Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மானிற்கு ஓர் அன்பு மடல் !
#1
கருணா !
உன் தேகச்சூட்டிற்கு தீக்கிரையாவது
எம் தேசம் கண்ட கனவா ?
சொரிந்த செங்குருதி உன் கண்ணில்
செங்கம்பளமாய் தோன்றியதோ !
மண் மீட்பிற்காய் போராடி இன்று
மண்ணே வெறுக்க ஏன் குனிகின்றாய்

அடிமை விலங்கொடிக்க
ஆர்ப்பரித்தெழுந்த அலைகளையெல்லாம்
அடக்குமுறைக்குள் ஏன் அகப்படுத்தினாய்
சுடர் விட்டெரிந்த சூரியப்புதல்வர்களை
சூனியத்தால் ஏன் வசம் செய்தாய்

ஈழத்தாயின் சோகம் களைய வந்தவன் நீ
ஈன்ற தாயையே எட்டி உதைத்து உன்
ஈனத்தனத்தை அரங்கேற்றுகின்றாய்– உன்னை
தமிழன் என்று சொல்ல தடம்புரள மறுக்கின்றது நா
ஆண்டாண்டு காலமாய் அடிமைகளாய் வாழ்ந்தும்
காட்டிக்கொடுத்து கரமறுத்தும் வாழ்ந்த கூட்டம்
இன்றும் உன்னுருவில் எம்முள்ளே
புல்லுருவிகள் நீங்கள்
முளையிலேயே முறையாக களையவேண்டும்

ஆண்டுகள் இருபத்தைந்தாய்
அடிமை விலங்கறுக்க தன்னை மறந்து
தமிழினத்திற்காய் போராடும் அண்ணன் முன்னே
நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் நீ
பிரதேசவாதம் பேசி உன்
பேடைத்தனைத்தை மறைக்க முயல்கின்றாய்

தப்புச்செய்துவிட்டாய் அம்மானே – நீ
தப்புமேலே தப்புச்செய்கின்றாய்
பாலெல்லம் விசம் கலக்க முனைகின்றாய்
நிறுத்திவிடு உன் பிரதேசவாதத்தை
செம்மறியாட்டுக்கூட்டமல்ல தமிழினம்
மீன்பாடும் தேன்நாட்டை உன்
தனிப்போராட்டாத்தால் குருதியுறையவைக்காதே

தேசத்தின் கொந்தளிப்பில் பொசுங்கி
தேகம் இழந்து வீடிழந்து உறவிழந்து
புகலிடம் வந்து தாய்மண்ணின் நினைவில் வாழ்ந்து
உழைக்கின்ற ஒன்றிரண்டில் பாகம் பிரித்து
மண்ணிற்காய் போராடும் மைந்தர்களிற்கு வழங்கி
ஓர் நாள் மலரும் ஈழத்திற்காய்
சுதந்திர காற்றை சுவாசிக்க
புலமெங்கும் புழுவாய் நெளியும் நாமெல்லாம்
உன் ஆடம்பர வாழ்விற்காகவா அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்

எம்மினத்தின் விடிவிற்காய் போராடி
எமக்காய் விடிவுகள் காட்டியவன் நீ - இன்று
ஏன் இந்த விசமத்தனம்
அன்னிய சக்திகளின் அழித்தொழிப்பிற்கு
நீயும் இரையானாயோ !
வரலாற்றில் உன் பெயர் கறைபடிந்ததாய்
வெற்றி கண்ட மண்ணெங்கும் உன் நாமம் சபிக்க
விதையான மாவீரர் தம் விதியை எண்ணி நோக
நீ மட்டும் எப்படி வாழ்வாய் ! - வா
வந்து சரணாகி உன்னை சாந்தமாக்கிவிடு !
[b] ?
Reply
#2
ஒரு முட்டையிலிருந்து
ஒன்பது முட்டைகளும்
ஓராயிரம் குஞ்சுகளும்
பொரித்த பின்பே- தாய்க்
கோழிகளுக்கிடையே
சலசலப்பு....
எப்படி?

பருந்துகளிடமிருந்து
பாதுகாப்பதாக சொல்லி
குஞ்சுகளுக்கு
சாயம் பூசியது
பழைய வீட்டுக்கார
~துரைகளின்| தப்பு
இதில் கோழிகளுக்கு
என்ன பிரிவினை?

~குறுணிகளுக்காக| எடுபட்டு
புத்திபேதலித்து போனது
தனிப்பட்ட பலவீனம்
ஒத்துக் கொள்வோம்
அதனால் ~குழம்பும்|
குடியை ருசிக்க நினைக்கிறதே
ஒரு சதிகார குறவர் கூட்டம்
அனுமதிப்போமா இதை?

இது விதியல்ல: சதி
சதியே சதியே
என் செய்யப்போகிறாய்
எம் தமிழர் சாதியை?

எங்கள் குஞ்சுகளை
விடுதலைக்காய்
அடைகாத்த
அரும் பெருஞ்செல்வங்களை
அடகு வைக்க துணிந்ததன்
பின்னணிகள் என்ன?

முழு விடுதலைக்காய்
போராடிவிட்டு
வெண்ணை திரண்டபின்
தாழி உடைத்த கதையாக
குறைப்பிரசவம் காண்பது
என்றும் ரசிக்கத்தக்கதல்ல

தேவைப்பட்டால்
|கருணைக்| கொலையை கூட
அங்கீகரிக்கிறது
நவீன மருத்துவம்
அன்றில் புற்றுநோயை
பரவாது தடுப்பதே
இன்றைய அவசியம்

கூழ் முட்டைகளை
வெட்டிப்புதைப்பதோ
அல்லது
தூக்கி எறிவதோதான்
எமது வழமையும்!
காலம் விரைந்ததை
செய்யும்.


லண்டனிலிருந்து முத்து விஐயராகவன்

Thanks www.tamilnaatham.com
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)