Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
#81
கள்ள வோட்டு போட்டால் என்ன கள்ளமில்லாமல் போட்டால் என்ன...அதை யார் யார் சொல்லுறது எண்டு இல்லாமல் போச்சு....கள்ளனே தன் கையே தனக்குதவி எண்டு நிக்கிறான் போல....கள்ளனுக்கே குலப்பன் அடிக்குது....இப்ப போட்ட கள்ள வாக்கில கிடைச்சது ஒண்டெண்டா இன்னோரு தரம் சனம் வாக்குப் போட்டுதோ அதுவும் கிடையாது...திருவிழாவுக்க அறுத்த தாலிக் கொடியோட ஓடித் தப்பினால் அங்கால அம்மா சிம்மாசனத்தில ஏத்துவாவாம்.....எண்டு கண்ணடிக்கிறதா சனம் பேசுது....!

இல்ல தெருப்பிச்சைதான் எடுக்கப் போறன் எண்டா யார்தான் என்ன செய்ய முடியும் எல்லாம் "விதிப்படி" நடக்கும்....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#82
வடகிழக்காய் ஆகவேண்டும் என்பதற்கு தேர்தல்
வடக்கும் கிழக்குமாய் ஆவதற்கா மோதல்
Reply
#83
சிறிலங்காவில் ஆட்சியமைக்கும் கட்சி, உடனடியாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் - அமெரிக்கா

சிறிலங்காவின் 45 வீதமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்க து}தரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபுூர்வ அறிவித்தலில் ஆட்சியமைக்கும் கட்சி, உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அரசுடன், வாசிங்டன் அரசு இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறதென்றும், நாட்டின் பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

விடுதலைப் புலிகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது அவசியம் என்பதை அந்த அறிக்கையில் பல தடவை சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - புதினம்
Reply
#84
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு சப்போட் சரி.. நீங்கள் அமெரிக்காதலையிடுறதுக்க சப்போட்டோ எண்டதை முதல் தெரிவிக்கவேணும்.. பிறகு வந்தாப்பிறகு துரோகிப்பட்டம் குடுக்கிறதை விட்டு இப்பவே உங்கடை நிலைமை சொன்னால் நல்லதெண்டு நினைக்கிறன்..
Idea :!: :?:
Truth 'll prevail
Reply
#85
<span style='color:red'>ரணில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?

கொழும்பு:

வட இலங்கையில் யாழ்பாணம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இறுதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று முன் தினம் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. இந் நிலையில் யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையின் இரு பகுதிகளில் ஓட்டுப் பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் யாழ்பாணத்தில் ஓட்டுப் பதிவில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அறிவித்த திஸ்ஸநாயகே, இன்றே (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கையும் முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுவரை எண்ணப்பட்ட 1.3 கோடி வாக்குகளில் அதிபர் சந்திரிகா தலைமையிலான விடுதலை முன்னணி 47.2 சதவீத வாக்குகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி 37.9 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணிக்கு 5.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மொத்தம் 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் வேண்டும். ஜே.வி.பி. தவிர மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாததால் சந்திரிகாவால் அந்த இலக்கை எட்ட முடியாது என்றே கருதப்படுகிறது. அதே நேரத்தில் தமிழர் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் ரணிலை ஆதரிப்பதால் அவர்களது வாக்கு பலத்தை வைத்து அவர் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையே சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிக இடங்களில் முன்னணி பெற்றிருப்பது எங்கள் கட்சிதான். நாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்றார்.

இந் நிலையில் வன்முறையின்றி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது குறித்து அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. புதிதாக அமையும் அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்று அமெரிக்க அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தாலும் கூட, அதிபராக இருக்கும் சந்திரிகாவின் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமர் பதவியிலும் இருந்தால் தான் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று மக்கள் கருதியதாலேயே அவரது கட்சிக்கு அதிகளவில் வாக்களித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</span>

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#86
<span style='color:red'>கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் ஒதுக்கப்பட்டுவிட்ட தமிழ்க் குழுக்கள்!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கையின் 13ஆவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரதான அணியும் தனித்துப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்கா குமராதுங்க தலைமையிலான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது.

வடக்கு,கிழகில் போட்டியிட்ட தமிழ் கூட்டமைப்பு அடுத்த ஆட்சியாளர்களை நிர்ணயிக்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கின்ற எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தமிழ் கூட்டமைப்பு 23 ஆசனங்களைப் பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதால், எந்தவொரு அணியும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அதேவேளையில் நாடு முழுவதிலும் போட்டியிட்ட சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, இத்தேர்தலில் சிங்களப் பகுதிகளில் மூன்றாவது பலம் வாய்ந்த அணியாக உருவாகியிருக்கிறது. அதாவது பேரினவாத கருத்துக்களையும் ஒரே அடியாகப் புறக்கணித்துவிடமுடியாத நிலை அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதுவரையில் வெளியாகியுள்ள முடிவுகளின்படி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகளவு வாக்குகளைப் பெற்று கூடுதலான ஆசனங்களைப் பெற்று வருகின்ற போதிலும், பாராளுமன்றப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஜே.வி.பியுடனான கூட்டு, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெருந்தொகையான வாக்குகளை அள்ளிக் கொடுத்திருப்தைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளையில், சிங்கள மக்கள் மத்தியில் மூன்றாவது சக்தி வாய்ந்த அணியாக உருவாகியிருக்கும் ஜாதிக ஹெல உறுமய பெற்றுக் கொண்டுள்ள அதிகப் படியான வாக்குகள் பிரதான கட்சிகள் மூன்றையும் பெருமளவிற்கு பாதித்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தேசியப் பட்டியில் மூலமாக இவ்அமைப்பு குறைந்தபட்சம் 5 ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள பாரிய வெற்றி குறிப்பிடத்தக்கதொன்றாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டமைப்பு மொத்தமாகவுள்ள 9 ஆசனங்களில் 8 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. ஈ.பி.டி.பி. ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. சுமார் 1000 வாக்குகளாலேயே இந்த ஒரு ஆசனத்தை அவர்களால் தக்கவைக்க முடிந்துள்ளது.

ஆனந்தசங்கரியின் சுயேச்சைக் குழு சுமார் 5000 வாக்குகளை மட்டுமே பெற்று மண் கௌவி இருக்கிறது. வன்னியில் மொத்தமாகவுள்ள ஆறு ஆசனங்களில் ஜந்தை கூட்டமைப்பு பெறக்கூடிய நிலையில் இருக்கின்றத. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் மொத்தமாகவுள்ள ஜந்து இடங்களில் நான்கு ஆசனங்களை கூட்டமைப்பு பெற்றிருப்பது ஒரு பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும். திருமலையில் இரண்டு, அம்பாறையில் ஒன்று என மொத்தமாக 21 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக இரண்டு அல்லது மூன்று ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 23 ஆசனங்களுடன் மூன்றாவது சக்தி வாய்ந்த அணியாக பாராளுமன்றத்திற்குச் செல்லவுள்ளது. தற்கால அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அணியாக கூட்டமைப்பு உருவாகியுள்ளது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகளை நினைவுபடுத்துவதாகவே தற்போதைய தேர்தல் முடிவுகளும் அமைந்திருப்பது கவனித்கத்தக்கது. தனித் தமிழீழம் என்ற கோஷத்தை முன்வைத்து அப்போது தேர்தலைச் சந்தித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை தமிழ் மக்கள் பெற்றுக் கொடுத்தார்கள். வடக்கு,கிழக்கில் 18 ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போது பெற்றிருந்தது. அதன் பின்னர் வடக்கு,கிழக்கில் ஒரு சுமுகமான முறையில் நடைபெற்றிருக்கவேண்டிய தேர்தல் என்று கருதப்படும் தற்போதைய தேர்தலிலும் ஒரு தெளிவான ஆணையை தமிழ் மக்கள் கொடுத்திருக்கின்றார்கள். இந்த ஆணை எந்தளவு கவனத்தைப் பெறப் போகின்றது என்பதே தமிழர்களின் எதிர்கால அரசியலை
நிர்ணயிக்கும் காரணியாக அமைந்திருக்கும் எனக் கூறலாம்.

இந்தத் தேர்தில் அம்பாறை தவிர்ந்த வடக்கு,கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலாவதாக தமிழ்க் கூட்டமைப்பு வந்திருக்கின்றது. திருமலையில் கூட்டமைப்பு பெற்ற வெற்றி இதில் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இதனைவிட முக்கியமாக வடகிழக்கின் மொத்த வாக்குகளில் சுமார் 70 வீதமானதை தமிழ் கூட்டமைப்பு பெற்றிருப்பது ஒரு மிகப் பெரிய வெற்றி என்றுதூன் சொல்ல வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைக்குக் கிடைத்துள்ள அசைக்க முடியாத அங்கீகாரமாகவே இதனைக் கருத வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும், புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால தன்னாட்சி அரசுக்கான திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் இத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் அண்மைக்காலம் வரையில் அதில் ஒரு ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவினர் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றார்கள். நீண்டகாலம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் இத்தேர்தலில் தோல்வியடைந்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என ஏற்க முடியாது எனக் கூறிக் கொண்டு எதிர்காலத்தில் அரசியல் நடத்த முடியா நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசியல் என்பது விடுதலைப் புலிகளை மட்டும் மையமாகக் கொண்டது என்பதை இத்தேர்தலின் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன. புலிகளின் ஆதரவைப் பெறாத எந்த ஒரு தமிழ் அமைப்பும் எதிர்கால அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவின் எதிர்காலத்தைப் நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக இது அமைந்துள்ளது. மக்கள் சமாதானத்தை விரும்புகின்றார்களா? அல்லது மீண்டும் ஒரு போரைத்தான் விரும்புகின்றார்களா? என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. சர்வேதேச சமூகம் இந்தத் தேர்தலை கவனமாக அவதானித்ததற்கு அது மட்டும் காரணமல்ல. வடக்கு,கிழக்கு மக்களுடைய தீர்ப்பு என்னவாக இருக்கப்போகின்றது? என்பதே இத்தேர்தலில் அதிகளவு கவனத்திற்குரியதாக இருந்தது. சரித்திரத்தில் முதல் தடவையாக விடுதலைப் புலிகள் இத்தேர்தலில் நேரடியாககச் சம்பந்தப்படுகின்றார்கள். தமிழரசுக் கட்சியின் பெயரில் தமது பூரண ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டே இத்தேர்தலில் குதித்திருந்தது.. ஆக, இத்தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும்.....

விடுதலைப் புலிகள்தான தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட வாக்காக, புலிகளால் முன்வைக்கப்படப்பட்டுள்ள இடைக்கால நிர்வாக சபைக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக, கடந்த இரண்டு வருட காலமாக சமாதானப் பேச்சுக்களில் புலிகளின் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, இந்தப் பேச்சுகள் தொடர வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் ஆணையாக அமைந்துள்ளது என்பதே உண்மை. ஆக, இத்தேர்தலில் தமிழ் மக்கள் சொல்லியுள்ள செய்தி முக்கியமானது.

1977ஆம் ஆண்டில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தமிழீழத்துக்கு தமது அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள். அந்த அங்கீகாரத்தையிட்டு, ஆணையைப் பெற்றவர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. ஆனால், இப்போது நிலைமைகள் அப்படியில்லை. இருபது வருட காலப் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் உணர்வுகள் எவ்வாறானதாக இருக்கின்றன என்பதை தேர்தலின் முடிவுகள் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள இந்த உணர்வுகளை சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளுமா? அதன் அடிப்படையில் தம்மைத் தாமே ஆளும் வகையிலான அமைப்பு ஒன்றைத் தமிழ் மக்கள் உருவாக்கிக் கொள்வதற்கான முன்னோடியாக, இடைக்கால நிர்வாக சபைக்கான அங்கீகாரத்தை சர்வதேச சமூகம் வழங்குமா? என்பனவே இப்போது எழுகின்ற கேள்வி! தமிழ் மக்கள் ஒட்டுமொத்த அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ள இந்த முடிவுகள் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் ஆரம்பமாக இருக்கும் என நிச்சயமாக நம்பலாம்.!

விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் தமிழ்க் கூட்டமைப்புப் பெற்றுள்ள இந்தப் பாரிய வெற்றி தேசிய அரசியலில் எவ்வாறான செல்வாக்கைச் செலுத்தப் போகின்றது என்பதே அடுத்ததாக எழுகின்ற கேள்வியாகும். இரண்டு பிரதான அணிகளும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டமைப்பின் ஆதரவு தவிர்க்க முடியாததாகியுள்ளது.

அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள அமைப்பு என்ற முறையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியமைப்பதற்கு முதலில் அழைக்கப்படக் கூடும். அவ்வாறான நிலைமையில் அதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்ற கேள்வி எழுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கருணா குழுவினரின் ஆதரவை ஜனாதிபதி சந்திரிகா நாடலாம் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் காணப்படுகின்றது. மட்டக்களிப்பிலும், அம்பாறையிலுமாக கருணாவுக்கு ஆதரவாக ஜந்து உறுப்பினர்கள் இருக்கப் போகின்றார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து துரோகி என்ற பெயருடன் வெளியேற்றப்பட்ட ஒருவருடன் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துவது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுகின்றது. ஆக, இந்தத் தேர்தலின் முடிவுகள் எதிர்காலம் தொடர்பான பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்பிச் சென்றுள்ளன என்பதே உண்மை.

அதேவேளையில், கூட்டமைப்பின் சார்பாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தனிக் குழுவாக இயங்க முடியுமா? என்ற மிகப் பெரிய கேள்வி ஒன்று இப்போது எழுகின்றது. ஏனெனில், இவர்களது நியமனப் பத்திரங்களில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் மாவை சேனாதிராஜாவே கையொப்பமிட்டிருந்தார். எனவே, கட்சியின் தலைமைக்கு இசைவாக மட்டக்களப்பு - அம்பாறைப் பிரதிநிதிகள் செயற்படவில்லை என்றால், அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் மாவை சேனாதிராஜாவுக்கு உள்ளது என ஒரு தரப்பினர் கூறிக் கொள்கின்றார்கள். அதற்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உள்ளது.

மறுபுறத்தில் மட்டக்களப்பு - அம்பாறைப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் தனியாக இயங்க முடியும் என மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினை ஒரு சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</span>


ரதன் தினக்குரல் & Sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
Mathivathanan Wrote:
Eelavan Wrote:கண்டுபிடிப்புகளில் நீங்கள் நியூட்டனுக்குத் தம்பி அப்பிடியொரு கற்பூர மூளை
ஒம் தாத்தா மதிவதனன் யார் என்பது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது அதில் பெரிய பெயர் அதற்கு நான் இழுக்கு விளைவிக்க முயல்கிறேன்
நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்குமாம்

அதுசரி நிமலராஜணைக் கொண்டது தப்பா இல்லையா?
ஆரம்பத்திலிருந்து அத்தனை கொலைககளுக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கும் தாத்தாவிடம் கொலை செய்தது சரியா என கேள்விகேட்கும் அதிபுத்திசாலி நீங்கள்தான் போங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

ஐயகோ தாத்தா என்ன நடந்தது கொலைகளையும் வன்முறைகளையும் விடுதலைப் புலிகள் செய்தால் மட்டுமே எதிர்க்கும் ஜனநாயகவாதி நீங்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகர்களுக்கே தெரியும் இதுவரை நீங்கள் மற்றைய தமிழ்க் குழுக்கள் செய்தவற்றிற்கு அல்லது ஏன் கருணாவின் யாழ் மக்கள் மீதான பழிவாங்கல் பற்றி வாய் திறந்ததெல்லம் எதற்கு என்றும் தெரியும்

எங்கே மற்றவர்களால் செய்யப்பட்ட கொலைகளைக் கண்டித்து நீங்கள் எழுதிய கருத்து களத்தில் காட்டுங்கள் பார்ப்போம்?
\" \"
Reply
#88
அப்படி போடுங்க... ஈழவன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#89
Eelavan Wrote:ஐயகோ தாத்தா என்ன நடந்தது கொலைகளையும் வன்முறைகளையும் விடுதலைப் புலிகள் செய்தால் மட்டுமே எதிர்க்கும் ஜனநாயகவாதி நீங்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகர்களுக்கே தெரியும் இதுவரை நீங்கள் மற்றைய தமிழ்க் குழுக்கள் செய்தவற்றிற்கு அல்லது ஏன் கருணாவின் யாழ் மக்கள் மீதான பழிவாங்கல் பற்றி வாய் திறந்ததெல்லம் எதற்கு என்றும் தெரியும்

எங்கே மற்றவர்களால் செய்யப்பட்ட கொலைகளைக் கண்டித்து நீங்கள் எழுதிய கருத்து களத்தில் காட்டுங்கள் பார்ப்போம்?
கொலைகளை செய்துவிட்டு மற்றவர்களை சாட்டும் பழக்கம் யாருக்கு உள்ளதோ அவர்களை கண்டித்துத்தான் எழுதினேன்.. பொதுப்படையாகத்ததான் எழுதினேன்.. அவர்கள் கொலைகளை செய்ய நீங்கள் எத்தனை கொலைகளுக்கு அங்கீகாரம்கொடுத்து வக்காலத்து வாங்கினீர்களோ.. அத்தனைக்கும் எதிர்ப்புத்தெரிவித்தேன்.. இதிலிருந்து எத்தனையோ கொலைகளைப்புரிந்தது நீங்கள் என்பதை மறைமுகமாக காட்டியுள்ளேன்.. மர்மக் கொலைகள் பலவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போது அவை சரி என வாதாடி நீங்கள் எத்தனை கொலைகளை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா..? ஒவ்வொரு கொலைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும்போதும் அதை நியாயப்படுத்த நிமலராஜன்கொலையை உள்ளே கொண்டுவருவீர்களே.. ஞாபகமிருக்கிறதா..
உங்கள் ஜனநாயகம் என்ன என்பதை மக்களுக்க உணர்த்த.. மர்மமான பல கொலைகளுக்கு துப்புத்துலக்க செய்யவேண்டியதைத்தான் செய்தேன்.. ஒருபொழுதும் எந்தக்கொலைக்கும் வக்காளத்து வாங்கியது கிடையாது. இதிலிருந்து நிமலராஜன் கொலை ஒன்றைத்தவிர அவர்கள் எதையும் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.. அதாவது அவர்கள் ஒருகொலைசெய்தார்கள்.. நீங்கள் பல கொலைகள் செய்தீர்கள்.. சரியா..

அமைப்பு செய்த ஒவ்வொரு கொலையையும் கண்டிக்கும்போது அமெரிக்க சனநாயகத்தை உள்ளிழுத்தார்கள் அப்போதெல்லாம் இவர்களா மனித உரிமைபற்றி ஐநாவிடம் கேட்பது என என்னால் சிரிக்கத்தான் முடிந்தது.. எத்தனை கொலைகள்..?
எனக்கு நீங்கள் சரி அவர்கள் சரி எல்லோரும் ஒன்றுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#90
இதுவரைக்கும் புலிகளுக்கும் தமிழீழப் போராட்டத்திற்கும் ஆதரவாகக் கருத்து எழுதினேனே தவிர அவர்களது எந்தக் கொலையையும் நியாயப்படுத்த முயலவில்லை

நீங்கள் வக்காலத்து வாங்கவில்லை எவர்க்கும் என்ற சொல்லுடன் கூடவே நிமலராஜனை மட்டுமே அவர்கள் கொன்றார்கள் என்று சொல்வது உங்களுக்கே சிரிப்பை உண்டாக்கவில்லை

எங்களின் ஜனநாயகம் உணர்த்த மக்களுக்கு நாம் செய்வதைத் தெளிவு படுத்தும் உங்கள் பொதுநலத்துக்கு நன்றி அதே மாதிரி மற்றவர்களது கொலைகளை எடுத்துக் காட்டினீர்களா என்றால் இல்லை அதற்கு உதாரணம் கேட்டேன் தரமுடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்

அதற்காக நீங்கள் பல கொலை செய்தீர்கள் அவர்கள் நிமலை மட்டும் கொன்றார்கள் என்று கூறுவதன் மூலம் நிமல் கொலையை நியாயப்படுத்தாதீர்கள்

ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதைப் பிடுங்கித் தின்னுமாம் அனுமார் இதுதானே உங்கள் கொள்கை
அதனை உங்கள் வாயாலேயே தெளிவுபடுத்தியதற்கு நன்றி
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
#91
Eelavan Wrote:ஐயகோ தாத்தா என்ன நடந்தது கொலைகளையும் வன்முறைகளையும் விடுதலைப் புலிகள் செய்தால் மட்டுமே எதிர்க்கும் ஜனநாயகவாதி நீங்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகர்களுக்கே தெரியும் இதுவரை நீங்கள் மற்றைய தமிழ்க் குழுக்கள் செய்தவற்றிற்கு அல்லது ஏன் கருணாவின் யாழ் மக்கள் மீதான பழிவாங்கல் பற்றி வாய் திறந்ததெல்லம் எதற்கு என்றும் தெரியும்

எங்கே மற்றவர்களால் செய்யப்பட்ட கொலைகளைக் கண்டித்து நீங்கள் எழுதிய கருத்து களத்தில் காட்டுங்கள் பார்ப்போம்?
anpagam Wrote:அப்படி போடுங்க... ஈழவன்
Mathivathanan Wrote:கொலைகளை செய்துவிட்டு மற்றவர்களை சாட்டும் பழக்கம் யாருக்கு உள்ளதோ அவர்களை கண்டித்துத்தான் எழுதினேன்.. பொதுப்படையாகத்ததான் எழுதினேன்.. அவர்கள் கொலைகளை செய்ய நீங்கள் எத்தனை கொலைகளுக்கு அங்கீகாரம்கொடுத்து வக்காலத்து வாங்கினீர்களோ.. அத்தனைக்கும் எதிர்ப்புத்தெரிவித்தேன்.. இதிலிருந்து எத்தனையோ கொலைகளைப்புரிந்தது நீங்கள் என்பதை மறைமுகமாக காட்டியுள்ளேன்.. மர்மக் கொலைகள் பலவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போது அவை சரி என வாதாடி நீங்கள் எத்தனை கொலைகளை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா..? ஒவ்வொரு கொலைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும்போதும் அதை நியாயப்படுத்த நிமலராஜன்கொலையை உள்ளே கொண்டுவருவீர்களே.. ஞாபகமிருக்கிறதா..
உங்கள் ஜனநாயகம் என்ன என்பதை மக்களுக்க உணர்த்த.. மர்மமான பல கொலைகளுக்கு துப்புத்துலக்க செய்யவேண்டியதைத்தான் செய்தேன்.. ஒருபொழுதும் எந்தக்கொலைக்கும் வக்காளத்து வாங்கியது கிடையாது. இதிலிருந்து நிமலராஜன் கொலை ஒன்றைத்தவிர அவர்கள் எதையும் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.. அதாவது அவர்கள் ஒருகொலைசெய்தார்கள்.. நீங்கள் பல கொலைகள் செய்தீர்கள்.. சரியா..

அமைப்பு செய்த ஒவ்வொரு கொலையையும் கண்டிக்கும்போது அமெரிக்க சனநாயகத்தை உள்ளிழுத்தார்கள் அப்போதெல்லாம் இவர்களா மனித உரிமைபற்றி ஐநாவிடம் கேட்பது என என்னால் சிரிக்கத்தான் முடிந்தது.. எத்தனை கொலைகள்..?
எனக்கு நீங்கள் சரி அவர்கள் சரி எல்லோரும் ஒன்றுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#92
நான் களத்துக்கு புதியவன் என்று பலமுறை சொல்லிவிட்டேன் விளங்கவில்லையா அல்லது கருத்துக் கூற முடியாத இடத்தில் உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்புபடுத்த முயல்கிறீர்களா

எது எப்படியோ உங்கள் கருத்துகளிலிருந்து ஒன்று தெளிவு நீங்கள் என்றும் புலி அபிமானி அவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்டு நல்வழிப்படுத்துகிறீர்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
#93
<span style='color:red'>பொது சன ஐக்கிய சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கும். தமிழ்த் தேசிய முன்னணிக்கு 22 ஆசனங்கள்.

தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக இன்னமும் அறியத்தரப்படவில்லை என்ற போதிலும், பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கும் எனத் தெரிய வருகிறது

இறுதியாக அனுமாணிக்கப்பட்டதன் படி, பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணி 105 இடங்களையும் (13 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), ஐக்கிய தேசிய முன்னணி 82 இடங்களையும் (11 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக) பெறும்.

இதேவேளை தமிழ்த் தேசிய முன்னணி 22 இடங்களையும் (02 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), ஜாதிக ஹிமல உருமய 09 இடங்களையும் (02 தேசிய பட்டியல் இடங்கள் உள்ளடங்களாக), சிறீலங்கா முஸ்லீம் காங்கிரல் 05 இடங்களையும், மலையக மக்கள் முன்னணி 1 இடத்தையும், ஈ.பி.டி.பி 1 இடத்தையும் பெற்றுள்ளது.

யாழ். மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 ஆசனங்களில் 8 ஆசனங்களையும் தமிழ்த் தேசிய முன்னணியே கைப்பற்றியுள்ளது. தற்போதைய வாக்கு எண்ணப்படும் முறையின் பிரகாரம் 9 வது ஆசனத்தை பொறுவதற்கான வாக்குக்களில் தமிழ்த் தேசிய முன்னணிக்கு 2,800 வாக்குக்கள் தேவையாக இருந்தது. அதனால் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 18,612 வாக்குகளை பெற்ற ஈ.பி.டி.பி 9 ஆவது ஆசனத்தைப் பெற்றது.

இதேவேளை, வாக்குகள் கணக்கெடுப்பின் போது நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீள எண்ணப்படவேண்டும் என்று தமிழ்த் தேசிய முன்னணியினர் கோரியிருந்தனர். எனினும் தனது அதிகார வரம்பிற்குள் சட்டம் இதற்கு இடமளிக்கவில்லையெனத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை தமிழ்த் தேசிய முன்னணி நீதிமன்றினூடாக மேற்கொள்ளுமா என்பது குறித்த தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இதேவேளை பொதுசன ஐக்கிய சுதந்திர முன்னணியின் சார்பில் லக்ஸ்மன் கதிர்காமரே பிரதமராகும் வாய்ப்பு அதிகமிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த உத்தியோக அறிவிப்புக்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

யாழ் பகுதிகளில் தமிழ்தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய வரவேற்பு வைபங்களை ஏற்பாடு செய்யும் முயற்சிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் என்பன ஒன்றிணைந்து பல பகுதிகளிலும் இவ்வாறான வைபவங்களை ஏற்படுத்த முன்னிற்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. </span>

puthinam.com

==============================

<span style='color:red'>Updated at 19:3:21 04-Apr-2004 GENERAL ELECTIONS 2004

<i>02-04-2004 இல் நடந்து முடிந்த சிறிலங்காவின் 13 வது பாராளுமன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளும் சதவீதமும்...அவை பெற்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையும்...தேசிய பட்டியல் அங்கத்துவம் உள்ளடங்களாக....கீழே இரண்டு பட்டியல்களாகத் தரப்பட்டுள்ளன...!</i>

United People's Freedom l ParAlliance (UPFA) 4,223,970 45.60%

United National Party (UNP) 3,504,200 37.83%

Illankai Tamil Arasu Kachchi (ITAK) 633,654 6.84%

Jathika Hela Urumaya (JHU) 552,724 5.97%

Sri Lanka Muslim Congress (SLMC) 186,876 2.02%

Up-Country People's Front (UCPF) 49,728 0.54%

Eelam People's Democratic Party (EPDP) 24,955 0.27%

Jathika Sangwardhena Peramuna (JSP) 14,956 0.16%

United Socialist party (USP) 14,660 0.16%

Ceylon Democratic Unity Alliance (CDUA) 10,736 0.12%

New Left Front (NLF) 8,461 0.09%

Democratic People's Liberation Front (DPLF) 7,326 0.08%

United Muslim Pepole's Alliance (UMPA) 3,779 0.04%

United Lalith Front (ULF) 3,773 0.04%

National People's Party (NPP) 1,540 0.02%

Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya (SMBP) 1,401 0.02%

Swarajya (SR) 1,136 0.01%

Sri Lanka Progressive Front (SLPF) 814 0.01%

Ruhunu Janatha Party (RJP) 590 0.01%

Sri Lanka National Front (SLNF) 493 0.01%

The Liberal Party (LP) 413 0.00%

Sri Lanka Muslim Katchi (SLMK) 382 0.00%

Socialist Equality Party (SEP) 159 0.00%

Democratic United National Front (DUNF) 141 0.00%


VALID votes 9,262,732 94.54%
REJECTED votes 534,948 5.46%
POLLED votes 9,797,680 75.96%
ELECTORS 12,899,038 </span>

++++++++++++++++++++++


<span style='color:red'>13 th PARLIAMENT COMPOSITION in Sri Lanka

UPFA 8 9 6 5 3 2 6 5 5 3 1 9 5 5 3 3 3 6 5 +13 = 105
UNP 9 6 3 6 2 4 4 3 2 1 1 7 3 3 2 5 2 4 4 +11 = 82
ITAK 8 5 4 1 2+2 = 22
JHU 3 2 1 1+2 = 9
SLMC 1 2 1+1 = 5
EPDP 1=1
UCPF 1=1 </span>


sooriyan.com....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#94
[Image: ltte.bmp]

<span style='color:red'>தமிழீழ விடுதலைப் புலிகள் வாழ்த்து

அரசியல்த்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
25-03-2004.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, பெரும் தியாகங்கள் புரிந்து, பெரும் இராணுவ வெற்றிகளைக் குவித்து, தீர்க்கமான வரலாற்றுக் கட்டத்தை அடைந்துள்ள எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கும் அதனைத் தலைமை தாங்கி முன்னெடுத்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் (ஏப்ரல் 02, 2004) தமிழ் மக்கள் தமது தார்மீக ஆதரவை மீள உறுதிப்படுத்தி, எமது போராட்ட முன்னெடுப்புக்களுக்கு தமது ஒட்டுமொத்த ஆணையை வழங்கி, ஆற்றிய வரலாற்றுப் பணி மகத்தானது.

தமிழ்த் தேசிய உணர்வுடனும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் தமிழ் மக்கள் எந்தவிதமான சிரமங்களையும் பொருட்படுத்தாது, கொழுத்தும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையாக நின்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒருமித்து ஒற்றுமையாகத் தமது வாக்குகளைச் செலுத்தி, அதற்கு மகத்தான வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் பகிரங்கமாகப் பெரும் செய்தியினைச் சொல்லியுள்ளார்கள்.

மீண்டும் இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தமிழீழ மக்களின் தேசியத் தலைமையாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழீழ மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகளாகவும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் எந்தவிதமான பேதங்களுமின்றி ஒன்றுபட்டு, ஒற்றுமையாக நிற்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தோடு, தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சி உரிமை ஆகிய தமிழீழத் தேசிய இனத்தின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்று அவற்றின் அடிப்படையில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதையும் இல்லாதுவிடின் தமிழீழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் தமிழரின் இறைமையை நிலைநிறுத்தப் போராடுவோம் என்பதையும் தெளிவாக இடித்துரைத்துள்ளார்கள்.

தமிழீழத் தனியரசை அமைக்குமாறு 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்த பின்னர், தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில்தான் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று, தமிழ்த் தேசிய உணர்வோடு தமது அபிலாசைகளையும் விருப்பங்களையும் மிகவும் உறுதியாகத் தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தவோ அசட்டைசெய்யவோ முடியாதவாறு அதனைத் தூக்கிநிறுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் பலம்மிக்க வலுவான மக்கள் சக்தியாக உலகிற்கு மீளவும் நிரூபித்திருக்கிறார்கள். இது எமது போராட்ட முன்னெடுப்புக்களுக்குக் கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்த தமிழ் மக்களுக்கு இச்சந்தர்ப்பத்திலே தமிழீழத் தேசியத் தலைவர் சார்பாகவும் எமது அமைப்பின் சார்பாகவும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்தோடு, தமிழ் மக்களது பாதுகாப்பிற்காகவும் சுதந்திர வாழ்விற்காகவும் அயராது போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைத்துவத்தினது அரசியல் போராட்ட முன்னெடுப்புக்களுக்கும் பக்கத்துணையாக இருந்து செயற்படவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ந்து உங்கள் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிச் செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.</span>

sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#95
[Image: thead.php?id=111]
[Image: tsummary.php?id=111]
[Image: tbody.php?id=111]

***********************************
தமிழ் வடிவிலான தேர்தல் முடிவுகள்...!

[Image: thead.php?id=112]
[Image: tsummary.php?id=112]
[Image: tbody.php?id=112]

நன்றி உலக சந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#96
[size=16]ஜெனீவா ஊர்வலம் தொடர்பான செய்திகள் மற்றைய பக்கங்களில் தரப்பட்டுள்ளதால் flash news இல் அவை தரப்படவில்லை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#97
[Image: thead2.php?id=5]
[Image: tbody2.php?id=5]

நன்றி உலகசந்தை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
இலங்கையின் புதிய பிரதமராக ராஜபட்ச நியமனம்

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவை (58) அதிபர் சந்திரிகா குமாரதுங்க திங்கள் இரவு தேர்ந்தெடுத்தார்.

கலைக்கப்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ராஜபட்ச. அவரைத் தனது அரசு இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வரும்படி அதிபர் அழைத்துள்ளார். அங்கு ராஜபட்சவுக்குப் பதவிப் பிரமாணம் செவ்வாய்க்கிழமை காலையில் முறைப்படி செய்து வைக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 105 இடங்களைப் பெற்றதை அடுத்துஇ சில கட்சிகளின் ஆட்சியுடன் அரசு அமைக்க முயன்று வருகிறது. இந்நிலையில் அதிபரின் வலதுகரமான முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் (71) பிரதமராவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதற்கு ராஜபட்ச கடும் ஆட்சேபம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக உலக நாடுகள் தடை விதிக்கப் பெரிதும் காரணமாக இருந்தவர் கதிர்காமர். ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் நுழைந்து பத்தாண்டுகள்தான் ஆகின்றன. மேலும் மக்கள் செல்வாக்கைப் பெறாதவர்.

ஆனால் வழக்கறிஞரான ராஜபட்ச 1971 முதல் அரசியலில் ஈடுபட்டு வருபவர். அத்துடன் மக்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் செல்வாக்கு பெற்றவர்.

பிரதமர் பதவியில் யாரை சந்திரிகா நியமிப்பார் என்ற கேள்வி எழுந்தபோது கட்சியின் இளைஞர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று யோசனை கூறினர்.

தென் இலங்கையில் உள்ள ராஜபட்ச வெற்றி பெற்ற ஹம்பன்தோட்ட தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் அவரையே பிரதமராக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#99
ஜெனீவா ஊர்வலம்பற்றி ஜெனீவா தொலைக்காட்சியிலாவது காட்டினாங்களா..??? யாராவது சொல்லுங்கப்பா.
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:ஜெனீவா ஊர்வலம்பற்றி ஜெனீவா தொலைக்காட்சியிலாவது காட்டினாங்களா..??? யாராவது சொல்லுங்கப்பா.
:?: :!: Idea

யுரோப்புக்கும் வந்து உள்வீட்டு பிரச்சனையை பேசி என்னத்தை கண்டது.....
ஐ நா முன்னாலை கூடுறது பெரிசில்ல. என்ன விசயத்தை பேசுற எண்டதில ஒருத்தரும் கவனம் எடுத்ததாக காணேல்லை.
பி.கு : சட்ட ஆலோசகர் தவிர
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)