிகளையும்,தமிழின விரோதிகளையும் வெற்றி கொண்டதன் மூலமே புலிகள் இயக்கம் பலம் வாய்ந்த இயக்கமாக உருவாகியுள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த 20 இற்கு மேற்பட்ட அமைப்புகள் அழிந்தொழிந்த பிற்பாடும் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றும் மாபெரும் இராணுவக் கட்டமைப்புடன் தேசியத் தலைவரின் பின்னால் அணி திரண்டு நிற்கிறது.

தமிழின துரோகி அல்பிரட் துரையப்பாவை சுட்டு போராட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்த தலைவர் கிழக்கிலங்கை நெருக்கடியை வெற்றி கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் கருத்தை தொடர்ந்தும் பலப்படுத்தவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
பொடா வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்யுமாறு பொடா ஆய்வுக்குழு உத்தரவு

ஜ தமிழ்நாட்டிலிருந்து மணியரசன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 8:39 ஈழம் ஸ

பொடா வழக்கிலிருந்து வை.கோபாலாசாமி மற்றும் அவருடன் கைது செய்யப்ட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசிற்கு மத்திய பொடா ஆய்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ உட்பட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தனர். மத்திய அரசால் அமைக்கப்பட்ட பொடா ஆய்வுக்குழு, வைகோ மற்றும் அவருடன் கைதான 8 பேர் மீதான பொடா வழக்கு சரிதானா என்று ஆய்வு செய்து, நேற்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியததைத் தவிர, இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்தவித தீவிரவாதத்திலும் ஈடுபட்டதாகவோ வன்முறையைக் கையாண்டதாகவோ எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

எனவே, தடை செய்யப்ட்ட இயக்கத்திற்கு வாய்மொழி மூலம் மட்டும் ஆதரவு தெரிவிப்பது குற்றமல்ல என பொடா ஆய்வுக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

நன்றி - புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
புனர்வாழ்வு அமைச்சருக்கான பொறுப்பை தனக்கு வழங்குமாறு டக்ளஸ் கோரிக்கை

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 7:50 ஈழம் ஸ

புனர்வாழ்வு அமைச்சரிற்கான பொறுப்பு தனக்கு வழங்கப்;;;பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா சிறிலங்கா ஐனாதிபதியைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் புனர்வாழ்;வு அமைச்சு மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்;படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்;கப்படு;ம் போது, அவர்கள் டக்ளஸ் தேவானந்தாவை புனர்வாழவு அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு நிபந்தனை விதிக்கலாம் என்ற காரணத்தினாலேயே, டக்ளஸ் தேவானந்தாவை புனர்வாழ்வு அமைச்சராக நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், இப்பதவிக்கான பொறுப்;பை யாரிடமும் வழங்காது தனது கட்டுப்பாட்டின் கீழேயே சிறிலங்கா ஐனாதிபதி வைத்திருக்க விரும்புவதாக மேலும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி - புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறு புதிய அரசிடம் கருணா கோரிக்கை

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 7:48 ஈழம் ஸ

புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சமாதான நடவடிக்கைகளில் தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டுமென கருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்;;டியிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்குத் தளபதி கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் எடுக்கப்படும் சமாதானத் தீர்வு தொடர்பான முடிவுகளை, கிழக்கு மாகாண மக்களிடம் திணிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ள கருணா,வரப்போகின்ற பேச்சுவார்த்;தைகளில் கிழக்கு மாகாண தமிழர்களிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அணி; தனித்தரப்பாக பங்குபற்றவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்பாக கருத்துக் தெரிவித்துள்ள கருணா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு என்ற வகையில், மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும் எனத் தான் நம்;புவதாகவும், இன்றைய நிலையில் போரைத் தாம் விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு, கிழக்கில் ஒரு ஐனநாயக செயல் திட்டத்;;தைக் கட்டியெழுப்பவே தாம் விரும்புவதாகவும், இதனைப் புரிந்து கொண்;;டு புதிய அரசாங்கம் தம்;மை ஒரு தனித்தரப்பாக அணுகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை புதிய பிரதமர் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கருணா, மஹிந்த ராஐபக்ஷ நல்ல அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதோடு அவர் ஒரு நல்ல மனிதர் எனக் குறிப்பிட்டிருப்பதுடன், புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
கருணாவைத் தனிமைப்படுத்தும் முயற்சி ஆரம்பம்

ஜ தீபன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 9:17 ஈழம் ஸ

இன்று கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, வெருகல் ஆற்றைக் கடந்து சென்ற புலிகள் அங்கே எதிர்த்தாக்குதல் புரிய முயன்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்கும் நோக்கிலான முதற்கட்ட நடவடிக்கையே தற்போது ஆரம்பமாகியிருக்கலாம் என மட்டக்களப்பைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கதைத்த போது தெரிவித்தார்.

குறிப்பாக அன்னைபூபதியின் நினைவு நாளை மட்டு-அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் புலிகள் கொண்டாடியுள்ளதானது அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக தற்போது வைத்திருக்கக்கூடிய நிலையில் பல பிரதேசங்கள் இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனவும் இந்தச் சண்டையில் வாகரைப் பிரதேசமும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளை ஆபத்தின்றி விடுப்பதற்காகவே சில தளபதிகள் அவருடன் இன்னமும் தொடர்ந்து இருப்பதாகவே மட்டக்களப்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகத் தெரிவித்த மேற்படி பத்திரிகையாளர், கருணா பிளவுபட்டத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலான காலத்தை விடுதலைப்புலிகள் அமைதியாகக் கழித்ததானது பெரும்பான்மையான கிழக்கு மாகாண மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வழிவகுத்தது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சில இடங்களில் புலிகள் ஊடுருவியுள்ளனர் என்பது உண்மையே என கருணாவின் நெருங்கிய சகாவாகச் செயற்படும் வரதன் என்பவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பல இடங்களில் கேட்டதாகவும், ஆனாலும் காயமடைந்தவர்கள் யாரும் இன்னமும் வைத்தியசாலைகளிற்கு வரவில்லையெனவும் அருகிலுள்ள வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நன்றி - புதினம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
Eight killed as heavy fighting erupts between two Tamil Tiger rebel factions; Sri Lankan forces on red alert

Associated Press, Fri April 9, 2004 02:06 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer- COLOMBO, Sri Lanka - (AP) Heavy mortar shelling and gunfire erupted Friday between two Tamil Tiger rebel factions, killing at least eight guerrillas and wounding five, in Sri Lanka - 's first battle since a 2002 cease-fire halted its civil war, the rebels and the military said. The split between the factions has complicated efforts to settle Sri Lanka - 's two-decade civil war, which has killed 65,000 people. Last Friday, a political alliance led by President Chandrika Kumaratunga, who has taken a tough line toward the rebels, won the most seats in parliamentary elections, defeating the party led by former Prime Minister Ranil Wickremesinghe, who initiated the most recent round of peace efforts two years ago. Kumaratunga accused him of being too soft on the Tigers. On Monday, the Tigers warned they'd go back to war with the government if their demands for sweeping autonomy in Tamil-majority northeast Sri Lanka - were not met. They say the minority Tamils face widespread discrimination from the ethnic Sinhalese majority.Kumaratunga who was left blind in one eye by a Tiger assassination attempt has refused in the past to give the rebels the degree of autonomy they want. The main rebel faction has warned it might target Muralitharan and his supporters for assassination
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
Tigers Clash in Batticaloa Heavy fighting as Prabhakarans cadres infiltrate Karuna's territory

Bandula Jayasekara in Colombo, SLT 12.20 P.M Friday 9 April. Heavy fighting erupted between LTTE leader Vellupillai Prabhakarans and Eastern leader Karuna's faction from early morning on Friday. Both groups fought using heavy mortar fire and claymore mines as over 200 of Prabhakarans men infiltrated the areas under Karunas control. Military sources say that Prabhakarans cadres tried to move forward from Vakarai north and there have been casualties on both sides including civilians. Casualty figures were not known at the time of writing. Prabhakarans faction has reportedly given instructions to launch a propaganda war against his arch rival Karuna with a view to demoralizing Karuna and to boost the moral of fundraisers.
On Wednesday, Karuna told this correspondent that he would try everything possible to avoid shedding blood in the country again. "But, despite all our attempts , if they go on the offensive, we will be forced to defend ourselves" added Karuna.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply

Forum Jump:

Users browsing this thread: 6 Guest(s)