Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாற்சந்தியில்............
#1
உவர் சங்கரி யாழ்ப்பாணத்திலை போட்ட வோட்டுச் செல்லாது எண்டு முறைப்பாடு செய்தவரெல்லோ அப்ப ஈ.பி.டி.பி காரரும் சேர்ந்து சொன்னவையாம் திரும்பத் தேர்தல் வைக்கவேணும் எண்டு

இரவு தியேட்டரிலை வைச்சுத் தானாம் குத்தியனுக்கு தோழர்கள் விளங்கப்படுத்தினவை திரும்பத் தேர்தல் வந்தால் கிடைச்ச பதினெட்டாயிரத்திச் சொச்சமும் கிடைக்காது எப்பிடியெண்டாலும் நீங்கள் தானே அமைச்சர் உதோடை விட்டிடுங்கோ எண்டு

பிறகு சொல்லிச்சினமாம் தேர்தல் ஆணையாளரிட்டை எப்பிடியிருந்தாலும் கண்காணிப்புக் குழுவின்ரை முடிவை தங்கள் மதிக்கினம் எண்டு
Reply
#2
தேர்தல் முடிஞ்ச இரவு குத்தியன்ரை "தோழர்கள்" அக்கம் பக்கம் இருக்கிற கம்பச் பொடியள் வீட்டை போய் சொன்னவையாம் "தோழர் தலைவர்" டக்ளசு தான் இனி பழையபடி அமைச்சர் நீங்கள் தொடர்ந்து கம்பசிலை இருக்கிற கெட்டித்தனம் பாத்துப் போடுறம் எண்டு
Reply
#3
சங்கரியார் கொழும்புக்குப் போறதுக்கு முன்னம் தெரிஞ்சவையிட்டைச் சொன்னாராம் அவன் பாவி அண்ணை சேர்ந்து வேலை செய்யலாம் கவலைப் படாதேங்கோ எண்டு சொல்லீட்டு கடைசியிலை கவிழ்த்துப் போட்டான் இப்ப அவன் எம் பி ஆகிட்டான் நான் நடுத்தெருவிலை நிற்கிரன் எண்டு

இவ்வளவு நாளும் ஆமிப் பாதுகாப்போடை தன்னும் வந்து போனன் இனி அதுகூட கிடைக்குமோ தெரியாது எண்டு கவலைப்பட்டாராம்
என்ன கேடு கெட்டாலும் கூட்டணியை உவங்களுக்கு விட்டுக் குடுக்கமாட்டன் எல்லாத்தையும் கோட்டிலை பார்ப்பம் எண்டாராம்
Reply
#4
இப்பவே தோழர்மார் தொடங்கீட்டினமாம் முதல் வேலையா எலக்ஷனுக்குக் கூட்டு வைச்ச ஈ.பி. காரரை காய் வெட்டவேணும் எண்டு கதைக்கினம்
Reply
#5
எப்ப பாத்தாலும் வெறி..

அலம்பிறதை விட்டிட்டு பேசாமல் போய் படும் காணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
அதென்ன வல்லை யாழ்பாண ரவுன் கதையெல்லாம் விலாவாரியாக விர்றியல்.......அந்தமாதிரி........அவங்கட உள்வீடு விவகாரம் எல்லாம் வலு விளக்கமாய்....வைக்கிறியள்.
குறை நைக்காதேங்கோ....உங்க மட்டகிளப்பிலயும் என்ன நடந்தது.....கொஞ்சம் .....விடுங்கோ.......
Reply
#7
உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞயமான கேள்விதான்
Reply
#8
உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞாயமான கேள்விதான்
Reply
#9
kiRukkan Wrote:அதென்ன வல்லை யாழ்பாண ரவுன் கதையெல்லாம் விலாவாரியாக விர்றியல்.......அந்தமாதிரி........அவங்கட உள்வீடு விவகாரம் எல்லாம் வலு விளக்கமாய்....வைக்கிறியள்.
குறை நைக்காதேங்கோ....உங்க மட்டகிளப்பிலயும் என்ன நடந்தது.....கொஞ்சம் .....விடுங்கோ.......

தம்பியாணை சொல்லுறன் நல்ல கேள்விதான் கேட்டாய் ஆனால் பதில் தான் எனக்குத் தெரியலையப்பு

எனக்கு மூக்காலை ஒழுகிற சளிதான் தெரியும் முக்காலமும் உணர்ந்து கதைக்கத் தெரியாது

அடிக்கடி ரவுணுக்குப் போவன் உங்கினேக்கை இருக்கிரதுகளும் போயிட்டு வரேக்கை நிண்டு நாலு கதையளைக் கதைக்குங்கள் அதுகலைத் தான் சொல்லுறன் அதாலை தான் வல்லையின் உளவு எண்டோ இழவு எண்டோ போடாமல் நாற்சந்தி எண்டு போட்டனான்

நாற்சந்தியிலை நானும் கதைக்கலாம் நீரும் கதைக்கலாம் ஓரளவுக்கு கிடைச்ச செய்தியளை நான் போடுறன் மட்டக்களப்பிலை உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்கள் போடுங்கோ

சும்மா பொழுதுபோகாமல் வாயாட்டுற நேரம் இந்தக் கதையளை வாயுக்கை வைத்திருந்தால் பொழுதும் போகும் விசயமும் தெரியும்

_________________
Reply
#10
யாழ்ப்பாணத்திலை அரசியல் துறையிலை இருக்கிறவை சொல்லிச்சினமாம் உவர் சங்கரி தங்கடை அரசியல் வகுப்புக்கு ஒழுங்கா வந்து பாடங்கேட்டிருந்தா இப்ப உந்த நிலமை வந்திருக்காதாம்

இப்ப சீற்றும் போய் சீலைத்தொங்கலும் கைவிட்ட நிலைமை ஆச்சுதாம்

உவை பொடிப்பிள்ளையளுக்கென்ன தெரியும் அந்தாள் மயிர் நீப்பினும் உயிர் நீக்கா கவரிமான் பரம்பரையெண்டு அந்தாள் பிரான்சுக் கம்பேசிலை படிச்சவாட்டை அரசியல் படிச்ச ஆள் அவருக்கு உவை என்னத்தை சொல்லிக் குடுப்பினம் குடுத்தாலும் என்ன ஏறப்போகுது
Reply
#11
மணிபல்லவன் எண்டு சொல்லுவினம் தியேட்டர்காரரிலை ஒருவர் உண்மைப் பெயர் நிசாந்தன்

அவரை தெரிஞ்ச ஒருத்தர் கேட்டாராம் என்ன தம்பி உங்கடை தலைவருக்குத் தான் அமைச்சர் பதவி கிடைக்கும் எண்டு சொல்லிச்சினம் இப்ப கதை வேறை மாதிரிப் போகுது எண்டு

அவர் தொடங்கினாராம் தூஷணத்தாலை அர்ச்சனை அம்மாவை இழுத்து அவ இவ எண்டு திட்டி அல்வா குடுக்கிரதுக்கு இவளைக் கேட்டுத்தான் எண்டு முடித்தாராம்

இவர் கொடுப்புக்குளை சிரிச்சாராம் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும் எண்ட மாதிரி நீங்கள் அல்வாக் குடுத்த காலம் போய் உங்களுக்கே அல்வாவா எண்டு
Reply
#12
அரவிந்தன் எண்டொருத்தர் சங்கரியின்ரை வால்
யாழ்ப்பாண ரவுணுக்குள்லை நோட்டீசு குடுத்துக் கொண்டிருக்கேக்கை தோழர் ரண்டு பேர் மோட்டச்சயிக்கிள்ளை வந்தவையாம் இவரை ஏதோ நக்கல் அடிச்சிச்சினமாம்

இவர் சொன்னாராம் வன்னியிலையிருந்து வந்தவங்களையும் நம்பலாம் உவங்களை நம்பக்கூடாது எண்டு கேட்டுக் கொண்டிருந்த ரெக்னிக்கல் கொலிஜ் பொடியள் கொல்லெண்டு சிரிச்சாங்களாம்

சிவ சிவா உதுதானே சொல்லுறவை சேரிடம் அறிந்து சேர் எண்டு
Reply
#13
quote="Kanthar"]உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞாயமான கேள்விதான்[/quote]

கந்தர் உந்தப்படம் எங்கை சுட்டனீங்கள் நல்ல வடிவாயிருக்கு

உங்களைப் பாக்கேக்கை ஒருக்கால் கேட்கவேண்டும் எண்டு நினைச்சனான்
உங்கை கரவெட்டிக்கை குடில் புடுங்கிக் கந்தசாமி எண்டொருத்தரைச் சொல்லுறவை

மனிசன் அசதியிலை கண்ணை மூடிச்சுதாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைச்சு சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கிறதுக்கு விறகை அடுக்கிட்டு கொள்ளிக்குடம் சுத்திர நேரம் மனுசன் திடுக்கிட்டு நித்திரையாளை எழும்பின மாதிரி எழும்பிச்சுதாம் அதுதான் அந்தாளுக்கு அந்தப்பெயர்

நீங்கள் தான் அந்தாளோ எண்டு எனக்கு ஒரே ஐமிச்சம்
Reply
#14
வல்லை இதுக்க தனிய என்ன புலம்பல்?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வல்லை அந்த வைரவகோயில் இப்பவும ;வல்லையில் இருக்கோ???
Reply
#16
vasisutha Wrote:வல்லை இதுக்க தனிய என்ன புலம்பல்?

வாயாலை சொல்லிக் காதாலை கேட்டதுகளுக்கு என்னாலை ஆதாரம் காட்ட முடியாது மற்றப் பக்கங்களிலை அதுகளைச் சொன்னா திட்டினம் வதந்தி பரப்புறனாம்

அதுதான் நான் கேள்விப்பட்டதுகளை நாற்சந்தியிலை சொல்லுறன் நாலு பேர் வந்து போற இடம் நாலு சனத்துக்கு நாட்டு நடப்பு தெரியட்டுமன்

அதைவிட்டிட்டு தனியப் புலம்புறனே தனியப்புலம்புறனே எண்டு நாகேஷ் மாதிரி வசனம் கதைக்கேலாது
Reply
#17
யாழ்/yarl Wrote:வல்லை அந்த வைரவகோயில் இப்பவும ;வல்லையில் இருக்கோ???
அது வைரவர் இல்லை முனியப்பர்

முந்தி கொழும்பு போரவைக்கு காவல் தெய்வம் கோட்டை முனியப்பர்

இப்ப முருகண்டியார்

ஒரு காலத்திலை யாழ்ப்பணம் ரவுண் போட்டு வாறதே பெரிய கஷ்டம் அண்டிலிருந்து இண்டைக்கு வரைக்கும் முனியப்பர் தான் சனத்துக்கு துணை
Reply
#18
கொஞ்ச நாள் பொறுங்கள் வல்லையின் தொல்லைகள் என்று யாராவது புதிய தலைப்பு ஆரம்பிக்கிறார்களா பார்ப்போம்
\" \"
Reply
#19
vallai Wrote:
Kanthar Wrote:உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞாயமான கேள்விதான்

கந்தர் உந்தப்படம் எங்கை சுட்டனீங்கள் நல்ல வடிவாயிருக்கு

உங்களைப் பாக்கேக்கை ஒருக்கால் கேட்கவேண்டும் எண்டு நினைச்சனான்
உங்கை கரவெட்டிக்கை குடில் புடுங்கிக் கந்தசாமி எண்டொருத்தரைச் சொல்லுறவை

மனிசன் அசதியிலை கண்ணை மூடிச்சுதாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைச்சு சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கிறதுக்கு விறகை அடுக்கிட்டு கொள்ளிக்குடம் சுத்திர நேரம் மனுசன் திடுக்கிட்டு நித்திரையாளை எழும்பின மாதிரி எழும்பிச்சுதாம் அதுதான் அந்தாளுக்கு அந்தப்பெயர்

நீங்கள் தான் அந்தாளோ எண்டு எனக்கு ஒரே ஐமிச்சம்

வல்லை நீங்கள் நினைக்குமாபோல குடில் புடுங்கி கந்தசாமி இல்லை நான்.
உங்களுக்கு தெரிஞ்சிராது, யமன் வேலாயுதத்தின்ர பேரன் நான். என்ரை அப்பு பேர்போன மாட்டுவண்டில் சவாரிக்காரர் மாணிக்கத்தார். அவற்றை கடசி வடி நான் - கந்தவனம்
நாங்கள் பத்து சகோதரங்கள். ஒரு பொம்பிள பிள்ளை இல்லை எண்டு என்ரை அப்பு போகாத கோயில் இல்லை. என்ரை ஆச்சி தான் சாவும் வரை உதை சொல்லி ஆழாத நாள் இல்லை.

வல்லை............ ம்.......... உதுகளை விடுவம் இப்ப.......
விசயத்துக்கு வாரன்.. அதுக்கு முதல் நீங்கள் ஆசைபட்டு கேட்டதுக்கும் நான் சொல்லுறன்.
கூகிள் போட்டன் ஓல்ட் இந்டியன் மான் எண்டு.. இமேஜை கிளிக் பண்ண ...........சொல்லி மாளாது..
ஒரு தொகை...அதில ஒண்டுதான் உந்த படம்.........

நீங்கள் சீவிக்குமாபோல இல்லை நான் இருக்கிற நாடு. உங்களுக்கென்ன வேலை செய்தா என்ன இல்லாட்டில் என்ன அரசாங்கம் படி அளக்குமாம்.. என்ரை பாடு அப்பிடி இல்லை..அதாலை சிலநேரம் என்னாலை களத்துக்கு முழு நேரம் வரேலாது.

அதுக்காக மனிசன் கண்ண மூடிட்டார் எண்டு புரளியை கிளப்பி விட்டுடாதேங்கோ.......

வருவன்....நான் வருவன்
நான் யமன் வேலாயுதத்தின்ரை பேரன்...........

வல்லையையும் தெரியும் வல்லை முனியையும் தெரியும்
வல்லை வெளில பறக்கிற குருவியளையும் தெரியும்
Reply
#20
ஐயோ நீங்கள் யமன் வேலாயுதம் எண்டு சொன்னதை நான் யேமன் வேலாயுதம் எண்டு வாசிச்சிட்டு குழம்பிப் போனன்

உங்களுக்கு வல்லை முனியைத் தெரியுமோ உந்தப் பேய் பிசாசுகளோடை நல்ல வாலாயம் இருக்குது போலை

எனக்குப் பென்சன் கிடைக்கிறதில்லை கோழி மேச்சாலும் கோறணமேந்திலை மேய்க்கோணும் எண்டு ஆச்சி சொல்லுவா கேட்காமல் விட்டிட்டன் இப்ப வாழைப்பழ யாவாரம் செய்யுறன்

நீங்கள் வந்தா நானும் வராமல் விடன்
நான் வல்லை முனி....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)