Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
<b>எங்கள் தேசியத் தலைவனின் வார்த்தைகளிலிருந்து.........</b>
" பலவீனமான எமது இனத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் ".
இதற்கமைய எமது தேசிய விடுதலைப் போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்தபோது , எமக்காக தம்முடலோடு வெடி சுமந்து கரைந்தவர்கள். இறுதிக்கணம் வரை முகம் மறைத்து, பெயர் மறைத்து, எம் தேசத்தின் மீதான தடைகளைத் தகர்க்க மண்ணோடும், கடலோடும், காற்றோடும் கலந்தவர்கள். தமது சாவை முன்கூட்டியே அறிந்த எம் தேசத்தின் இரும்பு மனிதர்கள்.
இந்த சூரியப் புதல்வர்களின் நினைவு நாளே ஜுலை 05 கருப்புலிகள் தினம். இந்த கரும்புலி மாவீர தெய்வங்களின் நினைவுகளை இப்பக்கத்தில் பதிய ஆசைப்படுகிறேன். எமக்குத் தெரிந்த, எம்முடன் வாழ்ந்த, கேள்விப்பட்ட, ..... கந்தக சுவாலையுடன் கலந்துவிட்ட எம் தேசத்தின் அக்கினிக் குஞ்சுகளின் நினைவுகளை இங்கே பகிருவோம்.
************************************************************************************************
" தங்கத் தமிழும், தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் "
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://home9.inet.tele.dk/nanthan/n/nan.JPG' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>கரும்புலி கப்டன் மில்லர்</span>
முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது !
05-07-1987
Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.
மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.
வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.
பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.
திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்
கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.
மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.
மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தாள். முதல் நாள் கமலும் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சில வேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்ளை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.
அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.
பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.
முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.
மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்
'பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான்.
மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.
மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.
மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.
வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..
வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.
தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன்.
மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்
'என்ர மகன்
நாட்டுக்காகத்தானே
செத்தவன்
நினைக்க பெருமையாக
இருக்கு"
மில்லரின் அம்மா
'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.
அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. ஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.
இப்படித்தான் இன்னும் ஒரு நாள்.......
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள்| குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.
காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது.
முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ' அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."
அம்மாவுக்கு உள்@ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.
அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.
இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.
தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.
'அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.
பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.
அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....
முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....
அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.."
ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்........
'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"
[size=18]நன்றி - தமிழ்மறவன்.கொம்
Nadpudan
Chandravathanaa
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://images.webshots.com/ProThumbs/69/38669_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
காற்றாய் வருவேன்
கணத்தில் கனமாய்
மாறும் வாழ்வெனும் களம்
தமிழ் வாழ்வதால்
வீழ்கிறேன் அரும் வித்தாய்
இறைவனை வென்று
தியாகத்துள் இதயமாய்
இதயங்களில் என்றும்
வாழ்வேன்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நெருப்பு மனிதர்கள்
நெருப்பு மனிதரே!
எம் இனத்து உயிராயுதங்களே!
தியாகத்தின் திருவுருவங்களே
எம் இருப்பிற்காய் உமையழித்த
உண்ணதத்தின் உண்ணதங்களே!!
நாளைய விடியலுக்காய்
உமையொளியாக்கிய உத்தமரே!
தந்தை தோள் மறந்து
தாயினன்பு மறுத்து
சிவந்த என் தலைவனின்
விழிகாட்டிய திசையினிலே
வெடியாகி அதிர்ந்தீரே!!
அரக்கரை அழித்த அற்புதங்களே
தமிழினத்தின் ஆணிவேர்களே
இன்றோருநாளல்ல மறவரே!!
இனி விடியும் பொழுதெல்லாம்
உம் நினைவுடனே
எம் மனக்கண்ணில் மலரஞ்சலித்து
உமைத் துதித்து நிற்போம்.
அன்புன்
சீலன்
seelan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
உம்மை அழித்து
வாழவைக்கும் காவல் தெய்வங்களே
இன்றைய நாளிலே
நீங்கள் சிந்திய குருதிகள்
எம் கண்களை திறக்கின்றது
மலர்கின்ற ஈழத்தின்
மலர்விலெல்லாம் உங்கள்
ஈகத்தின் உச்சம் தெரிகின்றது
மறக்கோம் உங்கள் உதிரங்களின் வாசங்களை
மறக்கோம் உங்கள் ஈகத்தின் பெருமைதனை
மறக்கோம் நீங்கள் எமக்காய் அழித்த உயிர்ப்பிச்சைகளை
எமக்காய் வீழ்ந்த உமக்காய்
நாம் உருவாக்கிடுவோம் தமிழ் ஈழம் ஒன்று
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இங்கு 3000 மாவீரர்கள் இனைக்கப்பட்டுள்ளனர்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தைரியமாய் இரு
தமிழா...!
தாயகத்தின் காரியத்தில்
எப்பொழுதும் காவியம்
படைத்துவந்த நீ
இப்பொழுது ஏன்
கன்னத்தில் ஈரம்
கசிந்தவனாய் கலங்குகியாய்...?
தைரியமாய் இரு
தமிழா...!
ஏன் இன்னும்
கண்களை கசக்குகிறாய்...?
சொல்லாமல் சென்ற
சுதந்திரம் இதுவரை
திரும்பிவராமல்
இருப்பதனாலா...?
சொட்ட சொட்ட
குருதி சிந்திவிட்ட
போதிலும்
மெல்ல மெல்ல
விடியல் வந்துவிட்ட
போதிலும்
இன்னும் இருட்டாகவே
இருப்பதற்காகவா-உன்
இரு கண்களையும்
கசக்கிக்கொண்டிருக்கிறாய்...!
தைரியமாய் இரு
தமிழா...!
தாகத்தை
மெல்ல மெல்ல
தைரியம் தணித்துவிடும்...!
இத்தனை வீரர்களை
விலைகொடுத்தும்
வாங்கிவிட முடியவில்லையே
என்னும்
ஏக்கத்தின்வழியே
ஓடிவரும் கண்ணீரின்
மறுவடிவமாய் வந்ததிந்த
தைரியம்...!
உனது வீரம்தான்
விடிநிலத்தின் விழுதுகள்
அந்த விழுதுகளை
நோக்கி கல்லெறியாதே
நிறுத்து...!
தண்ணீரில் நனைந்த
குருவியாட்டம்
கண்ணீரில் நனையும்
காரியத்தை கைவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
உன்
தோள்கள் வீரத்தின்
மறுவடிவம்
உன்
நெஞ்சம்
வேகும் நெருப்பினிலும்
விளையாட துணிந்த
நெஞ்சம்...!
தேசத்தில் ஆயிரம்
சோதனைகள்...!
அதற்காக
சோகத்தின் குழந்தையென
விம்மி விம்மி
அழுவாயா...?
கண்ணீரை துடைத்துவிட்டு
தைரியமாய் இரு
தமிழா...!
கரிகாலன் தேசத்தில்
கயவரது காரணமில்லாத
செய்கையினால்
மலர்மனம்போல் இருந்த
உன் மனதில்
தவறிவந்த கார்மேகம்
கண்வழி வந்ததுபோல்
கதறி கண்ணீர்மழை
பொழிகிறாயா...?
அவர்களின் காரணி
இல்லாத காரியத்தால்
தோல்வி என்ற
சமுத்திரத்தில் மூச்சுதிணறி
மூழ்கப்போகிறவர் அவர்கள்தான்
என்பதை மறந்து நீ
தவிக்கிறாயா...!
தைரியமாய் இரு
தமிழா...!
அங்கே பார்...!
விடுதலைக்காக ஏற்றிவைத்த
வீரதீபம் இன்னும்
எரிந்துகொண்டுதான்
இருக்கிறது...!
தாயகத்தின் இறுதிவீரன்
இருக்கும்வரை
வீழமாட்டார் வீரப்புலிகள்...!
உடலிலும் உள்ளத்திலும்
இறுதியுயிர் இருக்கும்வரை
இறக்கமாட்டார்
எங்கள் தமிழர்...!
வீரத்தை விதைத்துவிட்டு
வீரமண்ணில் தாமும்
விதையாய் விழுந்துவிட்ட
வீரமறவர்கள் கல்லறையில்
காதுவைத்து கேட்டுப்பார்...!
புதைகுழியில் கனவுடனே
ஓய்வெடுக்கும் மாவீரர்
மங்காத கனவுகள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
தய்நிலம் தடையின்றி
ஒருநாள் தலைநிமிரும்...!!!
ஆகையினால்
தைரியமாய் இரு
தமிழா...!!!
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பார்த்திர்களா மதி ஈகத்தின் வேகத்தை. நீ வாழவேண்டும் எம் இனம் வாழவேண்டும். எனக்கு எந்த ஆசாபாசங்களும் இல்லை. ஒன்றைத் தவிர உன்னுடன் ஒரு போழுத உன் கையுூட்டிவிடும் ஒரு கவளம் சோறு அது போதும். எங்கே எங்கே விழியில் உதிரமி; வழியக் கேட்கின்றோம். எங்கே எங்கே இது போல் தியாகம் எங்கே.....!!! மறவரே உமக்கு மகனாய் மறுபிறவியிலாவது நான் பிறக்க வேண்டும். என் தெய்வங்களே உங்கள் இலட்சியங்கள் இனியேனும் ஈடேர வேண்டும். உம் வழியில் நாம் நடப்போம். இன்றைய உமது நினைவுநாளில் இது ஒவ்வோரு தமிழனினதும் இலட்சிய உறுதி.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா அப்ப இந்தியாவிலை ஒளிக்கிற அண்ணன்தான் வேண்டுமோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உங்களை நம்பி எத்தனைபேர் செத்தவை.அண்றும் இண்றும் நடிகைகளை லவ்வு பண்ணி காலத்தை ஓட்டுங்கோ?
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.selvakumaran.de/oviyam/photos/selva34.jpg' border='0' alt='user posted image'>
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஓரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
தாலாட்டுப் பாடியே தன் முலையுூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
------------------------
நன்றி - கரும்புலிகள் - இறுவெட்டு
தமிழீழ விடுதலைப்புலிகள்(சுவிஸ் கிளை)
Nadpudan
Chandravathanaa
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இவ்விடம் புனிதப் புதல்வாகளுக்காய் ஆரம்பிக்கப்பட்து இங்குமா உன் சித்து வேலை வெளியேற்ர மாட்டார் களா???? உன்னை. :roll: :roll: :roll:
. . . . .
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
இந்த பக்கத்தின் மொடறேற்றருக்கு அவசர வேண்டுகோள்,
இங்கும் கூலிகளின் ஏவலில் இந்த தணிக்கை
தயவு செய்து இப்பக்கத்திளுள்ள தேவையற்ற கருத்துக்களை உடன் நீக்குங்கள். இப்பக்கமானது எம் தேசத்து சூரியப்புதல்வர்களுக்கு சமர்பிக்க விரும்பியே இத்தலைப்பில் எழுதினேன். ஆனால் இந்த தணிக்கை
பி.கு: தயவுசெய்து சிலவார்த்தைப் பிரயோகித்ததற்கு மன்னிக்கவும். உடனடியாக தணிக்கை செய்யும் படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
_______________________________________
தயவு செய்து சக கள அங்கத்தவர்களுக்கு மதிப்பளித்து கருத்துக்களை முன்வைக்கவும்
யாழ்ப்பிரியன்